You are on page 1of 2

நீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில

யோசனைகள்
நீங்கள் புதிய வடு
ீ வாங்கினாலும் அல்லது பழைய வட்டை

புதுப்பித்தாலும், உங்களுக்கு பல்வேறு ஸ்டைல் மற்றும் உட்புற வடிவமைப்பு
பற்றிய புரிதல் இருந்தால், உங்கள் வட்டை
ீ அழகாக மாற்றலாம். இது
நிச்சயம் ஒரு சவாலான காரியம் தான். அதற்காக உங்களுக்கு சில
யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்கள் தேர்வில்
வெற்றி பெறலாம்.
வடு
ீ என்பது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது முக்கியமில்லை.
அதில் எவ்வளவு சந்தோஷம் நிறைந்திருக்கிறது என்பதுதான் முக்கியம். வடு

என்பது தங்குவதற்கான கூடாரம் மட்டும் இல்லை என்பதை நாம் முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.
வெறும் நான்கு சுவர்கள் மட்டும் கொண்ட ஒரு வட்டில்
ீ நம்மால் வாழ
முடியுமா? கண்டிப்பாக முடியாது. வடு
ீ என்பது நம்முடன் சேர்ந்து வாழும்
மனிதர்களால் முழுமை அடைகிறது. அதனை சொர்க்கமாக மாற்ற உதவுவது
சில சரியான வடிவமைப்புகளும் தொழில்நுட்பங்களும். இந்த மாற்றங்களை
எளிய முறையில் வசிப்பவர்களின் விருப்பத்திற்கேற்பவும் வசதிக்கேற்பவும்
மாற்றி அமைக்கும்போது வடு
ீ சொர்க்கமாக மாற்றம் பெறுகிறது. அப்படி
உங்கள் வடும்
ீ சொர்க்கமாக மாற வேண்டுமென்று நினைத்தால், கீ ழே
குறிபிட்டுள்ள 7 யோசனைப்படி மாற்றுங்கள்.

வெளிச்சம் :
இயற்கை மற்றும் செயற்கை வெளிச்சத்தின் சரியான கலவை ஒரு
முக்கிய இடத்தை வகிக்கிறது. வட்டில்
ீ நிறைந்திருக்கும் சரியான வெளிச்சம் ,
அதன் அழகைக் கூட்டிக் காட்டும். ஜன்னலின் அளவு மற்றும் ஜன்னல்
திரைகள் சரியான அளவு வெளிச்சத்தை உள்ளே கொண்டு வரும்.
சமையலறை போன்ற இடங்களில் இந்த வெளிச்சத்திற்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னதான் நாம் லைட்டிங்கை
பயன்படுத்தினாலுமு் இயற்கையான சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் பரவ
வேண்டியது மிக அவசியம்.

சிறு சிறு பொருட்கள்


சில பொருட்கள் எப்போதாவது தேவைப்படும். ஆகவே அதற்கான தனி
இடங்களை தேவைகேற்ப அமைத்து கொள்ள வேண்டும். மூலை
முடுக்குகளை அழகாகப் பயன்படுத்த வேண்டும். சுத்தமான சீராக
பயன்படுத்தப்பட்ட இடம், பார்ப்பதற்கு ஒரு வித அமைதியை உண்டாக்கும்.
இதனால் ஏற்படும் பாசிடிவ் அதிர்வலைகள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை
பயக்கும். தேவையற்ற பொருட்களை வைக்க சில பெட்டிகள் அல்லது
பாஸ்கெட்களைப் பயன்படுத்தலாம்.
காலியாக வையுங்கள்
உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் பொருட்களை
அடுக்கி வையுங்கள். முடிந்த அளவிற்கு நிறைய இடத்தை காலியாக
வையுங்கள். தகுந்த இடத்தை சரியாய் பகிர்வதும், இட மேலாண்மையும் தான்
வட்டின்
ீ உட்புறத்தை அழகாக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு வட்டில்

பொருள்களைப் போட்டு அடைக்காமல் வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கு
அவ்வளவு வடு
ீ அழகான தோற்றம் பெறும்.

சில ஸ்டைலை உருவாக்குங்கள் :


உங்கள் குணநலன் அல்லது உங்கள் குடும்பத்தின் தனித்தன்மை
போன்றவற்றை விளக்கும் ஒரு தீம் அல்லது ஸ்டைலை தேர்ந்தெடுங்கள்.
குறைந்தபட்சம் ஒரு பாரம்பரியமான தீம்களை வைப்பது தான் இப்போதைய
டிரெண்ட். வட்டில்
ீ இருக்கும் பொருட்கள் மற்றும் அலங்காரங்களில்
வித்தியாசங்கள் இருக்க வேண்டும். எல்லா அறைகளையும் ஒரே மாதிரியாக
அலங்கரிக்கக் கூடாது.

வசதியான இருக்கைகளை தேர்ந்தெடுங்கள்


மனமோ உடலோ சோர்வாக இருக்கும்போது நம்முடைய மனம்
உட்காருவதற்கு ஒரு நிம்மதியான இடத்தைத் தேடி அலையும். அதனால்
உட்காருமு் இருக்கைகளைக் கூட வசதியானதாகவும் வித்தியாசமான
டிசைனிலும் தேர்ந்தெடுங்கள். அது நம்முடைய மனதை மட்டுமல்ல, வட்டுக்கு

வரும் விருந்தாளிகளையும் கவரும்.

செடிகளை வையுங்கள் :
பச்சை பசேலென சில தொட்டிச் செடிகளை வட்டிற்குள்
ீ வைப்பது ஒரு
உணர்ச்சிமிக்க ஒரு அனுபவத்தை தரும். வரவேற்பறை மற்றும் சாப்பிடும்
அறைகளில் சில செடிகளைத் தொட்டியில் வைக்கலாம். இதனால் சோர்வு,
அழுத்தம் போன்றவை குறையும். உட்புறத்தோட்டம் அல்லது நீர் அம்சம்
ஆகியவை கொண்ட இயற்கை நிலப்பரப்புக்கு திறந்த பெரிய ஜன்னல்கள்
அல்லது பிரெஞ்சு கதவுகளை அமைப்பது நல்ல காற்றோட்டமாகவும்
அழகாகவும் இருக்கும்.

அழகான பொருட்கள்
உங்கள் ஷெல்ப்களை அல்லது சுவர்களைப் பழங்கால ஆபரணங்கள்,
பொருட்கள், படங்கள், போன்றவற்றைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.
நிச்சயமாக இது உங்களின் தனித்தன்மையைக் காட்டும். மேலும் உங்கள்
வட்டின்
ீ அழகை அபிவிருத்தி செய்வதுடன் ஒரு அமைதியான சூழலையும்
உங்களுக்குத் தரும். குறிப்பாக, பெட்ரூமில் நீங்கள் இதை முயற்சி
செய்யலாம்.

You might also like