You are on page 1of 3

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சிவகாசி

செ. இராமச்சந்திரன் …வாதி


-VS-
ம. லதா …பிரதிவாதி

ஷ வாதிபக்கம் வணக்கமாய் தாக்கல் செய்யும் அண்டர் ஆர்டர் 7 ரூல் 1 சி.பி.சி இன் படி:

வாதியின் விலாசம்:
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர், M.A நகர் பெருசித்தநார் தெரு, கதவு எண்: 2 / 111 A - இல்
வசித்து வரும் செல்லச்சாமி குமாரர், இந்து, சுமார் 55 வயதுள்ள செ.இராமச்சந்திரன்.
மேற்படி வாதிக்கு சம்மன் நோட்டீஸ் முதலானவைகளை சார்பு செய்ய மேலே கண்ட விலாசமும்
மேற்படியாளரின் வழக்கறிஞர் S.தங்கமுடி பாண்டியராஜ் B.A.,LL.B., கதவு எண் 640, தென்காசி
ரோடு, ராஜபாளையம், என்ற விலாசம் போதுமானது.
பிரதிவாதி விலாசம்:
விருதுநகர் மாவட்டம், மேலாண் மன்ற நாடு, வடக்கு தெரு கதவு எண்: என்ற விலாசத்தில் வசித்து
வரும் மதுவேல் ஏசு நேசன் மனைவி கிருஸ்தவ சமயர் 50 வயதுள்ள லலிதா.
மேற்படி வாதிக்கு சம்மன் நோட்டீஸ் முதலானவைகளை சார்பு செய்ய மேலே கண்ட விலாசம்
போதுமானதாகும்.

பிராது தபசில் சொத்து ஆதியில் 1 ஆம் வாதியின் தகப்பனார் வழி தாத்தாவான மாரியப்ப
நாடார் என்பவருக்கு பூர்விகமாய் பதியப்பட்ட சொத்தாகும். மாரியப்ப நாடார் தகப்பனார் பெயர்
ராமையா நாடார் என்பதாகும். மேற்படி சொத்தை வாதியின் தகப்பனார் செல்லச்சாமி மற்றும்
வாதியும் எந்தவித இன்னலும் கிடைச்சாலும் இல்லாமல் அனுபவித்து வந்தார்கள். வாதி தொழில்
சம்மந்தமாக வெளியூர் குடியிருந்து வேலை செய்து வந்தார். வாதியின் தகப்பருக்கு தேவையான
உதவிகளை பிரதிவாதி உறவு என்ற முறையில் செய்து வந்தார். அதற்கு உண்டான செலவுகளை வாதி
பிரதிவாதியிடம் அவ்வப்போது கொடுத்து தீர்த்து வந்தார். இந்நிலையில் வாதியின் குடும்ப
சூழ்நிலையை புரிந்து கொண்ட பிரதிவாதி மற்றும் பிராய்வதியின் தாயாருடைய தூர் போதனையை
கேட்டு வாதிக்கு மட்டும் பூர்விகமாய் பதியப்பட்ட தபசின் சொத்தை கடந்த 01.07.1999 தேதி 85
வயதுள்ள, புத்தி சுயாதீனம் இல்லாமல் வீட்டில் இருந்த வாதியின் தகப்பனாரை சார் பதிவாளர்
அலுவலகத்திற்கு அழைத்து சென்று தபசின் சொத்தை கிரயம் பெற்றுள்ளார். மேற்படி கிராம்
பெற்றதற்கு எந்த ஒரு கிரயம் தொகையும் வாதியின் தகப்பனார் செல்லச்சாமி பெறவில்லை எனவே
சட்டபடி கிரயம் செல்லத்தக்கதல்ல போலியான ஆவணமாக கருத்தப்படும்.
வாதியின் தகப்பனார் செல்லச்சாமி கடந்த 09.04.2021 ஆம் தேதி காலமானார், காலமான
பிறகு வாதி தபசின் சொத்தை பொறுத்து வீடு கட்ட முயற்சி செய்த பொது தான் தபசின் சொத்து
போலியாக பிரதிவாதி கிரயம் செய்தது தெரியவந்தது.
உடனே வாதி பிரதிவாதியை அணுகி தபசின் சொத்தை பொறுத்து கேள்வி கேட்ட போது
எந்த வித உரிய பதிலும் தெரிவிக்காததால் கடந்த 27.04.2022 ஆம் தேதி தகுந்த விளக்கம்
அளிக்குமாறு பிரதிவாதிக்கு வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு வாதி அனுப்பியுள்ளார். சட்ட அறிவிப்பை
பெற்று பிரதிவாதி எந்த வித உரிய பதிலும் தராமல் இருந்து வந்த நிலையில் கடந்த 0405.2022 ஆம்
தேதி வாதிக்கு பாத்தியப்பட்ட தபசின் சொத்தில் பிரதிவாதி தரப்பினர் வீடு கட்ட எத்தளித்துள்ளார்.
வாதி காவல் நிலையத்தை அணுகியதால் பிரதிவாதி மற்றும் அவரது ஆட்களை அறிவுறுத்தி
அனுப்பி வைத்துள்ளனர்.
தபசின் சொத்து வருவாய்துறையில் வாதியின் தாத்தா ராமையா நாடார் பெயரில் உள்ளது.
தபசின் சொத்தை பொறுத்து தற்போது வரை வாதியின் அனுபோகத்தில் இருந்து வருகிறது.
பிரதிவாதி மற்றும் அவரது தரப்பினர் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் ஆள்பலம்
மிக்கவர் ஆவர் எனவே பிரதிவாதியை மற்றும் அவரது ஆட்களையும் நீதிமன்றத்தின் உத்தரவின்
மூலமே கட்டுப்படுத்த முடியும். வாதியின் அனுபவத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மூலமாக
செயல்பட்டு வருவதாலும் உரிய பாகங்களை பெறுவதற்காக தாவா வழக்கு சமூகம் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்படுகிறது.
நீதிமன்ற வரம்பிற்காகவும், முத்திரை கட்டணத்திற்காகவும், தாவா வழக்கினை விளம்புகை
பரிகாரத்திற்காகவும், அதன் தொடர்ச்சியாக நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரத்திற்காகவும்
தவாயின் உத்தேவுமாக ____________ ருபாய் நீதிமன்ற கட்டணமாக இத்துடன்
செலுத்தப்படுகிறது.

தாவா வழக்கிற்கு வாக்குமூலம்

பிராது தவாயின் சொத்தும் அதன் அதிகாரமும் வாதி மற்றும் குடும்பத்தாருக்கு பதியப்பட்டு


அவர்கள் அனுபவித்து வந்த காலம் முதலும் ராமையா நாடார் காலத்திற்கு பின்பு அவரது மகன்
செல்லச்சாமி நாடார் கிடைத்த காலத்திலும் அவர் அதனை அனுபவித்து வந்த காலத்திலும் அவர்
காலமான பின்னர் அவரது மக்களான வாதி அனுபவித்து வந்தும் தபசின் சொத்து இருக்குமிடமான
வெம்பக்கோட்டை தாலுக்கா, அப்பயநாயக்கண்பட்டி கிராமம், மேலாண்மன்ற நாடு வழக்கிற்காக
வியாஜ் மூலம் உள்பத்து.

1) ஆகவே சமூகம் கோர்ட்டவர்கள் கிருபை செய்து பிராது தபது வாதிக்கு பாத்தியப்பட்டது என


விளம்புகை செய்தும் அதன் தொடர்ச்சியாக வாதி அமைதியான முறையில் அனுப்புவதற்கு
பிரதிவாதியோ, வகையாட்களோ எவ்வகையிலும் எவ்விதத்திலும் இடைஞ்சலோ இன்னலோ
செய்யக்கூடாது என பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர உருத்துக்கட்டளை பரிகாரம்
வழங்கியும்.

2) வழக்கின் செலவுத்தொகை வாதிக்கு பிரதிவழி செலுத்த உத்தரவிடவேண்டும் என்றும்.

3) வழக்கின் சந்தர்பப் சூழல்களுக்கு தகுந்த தீர்ப்பும் தீர்ப்பானை பிறப்பித்து நீதி புரிய


வணக்கமாய் பிரார்திக்கப்படுகிறது.

வழக்கறிஞர் வாதி

மேலே கண்ட பலவும் வாதியான எனக்கு தெரியமட்டில் உண்மையானவைகள் என்றும்


எதார்த்தமானவவைகள் என்றும் உறுதி கூறுகிறேன்.
வாதி

You might also like