You are on page 1of 9

ஐய்யாபோற்றி!

ஆவுடையான் தந்த அருளேபோற்றி!

இழிந்த யாகத்தை இடறினாய்போற்றி!

ஈசன் மகனே இறைவாபோற்றி!

உருத்திரன் சேவகன் ஆனாய்போற்றி!

ஊக்கமும் அருளும் தருவாய்போற்றி!

எட்டுக் கைகள் உடையாய்போற்றி!

ஏறு ஊர்தியான் செல்வனேபோற்றி!

ஐயன் ஆணை முடித்தாய்போற்றி!


ஒன்றான வடிவம் கொண்டு ஒட்டாரை
ஓட்டம் பிடிக்கச் செய்தாய் (10)போற்றி!

ஒளடதத் தடை செய்தாய்போற்றி!

சிவனார் சிகையில் தோன்றினாய்போற்றி!

சீலம் அளித்துக் காப்பாய்போற்றி!

தும்பை சூட அதிர வருவாய் பொருதுபோற்றி!

பஞ்ச ஆயுதம் பஞ்சாய்ப் பறக்க செய்வாய் போற்றி!

வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றி!

அரக்கர் படையை ஓடச் செய்தாய்போற்றி!


காளிப் படையை முன்னே அனுப்பிக்
கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றி!
பைரவர் துணை கொண்டாய்போற்றி!

பாங்காய் வெற்றி அடைந்தாய் (20)போற்றி!

திக்குப் பாலரைத் திக்குமுக்காடச் செய்து


திசையெல் லாம்வெற்றி பெற்றாய்போற்றி!

பகனின் கண்ணைப் பறித்தாய்போற்றி!

பகலவன் பற்களைப் பறித்தாய்போற்றி!


ஒளியால் உலகை ஆளும் கதிரவன்
ஒளியை இழக்கச் செய்தாய் போற்றி!

சந்திரனைக் காலால் தேய்தத


் ாய்போற்றி!

அக்னி நாவை அறுத்தாய்போற்றி!

அவனது தடக்கை தறித்தாய்போற்றி!

அமரர் வாழ்வை முடித்தாய்போற்றி!

குயிலின் சிறகை ஒடித்தாய்போற்றி!

வசிட்டர் காமதேனு பறித்தாய் (30)போற்றி!

அகத்தியனைக் குகையில் அடைத்தாய்போற்றி!

அமரர் ஆணவம் அழித்தாய்போற்றி!

எமனின் வாகனம் பற்றினாய்போற்றி!

ல்லா வாகனமும் அழித்தாய்போற்றி!

ஏகன் பணியை முடித்தாய்போற்றி!


எமனின் கொடியைப் பற்றியவாபோற்றி!

வருணன் தடக்கை பிணைத்தாய்போற்றி!

மலைகளைத் தகர்தத
் மன்னவாபோற்றி!
காடு கொண்ட விருட்சப் படையைப்
பீடு கொன்றைக் கீழடக்கியவாபோற்றி!

முனிவர் வெருவ முடித்தாய் (40)போற்றி!

வேதியரை ஓடியே ஒளியச் செய்தாய் போற்றி!


தக்கன் தலையை அறுத்து ஒழித்து
தகரின் தலையை அளித்தாய்போற்றி!
மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு
தமருகன் தந்த தனயனேபோற்றி!
தக்கன் செருக்கைச் சிதைத்து அழித்து
தாட்சாயணி சாபம் முடித்தாய்போற்றி!

காளியைத் துணையாய்க் கொண்டாய்போற்றி!

காக்கும் தெய்வமேபோற்றி!

வேள்வியை அழித்த வெவ்வுருவேபோற்றி!

தோல்வியே அறியாத் தூயவரேபோற்றி!

அட்டமா ஆயுதம் ஏந்தினாய்போற்றி!

இட்ட பணியை முடித்தாய் (50)போற்றி!

தக்கன் அவனின் வேள்விக் களமே


நன்காட்டுக் களமாய் மாற்றினாய்போற்றி!

தண்டமிழ் போற்றும் செந்தமிழ் கடவுளே நாட்டில்போற்றி!

தனித்த கோயில் கொண்டாய்போற்றி!

தரணி எங்கும் நிறைந்தாய்போற்றி!

தமிழர் வாழ்வைக் காப்பாய்போற்றி!

ஆசறு ஆதி வானவனேபோற்றி!

ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய்போற்றி!

கர்நாடகத்தில் கவினுற இருந்தாய்போற்றி!

கேரளாவில் கோயில் கொண்டாய்போற்றி!

பர்வத மலையுறை பாலனே (60)போற்றி!

காஷ்மீர் மாநிலத்தில் உறைத்தாய்போற்றி!

பேசும் தெய்வம் ஆனாய்போற்றி!

தேவாரப் பண்ணில் மிளிர்ந்தாய்போற்றி!

திருவாசக உந்தியில் அமர்ந்தாய்போற்றி!

வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய்போற்றி!

நாட்டுப்புற பாடல்களில் நல்லிடம் பெற்றவரேபோற்றி!

சிவனின் திருஉரு பெற்றாய்போற்றி! தீமைகளை அழித்துக்

காப்பாய்போற்றி! நல்இடம் பெற்ற இனியவாபோற்றி!


சூலம் ஏந்திச் சூறாவளியாய் வந்து
ஓலமிட்டு ஒடச் செய்தாய் (70) போற்றி!
சசிமுடி கண்டும் அஞ்சா தவரேபோற்றி!
சக்கரம் அடங்க அதட்டொலி செய்த அற்புத வாயுடைய
வீரபத்ரா போற்றி! சினத் தீயின் வெம்மையே போற்றி!

சிந்தனையில் நிறைந்த சிவஉருவேபோற்றி!

சிவனின் தோற்றம் கொண்டாய்போற்றி!

சீராய் வினைகள் முடித்தாய்போற்றி!

அல்லோரை அழித்து ஒழிப்பாய்போற்றி!

நல்லோரை வாழ வைப்பாய்போற்றி!

கற்கும் பிள்ளைகட் கருள்வாய்போற்றி!

கவலைகள் தீரத
் ்து அருள்வாய் (80)போற்றி!

கருவைக் காத்து நிற்பாய்போற்றி!

காலம் தோறும் சிறப்பாய்போற்றி!

கணபதியின் கருணைமிகு சோதராபோற்றி!

முருகனுக்கு மூத்த முதல்வனேபோற்றி!

அருள்மிகு வீரபத்ர தெய்வமேபோற்றி!

அடிப்பெருங் கடவுள் ஆனாய்போற்றி!

வினைகள் அறுக்கும் வீரனேபோற்றி!

வீரத்தை வழங்கும் வித்தகாபோற்றி!

நித்தம் அருளைப் பொழிவாய்போற்றி!


உன்னத வாழ்வை அளிப்பாய் (90)போற்றி!

காவல் தெய்வம் ஆனாய்போற்றி!

சைவம் தழைக்கச் செய்தாய்போற்றி!

சிவந்த செம்பொற் கழலடிபோற்றி!

வம்சம் செழிக்கச் செய்வாய்போற்றி!

வளமான வாழ்வு அளிப்பாய்போற்றி!

நாமகள் நாசியை அரிந்தாய் போற்றி!

நானிலம் சிறக்கச் செய்வாய்போற்றி!

திண்மை நிறைந்த தோளாய் போற்றி!

தீமை மனத்தைத் தீய்ப்பாய்போற்றி!

உலகம் உய்யச் செய்வாய் (100)போற்றி!

உத்தமத் தெய்வமே பத்திராபோற்றி!

தேவரை விரட்டிய தேவரேபோற்றி!

தேயமெலாம் போற்றும் வீரரேபோற்றி!

மாண்டவர்க்கு மீண்டுயிர் கொடுத்தவரேபோற்றி!

மீண்டும் போரிட்ட புத்திராபோற்றி!

மங்கையர் மாங்கல்யம் காப்பாய்போற்றி!

மாண்புறு தெய்வமாய் ஆனாய்போற்றி!

போற்றி போற்றி வீரபத்திரரேபோற்றி!


வரபத்திரர்
ீ துதி

சத்துருவின் நிலைமை பெறு தக்கன் மகம்

அடும் நாளில், தலைமை சான்ற பத்து

உருவம் பெறும் திருமால் முதலாய

பண்ணவர் தம் படிவம் யாவும்,

உய்த்து உருவுதனி வாள் கையுறு

வாழ்க்கை பெற்ற உருத்திர மூர்த்தி

பொற் பத்திரை அன்புறு வரபத்திரன்


சித் துருவினையே பரவல் செய்வாம்.

தியானஸ்லோகம்

மரகத மணிநீலம் கிண்கிண ீ ஜாலபத்தம்

ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி


நேத்ரம் … சூல தண்டோக்ர ஹஸ்தம்

விருதல மஹிபூஷம் வரபத்ரம்


ீ நமாமி"

தோற்றம்
சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய
மகளாவாள். சிவன் மீ து கொண்ட காதலால்,
தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள்.
இறைவனான சிவபெருமான் தனக்கு
மருமகனாக வந்தால் மேலும் புகழும்,
அதிகாரமும் கிடைக்கும் என்று நம்பிய தட்சன்
திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன்
கைலாயம் சென்றபோது, சிவபெருமான்
எழுந்துநின்று வரவேற்காததை நினைத்து
வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீ தான
கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும்
யாகமொன்றை நடத்தி சிவபெருமானை
அழையாமல்,திருமால், பிரம்மன் உள்ளிட்ட
அனைத்து தேவர்களையும், ரிஷிகளையும்
தட்சன் அழைத்தார். இதனை அறிந்த சதி
தன்னுடைய தந்தையிடம் முறையிடச் செல்ல
சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன்
அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும்
தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட
சதி யாகசாலை சென்றாள். அங்கு தச்சனால்
அவமானம் அடைந்து, யாககுண்டத்தில்
விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான்
ருத்திரன், மகாகாளி, வரபத்திரன்
ீ முதலிய
அவதாரங்களை உருவாக்கி தட்சனை
அழித்தார்.

வரபத்திரரின்
ீ வழிவந்தவர்கள் மற்றும் அவரை
குல தெய்வமாக வழிபடுபவர்கள் வரமுஷ்ட்டி

அல்லது வரமுட்டி
ீ என்று அழைக்கபடுவார்கள்.
வரமுட்டிகள்
ீ தமிழ் நாடு, ஆந்திரா மற்றும்
கர்நாடகாவில் பரவலாக
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வரபத்திரசுவாமி

வண்ணார்களின் குல தெய்வமாக
வணங்கப்படுகிறார் ,இந்த சமூக மக்களே
வரபத்திரன்
ீ வழி வந்தவர்களாக தமிழகத்தில்
கருதப்படுகின்றனர்.

வரபத்திரர்
ீ நட்சத்திரம்

திதி, பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

வரபத்திரர்
ீ காயத்ரி மந்திரம்

ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே

பக்தரக்ஷகாய தீமஹி

தந்நோ வரபத்ர:
ீ ப்ரசோதயாத்

You might also like