You are on page 1of 1

2

மேற்படி முதல் பார்ட்டிக்கு சொந்தமான சென்னை-600 051, மாதவரம் பால்பண்ணை, விக்டரி


பீல்டு, கடை எண்.10-ல் கீழ் தளத்தில் அமைத்துள்ள இரண்டு கடைகளை இரண்டாவது
பார்ட்டி “பியுட்டி பார்லர்” வைக்க வடைகைக்கு விடும்படி முதல் பார்ட்டியை அணுகி கேட்டு
கொண்டதன் பேரில், அதற்கு முதல் பார்ட்டியும் வாடைக்கு விட ஒப்புக் கொண்டு
கிழ்க்கண்ட சரத்துக்கள் படி இந்த வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் நாம் இரண்டு
பார்ட்டிகளும் கையொப்பம் செய்து கொண்டுள்ளோம்.

1. இந்த வாடகை ஒப்பந்தம் இன்று முதற்கொண்டு 11 (பதினொரு) மாத காலத்திற்கு


அமுலில் இருக்கும். (அதாவது 01-02-2024 முதல் 31-12-2024 வரை)

2. இரண்டாவது பார்ட்டி இன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடைக்கு மாத வாடகை


ரூ. 20,000/- (எழுத்தால் ரூபாய் இருபதாயீரம் மட்டும்) – யை பிரதி மாதம் 05-ந்
தேதிக்குள் முதல் பார்ட்டி வசம் செலுத்தி வர இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

3. மேற்படி கடை கட்டிடத்திற்கு அட்வான்ஸ் தொகையாக ரூ. 2,00,000/- (எழுத்தால்

ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) –த்தை இரண்டாவது பார்ட்டி இன்றைய தேதியில்


கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் முதலாவது பார்ட்டியிடம் ரொக்கமாக
செலுத்தியுள்ளார். மேற்படி அட்வான்ஸ் தொகையை முதலாவது பார்ட்டி இரண்டாவது
பார்ட்டியிடமிருந்து பெற்று கொண்டதற்கு இதுவே இரசீதாகும். மேற்படி அட்வான்ஸ்
தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது என்றும், இரண்டாவது பார்ட்டி கடை
கட்டிடத்தை காலி செய்து முதலாவது பார்ட்டியின் வசம் ஒப்படைக்கும் போது
இரண்டாவது பார்ட்டி செலுத்தியுள்ள அட்வான்ஸ் தொகையை அவரிடம் திருப்பி
செலுத்த முதலாவது பார்ட்டி இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

4. இரண்டாவது பார்ட்டி தான் கடைக்கு எடுத்துக் கொண்டுள்ள கடை கட்டிடத்திற்கு


உபயோகப்படுத்தும் மின்சாரதிற்கு உண்டான கட்டணத் தொகையை தனி மீட்டர்
கணக்குபடி தானே நேரடியாக மின்சார வாரியத்திற்கு செலுத்திக் கொண்டு வர இதன்
மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். மற்றும் கடைக்கு வரும் டெபாசிட் தொகையை
இரண்டாவது பார்ட்டியே தன் செலவில் கட்டி கொள்ள வேண்டியது.

5. வடைகைக்கு எடுத்துக் கொண்ட கடை கட்டிடத்தை மேல் வாடகைக்கு வேறு


எவருக்கும் விடுவதில்லை என்று இரண்டாவது பார்ட்டி உறுதி கூறுகிறார்.

6. இரண்டாவது பார்ட்டி இந்த கடை கட்டிடத்தை பதினொரு மாதக் காலாத்திற்கு


வாடகைக்கு எடுத்து கொண்டுள்ளபடியால் பதினொரு மாத காலத்திற்கு மேல்
தொடர்ந்து கடையை நடத்த விரும்பினால் முதல் பார்ட்டியின் அனுமதி பெற்று
அப்போதைய கால நிலவரத்திற்கு ஏற்றாற்போல் முதலாவது பார்ட்டியால்
நிர்ணயிக்கப்படும் வாடகைக் தொகைக்கு இரண்டாவது பார்ட்டி ஒப்புக் கொண்டால்
வேறு புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது.

7. இரண்டாவது பார்ட்டி வாடகைக்கு எடுத்துக் கொண்ட கடை கட்டிடத்தை


எந்தவிதமான
பழுதும், சேதமும் ஏற்படுத்தாமல் நல்ல நிலைமையில் மேற்சொன்ன கடை வைத்துக்
கொண்டு வந்து வாடகைக் காலம் முடிவடைந்தவுடன் தற்பொழுது போகும் போது 1-
வது பார்ட்டியிடம் ஒப்படைக்க இதன் மூலம் சம்மதிக்கிறார். முதலாவது பார்ட்டியின்
எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் மேற்படி கடை கட்டிடத்தில் இரண்டாவது
பார்ட்டி எந்தவிதமான மாறுதல்களையும் செய்யக்கூடாது.

8. வாடகைக்கு எடுத்துக் கொண்டுள்ள கடை கட்டிடைத்தை இரண்டாவது பார்ட்டி


“பியுட்டி
பார்லர்” வைத்து நடத்துவதை தவிர வேறு எந்தவித சட்டவிரோதமான
நடவடிக்கைக்கு பயன்படுத்த மாட்டேன் என்று இதன் மூலம் மனபூர்வமாக ஒப்புக்
கொண்டு உறுதி அளிக்கிறார்.

You might also like