You are on page 1of 6

மாண்புறு நீதித்துறை

நடுவர் (விரைவு நீதிமண்றம்)


வேலூர்

S.T.C.NO. /2021

புகார்தாரர் சார்பில் தாக்கல்


செய்யப்படும் பிரமாண
வாக்குமூலம்

A.KARTHIKEYAN
MS.NO.151/1996
CELL.9487234788
ADVOCATE, VELLORE
மாண்புறு நீதித்துறை நடுவர் (விரைவு நீதிமண்றம்) வேலூர்

S.T.C.NO. /2021

M.K.துரை, வயது 52
த/பெ M.கிருஷ்ணன்,
நெ.28, மாசிலாமணி தெரு,
கொசபேட், வேலூர்-1, வேலூர் மாவட்டம்.
……புகார்தாரர்

ஏதிர்
M. மணி, வயது 60
த/ பெ முனிசாமி,
நெ. 7 மற்றும் 8, 1 ஆம் குறுக்குத்தெறு,
பிஷ்ஷப்‌டேவிட் நகர், வேலூர் - 632 001,
வேலூர் மாவட்டம். ….. ஏதிரி

புகார்தாரர் சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாண வாக்குமூலம்

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், வேலூர்-1, கொசபேட்,

மாசிலாமணி தெரு, எண் 28 இல் வசிக்கும் M.கிருஷ்ணன் மகன் சுமார்‌52

வயதுள்ள M.K.துரை ஆகிய நான் அடியில் கண்டவையினை பிரமானமாய்

கூறுகிறேன்.

1. இம்மனுவில் நான் புகார்தாரர் ஆவேன்.


2. நான் பணிந்து சமர்பித்துகொள்வது யாதெனில் மேல் கண்ட

எதிரியான M.மணி என்பவர் தனது அவசர தேவைக்காக

திரு.பாக்கியராஜ், த/பெ.மாயவன் மற்றும் திரு.A.சிவா,

த/பெ.அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் என்னிடம் இருந்து

22/05/2021 அன்று ரூ.3,90,000/- (ரூபாய் மூன்று லட்ச‌


த்தி

தொண்ணூராயிரம் மட்டும்) கடனாக பெற்றுக்கொண்டு அதனை ஒரு

மாதத்தில் திருப்பி செலுத்துவதாக உறுதியளித்தார்.

3. நான் பணிந்து சமர்பித்து கொள்வது யாதெனில் மேல் கண்ட

எதிரியானவர் தான் ஒப்புகொண்டபடி புகார்தாரர் எனக்கு நான்

பலமுறை கேட்டும் எனக்கு எவ்விதமான பணமும் திருப்பி

செலுத்தவில்லை.

4. நான் பணிந்து சமர்பித்து கொள்வது யாதெனில் நான் பலமுறை

எதிரியிடம் கேட்ட பின்பு மேல் கண்ட எதிரி ஆனவர் 29/06/2021 அன்று

ரூ.3,90,000/- க்கு என் பெயருக்கு H.D.F.C வங்கி, வேலூர் கிளையின்

மீ து வரையப்பட்ட 29/06/2021 தேதியிட்ட 000204 எண்ணுள்ள

காசோலையை என் வட்டிற்கு


ீ வந்து என்னிடம் தன் வங்கி கணக்கில்

போதிய பணம் உள்ளதாகவும், மேல் கண்ட காசோலையை

வங்கியில் செலுத்தி மேல் கண்ட பரிவர்த்தனை பாகிக்காக வரவு

வைத்து கொள்ளுமாறு கூறி அளித்தார். அவர் மீ து நான்

கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் இருந்து

அந்த காசோலையை பெற்று கொண்டு அவர் கூறியபடியே 26/08/2021

நான் கணக்கு வைத்துள்ள H.D.F.C வங்கி வேலூர் கிளையில்

வசூலுக்காக செலுத்தினேன். என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்


வகையில் மேல் கண்ட எதிரியினால் அளிக்கப்பட்ட

காசொலையானது எதிரியின் வங்கி கணக்கில் போதிய பணமில்லை

என்ற மேற்குறிப்புடன் திருப்பப்பட்டது. இது விவரம் எனக்கு என்

வங்கியின் மூலம் 02/09/2021 அன்று தெரிவிக்கப்பட்டது. மேற்படி

எதிரியினால் என் பெயருக்கு H.D.F.C வங்கி, வேலூர் கிளையின் மீ து

வரையப்பட்ட 000204 எண்ணுள்ள 29/06/2021 தேதியிட்ட காசோலை

மற்றும் என் வங்கியினால் அளிக்கப்பட்ட குறிப்பாணையையும்

தாக்கல் செய்கிறேன். அதனை மேல்தட்டு புகார் மனுவின் ஒரு

அங்கமாக பாவிக்க கோருகிறேன்.

5. நான் பணிந்து சமர்பித்து கொள்வது யாதெனில் அவ்வாறு

எதிரியினால் அளிக்கபட்ட காசோலையானது போதிய பணமின்றி

திருப்பபட்ட விவரம் என் வங்கியின் மூலம் தெரிவிக்கப்பட 30

தினங்களுக்குள் நான் எதிரிக்கு 06/09/2021 அன்று எதிரிக்கு ஒரு சட்ட

அறிக்கையினை அனுப்பினேன். அதனை எதிரி 13/09/2021 அன்று

பெற்றுக்கொண்டு எந்த பதில் அறிவிப்பையும் அனுப்பவில்லை.

நான் எதிரிக்கு 22/11/2021 அன்று அனுப்பிய சட்ட அறிக்கை,

எதிரியிடம் சார்வு செய்யப்பட்ட அஞ்சலக ஒப்புதல் அட்டை (இரு

எண்கள்) ஆகியனவற்றை தாக்கல் செய்துள்ளேன். அவைகளை

மேல்கண்ட புகார் மனுவின் ஒரு அங்கமாக பாவிக்க கோருகிறேன்.

6. நான் பணிந்து சமர்பித்து கொள்வது யாதெனில் மேல்கண்ட

எதிறியானவர் தன் வங்கி கணக்கில் போதிய பணமில்லை என்ற

விவரத்தை தெரிந்து கொண்டே அதன் விளைவுகளை நன்கு தெரிந்து

கொண்டே மேல்கண்ட காசோலையை எனக்கு என்னை ஏமாற்றும்


நோக்கோடு அளித்துள்ள காரணத்தினால் மேல்கண்ட எதிரியானவர்

மாற்றுமுறை ஆவணச் சட்டபிரிவு 138-ன்படி தண்டிக்கப்பட

வேண்டியவராகிறார்.

7. எனவே மேல்கண்ட வழக்கின் கோப்பிற்கு எடுத்துக்கொண்டு

எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி அவரை விசாரித்து அவருக்குரிய

தண்டனையை வழங்கும்படியும், குற்றமுறை விசாரணை

சட்டபிறிவு 357-ன்படி எதிரி எனக்கெதிராக மேல்கண்ட குற்றம்

புரிந்ததற்கான இழப்பீடு தொகையை வழங்கி உத்தரவிடும்படியும்

இம்மாண்புறு நீதிமண்றத்தை வணக்கமுடன் பிராத்திக்கிறேன்

இல்லாவிடில் எனக்கு மிக்க கஷ்டமும் நஷ்டமும் ஏற்படும்.

மேல்கண்ட நபர் மேல்கண்டவைகள் யாவும் உண்மையேன உறுதி

கூறி ‌என் முன்பாக வேலூரில் 08/03/2022-ல் கையெழுத்து செய்தார்.

வழக்கறிஞர், வேலூர்

You might also like