You are on page 1of 30

குருஜி மீனா 2

நட்சத்திர பிரசன்ன ஜாதகம்


ஆய்வு திட்டபணி
5 விதமான பிரசன்ன கேள்வி ஜாதகம் ஆய்வு தாள்

ஆசிரியர் : மேடம் DR.R.விஜயலட்சுமி.PHD

பெயர் : M.சாந்தகுமாரி

ஊர். : மலேசியா

Email : vaanps1@gmail.com
தொலைபேசி எண் : +60162392824
உதாரண ஜாதகம் 1
உதாரண ஜாதகம் 1

-------------------------------------------------------------
கேள்வி : நான் மகேந்திரன் நடேசன் எப்பொழுது IPF அரசியல்
கட்சியின் அதிகாரபூர்வ தேசிய தலைவர் ஆவேன் ?

கேள்வி நாள் : 23.9.2023

கேள்வி நேரம் : 2.25 PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : கோலாலம்பூர். மலேசியா.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 7.02

HRM

இராசி நவாம்சம்
NPL

DRM

கிரக பாதசாரம் :

லக்னம் உத்திரம் 3 குரு (வ) : பரணி 3


:
சூரியன் உத்திரம் 3 சுக்கிரன் ஆயில்யம் 3
: :
சந்திரன் மூலம் 3 சனி (வ) : சதயம் 1
:
செவ்வாய் : அஸ்தம் 4 ராகு (வ) : அஸ்வினி 1
புதன் பூரம் 2 கேது(வ) : சித்திரை 3
:

1. கேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - மூலம்

2. கேள்வி கேட்கும் நேரத்தின் போது பிரசன்ன சந்திரன் (HRM)


- ரேவதி

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வீடு லக்னம்( NPL) -புதன் /


சிம்மம்

4. ஜீவா - சுக்கிரன்

5. சரிரா - புதன்

DRM HRM NPL JEEVA SARIRA


மூலம் ரேவதி புதன் சுக்கிரன் புதன்

இன்றைய நாளின் சூரிய உதய நேரம் 7.02

இன்றைய நாளின் சந்திரன் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில்

7.20 பாகையில் உள்ளார்.

தனுசுவின் 13.20 பாகையில் 7.20 கடந்து விட்டார்.மீதம் கடக்க

வேண்டியது 6.00 பாகை.

இதை நிமிடமாக மாற்றினால் வருவது

6.00 பாகை × 2.06 = 12.36 நிமிடம் ஆகும்.

மூலம் இருப்பு 12 நிமிடம்

மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு

7.02 + 0.12 = 7.14 மூலம்


7.14 + 1.20 = 8.34 பூராடம்
8.34 + 0.24 = 8.58 உத்திராடம்
8.58 + 0.40 = 9.38 திருவோணம்
9.38 + 0.28 = 10.06 அவிட்டம்
10.06 + 1.12 = 11.18 சதயம்
11.18 + 1.04 = 12.22 பூரட்டாதி
12.22 + 1.16 = 13.38 உத்திரட்டாதி
13.38 + 1.08 = 14.46 ரேவதி

பிரசன்ன விளக்கம்

இந்த ஜாதகர் கேட்ட கேள்வி அரசியல் சம்பந்தம் பட்டது.இவர் கேட்ட


கேள்வி உண்மை தன்மை உள்ளது என்பது NPL சிம்மம் லக்னமாக
வருவதால் ஊர்ஜிதப்பட்டுள்ளது.

அரசியலுக்கு காரக கிரகம் சூரியன்,செவ்வாய்,குரு,சனி ,சந்திரன் அத்துடன்


சிம்மம் மற்றும் சர ராசி, 9 ம் பாவகம்.

இந்த ஜாதகர் ஒரு அரசியல் கடசிக்கே தலைமைத்துவமாக ஆக


வேண்டும் என்ற விருப்புகிறார்.இவர் கேள்வி கேட்ட நேரத்தில் லக்னமே
சிம்மமாக வந்தது,லக்னத்தில் புதன் திக் பலத்துடன் உள்ளார்.
நெருப்பு ராசியும் ஸ்திர லக்னமும் லக்னபுள்ளி உத்திரம் உள்ளது
சிறப்பான அமைவு.

சூரியன் கன்னி ராசியில் தன் சொந்த நட்சத்திரத்தில் உத்திரம் 3 பாதம்


உடைந்த நட்சத்திரத்தில் உள்ளதால் சூரியன் சிம்மம் ராசியையும்
பின்னபாதம் வழி தொடர்பு பெறுகிறார்.ஆகவே சூரியனும் மிக
வலிமையாக சிம்மம் ராசியில் உள்ளதாக பொருள் கொள்கிறது.

சிம்மம் லக்னத்திற்கு யோகாதிபதியான (செவ்வாய்) சூரியனுடன் இணந்து


உள்ளது சிறப்பு .அத்துடன் தன் 4 ம் பார்வையாக 5 வது பாவத்தை
DRM யை பார்கிறார்.8 ம் பார்வையாக 9 ம் பாவத்தை சர ராசியான மேஷ
ராசியை பார்வையிடுகிறார்.
1,5,9 ம் இடங்களை செவ்வாய் 5 & 9 இடங்களையும் & குரு 1 & 5 இடத்தையும்
தன் சிறப்பு பார்வையில் பார்ப்பது உத்தமம்.
ஜீவா கிரகமான 3 க்கும் 10 க்கும் அதிபதியான சுக்கிரன் சர ராசியில்
கடகத்தில் புதன் நட்சத்திரத்தில் உள்ளது அத்துடன் சரிரா கிரகமான
புதனுடன் நட்சத்திர பரிவர்த்தனையும் உள்ளது கேள்வியாளரின்
விருப்பங்கள் நிறைவேறும் என ஊர்ஜிதப்படுத்துகிறது.

2 க்கும் 11 க்கும் அதிபதியான புதன் சிம்மம் ராசியில் லக்னாதிபதியாக


திக்பலத்துடன் உள்ளது ஜாதகரின் விருப்பம்,ஆசைகள் நிறைவேறும் என
தெளிவு படுத்துகிறது.

DRM அதிபதி கேது சர ராசியான துலாத்தில் , தைரிய வீரிய ஸ்தானத்தில்


செவ்வாயின் நட்சத்திரத்தில் நிற்பதும்,
குரு சர ராசியில் ஜீவா கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்து தன்
5 ம் பார்வையாக சிம்மத்தையும் தன் 7 ம் பார்வையாக துலாத்தையும் 9 ம்
பார்வையாக தன் சொந்த ராசியான தனுசுவை பார்வையிடுவது சிறப்பு.

பொது மக்களை குறிக்கும் கிரகமான சனி,7 ம் இடமான தன் ராசியில்


உறவுகள், சுற்றத்தை குறிக்கும் இடத்தில் திக்பலத்துடன் மூல திரிகோண
ஆட்சி பலத்துடன் உள்ளது.
7 ம் இடமும் வழுவாக உள்ளதால் இவருக்கு போட்டியாக நிற்பவரும் மிக
வலிமை உள்ளவராக இருப்பார்.

போட்டியை குறிக்கும் 3 ம் பாவத்தில் உச்சம் பெறும் தாமச கிரகமான


சனி,6 ம் வீட்டிற்கும் ஆதிபத்தியம் பெறுவதால் 7 ம் பாவத்தில் தன்
மூலதிரிகோண வீட்டில் வீட்டில் பலமாக தாமச கிரகமான ராகுவின்
நட்சத்திரத்தில் உள்ளது,கேள்வியாரை எதிர்த்து நிற்பவர் மக்கள் சக்தியை
கொண்டவரும்,பலமாக பின்பலம் பொருத்தியவராக இருக்க கூடும்.

இதில் ஜாதகரை குறிக்கும் லக்னமும் திக்பலத்துடன் பலமாக உள்ளது,


போட்டிக்கு எதிரில் நிற்பவரின் கிரகமும் திக்பலத்துடன் ஆட்சி மூல
திரிகோண பலத்துடன் பலமாக உள்ளது.

ஆகவே கிரகங்களின் நைசர்கிய கிரக பலம் வரிசை படி சனியை விட NPL
மற்றும் சரிரா கிரகமான புதன் பலமானவர்.அத்துடன் சிம்மம் லக்னம்
அதின் அதிபதி சூரியன் பின்னபாதம் வழி லக்னத்தை தொடர்பு
கொள்கிறார்.,
அரசியலுக்கு முதன்மை கிரகம் சூரியன் வலுவுடன் உள்ளது கேள்வியாரே
அதிக பலமாக உள்ளார் .

10 ம் பாவத்தின் அதிபதி சுக்கிரன் ஜீவா கிரகமாக வருவது சிறப்பு.


9 ம் அதிபதி இந்த ஜாதகத்திற்கு யோகாதிபதி சூரியனுடன் உள்ளது இவர்
தன் பேச்சால் ,கம்பீரமான நடை ,உடையில் புகழ் பெறுவார்.

இவை அனைத்தையும் வைத்து கணிக்கும் பொழுது இவரே IPF அரசியல்


கட்சியின் அடுத்த அதிகாரபூர்வ தேசிய தலைவராக வருவார்.

DRM கேதுவாக உள்ளது,மற்றும் DRM,HRM உபய லகனமாகவும்,NPL ஸ்திர


லகனமாகவும் உள்ளதால் 2 வருடங்கள் கடந்த பின் நடக்கும்.
DRM அதிபதி NPL சிம்மத்தை தொடும் பொழுது ,அதாவது கேது சிம்மம்
ராசியில் நுழையும் போது அந்த 1 1/2 ஆண்டுகளில்( குறிப்பாக 2025
செப்டம்பர் மாதம் முதல் செப்டம்பர் 2026 க்குள் இவர் IPF கட்சியின் அதிகார
பூர்வ தேசிய தலைவர் ஆவார்.

உதாரண ஜாதகம் 2
உதாரண ஜாதகம் 2

-------------------------------------------------------------
கேள்வி : கேள்வியாளர் கவிதாவிற்கு குழந்தை பாக்கியம் உண்டா ?
எப்பொழுது கர்ப்பவதியாவர் ?

கேள்வி நாள் : 16.9.2023

கேள்வி நேரம் : 11.58 AM

பதில் அளித்தவர் இருந்த இடம் : கோலாலம்பூர். மலேசியா.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 7.08

இராசி நவாம்சம்
NPL

DRM
HRM

கிரக பாதசாரம் :

லக்னம் உத்திரம் 1 குரு (வ) : பரணி 3


:
சூரியன் உத்திரம் 1 சுக்கிரன் ஆயில்யம் 2
: :
சந்திரன் உத்திரம் 4 சனி (வ) : சதயம் 1
:
செவ்வாய் : அஸ்தம் 3 ராகு (வ) : அஸ்வினி 1
புதன் பூரம் 1 கேது(வ) : சித்திரை 3
:

1. கேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - உத்திரம் 4 - கன்னி

2. கேள்வி கேட்கும் நேரத்தின் போது பிரசன்ன சந்திரன் ( HRM ) -


கேட்டை / விருச்சிகம்

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வீடு லக்னம்( NPL) -புதன் /


சிம்மம்

4. ஜீவா - சூரியன்

5. சரிரா - சூரியன்

DRM HRM NPL JEEVA SARIRA


உத்திரம் கேட்டை புதன் சூரியன் சூரியன்

இன்றைய நாளின் சூரிய உதய நேரம் 7.08

இன்றைய நாளின் சந்திரன் கன்னி ராசியில் உத்திரம்

நட்சத்திரத்தில் 8.30 பாகையில் உள்ளார்.

சிம்மத்தி்ல் கடந்து 3.20 பாகையில் கன்னியில் உத்திரம் கடக்க

வேண்டியது 10.00 பாகை அதில் 8.30 கடந்து விட்டார்.மீதம் கடக்க

வேண்டியது 1.30 பாகை.

இதை நிமிடமாக மாற்றினால் வருவது

1.30 பாகை × 1.48 = நிமிடம் = 2 நிமிடம் 30 வினாடி ஆகும்.

மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு

7.08 + 0.03 = 7.11 உத்திரம்


7.11 + 0.40 = 7.51 அஸ்தம்
7.51 + 0.28 = 8.19 சித்திரை
8.19 + 1.12 = 9.31 சுவாதி
9.31 + 1.04 = 10.35 விசாகம்
10.35 + 1.16 = 11.51 அனுசம்
11.51 + 1.06 = 12.57 கேட்டை
2 நிமிடம்
= உத்திரம் 30 வினாடி
இருப்பு 3 நிமிடம்ஆகும்.

பிரசன்ன விளக்கம்.

குழந்தை பிறப்புக்கான காரக கிரகம் குரு மற்றும் 5 ம் பாவகம்.

பிரசன்ன லக்னம் ஸ்திர வீட்டில் திக்பலம் பெற்ற சாத்வீக கிரகமான புதன்


சிம்ம ராசி அதிபதி ஆட்சி பெற்ற சூரியனுடன் உள்ளார்.இருவரும் நட்பு
கிரகங்கள் கூட.

HRM மற்றும் NPL புதனாக வருகிறார்.புதனிடம் இருந்து ஜீவா சரிரா பலத்தை


ஆட்சி பெற்ற சூரியனே பெற்று கொண்டுள்ளார்.இது இவருக்கு உறுதியாக
குழந்தை பாக்கியம் உள்ளது என குறிக்கும். சிம்ம லக்னத்தில் இருந்து 5
பாவகமாக குருவின் பாவம் வருகிறது.புத்திரகாரகன் தன் 9 ம் பார்வையாக
5 ம் வீட்டை பார்வையிடுகிறார்.

குரு சர ராசியில் நின்று பார்வையிடுவதால் மிக விரைவில் தாய்மை


அடைவார்.ஆனால் குருவுடன் தாமச கிரகமான ராகு கேதுவில்
நட்சத்திரத்தில் உள்ளது தடைகளை காண்பிக்கிறது. வரும் ராகு கேது
பெயர்ச்சிக்கு பின் கேள்வியாளர் தாய்மை அடைவார்.

குரு 5 க்கும் 8 க்கும் அதிபதியாகி செவ்வாயின் வீட்டில் உள்ளார்.கால


புருஷ தத்துவப்படி 1 &8 க்கும் அதிபதியான செவ்வாய் குடும்ப ஸ்தானம்
என படும் 2 ல் அமர்ந்து 4 ம் பார்வையாக 5 ம் வீட்டையும் 7 ம் பார்வையாக
8 ம் வீட்டையும் 8 ம் பார்வையாக குரு மற்றும் ராகுவை தொடர்பு
கொள்கிறார்.அதே நேரத்தில் 6 ம் அதிபதி 7 ல் ராகுவின் நட்சத்திரத்தில்
அமர்ந்து ராகுவையும் புத்திரகாரகன் குருவை பார்வையிடுவது ,

சனி,ராகு செவ்வாய் என 3 தாமச கிரகங்கள் குருவை பார்ப்பது இது


இவருக்கு குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் என தெரிகிறது.
இவருக்கு வரும் நவம்பர் 1 2023 முதல் அடுத்த வருடம் மே மாதத்திற்குள்
குழந்தை உருவாகி விடும்.குரு பெயர்ச்சி ஆகி ரிசிபத்திற்கு போவதற்குள்
இவர் கர்ப்பமாக இருப்பார்.

விரைவில் கேள்வியாளரின் விருப்பம் நிறைவேற போகிறது.வாழ்க


வளமுடன்

உதாரண ஜாதகம் 3
உதாரண ஜாதகம் 3

-------------------------------------------------------------
கேள்வி : ஜூரு பினாங்கு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில்
நாளை நடக்கவிருக்கும் கும்பாஷேகம் பொழுது அம்மன் என்ன
வர்ணம் சாரி உடுத்தி இருப்பார் ?

கேள்வி நாள் : 16.9.2023

கேள்வி நேரம் : 20.22 PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : கோலாலம்பூர். மலேசியா.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 7.08

HRM

இராசி நவாம்சம்
NPL

DRM

கிரக பாதசாரம் :

லக்னம் உத்திரம் 1 குரு (வ) : பரணி 3


:
சூரியன் உத்திரம் 1 சுக்கிரன் ஆயில்யம் 2
: :
சந்திரன் உத்திரம் 4 சனி (வ) : சதயம் 1
:
செவ்வாய் : அஸ்தம் 3 ராகு (வ) : அஸ்வினி 1
புதன் பூரம் 1 கேது(வ) : சித்திரை 3
:

1. கேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - உத்திரம் 4 -


கன்னி

2. கேள்வி கேட்கும் நேரத்தின் போது பிரசன்ன சந்திரன்


( HRM) - ரேவதி / மீனம்

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வீடு லக்னம்( NPL) -புதன் /


சிம்மம்

4. ஜீவா - சுக்கிரன்

5. சரிரா - சூரியன்

DRM HRM NPL JEEVA SARIRA


உத்திரம் ரேவதி புதன் சுக்கிரன் சூரியன்

இன்றைய நாளின் சூரிய உதய நேரம் 7.08

இன்றைய நாளின் சந்திரன் கன்னி ராசியில் உத்திரம்


நட்சத்திரத்தில் 8.30 பாகையில் உள்ளார்.

சிம்மத்தி்ல் கடந்து 3.20 பாகையில் கன்னியில் உத்திரம் கடக்க


வேண்டியது 10.00 பாகை அதில் 8.30 கடந்து விட்டார்.மீதம் கடக்க
வேண்டியது 1.30 பாகை.

இதை நிமிடமாக மாற்றினால் வருவது

1.30 பாகை × 1.48 = நிமிடம் = 2 நிமிடம் 30 வினாடி ஆகும்.

உத்திரம் இருப்பு 3 நிமிடம்


மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு

7.08 + 0.03 = 7.11 உத்திரம்


7.11 + 0.40 = 7.51 அஸ்தம்
7.51 + 0.28 = 8.19 சித்திரை
8.19 + 1.12 = 9.31 சுவாதி
9.31 + 1.04 = 10.35 விசாகம்
10.35 + 1.16 = 11.51 அனுசம்
11.51 + 1.06 = 12.57 கேட்டை
12.57 + 0.28 = 13.25 மூலம்
13.25 + 1.20 = 14.45 பூராடம்
14.45 + 0.24 = 15.09 உத்திராடம்
15.09 + 0.40 = 15.49 திருவோணம்
15.49 + 0.28 = 16.17 அவிட்டம்
16.17 + 1.12 = 17.29 சதயம்
17.29 + 1.04 = 18.33 புரட்டாதி
18.33 + 1.16 = 19.49 உத்திரட்டாதி
19.49 + 1.06 = 20.55 ரேவதி
பிரசன்ன விளக்கம்.

பிரசன்ன நட்சத்திர அதிபதி புதனாக,HRM வருவது சுப வீடான குருவின்


12 ம் பாவகம் மற்றும் HRM _ரேவதியாக வருகிறது.புதன் ஆட்சி பெற்ற
சூரியனுடன் புதனும் திக்பலத்துடன் இது இந்த கும்பாஹேகம் மிக அழகாக
நடைபெறும் என தெரிகிறது.

ஜீவா கிரகம் சுக்கிரன் எனப்படுவதால் இறைவன் பெண் தெய்வம் என


ஊர்ஜிதப்படுத்தலாம்.

சரிரா சூரியன் பலமாக உள்ளதால் பார்வதி சிவபெருமான் உள்ள


ஆலயமாக இருக்கும்.

நாவம்சத்தில் HRM அதிபதி புதன் சிம்மத்திலும் DRM நட்சத்திர அதிபதி


சூரியன் குருவின் வீட்டில் உள்ளதால் மஞ்சளும் சிவப்பும் உள்ள சாரியை
அணிந்து இருப்பார்.அத்துடன் சூரியனுடன் சனி நாவம்சத்தில் உள்ளதால்
சிவபெருமான் நீல வர்ணம் துணி உடுத்தி இருப்பார்.

HRM & NPL _புதனாக வருவதால் இத்துடன் பச்சை வர்ணமும் இருக்கும்.இந்த


வர்ணத்தை தவிர வேறு வர்ணம் வராது.

இதற்கான பதில் :
கும்பாஷூகம் அன்று அம்மன் மஞ்சள் சாரி சிவப்பு பார்டர். கழுத்தில்
மஞ்சள்,சிவப்பு,பச்சை மாலை.
சிவ பெருமான் நீல வர்ண வேட்டி அணிந்து இருந்தார்.

மாலையில் உற்சவ அம்மன் பச்சை வர்ண சாரி அணிந்து இருந்தார்.

இந்த பிரசன்னம் நான் கணித்தது சரியாக இருந்து அம்மனுக்கும் கற்று


தந்த எனது குருவிற்கும் நமஸ்காரங்கள்.

உதாரண ஜாதகம் 4
உதாரண ஜாதகம் 4

-------------------------------------------------------------
கேள்வி : கேள்வியாளர் சரவணன் தன் மனைவினால் வரும்
பிரச்சினை,மன உளைச்சல் எப்போது தீரும் மற்றும் இந்த
விவாகரத்து வழக்கில் 2 குழந்தைகளும் கேள்வியாளருடன் வாழ
தீர்ப்பு கிடைக்குமா ?

கேள்வி நாள் : 07.09.2023

கேள்வி நேரம் : 3.15 PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : கோலாலம்பூர். மலேசியா.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 7.10

DRM

NPL

இராசி நவாம்சம்

HRM

கிரக பாதசாரம் :

லக்னம் பூரம் 2 குரு (வ) : பரணி 3


:
சூரியன் பூரம் 2 சுக்கிரன் ஆயில்யம் 1
: :
சந்திரன் ரோகிணி 4 சனி (வ) : சதயம் 1
:
செவ்வாய் : அஸ்தம் 1 ராகு (வ) : அஸ்வினி 1
புதன் பூரம் 2 கேது(வ) : சித்திரை 3
:

1. கேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - ரோகிணி -


ரிசிபம்

2. கேள்வி கேட்கும் நேரத்தின் போது பிரசன்ன சந்திரன்


( HRM) - அஸ்தம்

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வீடு லக்னம்( NPL) - ரிசபம்

4. ஜீவா - சூரியன்

5. சரிரா - சுக்கிரன்

DRM HRM NPL JEEVA SARIRA


ரோகிணி அஸ்தம் ரிசிபம் சூரியன் சுக்கிரன்

இன்றைய நாளின் சூரிய உதய நேரம் 7.10

இன்றைய நாளின் சந்திரன் ரிசிபம் ராசியில் ரோகிணி

நட்சத்திரத்தில் 20.18 பாகையில் உள்ளார்.

ரிசபத்தில் முதல் 10.00 பாகை கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளது.

20.18- 10.00 = மீதம் 10.18 பாகை ரோகிணி கடந்தது. ரிசிபத்தில்


சந்திரன் ரோகிணியை கடக்க வேண்டிய தூரம் 13.20 - 10.18 = 3.02
பாகை

ரோகிணியின் மீதம் கடக்க வேண்டிய பாகை 3.02

இதை நிமிடமாக மாற்றினால் வருவது


3.02 பாகை × 3.00 = நிமிடம் = 9 நிமிடம் 06 வினாடி ஆகும்.

ரோகிணி இருப்பு 9 நிமிடம்

மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு

7.10 + 0.09 = 7.19 ரோகிணி


7.19 + 0.28 = 7.47 மிருகசீரிடம்
7.47 + 1.12 = 8.59 திருவாதிரை
8.59 + 1.04 = 10.03 புனர்பூசம்
10.03 + 1.16 = 11.19 பூசம்
11.19 + 1.06 = 12.25 ஆயில்யம்
12.25 + 0.28 = 12.53 மகம்
12.53 + 1.20 = 14.13 பூரம்
14.13 + 0.24 = 14.37 உத்திரம்
14.37 + 0.40 = 15.17 அஸ்தம்
பிரன்ன விளக்கம்.

கேள்வியாளர் கேட்ட அன்று 3 காரணிகள் சந்திரனை தொடர்பு


படுத்துகிறது.DRM அதிபதி சந்திரன்,HRM அதிபதி சந்திரன்,லகனமும் சந்திரன்
உள்ளது.மனோகாரகனா சந்திரனை குறிப்பது ஜாதகர் மிக மன குழப்பதில்
உள்ளார் என உணர்த்துகிறது.

HRM 6 ம் வீட்டில் கன்னியில் வருவது 6 ம் காரகத்துவ வழியில் பிரச்சினை


என்பதை தெளிவாக புரிக்கிறது.அத்துடன் 6 ம் அதிபதி புதன் 5 ல்
வக்கிரமாகி 5 ம் அதிபதி _சூரியனுடன் இணைந்து உள்ளதால் ,குழந்தை
குறிக்கும் 5 ம் பாவகத்தில் 6 அதிபதி .கேள்வியாளர் கேட்ட கேள்வி
சரியானது தான் என்பது ஊர்ஜிதப்படுத்த படுகிறது.

லக்னம் ரிசபமாக வருவதால் 7 ம் வீடு விருச்சிகமாக வருகிறது.இது


காலபுருஷ தத்துவப்படி விருச்சிகம் 8 ம் இடம்
,வழக்கு,பிரச்சினை,சந்திக்கும் இடமாக வருகிறது.அதன் அதிபதி அஸ்தம்
நட்சத்திரத்தில் உள்ளார் ,லக்னத்திற்கு அது 6 ம் வீடு.கால புருஷத்திற்கு
8 ம் அதிபதியும் லக்னத்திற்கு 7 ம் அதிபதி களத்திரஸ்தான அதிபதியுமான
செவ்வாய் 6 ல் சந்திரனின் நட்சத்திரத்தில் ஆகவே கேள்வி கேட்ட
நேரத்தில் ,ஜாதகரின் மனைவியினால் அதிக பிரச்சினை சந்திக்கிறார்.

சந்திரன் திக்பலத்துடன் உள்ளார். 4 ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து


உள்ளதால் சந்திரனுக்கு திக்பலம் உள்ளது.
ஜீவா கிரகமான சூரியன் தன் வீட்டில் ஆட்சிபலத்துடன் உள்ளார்.சுக்கிரன்
களத்திரஸ்தானத்திற்கு

அதிபதி,4 ல் நிற்பது புதனுடன் நட்சத்திர பரிவர்த்தனையும் உள்ளது .ஜாதகர்


மனைவியும் குழந்தைகள் அவருக்கு வேண்டும் என உறுதியாக உள்ளார்.

குழந்தை குறிக்கும் கிரகமான குரு ராகுவுடன் 12 ல்


உள்ளார்.குழந்தைகளும் மிக மன இறுக்கத்தில் உள்ளார்கள்.

5 ம் பாவகம் கன்னி அதில் திக்பலம் பெற்ற சந்திரனுடன் 7 ம் அதிபதி


செவ்வாய் உள்ளது.செவ்வாய் 8 ம் பார்வையாக குருவை
பார்வையிடுகிறார்.

ஆகவே குழந்தைகளில் ஒருவர் தாயிடம் தரப்படும்.குரு 5 ம்பார்வையாக


ஜீவா கிரகத்தையும் 5 ம் அதிபதியையும் பார்ப்பதால் ஒரு குழந்தை
கேள்வியாளரிடம் ஒப்படைக்கபடும்.

துலா ராசியில் கேது உள்ளது, கேது HRM வீட்டிற்கு வரும் பொழுது


விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும்.

ஜீவா கிரகம் பலமாக உள்ளதால் வழக்கு தீர்ப்பு இவருக்கு சாதகமாக


இருக்கும்.

குழந்தைகள் மட்டுமே இருவருக்கும் பிரிக்கபடலாம்.

வரும் குரு பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த வருடம் 2024 மே மாதம் முதல்


மனைவி வழி வரும் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

குரு DRM ராசியில் அமர்ந்து 5 ம் பார்வையாக HRM ஸ்தானத்தையும்,7 ம்


ஸ்தானத்தையும் 9 ம் ஸதானத்தையும் பார்வையிடுகிறார். சுபகிரமான
குருவின் பார்வை ,இணைவை,

NPL,DRM,HRM பெறும் நாளில் கேள்வியாளருக்கு மனைவி வழி


பிரச்சினைகள் தீரும்.

கேது அஸ்தம் நட்சத்திரத்தில் இருக்கும். பொழுது ,குரு ரிசிபத்தில் இருந்து


தன் 5 ம் பார்வையாக கன்னியை பார்க்கும் பொழுது ,அனைத்து மன
உளைச்சல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.அதன் காலம் ஜூன் மாதம்
2024 முதல் அக்டோபர் 2024.

உதாரண ஜாதகம் 5
உதாரண ஜாதகம் 5

-------------------------------------------------------------
கேள்வி : நவிதாவின் திருமணம் எப்பொழுது நடக்கும் ?

கேள்வி நாள் : 27.8.2023

கேள்வி நேரம் : 12.49PM

பதில் அளித்தவர் இருந்த இடம் : கோலாலம்பூர். மலேசியா.

பதில் அளித்தவர் ஊரின் சூரிய உதயம் : காலை 7.09

HRM

NPL

இராசி நவாம்சம்

DRM

கிரக பாதசாரம் :

லக்னம் மகம் 3 குரு (வ) : பரணி 3


:
சூரியன் மகம் 3 சுக்கிரன் ஆயில்யம் 1
: :
சந்திரன் மூலம் 4 சனி (வ) : சதயம் 1
:
செவ்வாய் : உத்திரம் 3 ராகு (வ) : அஸ்வினி 2
புதன் உத்திரம் 1 கேது(வ) : சித்திரை 4
:

1. கேள்வி நாளின் தின உதய சந்திரன் ( DRM ) - மூலம் - தனுசு

2. கேள்வி கேட்கும் நேரத்தின் போது பிரசன்ன சந்திரன்


( HRM) - உத்திரட்டாதி

3. HRM நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் வீடு லக்னம்( NPL) -


கும்பம்

4. ஜீவா - ராகு

5. சரிரா - கேது

DRM HRM NPL JEEVA SARIRA


மூலம் உத்திரட்டாதி கும்பம் ராகு கேது

இன்றைய நாளின் சூரிய உதய நேரம் 7.09

இன்றைய நாளின் சந்திரன் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில்

11.46 பாகையில் உள்ளார்

13.20 பாகையில் சந்திரன் தனுசுவில் மூலம் கடந்து 11.46 பாகை.


மீதம் கடக்க வேண்டியது 1.34 பாகை.

இதை நிமிடமாக மாற்றினால் வருவது

1.34 பாகை × 2.06 = நிமிடம் = 3 நிமிடம் 16 வினாடி ஆகும்.

மூலம் இருப்பு 3 நிமிடம்

மணி/நிமிடம் + மணி/நிமிடம் நட்சத்திர இருப்பு

7.09 + 0.03 = 7.12 மூலம்


7.12 + 1.20 = 8.32 பூராடம்
8.32 + 0.24 = 8.56 உத்திராடம்
8.56 + 0.40 = 9.36 திருவோணம்
9.36 + 0.28 = 10.04 அவிட்டம்
10.04 + 1.12 = 11.16 சதயம்
11.16 + 1.04 = 12.20 பூரட்டாதி
12.20 + 1.16 = 13.36 உத்திரட்டாதி
பிரசன்ன விளக்கம்.

கேள்வியாளர் கேட்ட நேரத்தில் 5 காரணிகளும் தாமச கிரகத்தில்


உள்ளது.இது இப்பொழுது திருமண காலம் இல்லை என உணர்த்துகிறது.

தாமத திருமணமாக இருக்கும்.1 அல்லது 2 வருடங்கள் கடந்து திருமண


அமைப்பு ஏற்படும்.

லக்னம் கும்பமாக உள்ளது .அதன் அதிபதி சனி ராகுவின் நட்சத்திரத்தில்


,ராகு நிற்பது கேதுவின் நட்சத்திரம்.ஆகவே ஜாதகர் இன்னும்
திருமணத்திற்கு தயாராக வில்லை.

ஜாதகரின் லக்னாதிபதி சனி ஆட்சி பெற்று ராகுவின் பாதத்தில் ராகு 4 ம்


வீட்டில் 11 க்கும் 2 க்கும் அதிபதி குருவுடன் உள்ளதால் குடும்பம்
வாழ்வுக்கு ஆசைகள் இருந்தாலும் இவருக்கு தற்பொழுது தன்
சுயமுன்னேற்றம்,பணம்,வீடு, வாகனம் ஆசையில் அதிகம் உள்ளார்.

ஜீவா சரிராவாக ராகு கேது .திருமண தடையை குறிக்கிறது.

காலபுருஷ தத்துவப்படி துலாம் களத்திரஸ்தானம்.அதில் கேது உள்ளார்.

களத்திரகாரக கிரகமான சுக்கிரன் 4 & 8 க்கும் ஆதிபத்தியம் பெற்று 6 ல்


நிற்பது பிரச்சினையை குறிக்கிறது.

செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் கும்ப லக்னத்திற்கு பாதாகதிபதியான


செவ்வாய் 8 ல் உத்திர நட்சத்திரத்தில் அதன் அதிபதி சூரியன் 7 ல் 8 ம்
அதிபதியுடன்.உத்தமான திருமண வாழ்வை குறிக்கவில்லை.

ஆகவே அனைத்தும் காரணிகளை கொண்டு சாதகமான எந்த பதிலும்


கேள்வியாளருக்கு தர இயலவில்லை.
இந்த கேள்வியாளர் இறை வழிபாட்டையும் கிரக பரிகாரமும்,தன் சுய
ஜாதகத்தை பரிசீலனை செய்து பரிகாரங்கள் செய்ய ஆலோசனை
தரப்படுகிறது .

இறைவழிபாடும் பரிகாரமும் செய்த பின் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு


மீண்டும் பிரசன்னம் பார்க்கவும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அது
வரை இறைவழிபாடும் பரிகாரமும் கண்டிப்பாக செய்யவும்.

இந்த ஜாதகருக்கு திருமண ப்ராப்தம் கண்டிப்பாக உண்டு.7 ம் அதிபதி


சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார் .அத்துடன்
புதனிடன் சேர்ந்து உள்ளார் .காதல் திருமணமாக இருக்கும்.ஆகவே
திருமணம் உண்டு.காலதாமத திருமண ஜாதகம்.

You might also like