You are on page 1of 4

BAHAGIAN A / பிரிவு 1

SOALAN 1 / கேள்வி 1 (ஆ)

இராமலிங்கம் என்பது இவரின் இயற்பெயர். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார்,


அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
சொற்பொழிவாளர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி,
இதழாசிரியர், போதகர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப் பிணி போக்கிய அருளாளர்
என பல்வேறு முகங்களையும் கொண்டவர் இவர். பசி நெருப்பை அணைப்பதே
சீவகாருண்யம் என்ற புதிய கொள்கையை தோற்றுவித்தவர் இவர்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே


வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ...
இப்பாடலில் வறுமையால் வாடுவோர் நிலை கண்டு வள்ளற் பெருமான் வாடிய திறம்
கூறப்படுகிறது. வள்ளலாரின் உணர்வுகள் நன்றாக இந்த பாடலில் காணமுடிகின்றது.
எல்லோர்க்கும் நல்லதை நினை என்று சொல்வது மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டியுள்ளார்.
அதாவது, சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம்
இது. மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய
பயிரை கண்டு உள்ளம் வாடியவர் வள்ளலார்.

ஒருமுறை அல்ல, ஒவ்வொருமுறையும் தண்ணீரின்றி வாட்டமுற்ற பயிர்களைக்


கண்ட போதெல்லாம் வாடியதாகவும், பசியால் உடல் மெலிந்து வீடு தோறும் சென்று,
பிச்சைப் பெற்றும் பசி ஆறாமல் வருந்தும் வறியவரைப் பார்த்தும், நெடிது நின்று வருந்தும்
பிணியுடையவராய்த் வருத்தப் படுகிறவர் அவர் முன்னால் வரும்போதெல்லாம்
அவர்களைப் பார்த்து மனம் மிக வருந்தி உள்ளம் துடித்திருப்பதையும் இப்பாடலில்

காணமுடிகின்றது. ஒப்பற்ற மானமுடையராய் வறுமையெய்தினமையால் உள்ளமுடைந்து


மெலிந்தவர்களைக் கண்டு உள்ளம் பதைத்திருப்பதின் மூலம் வள்ளலாரின் இரக்கக்
குணத்தைக் காணமுடிகின்றது. மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது
எல்லோருக்கும் எளிதான ஒன்று தான். அந்த துன்பத்தைப் போக்க ஏதாவது செய்வது
தான் கடினம். மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை
போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

எந்த பயனையும் கருதாமல் மற்றவரின் பசியை போக்கும் கருணையுள்ளம்  கொண்ட


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வள்ளலார் இன்று வரை வயிற்று பசியைப் போக்கிய மகான்
என்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். எதிலும் பொது நலம் வேண்டும் என்று கடைசி
வரை எந்த பயனும் கருதாமல் வேண்டி வந்தவர்களுக்கு எந்த பாகுபாடும் கருதாமல்
உதவி கரம் நீட்டியவர் இவர்.

கடலூரை அடுத்த வடலூர் என்னும் ஊரில் பசியில் வாடும் வறியவர்களுக்கு இவர்


தொடங்கிய 'சத்திய ஞான சபை' என்னும் தரும சாலை மடம் இன்று வரை சாதி, மதம்,
மொழி என்ற வேறுபாடு பார்க்காமல் நாடி வரும் அனைவருக்கும் பசி பிணியை போக்கி
வருகிறது.

SOALAN 1 / கேள்வி 1 (அ)

வள்ளலாரின் குடும்பத்தார்கள் சைவ சமயத்தைத் தழுவி வந்தார்கள். அதனால் வள்ளலார்


அச்சமயத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்ந்து வளர்ந்து வந்தார்கள். இளம் வயதில் திரு
இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் சென்று
கவிகள் பாடி துதித்தார்கள். அன்பு, ஒழுக்கம், கருணை, இரக்கம் இவை குறித்து இவர் பாடிய
பாடல்கள் மிக்க சிறப்புடையதாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமயக்கடவுளர்கள் குறித்து பாடல்கள் நிறைய பாடியுள்ளார்கள். சிறு தெய்வ வழிபாடு பற்றிய
வள்ளலாரின் கருத்துகள் யாதென்றால், சிறு தெய்வ வழிபாடு கூடாது என்கிறார் வள்ளலார்.

இந்த உடம்பில் உயிர் எப்படி ஒன்றுதான் இருக்க முடியுமோ அப்படி இந்த


உலகத்தில் இறைவனும் ஒருவனாகத்தான் இருக்கமுடியும். பலப்பல தெய்வங்கள் உண்டு
என்றால் இந்த உடம்பிலும் உயிர் இரண்டு மூன்று என்று சொல்லலாமே
என்கிறார். உண்மையான திருவருள் ஞானம் இல்லாதவர்க்கெல்லாம் அறிவு விளக்கம்
தரவேண்டும் என்றும் இறைவனிடம் வள்ளலார் வேண்டுகின்றார். ஏனெனின், இறைவன்
ஒருவன்தான் என்று உணராமல் பலப்பல தெய்வங்களை வழிப்படுகின்றவர்களும்,
கைலாயம், வைகுண்டம் போன்ற பலப் பல கதிகள் இருக்கின்றது சொல்வோரும்,
பொய்யாக வந்த கலைகளாகிய இதிகாசங்கள், புராணங்கள் போன்ற கலைகளைச்
சொல்வோரும், பொய்யான சமயங்களைப் பின்பற்றி வாழ்கின்றனர் என்கிறார்.

வள்ளலார் காலத்திற்கு முன்பும் பின்பும் இப்போதும் சிறு தெய்வங்களுக்கு உயிர்ப் பலி


இடும் வழக்கம் உள்ளது. வீட்டு விலங்குகளும், பறவைகளும் பலி இடுவோருக்கு அடங்கியவை
மட்டும் அல்ல அவர்கள் உணவாகக் கொள்ளுவதும் ஆகும். பிடாரி கோயில்களிலும், காளி
கோயில்களிலும் கருப்பு கோயில்களிலும் நூற்றுக் கணக்கான எருமைகள், ஆடுகள், கோழிகள்,
பன்றிகள் முதலியவை பலியாகும். இந்தத் தெய்வங்களை நலி தரும் சிறு தெய்வங்கள்
என்கிறார் வள்ளலார். இந்தக் கோயில்களைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் பயப்படுவதாகக்
கூறுகிறார்.

கல்வி அறிவு மிகுந்து இருக்கும் இந்தக் காலத்திலும் அநேகமாக எல்லா அம்மன்


கோயில்களிலேயும் ஆயிரக் கணக்கான விலங்குகளைப் பலியிடப்பட்டே வருகின்றன. மாமிசம்
உண்போர் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களையும் விட்டு வைப்பதில்லை. அந்த நாட்களிலும்
உயிர்ப் பலி ஏராளமாக நடைபெறுகிறது. குழந்தைகட்குக் காது குத்தல் போன்ற வீட்டுச்
சடங்குகளிலும் இந்தச் சிறு தெய்வங்கள் பெயரால் உயிர்ப் பலி இன்றும் தொடர்கிறது. இந்தக்
கோயில்களில் வள்ளலார் வணங்கவில்லை. மாறாக பயந்தார். இந்தச் சிறு தெய்வங்கள்
உண்மையில் இல்லை என்று நமக்கு மற்றவர்கள் கூறாத உண்மையை வள்ளலார் கூறினார்.

திரு. அருட்பா முழுவதையும் ஊன்றிப் படித்தால்தான் வள்ளலாரின் உண்மையான


கருத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அவரும் எல்லாத் தெய்வங்களையும் நன்றாகவே பாடி
இருக்கின்றார். இறைவன் ஒருவனே என்றும் அவன் அருட்பெருஞ்சோதி என்றும் வள்ளலார்
கூறியுள்ளார். இறைவன் ஒருவனே என்றால் இத்தனை தெய்வங்களையும் வள்ளலார் ஏன்
பாடுகிறார்? அதற்குத் திருச் சிற்றம்பலத்தே உள்ள ஜோதியைத்தான் எல்லாச் சமயங்களும்
தனித் தனியாகத் தங்கள் தெய்வமாகக் காட்டுகின்றன என்கிறார் வள்ளலார். அருகர், புத்தர்,
அயன், நாராயணன், அரன், ஆதி, சிவன், சதாசிவன், சக்திசிவன் போன்ற எல்லாப் பெயர்களும்
ஒருவனாகிய அந்த இறைவன் பெயரே என்கிறார் வள்ளலார்.

துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன்


சுத்த சிவம் என்பேன் இவை சித்து விளையாட்டே (பாடல் எண் 2532)
இந்தப் பாடல் மூலமாக வள்ளலார் சொல்ல விழைகிறார். வண்ணங்களும், பெயர்களும்
மாறுபடுவதால் உண்மையிலேயே அத்தனை தெய்வங்களும் இருப்பதாக நம்பிவிடவேண்டாம்.
ஒரே ஒரு தெய்வம்தான் உள்ளது. எல்லாப் பெயர்களும், எல்லா வடிவங்களும் அந்த ஒரு
இறைவனைத்தான் குறிக்கின்றன என்ற உண்மையைத்தான் இந்தப் பாடல் சொல்கிறது.

இந்த உலகைப் படைத்தவன் பிரம்மா என்று இந்துக்கள் சொல்லுகிறார்கள் . அல்லாதான்


படைத்தார் என்று இஸ்லாமியர் சொல்லுகின்றார்கள். இல்லை இல்லை எங்கள் பரம பிதாதான்
படைத்தார் என்று கிருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.மூன்று பேரும் தனித் தனியாகப்
படைத்திருந்தால் மூன்று உலகங்கள் அல்லவா இருக்கவேண்டும். அவர்கள் சொன்னதெல்லாம்
நாம் வாழ்கின்ற இந்த உலகம்தான். இந்த உலகத்தை யாரோ ஒருவர்தான் படைத்திருக்க
வேன்டும் அந்த ஒருவரை இந்துக்கள் பிரம்மா என்றும், முகம்மதியர்கள் அல்லா என்றும்,
கிருத்துவர்கள் பரம பிதா என்றும் சொல்லுவதுதான் உண்மை. இந்த உண்மையை ஒவ்வொரு
சமயத்தவரும் உணர்ந்துகொண்டால் நாம் அனைவரும் ஒரே ஒரு கடவுளைத்தான் வெவ்வேறு
பெயர்களில் வணங்குகிறோம் என்ற பேருண்மை நமக்கு வெளிப்படும். சமயச் சண்டையும், மதச்
சண்டையும் அடியோடு ஒழிந்துவிடும். இவ்வளவு உருவங்களும் அதற்கேற்ற கதைகளும்
எவ்வாறு வந்தன என்றுக் வள்ளலார் விளக்குகின்றார்.

You might also like