You are on page 1of 4

இயல் 5

சிறுவினா

1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

விடை :

பெண்பாற் புலவர்கள் :

● ஒளவையார்

● நக்கண்ணையார்

● ஒக்கூ ர்
மாசாத்தியார்
கூ

● காக்கைப்பாடினியார்

● ஆதிமந்தியார்

● வெள்ளிவீதியார்

● வெண்ணிக்குயத்தியார்

● நப்பசலையார்

● பொன்முடியார்

● காவற்பெண்டு

● ளூ ந ன்முல்லையார் ஆகியோர் ஆவார்.


அள்ளூர்

2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல்


எழுதுக?

விடை :

இன்றைய பெண்கல்வி

குழுத்தலைவர் : ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே

நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே...


மற்றோர் : ஆமா கையிலே.....

குழுத்தலைவர் : ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்.....

மற்றோர் : ஆமா .... போகணும்.

குழுத்தலைவர் : சிந்திக்கும் மூமூ ளை


உனக்கு வேண்டும். அம்மா.... நீ நிந்தையைப்
பொறுத்துக்கோ

அம்மா... நீ உன் திறமையைக் காட்டு அம்மா...

மற்றோர் : ஆமா... திறமையைக் காட்டு அம்மா...

குழுத்தலைவர் : முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு அம்மா
நீ ... முடித்துக் காட்டு அம்மா ....

மற்றோர் : ஆமா... முடித்துக் காட்டு...

குழுத்தலைவர் : செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு... பட்டம் பெறு அம்மா சட்டம்


செய் அம்மா... நாடே உன்னை வணங்கட்டும் அம்மா....

மற்றோர் : ஆமா... நாடே உன்னை வணங்கட்டும் அம்மா...

3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

விடை :

மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:

● 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும்


உரியவர்.

● தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

●இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின்


முதல் துணை மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
பெண்மணியும் ஆவார்.

● அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952 ல் புற்றுநோய் மருத்துவமனை


ஆகியவற்றை நிறுவியவர்.
● தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்,
இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற
காரணமாக இருந்துள்ளார்.

4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

விடை :

தமிழ்ப்பணியின் சிறப்பு:

● நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே


தனித்தமிழ்ப் பற்றுடையவர்.

● இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் - தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,


பட்டினத்தடிகள் பாராட்டிய மூமூ வர் எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
ஆகிய நூநூ ல்களை

● மேலும், இவருடைய நூநூ ல்கள்


தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும்
பயனுள்ளனவாக விளங்குகின்றன.

நெடுவினா

1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

விடை :

முன்னுரை:

நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல


பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி
அறிந்து கொள்வோம்.

பண்டித ரமாபாய்:

1858 - ஆம் ஆண்டு முதல் 1922 - ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூ கத்கத்மூ
தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின்
உயர்வுக்குத் துணை நின்றவர், "பெண்மை என்றால் உயர்வு" என்பதற்குச்
சான்றாவார்.
ஐடாஸ் சோபியா:

1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே


விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர்
கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :

1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல்
செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும்
வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி
வருகிறது.

சாவித்திரிபாய் பூபூ லே:

1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில்,


ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :

பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப்


பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :

இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே


சாதனைப் பெண்மணிகளே.

"புவி வளம் பெறவே

புதிய உலகம் நலம் பெறவே

வாழியவே பெண்மை வாழியவே”

You might also like