You are on page 1of 2

வீடு வாடகை ஒப்பந்த பத்திரம்

ஆக நாம் இரு பார்டிகளும் ஏகமானதாக சம்மதித்து எழுதிக் கொள்ளும் வீடு வாடகை ஒப்பந்தம்
யாதெனில்

வீடு உரிமையாளர் வீடு வாடகைதாரர்


மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில "SHIVA ENTERPRISES" வைத்து நடத்த 11 (பதினோரு)
மாத காலங்களுக்கு வாடகைக்கு அளிக்க வாடகைதாரர் கோரியதில் உரிமையாளரும் வாடகைக்கு விட
ஒப்புக்கொண்டு கீழ் கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இரு சாரும் ஏற்றுக்கொண்டு இந்த வாடகை
ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்கின்றனர் .
இப்பொது இந்த வாடகை ஒப்பந்தம் கூறுவதாவது
1. வாடகை காலம் 01.09.2022 முதல் ஆரம்பமாகிறது. ஆங்கிலம் மாதக் கணக்கில் வாடகை காலம்
இருக்க வேண்டும். 11 மாதங்களுக்கு அமலில் இருக்கும் (July 31st 2023 இல் முடியும்).

2. இரு சாரரும் பேசியபடி முன்தொகை ரூ.1,00,000/- (ருபாய் ஒரு லட்சம் மட்டும்) வாடகை முன் பணம்
காப்புத்தொகையாக உரிமையாளரிடம் செலுத்தியுள்ளார். இதைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதும்
இதுவேயாகும்.

3. மாதாந்திர வாடகை தொகை ரூ. 6800/- (ஆறாயிரத்து எண்ணூறு மட்டும்) என்று ஒப்புக்
கொள்ளப்பட்டு பிரதி மதமும் 10 ஆம் தேதிக்குள் அந்தந்த மாத வாடகையை தாமதம் செய்யாமல்
உரிமையாளரிடம் வாடகைதாரர் செலுத்திவிட வேண்டும். மாதம் மாதம் கழிவு நீருக்கு ரூ. 100
செலுத்த வேண்டும். 11 மதத்திற்குப்பிறகு 10% கடை வாடகை உயர்த்தப்படும்.
4. கடைக்குண்டான மின்சார கட்டணத்தை தனி மீட்டர்படி தனியாக செலுத்த வேண்டும்.

5. வாடகை காலம் நீடித்திருக்கும் வரை வாடகை பாகத்தையும், அதன் சுற்றுப்புறத்தையும்,


சுத்தமாகவும், குடியிருப்பதற்கு லாயக்கான மற்றும் வியாபாரம் செய்யும் நிலையிலும் வாடகைதாரர்
வைத்திருக்க வேண்டும்.

6. வாடகை பாகத்தை உள் வாடகைக்கு விடுவதில்லை என்றும் தனக்கு இருக்கும் உரிமையை


உரிமையாளர் அனுமதியின்றி வேறொருவருக்கு மாற்றுவதில்லை என்றும் வாடகைதாரர்
ஒப்புக்கொள்கிறார்.

7. வாடகைதாரர் வாடகை பாகத்தின் அமைப்பை உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு பொழுதும்


மாற்றம் செய்வதில்லை என்றும் வாடகைதாரர் ஒப்புக்கொள்கிறார்.

8. வாடகைதாரர் தான் வியாபாரம் செய்யும் மற்றும் தங்கும் பகுதியின் அருகில் உள்ள மற்ற
குடித்தனக்காரர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

9. வாடகைதாரருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து வாடகை பாகத்தை மேற்பார்வையிட


உரிமையாளருக்கும் அல்லது அவருடைய பிரதிநிதிகளுக்கும் உரிமை உண்டு. ஆகையால்
மேற்பாவையிட எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன் என்று வாடகைதாரர் உறுதி
கூறுகிறார்.

10. மேற்படி வாடகைதாரர் வாடகை பாகத்தை காலி செய்யும் போது வாடகை முன்பணத்தை வாடகை
பாக்கி, மின்சார பாக்கி, மற்றும் கடைபாகத்தில் எதாவது சேதாரமோ அல்லது தங்கும் இடத்தில்
உள்ள பொருட்களுக்கு எதாவது சேதாரம் ஏற்பட்டிருந்தால் அதற்குண்டான செலவுகள் போக வட்டி
ஏதும் இன்றி உரிமையாளர் வாடகைதாரரிடம் திருப்பிக் கொடுக்க ஒப்புக் கொள்ளகிறார்.

11. பதினோரு மாதங்களுக்கு பிறகு தொடர்ந்து வாடகைதாரர் வியாபாரம் செய்ய விரும்பினால்


உரிமையாளர் மற்றும் அவரது வாரிசுகளின் அனுமதியின் பெயரில் இந்த வாடகை ஒப்பந்தப்
பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

12. வாடகை பாகத்தை காலி செய்வதனால் ஒரு மாத நோட்டீஸ் எழுத்து மூலமாக கொடுத்து விடுவதாக
இருவரும் ஒப்புக் கொள்ளகிறார்கள்.

சாட்சிகள்
1. கடை உரிமையாளர்

2.
கடை வாடகைதாரர்

You might also like