You are on page 1of 4

கிரைய உடன்படிக்கை ஒப்பந்த பத்திரம்

2022 ம் வருடம் ஜூன் மாதம் 4 ம் தேதி, சனிக்கிழமை

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், பனைக்குளம்


கிராமம், சோகையன்தோப்பில் வசிக்கும் திரு. முனியசாமி அவர்களின்
குமாரர் திரு. அருண்குமார் (கைபேசி எண். 9944377189 ) (இதுமுதற்கொண்டு
இவர் கிரையம் கொடுப்பவர் என்று அழைக்கப்படுவார்)

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், பனைக்குளம்


கிராமம், சோகையன்தோப்பில் வசிக்கும் திரு. சூரியநாராயணன் (கைபேசி
எண். 9894547649) (இதுமுதற்கொண்டு இவர் கிரையம் வாங்குபவர் என்று
அழைக்கப்படுவார்)

ஆக இருதரப்பினரும் சம்மதித்து எழுதிக் கொண்ட கிரைய


உடன்படிக்கை ஆவணம் என்னவென்றால்.
இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள இராமநாதபுரம்
மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், பனைக்குளம் கிராமம்,
சோகையன்தோப்பில் உள்ள சொத்தானது விற்பனை கொடுப்பவர் தனது
சொந்த வருவாய் மற்றும் சேமிப்பைக்கொண்டு 07-10-2020 தேதியிட்ட
இராமநாதபுரம் 2 நிர் சார்பதிவக 1 புத்தக ஆவண எண். 1731/2020 மூலம்
கிரையம் பெற்று, எந்தவிதமான வில்லங்கத்திற்கும் உட்படுத்தாமல் சர்க்கார்
வரி வகையறாக்கள் செலுத்திக்கொண்டு தன்னுடய சொந்த அனுபவத்திலும்
சுவாதீனத்திலும், சகல சர்வ சுதந்திர பாத்தியங்களுடனும், உரிமைகளுடனும்
ஆண்டு அனுபவித்து வருகிறார்.

கிரையம் கொடுப்பவர் தனது குடும்பச் செலவுகளை ஈடு செய்யும்


பொருட்டு கீழே ஷெடியூலில் விவரிக்கப்பட்ட சொத்தை கிரையம் செய்ய
முடிவு செய்ததில், கிரையம் வாங்குபவரும் முன்வந்து கிரையம் வாங்க
சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கீழே ஷெடியூலில் விவரிக்கப்பட்ட சொத்தை ரூ. 13,93,500 (ரூபாய்


பதிமூன்று லட்சத்து தொண்ணூற்றி மூன்றாயிரத்து ஐநூறு )க்கு
இருதரப்பினரும் கிரையம் நிச்சயித்து கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு சம்மதித்து
எழுதிக் கொண்ட கிரைய உடன்படிக்கை ஆவணம்.

1. இந்த கிரைய உடன்படிக்கையின் காலம் இன்றைய தேதியிலிருந்து


இரண்டு மாதங்களாகும். அதாவது 4 ஜூன் 2022 முதல் 4 ஆகஸ்ட் 2022
வரை மட்டுமே ஆகும்.

2. கிரையத் தொகையில் முன்பணமாக ரூ. 2,00,000 (ரூபாய் இரண்டு


லட்சம் ) கிரையம் கொடுப்பவர் இன்றைய தேதியில் கீழ்கண்ட சாட்சிகள்
முன்னிலையில் கிரையம் வாங்குபவரிடமிருந்து ரொக்கமாக
பெற்றுக்கொண்டார். அதனை கிரையம் கொடுப்பவர் ஒப்புக்கொள்கிறார்.

3. மீதிக் கிரையத் தொகையை கிரையம் வாங்குபவர் இரண்டு


தவணையாக செலுத்துவதாகவும், முதல் தவனையான ரூ. 2,93,500 (ரூபாய்
இரண்டு லட்சத்து தொண்ணூற்றி மூன்றாயிரத்து ஐநூறு) தொகையை 01
ஜூலை 2022 அன்றும், இரண்டாவது தவனையான ரூ. 9,00,000 (ரூபாய்
ஒன்பது லட்சம்) தொகையை 01 ஆகஸ்ட் 2022 அன்றும் செலுத்துவதாகத்
தெரிவித்ததை கிரையம் கொடுப்பவரும் சம்மதிக்கிறார்.

4. கீழ்கண்ட சொத்தின் மீது வழக்குகள், கடன்கள், முன்கிரைய


உடன்படிக்கைகள், வில்லங்கங்கள் ஏதுமில்லை என இதன் மூலம் கிரையம்
கொடுப்பவர் உறுதி கூறுகிறார்.

5. கிரையம் கொடுப்பவர் கீழ்கண்ட சொத்தினை கிரையம் செய்யும்வரை


சொத்திற்குரிய வரிவகையறாக்களை நிலுவை பாக்கியின்றி செலுத்த
சம்மத்திக்கிறார்.

6. கீழ்கண்ட சொத்துக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களின் நகல்கள்


இன்றைய தேதியில் கிரையம் கொடுப்பவர் கிரையம் வாங்குபவரிடம்
ஒப்படைக்கிறார். கிரையம் பதிவு செய்யும் நாளில் அசல் ஆவணங்களை
கிரையம் வாங்குபவரிடம் ஒப்படைக்க சம்மதிக்கிறார்.
7. கிரைய ஆவணப் பதிவிற்கு தேவையான முத்திரைத் தீர்வை மற்றும்
பதிவுக் கட்டணத்தை ஏற்க கிரையம் பெறுபவர் சம்மதிக்கிறார்.

8. மேலே கண்ட உடன்படிக்கை கால அவகாசத்திற்குள் அனைத்து கிரைய


நடவடிக்கைகளும் முடிவு செய்யப்பட்டு கிரைய ஆவணம், கிரையம்
வாங்குபவர் பெயருக்கோ அல்லது அவரது பிரதிநிதிக்கோ எழுதிக் கொடுக்க
கிரையம் கொடுப்பவர் சம்மதிக்கிறார்.

9. இந்த கிரைய உடன்படிக்கை ஆவணத்தின் மூலம் சொத்தின் சுவாதீனம்


ஒப்படைக்கப்படவில்லை.

10. மேலே தெரிவித்துள்ள தவணை தேதிகளில், ஒப்புக்கொண்ட


தவணைத்தொகையை கிரையம் வாங்குபவர் செலுத்தத் தவறும்
பட்சத்தில் கிரையம் கொடுப்பவர் வேறு எந்த பார்ட்டிக்கும் கிரையம்
செய்து கொடுக்க உரிமை உண்டு என்பதையும், வேறு எந்த ஒரு
நிபந்தனைகளையும் எவர் ஒருவர் மீறினாலும் இந்த ஒப்பந்தம் ரத்து
செய்ய உரிமை உண்டு என்பதையும் இருவரும் சம்மதிக்கிறார்கள்.

இந்தப்படிக்கு நாம் இருவரும் சம்மதித்து அடியிற் கண்ட சாட்சிகள்


முன்னிலையில் எழுதிக் கொள்ளும் கிரைய உடன் படிக்கை ஆவணம்.

சொத்து விவரம்

1. இராமநாதபுரம் 2 நிர் இணை சார்பதிவகம் அழகன்குளம் குரூப்


அழகன்குளம் கிராம உள்கடை பனைக்குளம் கிராமம்
சோகையன்தோப்பு பட்டா எண்.1328 சர்வே எண்.23/8-க்கு பரப்பு
ஹெக்டேர் 1.04.0-ல் வடபுரம் நடுப்புரம் மேல்புரம் செண்டு 5.03-க்கு
கிழமேலடி வடபுரம் 28.1/ கிழமேலடி தென்புரம் 281.2/ தென்வடலடி
மேல்புரம் 77 தென்வடலடி கீழ்புரம் 77 அளவுள்ளது. சதுரடி 2194.1/2-க்கு
சதுரமீட்டர் 203.87 அளவுள்ளது. மேற்படி சொத்து சப்டிவி சன்படி பட்டா
எண்.1328 சர்வே எண்.23/8ஏ1ஏ-க்கு பரப்பு ஹெக்டேர் 0.74.0 என இருந்து
தற்கால சப்டிவிசன்படி சர்வே எண்.23/38ஏ1-க்கு பரப்பு ஹெக்டேர் 0.60.78-
ல் தாக்கலாகி வருகிறது.

மேற்படி சொத்துக்கு நான்குமால் விபரம்:


வடக்கு - கிழமேலோடிய பொதுப்பாதை
கிழக்கு - லதா கிரைய நிலம்,
தெ ற்கு - மு.முஹமதுஹனிபா, மு.அலிஅக்பர் நிலம்
மேற்கு - மு.முஹமதுஹனிபா, மு.அலிஅக்பர் நிலம்,

2. இராமநாதபுரம் 2 நிர் இணை சார்பதிவகம், அழகன்குளம் குரூப்,


அழகன்குளம் கிராம உள்கடை பனைக்குளம் கிராமம்
சோகையன்தோப்பு பட்டா எண்.1328 சர்வே எண்.23/8-க்கு பரப்பு
ஹெக்டேர் 1.04.0-ல் வடபுரம் நடுப்புரம் மே ல்புரம் செ ண்டு 2.1/2-க்கு
கிழமேல் அடி வடபுரம் 14 கிழமேல அ்டி தென்புரம் 14 தென்வடல் அடி
மேல்புரம் 78 தென்வடலடி கீழ்புரம் 78 அளவுள்ளது சதுரடி 1092-க்கு சமீ
101.45 அளவுள்ளது மேற்படி சொத்து சப்டிவிசன்படி பட்டா எண்.1328
சர்வே எண்.23/8ஏ1ஏ-க்கு பரப்பு ஹெக்டேர் 0.74.0 என இருந்து தற்கால
சப்டிவி சன்படி சர்வே எண்.23/38ஏ1-க்கு பரப்பு ஹெக்டேர் 0.60.78-ல்
தாக்கலாகி வருகிறது.

மேற்படி சொத்துக்கு நான்குமால் விபரம்:


வடக்கு - கிழமேலோடிய பொதுப்பாதை
கிழக்கு - வனிதா கிரைய நிலம்,
தெ ற்கு - மு.முஹமதுஹனிபா, மு.அலிஅக்பர் நிலம்
மேற்கு - முருகதாஸ், ரமேஷ்குமார் இவர்கள் கிரையநிலம்,

கிரையம் கொடுப்பவர் கிரையம் வாங்குபவர்

சாட்சிகள்:

1.

2.

3.

4.

You might also like