You are on page 1of 2

பூவுலகில் சொர்க்கம்

ஏட்ரியாட்டின் கடல் வடமேற்கு முனையில் உள்ள - கடற்கழியின் மத்தியில்

அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 குட்டித் தீவுகளால் ஆனது. அந்தக் கடலி வந்து

சேரும் நதிகள் வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின்றன.

கடல் அலைகளும் நீரோட்டமும் தொடர்ச்சியான மணல் இட்டுகளை

உருவாக்கியிருக்கின்றன. இவை சுமார் 51 கி.மீ. நீளத்திலும் 14 கி.மீ. அகலத்திலும்

உள்ள கடற்கழியைச் சூழ்ந்து அமைந்துள்ளன. கடலுக்குள் நுழையும் மூன்று குறுகிய

திறப்புகள் ஒரு மீட்டர்

உயரக் கடல் அலைகளுக்கும் கடல் சார்ந்த போக்குவரத்துக்கும் வழி செய்கின்றன.

ஓயாத வணிகப் போக்குவரத்துக்குப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கடற்கழியே

கடைசி நிறுத்தமாக இருந்தது.

வெனிசுக்கு வருகை புரியும் பலருக்கு, இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள்

பின்னோக்கிச் சென்றதுபோல் இருக்கும் இந்நகரத்தின் சூழல் கண்கவர்மிக்கதாக

அமைகிறது. மிகவும் அமைதியான நகரமாக அது விளங்குகிறது. அதுவே

இந்நகரத்தின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. போக்குவரத்து வசதிகள் குறுகிய

நடைபாதைகள், கால்வாய்கள் என்று பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கால்வாயை

ஒட்டியுள்ள பாதைகள் கால்வாய்க்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின்

வழி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடைபாதையைக் காட்டிலும்

நீர்ப்போக்குவரத்தே இங்கு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆகவே,

படகுகளே இந்தத் தண்ணீர் தேசத்தில் வலம் வருகிற ஒரே வாகனம்.

வெனிஸ் நகரம் கண்ணைப் பறிக்கும் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது.

தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், கம்பீரமாகக் காட்சியளிக்கும்

மணிக்கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற


பிரமாண்ட கடற்பகுதியாகக் காட்சியளிக்கின்றன. இக்காட்சியைக் காணக் கண்கள்

நூறு வேண்டும்.

முக்கியச் சதுக்கங்களில் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சிற்றுண்டிச்

சாலைகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும்

சுண்டி இழுக்கும் ஈர்ப்பாக அமைகின்றன. இடையிடையே, மெல்லிசை ஒலியைக்

கேட்டு மகிழும் தருணமாகவும் இஃது அமைகின்றது. அங்கு உட்கார்ந்து,

வருவோரையும் போவோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள

கட்டடக் கலையை இரசித்துக் கொண்டும் இருக்கலாம். கலைப் பொக்கிஷங்களைத்

தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது.

நகரின் நடுவே நதிகளில் எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரில் படகுச்

சவாரி செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி. இரு மருங்கிலும் வரிசையாக அமைந்த

கட்டடங்கள். நடுவே சலசலவென ஓடும் நீரின் ஓட்டம்; இதில் மிதக்கும் படகுகள்.

இங்கே உள்ள அலங்காரப் படகுகளை எண்ணி மாளாது. சுற்றுலாப் பயணிகள் அதில்

பயணித்துக் கொண்டே இரு பக்கமும் வேடிக்கை பார்ப்பதில் தனி இன்பம்

காண்கிறார்கள். வெயில் காலச் சூரியனின் கடுமையையும், பனிக் காலக் குளிரையும்

தாங்கும் அளவுக்கு இந்தக் கால்வாய்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

படிவம் 5 ,தொகுதி 10, பக்கம் 91,92

You might also like