You are on page 1of 5

கிரைய ஆவணம்

2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ஆம் மேதி காஞ்சிபுரம்


மாவட்டம்,உத்திரமேரூர் வட்டம், அரசாணிமங்கலம் கிராமம், புதிய பாரதி
நகர் எண்.88 இல்லத்தில் வசிக்கும், திரு. கண்ணாயிரம் அவர்களின் குமாரர்
ரு. K. முருகன் (ஆதார் அட்டை எண்.4325 6754 6589), (கைபேசி எண்.
7986543809), அவர்களக்கு,

சென்னை-600091, புழுதிவாக்கம், வில்அலஜ் ரோடு, குருலட்சுதி ந்கர், பிளாக்


எண்.8 இல்லத்தில் வசிக்கம் திரு. X.புல்கர்ட் சேவியர் (X.FULBERT XAVIER)9
ஆதார் அட்டை எண். 8765 67809 7653),அவர்களின் பொது அதிகாரம் பெற்ற
முகவரான

சென்னை-600091, புழுதிவாக்கம், வில்வேஜ் ரோடு, குருலட்சுமி நகர், பிளாட்


எண்.8 இல்லத்தில் வசிக்கும் காலஞ்சென்ற தைநேசிமுத்து அவர்களின்
குமாரர் திரு. தை. சேவியர் செல்வராஜ் (ஓட்டுநர் உரிமம் எண்.
TN0719800417) ஆகிய நான் ழுதிக்கொடுத்த புஞ்சை காலிமனை சுத்த
விற்பனை ஆவணம் என்னவென்றால்,

மேற்படி புல்பர்ட் சேவியர் அவர்கள் கடந்த 10-11-2010 ஆம் ஆண்டில்


திருவண்ணாமலை மபவட்டம், வந்தவாசி வட்டம், வந்தவாசி டவுன்,
மீ யன்னா காதர்சா முதல் தெரு எண்.16/A, இல்லத்தில் வசிக்கம்
P.குப்புபிச்சை அவர்களின் குமாரர் திரு. K.நாகூர்மிரான் அவர்களிடம்
சுயார்ஜிதமாய் கிரையம்பெற்று அந்த ஆவணம் கீ ழ்க்கொடுங்காலூர்
சார்பதிவகத்தில் 1 புத்தகம் 2010 ஆம் ஆண்டு 1610 எண்ணாக பதிவாக
மருதாடு கிராமத்திய வருவாய்த்துறை பட்டா எண்.1577 – ன்படி அவர்
அனுபவித்துவந்த சொத்தினை பொருத்து

மேற்படி புல்பர்ட் சேவியர் அவர்கள் திரு. தை, சேவியர் செல்வராஜ் ஆகிய


எனக்கு கடந்த 10.11-2010 ஆம் தேதியில் ஒரு பொது அதிகார ஆவணம்
எழுதிக்கொடுத்து அந்த ஆவணம் கிழ்க்கொடுங்காலூர் சார்பதிளர்
அலுவலகத்தில் 4 புத்தகம் 2010 ஆம் ஆண்டின் 77 எண்ணாகப் பதிவான
பத்திரப்படி என்னுடைய பராமரிப்பிலும், மேற்பார்வையிலும் இருந்து
வரும் சொத்தினை பொருத்து நான் ஏற்படுத்தியுள்ள “ராயல் டவுன்”
மனைப்பிரிவில் அரசு முலம் வழங்கப்பட்ட மனைப்பிரிவு ஒப்புதல்
ம.வ/ந.ஊ.து.இ(வே.ம) எண்.DTCP 04/2011-ன் படி அரசு அங்கீ காரம் பெற்ற
“ராயல் டவுன்” மனைப்பிரிவில்

மேற்படி பொது அதிகாரம் எழுதிக்கொடுத்த திரு. X. புல்பர்ட் சேவியர்


அவர்களின் குடும்ப செலவிற்காக மேற்படி பொது அதிகாரம்
எழுதிக்கொடுத்தவரிம் முகவராகிய நான் இன்றைய தேதியில் தங்களிடம்
ரொக்கமாக பெற்றுக்கொண்ட ரூபாய் 80,400 (எழுத்தால் எண்பதாயிரத்தி
நான்கு நூற்றிற்கும்) கீ ழே சொத்து விவரத்தில் காணும் மனையினை
இன்றே எமது சுவாதீனம் செய்துவிட்டேன்.

ஆகையால் இன்று முதல் சொத்து விபரத்தில் காணும் சொத்தினை


தாங்களே கைப்பற்றிக்கொண்டு சர்க்கார் தீர்வை முதலானதும் செலுத்திக்
கொண்டு சகல தானாதி விநிமய விக்கிரையங்களுக்கு யோக்கியமாயும்,
புத்திர பௌத்திர பாரம்பரியமாயும் சர்வ சுதந்திரங்களுடன் ஆண்டு
அனுபவித்து கொள்ள வேண்டியது

கிரையச் சொத்தில் கலன் ஒன்றும் இல்லை கலன் இருந்தால்


பொதுஅதிகாரம் எழுதிக் கொடுத்தவர்களின் இதர சொத்துக்களைக்
கொண்டு நானே முன்னின்று அக்கலனை தீர்த்துக்கொடுக்க
சம்மதிக்கின்றேன்

இதன்படி பொது அதிகார முகவராக நான் சம்மதித்து எழுதிக்


கொடுத்த புஞ்சை காலிமனை சுத்த விற்பனை ஆவணம்.

மேற்படி பொது அதிகார எழுதிக்கொடுத்த திலு.X. புல்பட்ர் சேவியர்


அவர்கள் நலமுடன் உள்ளார். மேற்படி பொது அதிகார ஆவணம்
நடைமுறையில் உள்ளது.

சொத்து விவரம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், செய்யார் பதிவு


மாவட்டம், கீ ழ்க்கொடுங்காலூர் துனைப்பதிவு மாவட்டத்தை சேர்ந்த நெ.176
மருதாடு கிராமத்திய, புஞ்சை சர்வே எண். 995/3B 0.58.5 ஏர்ஸ் பூரா 1 ஏக்கர்
44 செண்ட், புஞ்சை சர்வே எண். 1000/1A 0.03.5 ஏர்ஸ் பூரா 0.80 செண்டு ஆக
நிலம் 2 ஏக்கர் 99 செண்டில் என்னுடைய பராமரிப்பில் இருந்து வருவதும்
நான் ஏற்படுத்தி உள்ளதுகான “ராயல் டவுன்” மனைப்பிரிவில்
அரசின் வரைமுறைப்படுத்துத்திதல் திட்டத்தின்படி வழங்கப்பட்ட DTCP
மனைப்பிரிவு ஒப்புதல் ம.வ./ந.ஊ.து.இ.(வே.ம) எண் 04/2011-ன் படி
அங்கிகரிக்கப்பட்டுள்ள “ராயல் டவுன்” மனைப்பிரிவில்.

வாங்குபவர் கையெழுத்து பொது அதிகார பெற்ற முகவராக

புஞ்சை சர்வே எண். 1000/1A –ல்(இதற்கு புதிய சர்வே எண். 1000/1A1


ஆகும்).

மனை எண். 49A –க்க நான்கு எல்லைகள்

வடக்கில் – மனை எண்.49B

தெற்கில் - மனை எண். 49

கிழக்கில் – 30 அடி ரோடு

மேற்கில் – மனை எண். 49C

இதன் மத்தியில் கிழக்கு, மேற்க வடபுறம் 30 அடி, தென்புறம் 30


அடி, வடக்கு தெற்கு கீ ழ்புறம் 20 அடி, இதற்கு சதுரடி 600 அளவுள்ள
காலிமனையினையும் மற்றும்

புஞ்சை சர்வே எண். 1000/1A-ல் (இதற்கு புதிய சர்வே எண். 1000/1A1


ஆகும்).

மனை எண். 49B –க்க நான்கு எல்லைகள்

வடக்கில் – காலி நிலம்

தெற்கில் - மனை எண்.49A

கிழக்கில் – 30 அடி ரோடு

மேற்கில் – மனை எண்.49C

இதன் மத்தியில் கிழக்கு, மேற்க வடபுறம் 30 அடி, தென்புறம் 30


அடி, வடக்கு தெற்கு கீ ழ்புறம் 20 அடி, மேல்புறம் 20 அடி, இதற்கு சதுரடி
600 அளவுள்ள காலிமனை உள்படவும் ஆக இனம் இரண்டும் சேர்ந்து
1200 சதுரடி அளவுள்ள காலிமனைகளை மேற்படி தொகைக்கு உமக்கு
கிரையம் செய்து கொடுத்துவிட்டேன்.

மேற்படி மனைகளுக்கு மனை எண்கள் 49A, 49B,ஆகும் சொத்து வந்தவாசி


பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட மருதாடு கிராம பஞ்சாயத்தினை
சேர்ந்ததாகும். மேற்படி சொத்தின் தற்கால சந்தை மதிப்பு ரூபாய்.80,400
பெறும்.

சாட்சிகள்:
1. சிதம்பரம் த/பெ. நடராஜன்
நெ.1068 (1) தென்னன்டைத் தெரு,
கீ ழ்க்கொடுங்காலூர் கிராமம்
வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
ஆதார் அட்டை எண் : 944993090378

2. மண்ணு த/பெ. வரரகாவன்



நெ.10, தென்னன்டைத் தெரு,
கீ ழ்க்கொடுங்காலூர் கிராமம்,
வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
ஆதார் அட்டை எண் : 412578217709

ஆவணம் தயாரித்தவர் :-
ஆவண எழுத்தர் : T.S. இரவி, B.Sc.,M.A
முகவரி : கீ ழக்கொடுங்காலூர்,

Cell No. 9940618261, 9047538398


உரிமம் எண். B/2/2020/CYR

You might also like