You are on page 1of 2

5/26/23, 4:02 PM Tamil Bible

வார்த்தை: பொய் (நீ திமொழிகள் - நீ திமொழிகள் )

நீதிமொழிகள் 6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,


குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

நீதிமொழிகள் 6:19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே


விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

நீதிமொழிகள் 10:18 பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன்


மதிகேடன்.

நீதிமொழிகள் 12:17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;


பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

நீதிமொழிகள் 12:19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு


நிமிஷமாத்திரம் இருக்கும்.

நீதிமொழிகள் 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்;


உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 13:5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ


வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.

நீதிமொழிகள் 14:5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்;


பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

நீதிமொழிகள் 14:25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்;


வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

நீதிமொழிகள் 17:4 துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;


பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

நீதிமொழிகள் 17:7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;


பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

நீதிமொழிகள் 19:5 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப்


பேசுகிறவனும் தப்புவதில்லை.

நீதிமொழிகள் 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப்


https://www.tamil-bible.com/search.php 1/2
5/26/23, 4:02 PM Tamil Bible

பேசுகிறவன் நாசமடைவான்.

நீதிமொழிகள் 19:22 நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை;


பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.

நீதிமொழிகள் 21:6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத்


தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.

நீதிமொழிகள் 21:28 பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;


செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

நீதிமொழிகள் 25:18 பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற


மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும்
ஒப்பானவன்.

நீதிமொழிகள் 29:12 அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன்


ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.

நீதிமொழிகள் 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,


கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

நீதிமொழிகள் 30:8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத்


தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.

Total Number of verses matched = 20


Total Number of words = 24

https://www.tamil-bible.com/search.php 2/2

You might also like