You are on page 1of 15

CJM Court, Namakkal in S.C.No.

58/2022

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நாமக்கல்


முன்னிலை: திருமதி.P.சாந்தி, M.A., L.L.M.,
உதவி அமர்வு நீதிபதி / தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நாமக்கல்.

2023 ம் ஆண்டு ஜூலை திங்கள் 12 ம் நாள் புதன்கிழமை

அமர்வு வழக்கு எண்.58/2022 (CNR.No. TNNM02-006383-2023)

(இவ்வழக்கானது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1,

நாமக்கல்லில் முதல்நிலை வழக்கு எண்.13/2022 ஆக கோப்பிற்கு

எடுக்கப்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தினால் மட்டுமே

விசாரிக்கத்தக்கது என்ற வகையில் மாறுதல் செய்யப்பட்டு அமர்வு

வழக்கு எண்.58/2022 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு கூடுதல் சார்பு

நீதிமன்றம், நாமக்கலுக்கு இவ்வழக்கு மாறுதல் செய்யப்பட்டு பின்னிட்டு

மாண்பமை முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், நாமக்கல் உத்தரவின்

படி இவ்வழக்கு இந்நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்யப்பட்டது )

குற்றமுறையீட்டாளர் : அரசின் சார்பாக,


காவல் ஆய்வாளர்,
நல்லிப்பாளையம் காவல் நிலையம்
காவல் நிலைய குற்ற எண். 579/2021
எதிரிகளின் பெயர் : 1. கார்த்திகேயன் (எ) மணிகண்டன்,
த/பெ.,பிச்சமுத்து,
2/12/B,கள்ளிக்காட்டார்காடு
சன்னியாசி குண்டு, சேலம்.
நாமக்கல்.
2. பிரகாஷ், த/பெ. சிதம்பரம்
2/114, ஆண்டியப்பன் பிள்ளை
தோட்டம், சன்னியாசி குண்டு,
சேலம்

1
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

குற்றச்சாட்டு : 1 வது எதிரி மீது இதச பிரிவுகள் 294(b),


307

2 வது எதிரி மீது இதச பிரிவுகள் 294(b),


307

குற்றச்சாட்டு 1 வது எதிரி மீது இதச பிரிவுகள் 294(b),


வனையப்பட்டது 307

2 வது எதிரி மீது இதச பிரிவுகள் 294(b),


307

தீர்மானம் : 1.2 எதிரிகள் இதச பிரிவுகள் 294(b), 307


கீழ் குற்றவாளிகள் இல்லை என்று
தீர்மானிக்கப்பட்டது.

தீர்ப்பு : இறுதியாக, 1,2 எதிரிகள் மீதான இதச

பிரிவுகள் 294(b), 307 கீழ் வனையப்பட்ட

குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு

அப்பாற்பட்டு நிரூபணம் செய்யப்

படவில்லை என முடிவு செய்து,

சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு

நல்கி எதிரிகளை மேற்படி பிரிவுகளின்

கீழ் குற்றவாளிகள் இல்லை என

தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 235(1) கீழ்

விடுதலை செய்து இந்நீதிமன்றத்தால்

தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும், எதிரிகள்

மீதான பிணைப்பத்திரத்தை மேல்

முறையீட்டு காலத்திற்கு பின்னிட்டு ரத்து

2
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

செய்ய உத்தரவிடப்படுகிறது.

இவ்வழக்கில் சி.பி. எண்.9/2023-ல்

தாக்கல் செய்யப்பட்ட சா.பொ.1 ஆன TN

07 BS 8281 என்ற எண் கொண்ட ETIOS

வெள்ளைகலர் காரை அதன்

உரிமையாளர் 3 மாதங்களுக்குள் உரிய

ஆதாரங்களை ஒப்படைத்து பெற்றுக்

கொள்ள வேண்டும் எனவும், தவறும்

பட்சத்தில் வழக்கு சொத்து அரசுக்கு

ஆதாயமாக்கப்படும் என்றும்

உத்தரவிடப்படுகிறது.

அரசு தரப்பு வழக்கறிஞர் : திரு. பி.சம்பத்,M.A.,M.L.,


எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் : திரு.K.கிருஷ்ணன்B.Sc., B.L.,

இவ்வழக்கானது கடந்த 04.07.2023 ம் தேதி இறுதியாக

விசாரணைக்கு வந்தபோது குற்றமுறையீட்டாளர் தரப்பில் அரசு கூடுதல்

வழக்கறிஞர் திரு.P.சம்பத், M.A.,M.L., அவர்களும், 1,2 எதிரிகள் தரப்பில்

வழக்கறிஞர் திரு.K.கிருஷ்ணன் B.Sc.,B.L., அவர்களும். முன்னிலை

ஆகியும் நடத்திட இரு தரப்பு வாதுரை கேட்கப்பட்டும், வழக்கு

சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்களை பரிசீலனை செய்து இன்று

இந்நீதிமன்றம் வழங்கிடும்,

தீர்ப்புரை

நல்லிப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த

குற்ற இறுதியறிக்கையின் படி கடந்த 11.08.2021 ம் தேதி இரவு 21.00

3
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

மணிக்கு வாதி பிரபாகரன் என்பவருக்கும், 1 வது எதிரி கார்த்திகேயன்

மற்றும் 2 வது எதிரி பிரகாஷ் ஆகியோர்களுக்கும் TN 70 E 6989 என்ற

வாகனத்தை திரும்ப பெறுவது குறித்து தகராறு ஏற்பட்டதாகவும் அதனை

தொடர்ந்து வாதி முதலைப்பட்டி மேம்பாலம் அருகே உள்ள பெருமாள்

கோவில் எதிரில் தார் ரோட்டில் TN 88 B 6012 TVS Jupiter என்ற

இருசக்கர வாகனத்தில் சென்றபோது 1,2 எதிரிகள் இருவரும் வாதி

பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் TN 07

BF 8281 என்ற டயோடா இடியாஸ் காரை வேகமாக ஓட்டி சென்று

இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி வாதி பிரபாகரனுக்கு காயத்தை

ஏற்படுத்தியும், பீர் பாட்டிலை கொண்டு ஏண்டா தேவடியா கண்டாரஒழி

பயலே இன்னுமா நீ சாகல இத்தோடு செத்து போடா என்று சொல்லி

வாதியின் தலையை பார்த்து ஓங்கி அடித்து காயத்தை

ஏற்படுத்தியதாகவும், மேற்படி செய்கையினால் 1,2 எதிரிகள் இதச

பிரிவுகள் 294(b), 307 கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என இறுதி

அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. அறிவார்ந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1, நாமக்கல்

அவர்கள் இவ்வழக்கினை கோப்பிற்கு எடுத்து இவ்வழக்கின்

ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் பிரிவு 207 கு,வி.மு.ச கீழ்

எதிரிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, பின்னர் இவ்வழக்கில் கண்ட

குற்றம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தினால் மட்டுமே

விசாரிக்கத்தக்கது என்ற வகையில் மாறுதல் செய்யப்பட்டு அமர்வு

வழக்கு எண்.58/2022 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு கூடுதல் சார்பு

நீதிமன்றம், நாமக்கல்லுக்கு இவ்வழக்கு மாறுதல் செய்யப்பட்டு

பின்னிட்டு மாண்பமை முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், நாமக்கல்

4
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

உத்தரவின்படி இவ்வழக்கு இந்நீதிமன்றத்திற்கு மாறுதல்

செய்யப்பட்டது.

3. மேற்கண்டவாறு இவ்வழக்கு கோப்புகள் இந்நீதிமன்றத்திற்கு

வரப்பெற்ற பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்டும், ஆவணங்களை

ஆய்வு செய்ததில் எதிரிகள் மீது குற்றச்சாட்டு வனைய போதிய

முகாந்திரம் இருப்பதாக கருதி 1,2 எதிரிகள் மீது இதச பிரிவுகள் 294(பி),

307 கீழ் குற்றச்சாட்டுக்கள் வனைந்து விளக்கிக் கூறி வினவ எதிரிகள்

குற்றத்தை மறுத்துள்ளனர்.

4. அரசு தரப்பில் எதிரிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க அ.சா.1

முதல் அ.சா.6 வரையிலான சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு

அ.சா.ஆ.1 முதல் அ.சா.ஆ.9 வரையான சான்றாவணங்கள் குறியீடு

செய்யப்பட்டுள்ளது. சா.பொ.1 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5. அரசு தரப்பு சாட்சிகளின் சாராம்சங்கள் சுருக்கம்

அரசு தரப்பு சாட்சிகளான அ.சா.1 திரு.பிரபாகரன் தனது

சாட்சியத்தில் 1 ம்எதிரி தனது பெரியப்பா மகன் என்றும், 2 வது எதிரி, 1 ம்

எதிரியின் சித்தி மகன் என்றும், 1 ம் எதிரியும், தானும் பாலிசிங் தொழிலை

கூட்டாக செய்து வந்ததாகவும், அதில் கொடுக்கல், வாங்கலில் காலதாமம்

ஏற்பட்டது என்றும், அதனால் தான் நல்லிப்பாளையம் காவல்

நிலையத்தில் 1 வது எதிரியிடமிருந்து பணத்தை தனக்கு வாங்கி தருமாறு

மனு கொடுத்திருந்ததாகவும், ஆஜர் 1 வது எதிரி தனக்கு பணத்தை

கொடுத்து விட்டார் என்றும், புகார் வாக்குமூலத்தில் உள்ள கையொப்பம்

5
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

தன்னுடையது தான் என்றும், அந்த கையொப்பம் அ.சா.ஆ.1 என்றும்,

புகார் வாக்குமூலத்தில் என்ன விவரம் எழுதியிருந்தது என்று தனக்கு

தெரியாது என்றும், தான் பணம் பெற்று தருமாறு தான் மனு

கொடுத்ததாகவும், தன்னை பணத்திற்காக கொடுத்த மனுவில் தான்

விசாரித்தார்கள் என்றும், வேறு எதுவும் விசாரிக்கவில்லை என்று பிறழ்

சாட்சியம் அளித்துள்ளார்.

அ.சா.2 திரு.குமார் தனது சாட்சியத்தில் ஆஜர் எதிரிகளை தனக்கு

தெரியாது என்றும், சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு முதலைப்பட்டி

பாலம் அருகே லாரியை நிறுத்தி விட்டு லாரியில் உட்கார்ந்திருந்த போது

திடீரென சத்தம் கேட்டது என்றும், இறங்கி போய் பார்த்தபோது கும்பலாக

இருந்தது என்றும், தான் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை

என்றும், வழக்கு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், போலீசார்

தன்னை விசாரிக்கவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

அ.சா.3 திரு.சரவணன் தனது சாட்சியத்தில் இரண்டு வருடத்திற்கு

முன்பு போலீசார் வந்து கையொப்பம் கேட்டார்கள் என்றும், தான் போட்டு

கொடுத்ததாகவும், எதற்காக கேட்டார்கள் என்றால் இந்த விபத்து நடந்த

வழக்கு சம்மந்தமாக கேட்டார்கள் என்றும், பார்வைமகசரில் உள்ள

முதலாவது கையொப்பம் தன்னுடையது என்றும், அந்த கையொப்பம்

மட்டும் அ.சா.ஆ.2 என்றும், போலீசார் தன்னை விசாரிக்கவில்லை

என்று பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

அ.சா.4 திரு.மாதேஸ்வரன் தனது சாட்சியத்தில் இந்த வழக்கு

6
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆஜர் எதிரிகளை

தெரியாது என்றும், போலீசார் தன்னை விசாரிக்கவில்லை என்று பிறழ்

சாட்சியம் அளித்துள்ளார்.

அ.சா.5 திரு.முருகன் தனது சாட்சியத்தில் இந்த வழக்கு

சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆஜர் எதிரிகளை

தெரியாது என்றும், போலீசார் தன்னை விசாரிக்கவில்லை என்று பிறழ்

சாட்சியம் அளித்துள்ளார்.

அ.சா.6 திரு.குமரவேல்பாண்டியன், காவல் ஆய்வாளர் தனது

சாட்சியத்தில் தான் தற்போது நல்லிபாளையம் காவல் நிலையத்தில்

காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த 13.08.2021 ம்

தேதி அப்போதைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவர்

நிலைய அலுவலில் இருந்த போது நாமக்கல் மாருதி

மருத்துவமனையிலிருந்து ஏற்கனவே கிடைக்கப் பெற்ற பிரபாகரன்

என்பவரது தகவல் அறிக்கையின் பேரில் மேற்படி மருத்துவமனைக்கு

சென்று அங்கு உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த நாமக்கல்

மாவட்டம், செல்லப்பம்பட்டி அஞ்சல், முனியப்பன் கோவில் தெருவை

சேர்ந்த கந்தசாமி மகன் பிரபாகரன் என்பவரை விசாரித்து அவர் கொடுத்த

வாக்குமூலத்தினை பதிவு செய்து அவரிடம் படித்து காண்பித்து

சொன்னபடி சரியாக இருப்பதாக அவர் தெரிவித்ததால் அவரிடம்

கையொப்பம் பெற்று நிலையம் வந்து மேற்படி வாக்குமூலத்தின் பேரில்

இரவு 7.30 மணிக்கு நிலைய குற்ற எண்.579/2021, இதச பிரிவுகள்

294(b), 324, 506(ii), 307 கீழ் அ.சா.ஆ.3 முதல் தகவல் அறிக்கை பதிவு

7
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

செய்துள்ளார் என்றும், முதல் தகவல் அறிக்கையின் அசல், மற்றும்

வாதியின் புகார் வாக்குமூலத்தையும் இணைத்து நீதித்துறை நடுவர்

எண்.1, நாமக்கல் அவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கை புலன்

விசாரணைக்காக தன்னுடைய பார்வைக்கு வைத்ததை தான்

14.08.2021 ம் தேதி காலை 9 மணிக்கு சம்பவ இடமான சேலம்- நாமக்கல்

செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரூர்பட்டி பிரிவு ரோடு அருகே

சென்று அந்த இடத்தை சாட்சிகள் சரவணன், செல்வகுமார் ஆகியோர்

முன்னிலையில் பார்வையிட்டு அ.சா.ஆ.4 பார்வைமகசர் மற்றும்

அ.சா.ஆ.5 மாதிரிவரைபடம் தயார் செய்ததாகவும், நாமக்கல் மாருதி

மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட புகார்தாரர் பிரபாகரன் என்பவரை

விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர்

சம்பவத்தை கண்ணுற்ற சாட்சிகளான குமார், முருகன், மாதேஷ்வரன்

மற்றும் பார்வைமகசர் சாட்சிகள் சரவணன், செல்வகுமார்

ஆகியோர்களையும் மற்றும் கதிரவன், விஜயகுமார் ஆகியோர்களையும்

விசாரித்து தனிதனியாக வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், விசாரணை

முடிவில் சட்டபிரிவினை இதச பிரிவுகள் 294(b), 324, 506(ii), 307

லிருந்து 294(b), 307 இதசவாக பிரிவு மாற்றம் செய்து அ.சா.ஆ.6

சட்டபிரிவு மாறுதல் அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி

வைத்ததாகவும், தன்னுடைய விசாரணையிலிருந்து சம்பவம் நடந்தது

உண்மையென தெரியவந்ததால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட

எதிரிகளான கார்த்திகேயன் என்கிற மணிகண்டன் மற்றும் பிரகாஷ்

ஆகியோரை தேடி வரும் போது 23.08.2021 ம் தேதி ரகசிய தகவலின்

பேரில் சாட்சிகள் அடையாளம் காட்ட நாமக்கல் மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள போலீஸ் கேண்டின்

8
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

அருகில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் என்கிற கார்த்திகேயன்,

பிரகாஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து கைதுக்கான காரணத்தை கூறி

மாலை 4 மணிக்கு கைது செய்ததாகவும், பின்னர் மாலை 4.10 மணிக்கு

எதிரிகளை நிலையம் கொண்டு வந்து 1 ம் எதிரி கார்த்திகேயன் என்கிற

மணிகண்டன் என்பவரை மாலை 4.30 மணிக்கு விசாரிக்க அவர்

கொடுத்த பிரிவு 162(2) குவிமுச படியான வாக்குமூலத்தை பதிவு

செய்ததாகவும், அதில் வாதியை மோத பயன்படுத்திய காரை சேலம்

சீலநாயக்கன்ப்பட்டி பைபாசில் உள்ள எஸ்.கே.மோட்டார்ஸ் ஷோருமில்

கதிரவன் என்பவரிடம் ஒப்படைத்ததாகவும், கூட்டிக் கொண்டு சென்றால்

அந்த வண்டியை வாங்கி ஆஜர் ஆஜர்படுத்துவதாக சொன்னார் என்றும்,

எதிரியை கூட்டிச் சென்று மேற்சொன்ன எஸ்.கே.ஷோரூமிற்கு போய்

பார்த்த போது அங்கு மேலாளர் கதிரவன் என்பவர் வழக்கில் சம்பந்தப்பட்ட

வாகனத்தை காவல் நிலையம் வந்து ஒப்படைப்பதாக கூறினார் என்றும்,

சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட டொயாடோ எட்டியாஸ் காரின்

உரிமையாளர் சாட்சி விஜயகுமார் என்பவரை விசாரித்து வாக்குமூலம்

பதிவு செய்ததாகவும், பின்னர் எதிரிகளுடன் நிலையம் வந்து நீதிமன்ற

காவலுக்கு அவர்களை அனுப்பி வைத்ததாகவும், அதன் பின்னர்

24.08.2021 ம் தேதி காலை 9 மணிக்கு சாட்சி கதிரவன், என்பவர்

காவல்நிலையம் வந்து ஆஜர்படுத்திய இவ்வழக்கில் சம்பந்தபட்ட TN 07

BS 8281 என்ற டெயாடோ எட்டியாஸ் காரை படிவம் 91 ல்

கைப்பற்றியதாகவும், அதற்கு சாட்சியாக மேற்படி கதிரவன் என்பவர்

கையெழுத்திட்டுள்ளார் என்றும், அந்த படிவம் 91 அ.சா.ஆ.7 என்றும்,

கைப்பற்றிய வழக்கு சொத்தினை நீதிமன்றத்திற்கு அனுப்பி

வைத்ததாகவும், TN 07 BS 8281 என்ற டெயாடோ எட்டியாஸ் வெள்ளை

9
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

கலர் கார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது என்றும், அது

சா.பொ.1 என்றும், வாதி பிரபாகரன் என்பவருக்கு சிகிச்சை அளித்த

மாருதி மருத்துவமனை மருத்துவர் பழனிவேல் என்பவரை விசாரித்து

அவரது வாக்குமூலம் பதிவு செய்து காயச்சான்று அ.சா.ஆ.8

பெற்றதாகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவரை விசாரித்து

வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் வழக்கின் புலன்விசாரணை

முடித்து எதிரிகள் மீது இதச பிரிவுகள் 294(b), 307 ன் கீழ் 20.12.2021 ம்

தேதி இறுதியறிக்கை தாக்கல் செய்தததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.

6. அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியத்திலுள்ள எதிரிகளுக்கு

பாதகமாக தோன்றும் சாராம்சங்களை இந்நீதிமன்றம் எதிரிகளிடம்

கு.வி.மு.ச. பிரிவு 313 (1) (b) கீழ் வினவிய போது எதிரிகள் பொய்சாட்சி

எனவும், சாட்சியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சினை யாதெனில்,

7. எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசு தரப்பில்

சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதேயாகும்?

8. இரு தரப்பு வாதங்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள்

ஆகியவற்றை முழுமையாக பரிசீலனை செய்ததில் அரசு தரப்பில் அ.சா.1

முதல் 6 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள்

மூலமாக அ.சா.ஆ.1 முதல் அ.சா.ஆ.9 வரையிலான ஆவணங்களும்,

மற்றும் சா.பொ.1 ம் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

10
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

9. அரசு தரப்பில் கடந்த 11.08.2021 ம் தேதி இரவு 21.00 மணிக்கு

வாதி பிரபாகரன் என்பவருக்கும், 1 வது எதிரி கார்த்திகேயன் மற்றும்

2 வது எதிரி பிரகாஷ் ஆகியோர்களுக்கும் TN 70 E 6989 என்ற

வாகனத்தை திரும்ப பெறுவது குறித்து தகராறு ஏற்பட்டதாகவும் அதனை

தொடர்ந்து வாதி முதலைப்பட்டி மேம்பாலம் அருகே உள்ள பெருமாள்

கோவில் எதிரில் தார் ரோட்டில் TN 88 B 6012 TVS Jupiter என்ற

இருசக்கர வாகனத்தில் சென்றபோது 1,2 எதிரிகள் இருவரும் வாதி

பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் TN 07

BF 8281 என்ற டயோடா இடியாஸ் காரை வேகமாக ஓட்டி சென்று

இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி வாதி பிரபாகரனுக்கு காயத்தை

ஏற்படுத்தியும், பீர் பாட்டிலை கொண்டு ஏண்டா தேவடியா கண்டாரஒழி

பயலே இன்னுமா நீ சாகல இத்தோடு செத்து போடா என்று சொல்லி

வாதியின் தலையை பார்த்து ஓங்கி அடித்து காயத்தை

ஏற்படுத்தியதாகவும், மேற்படி செய்கையினால் 1,2 எதிரிகள் இதச

பிரிவுகள் 294(b), 307 கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என இறுதி

அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10. இவ்வழக்கில் காயம்பட்டவராக மற்றும் புகார்தாரராக

முன்னிறுத்தப்பட்ட அ.சா.1 அரசு தரப்பால் பிறழ் சாட்சியாக

பாவிக்கப்பட்டுள்ளார். அரசு தரப்பில் சம்பவத்தை கண்ணுற்ற சாட்சியாக

அ.சா.2, அ.சா.4 மற்றும் அ.சா.5 ஆகியோர்கள் முன்னிறுத்தப்

பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் சம்பவத்தை பற்றி தெரியாது என்றும்,

எதிரிகளை தெரியாது என்றும் கூறி அரசு தரப்பால் பிறழ் சாட்சியாக

பாவிக்கப்பட்டுள்ளனர். அ.சா.3 பார்வைமகசரில் சாட்சியாக கையெழுத்து

11
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார். இவர்களது சாட்சியம் அரசு தரப்பு

வழக்கினை நிரூபிக்கும் வகையில் அமையவில்லை என இந்நீதிமன்றம்

கருதுகிறது.

11. இவ்வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் எதிரிகள் தான் குற்ற

சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்று எதிரிகளை குறிப்பிட்டு அடையாளம்

காட்டி எதிரிகள் இழைத்ததாக சொல்லப்படும் குற்ற சம்பவத்தை

வலியுறுத்தி சாட்சியங்கள் அளிக்கவில்லை. மாறாக அ.சா.1 முதல் அ.சா.5

வரையானவர்களின் சாட்சியம் அரசு தரப்பால் பிறழ் சாட்சியமாக

கருதப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணை

அதிகாரியான அ.சா.6-ன் சாட்சியத்தை மட்டுமே வைத்து எதிரிகள் தான்

இவ்வழக்கின் குற்ற சம்பவத்தை செய்தார்கள் என முடிவு செய்ய

இயலாது என இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்த சூழ்நிலையில் எதிரிகள்

தான் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கு அரசு தரப்பில்

போதிய சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை.

எதிரிகளுக்கு எதிராக இறுதி அறிக்கையில் முன் வைத்த

குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க

தவறியுள்ளதாகவே இந்நீதிமன்றம் கருதுகின்றது. எனவே சந்தேகத்தின்

பலனை எதிரிகளுக்கு நல்கி எதிரிகளை இந்த குற்ற வழக்கிலிருந்து

விடுதலை செய்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

12. இறுதியாக, 1,2 எதிரிகள் மீதான இதச பிரிவுகள் 294(b), 307

கீழ் வனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு

நிரூபணம் செய்யப்படவில்லை என முடிவு செய்து, சந்தேகத்தின்

12
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

பலனை எதிரிகளுக்கு நல்கி எதிரிகளை மேற்படி பிரிவுகளின் கீழ்

குற்றவாளிகள் இல்லை என தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 235(1) கீழ்

விடுதலை செய்து இந்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும்,

எதிரிகள் மீதான பிணைப்பத்திரத்தை மேல்முறையீட்டு காலத்திற்கு

பின்னிட்டு ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது.

இவ்வழக்கில் சி.பி. எண்.9/2023-ல் தாக்கல் செய்யப்பட்ட சா.பொ.1

ஆன TN 07 BS 8281 என்ற எண் கொண்ட ETIOS வெள்ளைகலர்

காரை அதன் உரிமையாளர் 3 மாதங்களுக்குள் உரிய ஆதாரங்களை

ஒப்படைத்து பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில்

வழக்கு சொத்து அரசுக்கு ஆதாயமாக்கப்படும் என்றும்

உத்தரவிடப்படுகிறது.

இந்த தீர்ப்புரையானது என்னால் சுருக்கெழுத்து தட்டச்சருக்கு

சொல்லப்பட்டு, அவரால் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு என்னால்

பிழை நீக்கம் செய்யப்பட்டு 2023 ம் ஆண்டு ஜூலை திங்கள் 12 ம்

நாளான இன்று திறந்த நீதிமன்றத்தில் என்னால் அவையறிய

பகரப்பட்டது.
Digitally signed
by P SHANTHI
P Date:
SHANTHI 2023.07.12
18:29:59 +0530

உதவி அமர்வு நீதிபதி /


தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நாமக்கல்.
அரசு தரப்பு சாட்சிகளின் பட்டியல்

அ.சா.1 திரு.பிரபாகரன்

13
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

அ.சா.2 திரு. குமார்


அ.சா.3 திரு.சரவணன்
அ.சா.4 திரு.மாதேஸ்வரன்
அ.சா.5 திரு.முருகன்
அ.சா.6 திரு. குமரவேல்பாண்டியன், காவல் ஆய்வாளர்

அரசு தரப்பு சான்றாவணங்கள்

அ.சா.ஆ.1 13.08.2021 புகார் வாக்குமூலத்தில் உள்ள கையொப்பம்


அ.சா.ஆ.2 14.08.2021 பார்வை மகசரில் உள்ள கையெழுத்து மட்டும்
அ.சா.ஆ.3 13.08.2021 புகார் வாக்குமூலம்
அ.சா.ஆ.4 13.08.2021 முதல் தகவல் அறிக்கை
அ.சா.ஆ.5 14.08.2021 பார்வைமகசர்
அ.சா.ஆ.6 14.08.2021 மாதிரி வரைபடம்
அ.சா.ஆ.7 ----- சட்டபிரிவு மாறுதல் அறிக்கை

அ.சா.ஆ.8 24.08.2021 படிவம் -91


அ.சா.ஆ.9 19.11.2021 காயச்சான்றிதழ்

எதிரிகள் தரப்பில் சாட்சிகள் மற்றும் சான்றாவணங்கள் - இல்லை.

அரசு தரப்பு சான்று பொருள் -

சா.பொ.1 TN 07 BS 8281 என்ற எண் கொண்ட ETIOS வெள்ளைகலர்


கார் (சி.பி.எண். 9/2023)
Digitally signed
by P SHANTHI
P Date:
SHANTHI 2023.07.12
18:30:09
+0530

உதவி அமர்வு நீதிபதி /


தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நாமக்கல்.

14
CJM Court, Namakkal in S.C.No. 58/2022

CASE SUMMARY

1. The period of remand of the accused A1,2–Remanded on 23.08.2021


A1,2– Released on 08.10.2021
2. The date of filing of the complaint/Final report in Complaint – 23.08.2021
the Court Final Report – 07.04.2022
3. The date of Committal of the case to the Court 17.06.2022
Session
4. The date of questioning of the accused 14.06.2023

5. Filing of all miscellanous petitions and their results No


including the results on challenge before superior
courts, except routine petitions like petitions under
section 317 of the code
6. Date of examination in chief and cross 1.PW1-22.06.2023(Chiefand Cross)
examination of a witness 2.PW2-22.06.2023(Chief and Cross)
3.PW3-22.06.2023 Chief and Cross )
4.PW4-27.06.2023(Chief and Cross)
5.PW5-28.06.2023(Chief and Cross)
6.PW6-30.06.2023(Chief and Cross)
7. Date of examination of the accused u/s.313(1) 04.07.2023
(b) crpc
8. Details of abcondence of an accused and his NIL
appearance/production as the case may be, and
9. Grant of stay by Superior Courts and the results NIL
thereof

Digitally signed
by P SHANTHI
P Date:
SHANTHI 2023.07.12
18:30:17
+0530

Chief Judicial Magistrate,


Namakkal.

15

You might also like