You are on page 1of 3

வீடு வாடகை ஒப்பந்தப்‌பத்திரம்

2022-ஆம்‌ வருடம்‌ ஜனவரி மாதம்‌ 7 ந்‌ தேதி, சென்னை-600042, வேளச்சேரி


ஓரண்டியம்மன் கோயில் தெரு கதவு எண்.25/63 என்ற முகவரியில்‌ வசிக்கும்‌
திருமதி G. காலாவதி க/பே. கோவிந்தராஜி. (கட்டிட சொந்தக்காரர்‌) முதல்‌
பார்ட்டியாகவும்‌.

விருதுநகர்-626001, ரோசல்பட்டி ஊராட்சி, கஸ்தூரிபாய் நகர், கதவு எண்:


1/3923, என்ற முகவரியில்‌ வசிக்கும்‌ திருமதி A. சாந்தி க/பெ ஆனந்தராஜ்,
(AADHAR NO: 4607 5912 9463) (வீடு வாடகைதாரர்‌) இரண்டாவது பார்ட்டியாகவும்‌
ஆக நாம்‌இரு பார்ட்டிகளும்‌சேர்ந்து எழுதிக்‌கொண்ட வீடு வாடகை ஒப்பந்தம்‌
என்னவென்றால்‌.

சென்னை-600042, வேளச்சேரி ஓரண்டியம்மன் கோயில் தெரு கதவு


எண்.25/63 முதல் தளம், என்ற விலாசத்தில்‌ அமைந்துள்ள வீடு நம்மில்‌ 1 வது
நபருக்குச்‌சொந்தமானதாகும்‌.

-2-

மேற்படி வீடு நம்மில்‌ 2 வது பார்ட்டி வாடகைக்குக்‌ கேட்க, அதற்கு முதல்‌


பார்ட்டியும்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளின்பேரில்‌ வாடகைக்கு விட
சம்மதித்துள்ளார்‌. அதற்கான ஒப்பந்த ஷரத்துக்கள்‌பின் வருமாறு.

ஷரத்துக்கள்‌
(1) 1 வது பார்ட்டிக்குச்‌ சொந்தமான மேற்கண்ட, விலாசத்திலுள்ள வீடு 2 வது
பார்ட்டிக்கு 11 மாத காலத்திற்கு வாடகைக்குக்‌ கேட்டுக்‌ கொண்டதன் பேரில்‌
1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு வாடகைக்கு விட இதன்‌மூலம்‌சம்மதிக்கின்றார்‌.

(2) மேற்படி வீட்டிற்கு அட்வான்சாக 2 வது பார்ட்டி, 1 வது பார்ட்டியிடம்‌ ரூ. 10,000/-
(ரூபாய்‌ பத்து ஆயிரம் மட்டும்‌) கொடுத்துள்ளார்‌. அதனை 1 வது பார்ட்டி பெற்றுக்‌
கொண்டதற்கு இதுவே பணப்பற்று ரசீதாகும்‌. மேற்படி அட்வான்ஸ்‌ தொகைக்கு
வட்டி ஏதும்‌ கிடையாது. இந்த அட்வான்ஸ்‌ தொகையை 2 வது பார்ட்டி வீட்டை
காலி செய்யும்‌ போது 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டியிடம்‌ மேற்படி அட்வான்ஸ்‌
தொகையை திருப்பிக்‌கொடுக்க சம்மதிக்கின்றார்‌.

(3) மேற்படி வீட்டிற்கு இரு பார்ட்டிகளும்‌ சம்மதித்து ஒப்புக்‌ கொண்டுள்ளபடி


வாடகையாக ரூ.4,000/- (ரூபாய்‌ நான்கு ஆயிரம் மட்டும்‌) என வாடகை, மற்றும்
தண்ணீர் / பராமரிப்பு ரூ. 300/- (ரூபாய்‌ முன்னூறு மட்டும்‌).
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(4) மேற்படி வாடகையை பிரதி ஆங்கில மாதம்‌ 10 ந்‌ தேதிக்குள்‌ 2 வது பாராட்டி,
1 வது பார்ட்டியிடம்‌ தவறாமல்‌ செலுத்தி வரவேண்டியது. வாடகையை 2 வது
பார்ட்டிக்கு தொடர்ந்து மூன்று மாதம்‌ செலுத்தத்‌ தவறினால்‌ 1 வது பார்ட்டிக்கு
வீட்டை காலி செய்துவிட அதிகாரம்‌உண்டு.

(5) மேற்படி வீட்டை இரண்டாவது நபர்‌ வேறு யாருக்கும்‌ மேல்‌ வாடகைக்கோ


அல்லது லீசுக்கோ கொடுக்கக்கூடாதென்றும்‌, அரசு சட்ட விரோதமான
செயல்களை 2 வது பார்ட்டி செய்யமாட்டேன்‌என ஒப்புக்‌கொள்கிறார்‌.

(6) 1 வது பார்ட்டிக்கு மேற்படி இடம்‌ தேவைப்பட்டாலோ அல்லது 2 வது பார்ட்டிக்கு


வீடு தேவையில்லாத பட்சத்திலோ இரு பார்ட்டிகளும்‌ மூன்று மாத காலத்திற்கு
முன்பே எழுத்து மூலம்‌ தெரிவித்துவிட இரு பார்ட்டிகளும்‌ ஒப்புக்‌
கொள்கிறார்கள்‌.

-3-

(7) வீட்டை காலி செய்யும்‌பட்சத்தில்‌மின்கட்டண பாக்கி மற்றும்‌வேறு ஏதாவது


பாக்கித்‌ தொகை முதல்‌ பார்ட்டிக்குக்‌ கொடுக்க வேண்டியிருந்தால்‌, முதல்‌
பார்ட்டி வாங்கிய அட்வான்ஸ்‌ தொகையில்‌ மேற்படி பாக்கித்‌ தொகையை
கழித்துக்‌ கொண்டு மீதித்‌ தொகையை கொடுக்க முதல்‌ பார்ட்டிக்கு
உரிமையுண்டு. இதற்கு இரண்டாவது பார்ட்டியும்‌சம்மதிக்கின்றார்‌.

(8) வாடகைதாரர்‌ மேற்படி வீட்டை உரிமையாளரின்‌ அனுமதியில்லாமல்‌ எந்தவித


மாறுதலும்‌, மற்றும்‌சுவற்றை இடிப்பதோ, புதிதாகக்‌கட்டுவதோ போன்ற எந்தவித
சேதாரமும்‌ கட்டாயமாக செய்யக்கூடாது. வீட்டை நல்லமுறையில்‌ பராமரித்து
வரவேண்டும்‌.

(9) இந்த ஒப்பந்தப்‌பத்திரம் காலக்கெடுவான பதினோரு மாதங்கள்‌(07.09.2022 to


06.08.2023 வரை) முடிந்ததும்‌ 2 வது பார்ட்டி வீட்டை வாடகைக்கு தொடர்ந்து
நடத்த விரும்பினால்‌ அன்றைய நிலவரப்படி புதிய ஒப்பந்தப்‌ பத்திரம் செய்து
கொள்ள வேண்டியது.

(10) வாடகைதாரர்‌ மேற்படி வீட்டை வாடகை காலம் முடிந்து உரிமையாளரிடம்


ஒப்படைக்கும் பொழுது வீட்டை சுத்தம் செய்து எந்த வித சேதாரமும் இல்லாமல்
ஒப்படைக்க வேண்டும்.

இந்தப்படிக்கு நாம்‌ இரு பார்ட்டிகளும்‌ சம்மதித்து கீழ்க்கண்ட


சாட்சிகளின்‌ முன்னிலையில்‌ ஏற்படுத்திக்‌ கொண்ட கடை வாடகை ஒப்பந்தப்‌
பத்திரம்‌ஆகும்‌.

SCHEDULE

சென்னை-600042, வேளச்சேரி ஓரண்டியம்மன் கோயில் தெரு கதவு எண்.25/63


முதல் தளம், சுமார் 250 சதுரடி கொண்ட ஓட்டு வீடு.

சாட்சிகள்‌:-

1.
வீட்டின் உரிமையாளர்

2.
வீட்டின் வாடகைதாரர்‌

You might also like