You are on page 1of 2

என்னவென்றால், நம்மில் 1-வது நபருக்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம்

திருத்துறைப்பூண்டி தாலுக்கா, கச்சனம், ஆலடிகளம், மெயின் ரோடு அஞ்சல் எண்


: 610201, கதவு எண்: 4/186, மின் இணைப்பு எண் 1479 என்ற முகவரியில் அமைந்துள்ள
கட்டிடத்தில் 2-வது நபர் லெட்சுமி பழ வணிகம் மற்றும் டீ ஸ்டால் தொழில்
செய்து வர மாதம் அதற்கு 1-வது நபரும் சம்மதித்து மேற்படி கடைக்கு மாதம்
ஒன்றுக்கு ரூ. 2,000/- (இரண்டாயிரம் மட்டும்) வாடகையாக கொடுப்பதாக இன்று
முதல் 01.07.2023 ல் இருந்து 12 மாத காலங்கள் முடிய பேசி ஒப்புக்கொண்டுள்ளார்.

மேற்படி வாடகை தொகை பிரதி மாதம் 05 ம் தேதிக்குள் ஒவ்வொரு


மாதமும் வாடகை தொகையை 1-ம் நபரிடமோ அல்லது அனுமதி பெற்றவரிடமோ
கொடுப்பதாகவும் அதற்கு 1-வது நபர் 2- வது நபரிடமிருந்து அட்வான்சாக ரூ.15,000/-
(ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரொக்கமாக பெற்றுக்கொண்டார்.

மேற்படி 2 வது நபரிடமிருந்து 1-வது நபர் பெற்றுக் கொண்ட அட்வான்ஸ்


தொகையில் காலி செய்யும் போது 1-வது நபருக்கு 2-வது நபர் ஏதும் பாக்கி
செலுத்த வேண்டியிருந்தாலும் அதை 2-வது நபரிடமிருந்து பெற்ற அட்வான்ஸ்
தொகையில் கழித்துக்கொண்டு மீ த தொகையை 1-வது நபர் 2-வது நபரிடம் செலுத்த
வேண்டியது. இந்த அக்ரிமென்ட் அத்துடன் கீ ழ் கண்ட கண்டிஷன் இன்று முதல்
01.07.2023. ல் இருந்து 12 மாத காலங்கள் வரை செல்லுபடியாகும்.

நிபந்தனைகள்

1.மேற்படி கடையில் அரசாங்கத்திற்கு எதிரான தொழிலோ அல்லது


வியாபாரமோ செய்யக்கூடாது.
2.கடைக்கு உண்டான மின்சாரக் கட்டணம் மற்றும் அரசாங்கத்திற்கான
வரிகள் ஏதேனும் 2- ம் நபர் செலுத்தினால் 1-வது நபர் பெயரில் அதன்
ரசீதுகளை வாங்கி ஒப்படைக்க வேண்டியது.
3.கடைக்கு உபயோகப்படுத்தும் மின்சாரம் மாதாந்திர கட்டணம் 2- வது நபரை
சார்ந்தது.
4.மேற்படி கடைக்குண்டான வாடகையை பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள்
தந்துவிட வேண்டும். தொடர்ந்து 3 மாதங்கள் வாடகை செலுத்த தவறினால்.
எந்தவிதமான காரணத்தையும் காட்டாமல் கடையை காலி செய்து
கொடுத்துவிட வேண்டும்.

(1-வது நபர்) (2-வது நபர்)


5. வேறு யாருக்காவது உள்வாடகைக்கு விட 2-வது நபருக்கு
உரிமையில்லை.

6. கடை விஸ்தரிப்பு தடுப்புச்சுவர் இதர வேலைகள் ஏதாவது செய்ய

நினைத்தால் 1-வது நபரின் ஒப்புதல் அனுமதி பெற்றபின் செய்துகொள்ள


வேண்டியது.

7. காலகெடுவுக்குள் கடையை காலி செய்ய தவறினால் அதற்குரிய

நடவடிக்கை 2-வது நபர் மீ து எடுக்கப்பட்டு அதில் ஏற்படும் செலவுத்

தொகையை வசூலித்துக்கொள்ள 2-வது நபர் சம்மதிக்கிறார்.

8. காலிசெய்யும் பட்சத்தில் நஷ்டஈடு கேட்பதோ, ஏதேனும் காரணங்களை


சொல்லி மறுப்பதோ அல்லது தொந்தரவுகள் கொடுப்பதோ, காலத்தை

தாமதப்படுத்தவோ கூடாது என்பதை 2- வது நபர் ஒப்புக்கொள்கிறார்.

9. நீதிமன்றம் செல்ல நேரிடினும் அட்வான்ஸ் தொகையை இழக்க நேரிடும்

என்பதை 2-வது நபர் அறிகிறார்.

10. இவ்வாடகைப்பத்திரம் மூலம் G.S.T விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.


மேற்படி நிபந்தனைகளை நாங்கள் இருவரும் சம்மதித்து இந்த வாடகை
ஒப்பந்தப்பத்திரம் செய்துகொண்டோம்.

உரிமையாளர்
வாடகைதாரர்

சாட்சிகள்:

You might also like