You are on page 1of 2

பயன் கருதா உதவி

உதவி செய்கிறவர்கள் பயனைக் கருதாமல் உதவிசெய்ய


வேண்டும் என்பதைப் பின்வரும் மூதுரைப் பாடல் விளக்குகிறது.

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி


என்று தருங்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீ ரைத் 
தலையாலே தான்தருத லால்
(மூதுரை :1)

(நன்றி = உதவி, தெங்கு = தென்னைமரம், தாள் = அடிமரம்) 

ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்தவுடன் அந்த உதவிக்கான பலனை


எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தென்னை மரத்தின்
அடிப்பகுதியில் தண்ண ீரை விட்டு வளர்க்கிறோம். சில ஆண்டுகளுக்குப்
பிறகு, அதன் தலைப்பகுதி இனிய இளநீரைத் தருகிறது. அதைப்போல்,
பிறருக்கு நாம் செய்த உதவியும் பின்னர், பயனைத் தரும் என்று
இப்பாடல் தெரிவித்துள்ளது.

• உதவியின் பயன்

ஒருவர் செய்கின்ற உதவியைப் பெறுகின்றவரின் தன்மைக்கு ஏற்பவே


அந்த உதவி, உயர்வாகவோ தாழ்வாகவோ கருதப்படும்.
நல்லவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி மதிக்கப்படும்.
தீயவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி அப்போதே மறக்கப்படும்.
செயல் செய்யும் முறை

செயலைத் தொடங்குவதற்கான காலம், இடம், மூலம் முதலானவற்றை


எல்லாம் ஒருவன் முடிவு செய்தபிறகு அச்செயலை எப்படிச் செய்யவேண்டும்
என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார் 


எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி 
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார் (52)

(மெய்வருத்தம் = உடல் துன்பம், பாரார் = பொருட்படுத்த


மாட்டார்,துஞ்சார் = தூங்கமாட்டார், செவ்வி = காலம்)

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க விரும்புபவர்கள் தமது


உடலளவில் ஏற்படும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
பசியையும் தூக்கத்தையும் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; பிறர்
செய்யும் தீமைகளுக்காக வருந்தமாட்டார்கள்; காலத்தின்
அருமையையும் கருதமாட்டார்கள்; பிறர் தம்மை அவமதிப்பதை
எண்ணியும் வருந்தமாட்டார்கள் என்று செயல் செய்யும் முறையை
நீதிநெறி விளக்கம் தெரிவித்துள்ளது

You might also like