You are on page 1of 1

3

9. இரண்டாவது பார்ட்டி தான் கடை வைத்து நடத்திக் கொண்டு வரும் கடை கட்டிடத்தை
பதினொரு மாத காலத்திற்குள் காலி செய்வதாக இருந்தால் முதல் பார்ட்டிக்கு மூன்று
மாத காலத்திற்கு முன்பாக தெரிவிக்க இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

10. அது போல முதல் பார்ட்டிக்கு பதினொரு மாதக் காலாத்திற்குள் கடை


தேவைபட்டாலும், இரண்டாவது பார்ட்டிக்கு மூன்று மாத காலத்திற்கு முன்பாக
முன்னறிவிப்பு மூலம் தெரிவிக்க இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

11. இரண்டாவது பார்ட்டி மேற்படி கடை கட்டிடத்தில் ஏதேனும் சேதங்கள் அல்லது


பழுதுகள் ஏற்படுத்தி இருந்தால் அதற்குண்டான கட்டணத்தை இரண்டாவது பார்ட்டி
செலுத்தியுள்ள அட்வான்ஸ் தொகையில் பிடித்தம் செய்துக் கொள்ள முதலாவது
பார்ட்டிக்கு முழு அதிகாரம் உண்டு.

12. இரண்டாவது பார்ட்டி கடையை இரண்டு வருடதிற்க்கு ஒரு முறை வெள்ளை அடிக்க
வேண்டும் என்று முதல் பார்ட்டி கூற அதற்கு இரண்டாவது பார்ட்டி சம்மதிக்கிறார்.
இந்தப்படிக்கு நாம் இரண்டு பார்ட்டிகளும் சம்மதித்து எழுதிக் கொண்ட கடை வாடகை
ஒப்பந்தப் பத்திரம் ஆகும்.
சொத்து விவரம்

சென்னை-600 051, மாதவரம் பால்பண்ணை, விக்டரி பீல்டு, கடை எண்.10-ல் கீழ் தளத்தில்
அமைத்துள்ள இரண்டு கடைகள் மட்டும் இந்த வாடகை ஒப்பந்ததிற்க்குட்பட்டதாகும்.

சாட்சிகள் :-
1. முதல் பார்ட்டி

(கடையின் உரிமையாளர்)

2. இரண்டாவது பார்ட்டி

(கடையின் வடகைதார்)

You might also like