You are on page 1of 4

ஜாதக சாதக நவ நவாம்சம் See more of Jho Dhida Thilagam Dr R RND on Facebook

-----------------------------------
நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம்.
ராசிச்சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம். நவாம்சம் என்பது
அதனுடைய நிழல்தான். ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப, அசுப
வர்க்கங்களைக் கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்லப்பட்டது. அதில்
கிரகங்களுக்கு பார்வை இல்லை. மறைவு ஸ்தானங்களும் இல்லை.ஆனால்
சேர்க்கை வர்க்கோத்தமம் போன்றவைகள் உண்டு.

ராசிச் சக்கரம் எனும் உண்மை நிலையில் மட்டுமே கிரகங்களுக்குப் பார்வை


உண்டு. நவாம்சம் என்பது ராசிச் சக்கரத்தை ஒன்பதின் மடங்கில் பிரித்து எந்தக்
கிரகம் எங்கே, எந்த துல்லிய நிலையில் சுபத்துவ, பாபத்துவ அமைப்பில்
இருக்கிறது என்று பார்க்க மட்டுமே.

எந்த ஒரு ஜாதகத்திலும் இராசி என்பது 30 பாகைகளைக் கொண்டது.

நவாம்சம் என்பது 30÷9 = 3°. 333333333. ஆகும். நவநவாம்ச கணிதத்திற்கு மீண்டும்


9 ஆல் வகுக்கவும். அதற்கு விடை = 0. 37037037 வரும். இதை நிமிடங்களாக்க 60 ஆல் பெருக்கவும்.
அதற்கான விடை = 22. 22222222 = 22.22. ஆகும்.

மிகத் துல்லியமான பலன்களைக் காண உதவுவது நவநவாம்சக் கட்டம் ஆகும். இதுவொரு, தெளிவான
ஜோதிட கணித முறையாகும் என பீ.வி. இராமன் தனது பிரசன்ன மார்க்கம் எனும் நூலில்
குறிப்பிடுகிறார்.

ஜோதிட ஆராய்ச்சியாளர்கள், நவநவாம்ச பலன் காணும் முறையானது, மிகவும் நம்பத் தகுந்தது எனக்
குறிப்பிடுகின்றனர். முக்கியமாக, இரட்டைப் பிறவிகளின் ஜாதகங்களில் ஏற்படும் துல்லியமான பலன்
மாறுபாடுகளை கணிக்க இது பெரிதும் உதவுகிறது. நவாம்சம், நவாம்ச இலக்னம் ஆகியவை தரும்
துல்லிய பலனைக் காட்டிலும், நவநவாம்சக் கட்டம் மிகத் துல்லியமான பலன்களை அளிக்கிறது
என்றால் மிகையாகாது. இராசி, நவாம்சக் கட்டத்திலுள்ள கிரக நிலைகள் மற்றும் கிரக பலங்களோடு
ஒப்பிடும் போது, நவநவாம்சக் கட்டத்திலுள்ள கிரக நிலைகள், அவைகளின் மிகத் தெளிவான,
உண்மையான பலத்தைக் காட்டும் விதத்தில் அமைகிறது.

நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்கள் என்பது கிரகங்கள் வான்வெளியில் இருக்கும் துல்லிய


நிலையை கணிப்பதற்காக சொல்லப்பட்டவை. பூமியைச் சுற்றி 360 டிகிரி அளவில் வியாபித்திருக்கும்
இந்த பரந்த வான்வெளியில் ஒரு ராசி என்பது முப்பது டிகிரியை தன்னகத்தே கொண்ட ஒரு
பகுதியாகும். இந்த முப்பது டிகிரிக்குள்ளும் கிரகங்கள் எங்கே, எந்த இடத்தில், எந்த நிலையில்
இருக்கின்றன என்பதை மிகச் சரியாகக் கணக்கிட ஞானிகள் வர்க்கச் சக்கரங்களை
பகுத்தறிந்தார்கள்.

30 டிகிரி கொண்ட ஒரு ராசி வீட்டினை, மேம்பட்ட கணித முறைப்படி நீங்கள் 300 பங்காகக் கூடப் பிரிக்க
முடியும். அவ்வாறு பிரித்துக் கொண்டே உள்ளே செல்லும்போது இந்த பரந்த வான்வெளியில், ஜாதகர்
பிறக்கும்போது ஒரு கிரகம் எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக
அறிய முடியும்.

ஒரு ராசியை தலா 15 டிகிரி அளவாகக் கொண்டு, இரண்டு சமமான பங்குகளாக்கி ஒரு கிரகத்தின்
நிலை அறிவது ஹோரா சக்கரம் எனப்பட்டது. தலா பத்து டிகிரி அளவாக மூன்று பகுதிகளாகப் பிரித்து
கிரகநிலை அறிவது திரேக்காணம் எனப்பட்டது. 7 பங்கு சம அளவாக பிரிப்பது சப்தாம்சம் எனவும், 10
பங்காக பிரித்து பலன் அறிவது தசாம்சம் எனவும் சொல்லப்பட்டது.

ஒரு ராசியை இவ்வாறு பிரிப்பது வர்க்கச் சக்கரங்கள் எனப்பட்டன. அனைத்து வர்க்கச்


சக்கரங்களிலும் ராசியை ஒன்பது பங்காகப் பிரிக்கும் நவாம்சம் மட்டும் முதன்மையாக
கருதப்படுவதற்கு காரணம், ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை நடத்தும் கிரகங்கள், அதற்கு
அடிப்படை மூல காரணமான எந்த நட்சத்திரத்தின், எந்தப் பகுதியில் இருந்து ஒளியைப் பெறுகிறது
என்பதை நவாம்சத்தில் சுலபமாக அறிய முடியும் என்பதே ஆகும்.

அனைத்து வர்க்க சக்கரங்களையும் விட ராசிக்கு அருகில் பதியப்படும் வர்க்கச் சக்கரமாக நவாம்சம்
மட்டுமே உள்ளதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
நவாம்சத்தின் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கப்போனால், ராசிக்கட்டம் என்பது ஒன்பது
கிரகங்களும் அமர்ந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் தலா 4 பாதங்கள் உள்ளிட்ட மொத்தம் 108
பாதங்களை அளவாக கொண்டது. அதாவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குள்
அடங்கி இருக்கும் பாதங்களை மொத்தமாக கணக்கிட்டால் அவை 108 ஆக வரும்.

ஒரு நட்சத்திரத்தை நான்கு பிரிவுகளாக்கி, அவற்றைப் பாதங்கள் என்று சொல்லி ஒரு நட்சத்திரத்தின்
அளவையும், இருப்பையும் சற்றுச் சுருக்கி இன்னும் துல்லியமாக்கப் பட்டதே இந்த பாதங்கள் என்பவை.

இந்த 108 பாதங்கள் எனப்படும் ஒரு விண்மீனின் சுருக்கப்பட்ட பகுதிகள், நவாம்ச சக்கரத்தில்,
மேஷத்தின் ஆரம்ப முனையில் அஸ்வினியின் முதல் பாதமாக ஆரம்பித்து, இரண்டாவது பாதம்
ரிஷபத்திலும், மூன்றாவது மிதுனம், நான்காவது கடகத்தில் முடிந்து, அடுத்த பரணி நட்சத்திரத்தின்
முதல் பாதம் சிம்மத்தில் நீட்டித்து, ஒன்பது சுற்றுக்களாக வளையங்கள் போன்று ஒன்பது முறை சுற்றி,
இறுதி நட்சத்திரமான ரேவதியின் கடைசிப் பாதம் நிறைவு வீடான மீனத்தின் இறுதிப் பகுதியில்
முடியும்.

நவாம்ச சக்கரத்தில் ஒன்பது முறை சுற்றி வரும் ஒன்பது முழுச் சுற்றுகள் கொண்ட 108 பாதங்களில்,
ஒரு கிரகம் எந்த நிலையில், எங்கே அமர்ந்திருக்கிறது என்பதை வைத்தே அந்த ஜாதகருக்கு நன்மை,
தீமைகள் நடக்கின்றன. நவாம்சத்தை வைத்து ஒரு கிரகம் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது
என்பதை துல்லியமாக சொல்லலாம். அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நன்மையை தருமா, தீமையைச்
செய்யுமா என்பதை வைத்து பலனையும் சொல்லி விட முடியும் என்பதே நவாம்சத்தின் சிறப்பு. இதற்காக
மட்டும்தான் ராசியின் அருகில் நவாம்சமும் குறிக்கப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஜோதிட மேதையான வைத்தியநாத தீட்சிதர்


அவர்கள் தனது “ஜாதக பாரிஜாதம்” நூலில் சொன்ன புஷ்கர நவாம்சம் என்பதும் இதனை
அடிப்படையாகக் கொண்டதுதான். இதனைத் தவிர்த்து நவாம்சத்தில் வேறு முக்கிய சிறப்புக்கள்
கிடையாது.

ஓர் இராசியானது சுமாராக 2 மணி நேரம் அல்லது 120 நிமிடம் எனக் கொண்டால், ஒரு நவாம்சம் = 120 ÷
9 = 13’. 33333333, இதை 9 ஆல் வகுக்க வரும் 1. 48148148 நிமிடங்கள் என்பது ஒரு நவநவாம்ச அளவு
ஆகும். இது வினாடியாக மாற்றப்படும் போது 88. 88888889 நிமிடம் = 89 வினாடி ஆகும். நவநவாம்சத்தின்
இடைவெளி அளவு மற்றும் கால அளவு 1 : 4 ஆகும்.

நவ-நவாம்ச சக்கரத்தை பயன்படுத்தும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.


1. நவ-நவாம்சக் கட்டத்தில் ஒரு கிரகம் பாதிப்படையாத நிலையில் இருந்தால், அது நல்ல குடும்பத்தை
அல்லது அதன் தசா, புத்தி, அந்தர, சூட்சும காலங்களில் நல்ல பலன்களை அளிக்கிறது.
2. ஒரு கிரகம் மூன்று கட்டங்களிலும் வர்க்கோத்தமம் ஆனால், உச்ச கிரகம் தரும் பலனைத் தருகிறது.
ஜாதகத்தில் உள்ள அசுப தாக்கங்களை அகற்றிவிடுகிறது.
3. ஒரு கிரகம் நவ-நவாம்சத்தில் நீசம், பகை என பாதிப்பு அடைந்தால் தசா மற்றும் இதர காலங்களில்
தீய பலன்களைத் தருகிறது.
4. சுய வீட்டில் இருந்தால் தசா மற்றும் இதர காலங்களில் நல்ல பலன்களை அளிக்கிறது.
5. நவ-நவாம்சத்தில் கிரகம் பகை வீட்டில் அமர்ந்தால் தசா மற்றும் இதர காலங்களில் அனுகூலமற்ற
பலன்களை அளிக்கிறது.
6. இராசியில் நீசமான ஒரு கிரகம், நவ-நவாம்சத்தில் உச்சம் பெற்றால் தசா மற்றும் இதர காலங்களில்
நல்ல பலன்களையே அளிக்கும்.
7. ஆண்-பெண் ஜாதகங்களுக்குள் பலன் காண்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை.

நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்களில், சுப வர்க்கம் என்பதே முதன்மையானது.

புஷ்கர நவாம்சம் என்பது, ஒரு கிரகம் ராசியில் எந்த நிலையில் இருந்தாலும் நவாம்சத்தில் சுபர்களின்
வீடுகளில் இருப்பதைக் குறிக்கிறது.

அதேநேரத்தில் சுப வீடுகள் எனப்படும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய
குரு, சுக்கிர, புதன், வளர்பிறைச் சந்திரனின் வீடுகளில் அமரும் அத்தனை கிரகங்களும் புஷ்கர
நவாம்சத்தில் இருப்பவை என்று சொல்லப் படவில்லை மேற்கண்ட சுபர்களின் வீடுகளில் அமரும்
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் இருப்பது மட்டுமே புஷ்கர நவாம்சம் எனப்படுகிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “ஜாதக பாரிஜாதம்” எனும் சிறப்பு வாய்ந்த நூல் புஷ்கர
நவாம்சம் பற்றிக் குறிப்பிடுகிறது.

ராசிச்சக்கரத்தில் கீழ்க்காணும் நட்சத்திர பாதங்களில் கிரகங்கள் அமர்ந்திருப்பின் அது புஷ்கர


நவாம்சத்தில் உள்ளதாக தனித்து அடையாளம் காட்டப்படுகிறது.
பரணி 3, கிருத்திகை 1, கிருத்திகை 4, ரோகிணி 2, திருவாதிரை 4, புனர்பூசம் 2, புனர்பூசம் 4, பூசம் 2,
பூரம் 3, உத்திரம் 1, உத்திரம் 4, அஸ்தம் 2, சுவாதி 4, விசாகம் 2, விசாகம் 4, அனுஷம் 2, பூராடம் 3,
உத்திராடம் 1, உத்திராடம் 4, திருவோணம் 2, சதயம் 4, பூரட்டாதி 2, பூரட்டாதி 4, உத்திராட்டாதி 2 ஆகிய
நட்சத்திர பாதங்களே புஷ்கர நவாம்ச பாதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்த நட்சத்திர பாதங்கள் முறையே சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகிய ஆறு
கிரகங்களை மட்டும் உள்ளடக்கியவை. செவ்வாய், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களைக் குறிக்கும்
நட்சத்திரங்களில் புஷ்கர நவாம்ச பாதங்கள் அமைவதில்லை.

இதை சுருக்கமாக வேறு வகையில் சொல்லப்போனால் சூரியனின் கிருத்திகை, உத்திரம், உத்திராடம்


ஆகிய மூன்று நட்சத்திரங்களின் முதல் மற்றும் நான்காம் பாதங்களும், சந்திரனின் ரோகினி, ஹஸ்தம்,
திருவோணம் ஆகியவற்றின் இரண்டாம் பாதமும், குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதியின்
இரண்டு, நான்காம் பாதங்களும், சுக்கிரனின் பரணி, பூரம், பூராடத்தின் மூன்றாம் பாதமும், சனியின்
பூசம், அனுஷம், உத்திராட்டாதியின் இரண்டாம் பாதமும், ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயத்தின்
நான்காம் பாதமும், புஷ்கர நவாம்சம் எனப்படும்.

கால புருஷனின் முதல் ராசியான மேஷம் மற்றும் அதன் திரிகோணங்களான ஐந்திற்குடைய சிம்மம்,
ஒன்பதுக்குடைய தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசிகளின் 7 மற்றும் 9 ம் பாதங்கள் புஷ்கர
நவாம்சமாகும். ராசிச் சக்கரத்தின் இரண்டாவது வீடான ரிஷபத்தில் தொடங்கி, அதன் ஐந்து
ஒன்பதாம் வீடுகளான நிலத் தத்துவ கன்னி, மகர ராசிகளின் 3 மற்றும் ஐந்தாவது பாதங்கள் புஷ்கர
நவாம்சமாகும்.

திரிகோண காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் வீடுகளின் ஆறு மற்றும் எட்டாவது பாதங்கள்
புஷ்கர நவாம்சமாகவும்,. நீர் ராசியான கடகத்தில் தொடங்கும் நீர்த் திரிகோண வீடுகளான கடகம்,
விருச்சிகம், மீனம் ஆகியவற்றின் ஒன்று மற்றும் மூன்றாவது பாதங்கள் புஷ்கர நவாம்சமாகவும்
அமையும்.

கேந்திர, கோணங்களின் எந்தவொரு 90 மற்றும் 120 டிகிரி கோண முனைகளில், ஒளிக் கிரகங்கள்
இணைந்தோ அல்லது பார்த்துக் கொண்டோ இருக்கும்போது சிறப்பான யோகங்கள் உருவாகின்றன.
இணையும் அல்லது பார்க்கும் கிரகங்களின் ஒளித்திறனுக்கு ஏற்ப அந்தக் குறிப்பிட்ட சமயத்தில்
பிறக்கும் ஒருவர் பூமியில் சகல பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்.

புஷ்கர நவாம்ச பாதம் என்பதும் இதுபோன்ற ஒரு கோண, கேந்திர முனைகள்தான். ஒளிப் பிரதிபலிப்பு
முனைகளில் அதிக ஒளித் திறனுடன் கிரகங்கள் அமர்ந்து, பாபக் கிரகங்களால் தனது சுய ஒளியை
இழக்காத நிலையில், ஒருவர் பிறக்கும் நேரத்தில் அமையும் லக்னத்தின்படியும் மேற்குறிப்பிட்ட ஒளி
நிலை சிறப்பானதாக அமையுமானால், அவ்வமைப்பு நல்ல யோகங்களையும், தன லாபங்களையும்,
அதிகாரத்தையும் தரும்.

நவாம்சத்தில் கிரகங்கள் சுபமாக உள்ள அமைப்பே புஷ்கர நவாம்சம் எனபடுகிறது.

புஷ்கர நவாம்ச அமைப்பில் உள்ள அனைத்துக் கிரகங்களும், நவாம்சத்தில் சுப வீடுகளிலேயே


அமையும். இங்கே கிரகங்களின் சேர்க்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராசிச்
சக்கரத்தில் ஒரு கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் போன்ற எத்தகைய வலிமையில் இருந்தாலும்,
அது நவாம்சத்தில் சுபரின் வீடுகளில் அமரும்போது வலிமையைப் பெறுகிறது என்பதன்
அடிப்படையில்தான் புஷ்கர நவாம்சம் சொல்லப்பட்டிருக்கிறது.

ராசிக்கட்டத்தில் 6, 8, 12 போன்ற இடங்களில் கிரகங்கள் மறைந்தே இருந்தாலும், நவாம்சத்தில் அவை


சுப வீடுகளில் அமரும்போது சுபத்துவம் அடைகின்றன. எனவே சுபத்துவத்தின் ஒரு பகுதிதான் புஷ்கர
நவாம்சமாகும். இது தவிர்த்து புஷ்கர பாகை என வேறு சில இன்னும் துல்லிய அமைப்புகளும்
கிரகங்களின் சுப வலிமையைக் கணக்கிட மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகங்கள் அதனுடைய தசையில் மட்டுமே பலன் தரும். தசை
வராவிட்டால் பலன் இல்லை. அதேபோல எத்தனை சிறப்பாக கூறப்பட்டாலும் புஷ்கர நவாம்சம் என்பது
ஒரு துணை அமைப்புதான்.

புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகங்கள், அந்த லக்னத்திற்கு சுப கிரகங்களாக அமைவதே சிறப்பு.
குறிப்பாக லக்னாதிபதி மற்றும் கேந்திர, கோணாதிபதிகள் எனப்படும் 4, 5, 9, 10 ஆகிய லக்ன சுபர்கள்
புஷ்கர நவாம்சத்தில் இருப்பதும், அந்த கிரகங்களின் தசை நல்ல பருவத்தில் வருவதும் ஒரு மனிதனை
ஏதேனும் ஒரு துறையில் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

குறிப்பாக, சில நிலைகளில் பெருங்கேந்திரம், பெருங்கோணம் எனப்படும் ஒன்பது, பத்தாம்


அதிபதிகளான தர்ம, கர்மாதிபதிகள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து அவர்களின் தசையும்
அடுத்தடுத்து நடக்கும்போது அந்தக் கிரகங்களின் காரகத்திற்கேற்ப ஜாதகர் மிக உயரத்திற்கு
செல்வார்.

ஆகவே ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், லக்னமும், அதனையடுத்த மிக முக்கிய சுபர்களான 5, 9


க்குடையவர்கள் புஷ்கர பாதத்தில் அமைவதும், இறுதியாக நான்கு, பத்துக்குடையவர்கள் புஷ்கர பாத
அமைப்பில் இருப்பதுமே சிறப்பானது.

இது தவிர்த்து ஒரு லக்னத்தின் அவயோக கிரகங்கள் என்று சொல்லப்படும் ஆறு, எட்டு,
பன்னிரெண்டுக்குடையவர்கள் புஷ்கர பாதத்தில் சுபத்துவமாக இருந்தால் தங்களது ஆதிபத்திய,
காரகத்துவ கெடுதல்களைக் குறைத்துக் கொண்டு 6, 8, 12 ஆம் பாவகங்களுக்குரிய சுப
விஷயங்களைச் செய்வார்கள். அதேபோல தங்களுடைய காரகத்துவங்களிலும் கெட்ட
காரகத்துவங்களைத் குறைத்துக் கொண்டு நல்ல காரகத்துவங்களை செய்வார்கள்.

ஆறாம் பாவகம் என்பது கடன், நோய், எதிரி போன்ற தீய பலன்களைக் கொடுத்தாலும், ஆறாம்
அதிபதியும், ஆறாம் பாவகமும் புஷ்கர நவாம்ச அமைப்பிலோ, அல்லது எனது சுபத்துவ சூட்சும வலுக்
கோட்பாட்டின்படி வேறு விதமான சுபமான அமைப்பில் இருக்கும் பொழுதோ கடன், நோய்களைத்
தராமல் ஜாதகரை ஒரு நிரந்தரமான நல்ல வேலையில் அமர்த்தி, அவருக்கு வாழ்நாள் முழுக்க ஒரு
வருமானத்தை ஏற்படுத்தித் தருவார்கள்.

தர்ம, கர்மாதிபதிகள் எனப்படும் ஒன்பது, பத்தாம் பாவகாதிபதிகளும், ஒன்பது, பத்தாம் பாவகங்களும்,


புஷ்கர நவாம்சம் உள்ளிட்ட சில நிலைகளில் சுபத்துவமாக இருக்கும் போது வானமே எல்லை என்கின்ற
அமைப்பில், ஒருவரை மிக உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.
----------------------------------------------------------------------
www.adityaguruji.in/2019/04/26/நவாம்சம்-என்பது-என்ன-d-056/

https://www.studyofastrology.com/2015/06/blog-post.html

See less

All reactions:
4
Like
Comment

Comments

You might also like