You are on page 1of 4

மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம்,

திருச்சி

அசல் வழக்கு எண் :1 ஆண்டு: 2023

மீரா ... வாதி

-எதிர்-

சிவா ... பிரதிவாதி

உரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை எண் VIII


விதி
ஒன்றின் படி சமர்ப்பிக்கும் எதிர்வாதுரை.

1.பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் வாதத்தில்


குறிப்பிடப்பட்டுள்ள சங்கதிகள் அனைத்தும் எமது பிரதிவாதி ஒப்புக்கொண்ட
சங்கதிகள் தவிர ஏனைய சங்கதிகள் அனைத்தும் தவறானது, பொய்யானது,
பிழையானது. சட்டப்படியும், நியாயப்படியும் நிலைக்கத்தக்கது அல்ல. அதை
வாதியை நிரூபிக்க கடமைப்பட்டவர்.

2. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் வாதி மூன்றாவது


பத்தியில் கூறியுள்ளபடி தாவா சொத்து வாதியின் மூதாதையரான குமார்
என்பவருக்கு அவருடைய மூதாதையர் மூலம் பாத்தியப்பட்ட சொத்துக்கள்
என்பதை பிரதிவாதி ஏற்கிறார். மேலும் இச்சொத்து வாதியின் கொள்ளு தாத்தா
குமார் மற்றும் அவரது நான்கு மகன்களுக்கு இடையே .....‌‌..‌‌.....‌... தேதியில்
பகிர்வு ஆவண எண் மூலம் பாகப்பிரிவினை மூலமும் பிரிக்கப்பட்டு அவரவர்
சொத்துக்கள் அவரவர் ஆளுகையில் இருந்தது என்ற வார்த்தை (வாதத்தை)
பிரதிவாதி ஏற்றுக்கொள்கிறார்.

3. பிரதிபாதி பணிந்து சமர்ப்பித்து கொள்வது யாதெனில் வாதி நான்காவது


பத்தியில் கூறியுள்ள படி குமார் என்பவரின் இரண்டாவது மகனான அருண்
என்பவருக்கு ராமு மற்றும் சோமு என்ற இரு மகன்கள் உள்ளனர் என்றும்,
மேற்படி ராமு அவர்களின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இவ்வழக்கின்
பிரதிவாதி மற்றும் வாதியாவார்கள் என்ற கருத்தை பிரதிவாதி கேட்கிறார்.
ஆனால், நான்காவது பத்தியில் கூறியுள்ளபடி அருண் என்பவர் தனது இரு
மகன்களுக்கும் எந்த சமரச ஆவணத்தின் மூலம் சொத்துக்கள் பிரித்து
கொடுக்கவில்லை. சோமு தனது அனைத்து சொத்துக்களையும் ராமுவிற்கு
விடுதலை செய்து விட்டார் எனவே சமரச ஆவணத்தை வாதியை நிரூபிக்க
கடமைப்பட்டவர் ஆவார்.

4. பிரதிவாதி பணிந்து சமர்ப்பித்து கொள்வது யாதெனில் வாதி ஐந்தாவது


பத்தியில் கூறியுள்ள படி சமரச ஆவணம் ஏற்படுத்துவதற்கு முன்பாகவே
வாதியும் பிரதிவாதியும் பிறந்து இருந்தனர் என்ற கருத்து உண்மை. ஆனால்,
சமரச ஆவணம் செய்து கொடுப்பதற்கு முன்பு அல்ல. விடுதலை செய்து
கொடுப்பதற்கு முன்புதான்.

5. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் குடும்ப சொத்தை


பொருத்து பிரதிவாதி மற்றும் பிரதிவாதியின் தாயார் , மற்றும் பிரதிவாதியின்
தந்தை ஆகிய மூவரும் கூட்டாக இணைந்து குடும்ப சொத்தை அனுபவித்து
வந்தனர் , என்ற வாதம் முற்றிலும் பொய்யானது. மேலும், வாதியே அதை
நிரூபிக்க கடமைப்பட்டவராவார்.

6. பிரதிவாதி பணிந்து சமர்ப்பிப்பது யாதெனில் பிரதிவாதியின் தகப்பனார் கடந்த


21. 9. 2009 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக இயற்கையை எய்தினார்
என்ற கருத்து உண்மைதான். மேலும் பிரதிவாதியின் தகப்பனார் உயிருடன்
இருக்கும் போது பிரதிவாதி மட்டுமே அவரை நல்ல முறையில் தன்னுடைய
இறுதி காலம் வரை பார்த்துக் கொண்டார். வாதி அவரை (தன்னுடைய
தகப்பனாரை) என்ன ஏன் என்று கூட பார்த்துக் கொள்ளவில்லை. மேலும்
பிரதிவாதியே அவருடைய தகப்பனாருக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளையும்
மற்ற இதர செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். வாதி எதற்கும் பொறுப்பு
ஏற்கவில்லை மேலும் வாதி நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

7. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் வாதி ஏழாவது


பட்டியில் கூறியுள்ள படி பிரதிவாதியின் தகப்பனாரான ராமு இறந்த பின்பு
சொத்துக்களை பிரிக்கும் முயற்சி ஏற்பட்டு பிரதிவாதி மற்றும் அவரது தாயார்
வாதியின் பங்கினை ஒருபோதும் மறுக்கவில்லை என்பதை இங்கே தெரிவித்துக்
கொள்கின்றோம். மேலும் பிரதிவாதியும் அவருடைய தாயாரும் பிரதிவாதியின்
தந்தை ராமு அவர்கள் எழுதி வைத்த உயில் படி செயல்பட்டனர்.

8. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் அந்த


உயிலின்படி மூதாதையர் சொத்துக்கள் அனைத்தும் பிரதிவாதிக்கும் ராமுவின்
சுய சம்பாத்தியத்தின் மூலம் ஏற்பட்ட அனைத்து சொத்துக்களையும் வாதிக்கு
கொடுக்க வேண்டும். அதன்படியே பிரதிவாதி வாதியிடம் உயில் பற்றி தெரிவித்து
வாதியின் முழு சம்மதம் மற்றும் விருபத்தினை தெரிந்து கொண்டு வாதியையும்
வைத்து கொண்டே சொத்துகள் அனைத்தையும் வாதிக்கு பிரித்து
கொடுத்துள்ளார். ஆனால் வாதியோ தந்தையின் (ராமு) சுய சம்பாத்தியத்தின்
மூலம் வந்த சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு இதனை மறைத்தத்துடன்
மேலும் தனது தகப்பனாரின் மூதாதையர் சொத்திலும் பங்கு கேட்கிறார். இது
முற்றிலும் நியாயமற்றது.

9. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் எட்டாவது


பத்தியில் கூறியுள்ளது போல பூர்வீக சொத்துக்களை பொறுத்து பிரதிவாதி
கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளார் என்ற கருத்து உண்மைதான். பிரதிவாதி
வாதியிடம் கட்டுமான பணிகள் துவங்குவதற்கு முன்பு அறிவித்துவிட்டே
செய்தார். உயில் படி பூர்வீக சொத்துக்களை பொறுத்து பிரதிவாதிக்கு முழு
உரிமை உள்ளது.

10. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் இவ்வழக்கை


பொறுத்து தேவைப்படின் கூடுதல் எதிர்வாதுரை தாக்கல் செய்ய பிரதிவாதிக்கு
உரிமை வழங்க இந்த நீதிமன்றத்தை வேண்டிக் கொள்கிறார்.

11. பிரதிவாதி பணிந்து சமர்பித்துக்கொள்வது என்னவென்றால் பிரதிவாதியின்


தகப்பனார் ராமு அவர்கள், சுய நினைவுடனும் , யாருடைய வற்புறுத்தலின்
பெயரிலும் அல்லாமல், நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன், நல்ல
நோக்கத்தில் எழுதி வைத்த உயிலின்படியும், வாதியின் முழு சம்மதம் பெற்ற
பின்புமே பிரதிவாதி தாவா சொத்தில் கட்டிடம் கட்டும் வேலையை செய்து
வருகிறார்.

ஆகவே இம்மாண்பமை நீதிமன்றத்தில் பிரதிவாதி பிரார்த்தித்துகொள்வது


என்னவென்றால்

அ. வாதி கேட்டுள்ள பரிகாரப்படி நிரந்தர உருத்து கட்டளையோ , அல்லது


தற்காலிக உறுத்து கட்டளையோ ,பிறப்பிப்பது எவ்விதத்திலும் நியாயம் அன்று.
மேலும், அது சட்டத்திற்கு புறம்பானது, என்றும்

ஆ. கணம் கோர்ட்டார் அவர்கள் தாவா சொத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தக்க


தகுதியான தீர்ப்பையும் இன்னபிற என கருதும் பரிகாரங்களையும் வழங்குமாறும்

இந்த நீதிமன்றத்தின் முன்பு எங்களுடைய எழுத்து மூலமாக எதிர்வாதுறையை


சமர்ப்பித்து கொள்கின்றோம்.

You might also like