You are on page 1of 5

வீடு வாடகை ஒப்பந்த பத்திரம்

2024 - ஆம் வருடம், ஏப்ரல் மாதம், 12 - ஆம் தேதி, சென்னை - 600

078, கே. கே. நகர், திருவள்ளூவர் காலனி, 10 - வது செக்டார், 64 - வது

தெரு, எண். 16/2, என்ற விலாசத்தில் வசித்து வரும் காலஞ்சென்ற திரு. P.

தியாகராஜன் அவர்களின் குமாரர், சுமார் 42 வயதுள்ள திரு. T. ஜெயவேல்

(Aadhaar No. 8490 0182 9187, Mobile No. 9840015376) அவர்கள், வீட்டின்

உரிமையாளர் என்றும் 1 - வது பார்ட்டியாகவும் அழைக்கப்படுவார்;


<< 2 >>

சென்னை - 606901, திருவண்ணாமலை, வீரளூர், கரை மேடு தெரு,

எண். 201, என்ற விலாசத்தில் வசித்து வரும் திரு. ராஜேந்திரன்

அவர்களின் குமாரர், திரு. R. ராஜேஷ்வரன் (Aadhaar No. 5782 1816 5889)

அவர்கள் (வீடு வாடகைக்கு வருபவர்) 2 -வது பார்ட்டியாகவும், ஆக 1, 2

ஆகிய இரு பார்ட்டிகளும் சேர்ந்து, மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக்

கொண்ட வீடு வாடகை ஒப்பந்தம் என்னவென்றால்,

சென்னை – 600 092, விருகம்பாக்கம், V R சுந்தரமூர்த்தி கிராமணி தெரு

(சுந்தரமூர்த்தி கிராமணி தெரு), புதிய எண் - 2 A - ல் அமைந்துள்ள வீடு

நம்மில் 1- வது பார்ட்டிக்கு சொந்தமானது. மேற்படி வீட்டின் தரைதள

பகுதியில் அமைந்து உள்ள சுமார் 550 சதுரடி அளவுள்ள வீட்டினை 2 -வது

பார்ட்டி அவரது குடும்பத்துடன் வசிப்பதற்கு வாடகைக்கு விடக் கேட்டு,

அதற்கு 1 -வது பார்ட்டியும் அவரது வீட்டின் மேற்படி தரைதள பகுதியை

வாடகைக்கு விட சம்மதித்து, அதன் படி இரு நபர்களும் ஒப்புக்கொண்டு

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த வீடு வாடகை ஒப்பந்தம்

செய்துக்கொள்ளப்பட்டது.

நிபந்தனைகள்:

1. வீட்டின் மேற்குறிப்பிட்டுள்ள இப்பகுதிக்கு வாடகைக் காலம் 11

மாதங்கள் மட்டும். அதாவது 01-04-2024 முதல் 31-03-2025 வரை

மட்டுமே இந்த வாடகை ஒப்பந்தம் செல்லுபடியாகும்.


<< 3 >>

2. இந்த கட்டிடத்திற்கு மாத வாடகை தொகை ரூ. 10,000 /- (எழுத்தால்

ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வாடகைதாரர் வாடகையை வீட்டின்

உரிமையாளரிடம் பிரதி மாதம் ஆங்கில மாத கணக்குப்படி 7 - ம்

தேதிக்குள் செலுத்த வேண்டும்.

3. பராமரிப்பு தொகையாக ரூ. 500 /- (எழுத்தால் ருபாய் ஐநூறு மட்டும்)

பிரதி மாதம் மாத வாடகையுடன் சேர்த்து கொடுக்கவேண்டும்.

4. 2 - வது பார்ட்டியிடம் இருந்து, வீட்டிற்கு முன்பணமாக ரூ. 60,000 /-

(எழுத்தால் ரூபாய் அறுபதாயிரம் மட்டும்) இன்றைய தேதியில்

ரொக்கமாக 1-வது பார்ட்டி (வீட்டின் உரிமையாளர்)

பெற்றுக்கொண்டார். இத்தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது.

மேற்படி அட்வான்ஸ் தொகைக்கு இதுவே ரசீது ஆகும்.

5. வாடகை ஒப்பந்தக் காலமாகிய 11 மாதங்கள் முடிந்ததும் 2- வது

பார்ட்டி தொடர்ந்து இதே வீட்டின் மேற்படி தரைதள பகுதியில்

வசிக்க முன்வருவாராயின் 1- வது பார்ட்டியின் அனுமதியின்

பெயரில் அப்போதைய கால நிலவரப்படி வேறு அக்ரிமெண்ட்

புதுப்பித்து, தொடர்ந்து இதே வீட்டில் வசிக்கலாம்.

6. மேற்படி வீட்டில் வசிக்கும் 2- வது பார்ட்டி அவர்கள் பயன்படுத்தும்

மின்சார கட்டணத்தை அவர்களே மீட்டர் கணக்குப்படி நேரடியாக

மின்சார வாரியத்திற்கு செலுத்திட வேண்டும்.


<< 4 >>

7. நம்மில் 2-வது பார்ட்டி அவர்களே வீட்டினை காலி செய்வதாக

இருந்தாலோ அல்லது 1-வது பார்ட்டிக்கு வீடு தேவைப்பட்டாலோ

நம்மில் இரு பார்ட்டிகளும் மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே

தெரிவித்துக்கொள்ளவேண்டும்.

8. 2- வது பார்ட்டி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக வாடகையை

செலுத்த தவறும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகைதாரரை

வீட்டில் இருந்து வெளியேற்ற சகல அதிகாரமும் உண்டு.

9. தற்சமயம் கட்டிடம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில்

வீட்டினை காலி செய்யும் சமயம் திருப்பி 1-வது பார்ட்டியிடம்

ஒப்படைக்கவேண்டும்.

10. அவ்வாறு ஏதேனும் சேதாரம் இருப்பின் அதற்கான செலவை

அட்வான்ஸ் தொகையிலிருந்து பிடித்தம் செய்து கொண்டது போக

மீதித்தொகையை பெற்றுக்கொள்ள 2- வது பார்ட்டி சம்மதிக்கிறார்.

11. மேற்படி வீட்டை நம்மில் 2- வது பார்ட்டி வேறு யாருக்கும் மேல்

வாடகைக்கு விடக்கூடாது. மேலும், மேற்படி வீட்டில் நம்மில் 2- வது

பார்ட்டி எவ்விதமான மாற்றமும் செய்யக்கூடாது. வாடகைக்கு

எடுத்துள்ள வீட்டின் கட்டிடத்தில் சட்டத்திற்கு புறம்பான

காரியங்களில் ஈடுபடக்கூடாது.
<< 5 >>

12. மேற்படி வீட்டினை 2-வது பார்ட்டி காலி செய்யும்போது, வாடகை,

மின்கட்டணம் மற்றும் ஏதேனும் பாக்கிகள் இருப்பின் அவற்றை

முன்பணத்தொகையில் பிடித்தம் செய்துக்கொண்டது போக மீதி

தொகையை திருப்பி கொடுப்பதாய் 1-வது பார்ட்டியும்,

பெற்றுக்கொள்வதாக 2-வது பார்ட்டியும் ஒப்புக்கொள்கிறார்கள்.

சொத்து விவரம்

சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, சென்னை –

600092, விருகம்பாக்கம், V R சுந்தரமூர்த்தி கிராமணி தெரு (சுந்தரமூர்த்தி

கிராமணி தெரு), புதிய எண் - 2 A, பழைய எண். 95/8A, என்ற

விலாசத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள

வீடு மட்டும் இந்த வாடகை ஒப்பந்தத்திற்கு சம்மந்தப்பட்டது ஆகும்.

இதுவே நாம் இரு பார்ட்டிகளும் சம்மதித்து மனப்பூர்வமாய்

எழுதிக்கொண்ட வீட்டின் வாடகை ஒப்பந்தப்பத்திரமாகும்.

1 - வது பார்ட்டி 2-வது பார்ட்டி


(வீட்டின் உரிமையாளர்) (வீடு வாடகைக்கு வருபவர்)
சாட்சிகள் :
1.

2.

You might also like