You are on page 1of 153

1

முதன்மைத்தாள்
பண்டைய இலக்கியம்
பாட நோக்கம்
1. சங்ககால இலக்கிய அகப்புற மரபுகளை மாணவர்களுக்கு உணர்த்துதல்
2. பழந்தமிழர் அகம் மற்றும் புற வாழ்வியல் அறங்களை இனங் காட்டுதல்
3. பழந்தமிழரின் இயற்கை இயைந்த வாழ்க்கை பின்னணியைச் சுட்டுதல்

மாணவர் பெறும் திறன்


1. பாடலின் பொருளறிந்து புலவர் கூறும் நயம் அறிவர்.
2. நூல், நூலாசிரியர் வரலாறு, காலம் பற்றிய சிந்தனை ஏற்படும்.
3. பண்டைத் தமிழரின் வாழ்வியல் விழுமங்கள் அறிவர்.
அலகு 1. அ. முல்லைப்பாட்டு
ஆ. பட்டினப்பாலை
அலகு 2. அ. நற்றிணை ( 1 – 20 பாடல்கள்)
ஆ. குறுந்தொகை (20-40 பாடல்கள்)
இ. ஐங்குறுநூறு – வேட்கைப்பத்து முழுதும்
அலகு 3 அ. அகநானூறு – களிற்றியானை நிரை 44-53 (பத்து பாடல்கள்)
ஆ. கலித்தொகை – குறிஞ்சிக் கலி 02-10 (09 பாடல்கள்)
இ. பரிபாடல் - செவ்வேள் – எண். 14 (01 பாடல்)
அலகு 4 அ. புறநானூறு 100 – 120 (21 பாடல்கள்)
அலகு 5 பதிற்றுப்பத்து – ஐந்தாம் பத்து முழுவதும் பண்டைய இலக்கியம்

அலகு 1
2
1. முல்லைப்பாட்டு
2. பட்டினப்பாலை

பண்டைய இலக்கியம்
தாள் பாகுபாடு

பண்டைய இலக்கியம் என்னும் இத்தாள் ஐந்து அலகுகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.


முதலாம் இயலில் பத்துப்பாட்டு அக நூல்களான முல்லைப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை என்னும்
இரு நூல்கள் குறித்த செய்திகள் விளக்கம் பெறுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் அக
நூல்களான நற்றிணை, குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு அலகு இரண்டாகவும் அகநானூறு,
கலித்தொகை மற்றும் பரிபாடல் மூன்றாம் அலகாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
புறநூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் அலகில்
விவரிக்கப்படுகின்றன.
இப்பாடத்தில் ஒவ்வொரு இயலிலும் பொதுவான அவ்வவ் நூல் குறித்த முன்னுரையும்
அதனைத் தொடர்ந்து பாடலுக்கான பொருள் விளக்கமும் அமைகின்றன. ஒவ்வொரு இயலும்
மாணவர் படிப்பதற்கு ஏதுவாக இத்தாள், முப்பத்தி ஐந்து பாடப் பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தொகுப்புரையினைத் தொடர்நது ் தன் முயற்சி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுமுயற்சியாக மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் விதமாக விடைக் குறிப்புகளும்
தரப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களின் அகப்புறக் கட்டமைப்பு ஆசிரியர்
வரலாறு, காலம் ஆகியனவற்றைத் தமிழ் இலக்கிய வரலாறு தாளில் தெரிந்து கொள்வதாலும்
ஈண்டு விரிப்பின் மிகும் என்பதாலும் இச்செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
பாட நோக்கம்
3
1. சங்ககால இலக்கிய அக மரபுகளை உணர்த்துதல்
2. பழந்தமிழர் அக வாழ்வியல் அறங்களை இனங் காட்டுதல்
3. பழந்தமிழரின் இயற்கையோடு கூடிய வாழ்க்கை பின்னணியைச் சுட்டுதல்
4
மாணவர் பெறும் திறன்
1. முல்லையின் முதல், கரு, உரிப்பொருள் ஒழுக்கம் குறித்த அறிவு உண்டாகும்.
2. நூல், நூலாசிரியர் வரலாறு, காலம் பற்றிய சிந்தனை ஏற்படும்.
3. முல்லையின் பெரும்பொழுது சிறுபொழுது வருணனைகளை படித்து இன்புறுதல்.
4. பழந்தமிழர் பெண்டிர் வாழ்க்கை வழிபாட்டு முறைகள், போர்ப் பாசறையின் அமைப்பும்
இருப்பும் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியனவற்றைப் படித்து உய்த்துணர்தல்.

பாட முன்னுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம், பண்பாடு மற்றும்
பழக்க வழக்கங்களைப் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கும் நூலாகச் சங்க இலக்கியம்
விளங்குகிறது. சங்க இலக்கியம் பாட்டும், தொகையும் என்று வகைப்படுத்தப்படுகிறது. பாட்டு
என்பது பத்துப்பாட்டினையும் தொகை என்பது எட்டுத்தொகையினையும் குறிக்கிறது.
இவ்விலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு வாழ்வியல் அறக்கோட்பாடுகளை
வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. உலகம் முழுமைக்கும் ஏற்றதொரு சிந்தனையாகத்
தமிழரின் பண்பாடு விளங்குகிறது. இத்தமிழர் பண்பாட்டை அவரது வாழ்வு முறையினை
இப்பண்டைய இலக்கியம் என்னும் தாள் மாணவர்கள் அறிந்துகொள்ள வழிகோலுகிறது.
5
பாடம் ஒன்று
முல்லைப்பாட்டு அறிமுகம்
1.1.0. முன்னுரை
முல்லைப்பாட்டு அறிமுகம் என்னும் இப்பகுதியில் நூல் நூலாசிரியர் வரலாறு,
முல்லைத்திணை மற்றும் முல்லைப்பாட்டினைப் பதிப்பித்த மற்றும் உரையாசிரியர்கள் குறித்தச்
செய்திகள் ஆகியன விளக்கப்படுகின்றன.
1.1.1. நூல் அறிமுகம்
பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்ட அகவற்பாவில் (ஆசிரியப்பா)
அமைந்த சிறிய நூலாகும். இந்நூல். பத்துப்பாட்டு நூல்களுள் அளவால்(அடி எண்ணிக்கை)
சிறியது. இம்முல்லைப்பாட்டினை, நெஞ்சாற்றுப்படை என்றும் கூறுவர்.
1.1.2. ஆசிரியர் பெயர்க்காரணம்
முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார்
மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன். இவருடைய பெயருக்கு முன் சிறப்புப்
பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய ”ந” என்னும் எழுத்தையும், பெயருக்குப்பின், உயர்வைக்
குறிக்கும் “ஆர்” விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார்.
பண்டைக்காலத்தில் சான்றோர் பெயர்களான நக்கீரனார், நக்கண்ணையார்,
நத்தத்தனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் ”ந” என்னும் சிறப்பு
எழுத்து இடம்பெற்றிருப்பது போன்று இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது. இவர் இயற்றியதாக
முல்லைப்பாட்டு ஒன்று மட்டுமேசங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
1.1.3. ஆசிரியர் காலம்
இவர் தந்தையார் பொன்வாணிகனார் என்பதும் அவர் சோழநாட்டில் வாழ்ந்தவர் என்பதும்
இவர் பெயரிலிருந்து தெரிகிறது. முல்லைப்பாட்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டிருக்கலாம் என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் கருத்தாகும்.
1.1.4 முல்லைத் திணை
மாந்தரின் உள்ள நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட பாடல்கள் அகத்திணைப்
பாடல்கள் என்றும், புறம் சார்ந்த ஒழுகலாறுகளை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைப்
பாடல்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணைப் பாடல்களை, கைக்கிளை,
குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் மருதம் மற்றும் பெருந்திணை என்று ஏழுதிணைகளாகத்
(பிரிவுகளாகத்) தொல்காப்பியம் பாகுபடுத்துகிறது.
மன்னன் ஒருவன் போருக்காகத் தன் மனைவியைப் பிரிந்து சென்றபொழுது அவனுடைய
பிரிவினால் வரும் துயரத்தை அவன் மனைவி பொறுத்துக்கொண்டு, அவன் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருத்தலே முல்லைத்திணை உரிப்பொருள் ஒழுக்கமாகும். இக்கருத்தை
மையமாகக் கொண்டு, புலவர் நப்பூதனார் முல்லைப்பாட்டை இயற்றியுள்ளார். மனைவி, கணவனின்
பிரிவைப் பொறுத்துக்கொண்டு, தலைவன் பாசறையில் இருத்தலும் குறித்துப் பாடுவதால்,
இம்முல்லைப் பாட்டு முல்லைத்திணை ஒழுக்கம் சார்ந்த பாடலாக அமைகிறது.
1.1.4. முல்லைப்பாட்டு பதிப்புகள் மற்றும் உரைகள்
கி.பி. மூன்றாம் நூற்றண்டில் முல்லைப்பாட்டு இயற்றப்பட்டிருந்தாலும், அது, பத்துபாட்டின்
ஒருபகுதியாக, முதன்முதலாக நூலாக 1889 ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர்
அவர்களால், “பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்” என்ற தலைப்பில்
6
வெளியிடப்பட்டது. பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத்தில், இளங்கலை வகுப்புக்குரிய
பாடங்களில் முல்லைப்பாட்டும் சேர்க்கப்பட்டிருந்ததால், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களும்
மறைமலை அடிகளாரும் மாணவர்களுக்காக எளிய உரையை 1903 ஆம் ஆண்டு பதிப்பித்தனர்.
அதற்குப் பிறகு, 1955 ஆம் ஆண்டு, பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்கள்
முல்லைப்பாட்டுக்கு ஒரு சிறந்த உரையைப் பதிப்பித்தார்.
7

பாடம் இரண்டு
முல்லைப்பாட்டு - பொருட் பாகுபாடும் சுருக்கமும்
1.2.1 முன்னுரை
இப்பாடத்தில் முல்லைப்பாட்டின் கட்டமைப்பு, புலவர் இப்பாட்டினைப் பகுத்துப் பாடும்
முறை, மற்றும் முல்லைப்பாட்டு பொருட்சுருக்கம் குறித்தச் செய்திகள் இடம்பெறுகின்றன.
1.2.2 முல்லைப்பாட்டு பொருளமைப்பு
1 - 6 அடிகள் : கார்கால வருணனை
7 - 18 அடிகள் : : முதுபெண்டீர் விரிச்சி கேட்டல், கோவலர்
வாழ்ககை
் முறை.
19 -23 அடிகள் : தலைவியின் இருத்தலும் இல்லச்சூழலும்
24-42 அடிகள் : பாசறையின் அமைப்பு, யானையின் செயல்,
அரண்வீடு உருவாக்கல்.
43- 49 அடிகள் : போர்க்களத்தில் பெண்டிர் விளேக்கேற்றுதல்
50-80 அடிகள் : மெய்க்காப்பாளர்கள் காவல், கணியன் செயல்,
மிலேச்சர் காவல், அரசன் சிந்தனை.
81-103 அடிகள் : தலைவியின் நிலை, தலைவன் மீண்டும் திரும்பி
வருதல்.
இவ்வாறு, முல்லைப்பாட்டின் வருணனை விவரிக்கப்படுகிறது.
1.2.3 முல்லைப்பாட்டு : புலவர் பாடும் முறை
முல்லைத்திணைப் பாடலுக்குத் தொல்காப்பியம் வகுக்கும் இலக்கணத்தை
முழுமையாகக் கொண்டு முல்லைப்பாட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு பகுதிகளைக்
கொண்ட ஒரு ஓரங்க நாடகமாக முல்லைப்பாட்டு அமைந்திருக்கிறது. முதற்பகுதியில்,
கணவனைப் பிரிந்திருக்கும் மனைவியின் மனநிலை காட்டப்படுகிறது. இரண்டாவது பகுதியில்
பாசறை அமைப்பும் அங்குள்ள மன்னனின் மனநிலை விவரிக்கப்படுகிறது. மூன்றாவது
பகுதியில் மீண்டும் மனைவி தன் கணவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முயற்சி
செய்யும்பொழுது அவளுக்கு ஏற்படும் துயரநிலைச் சித்திரிப்பு பெறுகிறது. கடைசிப் பகுதியில்
கணவன் போரில் வெற்றிபெற்று முல்லை நிலக்காட்டு வழியில் தன் தேரில் விரைந்து வருவதை
வருணிக்கிறது. புலவர் நப்பூதனார் மிக அழகாக, கவிநயத்தோடும் முல்லைநிலத்தின்
இயற்கைக் காட்சிகளோடும் கலந்து இப்பாடலை இயற்றியிருப்பது அவருடைய புலமைக்குச்
சான்றாக அமைகிறது.
1.2.4 முல்லைப்பாட்டு பொருட் சுருக்கம்
ஓரு தலைவன், கார்காலம் (மழைக்காலம்) தொடங்குவதற்கு முன்னரே
திரும்பிவருவதாகக் கூறிப் போருக்குச் செல்கின்றான். தலைவி தன் கணவனைப்
பிரிந்திருப்பதால் துயரத்துடன் தலைவன் சொல் கேட்டுக் காத்திருக்கின்றாள். கார்காலம்
வந்ததன் அறிகுறியாகப் மழை பெய்யத் துவங்கியது. தலைவியின் துயரத்தைக் கண்ட
அவளுடைய பணிப்பெண்களில் வயது முதிர்ந்த பெருமுது பெண்டிர் ஊர் எல்லையில் நின்று
விரிச்சி கேட்டு கைதொழுது நின்றனர். அச்சமயம், இடையர்குலப் பெண் ஒருத்தி,
மாலைப்பொழுதில் வீடு திரும்பாத தாய்ப்பசுவைக் காணாமல் வருந்தும் இளங்கன்றை நோக்கி,
“உன் தாய் விரைவில் வரும்” என்று கூறுகிறாள். அதைக்கேட்ட பணிப்பெண்கள்
அரண்மனைக்குச் சென்று, தாம் கேட்ட நற்செய்தியைத் தலைவியிடம் கூறி, தலைவன்
8
விரைவில் வருவான் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால், தலைவியின் துயரம்
தீரவில்லை. அவள் கண்களிலிருந்து முத்துமுத்தாக கண்ணீர்த்துளிகள் வருகின்றன.
தலைவி வருந்தும் இவ்வேளையில், தலைவன் பாசறையில் இருக்கின்றான்.
படைவீரர்கள், போர்க்களத்தருகே பாசறை ஒன்றை அமைத்துள்ளனர். அப்பாசறையில்
மன்னனுக்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி இருப்பிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாசறையைச்
சுற்றிலும் முள்ளாலான வேலியும், பல்வேறு அரண்களும் உள்ளன. பாசறையில், அன்றைய போரில்,
புண்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளையும், வீரத்தோடு போர்புரிந்து இறந்த வீரர்களயும்,
நினைத்து, நடுநாள் வரை உறக்கமில்லாது மன்னன் படுக்கையில் படுத்திருக்கிறான். மறுநாள்,
போரில் மன்னன் வெற்றி பெற்றான். அன்றிரவு மகிழ்ச்சியுடன் உறங்குகிறான்.

அடுத்த நாள் காலை, வெற்றியின் அறிகுறியாக முரசு முழங்குகிறது. வீரர்கள்


ஊதுகொம்பையும் சங்கையும் ஊதி ஆரவாரிக்கின்றனர் . இந்த வெற்றி முழக்கத்தைக் கேட்ட
மன்னன், தன் படையோடு, தேரில் ஊர் திரும்புகிறான். மன்னனைக் காணாத தலைவி, தன்
அணிகலன்கள் நெகிழ்ந்து,ம்அறிவு மயங்கியும் அம்பு தைத்த மயில்போல் நடுங்கியவாறு
துயரத்தில் படுத்திருக்கிறாள். அப்பொழுது, மன்னனின் தேரில் பூட்டிய குதிரைகளின்
குளம்பொலி கேட்டு அவள் பெருமகிழ்ச்சி அடைகிறாள்.
1.2.4 தொகுப்புரை
இம்முல்லைப்பாட்டிலிருந்து பெறப்படும் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் குறித்த
கருத்துகள், முல்லை முதற்பொருளான கார்காலப் பெரும்பொழுது மாலைக்காலச் சிறுபொழுது
வருணனைகள், முல்லை உரிப்பொருள் ஒழுக்கமான இருத்தல் குறித்த பதிவுகள்
கருப்பொருள்களைப் புலவர் வருணிக்கும் திறன் ஆகியன படிப்பவர்களின் உள்ளத்தைக் கவரும்
வகையில் அமைந்துள்ளன.

பாடம் மூன்று
முல்லைப்பாட்டு மூலம்
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
9
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, 10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்,
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்தத் ர, 15
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின் 20
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், (12 – 23)
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்,
படு நீரப் ் புணரியின் பரந்த பாடி.
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக் 35
கல்லா இளைஞர் கவளம் கைப்பக்,
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் 40
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக,
வேறு பல் பெரும்படை நாப்பண், வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு
குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து, 45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
10
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள், 50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்தத
் தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ,
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள், 55
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி,
“எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து” என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து, 60
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட, புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத், 70
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை 75
முடியொடு கடகம் சேர்தத ் ி, நெடிது நினைந்து,
பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்,
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து,
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
11
அஞ்செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு 90
விசயம் வெல் கொடி உயரி
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர)
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில்,
முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழியத்,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
முல்லைப்பாட்டு பாடல் பொருள் விளக்கம்
1.3.1 முன்னுரை
இப்பாடப் பகுதியில் மாணவர்களுக்கு எளிமை கருதி பாடலின் கருத்துரை மட்டும்
தரப்பெற்றுள்ளது. முல்லைப்பாட்டின் மூலபாடத்துடன் இணைத்துப் படிக்கௌமாறு அடிகள்
பிரித்து பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளத்.
1.3.2 முல்லைப்பாட்டு (செய்யுள் விளக்கம்)
”நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு” எனத் தொடங்கி ”பெரும் பெயல் பொழிந்த
சிறு புன் மாலை” எனும் வரை கார்காலத்தின் தொடக்கத்தே அமைந்த மாலைப்பொழுது
வருணிக்கப்படுகிறது. முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும்,
மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைகின்றன.
மாலைப்பொழுது வருணனை (1-6 அடிகள்)
சுழலும் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திய திருமால், மன்னன்(மாபலிச்
சக்கரவர்த்தி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்கின்றான். அத்திருமாலின் தோற்றம் போல,
கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). அம்மழை பொழிந்த
மாலை நேரம்.
விரிச்சி கேட்கும் பெருமுது பெண்டிர் (7 – 11 அடிகள்)
கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர்
செல்கின்றனர். தாம் கொண்டு சென்ற நாழியில்(அக்கால அளவை) உள்ள நெல்லையும்,
வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவி வணங்கி,
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப
விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி- நற்சொல் கேட்டல்)
முதுபெண்டிர் ஆற்றுவிக்கும் திறம்(தேற்றுதல்) (12-23 அடிகள்)
முது பெண்டிர் விரிச்சி கேட்கும் நேரத்தில், அங்கிருந்த ஆய்மகள் பச்சைக்
கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை
12
எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றினைத் தேற்றும் சொற்களாகிய, “கையில்
வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்
“இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்’ சகுனம். (வாய்ப்புள் - வாயிற்பிறந்த
நிமித்தச்சொல்.) பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை
முடிந்து அவர்கள் தந்த திறைப்பொருளுடன் வருவது உறுதி என்று பெருமுது பெண்டிர்
தாங்கேட்டுவந்த நற்சொற் கூறியும் தலைமகன் சென்றபோது நிகழ்ந்த நல்ல் நிமித்தத்தினையும்
உடன் எடுத்துக்காட்டி கூறுகின்றனர்.
மாயோய்! (மாந்தளிர் நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்” என்று
விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த தலைவிக்குக் கூறினர். அச்
சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும்
முத்துக்ககள் உதிர்ந்தன. இதனை,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப
என்ற அடிகள் விளக்குகின்றன.
(இனி, அடிகள் 24 முதல் 78 அடிகள் வரையிலான 45 அடிகள் வரையிலான பாட்டின்
பொருள் தலைமகன் பாசறையிலிருக்கும் நிலையினைக் கூறுகிறது. பகைமன்னர்
நாட்டிற்குச் சென்று போரிடும் மன்னர், படைவீரர்கள் மற்றும் மன்னர் தங்க
பகைப்புலத்தில் பாடிவீடு (தற்காலிகவீடு) அமைத்துத் தங்குவர். அப்பாடி வீட்டினுட்
பல்வகைப் படைகளும் இருப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்களுக்கு
இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு அமைக்கப்பட்டது குறித்தும் ஆசிரியர்
விரிவாகக் கூறுகின்றார்.)
பாசறையின் இயல்பு( 24 – 28 அடிகள்)
பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். அது காட்டாறு பாயும்
முல்லைநிலத்தில் இருந்தது. மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு
அமைக்கப்பட்டிருந்தது. வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச்
சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது. காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச்
சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.
யானைப் பாகரது செயல் (29-36 அடிகள்)
பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன.
தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த யானைகளுக்குக்
கரும்பையும் நெற்கதிர்களோடு கூடிய தழைகளையும் உணவாகத் தந்தனர்.
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம் கைப்ப
அவற்றை அந்த யானைகள் தன் கைகளால் வாங்கி உண்ணாமல் நெற்றிகளில் துடைக்கின்றன.
அவற்றை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் (அங்குசம்)
வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தனர்.
வீரர்கள் தங்கும் படைவீடுகள் (37-42 அடிகள்)
தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லில் துவைத்துக் கட்டும்
ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பணன் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்புக்
13
கூடும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர். அப்பாடி
வீடுகளில்,
அரசனுக்கு அமைத்த பாசறை (43-44 அடிகள்)
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு
தலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இருந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு
படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
மங்கையர் விளக்குகளை ஏந்துதல் (45-49) அடிகள்)
கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய
மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை, விளக்குகளில் ஊற்றிச் சுடர்
மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டு இரவினைப் பகலாக்கிக்
கொண்டிருந்தனர்.
மெய்காப்பாளர் செயல் (50-54 அடிகள்)
நள்ளிரவு நேரத்தை மணி ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி காற்றில்
ஆடுவது போல, முடி போட்டுப் போர்தத ் ியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர்
(மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்து கொண்டிருந்தனர்.
நாழிகைக் கணக்கர் செயல் (55-58 அடிகள்)
பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர்(பொய்யா மக்கள்)
கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “ உலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க்
கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று தெரிவித்தனர்.
மிலேச்சர் காவல் (59-66 அடிகள்)
வலிமையான யாக்கை(உடம்பு)யினையுமுடைய யவனர், புலிச் சங்கிலி விட்டுக் கைசெய்த
இல்லில்(தற்காலிகமாக அரசர் தங்கும் வீடு) அழகிய மணிவிளக்கினை ஒளிரச் செய்து வைத்து
வலிய கயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளன்றுமாக இரண்டறை வகுத்த
பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர்(பிறமொழி மட்டும் அறிந்தவர்)
அருகே காவலிருக்கின்றனர். அச்சமயம் அரசன் படுக்கையில் துயில் கொள்ளாது சிந்தனை
செய்தவாறு இருக்கின்றான்.
அரசனது சிந்தனை (68-76 அடிகள்)
பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு.
அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய
நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு
பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே
செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு
கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச்
சிந்தித்துக்கொண்டு,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை
முடியொடு கடகம் சேர்தத் ி, நெடிது நினைந்து
அரசன் பள்ளியில் கிடக்கின்றான்.
பாசறையில் வெற்றி முழக்கம் (77-79)
14
இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலையோடிருந்த தலைமகன் பின்னாளிற்
பகைவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச்
சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு
கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன்
பாசறை வீடடி் ல் இனிது துயில் கொள்கின்றான்.
(இனி, பாட்டின் ஒன்பதுஅடிகள் துயரமும் ஆறுதலும் கலந்த நிலையில் படுத்துக் கிடக்கும்
தலைமகளின் நிலையை எடுத்துரைக்கின்றது. (80-88 அடிகள்))
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்(80-88 அடிகள்)
இங்ஙனம், பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்தில்
காணாத தலைமகள் மிகவும் வருந்துகிறாள். முதுபெண்டிர் நற்சொற் கேட்டும் மனம் தேறாது
வருந்துகின்றவள், ’இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் தலைவன் நான் வரும் வரை
ஆற்றியிரு’ என்ற சொல்லைத் தவறியதாய் முடியுமே என நினைத்துப் பார்த்துத் தன்னைத்
தேற்றிக் கொள்கின்றாள். சுழன்று விழுகின்ற வளையைக் கீழே விழாமல் திருத்தியும், அறிவு
மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் ஒய்யென பெருமூச்சு விடுகின்றாள் . மாளிகையிற் பாவை
விளக்கு எரிய மாடத்தில் மழை விழும் ஓசை காதில் விழ இம்மாலைக் காலத்தில் படுக்கையிற்
கிடக்கின்றாள். இதனை, ”இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து” எனத் தொடங்கி
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் (80-88 அடிகள்)
வரை தலைவியின் வருத்தமும் தன்னைத்தானே தேற்றிக் கொள்வதும்
கூறப்படுகின்றன.
(இனி, அடி 89 முதல் இறுதி அடிகள் வரையில் இவ்வாறு, இருக்கும் தலைவியின்
அழகிய செவிகள் நிறையும்படியாக தலைவன் வெற்றியுடன் திரும்பி வருதலும் கார்கால
மழியினால் முல்லை நிலம் கவின் பெறுதலும் விளக்கப்படுகின்றன.)
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல் (90-93 அடிகள்)
அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின்
வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களின்
படையையும் தன் படையுடன் செர்த்துக்கொண்டு, வெற்றிக்கொடியை உயர்த்தியவண்ணம்
மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல் (94-100 அடிகள்)
காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. கோடல்
பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது.
இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.
அரசனது தேரின் வருகை (101-103 அடிகள்)
வள்ளிக் கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேரோட்டி, “வினை
விளங்கு நெடுந்தேர் பூண்ட” குதிரைகளை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.
1.2.3 முடிவுரை
இம் முல்லைப்பாட்டின் பொருளை அறிந்து கொண்ட நீங்கள், வினாவிற்கு விடை
தரும்போது மூல பாடத்தின் வரிகளை இணைத்துக் கருத்துகளை எழுதினால் கூடுதல்
மதிப்பெண்கள் பெறலாம். இப்பாட விளக்கத்தில் ஆங்காங்கே பாடல் வரிகள் பொருட்பகுதியில்
கொடுக்கப்பட்டுள்ளன அவ்வரிகளையும் பயன்படுத்தி விளக்கலாம்.
15
தன்முயற்சி வினாக்களும் விடைக்குறிப்புகளும்
1. முல்லைப்பாட்டின் பொருட்பாகுபாட்டினை விளக்கியுரைக்க.
தலைவியின் ஆற்றாமை – முதுபெண்டிர் தேற்றும் திறன் – தலைவன் பாசறை இருப்பு –
தலைவன் வெற்றியுடன் திரும்புதல் – தலைவியின் மனநிலை ஆகியன் விவரிக்கப்படுதல்
வேண்டும்.
2. முல்லைப்பாட்டில் தலைமகளின் பிரிவாற்றாமை குறித்து வரும் செய்திகளைத்
தொகுத்தெழுதுக.
வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிகின்றான் தலைவன் - கார்காலம் வந்தும்
அவன் வரவில்லை - தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். முதுபெண்டிர் விரிச்சி
கேட்டல் விளக்கம் – ஆய்மகள் செயல் – ஆற்றுவித்தும் புலம்பித் தலைவி தவிக்கும்
நிலையை எழுத வேண்டும்.
3. முல்லைப்பாட்டில் முதற்பொருள், உரிப்பொருள் அமைந்திருக்கும் விதத்தினை
விளக்கியுரைக்க.
முல்லைத்திணைக்குரிய முதற்பொருள் விளக்கம் – பெரும்பொழுது – கார்காலம்,
சிறுபொழுது மாலைக்காலம் – பாடலடிகள் 1 முதல் 6 வரைக்கான விளக்கம் – தலைவன்
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல் (அடிகள் 94-100) விளக்கம்.
4. முல்லைப்பாட்டு உணர்த்தும் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் குறித்து எழுதுக.
நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங் கேட்டு (முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்) அறியலாம்
என்று நம்பினர். - பகைவர் மேற்சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம் -
யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர் - அரசன்
போர்மேற் செல்லும் போது பெண்களும் கூடச்சென்று பாடிவீட்டில் அவனைப் பாதுகாத்தல்
- கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர் அவர்களை
நாழிகை கணக்கர் என்பர் - மிலேச்ச (அயல் தேசம்)தேயத்திலுள்ள ஊமைகளை
வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறை அவர்களைக் காவலாக இருத்திய
செய்திகளுக்கான விளக்கம் எழுத வேண்டும்.
5. போர்ப்பாசறையில் நடைபெற்ற செயல்களாக முல்லைப்பாட்டு கூறுவனவற்றைத்
தொகுத்தெழுதுக.
போர் வீரர்களுக்கு அமைக்கப்பட்ட இருக்கை – மன்னனுக்கு இரு அறைகளுடன் கூடிய
இருப்பிடம் - யானைப்பாகர் செயல் – மிலேச்சர் செயல் – நாழிகை கணக்கர் பொழுது
அறிவித்தல் – வாளேந்திய பெண்டிர் விளக்கேற்றுதல் – ஊமை மிலேச்சர் மெய்க்காவல்
பணி – இரவில் தலைவன் போர் குறித்து நெடிய நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருத்தல் -
6. முல்லைப்பாட்டில் காணலாகும் உவமைகளைத் தொகுத்தளிக்க.
முல்லைப்பாட்டு உவ்மைகள் காணப்படும் வரிகளும் அடிகளும் கொடுக்கப்பெற்றுள்ளது.
அதன் விளக்கத்துடன் மாணவர் எழுதப் பழக வேண்டும். நீர்செல நிமிர்ந்த மாஅல்
போல’(3)- யாழிசை இனவண்டு ஆர்ப்ப’(8) -பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’(23)
-கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல் அசைநிலை கடுப்ப”(37-38) -அதிரல்
பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு துகில்முடித்துப்
போர்த்த தூங்கல் ஓங்குநடைப் பெருமூ தாளர் ஏமம் சூழ (51-54) -வேழத்துப் பாம்பு
பதைப்பன்ன பரூஉக்கை துமிய’ (69-70) -‘ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி’ (84)
-‘செறியிலைக் காயா அஞ்சனம் மலர’ -முறியிணர் கொன்றை நன்பொன் கால’ -கோடல்
குவிகை அங்கை அவிழ’ -தோடுஆர் தோன்றி குருதி பூப்ப’ (96).
16
7. முல்லை அகவொழுக்கத்துடன் வஞ்சி புறவொழுக்கம் பொருந்துமாற்றினை விவரிக்க.
முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம்.
'வஞ்சி தானே முல்லையது புறனே' என்பர் தொல்காப்பியர். வஞ்சி என்பது ஓர் அரசன்
நாடைக் கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வதாகும். வஞ்சித்திணை
முல்லைத் திணைக்குப் புறனானவாறு எவ்வாறு எனில், மனைவி தன் காதலனைப்
பிரிந்து மனையின்கண் இருப்பது போல, அவள் கணவனும் அவளைப் பிரிந்து
பாடிவீட்டின்கண் இருப்பன். இரண்டாவதாக தலைமகள் வீடு காட்டின்கண் இருப்பது
போலப் பாடிவீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும்
முல்லையும் வஞ்சியுந் தம்முள் பொருந்துமாறு ஆயின என்க.
அலகு 1, பகுதி-2.
பட்டினப்பாலை
மாணவர் பெறும் திறன்
1. பாலைத்திணையின் பிரிதல் நிமித்தமாகிய(தொடர்பான) பொருண்மையில்
பாடப்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளுதல்.
2. ஒரு புறப்பாடலை அப்பாட்டில் ஏழு அடிகளில் அகச் செய்திகளை அமைத்து இந்நுலினை
அகப்பாடலாக ஆசிரியர் மாற்றிய நுட்பத்தினை அறிந்து இன்புறுதல்.
3. பழந்தமிழர் வாழ்வு முறைகள், பண்டமாற்று வணிக முறை, வரிவிதிப்பு , பழக்க
வழக்கங்களை படித்து உணர்ந்து கொள்ளுதல்.
17
பாடம் நான்கு
பட்டினப்பாலை நூல், நூலாசிரியர் அறிமுகம்
1.4.0. முன்னுரை
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய
ஒரு நூல். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின்
சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை
ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகத்துறையில் சோழநாட்டினையும் சிறப்பையும் அந்நாட்டின்
தலைவனான் கரிகாலனின் சிறப்பையும் இணைத்துப் பெரும்பான்மை வஞ்சியடிகளும் ஆசிரியமும்
கலந்து வரைந்த பனுவல் ஆகும். இந்நூல், 301 அடிகளைக் கொண்டது. கரிகாலன்
இப்புலவருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தன். மேலும், கடியலூரில் ஆயிரம்கால்
மண்டபம் ஒன்றையும் கட்டுவித்தான்.
1.4.1. பட்டினப் பாலை: நூற் பெயர்க்காரணம்
"இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப்
பட்டினப்பாலை என்று பெயர் கூறினார். மேலும், பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கூறுவது. இப்பாட்டு, வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது”
என்று உரிப்பொருள் ஒழுக்கத்தால் பட்டினப்பாலை என்னும் பெயர் பெற்றது என்பர் உரையாசிரியர்
நச்சினார்க்கினியர்.
கரிகால் பெருவளத்தானைப் பாடியிருப்பதாலும் இப்பாடலில் பிரிதல் என்னும் பாலை
உரிப்பொருளே பாடப்பட்டுள்ளதாலும் காவிரிபூம்பட்டினம் என்னும் சுருக்கமான பட்டினம் என்பது
பாலை உரிப்பொருளோடு இணைந்து பட்டினப் பாலை ஆயிற்று. ஆசிரியப்பாவில் அமைந்த
இப்பாடல் அடிகளில் இடையிடையே வஞ்சி அடிகளும் விரவி வருதலால் வஞ்சி நெடும்பாட்டு
என்றும் இதனை அழைப்பர்.
18
1.4.2. பட்டினப்பாலை உரைகள்
ரா.ரகவையங்கார், பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும், அண்ணாமலைப்
பலகலைக்கழகம் வெளியீடு, 1951.
1.4.3. பட்டினப்பாலை சிறப்புகள்
பழங்காலத் தமிழகத்தின் நகர வாழ்க்கைச் சிறப்பிற்குச் சான்றாக அமைகின்றது
இந்நூல். அக்காலத்தி ஓங்கியிருந்த வாணிகம், துறைமுகச் சிறப்பு, வெளிநாட்டார் வருகை,
துறைமுக ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள், சோழ்னின் சுங்க வரி விதிப்பு முரை, பல்வகைத்
தொழில்கள் போன்றவை பாடலுக்கு அணி சேர்க்கின்றன. பண்டைத் தமிழ் உழவர்களின் இயல்பு,
வணிகர்களின் நேர்மை மற்றும் ஒவ்வொரு செயலுக்குமான கொடிகள் அணி செய்யும் விதம்
ஆகியன சிறப்பாக விளக்கம் பெறுகின்றன.
1.4.4. தொகுப்புரை
கரிகால் பெருவளத்தான் என்னும் சங்க கால அரசனின் இளமைக்கால அரசியல்
வாழ்க்கையும் அவனது போர் வெற்றிகளும் மற்றும் குளம் தொட்டு நாடாக வளம் பெருக்கிய
திறனும் இந்நூலில் விதந்து பேசப்படுகின்றன. கரிகாலன் ஆண்ட காவிரிபூம்பட்டினம் அன்றைய
துறைமுக நகரமாக விளங்கியதும் அத்துறைமுக நகரின் பல்வேறு பரிமாணங்களையும்
ஆசிரியர் விரித்துக் கூறுகிறார்.
19
பாடம் ஐந்து
1.5.0. முன்னுரை
செலவழுங்குதல் என்னும் துறையில் அமைந்த இப்பாடல், பாலையின் உரிப்பொருளாகிய
பிரிதல் நிமித்தம் குறித்து பேசுகிறது. தலைவன், தன் நெஞ்சிடம், நெஞ்சே, அளவற்ற
செல்வவளம் மிகுந்த காவிரிப்பூம்பட்டினத்தையே பரிசாகத் தருவதாக இருந்தாலும் தலைவியின்
கூந்தலை விட்டுப் பிரிய மாட்டேன் ஏனெனில், திருமாவளவன் பகைவர்க்கு எதிராக ஓங்கிய
வேலை விடக் கொடியது நாம் செல்லக் கருதிய காட்டு வழி என்று கூறுவதாக அகப்பொருள்
நுதலியதாக இப்பட்டினப்பாலை பிரிதல் நிமித்தம் குறித்துப் பேசுகிறது. இப்பாடற் தொடரில்
அமைந்த அளவற்ற செல்வம் உடைய காவிரிப்பூம்பட்டினம் என்பதை விளக்கவந்த ஆசிரியர்
முதல் 217 அடிகளில் காவிரிப்பும்பட்டினச் சிறப்பினை எடுத்துக் கூறுகிறார். அடுத்த இரண்டரை
அடிகளில் தலைவன் தன் நெஞ்சுக்கு உரைத்த செய்தியைக் கூறுகிறார். இதனை அடுத்து, 220
முதல் 299 வரையிலான அடிகளில் திருமாவளவன் பகைவர்க்கு ஓங்கிய வேலின் திறத்தினை
விளக்குமுகனாக திருமாவளவன் தாயம் பெற்ற வர்லாறு, பகைமுடிக்கும் திறன், போர்
வெற்றிகள், காட்டை நாடாக்கிய திறன் ஆகியன் விரிவாய் விளக்குகிறார் ஆசிரியர் . இறுதி 3
அடிகளில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய மாட்டேன் என்பதற்கான காரணத்தினை
எடுத்துரைப்பார்.
1.5.1. பட்டினப்பாலை கட்டமைப்பு
1. சோழ நாடு, நகர வருணனை (1-217 அடிகள்)
1.1. காவிரியின் பெருமை
1.2. மருத நிலத்தின் வளமை
1.3. காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
1.4. விளையாட்டுக் களத்தில் மறவர்களின் விளையாட்டு
1.5. ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
1.6. செல்வ வளம் நிறைந்த வீதிகள்
1.7. உழவர்களின் நல் இயல்புகள்
1.8. வணிகர் குடிச்சிறப்பு
2. கரிகால் சோழனின் பெருமையும் போர்ச்சிறப்பும் (220-301 அடிகள்)
2.1. திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
2.2 போர் வெற்றிகள்
2.3. போரினால் மருத நில வளம் அழிதல்
2.4. ஊர் அம்பலம், பொது மன்றம், இல்லங்கள்
2.5. வளம் பெருக்கிய வளவன்
2.6. தலைவன் தலைவியைப் பிரியாமைக்கான காரணங்கள்
1.5.2. பட்டினப்பாலை பொருட் சுருக்கம்
தலைவன், பொருள் தேடும் முயற்சியில் அயல்நாடு செல்ல விழைகின்றான். தலைவி தம்
பிரிவாள் துயருவாள் என்று அச்சமயம் அவனுக்குக் கவலை ஏற்படுகிறது. தலைவிக்குத்
தன்னால் துயரம் உண்டாகக் கூடாது என்று எண்ணுகிறான். அந்நிலையில் தன் நெஞ்சிற்குக்
கூறியனவாக அமைகின்றது இப்பாடல், நெஞ்சமே, செல்வம் மிகுந்த காவிரி பூம்பட்டினத்தையே
யான் பெறுவதாக இருந்தாலும் வெளியூர்ப் பயணம் வரமாட்டேன். பொருள் தேடுவதற்காக நாம்
கடந்து செல்லும் காட்டுப்பாதை கொடுமையானது. சோழன் கரிகாலனின் பகைவர்க்கு
அச்சத்தைத் தரும் வேலைவிடக் கொடுமையானது. நாம், நீங்க நினைக்கும் தலைவியின்
20
தோள்களோ வேலைக் காட்டிலும் தண்மையானவை. ஆகவே, இவளைப் பிரிந்து வெளியூர்
வரமாட்டேன் என்று கூறுவதாகப் பாடல் அமைகிறது.
1.5.4. தொகுப்புரை
இப்பாடத்தில் பட்டினப்பாலை ஆசிரியர் பொருள் கூறும் திறத்தினை உணரலாம் . மேலும்
பட்டினப்பாலையின் பாடல் கட்டமைப்பு அமைந்த விதம், பாடலின் மையக் கருத்தின் சுருக்கம்
ஆகியன விளக்கப்பட்டுள்ளன. புறப்பாடலுக்கே உரியதொரு பொருண்மையைத் தலைவன்
செலவழுங்குதல் என்னும் அகத்துறையாக படிப்பவர் உணரும்படி செய்த இந்நூலாசிரியர்
கடியலூர் உருத்திரங்கண்ணனின் புலமைத் திறனைப் படித்து இன்புறுவோமாக.

பாடம் ஆறு
1.6.0. முன்னுரை
இப்பாடம் பட்டினப்பாலையின் 301 அடிகளின் பொருட்கருத்தும் கோர்வையாக
விவரிக்கின்றது. பாடத்தின் மையக்கருத்து விலகாமல் பாடலுக்கான விளக்கம் கருத்துரையாக
வழங்கப்பட்டுள்ளது. மையக் கருத்தினை ஒட்டிச் சிறப்பான தொடர்கள் இடையிடையே
கூறப்படுவது மாணவர்கள் தேர்வுக்கு விடை எழுத உதவியாக இருக்கும்.
பட்டினப்பாலை மூலம்
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்;
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்,
தீத் தெறுவின் கவின் 10
வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், 15
கோள் தெங்கின் குலை வாழைக்,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின் இணர்ப், பெண்ணை,
முதல் சேம்பின் முளை இஞ்சி;
அகல் நகர் வியன் முற்றத்துச் 20
சுடர் நுதல் மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்,
21
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன்வழி விலக்கும், 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாக்,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக்,
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு,
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, 30
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை;
மழை நீங்கிய மா விசும்பின்,
மதி சேர்ந்த மக வெண்மீன் 35
உருகெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை,
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரிப்;
புலிப் பொறி போர் கதவின் 40
திருத்துஞ்சும் திண் காப்பின்;
புகழ் நிலைஇய; மொழி வளர;
அறம் நிலைஇய; அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி; 45
ஏறு பொரச் சேறு ஆகித்;
தேர் ஓடத் துகள் கெழுமி;
நீறு ஆடிய களிறு போல;
வேறுபட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டு;
தண் கேணி தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்,
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் 55
மா இரும் பெடையோடு இரியல் போகிப்,
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்;
முது மரத்த முரண் களரி,
வரி மணல் அகன் திட்டை, 60
இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலி மாக்கள்,
22
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமை புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும், 65
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு,
நாள்மீன் விராய கோள்மீன் போல,
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், 70
பெருஞ்சினத்தான் புறங்கொடாது,
இருஞ்செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை;
பறழ்ப் பன்றி பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாடக்;
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடுகல்லின் அரண் போல,
நெடும் தூண்டிலில் காழ், 80
சேர்த்திய குறுங்கூரைக் குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்;
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்துத் தண் பூங்கோதையர், 85
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்,
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்,
புன்தலை இரும் பரதவர் 90
பைந்தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து உண்டு ஆடியும்;
புலவு மணல் பூங்கானல்,
மா மலை அணைந்த கொண்மூ போலவும், 95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடலால் ஆடியும்,
மாசு போக புனல் படிந்தும், 100
அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்,
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்,
23
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை;
துணைப் புணர்ந்த மட மங்கையர்,
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், 110
நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்,
வெண்ணிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான்;
மாஅ காவிரி மணம் கூட்டும்,
தூஉ எக்கர்த் துயில் மடிந்து,
வால் இணர் மடல் தாழை
வேலாழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும், 120
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறைபடாது;
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங்கடிப் பெருங்காப்பின்
வலிவுடை வல் அணங்கினோன்,
புலி பொறித்து புறம் போக்கி, 135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்,
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்;
குறுந்தொடை, நெடும் படிக்கால்,
கொடும் திண்ணைப் பஃறகைப்பிற்,
24
புழை வாயில் போகு இடை கழி
மழை தோயும் உயர் மாடத்துச்,
சேவடிச் செறி குறங்கின்,
பாசிழைப் பகட்டு அல்குல்,
தூசு உடைத் துகிர் மேனி,
மயில் இயல் மான் நோக்கின்,
கிளி மழலை மென் சாயலோர், 150
வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன,
செறி தொடி முன் கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் , 155
குழல் அகவ யாழ் முரல,
முழவு அதிர முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து;
மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்;
வருபுனல் தந்த வெண்மணல் கான் யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்,
கூழுடை கொழு மஞ்சிகைத்
தாழுடைத் தண் பணியத்து,
வால் அரிசிப் பலி சிதறிப், 165
பாகு உகுத்த பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்,
மேல் ஊன்றிய துகில் கொடியும்,
பல் கேள்வி துறை போகிய
தொல் ஆணை நல்லாசிரியர், 170
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்;
வெளில் இளக்கும் களிறு போலத்,
தீம் புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்;
மீன் தடிந்து விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்,
நறவு தொடைக் கொடியோடு,
பிற பிறவும் நனி விரைஇப்,
பல் வேறு உருவின் பதாகை நீழல்,
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்,
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
25
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185

காலின் வந்த கருங்கறி மூடையும்,


வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்,
கங்கை வாரியும் காவிரிப் பயனும், 190
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்;
நீர் நாப்பண்ணும், நிலத்தின் மேலும்,
ஏமாப்ப இனிது துஞ்சிக், 195
கிளை கலித்துப் பகை பேணாது,
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்,
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்,
கொலை கடிந்தும் களவு நீக்கியும்,
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும், 200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடும் மேழி நசை உழவர்;
நெடு நுகத்துப் பகல் போல,
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்,
கொள்வதூஉம் மிகை கொடாது, கொடுப்பதூஉங் குறைகொடாது, 210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி துவன்று இருக்கைப்;
பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்,
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, 215
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்,
வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன்! வாழிய நெஞ்சே! கூர் உகிர்க்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப்,
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழி கொன்று,
பெருங்கை யானை பிடிப் புக்காங்கு,
26
நுண்ணிதின் உணர நாடி நண்ணார், 225
செறிவுடைத் திண் காப்பு ஏறி வாள் கழித்து,
உருகெழு தாயம் ஊழின் எய்திப், (220-227)
பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர்
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடைக் கருந்தலை புரட்டும் முன் தாள் 230
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
வடி மணிப் புரவியொடு வயவர் வீழப்,
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப,
தூறு இவர் துறுகல் போலப் போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப், 235
பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்
மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க,
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கித்
தலைதவச் சென்று தண் பணை எடுப்பி,
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி, 240
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி,
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச்,
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்,
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி,
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப் 250
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்,
அரு விலை நறும் பூத் தூஉய்த் தெருவின்,
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த,
திரி புரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்,
பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச், 255
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிப்பவும்,
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்,
கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப்
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்,
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி,
விருந்து உண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்,
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து,
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்த்
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇக், 265
27
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட,
உணவு இல் வறுங்கூட்டு உள் அகத்து இருந்து,
வளைவாய்க் கூகை நன் பகல் குழறவும்,
அருங்கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான், மருங்கு அற 270
மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே,
வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன், எனத்
தான் முன்னிய துறை போகலின்,
பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப, 275
வடவர் வாடக், குடவர் கூம்பத்,
தென்னவன் திறல் கெடச் சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்
மாத்தானை மற மொய்ப்பின்,
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப், 280
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்,
காடு கொன்று நாடாக்கிக்,
குளம் தொட்டு வளம் பெருக்கிப்,
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக், 285
கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇப்,
பொருவேம் எனப் பெயர் கொடுத்து,
ஒருவேம் எனப் புறக்கொடாது, 290
திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப, தன் ஒளி மழுங்கி,
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத, பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய, 300
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய தட மென்தோளே!

1.6.1. பட்டினப்பாலை பாடப்பொருள் விளக்கம்


(வசையில்புகழ் வயங்குவெண்மீன் எனத் தொடங்கி, முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
எனுந் தொடர் வரை முதல் 217 அடிகள் ஒரு கருத்தினை வலியுறுத்துவது. இதனுள், காவிரியின்
சிறப்பு, சோழ நாட்டு நகர வருண்ணனி, காவிரி பூம்பட்டினச் சிறப்பு, ஆகியன விதந்து
பேசப்படுகிறது. இத்தகைய, அளவற்ற செல்வம் நிறந்த காவிரிபூம்பட்டினமே பெறுவதாக
இருந்தாலும் நெஞ்சே, தலைவியை விட்டு நீங்கி நான் பொருளீட்ட வரமாட்டேன் என்று கூறும்
தலைவன் செலவழுங்கும் திறம் கூறப்படுகிறது.)
காவிரியின் சிறப்பு (1 – 7 அடிகள்)
குற்றம் இல்லாத, புகழையுடைய, விளங்குகின்ற வெள்ளி என்ற கோள், திசை மாறி, தான்
நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் சென்றது. இதனால்,
28
நீர்த்துளிகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் வானம்பாடி வருந்துமாறு, மழை பெய்யாது
பொய்த்து நின்றது. எனினும், தான் பொய்யாது, குடகு மலையின்கண் துவங்கி, கடலில் புகும்
காவிரி ஆறு. அது தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும். புலவர்,
காவிரியின் சிறப்பினை விளக்கும்போது,
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
எனப் பாடுகின்றார்.
சோழ நாட்டு மருதநில வளன்
விளைச்சல் நீங்காத அகன்ற வயல்களில் விளந்த கரும்பின் பாகைக் காய்ச்சும்
ஆலைகளில் நெருப்பின் புகை எழுகிறது. அதனால், வயல்களில் உள்ள நீண்ட நெய்தல் மலர்கள்
அழகு கெட்டு வாடுகின்றன. அவ்விடத்தில், காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற எருமைக்
கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். என்பதை,
ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்,
என்று ஆசிரியர் அழகுற விளக்குவர். இம்மருத நிலத்தில் தென்னை, வாழை, கமுகு, மஞ்சள்,
மாமரம், பனை சேம்பை மற்றும் இஞ்சி ஆகியன குலைகளாகக் காய்த்தும் பூத்தும்
காணப்படுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
பெரிய இல்லத்தின் முற்றத்தில், நேர்த்தியான அணிகளை அணிந்த பெண்கள், காய
வைத்த உணவை உண்ண வரும் கோழிகளை விரட்ட தம் காதுகளில் உள்ள காதணிகளை கழற்றி
விரட்டுவர். அக்காதணிகள், பொன்சிலம்பணிந்த சிறுவர்கள் மூன்று சக்கரச் சிறிய தேரினை
ஓடவிடாமல் தடுத்து நிற்கும். இவ்வாறு தடுக்கும் பகை அன்றி வேறு மனம் கலங்கும் பகையை
அறியாத பெரிய பல குடிகளையுடைய செழிப்புடைய கடற்கரை ஊர்கள் அத்தகைய பல ஊர்கள்
அடங்கிய சோணாடு எனச் சுட்டுவதை,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும், 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (22-27)
இத்தகைய செழுமையான சிற்றூர்கள் பலவற்றைக் கொண்டது சோழநாடு.
காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள்
இச்சோழ நாட்டில், கடற்கரையின் விளைந்த கரையில் வெள்ளை உப்பின் விலையைக்
கூறி பண்டமாற்றாகப் பெற்ற நெல்லுடன் வந்த படகுகள், பந்தியில் நிற்கும் குதிரைகள்
கட்டப்பட்டிருப்பது போல் உப்பங்கழியில் கட்டப்பட்டிருக்கும். இவ் உப்பங்கழியைச் சூழ்நத

தோட்டங்களையும், செழிப்பையுடைய தோப்புக்களையும், அவற்றிற்குப் புறமாக உள்ள
பூஞ்சோலைகளையும் (பூந்தண்டலை, உடையது. மேலும், மேகம் இல்லாத அகன்ற வானில்
நிலவைச் சேர்ந்த மகம் என்ற விண்மீனைப் போன்று, பெரிய வடிவுடைய உயர்ந்த
கரைகளையுடைய, அருகில் மணம் பொருந்திய மாறுப்பட்ட மலர்கள் நிறைந்து ஓவியம் போன்று
29
அழகாக விளங்கும் ஒளியுடைய பொய்கைகள் மற்றும் இம்மை மறுமைக்கு இன்பம் தருகின்ற
இணை ஏரிகளையும் உடையது.
காவிரிப்பூம்பட்டினத்து அட்டில் சாலைகள்(40 – 50)
புலிச் சின்னத்தையுடைய இணைக்கப்பட்ட கதவுகளையுடைய, செல்வம் தங்கும்
திண்மையான மதிலை உடையவாக, புகழும் அறமும் நிலைபெறுமாறு, சமையல் அறைகளில்
வடித்தச் சோற்றுக் கஞ்சி, ஆற்றினைப் போலப் பரந்து தெருவில் ஓடுகிறது. அங்கு காளைகள்
போரிடுவதால் அக்கஞ்சி, சேறு ஆகிறது. அச்சேறு மீது தேர் ஓடும்போது அரண்மனைச் சுவரில்
தூசி படிகிறது. அத்தூசி, விளையாடிய ஆண் யானை மீது புழுதி படிந்ததைப் போல படிந்தது.
காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும் வேள்விச்சாலையும்
மேலும், தண்(குளிர்ச்சி) பொருந்திய கேணிகளையும் பகட்டெருத்தின் பல
கொட்டில்களையும் தவமிருக்கும் முனிவர்கள் இருக்கும் இடங்களையும் உடையது.
இம்முனிவர்கள் வளர்க்கும் தவவேள்வியினால் எழும் நறும்புகையை வெறுத்துக்
ஆண்குயில்கள் தன் இணையுடன் விலகிப் போய், பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல்
காக்கப்பட்ட ஊரில், தங்கியுள்ள புறாக்கள் ஒதுங்கி இருக்குமிடம் சேரும். இதனை,
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் (55-58)
என்ற அடிகள் விளக்கி நிற்கும்.
30
மக்களின் விளையாட்டுக்கள்
(இனி, பூம்பட்டினத்தில் வாழும் மக்கள் விளையாட்டுகளை 26 அடிகளில் விளக்குவர்)
விளையாட்டுக் களத்தில் மறவர் செயற்பாடுகள் (59-74)
போரிடும் களத்தின்(முரண் களரி), மணல்மேடுகளில், பெரிய உறவினர் மற்றும் சுற்றத்தார்
கூடி நிற்பர். அக்கூட்டத்துள், வலிமையான மறவர்கள், கடலில் உள்ள இறால் மீனின் தசையைச்
சுட்டுத் தின்றும், வயலில் உள்ள ஆமையின் தசையை வேக வைத்து தின்றும், மணலில் உள்ள
அடும்பின் மலர்களை அணிந்தும், நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களைச் சூடியும் மகிழ்வர்.
இம்மறவர்கள் கூட்டமானது, நீல நிறத்தை உடைய வானத்தில் வலது புறமாக எழுந்து திரியும்
நாள் மீன்களுடன் கலந்த கோள் மீன்கள் போல காணப்படுவர். மேலும் இம்மறவர்கள் ஒருவரொடு
ஒருவர் கையாலும் ஆயுதங்களாலும் புற முதுகு காட்டி ஓடாது போர் செய்வர். இப்பகைமை
உடைய வலிமையான மறவர் கற்களை வீசும் கவணுக்கு பறவைகள் அஞ்சி, அங்கிருந்து நீங்கிப்
பனை மரங்களை அடையும்.
அடுத்து, காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு குடியிருப்பு (75-77) விவரிக்கப்படுகிறது.
இதனை,
பறழ்ப் பன்றி, பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச்சேரி,
ஏழகத் தகரொடு சிவல் விளையாட (75-77)
என்று அடிகள் விளக்குகின்றன. அதாவது, குட்டிகளையுடைய பன்றிகளும், பல வகையான
கோழிகளும், ஆட்டின் கிடாய்களும் கவுதாரிகளும் விளையாடுகின்ற
கடற்கரையில் பகல் விளையாட்டு உறைகிணற்றை உடைய குடியிருப்பு விவரிக்கப்படுகிறது.
பரதவர்களின் இருப்பிடம்(78-83)
பரதவர்களின் குடியிருப்புகளில் உள்ள நடுகல்லைச் சுற்றிக் கேடயங்களை வரிசையாக
வைத்தும் வேலை நட்டும் அரணைப் போல அமைக்கப்பட்டு இருந்தது. தூண்டில் கோல்
இல்லங்களின் கூரையில் செருகப்பட்டுள்ளது. அதன் நடுவில், நிலவில் உள்ள இருளைப் போல
மீன் பிடிக்கும் வலை காயும் மணல் நிறைந்த முற்றங்கள் உள்ளன.
பூ மலி பெருந்துறை வருணனை(94-105)
புலால் நாற்றமுடையதும் மலர்ச்சோலைகளையுமுடைய கடற்கரையில்,
மாமலை யணைந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும் புகார்முகம். இப்புகார்முகத்தில், தீமை
நீங்க கடலில் விளையாடியும், கடலில் விளையாடியதால் உடலில் பட்ட உப்பை நீக்க ஆற்று நீரில்
குளித்தும், நண்டுகளை விரட்டி விளையாடியும், வலிமையான அலைகளில் விளையாடியும்,
மணல் பொம்மைகளைச் செய்தும், ஐம்பொறிகளை நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல்
முழுக்க மக்கள் விளையாடினார்கள். அவர்களுடைய மகிழ்ச்சி, தேவலோகத்தில் உள்ள
மகிழ்ச்சியைப் போன்றது.
காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள் (106- 115)
இக்காவிரிப் பூம்பட்டினத்து மங்கையர் நண்டைப் பிடித்தும்(அலவன் ஆட்டுதல்)
உரவுத்திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் அகலாக் காதலொடு பகல் முழ்தும்
விளையாடினர்.
மங்கையர் இரவில் துயிலும் நிலை (106- 115)
31
பெண்கள், தங்கள் கணவருடன் கூடித் தாங்கள் அணிந்திருந்த பட்டு ஆடையை நீக்கி,
வெண்மை ஆடை சூடினர். மேலும், கள்ளை நீக்கி மதுவைக் குடித்தும், கணவர்கள் சூட
வேண்டிய மலர்க் கண்ணியை மகளிர் சூடவும், பெண்களின் மாலையை ஆண்கள் அணியவும்
செய்தனர். மீன் பிடிக்கும் பரதவர்கள் உயர்ந்த தூண்கள் உடைய மாடங்களில் உள்ள ஒளியுடைய
விளக்குகளை எண்ணினர். மக்கள்,
பாடல் ஓர்ந்தும், நாடகம் நயந்தும்,
வெண் நிலவின் பயன் துய்த்தும்,
கண் உறங்குவதற்கு காரணமான இரவு நேரம்.
32
வரி வசூலிப்போர் தன்மை(116-125)
பெரிய காவிரியாறு மலர்களின் மணங்களைக் கூட்டும் கடற்கரை மணலில் துயின்று,
கடற்கரையின்கண் உள்ள தெருவில், மன்னனின் பொருட்களைக் காக்கும் சுங்க வரி வசூல்
செய்பவர்கள், கதிர்களையுடைய கதிரவனின் தேரில் கட்டப்பட்ட குதிரைகளைப் போல,
நாள்தோறும், சோம்பல் இல்லாது சுங்க வரி(உல்கு)யைக் குறையாமல் செய்தனர்.
பண்டகசாலை முற்றம்(முன்றில்) ( அடிகள் 126-141)
கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும், நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும், அளந்து அறிய
முடியாத பல பொருட்கள் எல்லை இல்லாது வந்து குவிந்து கிடக்கிறது. இக்காட்சியானது,
பருவமழை பொழியும் காலத்தில் முகில்(மேகம்), கடலிலிருந்து முகந்த நீரை மலைமேல்
பொழியவும் மலையில் விழுந்த மழைநீரை ஆறுகள் மூலம் கடலில் கொண்டு சேர்ப்பது போன்று
காணப்படுகிறது. இதனை,
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியா பல பண்டம்
என்று அளவற்ற பண்டங்களின் அளவு(வரம்பு) குறித்துப் பாடுகிறார் புலவர். அப்பண்டக
சாலையில், புறத்தில் வைத்த விலை நிறைந்த பல்வேறு பண்டங்களைக் கட்டி வைத்த
மூட்டைகளில் வலிமையும் அதிகாரமுடைய அதிகாரி ஒருவன், சோழ மன்னனுக்குரிய புலிச்
சின்னத்தைப் பொறிக்கின்றான். மழைமேகங்கள் விளையாடும் மலையுச்சியிலும் மலையிடைப்
பிளவுகளிலும் வருடை என்னும் வரையாடு ஏறி விளையாடுவது போல வேட்டையாடும் ஆண்
நாய்களும், முட்டித் தாக்கும் செம்மறியாட்டுக் கடாக்களும் முற்றங்களில் அடுக்கியுள்ள
மூட்டைகளின் மேல் ஏறித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
33
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
மாளிகை அமைப்பு (142 – 145)
அணுகிய படிகளையுடைய உயரமான படிக்கட்டுக்களையுடைய வளைந்த
திண்ணைகளையும், பல அறைகளையும், சிறிய வாயில்களையும், பெரிய வாயில்களையும்,
இடைவழிகளையும் உடைய, முகிலைத் தொடும் உயர்ந்த மாடம். அம்மாடத்தில் காற்று வரும்
சாளரம் வழியாக நோக்கிய, சிவந்த அடியையும், நெருங்கிய தொடையையும், புதிய
அணிகலன்களையும், அகன்ற அல்குலையும், தூய்மையான உடையையும், பவளம் போன்ற
உடலையும், மயிலின் இயல்பையும், மானின் பார்வையும், கிளியின் மழலையும், மென் சாயலையும்
கொண்ட பெண்கள்,
விழா நீங்காத கடை வீதி(146- 158)
காந்தள் மலர்களின் அழகிய இதழ்களைப் போன்று உள்ள தங்களுடைய வளையல்
அணிந்த கைகளைக் கூப்பி வணங்கினார்கள். முருகனுக்காக வெறியாட்டம் ஆடிய
பெண்களின் பாடலில் இணைந்து புல்லாங்குழல் ஒலிக்க, யாழ் இசைக்க, முழவு முழங்க, முரசு
முழங்க எடுத்த நீங்காத விழாக்களை உடைதாக உள்ள அகன்ற கடைவீதி. அக்கடைத்தெருவில்
ஒத்திசையின் எதிரொலி. அழகியர் வெறியாடிய நடனத்தின்போது குழலின் ஒலி அகவலோசைப்
பாடல்போல் அகவிற்று. யாழின் ஒலி வண்டிசைப்பது போல் இருந்தது. முழவின் ஓசை அதிர்ந்தது.
முரசின் ஓசை ஏதோ சொல்வதுபோல் இருந்தது. இந்த விழா முழக்கத்தின் ஒலி
கடைத்தெருவெங்கும் முழங்கிற்று. இதனை, குழலகவ யாழ்முரல, முழவதிர முரசியம்ப, விழவு
அறா வியன் ஆவணம் என்று ஆசிரியர் கூறுவர்.
பல்வேறு கொடிகளின் காட்சி
பழங்காலத் தமிழகத்தில் கோவில்கள், விழாக்கள், கடைகள் ஆகியனவற்றை அறியும்
பொருட்டுப் பல்வேறு வகையான கொடிகளை நட்டு வைத்துள்ளனர். அக்கொடிகளைக் கண்டு
அவ்விடத்தின் இயல்பைப் பழங்காலத்தில் அறிந்தனர்.
தெய்வக்கொடி(159-160)
குற்றம் இல்லாத சிறப்புடைய தெய்வம் இருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாசலில்
பலரால் தொழப்படும் கொடிகள்.
வீர வணக்கக் கொடி (161- 168)
சந்தனக் குழம்பால் மெழுகிய இடத்தில், தாழ விரித்த துணியின் மீது உள்ள வெள்ளை
அரிசியைப் பலியாகத் தூவி இருந்தனர். அங்கு ஊன்றிய வேலின் மீது உள்ள கவிழ்த்தப்பட்ட
கேடயங்களுக்கு மேலே இருந்த, துணியால் செய்யப்பட்ட கொடிகள்.
சொற்போர் கொடி(169-171)
பல கேட்டல் துறைகளில் அறிவு பெற்ற பழைய ஆணையையுடைய நல்ல ஆசிரியர்கள்,
வாதம் செய்வதற்கு உயர்த்திய அஞ்சுவதற்கு காரணமான கொடிகள்.
நாவாயில்(கப்பல்) கட்டப்பட்ட கொடிகள்
கட்டப்பட்டிருக்கும் களிறு போலப் புகார்த் துறைமுகத்தில் அசைந்தாடிக்
கொண்டிருக்கும் நாவாயின் உச்சியில் கொடி கட்டப்பட்டிருந்தது.
கள் விற்பனை கடையில் கொடி(176-180)
மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ மலர் சிதறிப்
34
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு
மீனை வெட்டி, இறைச்சியை அறுத்து, அந்த தசையைப் பொரிக்கும் ஒலியையுடைய,
பலர் புகும் கள் கடையின் முற்றத்தில், மணலைக் குவித்து மலர்களைச் சிதறிப் பலியைக்
கொடுக்கும் கதவுகள் அருகே உள்ள கொடிகள்.
பல் கொடி விளங்கும் பட்டினம்(181-183)
மேலும், வேறு பிற கொடிகளும், மிகவும் நெருங்கி, பல்வேறு உருவங்களில் இருந்தன.
அந்தக் கொடிகளினால், கதிரவனின் கதிர் நுழைய முடியாதபடிக் காவிரிப்பூம்பட்டினத்துத்
துறைமுக நகரம் விளங்கியது.
பூம்புகாரின் வீதிகளில் நிறந்திருக்கும் பொருள்களின் வளம்(184-193)
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும்.
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு
என்னும் பத்து அடிகளானும் பூம்புகார்(புகார்) நகர வீதியின் செல்வ வளம்
வருணிக்கப்படுகிறது. அவ்வீதிகளில், அயல்தேசங்களிருந்து கடல் மூலமாக குதிரைகள்,
உள்நாட்டு வணிகர்களின் கரிய மிளகு மூட்டைகள் காணப்பட்டன. வட மலையில் விளைந்த
பொன்னும், குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும் நிரம்பி உள்ளன. மேலும், கங்கை
ஆற்றங்கரையில் விளைந்த பொருட்களும் காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும் ஈழத்து
உணவும் வங்கதேசத்துப் பொருட்களும் ஆகியன ஒன்றோடொன்று வேறுபாடு அறியாது கலந்து
கிடந்த அகன்ற தெரு(மறுகு) என்று புகார் நகர வீதியை ஆசிரியர் விவரிக்கின்றார்.
உழவர்களின் வாழ்வியல் முறை(194- 205)
வலையால் மீன் பிடிப்போர் வீட்டு முற்றங்களில் மீன் பாய்கிறது. இறைச்சி விற்போர்
கடைகளில் விலங்குகள் நிமதியாய் நிற்கின்றன. வலைஞர்களும்(பரதவர்)
விலைஞர்களும்(இறைச்சி விற்போர்) தமது தொழிலைக் கைவிட்டனர். அதற்குக் காரணமாய்
அமைந்தது பூம்பட்டினத்து உழவர்களின் நெல் விளைச்சல். உழவர்கள், தேவர்களைப் போற்றினர்;
வேள்விகள் செய்தனர்; ஆ, எருமைகளைப் பாதுகாத்தனர்; அந்தணர்களின் புகழ் பரப்பினர்.
மேலும், விருந்தினர்களுக்கு உரிய உணவினையும் பசித்து வருவோர்க்கு வேண்டியனவற்றை
குறையாது பிறர்க்கு கொடுத்தும் அவ்ரகளுக்கு நிழலாக இருந்தும் உழவுத்தொழில் செய்து
வரும் உழவர்கள் வாழ்க்கை முறை இத்தகையதாக இருந்தது. இதனை,
கொலை கடிந்தும், களவு நீக்கியும்,
அமரர் பேணியும், ஆவுதி அருத்தியும்,
நல் ஆனொடு பகடு ஓம்பியும்,
நான்மறையோர் புகழ் பரப்பியும்,
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும்,
புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கை
விரும்பும் உழவர்கள் என்று பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
35
வணிகர் நேர்மை (206- 212)
உழவர்களின் வாழ்க்கையினை எடுத்துக் கூறிய ஆசிரியர் இனி, வணிகர் வாழ்வியல்
நெறியினைக் கூறுகிறார். அதாவது,
கொள்வதூஉம் மிகை கொடாது,
கொடுப்பதூஉங் குறைகொடாது,
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொன்மையான வணிகர்கள் என்று எடுத்துரைப்பர். இதனுள், கலப்பையின் நீண்டத்
தடியின் நடுவிடம் தைத்த பகலாணி போல, நடுநிலைமையுடைய நல்ல நெஞ்சமும் பழிக்கு அஞ்சி
உண்மையைக் கூறுவோராகவும் வணிகர் விளங்கினர். தம்முடையதையும் பிறருடையதையும்
ஒப்பாக எண்ணி, தாம் வாங்கும் பொருட்களை மிகுதியாகக் கொள்ளாதும் தாம் விற்கும்
பொருட்களை குறைவாகக் கொடுக்காதும் பல பொருட்களின் உண்மை விலையைக் கூறி
விற்கும், வணிகர்கள் என்று அவர்களது நேர்மை சுட்டப்படுகிறது.
பன்னாட்டினர் இனிது உறையும் பூம்பட்டினம் (213-218)
உலகில் உள்ள பல்வேறு தேசத்து மக்களுடன் பல மக்கள் கூட்டங்களுடனும் பல்வேறு
நாடுகளிலும் சென்று பழகி, வெவ்வேறு உயர்ந்த அறிவுடைய சான்றோர். அச்சான்றோர்,
விழாக்கள் நடத்தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல், பலநாட்டு பலமொழிகள்
பேசும் வணிகர்கள் பட்டினத்தில் வந்து கூடிய ’புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்’
காவிரிப் பூம்பட்டினம்.
இதுவரையில் புகார் நகரத்தைப் பாடிய புறப்பொருள் பற்றிய காவிரிப்பூம்பட்டினச் சிறப்பினைக்
கூறிய ஆசிரியர், மூன்று அடிகளால் இப்புறத்திணைப் பாடலை அகத்திணைப் பாடலாக மாற்றுவர்.)
அதாவது, இத்தகைய அளவற்ற(முட்டாத) செல்வத்தை உடைய பட்டினத்தைப்
பெறுவதாக இருந்தாலும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன், வாழிய நெஞ்சே (218- 220)
என்று கூறிகிறான். நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக்
கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன் என்கிறான், தலைவன் .
இச்செய்திதான் பாட்டின் பொருள் தரும் இறுதிப் பயன் ஆகும். முட்டுப்பாடின்றி மண்டிக்
கிடக்கும் புகார்ப் பட்டினமே கொடையாகவோ உழைப்பின் வழியாகவோ பெறுவதாக இருந்தாலும்,
நெஞ்சே! நான் சொல்வதைக் கேள்! நீண்ட கூந்தலையுடைய இந்தப் பெண்ணாகிய என்
காதலியை தனியே விட்டுவிட்டுப் பொருள் தேட உன்னுடன் வரமாட்டேன். பொருளையும்
இவளையும் நினைக்கும் நெஞ்சே! நீ வாழ்வாயாக.
(இனி, சோழன் கரிகால்வளவனின் வேலைக் காட்டிலும் தலைவியைப் பிரிந்து செல்லும்
காடும் கொடியது என்று கூற வந்த புலவர், ”கூர் உகிர் கொடுவரிக் குருளைக் கூட்டுள்
வளர்ந்தாங்கு எனத் தொடங்கி (220 அடி) ”திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும்” கானம் வெப்பத்தை உடையது(298 அடி) என்று கூறுவார். இதனுள்,
திருமாவளவன் அரசுரிமை பெற்ற விதம், போர்த்திறன், வளமாக்கிய செயல் ஆகியன
விவரிக்கப்படுகின்றன.)

திருமாவளவன் அரச உரிமை பெற்ற வரலாறு(220-227)


கூர்மையான நகங்களையும் வளைந்த வரிகளையுமுடைய புலிக்குட்டி, கூட்டுக்குள்
அடைபட்டு வளர்ந்தது போன்று நிறையில் அடைக்கப்பட்டு இருந்தான் திருமாவளவன், அவன்,
குழியில் வீழ்ந்து கிடந்த யானை தன் மனவலிமையால் ஏறுதற்கு அரிய கரையினை இடித்துத்
தந்தத்தினால் குத்திக் குழியைத் தூர்த்து, தன் பெண்யானை(பிடி)யிடம் சென்றது போல, தன்
அறிவாலே சேய்ய வேண்டிய காரியத்தினை ஆராய்ந்து பகைவர் மிகுந்த காவலுடைய
36
சிறைமதிலின் மீது ஏறி, தப்புகின்றபோது தன்னை எதிர்த்த பகைவர்களை வாளால் தடிந்து
முறைப்படி அச்சம் பொருந்திய அரசுரிமையை அடைந்தான்.
திருமாவளவன் செய்த உழிஞைப் போர் (228- 239 )
இவ்வாறு, தான் பெற்ற அரசுரிமை பெற்றதோடு அமைதியாக மகிழ்ச்சியாக
இருக்கவில்லை.
37
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள்
உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழ
என்னும் பட்டினப்பாலை அடிகள் அரசுரிமை பெற்ற மகிழ்வோடு திருமாவளவன்
அமையவில்லை. அவனை அழிக்க முற்பட்டோரின் அரண்களைத் தொலைத்தான். வளவனின்
யானை அவனது பகைவரின் முடிபுனைந்த தலைகளைத் தன் முன்னங்கால் நகங்களால்
புரட்டியது. பகைவரின் யானை, புரவி, பகைவர் (வயவர்) அனைவரும் வீழ்ந்தனர் என்று
எடுத்துரைக்கின்றன. மேலும், திருமாவளவன் உழிஞைப் பூச் சூடிப் போருக்கெழுந்தான்.
உழிஞைப் பூவுடன் பல்வேறு பூளைப் பூக்களையும் சேர்த்துச் சூடியிருந்தான். இவன்
போருக்கெழுந்ததும் ‘நல்ல இரை பெறலாம்’ என்று எண்ணி வானத்தில் பருந்துகள் உலா வந்தன.
யானைமீது சென்ற இவன் பெரிய பாறாங்கல் போலவும், பருந்துகள் பறந்தது பாறாங்கல்லில்
படரும் பல்வேறு கொடிகள் போலவும் இருந்தன என்றும் அப்பகைவரின் மதிலுக்குள்(அரண்)
சென்று பகைவரின் குளிர்ச்சியுடைய மருத நிலத்தின் குடிகளை விரட்டுகின்றான் என்றும்
கூறுகின்றன.
மருத நில வளம் அழிதல்(240-245 அடிகள்)
வளவன் பகைவரை வெற்றி பெறதோடு அமையாது பகைவரது நாட்டு மருத நிலத்து
மக்களை விரட்டியதால், முன்னர் வெள்ளை மலர்களையுடைய கரும்பும் சிவப்பு நெல்லும்
வளர்ந்து நின்ற வயல்களும் குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து, முதலைகள்
நிறைந்த பெரிய பொய்கைகளும் நீரின்றி, அறுகம்புல்லும் கோரைப்புற்களும் மண்டியதாக இது
குளம் இது பொய்கை என்று அறியாது ஒன்றுபட்டுக் கிடந்தது. அவ்விடத்தில், ஆண்
மான்களுடன் பெண் மான்கள் துள்ளி விளையாடுகின்றன.
அம்பலங்களின் நிலைமை (246-251 அடிகள்)
இனி, பகைவர் நாட்டு ஊர் அம்பலங்களின் முந்தைய தற்போதைய நிலைமை
விளக்குகிறார். பகைவர் நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட (கொண்டி) மகளிர், நீர் உண்ணும்
துறையில் மூழ்கி அந்தி நேரத்தில் கொளுத்திய நந்தா(அணையாத) விளக்கையுடைய
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெழுகின இடத்தில் ஏறி பலர் தொழ, புதியவர்கள் வந்து தங்கும்,
கடவுள் இருக்கும் கம்பங்களையுடைய மன்றங்கள். அம்மன்றங்களில் தற்போது, உயரமான
தூண்கள் சாயும்படி உரசியவாறு பெரிய களிற்று யானைகள் தத்தம் பெண் யானைகளுடன்
கூடித் தங்குமிடங்களாக மாறின. இதனை,
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்,
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ,
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்,
பரு நிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப்
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
என்ற அடிகள் விளக்கி நிற்கின்றன.
பாழடைந்த மன்றங்கள் (252- 260 அடிகள்)
அம்பலங்களின் பாழ்நிலையைக் கூறிய பின்னர் மன்றங்கள் முன்னர் பின்னர் இருப்பின்
தன்மையை விளக்குகிறார் ஆசிரியர். நறுமணமான மலர்களைத் தூவிய தெருவில்
கூத்தர்களின் முழவோடு இணைந்த யாழின் இசையைக் கேட்கும் பெரிய விழாக்கள். இப்போது,
38
அச்சம் முதிர்ந்த மன்றமாகத் திகழ்கிறது. அம்மன்றத்தில் நெருஞ்சிச் செடிகளுடன்
அறுகம்புற்கள் பரவியுள்ளன. நரிகள் அச்சம் தோன்றும்படி ஊளையிடவும், கூகையுடன்
ஆண்டலை என்ற ஆந்தையும் அலறி நிற்கின்றன. கூட்டமாக உள்ள ஆண் பேய்களுடன்
கூந்தலை தொங்கவிட்டு ஆடும் பிணத்தை உண்ணும் யாக்கையை உடைய பெண் பேய்கள்
நெருங்கி நின்று ஆடுகின்றன.
பாழ்பட்ட பகைவர் நகரம் (261 – 269 அடிகள்)
பகைவரின் நகரமானது வளைந்த தூண்களையுடைய மாடங்களில் விருந்தினர் சென்று
நெருங்கி இருந்து விருந்து உண்டு இடைவெளி இல்லாத பெரிய சோற்றைச் சமைக்கும்
அடுக்களை உடைய நல்ல இல்லங்கள். அவ்வில்லங்களின் திண்ணையில் இருந்து பச்சைக்
கிளிகள் பேசும் பசும்பால் நிறைந்த வளமான ஊர்கலாகும். வ்வூர்களில் தற்போது, தோல்
செருப்பைக் காலில் அணிந்த, துடியும் வில்லையுமுடைய எயினர்கள் கொள்ளை கொண்டு
உண்டதால், உணவு இல்லாத நெற்கூடுகள். அக்கூடுகளின் உள்ளே இருந்து கூகைகள்(ஆந்தை)
நண்பகலில் குழறின. இவ்வாறு அரிய காவலையுடைய ஊர்களின் அழகு வளவனால் அழிந்தது.
திருமாவளவனது கருதியது முடிக்கும்ஆற்றல் (269 – 273 அடிகள்)
இவ்வாறு, பகைவர் நாட்டை பாழ்படுத்தியும் தணியாத அவன், “முழுவதும்
இல்லையாகும்படி மலைகளைத் தோண்டுவான், கடலை மணலால் நிரப்புவான், வானத்தை விழச்
செய்வான், காற்றின் திசையை மாற்றுவான்” என்று எல்லோரும் கூறும்படியாக, தான்
எண்ணியபடி செய்து முடிப்பான். இதனை,
பெரும் பாழ் செய்தும் அமையான், மருங்கு அற 270
மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே,
வான் வீழ்க்குவனே, வளி மாற்றுவன் எனத்
தான் முன்னிய துறை போகலின்
என்ற அடிகளால் ஆசிரியர் விளக்குவர்.
திருமாவளவனின் வெற்றிச் சிறப்பு (274-282 அடிகள்)
ஒளி நாட்டார் பணிந்து ஒடுங்கவும், அருவாள நாட்டு மன்னர்களில் வந்து பணிந்து
அறிவுரை கேட்கவும், வடக்கில் உள்ள அரசர்கள் வாடவும், குட நாட்டு மன்னர் மகிழ்ச்சி
குறையவும், பாண்டிய மன்னனின் வலிமை கெடவும், செருக்கினையும் வலிமையையும் உடைய
முயற்சி, பெரிய தானை, மறமுடைய வலிமை உடைமையால், சினத்தால் சிவந்த கண்களால்
நோக்கி, புல்லிய முல்லை நிலத்தின் மன்னர்களின் வழிமுறை கெடவும், இருங்கோவேள் என்ற
மன்னனின் சுற்றத்தார் கெடவும் பல சிறப்பான வெற்றிகளைப் பெறுகிறான். இத்தகைய அரிய
வெற்றிகளைப் பெற்ற திருமாவளவன் தந்து சோழநாட்டில்,
நாட்டு வளம் பெருக்கிய வளவன்(283-292)
காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கி
பெரிய மாடங்களையுடைய உறந்தை நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை
நிறுவுகிறான். இக்குடிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரண்களில் பெரியதாகவும்
சிறியதாகவும் வாயில்கள் அமைத்து, அரண்களின் ஏவல் அறைதோறும் அம்புக் கூட்டை நிறுவி,
“போர் செய்வேன் நான்” என்று சூள் உரைத்து, “விட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறமுதுகு
இடாது இருந்தான் திருமாவளவன்.
திருமாவளவனின் அக வாழ்வு (292-299)
39
தங்களின் மறம் குறைந்த, வேந்தர்கள் முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய
கரிகாலனின் கால்களை வணங்குகின்றனர். பொன்னால் செய்த தொடிகளை அணிந்த
அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும், அணிகலன்களை அணிந்த அவனது
மனைவியின் மார்பகங்கள் தொடுவதால் அவனது சிவந்த சந்தனம் அழிந்த மார்பும்
அணிகலன்களும் சிங்கத்தைப் போன்ற வலிமை உடைய திருமாவளவன் என்னும் வேந்தன்.
தலைவியைப் பிரியாமைக்கான காரணம் (299- 301)
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய, தடமென் தோளே.
இத்தகைய வலிமை வாய்ந்த திருமாவளவன் பகைவர்மேல் உயர்தத ் ிய வேலைக்
காட்டிலும் கொடியது காடு. அவனது செங்கோலைவிட, குளிர்ச்சியானவை என் தலைவியின்
பெரிய மெல்லிய தோள்கள் ஆகையால், பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று பட்டினப்பாலை
தலைவன் தன் நெஞ்சிற்கு எடுத்துரைப்பதாக பாடல் நிறைவு பெறுகிறது.
40
தன்முயற்சி வினாக்களும் விடைக்குறிப்புகளும்
1. திருமாவளவன் பகைவர் நாட்டைப் பாழ்படுத்திய விதத்தை விளக்குக.
மருதநிலங்களைப் பாழ் செய்தல் - கரிகாலன் வெற்றிக்கு முன் இவன் வென்று
அழிப்பதற்கு முன் பகைவரின் நாடு வளமுடன் செழித்திருந்தது. வயல்களில் கரும்பும்
செந்நெல்லும், வாவிகளில் குவளையும் நெய்தலும், பொய்கையில் முதலைகள் என்று
அதன் செழுமை இருந்தது. கரிகாலன் வெற்றிக்குப் பின் இவனது வெற்றிக்குப் பின்
வயல்களும் வாவிகளும் நீரற்று நிலம் மயக்கமுற்று (திணைமயக்கம் எய்தி) வறண்ட
நிலத்தில் பூக்கும் புதவம் பூக்களும் செருந்திப் பூக்களும் பூக்கும் நிலையைப் பெற்றன.
மக்கள் பயிர் செய்த நிலைமை மாறிக் கலைமான்களும் காட்டுமான்களும் விளையாடும்
காடாக மாறியது.
ஊர் அம்பலங்களைப் பாழ் செய்தல். கரிகாலன் வெற்றிக்கு முன் - இவனது வெற்றிக்கு
முன் பகைவர் நாட்டில் அந்தி நேரம் வந்ததும் கொண்டி மகளிர் ஆற்றில் குளித்துவிட்டு
வந்து ஊர்மன்றத்தை மெழுகிப் பூ வைத்து அங்கிருந்த தூணில் விளக்கேற்றினர்.
அவர்களும் அங்கு வரும் புதியவர்களும் மன்றிலிருந்த கந்திற் பாவையைத் தொழுதனர்.
கரிகாலன் வெற்றிக்குப் பின்- வழிபட்ட அந்தத் தூண்கள் இவனது வெற்றிக்குப் பின்
வெறுங் கல்லுத் தூணாக மாறியது. களிறும் பிடியும் அதில் உரசிக்கொள்ளும்,
உறைவிடங்களாகக் ஆயிற்று.
மன்றங்களைப் பாழ் செய்தல்- கரிகாலன் வெற்றிக்கு முன் - அப்போது தெருவில்
எப்போதும் விழாக்கொண்டாட்டம். தெரு வாசலில் பூக்களைத் தூவி மக்கள் கூத்தரை
வரவேற்பர். கூத்தரின் இசையினை மக்கள் கேட்டு மகிழ்வர். கரிகாலன் வெற்றிக்குப்
பின் - இப்போது விழாத்தெருக்கள் பேய்மன்றங்களாக மாறிவிட்டன. பூத் தூவிய
இடங்களில் நெருஞ்சிமுள் பூத்துள்ளது. அருகம்புல் பம்பிக் கிடக்கிறது. யாழொலி கேட்ட
இடத்தில் குள்ளநரி ஊளையிடும் ஓசை கேட்கிறது. அழுகையொலி, கூகையின் குழறல்,
ஆண்டலையின் அழைப்பு, பிணம் தின்ற கூளிகள் அசைபோடும் அதவல், பிணம்
தின்னும் பேய்மகளின் பித்தாட்டம் போன்றவை நிகழ்ந்தன.
பகைவர்நாட்டு இல்லங்களைப் பாழ் செய்தல் - கரிகாலன் வெற்றிக்கு முன் - அன்று
விருந்தூட்டிய வீடுகள், கிளி மிழற்றும் திண்ணைகள், மாடி வீடுகள், அதில் சோற்றுச்
சமையல் மணக்கும் அட்டில் சுவர். விருந்தூட்டிய பின் மிஞ்சிக் கிடக்கும் சோற்றை
வளைவு வாயிலில் வைத்துக்கொண்டு வழங்கக் காத்திருந்த நல்ல இல்லங்களின்
உயர்திணைப் பண்பு. கரிகாலன் வெற்றிக்குப் பின் - அந்த இடங்களில் பாலைநிலத்து
எயினர்களின் நடமாட்டம். அன்று கிளி மழலை கேட்ட இடங்களில் இன்று கூகையின்
குழறல் ஒலி பகலிலேயே கேட்கிறது. உடுக்கடிக்கும் துடிப்பறை கேட்கிறது. அன்று
விருந்தூட்டிய இடங்களில் இன்று கொள்ளையடித்த உணவைப் பங்கிட்டுக்
கொள்கிறார்கள்.
2. பட்டினப்பாலை காட்டும் பண்டைத் தமிழர் பழக்கவழக்கங்களைத் தொகுத்தெழுதுக.
ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களுக்கான சுங்கவரி கொள்ளும் முறை – வீடுகள் படிகள்,
திண்ணை மற்றும் மாடங்கள் வைத்துக் கட்டப்பட்ட முறைமை – வாணிபப் பொருட்கள்
மற்றும் வாணிக முறை – பலதேசத்து மக்களின் வருகை - அரசர்கள் பகைநாட்டைப் பாழ்
செய்த விதம் – ஆகியன குறித்து எழுத வேண்டும்.
3. காவிரிப்பூம்பட்டினச் சிறப்புகளாகப் பட்டினப்பாலை கூறுவனவற்றை எடுத்துரைக்க.
41
காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு - தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள் -
அட்டில் சாலைகள் -தவப்பள்ளியும் வேள்விச்சாலையும் -விளையாட்டுக் களத்தில்
மறவர்களின் போர் - ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம் - பூம்புகாரின்
செல்வ வளம் நிறைந்த வீதிகள் - காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல் இயல்புகள் -
வணிகர் குடிச்சிறப்பு ஆகியன.
4. பட்டினப்பாலை நூலில் காணலாகும் உவமைகளைத் தொகுத்துரைக்க.
திருமாவளவன் தெவ்வர்க்கு எதிராக ஓங்கிய வேல் தலைவன் பிரிந்து செல்லக் கருதிய
கானம் கொடிது - புலிக்குட்டி கூட்டில் வளர்ந்தது போல் திருமாவளவனின் இளமைக்
காலம் அமைந்திருந்தது - குழியில் விழுந்த ஆண்யானை குழியின் கங்குக்கரையைச்
சரித்து இடித்துக்கொண்டு மேடேறித் தன் பெண் யானையோடு சேர்ந்தது போல்
திருமாவளவன் தன் ஆட்சியைப் பெறுதல் - அறச்சாலையிலுள்ள சமையலறையில்
சோறாக்கி வடித்த கஞ்சி ஆறுபோல ஓடியது – வணிகர்களின் நேர்மைக்கு நுகத்தட்
பகலாணி - விழாக்கள் நடத்தும் தொன்மையான ஊருக்குச் சென்று கூடினாற்போல்,
பலநாட்டு பலமொழிகள் பேசும் வணிகர்கள் பட்டினத்தில் வந்து கூடிய ’புலம்பெயர்
மாக்கள் கலந்து இனிது உறையும்’ காவிரிப் பூம்பட்டினம்.
5. பூம்புகாரில் வாழும் குடிமக்கள் மாண்பினைப் பட்டினப்பாலை வழி நின்று விளக்குக.
பரதவர் வாழ்க்கை முறை – உழவர் இயல்பும் கடமையும் – வணிகரின் வாணிக நேர்மை –
அரசு அதிகாரிகளின் கடமை உணர்வு ஆகியன் குறித்து எழுத வேண்டும்.
6. பட்டினப்பாலை விவரிக்கும் மருதநில வளம் குறித்து எழுதுக.
காவிரி புரக்கும் மருத நிலம் – விளைச்சல் குறையாத கழனிகள் – கரும்பும் நெல்லும் –
வயல்களில் எருமைகளின் செயல்கள் - ஊரைச் சூழ்ந்துள்ள வயல் முற்றங்களில்
தென்னை, வாழை பாக்குமரம் மஞ்சள், மா, பனை, சேம்பு, இஞ்சி முதலான
பணப்பயிர்கள் விளைந்திருக்கும் – செல்வச் செழிப்பு - மகளிர் செயல் - காயும்
உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும்
பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும்
நடைவண்டிகளைத் தடுக்கும் -
42

அலகு இரண்டு

அ. நற்றிணை ( 1 – 20 பாடல்கள்)
ஆ. குறுந்தொகை (20-40 பாடல்கள்)
இ. ஐங்குறுநூறு – வேட்கைப்பத்து முழுதும்

அலகு இரண்டு
அலகு முன்னுரை
இவ்வலகு முதலான நான்கு இயல்களும் எட்டுத்தொகை பாடங்கள் பற்றிப் பேசுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும்
சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றுள்,அகம் சார்ந்தன
1.நற்றிணை, 2.குறுந்தொகை, 3.அகநானூறு, 4.ஐங்குறுநூறு, 5.கலித்தொகை என்ற
ஐந்துமாகும். புறம் சார்ந்தன புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து என்ற இரண்டுமாகும். அகமும்
புறமும் கலந்தமைந்த நூலாகப் பரிபாடல் அமைகிறது. ஒவ்வொரு நூலின் அமைப்பும் சிறப்பும் பற்றி
அந்தந்தப் பாடங்களின் முன்னுரையாக கொடுக்கப்பட்டுள்ளது.

அலகு 2.1. நற்றிணை(பாடல் எண்.1 முதல் 20 வரை)


மாணவர் பெறும் திறன்
1. தலைவன், தலைவி முதலிய பாத்திரங்களின் மன நிகழ்வுகள் பாடல்களில் எவ்வாறு
நுட்பமாகச் சித்திரிக்கப்படுகின்றன என்பதை உணரலாம்.
2. மானிடக் காதல் வாழ்வில் இயற்கை எந்த அளவுக்கு ஊடுருவித் தன் பங்கைச்
செலுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
3. இப்பாடப்பகுதியில் இடம்பெறும் புலவர்களின் கவித்திறனைக் கண்டு சுவைக்கலாம்.
43
பாடம் ஏழு
2.7.1. நற்றிணை அறிமுகம்
2.7.1.0. முன்னுரை
அகநூல்களில் திணை என்னும் பெயரால் அமையும் ஒரே நூல் நற்றிணையாகும். இதற்கு,
நற்றிணை நானூறு என்று வேறு பெயரும் உண்டு. எட்டுத்தொகை குறித்த பழம் பாடல்,
நற்றணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத் தொகை
என நற்றிணையினை முதலில் வைத்து எண்ணுகிறது. இத்தகைய நற்றிணை குறித்துச்
சுருக்கமாகக் காண்போம்.
2.1.2 நற்றிணை கட்டமைப்பு
பாரதம் பாடிய பெருந்தேவனார் திருமால் வணக்கக் கடவுள் வாழ்த்துடன் 401
பாடல்களைக் கொண்டது. நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் இருநூற்று
எழுபத்தைந்து புலவராவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனைத்
தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன்
வழுதி. ஆசிரியப்பா எனப்படும் அகவற்பாவில் அமைந்த இந்நூல், குறைந்தது 9 அடிகள் முதலாக
அதிகமாக 12 அடிகள் வரையிலும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இதில் 110, 379 ஆம்
எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டு மட்டும் 13 அடிகள் கொண்டவை.
2.1.3. நற்றிணை நுவலும் சிறப்பான சில தொடர்கள்
உண்மைக்காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,
சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)
என்னும் அடிகள் காட்டுகின்றன. செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை
மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை
எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.
கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)
என்ற பகுதி இதனைக் காட்டுகிறது. ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை
நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே
என்கின்றார் இன்னொரு புலவர்.
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)
பெரியோர் நன்கு ஆராய்ந்து ஒருவரோடு நட்புக் கொள்வர் என்றும், மாறாக நட்டபின்னர்
அதன் பொருத்தத்தை ஆராயார் என்றும் ஒருவர் கூறுகின்றார். (32)
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)
44
என்ற நற்றிணைப் பகுதி 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்'
என்ற திருக்குறளை நினைவூட்டக் காணலாம்.
2.1.4. பாடலடியால் பெயர் பெற்ற புலவர்
பாடலடியின் சிறப்பினால் அவ்வடிகளின் பெயராலே புலவர்களின் பெயர்கள்
அமைவதுண்டு. அவ்வகையில் நற்றிணையில் ஏழு புலவர்கள் இவ்வாறு அறியப்படுகின்றனர்.
அவர்கள் பெயர்களாவன; தேய்ப்புரி பழங்கயிற்றினார், தனிமகனார், விழிக்கட் பேதை
பெருங்கண்ணனார், மலையனர், வண்ணப்புறக் கந்தரத்தனார், தும்பிசேர் கீரனார், மடல் பாடிய
மாதங்கீரனார் ஆவர்.
45
2.1.5. நற்றிணை உரையும் பதிப்பும்
இந்நூலுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் பின்னத்தூர் நாராயணசாமி அய்யர்
அவர்கள். அதனைத் தொடர்ந்து டாக்டர் உ.வே.சா அவர்களும் உரை எழுதியுள்ளனர். மர்ரே ராஜம்
நிறுவத்தினர் நற்றிணை மூலம் மட்டும் பதிப்பித்துள்ளனர். நற்றிணை இரு பாகங்களாக ஔவை
சு. துரைசாமிப்பிள்ளை பதிப்பித்துள்ளார்.
தொகுப்புரை
மாணவர்களே நற்றிணை பாடப்பகுதியின் இருபது பாடல்களை முதல் பத்தினை ஒரு
பாடமாகவும் இரண்டாம் பத்தினை ஒரு பாடமாகவும் இரண்டு பாடப்பகுதிகளாகக் கொண்டு
பொருள் விளக்கம் காண இருக்கின்றோம்.
46
பாடம் எட்டு
பாடப்பொருள் விளக்கம்
2.2.0. பாட முன்னுரை
நற்றிணை - பாடப்பகுதியில் உள்ள முதல் பத்துப் பாடல்களின் திணை, கூற்று
விளக்கங்கள், பாடலை இயற்றிய புலவர் பற்றிய குறிப்புகள், பாடல்களின் பொருள், உவமை,
உள்ளுறை சிறக்கும் பாடல்கள் ஆகியன கூறப்பட்டுள்ளன. இப்பாடப்பகுதியில் அமைந்த முதல்
பத்துபாடல்களில் குறிஞ்சித்திணையில் ஐந்து பாடல்களும் பாலைத்திணை பாடல்கள் நான்கும்
நெய்தல் திணைப்பாடல் ஒன்றுமாக இடம் பெற்றுள்ளன. தலைவன், தோழி, தலைவி, செவிலி
மற்றும் கண்டோர் கூற்றுகள் அடிப்படையில் ஒருசேரத் தொகுத்து நோக்கின் தேர்வுக்குப்
பயனுள்ளதாக அமையும்.
2.2.1. திணை: குறிஞ்சி, பாடியவர் ; கபிலர், கூற்று: தலைவி கூற்று,
துறை: பிரிவுணர்தத் ிய தோழிக்குத் தலைவி சொல்லியது.
(துறை விளக்கம்: தலைவன் பிரிய எண்ணிய தலைவன் நிலையினைத் தோழி
தலைவியிடம் கூறுகின்றாள். அதற்குத் தலைவி, தலைவன் என்னைப் பிரியும் குணக்கேடு
இல்லாதவர் என்று அவனைப் புகழ்ந்து கூறியது)
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம்தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை; 5
நீர்இன்று அமையா உலகம் போலத்
தம்இன்று அமையா நம்நயந் தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
தோழி, நம் காதலர் தான், சொன்ன சொல் தவறாத வாய்மையுடையவர்; இனிவரும்
நாள்களிலும் பெருகித் தோன்றும் இனிமைப் பண்பை உடையவர்; எப்பொழுதும் என் தோள்களை
நீங்காதவர். குளத்தில் பூத்த தாமரையின் மகரந்தத்தாதினை எடுத்து உயர்ந்த மலையினில்
விளந்த சந்தனமரத் தாதுடன் ஊதி, அச்சந்தன மரத்தின் உச்சியில் வைக்கப்பெற்றத் தேனடை
போல உயர்ந்தோராகிய அவரது நட்பு உயர்ந்தது ஆகும். ஆகையால், நீர் இன்றி அமையாத
உலகம் போல நானின்றி அவர் வாழாது நம்மிடம் விருப்பமிக வைத்த பேரன்பினர். அத்தைகைய
தன்மை வாய்ந்தவர், நம் நறிய நுதல்(நெற்றி) பசலை பாய்வதற்கு அஞ்சி நமக்குத் தீங்கு
செய்யும் சிறிய செயலினைச் செய்வாரோ? அவ்வாறு செய்யும் இயல்பை உடையோர் அல்லர்.

கருத்து: தலைவர் சான்றோர் பண்புடையவர் அதனால், பிரிவால் நாம் படும் துன்பம்


கண்டு அஞ்சி நம்மை விட்டு நீங்க மாட்டார்.
உவமைகள்: இப்பாடலில் இரு உவமைகள் அமைந்துள்ளன. 1. தாமரைத்தாது தலைவன்
உள்ளத்திற்கும் சந்தனத் தாது தலைவி உள்ளத்திற்கும் உவமை கூறப்பட்டுள்ளது., தாமரை
தலைவிக்கும் சந்தன மரம் தலைவனுக்கும் உவமை கூறப்பட்டுள்ளது. இருவரின் உள்ளம்
ஒன்றுபட்ட காதல், சந்தன மரத்திலே உள்ள தேனடைக்கு ஒப்புமை கூறப்படுகிறது.
2.2.2. திணை: பாலை, பாடியவர் : பெரும்பதுமனார், கூற்று: கண்டோர் கூற்று,
துறை: உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. –
47
(விளக்கம்: தலைவனும் தலைவியும் உடன்போக்கில் செல்கின்றனர்; வழியில் கண்டவர்
கூறியது.)
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலிவல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்தத ் ோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, 5
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! 10
மிகுதியான குளிர்ச்சி பொருந்திய குன்றத்தில் காற்றுச் சுழன்று வீசும் ஈந்த மரங்கள் நிறைந்த
காடு. அக்காட்டின்வழிச் செல்லும் வழிப்போக்கர்கள் தலையைப் பிளந்து (இரத்த) குருதி
உண்டதனால் வாயில் இரத்தம் படிந்த புலிகள்(வல்லியம்) தம்குட்டிகளுடன் உலவும்.
அக்குருளைகள், இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கை மரக் காட்டின் மாலைப்
பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரத்தின் அடியில் நின்றுகொண்டு தூர்களை நிமிர்ந்து
நோக்கும். இத்தகைய காட்டில் கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை(தலைவி)
முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இந்த இரவுப் பொழுதிற் செல்கின்ற இவ் இளைஞன்
உள்ளமானது, பெரிய பாறைக்கற்களைப் புரண்டு விழுமாறு செய்யும் காற்றுடன் உண்டாகும்
மழைமேகத்தில் தோன்றும் இடியைவிடக் கொடியது.
கருத்து: புலிகள் உலவும் கொடிய காட்டில் நள்ளிரவு நேரத்தில் தலைவியை அழைத்துச்
செல்லும் தலைவன் மிகக் கொடியவன்.
உவமை: தலைவி புலிகள் உலவும் மாலை நேரத்தில் அழைத்துச் செல்லும் தலைவன்
உள்ளத்திற்கு இடி உவமையாகிறது.
2.2.2.1. திணை: பாலை, பாடியவர் : இளங்கீரனார், கூற்று: தலைவன் கூற்று,
துறை: முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள்
கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
ஈன்பருந்து உயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரிஅரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டுஅரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டுஆடும்
வில்ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?
நெஞ்சே! பார்ப்பை(குஞ்சு) ஈன்ற பருந்து, நெடிய கிளைகளையும் பொரிந்த
அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலில் வருந்தி வீற்றிருக்கும். அம்மரத்தின்கீழ்,
கட்டளைக்கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி, கல்லாத சிறுவர்கள், நெல்லிக்காயை
வட்டாகக்கொண்டு ஆடுவர். விற்போரால் ஆறலைத்து உண்ணும் மழவரின் குடியிருப்புகள்
நிறைந்த சீறூரையுடைய இத்தகைய சுரத்தின் கண்ணே எனது எண்ண வலிமை குறைக்கின்ற
48
இம்மாலை வேளை, மனையகத்து விளக்கை ஏற்றி அவர் தாம் இன்னும் வரவில்லை என்று நம்
காதலி துன்புற்றுக் வருந்துகின்ற மாலைப் பொழுதாகும் என்று முன்பு ஒருநாள் பிரிந்து வந்த
நான் வருந்தினேன். எனவே, என்னைப் பொருளீட்ட தூண்டாதே. இனி யான் தலைவியை விட்டு
வாரேன் என்று தலைவன் கூறுகின்றான்.
கருத்து: நெஞ்சே, மாலை வந்தால் என் பிரிவினால் தலைவி வேதனை அடைவாள். எனவே,
பொருள் காரணமாக பிரியமாட்டேன் என்று தலைவன் தன்நெஞ்சிற்குக் கூறினான்.
உள்ளுறை: பருந்து வருந்தி வேம்பின் நிழலில் அமர்ந்திருக்கும். அதன் வருத்தம் உணராது
மரத்தின் கீழ் சிறுவர்கள் நெல்லி வட்டாடி மகிழும் காட்சி, தலைவியைப் பிரிதலால் வரும் துன்பம்
நோக்கி வருந்தும்போது அதனை உணராது பொருள் சேர்க்கும் முயற்சிக்குத் தூண்டும்
நெஞ்சின் செயல்பாடு ஒப்புமையாக்கம் பெற்றுத் தலைவன் வருந்தும் இறைச்சிப் பொருளைத்
தந்து நின்றது.
2.2.3. திணை: நெய்தல், பாடியவர் : அம்மூவனார், கூற்று: தோழி கூற்று,
துறை: தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு
கடாயது. (து.விளக்கம்: சிறப்புறம்-வேலிப்புறம். வரைவு கடாயது-திருமணம் வேண்டியது)
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல்நிற புன்னைக் கொழுநிழல் அசைஇ,
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி,
அம்கண் அரில்வலை உணக்கும் துறைவனொடு,
'அலரே அன்னைஅறியின், இவண்உறை வாழ்க்கை 5
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசைகழனிக் 10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின்தம் உறைவின் ஊர்க்கே?
தோழி! கடற்கரைச் சிறுகுடியிலிருந்து கடலுக்குச் செல்லும் பரதவர், நீலநிறத்தையுடைய
புன்னையின் நிழலிலே தங்கி, பெரிய கடற்பரப்பிற் செல்லுதற்கு நல்ல நேரம்(அற்றம்) பார்த்தவாறு
அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்து உலர்த்துவர். அக்கடற்கரை ஊரின்
தலைவனுடன் நமக்கு உண்டாகிய நட்பினால் உண்டான அலரை அன்னை அறிந்தால், நமக்கான
களவு வாழ்க்கை இனி அரியதாகும். நாமே அவருக்கு நமது நிலையினை எடுத்துக் கூறுவோம்
என்றால், உப்பு வாணிகர் வெளைக் கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாக ஆனிரைகளை
ஓட்டிச்செல்லும் நெடிய வழியில்(நெறி) செலுத்தும் வண்டிகள் மணலின் சிக்கி முழங்கும்
ஓசையைக் கேட்டு, வயலிலுள்ள நாரைகள் வெருவி(அஞ்சி) நிற்கும். இத்தகைய கரிய கழி
சூழ்ந்த நெய்தல் நிலத்தினை உறைவிடமாகிய அவரது ஊருக்கு நம்மையும் அழைத்துக்
கொண்டும் போவரோ?
கருத்து: அலர் எழுதல் அன்னை அறியின் களவு வாழ்க்கை அரிதாகும். நமது களவிற்கு
இடையூறு என்பதைத் தலைவன் உணர்ந்து விரைந்து வந்து தலைவியை மணந்து கொள்ள
வேண்டும்.
2.2.4. திணை: குறிஞ்சி, பாடியவர் : பெரும்குன்றூர்கிழார், கூற்று: தோழி கூற்று,
49
துறை: தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
(து. விளக்கம்: செலவு- பயணம்;செல்லுதல். வேறுபட்ட – மனம் வேறுபட்ட)
நிலம் நீர்ஆர, குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி 5
தெற்குஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்றுசெல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்குஇதழ் மழைக் கண் பயந்த, தூதே.
தோழீ! பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீண்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு
கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய உனது மழைபோல நீர்வடிகின்ற கண்கள்தாம் அவர்
செல்லுவததி தடுக்கும் தூதாகும். அங்ஙனம் நீ விடுத்த அழுகைத் தூதின் காரணமாக,
முன்பனிக்காலத்தில் மேகமானது மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்புகிறது; மலைமேலுள்ள
மரங்கள் தழைத்தன. குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்த குளநெல் முதலிய
பயிர்கள் நெருங்கி வளர்ந்தன. கொல்லையின் கண்ணே குறவரால் வேட்டப்பட்ட நறைக்கொடி
மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியே
ஏறியது. இத்தகைய பிரிந்தோர் வருந்தும் முன்பனிக்காலத்தும் காதலரைப் உன்னைப் பிரிந்து
காதலர் பிரியார். நீயும் தனித்து உறைதல் அரியதாகும்; ஆதலின் மகிழ்வொடு இருப்பாயாக !
கருத்து: தலைவி, நீ பிரிவினால் படும் துன்பத்தினை உனது கண்கள் தூதாய்த்
தெரிவித்தன. ஆகையால், தலைவர் முன்பனிக்காலத்தும் உன்னை விட்டுப் பிரியார்.
உள்ளுறை: நிலம் நீர் ஆரவும் குன்றம் குழைப்பவும் பயிர்கால் யாப்பவும் வந்த மழை,
குறையுண்டுக் கிடக்கும் நறைக்கொடி வேரூன்றி அருகே உள்ள சந்தன மரத்தைச் சுற்றிப் படரும்
என்பது தலைவன் பிரிவு கருதி வருந்தும் தலைவி, தலைவனைத் தழுவி மகிழ வேண்டும்
என்னும் உள்ளுறையை வெளிப்படுத்தி நின்றது.
2.2.5. திணை: குறிஞ்சி, பாடியவர் : பரணர், கூற்று: தலைவன் கூற்று,
துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச்
சொல்லியது.
நீர்வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்துஎழில் மழைக்கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 5
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி,
இரும்பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.
ஆம்பலின் தண்டை நாருரித்தாற் போன்ற மாமை நிறத்தையும் குவளை போன்ற
கண்ணையும் திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய தலைவி.
அத்தலைவிடம் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின் அவரை நோக்கி
50
இவர் யாவரென்று சினந்து கேட்க மாட்டாள். எனவே, சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த
மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டு அயர்கின்ற
இளமானுக்கு வெறுப்பில்லாது உணவாகி நிற்கும். வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல
நறுநாற்றமுடைய கூந்தலை பெற்ற அவள் நான் வந்திருக்கின்றேன் என்பதைக் கேட்டவுடன்
மகிழ்சியினால் பெரிதும் களிப்புறுவாள். அங்ஙனம் சென்று கூறுவாரை யான் பெற்றேனில்லை.
கருத்து: இரவுக்குறி சென்ற தலைவன், தன் வரவை தலைவி அறிந்தால் பெருமகிழ்ச்சி
அடைவாள். இச்செய்தியைக் கூறுவார் யாருமில்லை என்று தன் நெஞ்சிற்கு கூறி
வருந்துகிறான்.
இறைச்சிப் பொருள்: குமிழின் கனி மானுக்கு உணவாவது போல எம்வருகையைத்
தெரிவிக்கும் சொல்லானது தலைவிக்குப் பெருமகிழ்வு உண்டாக்கும் எனும் இறைச்சிப் பொருள்
பெறப்படும்.
2.2.6. திணை: பாலை, பாடியவர் : நல்வெள்ளியார், கூற்று: தோழி கூற்று,
துறை: களவு வெளிப்பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து
பொருள்வயிற்பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.
(து. விளக்கம்: களவொழுக்கம்(காதல்) வெளிப்பட்ட பின்னரும் தலைமகன்
தலைவியைத் திருமணம் செய்யாது பொருள் காரணமாக நெடுந்தூரம் செல்கிறான். அதனால்
வருந்திய தலைவிக்கு, அவர் குறித்துச் சென்ற கார்காலம் வந்தது, வந்து உன்னை மணந்து
கொள்வர் அதுவரை வருந்தாமல் ஆற்றியிருப்பாய் என்று தோழி ஆறுதல்கூறுகிறாள்)
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்பப் ,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.
தோழி! மூங்கில் நெல்லைத் தின்ற யானை, நறுமணங் கமழும் மலைச்சாரலில் துஞ்சும்.
அம்மலையில் விளைந்த சந்தன மரத்தினையுடைய பெரிய காட்டினகத்து அச்சத்தையுடைய
இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள்
ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவரும் காட்டாறு அக்காட்டாற்று வெள்ளமானது
மூங்கிலும் முழுகுமாறு பெருகி அலைகாட்டிற் சென்று மோதி நிற்கும். ஒலிக்கின்ற இடி
முழக்கஞ் செய்து; முகில்கள் மழை பெய்யவேண்டி மின்னும். இம்மழைக்காலத்தைக் கண்ட
தலைவன் விரைவாக வந்து நின்னை மணந்து கொள்வர். ஆதலின் நீ வருந்தாதே கொள்
கருத்து: கார்காலம் வந்தது. காதலர் விரைந்து வருவார். கவலையற்க என்று தோழி
தலைவியைத் தேற்றுகின்றாள்.
இறைச்சிப் பொருள்: 1. வாடுகின்ற பெருங்காட்டில் அக்காடு கவின்பெற மழை பெய்யத்
தொடங்கும் என்றது, வருந்திய தலைவியை அருள்செய்ய இப்பொழுதே தலைவன் வருவான்
என்பது பெறப்படுகிறது.
51
2. நெல்லருந்திய யானை கவலையின்றித் தூங்கும் என்பது தலைவனோடு இன்பம் நுகர்ந்த
தலைவி துன்பம் இல்லாமல் தூங்குவாள் என்ற குறிப்பு தந்தது. இப்பாடலில் இரு குறிப்புப்
பொருள்கள் அமைந்துள்ளன.
52
2.2.7. திணை: குறிஞ்சி, பாடியவர் : ------------, கூற்று: தலைவன் கூற்று,
துறை: இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட
தலைமகன் சொல்லியது.
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! 10
மிக்க துன்பமுற்ற கண்களையும் தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்
அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ்விளமகள் யார் புதல்வியோ? அசையாத
நெஞ்சுரம் வாய்ந்த என் உள்ளத்தையே துயரஞ் செய்தனள்! இத்திறம் வல்லவளைப்பெற்று
எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழட்டும். மேலும், இவளை ஈன்ற தாயும் வயலில்
மள்ளரால் அரியப்பட்டு கொண்டு வரப்பட்ட நெற்போரில் நெய்தல் மலரும் திண்ணிய
தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக.
கருத்து: கவின்மிகு காதலியைப் பெற்று எமக்குத் தந்த இருமுது குரவரும்(தாய்,
தந்தையர்) நெடுங்காலம் வாழ்ந்து இன்புறுக என்று தலைவன் கூறுகின்றான்.
2.2.8. திணை: பாலை, பாடியவர்: பெரும்பதுமனார், கூற்று: பாலை பாடிய பெருங்கடுங்கோ,
துறை: உடன்போகாநின்ற தலைமகன் தலைமகளுக்கு உரைத்தது.
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி 5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் 10
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.
வெண்பற்களையுடைய தலைவியே, நாம் செல்லும் காட்டுநெறியில் மாமரத்தின் அரும்பைக்
கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையும் அடுத்தடுத்துள்ள பல
ஊர்களையுமுடையது. சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம்
முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல யான் நெடுங்காலம்
உன்னைப் பெற முயன்றதனால் ஆகிய வருத்தம் தீரும்படியாக நின் அழகிய மெத்தென்ற
பருத்த தோள்களை அடைந்தனன். எனவே, இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய
புங்கினது ஒள்ளிய தளிரை சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம்
53
சிறப்போடிருக்குமாறு அப்பியும் நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது தங்கியும்
மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடியும் நெறிவந்த வருத்தத்தைப்
போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக;
கருத்து: தலைவியே, அன்பால் ஒன்றுபட்டு உடன்போக்கில் செல்கின்றோம். வழிநடை
வருத்தம் தீர நிழலில் தங்கி வண்டல் விளையாட்டு ஆடி மெதுவாக வருவாயாக என்று தலைவன்
கூறுகின்றான்.
2.2.9. திணை: பாலை, பாடியவர் : -----------, கூற்று: தோழி கூற்று,
துறை: உடன்போக்கும் தோழி கையடுத்தது.
(து.விளக்கம். கையடுத்தது – பாதுகாப்பாயாக என்று கூறி தலைவனிடம் தலைவியை
ஒப்படைத்தது.)
54
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.
மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊருக்குத் தலைவனே, கள்ளினையும் அழகு
செய்யப்பெற்ற தேர்களையும் உடைய சோழநாட்டவர் கொங்குநாட்டாரை வெற்றிபெற்ற போரில்
சோழரின் வெற்றிக்கு உடன் நின்று போரிட்ட யானைகளைத்(களிறு) தன்னகத்தே
கொண்டவனும் போஒர் என்னும் ஊரின் தலைவனுமான பழையன் என்பான் எறிந்த வேலானது
தவறாது வெற்றியைத் தந்தது. அது போன்று, உன் பிழையில்லாத சொற்களைக் கேட்டு
உடன்போக்கு வருகின்ற தலைவியின் நிமிர்ந்து உயர்ந்த அழகிய வனப்பினை உடைய மார்பு
தளர்ந்து சாய்ந்த வயதான காலத்தும் பொன்னிற மேனியில் அசைந்தாடும் நல்ல நெடிய கூந்தல்
நரைத்து வெண்மையாக மாறினாலும், விட்டு நீங்காமல் வாழ்வாயாக.
கருத்து: தலைவா, உன் சொல் நம்பி நட்பு கொண்டு உன்னோடு உடன்வரும் தலைவியை முதுமை
அடைந்தபோது கைவிடாது காப்பாயாக என்று தோழி கூறுகின்றாள்.
55
தன்முயற்சி வினாக்கலும் விடைக்குறிப்புகளும் – I
1. நற்றிணையில் இடம்பெறும் உவமைகளைத் தொகுத்துரைக்க.
தாமரைதண் தாது தொடுக்கும் தீந்தேன் போல -தலைவன் உள்ளத்திற்கு இடி உவமை - –
பொன் கட்டளை அன்ன வட்டரங்கு – திரு மணி புரையும் மேனி – பழையன் வாய்த்தன்ன
நின் பிழையா நன்மொழி - கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்- இவற்றுக்கான
விளக்கம்.
2. நற்றிணையில் உள்ளுறை, இறைச்சி இடம்பெறும் திறத்தினை விவரிக்க.
பாடல் எண்கள் 3, 5 க்கான விளக்கம் உள்ளுறைக்கும் 6, 7 பாடல்களில் இறைச்சிப்
பொருண்மை தருதலும் அவ்வவ் பாடல்களில் விளக்கம் பெற்றுள்ளது. இவழ்ர்ரினைத்
த்குத்து உரைக்க வேண்டும்.
3. தலைவன் தன் நெஞ்சிற்கு உரைத்தனவாக அமைந்த பாடல்களின் கருத்துகளை
விரித்துரைக்க.
மாலை வந்தால் என் பிரிவினால் தலைவி வேதனை அடைவாள். எனவே, பொருள்
காரணமாகப் தலைவியைப் பிரிய எண்ணும் நெஞ்சமே மாலைக்காலம் தலைவிக்கு
வேதனை காலமாகும் எனக் கூறுதல் - தன் வரவை அறிய்ன் த்லைவி மகிழ்வா, கூறுவார்
யாருமிலர் என வருந்துதல் இவ்விரு கருத்துகளுக்கான விளக்கம் தர வேண்டும். .
56
பாடம் ஒன்பது
நற்றிணை பாடல்கள் 11 முதல் 20 வரையிலான
பாடல்களுக்கு விளக்கம்
2.3.0. பாட முன்னுரை
நற்றிணை பாடப்பகுதி பதினொன்று முதல் இருபது வரையிலான பாடல்கள் இம்மூன்றாம்
பாடப்பகுதியில் விளக்கம் பெறுகின்றன. இப்பாடல்களின் திணை, கூற்று துறை விளக்கங்கள்,
ஆசிரியர் பற்றிய குறிப்பு, பாடல் பொருள் விளக்கம் ஆகியவை விவரிக்கப்படுகின்றன.
இப்பாடப்பகுதியில் இடம்பெறும் திருக்குறள் கருத்து, சிலப்பதிகாரத்துடன் ஒப்புமையுள்ள
கருத்து ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இற்செறிப்பு, வரைவுகடாதல், தலைவி ஆற்றாமை
போன்ற துறை அமைந்த பாடல்களில் கவிஞர்கள் காட்டும் உணர்ச்சிப் பெருக்கு சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. காதல் உணர்வினால் துயரம் மிகும்போது ‘ காமம் மிக்க கழிபடர்கிளவி’யாக
அது வெளிப்படுகிறது என்பதை ஒரு பாடல் உணர்த்துகிறது. புன்னையைத் தங்கள்
தங்கையாகக் கண்ட தோழியும் தலைவியும் உங்கள் உள்ளத்தில் மெல்லிய உணர்வுகளை
எழுப்புவர் என்பது உறுதி.
2.3.1. திணை: நெய்தல், பாடியவர் : உலோச்சனார், கூற்று: தோழி கூற்று,
துறை: காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; 5
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
அவர் செய்த குறியானது(இடம் சுட்டுதல்) தவறி அவரது சந்திப்பு நிகழவில்லை. ஆகையால்,
மனம் வருந்திச் சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய்(உடல்) வாடி நிற்கிறாய். அயலார்
(நொதுமலர்) சொல்லும் பழிச் சொல் நினைத்து அவர் வரவில்லை என்னும் புலவியை நீ
நினைத்து, மனத்தில் எழும் (புலவி) கவலையை ஒழிப்பாயாக.
இனித் திண்ணமாக(உறுதியாக) அவர் நம்மிடம் வருவாரல்லர் என்னும் உன் நெஞ்சத்துள்
உள்ள புலவியைத்(கோபம்) தவிர்ப்பாயாக. அலை வந்து மோதிய இளமணல் அடுத்த
கடற்கரையின் கண்ணே தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியில் (சக்கரம்) நண்டுகள் மீது
ஏறாதவாறு விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்தி வருவதற்கு ஏதுவாக
கானலிடத்து நிலவு விரிந்தது காண்பாய்.
கருத்து: குறி தவறியதால் தலைவன் வாரான் என்று கவலை கொள்ளாதே, கானலில்
நிலவு பிரகாசமாயிருக்கிறது. வழியில் நண்டினைப் பாதுகாத்து தேரில் வரும் தலைவன்
நின்னையும் பாதுகாப்பான்.
2.3.2. திணை: பாலை, பாடியவர் : கயமனார், கூற்று: தோழி கூற்று,
துறை: தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.
(து. விளக்கம்: தோழி உடன்செல்லுதலுக்கு அஞ்சியதால் தலைவன் செலவு
57
தவிர்த்து வரைய முயல்வான்.)
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து, தன் கால்
அரிஅமை சிலம்பு கழீஇ, பல்மாண் 5
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்,
'இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என
நும்மொடு வரவுதான் அயரவும்,
தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10
தலைவனே! முடை நாற்றம் தீருமாறு விளம்பழம் இட்டுவைத்த மணம் கமழ்கின்ற
தயிர்த்தாழி. அத்தாழியில் கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த மத்து. அம்மத்தில்
வெண்ணெய் தோன்றக் கடைதலால் தறியடியில் ஓசை முழங்குகின்ற தங்கிய இருள் தீரும்
வைகறைப் பொழுது. அவ்விடியல் பொழுதில் தன் வீட்டார்க்குத் தன்னைத் தெரியாதபடி
மறைத்துத் தன் காலில் இடப்பட்ட சிலம்பைக் கழற்றி பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த
பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்ல்லும் என் தலைவி அப்பந்தினை கண்டவுடன் எங்கள்
பிரிவை எண்ணி உள்ளம் வருந்தி நிற்பாள். தோழிகளை விட்டுப் பிரிந்து உன்னோடு தான்
வருதலை மேற்கொண்ட அவள் கண்கள் அவளையும் மீறி அழுதன .
கருத்து: தோழியர் பிரிவினைத் தலைவி தாங்கமாட்டாள் என்று கூறித் தலைவனைச்
செலவழுங்குவித்தது. (செலவு அழுங்குதல் – பயணம் செல்லாது தவிர்த்தல்)
2.3.3. திணை: குறிஞ்சி, பாடியவர் : கபிலர், கூற்று: தோழி கூற்று,
துறை: இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி,
தலைவி மறைத்தற்குச் சொல்லியது.
எழாஅ ஆகலின், எழில்நலம் தொலைய
அழாஅ தீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக்கண்,
நல்லபெருந் தோளோயே! கொல்லன் 5
எறிபொன் பிதிரின் சிறுபல தாஅய்
வேங்கை வீஉகும் ஓங்கு மலைக் கட்சி
மயில்அறிபு அறியா மன்னோ;
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே.
தினைப்புனத்தைப் பாதுகாக்கும் காவலர், தினைப்பயிரை அழிக்க வந்த விலங்குகளை
அம்பெய்து கொன்று அவ்விலங்குகளின் உடம்பிலிருந்து பறித்து எடுத்த அம்பினைப் போல
செவ்வரி படர்ந்த கண்களை உடையவளே!
கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய
பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்ந்து நிற்கும் உயர்ந்த மலையில் கூட்டிலிருக்கும்
மயில்கள் அறியாது எனக் கருதி கிளிகள் தினைக் கதிர்களைக் கொய்து செல்வதை
58
அறியவில்லை; அட்க்கிளிகளை விரட்ட நீ எழவும் இல்லை. மேலும், உன் அழகிய நலம் கெடுமாறு
வேற்று மனிதர்கள் இருக்கும் இடத்தில் அழாமல் இருப்பாயாக.
கருத்து: தலைவியே, கிளியை ஓட்டவில்லை. பிறர் அறியுமாறு அழுகிறாய். இயற்கைப்
புணர்ச்சியால் உனக்கு ஏற்பட்ட வேறுபாட்டை நீ கூறாது மறைத்தாலும் உன் செய்கைகளால்
உணர்ந்தேன் என்று தோழி கூறுகின்றாள்.
இறைச்சி: மாவீழ்த்துப் பகழி என்றது தலைவனை மயக்கிப் பாய்ந்து மீண்ட கண்களை
உடையவள் தலைவி என்ற குறிப்பை உடையது.
நயம்: நீ அழுதால் தமர் அறிந்து வீட்டுக் காவல் செய்வர். தினைக்கதிர்களைக் கிளிகள்
கொய்கின்றன, அதனை மயில்கள் பார்த்து இருக்கவும் கிளிகள் இச்செயலை மயிலகள்
ஆறியாது என்று தினைக்கதிர்களைக் கவர்வது போல நின்னைக் காவல் புரியும் எனக்கு உன்
களவொழுக்கம் அறியாது என்று நின் காதலை மறைத்தனை என்று தோழி நயமுடன் கூறினாள்.
2.3.4. திணை: பாலை, பாடியவர் : மாமூலனார், கூற்று: தலைவி கூற்று,
துறை: இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
(இயற்பழித்தல் - தலைவன் இயல்பினைப்(செய்கை) பழித்தல்)
தொல்கவின் தொலைய, தோள்நலம் சாஅய,
நல்கார் நீதத
் னர் ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது 5
அலர்எழச் சென்றனர் ஆயினும்- மலர்கவிழ்ந்து
மாமடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம்சால் வயக்களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும் 10
கடுமான் புல்லிய காடு இறந்தோரே.
தோழீ! நீ தலைவனைப் பழித்துக் கூறாதே. குதிரைகளை உடைய கள்வர் கோமான் புல்லி
என்பவனுடைய வேங்கட மலைக்குச் சொந்தமான காட்டு வழியில் காந்தள் பூக்களின் இதழ்கள்
விரிந்து நிற்கும் மலையின்கண் வலிமையான களிற்றியானை பாம்பின்வாயில் சிக்கியது எனக்
கருதி, பிடி(பெண்)யானை எழுப்பும் பிளிறல் சப்தம் மலைகளின் பிளவுகளில் எதிரொலிக்கும்.
அவ்வழியில் சென்ற காதலர் என் தோளின் அழகு கெட்டும் என் பழைய அழகு தொலையுமாறும்
என்னைக் கூடி இன்பவாழ்க்கை வாழாது, சேரன் குட்டுவனின் கழுமலத்தின் மதில் அழியுமாறு
இடித்து அழித்தது மட்டுமல்லாமல் அன்றைய பொழுதே அவ்வூரைத் தீ ஊட்டும் பெரிய போரைக்
காட்டிலும் பெரிதாகிய பழிச்சொல் உண்டாகும்படி என்னைக் கைவிட்டுச் சென்றனர் என்று
கூற்கிறாய். எனினும், அவர் என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆதலால், அவர் குறித்த
பருவத்தில் வந்து அன்பு செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்க.
கருத்து: தலைவன் இயல்பினைத் தோழி பழிக்கின்றாள். தலைவி, தலைவனைப்
பழிக்காதே குறித்த பருவத்தில் வந்து அன்பு செய்வர் என்று கூறுகிறாள்.
இறைச்சி: களிறுபடும் துன்பம் கண்டு பெண்யானை மலையில் பிளிரும் என்றது,
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி வருந்தும் செயல் கண்டு ஊரார் சொல்லும் பழிச்சொல்
அவள் சேரியில் பரவும் என்பதைக் குறித்து நின்றது.
59
2.3.5. திணை: நெய்தல், பாடியவர் : அறிவுடைநம்பி, கூற்று: தோழி கூற்று,
துறை: வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.
முழங்கு திரை கொழீஇய மூரிஎக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம்போல, கணம்கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்னநலம் புதிது உண்டு,
நீபுணர்ந் தனையேம் அன்மையின், யாமே 5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசுஇல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! 10
முழங்குகின்ற அலைகள், கொண்டு வந்து சேர்த்த எக்கர் மணலை நுணங்கிய
துகிலின்(கொடி) நுடக்கத்தைப்(அசைதல்) போல மிகுதியாகக் காற்றுத் தூற்றும்
கடற்கரைக்குத் தலைவனே!
பூவைப் போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் அவளது
அருமையை நீ அறியவில்லை. ஆகையால், என் உள்ளத்தில் வருத்தமிருந்தாலும் உனக்கு உடன்பட்டு,
குற்றமற்ற கற்பினையுடைய பெண்ணொருத்தி, தன் குழவியைப் (குழந்தை) பேய்க்குப் பலிகொடுப்ப
எண்ணிப் பாசத்தால் அச்செயலைக் கைவிட்டது போல பிறந்தது முதலாக எம்முடன்
வளர்ந்துவந்த வெட்கத்தையும் கைவிட்டு நீங்கினோம். அதனால், இவ்வூரில் அலர்
எழுவதாகட்டும். கவலையில்லை.
கருத்து: தலைவா, நீ தலைவியின் நலத்தை நுகர்ந்தமையால் ஊரில் அலர் எழுகின்றது.
காலம் தாழ்த்தாது விரைந்து வந்து மணம் செய்து கொள்க.
உள்ளுறை: கடல் அலைகள் குவித்த எக்கர் மணலைக் காற்று அள்ளித் தூற்றினாற்
போல, நின்னால் விலக்கப்பட்ட தலைவியை ஊரார் அலர் தூற்றுவர் என்பது உள்ளுறை. இங்கு
கடல்-தலைவன், எக்கர் மணல் - தலைவி, காற்று தூற்றுதல் – ஊரார் அலர் தூற்றுதல்.

2.3.6. திணை: பாலை, பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார், கூற்று: தலைவன் கூற்று,


துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைநெருங்கித் தலைவன் செலவுஅழுங்கியது.
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை- வாழி, என்நெஞ்சே!- பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே,
விழுநீர் வியல்அகம் தூணி ஆக
எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்துஇனிது நோக்கமொடு செகுத்தனென்; 10
எனைய ஆகுக! வாழிய பொருளே!
60
என் மீது அன்பு கொண்ட நெஞ்சமே ! நெடுங்காலம் வாழ்வாயாக! நீ இப்பொழுது
கருதிய பொருள் ஈட்டும் முயற்சி தலைவியுடன் இல்லத்தில் இருந்து கொண்டு இருந்தால் நம்மை
வந்து அடையாது. இல்வாழ்க்கையை விட்டுவிட்டுப் பொருள் காரண்மாகத் தலைவியைப்
பிரிந்தால் இவளைப் புணரும் புணர்சச் ி இன்பம் அடைய முடியாது. ஆகையால், ஆதலின்
இவ்விரண்டினையுஞ் சீர்தூக்கிப் பொருள் காரணமாகப் பிரிந்தாலும் பிரியாது இல்லத்தே
இருந்தாலும் எது நல்லதோ அதனைச் செய்வதற்கு நெஞ்சமே உனக்கு முழு உரிமையும் உனக்கு
உண்டு. ஆயினும்,
யான் அறிந்த அளவில் நீ விரும்பும் பொருளோ, வாடாத மலரையுடைய
பொய்கையிடத்து(குளம்) ஓடுகின்ற மீன் செல்லும் வழியை(நெறி) கெடுவது போலத் தாமிருந்த
இடம் தெரியாமல் கெட்டு விடும் இயல்பை உடையது. பெரிய கடல் சூழ்ந்த அகன்ற இந்த
உலகத்தை அளக்கும் மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் அளவு பெரிய நிதியைப்
பெறுவதாயினும், அந்நிதியை நான் விரும்பேன். ஏனெனில், இக்கூந்தலை உடையவளின்
செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்கள் என்னோடு பொருந்தி நோக்கும் நோக்கத்தாற்
ஈர்க்கப்பட்டேன். ஆகையால். நெஞ்சே. நின்னொடு பொருள் ஈட்டும் முயற்சிக்கு வாரேன்.
அப்பொருள் எத்தன்மையவாயினும் ஆகுக! அப்பொருளானது அதனை விரும்புவாரிடம் சென்று
தங்கட்டும்.
கருத்து: நெஞ்சமே! பொருள் நிலையற்றது. பெருஞ்செல்வம் தந்தாலும் எனக்கு
வேண்டாம். ஏனெனில், தலைவியின் கண்பார்வை என்னைத் தாக்கின. எனவே, பிரிய மாட்டேன்
என்று தலைவன் செலவு தவிர்த்தான்.
61
2.3.7. திணை: குறிஞ்சி, பாடியவர் : நொச்சிநியமங்கிழார், கூற்று: தலைவி கூற்று,
துறை: முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
நாள்மழை தலைஇய நல்நெடுங் குன்றத்து,
மால்கடல் திரையின் இழிதரும் அருவி
அகல்இருங் கானத்து அல்குஅணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை, 5
'எவன் செய்தனையோ? நின்இலங்கு எயிறுஉண்கு'என,
மெல்லிய இனிய கூறலின், வல்விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து,
உரைத்தல் உய்ந்தனனே- தோழி!- சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி 10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான்தோய் வெற்பன் மார்புஅணங்கு எனவே.
தோழி! விடியற்காலையில் பெய்த மழையானது மலையில் இருந்து, கடல் அலைபோல
அருவியாகி வீழும் அகன்ற காடு. அக்காட்டில் ஓடும் அவ்வழகைக் காணும்போது அஃது
தலைவரை எதிர்ப்பட்ட இடமாதலின் என்னை மீறியும் கண்கள் அழுதன. அதனைக் கண்ட
அன்னை நீ ஏன் அழுகிறாய்? என்று வினவினள். மேலும், அழாதே! நின் அழகிய பற்களில்
முத்தம்(எயிறு) கொள்வேன் என்று மென்மையான சொற்களைக் கூறியபடி என்னை
நெருங்கினாள். அவள் கூறியதைக் கேட்ட நான், உயிரைக் காட்டினும் சிறந்த நாணத்தினைக்
மறந்து, மலையில் பூத்த காந்தளின் தேனையுண்ட நீலமணிபோலும் நிறத்தையுடைய வண்டு
யாழிற் கட்டிய இனிய நரம்பு ஒலித்தல்போல ஒலித்து நிற்கும் மலைநாட்டை உடைய தலைவன்
மார்பபைப் பிரிந்த துயரத்தால் அழுதேன் எனக் கூறத் தொடங்கி அப்பால் நினைவுவரத் தவிர்ந்து
உய்ந்தேன்.
கருத்து: அன்னை தலைவியின் அழுகைக்குக் காரணம் கேட்டாள். காரணத்தைக்
கூறினால் தலைவி வீடடு் க்காவலில் வைக்கப்படுவாள். ஆகையால், விரைந்து வந்து மணம்
செய்க என்று கூறினாள்.
இறைச்சிப்பொருள்: காந்தளை ஊதிய வண்டு இன்னும் தேன் அருந்தும் ஆசையால்
காந்தள் பூவினைச் சுற்றி ஒலித்துப் பறக்கும் நாடனாக இருந்தும், முன்பு என் நலனை உண்டு
பிரிந்தனன். அவன் நாட்டு அஃறிணையின் பண்பு கூட அவன் அறிந்திலன் என்று தலைவி
கூறினாள்.

2.3.8. திணை: பாலை, பாடியவர் : பொய்கையார், கூற்று: தோழி கூற்று,


துறை: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல
வருவர் வாழி- தோழி!- மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந்தானைப் பொறையன், பாசறை, 5
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
62
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. 10
தோழி! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது
நிரம்பிய வலிமையுடைய முள்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்து தனது நாட்டு
வாயிற்கதவில் பதித்து வைத்த கடற்கரைச் சோலையையுடைய தொண்டிநகர். அந்நகரின்
தலைவனும் பகைவரால் வெல்லுதற்கு அரிய வேற்படையினையும் உடையவன் சேரன் கணைக்கால்
இரும்பொறை. அப்பொறையின் பாசறையில் நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறக்கமில்லாத
வீரர்கள் அலை ஓய்ந்த கடல்போல கண்ணுறங்க மதநீர் இன்றி சினந்தணிந்த யானையின்
தந்தம்(மருப்பு) போன்று வெண்மையான அருவி வீழும் மழைநெறியில் சென்ற தலைவர் நீ
வருத்தமுற்ற உள்ளத்தோடு கொண்ட கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்பாயாக என்று
தோழி கூறுகிறாள்.
கருத்து: பாலை வழி சென்ற தலைவர் நின் வருத்தம் நீங்க விரைவில் வருவர் . நீ வருந்த
வேண்டாம் என்று தோழி கூறுகிறாள்.
வரலாற்றுச் செய்தி: சேரமான் கணைக்கால் இரும்பொறை மூவன் என்பானுடன் செய்த
போரில் வெறி பெற்று அவனது பற்களைப் பிடுங்கி அரண்மனை வாயிற் கதவில் பதிக்கின்றான்.
2.3.9. திணை: நெய்தல், பாடியவர் : நக்கண்ணையார், கூற்று: தோழி கூற்று,
துறை: புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது
இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக் கோட்டன்ன முள்இலைத் தாழை,
பெருங்களிற்று மருப்பின் அன்னஅரும்பு முதிர்பு,
நல்மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக்களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! 5
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நன்கு அறிந்தனை சென்மே!
இறாமீனின் புறம் போன்ற சருச்சரையும் சுறாமீனின் கொம்புபோன்ற முட்களையும்
உடையது தாழை. அத்தாழையானது, பெரிய களிற்றியானையின் மருப்புப்போன்ற அரும்பு
முதிர்ந்து; நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல் போல வேறாகத் தோன்றி விழாவெடுக்கும்
களமெல்லாம் கமழும் கடற்கரைக்குத் தலைவனே!; மணிகள் கட்டிய நெடிய தேரைப் பாகன்
செலுத்த நின்னூர்க்குச் செல்லும் பொருட்டுப் போக எண்ணி நிற்கிறாய். பின்பு நீ வருவாய் என்று
குறிப்பிட்ட சில நாள்கள் கூட இவள் உயிர்வாழ மாட்டாள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு
செல்வாய்.
கருத்து: தலைவி நின்னைப் பிரிந்தால் வாழாது உயிர் விடுவாள். ஆதலால், திருமணம்
செய்துகொண்டு பிரியாது தலைவியுடன் வாழ்வாயாக என்று தோழி கூறின்றாள்.
உள்ளுறை: தாழை அரும்பு முதிர்ந்து வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் என்றது
தலைவி காதற்கேண்மையிற் பெரிதும் முதிர்ந்து தன் சுற்றத்தாரினின்றும் வேறுபட்டு நின்னோடு
63
இருந்து நின்மனையில் இல்லறம் நிகழ்த்தும் செவ்வி பெற்றனள் என்பது உள்ளுறையாகக்
கொள்க.
2.3.10. திணை: பாலை, பாடியவர் : ஓரம்போகியார், கூற்று: தலைவி கூற்று,
துறை: பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத்
தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழி, தலைவிக்குச் சொல்லியதூஉம்
ஆம்.
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ்இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், 5
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண்பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை,
பழம்பிணி வைகிய தோள் இணைக் 10
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

ஐயனே! நின் காதற் பரத்தை நேற்று, மகிழ்நனாகிய உன்னிடத்துத் தங்கி உன் மார்பிற்
கிடந்து உறங்கி; வண்டுகள் பாயும் பூங்கொத்துக் கமழும் கூந்தல் சிறுபுறத்து வீழ்ந்தும் இடையிற்
கட்டிய உடை சரிந்து நிற்பவும் நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு
கண்கள் சுழலும்படி நோக்கி எமது தெருவின்வழிச் (மறுகின்கண்) சென்றனள். இன்று, உன்
பிரிவின் துயரத்தால் மார்பில் சுணங்கு அணியப் பெற்றவளாக முன்பு நின் மார்பில் பெற்ற
முயக்கத்தில் நெரிந்த குழையையும் அழகு இழந்த இரண்டு தோள்களையும் துவண்ட
கொடிபோன்று நின் முயக்கமில்லாது எமது தெருவில் சென்ற இளம்பருவ பரத்தையை யாம்
கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக.
கருத்து: உனக்கு உரிய காதல் பரத்தையோடு நீயும் செல்வாயாக என்று தலைவனிடம்
தோழி கூறுகின்றாள்.
2.3.11. தொகுப்புரை
இப்பாடல்களில் மூலமாகக் காதல் உணர்வின் பல்வேறு தோற்றங்களைக் கண்டீர்கள்;
தலைவி, தோழி, தலைவன், பாகன் போன்ற பாத்திரங்களின் பேச்சுகளில் சொல்லைத் தாண்டி
விரியும் மனக்குறிப்புகளை உணர்ந்தீர்கள். அன்புப் பெருக்கின் முன்னிலையில் காட்டுக்கோழி
தோழனாகவும் புன்னைமரம் தங்கையாகவும் மாறிவிடும் இயற்கையோடு தமிழன் கண்ட
உறவினை அறிந்தீர்கள்.
64
தன் முயற்சி வினாக்களும் விடைக் குறிப்புகளும் – II

1. நற்றிணை காட்டும் இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு முறை குறித்து எழுதுக.


தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போல (நற்.1) என்ற
பாடல் விளக்கம் – பாலைநிலக் கொடுமைகள் சுட்டுதல் - வெம்முனைச் சீறூர் - (நற்.3) -
மாலைப்பொழுதின் தன்மை உரன்மாய் மாலை (நற். 3) என மாந்தர்களின் துன்பத்தைச்
சுட்டுதல் - இயற்கைக் காட்சிகள் வழி அக வாழ்வின் மாந்தர் உணர்வுகளைச் சுட்டுதல்.
2. நற்றிணை வெளிப்படுத்தும் அக மாந்தர் உணர்வுகளைத் தொகுத்துரைக்க.
உடன் போக்கின் மூலமாகத் தலைவியை அடையப் பெற்றவன் மகிழ்சச ் ியை
அழிவில முயலும் ஆர்வ மாக்கள், வழிபடு தெய்வம் கட்கண்டாங்கு (நற். 9) –
உடன்போக்கில் செல்லும் தலைவனுக்குத் தோழி கூறும் அறிவுரை - நன்னெடுங் கூந்தல்
நரையொடு முடிப்பினும்/ நீத்தல் ஓம்புமதி(நற். 10)
3. நற்றிணையில் இடம்பெறும் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துரைக்க.
புறப்பொருட் செய்திகளை அகப்பாட்டில் தருதல் புறநானூறு போன்ற புறப்பாடல்களில்
இடம்பெறும் உண்மை வரலாற்றுத் தலைவர் பற்றிய செய்திகள், இடங்கள், நிகழ்வுகள்
ஆகியவற்றை உவமையாகவோ வருணனையாகவோ அகப்பாட்டுக்களில் புலவர் சிலர்
கையாளுகின்றனர் - தலைவியின் கூந்தல் மணத்திற்கு வல்வில் ஓரியின் காட்டு
மணத்தை உவமையாக்குகிறார் (நற். 6) பரணர் - தவறாத வாய்மையுடைய தலைவனின்
‘பிழையா நன்மொழி’க்கு குறிதவறாத பழையன் என்ற குறுநில மன்னனின் வேலை
உவமையாக்குகிறார் (நற். 10)
65
பாடம் பத்து
பிரிவு ஆ. குறுந்தொகை அறிமுகம்
மாணவர் பெறும் திறன்
1. கவிநயத்தால் குறுந்தொகை அனைத்து உரையாசிரியர்களாலும் மேற்கோளாக
எடுத்தாளப்பெற்ற நூல் என்பதற்கான காரணம் அறிந்து கொள்வர்.
2. அரிய உவமைகளைப் புலவர்கள் கையாளும் திறத்தினை உணர்ந்து கொள்வர்.
2.4.0. பாட முன்னுரை
நல்ல குறுந்தொகை என்னும் அடையுடன் இந்நூல் பழம் வெண்பா ஒன்றினால் இந்நூல்
குறிக்கப்பெறுகிறது. இக்குறுந்தொகையில் அமைந்த 20 முதல் 40 வரையிலான இருபத்தொரு
பாடல்கள் நமது பாடப்பகுதியாக அமைகிறது. இப்பாடல்கள் இரண்டு பாடப்பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன.
2.4.1. குறுந்தொகை கட்டமைப்பு
குறுகிய அடிகளால் ஆனதால இந்நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல்
எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. கடவுள் வாழ்த்துடன் 402 பாடல்கள் உள்ளன.
இரு பாடல்கள் மட்டும் 9 அடிகளைக் கொண்டுள்ளது. இதனை இயற்றியோர் 205 புலவர்கள்.
இந்நூலின் கடவுள் வாழ்தத் ினைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இது முருகவேள்
வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார்
பெயர் தெரியவவில்லை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ள
சங்க நூல் இதுவொன்றே ஆகும்.
2.4.2. தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்
குறுந்தொகையில் பாடலடிகளால் பெயர் பெற்ற புலவர்கள் உள்ளனர். வெள்ளி வீதியார்,
காக்கைப்பாடினியார், செம்புலப் பெயல் நீரார், அணிலாடு முன்றிலார், விட்ட குதிரையார், தனி
மகனார், குப்பைகோழியார், ஓரேருழவனார் மற்றும் குப்பைக்கோழியார் ஆகியோர் ஆவர்.
2.4.3. உரையும் பதிப்பும்
குறுந்தொகையின் முதல் உரையாசிரியராக சௌரி பெருமாள் அய்யங்கார் விளங்குகிறார்.
இந்நூலுக்குப் பழம் உரையாசிரியர்களான பேராசிரியர் 380 பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர்
பின் 20 பாடல்களுக்கும் உரை எழுதி உள்ளனர். இவ்விருவர் உரைகளும் தற்போது
கிடைக்கவில்லை. இந்நூலினை முதலில் பதிப்பித்தவர் சி,வை தாமோதரம் பிள்ளை. பின்னர்
உ,வே.சாமிநாதைய்யர் அராய்ச்சி பதிப்பினை வெளியிட்டார். ரா.ராகவய்யங்கார் நயவுரையுடன்
அண்ணமலைப் பல்கலைக்கழகம் இந்நூலினை வெளியிட்டு உள்ளது.
2.4.4. பேச்சாளர்கள் மேற்கோள் காட்டும் சிறப்பான தொடர்கள்
 ”இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே “
 ’நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே’
 செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே
 வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்
66
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி
 நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
 யாருமில்லை தானே கள்வன்
2.4.5. தொகுப்புரை
குறுந்தொகை படிப்போருக்கு கழிபேர் உவகை அளிப்பது. அன்றைய வாழ்வியல்
எதார்த்தங்களைக் கண்முன்னே கொண்டு நிறுத்தும் ஆற்றல் பெற்றது. ஒருவர் மீது ஒருவர்
வைக்கும் நம்பிக்கையின் எல்லையற்ற பரப்பினைக் காட்கிறது. காதல் களவில் இன்பத்தையும்
ஊரார் அலரால் துன்பத்தினையும் ஒருசேரத் தர வல்லது என்பதை இப்பாடல்கள் வழி
உணரமுடியும்.
67
பாடம் பதினொன்று
2.5.0. பாட முன்னுரை
இப்பாடப்பகுதியில் குறுந்தொகை இருபது முதல் முப்பது வரையிலான பத்து
பாடல்களுக்கான கருத்துகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை,
யார்கூற்று, பாடியவர், பாடலுக்கான விளக்க உரை, மையக் கருத்து, உவமை மற்றும் நயம் என்னும்
அடிப்படையில் விளக்கப்பட்டு இருக்கும்.
2.5.1. திணை:பாலை, பாடியவர்: கோப்பெருஞ் சோழன், கூற்று: தலைவி,
துறை: செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்மீது அருளையும் அன்பையும்
நீக்கிப் பிரிவது என்பது அறிவுடைய தலைவனுக்கு அழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
அருளு அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவ மாக மடந்தை நாமே.
தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தம் துணைவியை விட்டு, பொருள் தேடும்
முயற்சியின் பொருட்டு பிரியும் செயலை உடைய தலைவர் அறிவுடையவராயின், அந்த ஆற்றலை
உடையோர் அறிவுடை யவரே ஆகுக. அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம்,
அறிவில்லாதவள் எனில் அப்படியே ஆகுக!
கருத்து: என்னைப் பிரிந்து செல்லுதல் அறிவுடைய தலைவர்க்கு அழகன்று.
2.5.2. திணை: முல்லை. பாடியவர்:ஓதலாந்தையார், கூற்று: தலைவி கூற்று,
துறை: தலைவி, கானம் அவர் வருங் கார்காலத்தைக் காட்டியது எனினும் யான் இது
கார்காலம் என்று தேறேன் என்றறிக; எனெனில் அவர் பொய்கூறாராகலின் எனத் தான்
ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.)
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூக் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
தலைவி தோழியை நோக்கித் ‘தோழி! வண்டுகள் மொய்க்கும்படி நெருங்கிய
பூங்கொத்தை இடையிடையே உடையதாய், பொன்னைக் கொண்டு செய்த அழகிய அணிகளை
அணிந்த மகளிரது கூந்தலைப் போன்று புதிய கொன்றைப்பூக்கள் நிறைந்த காடு. இது
காண்பவர்களுக்கு கார்காலம் என்று உணர்த்தினாலும் நான் நம்பமாட்டேன்(தேறேன்). ஏனெனில்,
(கார்ப்பருவத் தொடக்கத்தில் வந்து விடுவேன் என்று சொன்ன) தலைவர் பொய் கூறமாட்டார்.
கருத்து: இது கார்ப்பருவம் அன்று.
2.5.3. திணை: பாலை, பாடியவர்: சேரமானெந்தை, கூற்று: தோழி,
துறை: செலவுக் குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
(தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை
நோக்கி, “தலைவர் நின்னை அழைத்துக் கொண்டே செல்வார்” என்று தோழி கூறி
ஆற்றுவித்தது.)
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
68
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனி லஞ்சினை கமழும்
தேமூ ரொண்ணுத னின்னொடுஞ் செலவே.
நீர் வடியும் கண்ணை உடைய தலைவியே, உன்னை இங்கு தங்க விட்டுப் பிரிவார் யாவர் ?
யாவருமில்லை). மலையை அழகு செய்யும் வெண் கடப்ப மலரினது அழகிய கிளைகள் வேனிற்
காலத்தில் மலர்ந்து மணக்கின்ற இனிய ஊர் எண்ணுதல் நின்னொடு ஆகும்.
கருத்து: தலைவர் நின்னைப் பிரிந்து செல்லார்.
69
2.5.4. திணை:குறிஞ்சி, பாடியவர்: ஔவையார், கூற்று: தோழி,
துறை: கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.
அதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிந்த தலைவனைக்
கூடமுடியாமல் தலைவி ஆற்றாமை கொண்டு மெலிகிறாள்; அவள் நோய்க்கும் காரணம்
அறிவதற்காகச் செவிலி கட்டுவிச்சி(குறி கூறுபவள்)யை அழைத்துக் குறிகேட்கிறாள்;
அப்போது இடையே குறுக்கிடும் தோழி, ‘இந்நோய் தெய்வத்தால் வந்ததன்று, ஒரு
தலைவனால் வந்தது’ என்பதைச் செவிலிக்கும் குறிப்பாக உணர்த்தித் தலைவியின்
களவுக் காதலை வெளிப்படுத்துகிறாள். (அறத்தொடு நிற்றல்: தலைவி களவுக்
காதலைக் கற்பாக மாற்றும் முயற்சி)
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்க்கு ஒப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே
அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே.
‘கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே! சங்குமணி மாலை(நரைத்த கூந்தல்) போன்ற அழகிய
வெண்மையான நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே! நீ இப்பொழுது பாடிய பாட்டையே
மீண்டும் பாடுவாயாக. மீண்டும் மீணடு ் ம் அந்தப் பாட்டையே பாடுக. தலைவனின் அழகிய பெரிய
குன்றைப் பற்றிப் பாடினாயே, அந்தப் பாட்டையே பாடு!’
(கருத்து) இவள்பால் அன்பு பூண்ட தலைவருடைய குன்றத்தைப் பாடின் இவளது
வேறுபாடு நீங்கும்.
2.5.5. திணை: பாலை, பாடியவர்:பரணர், கூற்று:தலைவி,
துறை: பருவங்கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது.
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோடு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.
பெரிய தாளையுடைய வேம்பின் மலர் பூக்கும் இப்பருவமே(பின்பனிகாலம்) எனது
தலைவன் இல்லாமல் கழிந்துவிடுமோ? ஆற்றில் மூழ்கி எழுந்த யானை மிதித்த ஒரு பழம் போல
நான் வருந்தும்படி மகளிர் நாவானது அலர் கூறி கல்லென முழங்கின.
2.5.6. திணை : குறிஞ்சி, பாடியவர்: கபிலர், கூற்று: தலைவி,
துறை: வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(அதாவது, தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் நீட்டிப்பது கண்டு
வருந்திக் கூறுவது.)
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! தலைவர் என்னைக் களவுப்
புணர்ச்சியில் கூடிய பொழுது அவ்விடத்தில் சாட்சியாகக் கூடியவர் ஒருவரும் இல்லை. அது
நிகழ்ந்த களத்தில் (இடத்தில்) இருந்தவர் அவர் ஒருவரே ! அவர் எனக்குக் கூறிய
உறுதிமொழியைப் பொய் ஆக்குவார் ஆனால், நான் என்ன செய்ய முடியும்?
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கோ
70
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
எவருமிலர் தலைவனே கள்வன் ஆவான். தான் செய்த சத்தியத்தை பொய்தத ் ான்
எனின் யான் என்ன செய்ய முடியும்? என்னை மணந்த சமயத்தில் தினையினது காலினை ஒத்த
கால்களை உடைய குருகானது தன் உணவிற்காக ஒழுகு நீரில் ஆரல் மீனை உண்பதற்காக
காத்திருந்தது.
2.5.7. திணை: குறிஞ்சி, பாடியவர்: வெள்ளிவீதியார், கூற்று: தோழி கூற்று
துறை: தோழி அறத்தொடு நின்றது.
(தலைவியின் மன வாட்டம் கண்ட தாயர் இவ்வேறுபாடு எதனால் வந்தது என அறியும்
பொருட்டு கட்டுவிச்சியிடம் வினவினர். அப்போது, தோழி, “இவள் ஒரு தலைவனொடு
நட்புப் பூண்டாள்; அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று கூறி அறத்தொடு நின்று
தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள்.)
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை
பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்
தகாஅன் போலத் தான்றீது மொழியினும் 5
தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய்
வரையாடு வன்பறழ்த் தந்தைக்
கடுவனு மறியுமக் கொடியோ னையே.
(ப-ரை.) அரும்புத் தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின்
பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போல தோன்றுதற்கு
இடமாகிய நாட்டை உடைய தலைவன். இத்தலைவன் தலைவீக்குத் உரிய தகுதி இல்லாதவன்
என்றும் இந்நோய் தெய்வத்தால் வந்ததென்று கட்டுவிச்சி தீங்கானதைக் கூறுகின்றாள்.
எனினும், அவனிடம் உண்டான உறவு(ஒழுக்கம்) பொய்யானதன்று. இனிய மாம்பழத்தினை
உண்ணும் முள்ளைப் போன்ற கூர்பற்களையும் சிவந்த வாயையும் உடைய விளையாடும் வலிய
குட்டிக்குத் தந்தையான ஆண் குரங்கும் அக்கொடிய தலைவனை அறியும்.
கருத்து: இத் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே
ஆகும்.
உள்ளுறை: மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிடத்தில் இருந்த மயில் பூக்கொய்
மஅளிரைப்போல இருந்தது என்பது தலைவன் தனது நெஞ்சில் பிறிதொன்றை நினைத்திருந்தும்
வெளியில் தலைவிக்கு வேண்டியவன் போலத் தென்பட்டான்.
2.5.8. திணை : பாலை, பாடியவர்: வெள்ளிவீதியார், கூற்று: தலைவி,
துறை: பிரிவிடை ஆற்றால் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கன்றும் உண்ணாது கல்த்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீய வேண்டும்
திதலை ஆகத்துஎன் மாமைக் கவினே.
71
‘நல்ல பசுவினது இனிய பால் கன்றும் உண்ணாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல்,
மண்ணில் வீணாகச் சிந்தியது போலத் தேமல் படர்ந்த அல்குலையுடைய என் மாமை அழகு
எனக்குப் பயன்படாமலும் என் தலைவர்க்கு இன்பம் செய்யாமலும் வீணாகிக் கொண்டிருக்கிறது.
எனது அழகைப் பசலை விரும்பி உண்கிறது. .
2.5.9. திணை: பாலை, பாடியவர்: ஒளவையார், கூற்று: தலைவி கூற்று,
துறை: வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
(தலைவன் திருமணத்தின் பொருட்டுவரை பொருளுக்காகப் தலைவியைப் பிரிகின்றான்.
அவ்வாறு பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராது குறித்துக் கவலையுற்ற தோழியை நோக்கி.
“என் துன்பத்தை அறியாமல் துயில்கின்ற இவ்வூரினரை நான் யாது செய்வேன் ?” என்று தலைவி
சினந்து கூறியது).
முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
சுழன்றும் அசைந்தும் வருகின்ற தென்றல் காற்று என்னை வருத்துகிறது.
இவ்வருத்தத்தினால் மிகுதியான என் காம நோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித்
தூங்கும் ஊரில் உள்ளவர்களை முட்டுவேனோ? தாக்குவேனோ? ஒரு காரணம் கொண்டு,
ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக கூப்பிடுவேனோ? இன்னது செய்வது என்பது
அறியாமல் திகைத்து நிற்கிறேன்.
கருத்து: என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன்
ஆயினேன்.
2.5.10. திணை: பாடியவர்: ஔவையார், கூற்று: தலைவன் கூற்று,
துறை: இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், இவர் எம்மை மறுத்தார் என்று
வரைந்து கொள்ள நினையாது பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை
நோக்கிக் கூறியது
தலைவன் இரவுக் குறியை விரும்ப, அதனைத் தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும்
என்று கூறுகிறாள். பின்னும் அவனது நெஞ்சம் இரவுக் குறியை விரும்ப, “நின் குறையை
அறிந்து நிறைவேற்றுவார் அரியராகவும், நீ வருந்துதலினாற் பயன் யாது?” என்று அவன் தன்
நெஞம் நோக்கி இரங்கிக் கூறியது.
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 5
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே
நெஞ்சே நல்ல உரைகள் நீங்கிப் பயனற்ற உரைகள் பரவப் பெற்று பெய்தலை உடைய
மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பச்சை மண்ணால் செய்த மண்பாண்டத்தைப் போல
உள்ளத்தினால் பொறுக்க முடியாத, ஆசை வெள்ளத்தில் நீந்தி , பெறுதற்கு அரிய தலைவியை
பெற விரும்புகிறாய். உயர்ந்த மரக்கொம்பில் உள்ள குட்டியை உடைய பெண் குரங்கு தன்
குட்டியால் தழுவப் பெற்று இருப்பது போன்று மனம் பொருந்த உன் கருத்தைத் தழுவிக் கொண்டு
72
உன் தேவையைக்(குறை) கேட்பாரைப் பெற்றால் (உன்துயர் குறையும்). அவ்வாறு ஒரு உதவி
செய்வாரைப் பெறவில்லை.
கருத்து: இனித் தலைவியை இரவில் காண்டல் அரிது.
2.5.11. திணை: பாலை, பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார், கூற்று: தலைவி கூற்று,
துறை: நீ ஆற்றாகியது ஏன் என வினாய தோழிக்குத் தலைமகள், யான்
ஆற்றினேன், எனினும் கனவு வந்து என்னை இங்ஙனம் நலிந்தது என்று கூறியது.
(தலைவன் திருமணத்திற்காகப் பொருளீட்டப் பிரிந்த காலத்தில் தலைவியது
ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினவுகிறாள். தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும்
யான் தலைவனை மருவியதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுறு வேனாயினேன்”
என்று கூறியது.)
கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சா அய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே,
தோழி, கேட்பாயாக. பொய் கூறுதலில் வன்மை உடைய தலைவன் இரவில், என்
மெய்யினை மிகத்தழுவி உடம்புடன் அணைத்தலைப் பொருந்தியதை உண்மை என்று
எண்ணும்படியான பொய்க்கனவு என்னை மருட்டியது. இதனால் துயிலுணர்ந்து எழுந்து
தலைவன் என எண்ணிப் படுக்கையைத் தடவினேன். (தலைவனைக் காணாது) வண்டுகள்
வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து அழகு கெட்டுத் தனியளாய் ஆனேன்.
ஆதாலால் நான் மிகவும் இரங்கத்தக்கவள்.
கருத்து: யான் தலைவனோடு அளவளாவியதாகக் கனாக் கண்டேன்.
2.5.12. S தொகுப்புரை
தலைவன் மீதான தலைவியின் நம்பிக்கை, அவன் பிரிவில் உண்டாகும் மனப்போராட்டம்,
திருமணத்திற்குத் தோழி எடுக்கும் முயற்சிகள், செவிலி தலைவியின் உடல் வேறுபாடு கண்ட
செவிலியின் வெறியாட்டு, மற்றும் அறத்தொடு நிற்றல் ஆகியன இப்பாடத்தின் மூலம் அறிந்து
கொண்டீர், இனி மீதமுள்ள பத்துப் பாடல்களின் விளக்கத்தினை அடுத்த பாடத்தில் காண்போம்.
73
தன்முயற்சி வினாக்களும் விடைக்குறிப்புகளும் - I
1. தலைவி வாழ்வில் தோழியின் பங்கினைக் குறுந்தொகை நும்பாடப்பகுதி கொண்டு
விளக்குக.
தலைவனின் செலவு உணர்ந்து வருந்திய தலைவியை ஆற்றுவித்தல் – குறித்த பருவம்
கண்டு ஆற்றாமையுற்ற தலைவியை கார்ப்பருவமன்று என ஆற்றுதல் – களவறிந்த
செவிலிக்கு அறத்தொடு நின்று கற்பு நெறிக்குக் கொண்டு செல்லுதல் – ஆகிய
குறுந்தொகை பாடல் கருத்துகளை விளக்க வேண்டும்.
2. தலைவியின் உள்ளத் துன்பத்தினைக் குறுந்தொகை கொண்டு விளக்குக.
பருவங்கண்டு வருந்தியது - எழுகுளிறு மிதித்த பழம் போல – பொய் சத்தியம் செய்த
தலைவன் - யாருமில்லை தானே கள்வன்(25) பாடல் விளக்கம் -விரைவில் வருவேன்
என்ரு சொல்லிச் சென்றவர் வாராமைக்கு வருந்துதல் - கன்றும் உண்ணாது (28) பாடல்
விளக்கம் - ஆற்றாமை தோன்றக் கூறும் முட்டுவேன் கொல் பாடல் விளக்கம்(29) -
ஆற்றியிரு என்பதற்குத் தலைவன் கனவில் வந்து என்னை மருட்டினான் அதனால்
துயருற்றேன் எனக் கூறும் மகவுடை மந்திபோல பாடல் விளக்கம் (30) – ஆகிய பாடல்கள்
மூலம் விளக்க வேண்டும்
3. அகவன் மகளே எனத் தொடங்கும் குறுந்தொகை பாடற் கருத்தினைத் தருக.
தோழி அறத்தொடு நிற்றல் குறித்த துறை விளக்கம் – பாடலின் மையக் கருத்து –
பாடலடிகள் ஆகியன எழுத வேண்டும்

பாடம் பன்னிரண்டு
பாட முன்னுரை
இப்படப்பகுதியில் குறுந்தொகையின் 31 முதல் 40 வரைலான பத்து பாடல்கள் விளக்கம்
பெறுகின்றன. திணை, பாடியவர், கூற்று, துறை அடுத்து பாடலும் அதற்கான விளக்கமும்
இடம்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, மையக் கருத்து, உவமை மற்றும் நயம் என்னும்
அடிப்படையில் விளக்கப்பட்டு உள்ளது.
2.5.13. திணை: மருதம், பாடியவர்: ஆதிமந்தி, கூற்று:தலைவி கூற்று,
துறை:நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.
(அயலார் தலைவியை மணம் செய்ய பெண்கேட்டு வீட்டுக்கு வருகின்றனர் . அதுவரை
தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும்
இயல்புடையவள். என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த
தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ?
பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
மள்ளர் குழீஇய விழவினானும்,
74
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்தத ்
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.

வில் முதலிய படைக்கலம் பொருந்திய வீரர்கள் குழுமிடும் விழா இடங்களிலும் மகளிர்


சேர்ந்து துணங்கை ஆடும் இடங்களிலும் மேலும், எல்லா இடங்களிலும் தேடியும் என்
தலைவனைக் காணவில்லை. அவனைப் பலகாலும் காதலால் தேடிய நானும் ஒரு ஆடுகளத்து
மகளே(போல் ஆனேன்). சங்கை அறுத்துச் செய்த என் வளையல் நெகிழும்படிச் செய்த
குரீலும்(தலைவன்) ஒரு ஆடுகளத்து மகனே ஆவான்.
75
2.5.14. திணை: குறிஞ்சி, பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்,
கூற்று: தலைவன், துறை: பின்நின்றான் கூறியது.
(தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடன்பட மறுக்கத் தலைவன், “யான் தலைவியின்
பிரிவை ஆற்றேன்; அவளை அடையும் பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்;
சும்மாயிருப்பின் வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேரா வண்ணம் நீ குறை(தேவை) நேர்வாயாக”
என்று அவளுக்குக் கூறியது).
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர்துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுதுஇடை தெரியின், பொய்யே காமம்:
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.
பிரிந்தோர் செயலற்று வருந்துவதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும் ஊரினர்
துயில்கின்ற நடுஇரவும் விடியற்காலமும் என்ற இச்சிறு பொழுதுகள் எல்லாம் பிரிவு வருமாயின்
காமவேட்கை உடையவரை வருத்தும் இயல்பினை உடையன. அப்போது, பனை மடலால் செய்த
குதிரையின் உருவத்தின்மீது ஊர்ந்து தெருவில் மடலேறினால் யாவரும் தலைவியால் இவன் இச்
செயல் செய்தானென்று தலைவி செய்த துயரைப் பலர் அறிவர் . இவ்வாறு செய்தல்
தலைவிக்குப் பழி தருவதாகும். அது செய்யாது நான் உயிரோடு வாழ்தலும் பழி தருவதாகும்.
(கருத்து) தலைவியைப் பிரியின் உயிர் வாழேன்.
2.5.15. திணை: மருதம், பாடியவர்: படுமரத்து மோசிகீரன், கூற்று: தலைவி கூற்று,
துறை: வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில்
நேர்வாள் கூறியது. -
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப்
பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது).
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே.
தோழியே, இப்பாணன் ஓர் இளைய மாணவனாய் இருகிறான். தனது ஊரில் உள்ள
மன்றத்து(பொதுவிடம்) எதனாலோ இரந்து பெற்ற உணவினால் நிரம்பப் பெறாத மேனியொடு
விருந்தின் பொருட்டுச் செல்லும் மிக்க பெருமையை உடையவனாய் இருக்கிறான்.
கருத்து: இவன் இங்கும் விருந்தைப் பெறுவான்.
2.5.16. திணை: மருதம், பாடியவர்: கொல்லிக் கண்ணன், கூற்று: தோழி கூற்று,
துறை: வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச்
சொல்லியது.-
(தலைவியை திருமணம் செய்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவன்
ஆதலின், இனி அவன் வரைவான் என்னும் செய்தியைக் கேட்டு இதுவரை உண்டான பலவகைத்
துன்பங்களும் இல்லாது இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவன் வரைவுக்கு
வந்ததைத் தலைவிக்கு உணர்தத ் ியது.)
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
76
அட்டமள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னஎம்
குழல்விளங் காய்நுதற் கிழவனும் அவனே
தலைவியை விட்டு நீங்காத செவிலி பாதுக்காத்தும் களவு மணத்தை ஆதரிக்காத
தந்தை முதலானோர் தலைவன் மணத்திற்கு மறுக்க, தலைவனைக் கூட இயலாத தலைவி
தனித்து துயருற்று உறங்கும் வருத்தம் இல்லாது போகும்படியான ஒரு இனிய செய்தியினை
இவ்வூரார் கேட்டு மகிழட்டும். அஃது யாதெனில்,
கடற்கரையில் உள்ள குருகின் பெரிய தொகுதியானது(பறவைக் கூட்டம்), பகைவரைக்
கொன்ற வீரர்களின் வெற்றி முழக்கத்தினை கேட்டு அஞ்சுதற்கு காரணமான குட்டுவனுக்குரிய
மரந்தை என்னும் நகரைப் போன்ற நுதலை உடையாளுக்கு உரிய தலைவனும் அத்தலைவனே
ஆவான்.
கருத்து: முன்னர் மணம் மறுக்கப்பட்ட தலைவனே இன்று மணம் முடிக்க உள்ளான்.
2.5.16.1. திணை: மருதம், பாடியவர்: கழார்க் கீரன் எயிற்றி, கூற்று: தலைவி கூற்று,
துறை: பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது.
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று
தோழி கேட்கின்றாள். அதற்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் இருந்த என் கண்கள்
இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின் மேலேற்றித் தலைவி
உரைத்தது.)
நாண்இல மன்றஎம் கண்ணே நாள்நேர்பு,
சினைப்பசும் பாம்பின் சூல்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி அவிழ
நுண்உறை அழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. (35)
வேனில் பருவத் தொடக்கத்தில் மீண்டு வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றவர்க்கு
உடன்பட்டு பின்னர், கருவுற்ற பச்சைப்பாம்பின் சூலினை ஒத்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்.
இவ்வாறு மலர்வதற்குக் காரணமான நுட்பமாகத் தூவுகின்ற முகிலில் (மேகம்) இருந்து
மழையோடு கூடிய வாடைக்காற்று வீசும் கூதிர் காலம். அக் கூதிர் காலத்தில் பிரிந்து உறையும்
த்லைவர் பொருட்டு அழும் என் கண்கள் நாணமில்லாதன.
கருத்து: அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது அதன் தவறு.
2.5.17. திணை: குறிஞ்சி, பாடியவர்: பரணர், கூற்று: தலைவி கூற்று,
துறை: வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள் எனக் கவன்று வேறுபட்ட
தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது. -
(தலைவன் திருமணத்திற்காகப் பொருளீட்டப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி
ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று
சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக்
கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்தத ் ியது.)
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
77
தோழி, உருண்டைக் கல்லின் அயலில் படர்ந்த மாணைக்கொடியானது தூங்கும்
யானையின் மீது படரும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவன் நின் நெஞ்சு இடமாக
இருந்து, நீயெலன் என – பிரியேன் என்று எனது நல்ல தோளை அணைத்த பொழுது
அத்தலைவன் தவறாத உறுதிமொழியைக் கூறினான். அது உனக்கு துன்பம் தருவதாக
அமையுமோ? அமையாது.
கருத்து: தோழி, தலைவன் வஞ்சினத்தை உரைத்து மறந்திருத்தல் எனக்குத் துன்பம்
தருவது; அதனை நானே பொறுத்து ஆற்றியிருப்ப உனக்கு வருத்தம் உண்டாதற்குக்
காரணமில்லை.
இறைச்சிப் பொருள்: மலையின் பக்கத்துப் படர்ந்த மாணைக்கொடி தங்கிய
யானையிடத்துப் படர்வது போலும் குன்றஞ் சூழ்ந்த நாடன் என்பது, வரைதற்கு வேண்டிய
பொருளைக் கொண்டு வந்து வரைந்து கொண்டு சேர்ந்திருக்கப் பிரிந்த பிரிவும் மறந்து
கைவிட்டுப் பிரிந்தாற் போன்று நினக்குத் துயர் தந்தது. உண்மையை அறிய முடியாமையால்
என்பதாம்.
2.5.17.1.1.1. திணை: பாலை, பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ, கூற்று: தோழி
கூற்று,
துறை: தோழி, ''கடிது வருவர்'' என்று, ஆற்றுவித்தது. -
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர்
சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு
நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி
ஆற்றுவித்தது.)
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.(37)
தோழி, தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நல்குதலையும் செய்வர்; அவர்
நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற வழி பெண்யானையினது பசியை நீக்கும்பொருட்டு, பெரிய
துதிக்கையையுடைய ஆண்யானை (அதன்மீது வைத்த அன்பினால்) மெல்லிய கிளைகளை
உடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடி பருகச் செய்யும் அன்பைப்
புலப்படுத்தற்கு இடமாக உள்ளன.
கருத்து; தலைவர் விரைவில் மீண்டு வருவர்.
இறைச்சிப் பொருள்: பிடியின் பசியை ஒழித்தற்குக் களிறு யாமரத்தைப் பிளக்கும் அவர்
சென்றவழி என்பது அன்புடைய அவர் அதனையுன்ம்காண்பார், பிரிவு நீட்டிப்பவர் மீண்டு வருவர்.

2.5.18. திணை: குறிஞ்சி, பாடியவர்: கபிலர், கூற்று: தலைவி கூற்று,


துறை: வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத்
தோழிக்குக் கூறியது. -
(தலைவன் திருமணத்திற்காகப் பொருளீட்டப் பிரிந்து நெடுங்காலமாக வரவில்லை,
இதனால் வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும்
பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நல்லது என்று
கருதாமல் வருந்துவது என்ன காரணம் குறித்து என்று வினவுகிறாள். அவர் பிரிவை ஆற்றும்
வலிமை என்னிடம் இல்லை என்று தலைவி உணர்த்தியது.)
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
78
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.( 38.)
தோழி, காட்டிலுள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளை வெயிலில் விளையாடும்
முசுவின்(குரங்கு) குட்டி உருட்டுதற்கு இடமாகிய மலை நாட்டையுடையவனாகிய தலைவனது
நட்பு அவன் பிரிய மை தீட்டப்பெற்ற கண்ணினின்று பெருகும் நீரோடு ஒருபடியாக அப்பிரிவை
நினைந்து வருந்தாமல் பொறுத்துக்கொள்ளுதலில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே
எக்காலத்தும் மிக நல்லதாகும்.
கருத்து: தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையி லேனாயினேன்.
உள்ளுறை: மயிலின் முட்டையை ஈனும்போது உள்ள துயரத்தை அறியாத முசுக்குருளை
முட்டையின் மென்மைத் தன்மை அறியாது உருட்டுவது போல என் வருத்தமும் காமத்தின்
மென்மையும் கருதாது தோழி உரைப்பதற்கு ஒப்புமை. இங்கு, முசுக்குருளை தலைவன், மயில்
தலைவி முட்டை தலைவியின் காதல் மென்மை.

2.5.19. திணை: பாலை, பாடியவர்: ஒளவையார், கூற்று: தலைவி கூற்று,


துறை: பிரிவிடை ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்கு, ''யாங்ஙனம்
ஆற்றுவேன்?'' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைவி கூறியது.
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று
வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை
யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான்
ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)
''வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்'' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
தோழி, நம் மார்பகத்தில் துயிலுதலை வெறுத்தவர், பிரிந்து சென்ற வழியானது, (ஆறு),
வெம்மையான வலியையுடைய விரைவான காற்றானது, மரக்கிளையிலே, வீசுதலால், வாகை
மரத்தினது(உழிஞ்சில்) நெற்றினது முற்றிய வற்றலானது ஒலித்தற்கு இடமாகிய மலைகளையுடைய
கடத்தற்கரிய சுரமாகும், என்று கூறுவர்.
(கருத்து) தலைவர் சென்ற வழியின் செல்லுதற்கு அரியது. அவ்வழிக் கொடுமையை
நினைந்து நான் வருந்தினேன்(ஆற்றேன்) என்பது தலைவி கூற்று.

2.5.19.1. திணை: குறிஞ்சி, பாடியவர்: செம்புலப்பெயல்நரீ ார், கூற்று: தலைவன் கூற்று,


துறை: இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், ''பிரிவர்'' எனக் கருதி அஞ்சிய
தலைமகள் மனக்குறிப்பு உணர்ந்து தலைமகன் கூறியது.
(தலைவனும் தலைவியும் யார் துணையுமின்றி தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்தனர்.
அப்போது, ‘இவன் எந்த ஊரோ, நம்மைப் பிரிந்து போய்விடுவானோ, மறப்பானோ, துறப்பானோ,
அவ்வாறு துறந்தால் நாம் உயிர்வாழ்வது எப்படி?’ என்பன போன்ற ஐயங்கள் தலைவிக்கு
எழுந்தன. அவள் மனத்தில் ஓடுவதை அவளது முகக்குறிப்பால் அறிந்த தலைவன், ‘நம் உறவு
பிரிக்க முடியாதது’ என்பதை உணர்த்தி அவளைத் தேற்றுகிறான்.)
79
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்னுடைய தாயும்(யாயும்), நின் தாயும்(ஞாயும்), ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின்
முறையினராவர்? என் தந்தையும்(எந்தையும்), உன் தந்தையும்(நுந்தையும்), எம்முறையில்
உறவினர்? இப்பொழுது பிரிவின்றி இருக்கும் நானும்(யானும்) நீயும், ஒருவரையொருவர், எவ்வாறு
இதற்கு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லை என்றாலும் செம்மண் நிலத்தின்கண்ணே
பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து ஒன்றொடொன்று கலத்தல் போல அன்புடைய நம்
இருவரின் நெஞ்சங்களும் ஒன்றுபட்டன.
கருத்து: இனிப் பிரிவரிது, ஆதலால் கலங்காதே இருப்பாயாக.
2.5.20. தொகுப்புரை
மகளிர் கதுப்பில் தோன்றும் புதுப்பூக் கொன்றை போல் உள்ளது என்று ஒரு புலவரும்
பெருஞ்சினை இருந்த தோகை பூக்கொய் மகளிர் தோன்றும் என்று ஒரு புலவரும் உவமை கூறுதல்
இன்புறத்தக்கது. தன்மதுீ அலர் தூற்றிய ஊராரை எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழைய
கொடியோர் நாவு ஆகட்டும் என்று சபிக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு புலவர் தினைத்தாள் அன்ன
சிருபசுங்கால் குருகு என்று தலைவி படும் துன்பத்திலும் அழகியல் இன்பம் உரைகின்றார்,
தன்முயற்சி வினாக்களும் விடைகுறிப்புகளும் – II
1. கான மஞ்ஞை அறையின் முட்டை எனத் தொடங்கும் கபிலர் பாடல் தரும் உள்ளுறைச்
செய்தியினைப் புலப்படுத்துக.
மயிலின் முட்டை அது ஈனும் போது உள்ள துயரம் அறியாத முசுக்குருளை மயிலின்
வருத்தம் முட்டையின் மென்மை அறியது உருட்டி விளையாடும் என்பது முசுக்குருளை
தலைவனாகவும் உருட்டுதல் தலைவியின் வருத்தமும் மென்மையும் அறியாது நீட்டிய
அவனது களவொழுக்கமாகவும் அமையும்
2. ”செம்புலப்பெயல் நீர”் பாடல் தரும் நயத்தினை விவரிக்க.
தலைமக்களின் பெற்றோர்கள் எத்தொடர்புமில்லை; ஒருவொருக்கொருவர்
உறவினருமில்லை; தலைமக்களும் ஒருவரை ஒருவர் அறியார் – உள்ளக்கலத்தலுக்கு
செம்புல நீர் உவமை – செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு செம்மண்ணில் கலந்து
வேறுபாடின்றி ஆனதோ அதுபோல தலைவனும் தலைவ்யும் உள்ளம் கலந்தன்ர் – யாராலும்
இனி பிரிக்க முடியாது என்ற நமிபிக்கையைத் தலைவன் தலைவ்க்குத் தருதல்.
3. நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்ற மள்ளர் குழீஇய
பாடல் கருத்தினைத் தருக.
பாடலுக்கான விளக்கம் பாடப்பகுதியில் உள்ளது.

பாடம் பதின்மூன்று
80
ஐங்குறுநூறு அறிமுகம்
2.6.0. பாட முன்னுரை
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள் , நூல் அமைப்பு,
படைப்பு ஆகியன பற்றி இப்பாடம் எடுத்துரைக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான
இந்நூல் அகப்பொருள் உணர்த்தும் நூலாகும். ஐந்து குறிய நூறு பாடல்கள் கொண்டிருப்பதால்
இது, ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற ஐந்து
திணைக்கும், திணைக்கு நூறு பாடல்கள் என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால் அதை
உணர்த்தும் வகையில் ஐந்து குறு நூறு ஐங்குறுநூறு எனப்பட்டது. இச்சிறப்பு சங்க அக
இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் இல்லை.
2.6.1. நூல் கட்டமைப்பு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும்
கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப்
பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும் ஒரு பெயர்
கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில் பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருள்,
கருப்பொருள், கூற்று உரைப்போர், கேட்போர் ஏனும் அடிப்படையில் ஒவ்வொரு பத்தும் தலைப்பு
பெறும். இதற்கு பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்தது ் இயற்றியுள்ளார். இதனைத்
தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய்
மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவர். இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் கிடைக்கவில்லை.
2.6.2. நூலாசிரியர் வரலாறு
திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐம்பெரும்புலவர்கள் இந்நூலின் பாக்களை
இயற்றியுள்ளனர். ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பாரே
அப்பெரும் புலவர்கள். இவர்கள் பெயரையும், இவர்கள் பாடிய திணை எது என்பதையும்
மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனே
நூலைஓது ஐங்குறு நூறு.
என்ற பழம்பாடல் விளக்குகிறது. ஓரம்போகியாரின் மருத்ததிணையில் அமைந்த
வேட்கைப்பத்து என்னும் த்லைப்பில் அமைந்த பத்துப் பாடல்கள் நம்பாடப்பகுதியாக அமைகிறது.
2.6.2.1. ஓரம்போகியார்
இவரை உள்ளம்போகி என்று பாராட்டுவர் தமிழ்க்காதல் ஆசிரியர் வ.சு.மாணிக்கம்.
ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். அவற்றைப் பாடியவர்
ஓரம்போகியார் ஆவார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார்,
ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.
இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை
ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட சோழன்
போன்றோரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 9,
புறத்திணை ஒன்று. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும்.
இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது
விளங்குகிறது.
81
2.6.3. மருதத்திணை
தலைவனின் பரத்தையர் பிரிவை மையமாகக் கொண்டு தலைவி கொள்ளும் ஊடலையும்
ஊடல் சார்ந்த நிகழ்வுகளையும் ஒழுக்கமாகக் கொண்டது மருதத்திணை. இத்திணைக்கு
வயலும் வயல் சார்ந்த இடங்களும் முதற்பொருள் ஆகும். இப்பகுதி வாழ் மக்களும்
விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை
நடத்திச் செல்லும். இங்கு மருதத் திணைப் பாடல்களைப் பகுப்புவழிக் காணலாம்.
ஒவ்வொரு திணையும் நூறு பாடல்களைக் கொண்டது. நூறு பாடல்களும் பத்துப் பத்தாக
ஒவ்வொரு தலைப்பின் கீழ் அமைந்துள்ளன என்பது முன்பே கூறப்பட்டுள்ளது.
வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்கு உரைத்த பத்து, புலவிப் பத்து,
தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப்
பத்து ஆகிய பத்துப் பகுதிகள் இம்மருதத் திணைப் பாடல் தலைப்புகளாக அமைந்துள்ளன.
மருதத்திணைப் பகுப்பு, வேட்கை, புலவி, புனலாட்டு, புலவி விராயது என நான்கு
உரிப்பொருளை மையமாகக் கொண்டும், வேழம், கள்வன், எருமை என மூன்று
கருப்பொருள்களை மையமாகக் கொண்டும், கிழவி கூற்று, தோழி கூற்று, தோழிக்கு உரைத்தது
என மூன்று கூற்றுகளை மையமாகக் கொண்டும் பெயர் பெற்றுள்ளது.
2.6.4. வேட்கைப்பத்து
வேட்கை என்றால் விருப்பம், பத்து என்பது பத்துப் பாடல்கள். களவிலோ, கற்பிலோ
தலைவியைப் பிரிந்திருந்த தலைமகன் தான் பிரிந்திருந்த காலத்துத் தலைமகள் எவ்வாறு
ஆற்றியிருந்தாள் என்பதை அறிய விரும்புவான். அப்போது தோழி, தலைவி விரும்பிய
திறத்தையும் (வகையையும்) தான் விரும்பிய திறத்தையும் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில்
அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வேட்கைப் பத்து என அமைக்கப்பட்டுள்ளது.

2.6.5. ஐங்குறுநூற்று மருதத்திணைப் பாடற் சிறப்புகள்


ஐங்குறுநூற்றில் பல புதுமைகள் உண்டு. இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி
அந்தாதியாகவுள்ளது. மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம்,
பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் தொடர்ச்சியாக உள்ளன. இதில் உள்ளுறையும்
இறைச்சியும் 56 பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
2.6.6. உரையும் பதிப்பும்
ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும் உ.வே.சாமிநாதையர் தன் ஆராய்ச்சிக்
குறறிப்புகளுடன் பதிப்பித்துள்ளார். தமிழ் மண் அறக்கட்டளை மூலமாகச் செவ்விலக்கியக்
கருவூலம் என்னும் தொகுப்பில் ஐங்குறு நூறு வெளியிடப்பட்டது. மர்ரே ராஜம் மூலம் மட்டும்
பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
தொகுப்புரை
ஒரு குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும் போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும்.
நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும், அன்பும்
அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் என வேண்டும் பெண்களை
இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.தன் கணவன் ஊரில், பாலை நிலத்தில் உள்ள
கிணற்றடியில் கிடக்கும் அழுகல் நீர், தன் தாய் வீட்டில் தான் உண்ட தேன்கலந்த பாலை விட
இனிமையாகக் கருதும் பெண்ணைக் கபிலர் அறிமுகப்படுத்துகின்றார். இனி வரும்
பாடப்பகுதியில் வேட்கைப்பத்து நுவலும் கருத்தினைக் காண்போம்.
82
83
பாடம் பதினான்கு
பகுதி - இ. ஐங்குறுநூறு வேட்கைப்பத்து
2.7.0. பாட முன்னுரை
வேட்கைப்பத்தில் உள்ள 10 பாடல்களும் தலைவியும் தோழியும் அவரவர் வேறுபட்ட
விருப்பத்தைத் தெரிவிக்கும் பொருள் மேல் அடுக்கி வந்துள்ளன. எல்லாப் பாடல்களும் அரசன்
ஆதன் அவினி என்பவனை வாழ்த்தித் தொடங்குகின்றன.
2.7.1. பாடல் விளக்கம்
வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே. 1
ஆதன் வாழ்க, அவினி வாழ்க, நெல் பலவாகப் பெருகட்டும், பொன் வளம் பெரிதாகச்
சிறக்கட்டும் எனத் தலைவி விரும்பினாள். பூக்கள் உடைய காஞ்சி மரத்தையும் சினைகளைக்
கொண்ட சிறுமீன்களையும் மிகுதியாக உடைய தலைவன் வாழ்க, அவனைப் பாதுகாக்கும்
பாணனும் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க எனவேட் டேமே.
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. வயல் விளைக; இரவலர் வருக எனத் தலைவி
வேண்டினாள். பலவான இதழ்களை உடைய நில்லத்தோடு நெய்தலும் மலர்ந்து காட்சியளிக்கும்
நீர்த்துறை உடைய தலைவனின் நட்பானது தலைவியுடன் வழிவழிச் சிறப்பதாக என வேண்டி
நின்றோம்.
வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே. 3
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. பசுக்களிடம் பால் பெருகட்டும்; பகடுகள் பலவாகப்
பெருகட்டும் எனத் தலைவி வேண்டினாள். வயல்களீல் விதைவிதைத்துத் திரும்பும் உழவர்கள்
அவ்வுழவர்கள் அந்நெல்லோடு தம் இல்லம் திரும்பிச் செல்லும் ஊரின் தலைவன் மனையற
வாழ்க்கை என்றும் சிறப்பதாக என வேண்டினோம்.
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
84
பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே. 4
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. பகைவர் தம் பெருமிதம் இழந்து தோற்றுச் சிறைபட்டுப்
புல்லரிசிச் சோற்றை உண்பாராக. பார்ப்பார் தமக்கான கடமையினை மறவாது தமக்கான கடமை
மறவாது ஓதிக்கொண்டே இருப்பாராக எனத் தலைவி வேண்டினாள்.
யாமோ, பூத்தக் கரும்பினையும் காய்த்த நெற்பயிரையும் கொண்ட கழனிகளை உடைய
ஊரனின் மார்பானது பலருக்கும் பொதுவான பழனம் போல் இல்லாதிருக்க வேண்டும் என
வேண்டினோம்.
வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணிசேண் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலை போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேரேம்
முன்கடை நிற்க எனவேட் டேமே.
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. நாடு பசி இல்லாமல் ஆகட்டும்; பிணி நெருங்காது
நெடுந்தொலைவு போகட்டும் எனத் தலைவி வேண்டினாள். யாமோ, முதலையின் இளம்போத்தும்
முதிர்ந்த மீனைப் பற்றி உண்கின்ற குளிர்ந்த நீர்த்துறை ஊர்க்கு உரியோன் ஆன தலைவனின்
தேரானது எமது வீட்டில் எப்போதும் நீங்காமல் இருப்பாதாக என வேண்டினோம்.
வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. 6
வேந்தன் பகை தணிந்து நெடிது வாழவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். யாமோ,
அகன்ற பொய்கையிடத்து தாமரையின் மொட்டுகள் தோன்றும் ஊரை உடைய தலைவன்
வரையும் பொருட்டு வருவானாக, எம் தந்தையும் இவளை அவனுக்குத் தருவானாக என
வேண்டி நின்றோம்.
வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே. 7
கருத்து: தலைமகளோ நாடு நன்மையால் செறிவுற வேண்டினாள்; யாமோ அவள்
நின்னை மணந்து இல்லறம் பேணுதலை வேண்டினோம்.
உள்ளுறை: கிளைக்குருகு உளைப்பூ மருத்தத்து இருக்குமாறு போலத் தலைமகளும் நின்
மனையாட்டியாக இருந்து இல்லறக் கடமை ஆற்றுவாள்.
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. அறவினைகள் மிகுதியாக ஓங்குக. அறம் அல்லனவாகிய
தீசசெ
் யல்கள் இல்லாமல் முழுதுமாக கெடுவதாக எனத் தலைமகள் விரும்பி வேண்டி நின்றனள்.
யாமோ, உளை பொருந்திய பூக்களைக் கொண்ட மருத மரத்திக் குருகுகள் த இனத்தோடு
85
அமர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்த்துறை உடைய ஊருக்குத் தலைவன், இவளைத் தன்னூர்க்கு
மனையாளாகக் கொண்டு செல்லட்டும் என வேண்டி நின்றோம்.
வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல் ஊரன் சுளீவண்
வாய்ப்ப தாக எனவேட்டோமே. 8
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. அரசு முறை செய்வதாகுக. களவு எங்கும் இல்லாது
ஆகட்டும் எனத் தலைவி வேண்டினாள். நாங்களோ, அசையும் கிளைகளோடு கூடிய
மாமரத்திலே அழகான மயில் அமர்ந்திருப்பது போன்ற பூக்கள் நிறந்திருக்கும் தலைவன் முன்னர்
செய்த சத்தியமானது இப்போது மெய்யாக அமையட்டும் என வேண்டி நின்றோம்.
கருத்து: தலைவி பொது நலனை வேண்டினாள்; அவள் திருமணம் விரைவில் வாய்க்க
யாம் வேண்டினோம்.
உள்ளுறை: அலங்கு சினை மாஅத்து அணிமயில் இருக்குமாறு போலநின் வளமனையிலே
தலைவியாகத் தலைவி அமைந்து, நின் குடிக்கு அழகு செய்வாளாக என்பதாம்.
வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே. 9
ஆதன் வாழ்க; அவினி வாழ்க. நன்மைகள் பெருகுவதாக. தீவினைகள் யாது இல்லாமால்
போகட்டும் எனத் தலைவி வேண்டினாள். யாமோ, கயல் மீன்களை உண்ட நாரையானது,
நெற்போரினிலேசென்று தங்கும் குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரின் தலைவன் உறவானது
பிறர் பழிக்கும் அம்பல் இல்லாமல் இருப்பதாக என வேண்டினோம்.
கருத்து: தலைவன் விரைந்து வந்து மணந்து கொள்ளும் வரை, இவள் உறவு
வெளிப்படாது இருக்க வேண்டும்.
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே. 10
ஆதன் வாழ்க; அவினி வாழ்க.மழை இடையீடு இன்றிக் காலம் தப்பாமல் பெய்யட்டும்
எனத் தலைவி வேண்டினாள். யாமோ, பூத்த மரத்தினையும் புலால் நாறும் சிறுமீன்களையும்
கொண்ட தண்ணிய நீர்த்துறை உடைய ஊரினான தலைவன் தலைவியை மணந்து தன்னோடும்
தன்னூர்க்கு அழைத்துச் சென்று மனையறம் பேணுவதாக என வேண்டினோம்.
கருத்து: தலைவி நாட்டு வளம் விரும்பினாள்; நான் அவளது மனையற வாழ்வு
கைக்கூடுவதை விரும்பினோம்.
2.7.2. தொகுப்புரை
86
சங்க இலக்கியத் தொகுப்பு முறையில் ஐங்குறுநூற்றிற்குத் திணைக்கு நூறுபாக்கள்
என்ற தனிச்சிறப்பு உண்டு. தொகை நூல்களில் ஐந்து ஆசிரியர்களால் மட்டுமே பாடப்பட்ட இரு
நூல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று கலித்தொகை ஆகும். பாடல்கள் உரிப்பொருள்,
கருப்பொருள், முதற்பொருள், கூற்று உரைப்போர், கூற்றைக் கேட்போர், விளி, இடைச்சொல்
ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொகை, வகை செய்யப்பட்டுப் பெயர்
கொடுக்கப்பட்டுள்ளன.

தன் முயற்சி வினாக்களும் விடைக்குறிப்புகளும் – 1


1. ஐங்குறுநூற்றுக் கட்டமைப்பினை விவரிக்க.
நூல் நூலாசிரியர் வரலாறு – திணை பகுப்பு முறை - பாடிய புலவர்கள் – தலைப்பிடும்
முறை - நூற் சிறப்புகள்.
2. வேட்கைப்பத்து உணர்த்தும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
புறத்தொழுக்கம் நீங்கிய தலைவன் நீவ்ர் நினைத்த திரம் யாது என வினவத் தோழி
கூறியனவாக அமைந்தன இப்பாடல்கள். இப்பாடல்கலுக்கான விளக்கம் பாடப்பகுதியில்
உள்ளவாறு எழுத வேண்டும்.
87

அலகு மூன்று

அ. அகநானூறு – களிற்றியானை நிரை 44-53 (பத்து


பாடல்கள்)
ஆ. கலித்தொகை – குறிஞ்சிக் கலி 02-10
(09 பாடல்கள்)
இ. பரிபாடல் - செவ்வேள் – எண். 14
(01 பாடல்)

அலகு 3
பாடம் பதினைந்து
அகநானூறு அறிமுகம்
மாணவர் பெறும் திறன்
அகநானூற்றின் கட்டமைப்பினை அறியலாம்.
சங்க இலக்கியத் தொகுப்பு முறை குறித்து அறியலாம்.
இலக்கியக் கூறுகளை அறியலாம்.
கருத்து, கற்பனை, உணர்சச ் ி, வடிவம் ஆகியவை அகநானூற்றில் வெளிப்பட்டுள்ள
விதத்தை அறியலாம்.
பாட முன்னுரை
சங்க இலக்கிய அகநூல்களில் சிறப்பான கட்டமைப்பை உடைய நூல் அகநானூறு.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான இந்நூல் நெடுந்தொகை என்றும் அழைக்கப் பெறும்.
அகநானூற்றின் பொதுவான அறிமுகம் இப்பாடத்தில் விளக்கம் பெறுகிறது. அடுத்த இரு
பாடங்களில் பாடப்பகுதியில் அமைந்த பாடல்கலுக்கான பொருள் விளக்கம் அமைகின்றன.
இப்பாடப்பகுதியில் அகநானூறு கட்டமைப்பு, திணை உணரும் முறை, பதிப்பும்வரலாறும் மற்றும்
இதன் சிறப்புகள் ஆகியன விளக்கப் பெறுகின்றன.
அகநானூறு கட்டமைப்பு
ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பற்றிய பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு
அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. இந்நுலினைத் தொகுத்தவர் உப்புரிக்குடிக் கிழார்
மகனார் உருத்திரசன்மன் ஆவார். மன்னன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி இந்நூலைத்
88
தொகுப்பித்துள்ளான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ
வணக்கப் பாடலாகும். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர்.
களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பிரிவுகளைக்
கொண்டது இந்நூல். அகநானூற்றின் பாயிரப் பகுதி (முன்னுரைப் பகுதி) இப்பகுப்பைச்
சுட்டியுள்ளது. மூன்று பகுப்பிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவை என்பதைப் பாயிரத்தைத்
தொடர்ந்து வரும் உரைநடைப்பகுதி விளக்கியுள்ளது. அதாவது, முதல் 120 பாடல்கள்
களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரை அமைந்த 180 பாடல்கள் மணிமிடை பவளம்
என்றும், இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன.
திணை உணரும் முறை
அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப்
பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.
ஒற்றைப்படை எண்கள் அனைத்தும் பாலைத்திணை பாடல்கள் மொத்தம் = 200
2. 8, என முடியும் அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் மொத்தம் = 80
4, 14, என நான்கில் முடிவன முல்லைத்திணைப் பாடல்கள் மொத்தம் = 40
6, 16, ஆறில் முடிவன மருதத்திணைப் பாடல்கள் மொத்தம் = 40
10, 20,என சுழியத்தில் முடிவன நெய்தல்திணை பாடல்கள் மொத்தம் = 40
ஆக மொத்தம் நானூறு பாடல்களைக் கோண்டது. செம்பாகப் பாடல்கள்
பாலைத்திணைப் பாடல்கள்.
உரையும் பதிப்பும்
அகநானூற்றினை முதன்முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவரின்
முயற்சியைத் தொடர்ந்து ரா.ராகவையங்கார், பின்னத்துர்ர் நாராயண சாமி அய்யர், உ.வே.சா
ஆகியோர் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அகநானூற்றுக்கு உரைகள் பல உள. அவற்றுள்,
குறிப்புரை, பழைய உரை நீஙக ் லாக முழுவதுமான உரை கரந்தை ந.மு,வேங்கடசாமி நாட்டார்
உரையே ஆகும்.
சிறப்புகள்
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, முதற்பொருள், கருப்பொருள் வருணனை
போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. வரலாற்றுச் செய்திகளை
அதிகம் தரும் அகநூல் இது ஒன்றேயாகும். பழந்தமிழரின் திருமணமுறையினை இரு
பாடல்களில் எடுத்துக் கூறித் தமிழரின் பண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. இதிகாசச்
செய்திகளைத் தருவதோடு 87 அரசர்களைப்பற்றிய குறிப்புகளால் வரலாற்றுச் செய்திகளை
அதிகம் தந்த அகநூல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.
பாடம் பதினாறு
அகநானூறு பாடல் விளக்கம் (பாடல் எண். 44-48)
இப்பாடப்பகுதில் அகநானூற்றின் நும் பாடப்பகுதியில் அமைந்த முதல் ஐந்து
பாடல்களுக்கான விளக்கம் அமைகிறது. பாடல் எண், திணை, பாடியவர், கூற்று, துறை ஆகியன
பற்றிய குறிப்பும் அதனைத் தொடர்ந்து பாடலும் பாடல் விளக்கமும் அமைகின்றன.
பா. எண்: 44. திணை: முல்லை, பாடியவர்: குடவாயிற் கீரத்தனார், கூற்று: தலைவன்
கூற்று, துறை: வினை முற்றி மீளும் தலைமகன் தேர்பப் ாகற்குச் சொல்லியது.
வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே நின்தேர்
முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, 5
89
ஊர்க, பாக! ஒருவினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திற l கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை, என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
பருந்துபடப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனாn னாகி, திண்தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅலம் கண்ணிப் பெரும்பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம் பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
1-4. வேந்தன் போர் முடித்தனன். பகைவரும் திறை கொடுத்து நம் அரசனுக்குச் சுற்ற
மாயினர் முன்பு மாறுபாடு மிக்கிருந்த இரு சேனைகளை ஒரே சேனையாக முரசறையப்பட்டன.
7-11. நன்னனும் ஏற்றையும் நல்ல பூணினை அணிந்த அத்தியும் பகைவர்நெருங்கற்கரிய
மிக்கவலி பொருந்திய கங்கனும் கட்டியும் வலிய வில்வினையுடைய பொன்னணி யணிந்த
புன்றுறையும் என்று கூறப்பட்ட அவர்கள் முன்பு கூடிப் பொருதற்கு நின்ற அளத்தற்கரிய சிறப்பு
வாய்ந்த பாசறைக்கண்ணே பருந்து சுற்றும்படிப் பழையன் என்பான் போர் செய்து பின்பு
இறக்கின்றான்.
12-14. இப்போரில் பழையன் இறப்புக்கு ஆற்றாது பொறானாகி வலிமை வாய்ந்த
தேரினையுடைய பெரும்பூட் சென்னி கணையன் உட்பட கழுமலம் என்னும் ஊரைக்
கைப்பற்றுகிறான். இச்சென்னி ஆண்ட
15-19. அழும்பில் போன்ற நீங்காத புதுவருவாயும் யானைபடியும் குளத்தினையும்
நெருங்கிய காவற்காடுகளையும் உடையது குடவாயில். அக்குடவாயில் என்னும் ஊரை ஒத்த
சிறப்பினளாகிய நம் தலைவியின் ஆகத்தில் (உடல்) இனிய துயிலைப் பெறுதற்கு
4-6. பாகனே, முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியினை இனிப் மெதுவாக
இல்லாமல் இக்காட்டை விட்டு நீங்கிட தேரினை விரைந்து செலுத்துவாயாக.
கருத்து: வினை முடித்த தலைவன், தலைவி இருப்பிடம் நோக்கித் தேரை விரைந்து
செலுத்துவாயாக எனக் கூறுகின்றான்.

45. திணை: பாலை, பாடியவர்: வெள்ளிவீதியார், கூற்று: தலைவி கூற்று,


துறை: வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இலார் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் 5
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
90
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய்கூர்ந்து,
ஆதி மந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், 15
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடைமதில் ஓர்அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
1-6. தோழியே, காய்ந்து முற்றிய நெற்கதிர்கள் ஆடுகளத்துப் பறை போன்று
ஒலிக்கின்றது. நீரின்றிக் கோடை நீடியதால் அகன்ற குன்றத்தின் ஆளரவமற்ற அரிய வழியில்
களிறினைப் புலி கொன்றது. அவ்வழியில் நம்மைப் பிரிந்து காதலர் சென்றனர்.
6-8. எனது மாந்தளிர் நிறமானது நுண்ணிய பசலை பரத்தலால் பீர்க்க மலரின்
தன்மையை எய்தியது.
8-12. என் மெலிவு கண்ட இவ்வூரில் எழும் அலரானது அன்னி என்பான் குறுக்கைப்
போர்க்களத்தில் திதியன் என்பானது காவல் மரமான புன்னைமரத்தினை வெட்டித் துண்டித்த
காலத்தே கூத்தர் எடுத்த இனிய ஓசையை விட பெரிதாக எழுந்தது.
12-19. நான், மாலையினையும் கடலை வேலியாக உடையவனுமான வானவரம்பனது
வலிமை பொருந்திய போர்முனையிற் கலங்கிய ஒர் அரணைப்போல அச்சத்தால் வருந்தித்
தூக்கமின்றி ஆதிமந்தியைப் போல காதலனைக் காணாது மிக்க வருத்தமுற்று துன்புற்று
வருந்துவேனோ?
(முடிபு) காதலர் காடிறந்தனர்; மாமை மலர் புரையும்; அலர், குறுக்கைப் பறந்தலை
ஆர்ப்பினும் பெரித, யான் அஞ்சுவரு நோயொட துஞ்சாதேனாய், ஆதிமந்தி போலக் காதலற்
கெடுத்த சிறுமையொடு அலந்து உழல்வேனோ?

46 திணை: மருதம், பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார், கூற்று: தோழி,


துறை: வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய
அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை 5
வண்டுஊது பனிமலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறைஇறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப. அஃதுயாம் 10
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
91
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க; 15
சென்றி, பெரும!நின் தகைக்குநர் யாரோ?
1-6. தன் இருப்பிடமான கொட்டிலைச் சேறாக்கிய கரிய பசுவானது, ஊர் துயிலுகின்ற
இரவு நேரத்தில் தனது தளையை(கயிறு) அறுத்துக் கொண்டு கூரிய முள்வேலியைத் தனது
கொம்பினால் அகற்றிவிட்டு நீர்மிக்க வயலில் மீன்கள் எல்லாம் ஒட வள்ளைக் கொடியை
மயங்கச்செய்து வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ச்சியான மலரை தின்னும்
ஊரின் தலைவனே,
7. நின்னை யாம் புலத்தற்கு(கோபம்) எனக்கு நீ, எவ்வாறு உறவு உடையவன்,
7-10. இவ்வூரார் பிறரும் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய ஒருத்தியை எம் மனையிற்
கொணர்ந்து காட்டி நீ அவளை மணம்(வதுவை) புரிந்தனை என்று கூறுவர்
10-14. பகைவர்களது யானைகளைக்கொண்ட அரிய போரினை சிதைந்திடக் கொல்லும்
ஒளிவீசும் வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய செழியனது நெற்பொலி மிக்க அள்ளூரை
யொத்த
14-16. எனது வளையல் நெகிழ்ந்து வீழினும் வீழட்டும். நீ விரும்பிய இடத்திற்குச்
செல்வாயாக நின்னைத் தடுப் பவர் யாரோதான்? யாருமிலர்.

47. திணை: பாலைத்திணை, பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார், கூற்று: தலைவன்,


துறை: தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. -
அழிவுஇல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி வாழிய நெஞ்சே! ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,
கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி 5
விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடன்இயைந்து,
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்
ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின், 10
குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியல்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக்கலிழ்வோள் எய்தி,
இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15
மழை விளையாடும் வளம்கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய்புரை பணைத்தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே.
நெஞ்சே வாழ்க.
1-2. சோர்வு இல்லாமல் நம் உள்ளம் மேலும் மேலும் (ஊக்கத்தாற்) சிறப்ப இவ்விடத்தே
வினையை விரைவாகச் செய்து முடித்தோம் எனில்,
3-8. அலையும் மூங்கிலை ஒலியுண்டாகத் தாக்கி வெப்பமுறச் செய்த கொழுந்து
விட்டெரியும் மிக்க தீயினால் மூங்கிலின் கணுக்கள் வெடித்தலால் எழும் ஒலி கலைமான்
கூட்டத்தினைத் துரத்தும் அரிய காட்டினைக்(சுரம்) கடந்து;
92
9-13. மகளிர் விளக்கில் திரியிட்டுக் கொளுத்தும்போது, குறுக அடியிட்டு நடக்கும்
சிவந்த காலினையுடைய ஆண்புறா பெரிய மனையின்கண் தம்பால் அன்புள்ள பெடையை
அழைக்கும் தனிமையொடுவந்த துன்பத்தைத் தரும் மாலைப்பொழுது.
14. நம் தலைவர் இப்பொழுது எவ்விடத்துள்ளாரோ என நினைந்து கலங்கி அழுது
கொண்டிருக்கும் நம் தலைவியை அடைந்து;
15-19. இழைகள் அணியப்பெற்ற நீணட ் தேரினையும் கொடைச்சிறப்பும் வாய்ந்த
செழியனது மழை தவழ்ந்திடும் வளம் மிக்க சிறுமலையில் கூதளஞ் செடி கமழப் பெறும்
மலையிலுள்ள மூங்கிலை ஒத்த பெரிய தோளில் பரவியுள்ள நோய் வருத்தம் நீங்க பன்முறையும்
முயங்கப் பெறுவோம்.
கருத்து: நெஞ்சே, இப்பொழுதே வினையின் பொருட்டு என்னுடன் மிக விரைவாக
எழுவாயாக.

48. திணை: குறிஞ்சித் திணை,பாடியவர்: தங்கால் முடக் கொற்றனார்,கூற்று: தோழி,


துறை: செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது.
அன்னாய்! வாழி! வேண்டுஅன்னை! நின் மகள்
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனிபசந் தனள்என வினவுதி. அதன்திறம்
யானும் தெற்றென உணரேன். மேல்நாள்,
மலிபூஞ் சாரல்என் தோழி மாரோடு 5
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலிபுலி!' என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்தத ் ிய செச்சைக் கண்ணியன் 10
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, 15
நாணி நின்றனெமாக, பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மைஈர் ஓதி மடவீர்! நும்வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து, 20
நின்மகள் உண்கண் பல்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக்குன்று கிழவோனே.
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன்மறை தேஎம் நோக்கி, 'மற்றுஇவன்
மகனே தோழி!' என்றனள். 25
அதன்அளவு உண்டுகோள், மதிவல்லோர்க்கே.
1-3. அன்னையே வாழ்வாயாக; அன்னையே யான் கூறுவதனை விரும்பிக் கேள்; நின்
மகள், துன்பம் எய்தி, பாலையும் பருகாது மிகவும் பசந்துள்ளாள் என வினவுகின்றாய்.
93
3-7. அது வந்த வழியினை நானும் தெளிவாக உணரவில்லை. முன்பு ஒரு நாள் பூக்கள்
நிறைந்த மலைச்சாரலில் என் தோழியருடன் தழைத்த கிளைகளை உடைய வேங்கையின்
பூவினைக் கொய்யச் சென்ற காலை புலி புலி என்று ஆரவாரம் செய்தனர்.
8-14. மகளிர் கண்ணினைப் போலும் அழகிய சுற்றிக் கட்டிய மாலையனாய் தலையில்
வெட்சிப்பூ அணிந்த கண்ணியனாய் மார்பில் சிவந்த சந்தனத்தைப் பூசியும்
வில்லையுடையவனாய் அம்பினை ஆராய்ந்து கொண்டு (ஒரு தலைவன் தோன்றி) அப் புலி
சென்ற வழி யாதோ என்று வினவினன்;
14-6. யாங்கன் அவனைக் கண்டு எங்களுள் ஒருவர் முதுகில் ஒருவர் உடல் மறைந்து
ஒடுங்க நாணுற்று நின்றோம்.
16-18. ஐவகையாக வகுத்தக் கூந்தலினையும் அழகிய நெற்றியினையும் உடைய
பென்களே, உங்கள் வாயிற் பொய்ச் சொற்களும் கூறுவீரக
் ளா என்று கூறியபடி,
19-22. மலை நாட்டிற்கு உரியனாகிய அவன் குதிரைகளின்(பரி) வேகத்தை அடக்கி
மெல்லெனத் தன் தேரினைச் செலுத்தும்போது உன் மகளது மையுண்ட கண்களை
நோக்கியபின் எதிர்நோக்கலாகப் பலமுறை நோக்கியபடி சென்றனன்;
23-26. பகற்பொழுது மாய்கின்ற ஞாயிறு மறையும் பொழுதிலே அவன் மறைந்திடுந்
திசையை நோக்கியவாறு தலைவி, தோழியே இவன் ஓர் ஆடவனே என்றனள். ஆராய்ந்து
அறியும் அறிவு மிக்கோர்க்கு அதனளவாக ஒரு கோட்பாடு உண்டு.

பாடம் பதினேழு
அகநானூறு பாடல் விளக்கம் (எண். 49-53)
இப்பாடப்பகுதில் அகநானூற்றின் நும் பாடப்பகுதியில் அமைந்த பின் ஐந்து
பாடல்களுக்கான விளக்கம் அமைகிறது. பாடல் எண், திணை, பாடியவர், கூற்று, துறை ஆகியன
பற்றிய குறிப்பும் அதனைத் தொடர்ந்து பாடலும் பாடல் விளக்கமும் அமைகின்றன.

49 திணை: பாலை, பாடியவர்:வண்ணப்புறக் கந்தரத்தனார், கூற்று: செவிலி கூற்று,


துறை: உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது.
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
94
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, 10
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
1-3. கிளி, பந்து, கழங்கு எனும் இவற்றை மிக விரும்பிய என் மகள் அருள், அன்பு,
மென்மை செயல் எனும் இவற்றால் முன்னாள் போல் விளையாட்டில் ஆர்வம் இல்லாது
வேறுபட்டுளாள் இஃது எதனால்? என் உயிர் கழிவதாக என்று கூறியபடி,
4-7. வளைந்த தொடையினையுடைய கன்றுடன் மரத்திடைக் கட்டப் பெற்ற கன்றைப்
பார்த்திருக்கும் பசுவைப்போல அவள் முதுகினைப் பார்த்து அண்மையில் வந்து நெற்றியினைத்
தடவி மெத்தெனத் தழுவிக் கொண்டேன்.
7-9. எனது மகள் உடம்பில்(ஆகம்) வியர்வை உண்டாக பன்முறை நன்கு தழுவிக்
கெண்டனள், அந்தோ அது கழிந்ததே;
10-3. மேகத்தால் பெறும் மழையின்றி வெறுத்து வருந்தி தளர்ச்சியுற்ற இளைய மானின்
கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காடு. அக்காட்டில் வலிமை மிக்க
தலைவன் இவளைப் பலபடியாகப் பாராட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன் கொண்டு
அறியின்,
13-8. இவள் தந்தையின் மனை உணவு மிகுந்துள. காவல் பொருந்திய அவனது பெரிய
மனையில் செல்லும் இடந்தோறும் இடந்தோறும் உடம்பின் நிழல்போலச் சென்று ஆயத்தாரோடு
விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடத்தை
விட்டு நான் அகலாது இருப்பேன். அது கழிந்ததே;

50 திணை: நெய்தல், பாடியவர்: கருவூர்ப் பூதஞ்சாத்தனார், கூற்று: தோழி,


துறை: தோழி பாணனுக்குச் சொல்லியது.
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலானாகிப் 5
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
95
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ பாண! 'எல்லி 10
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
பாணனே!,
1-6. குளிர்ந்த கடற்கரையையுடைய நம் தலைவன் (முன்பு) கடலொலி அவிய தோணி
கடலில் தோணியைச் செலுத்தாது பெரிய கழியில் சுறா முதலியன செருக்கித் திரியினும்
கொடிய வாயினரான அலர்பெண்டிர் அலர் தூற்றினும் அழகிய தேர் நிற்க பகற்காலத்தும்
பிரியானாகி அடுத்தடுத்த வருவான், அது கழிந்தது;
7- 14. இப்பொழுது. களவுக் காலத்துக் கூடுதற்கரிய விருப்பம்(வேட்கை) நீங்குதலால்
தாம் சென்றிருக்கும் இடத்தைக் கடந்து வாராது இருந்தார். நமக்கு என்ன உறவினர் என்று
என்னாது தலைவி இரவில் மனைக்கு அருகாமையில் உள்ள பனைமரத்தில் துணை சிறிது
பிரியினும் அன்றில்கள் துயிலாதனவாக இருப்பதை நெஞ்சே காண்பாயாக என்று கண்ணில்
நிறையும் நீரைக்கொண்டு தனது ஆற்றாமையைப் பிறரறியாமை மறைத்து நிற்பாள். எனவே,
இதற்கு யான் என் செய்வேன் என்று வளம் பொருந்திய பழைமையான ஊரின்கண் மறைந்து
சென்று தலைவர்க்குச் சொல்லின் என்ன தவறாம்?

51. திணை: பாலை, பாடியவர்: பெருந்தேவனார், கூற்று:தலைவன்,


துறை: பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி 5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தௌர்பப் க் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
நெஞ்சே,
1-7. ஆட்கள் அரவமற்ற அத்தத்தில் ஞாயிற்றின் மிக்க வெப்பம் பரவிய நீணட ்
அடியினையுடைய யாமரத்தின் பொலிவற்ற உயர்நத ் கிளையில் புலால் விருப்பத்துடன் இருக்க்கும் தன்
பெடையின் முகத்தினைப் பார்த்து (எழும்) ஊன் துண்டினைப் பதித்து வைத்தாற் போலும்
அச்சத்தைத் தரும் சிவந்த செவிகளை உடைய ஆண்பருந்தின் சிறகுகள் கரிந்து தீயுமாறு
வேனில் வெப்பம் மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காடு. அக்காட்டில்,
96
8-10. நீ வருந்திச் செய்யும் செயல்களால் அடையப்படும் பொருள் பூப்போலும்
கண்ணினையும் மாமை நிறத்தினையும் உடைய நம் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வதனால்
கைகூடும் எனில்,
10-14. எனது நல்ல மனமே அவளை விட்டு நீங்குதலை மறந்துவிட்டு அவள் மார்பு
விம்மவும் சிவந்த அணிகள் ஒலிக்கவும் பலமுறையும் தழுவி நாள்தோறும் தலைவியானவள்
இல்வாழ்க்கையில் மகிழும்படி நினைவாயாக.

52. திணை: குறிஞ்சி, பாடியவர்: நொச்சிநியமங் கிழார் கூற்று:தலைவி,


துறை: தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி, 'அறத்தொடு நிற்றும்' என,
தலைமகள் சொல்லியது.
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என 10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செப்பாதீமே. 15

12. தோழிவாழி, நம் தாய்க்கு;


13-4. நின் மகளது அழகிய மலரனைய மையுண்ட கண்ணிற் படர்நத
் பசலையானது
1-8. மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்து சாற்றிய கொடியையுடைய செழித்தெழுந்த
வேங்கை மரத்தினது மிக வுயர்ந்த கிளையிலுள்ள பொன்னை யொத்த புதிய மலரினைப் பறிக்க
விரும்பிய குறமகள் இன்னாமையைத் தரு ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தினை
அடுத்தடுத்து எழுப்பலின் உயர்ந்த பாறைகளின் அடுக்கையுடைய இருண்ட குகையினையுடைய
பக்க மலையில் பசுவினைக் கவரும் வலியபுலியைக் குறித்த ஒலியாகும் அஃது என எண்ணி
வில்லை இடக்கையிற் கொண்ட கானவர் தமது மலையை அடுத்துள்ள சிறிய ஊர்தனிப்ப
கல்லெனும் ஒலியுடன் செல்லாநிற்கும் நாட்டையுடைய நம் தலைவனது;
9-12. நமது நெஞ்சை இடமாகக்கொண்ட பெரிய மார்பினைக் காரணமாக உடையது என
தெரிவிப்பேமோ தெரிவியாது இருப்போமோ இரு வகையிற்பட்ட ஆராய்ச்சி ஒரு முடிபிற்கு
வந்துள்ளது;
12-5. நமது யாக்கையில் இருந்து இனிய உயிர் பிரிவதாயினும் இது காம நோயால்
உண்டாயதென இங்ஙனம் விளங்க உரையாதே.
97
53. திணை: பாலைத் திணை, பாடியவர்: சீதத ் லைச் சாத்தனார், கூற்று: தலைவி கூற்று,
துறை: வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, 5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்; 15
'அருளே காதலர்' என்றி, நீயே.
1-5. தோழி வாழி, இருள் நீங்க வானிட மெல்லாம் விளங்குதற்கு ஏதுவாய் விரைந்து
செல்லும் ஞாயிற்றின் கடிய கதிர் எறித்தலாகிய பிளப்பிடம் நிறையும்படி நீண்ட அடி யினையுடைய
முருங்கையின் வெள்ளிய பூக்கள் பரக்க நீர் அற்றுப் போயதால் வறட்சியுற்றதும் செல்லத்
தொலையாததுமாய நீண்ட இடத்தினையுடைய;
6-16. கூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்துந் தன் பிணவோடு கள்ளிக்
காட்டினையுடைய கடத்திலே (கோழரையினதாகிய) வாகைமரத்தினை உள்ளிருக்கும்
ஊன்வாடப்பெற்ற சுரிந்த மூக்கினையுடைய சிறு நத்தைகள் பொரியரை யுடையது போலாக
மூடிக்கொண்டிருக்கும் தனிமை கொண்ட நெறியில் சிறந்த அம்பினை, மறவர்கள் வில்லில்
வைத்தெய்ய இறந்து கிடப்போரது (பெயரும் பீடும் எழுதிய) எழுத்துக்களையுடைய நடுகல்லின்
இனிய நிழலிலே தங்கியிருக்கும் அரிய பாலையிலே கவர்பட்ட நெறியினைக் கடந்து எந்நாளும்
வறியோர்ககு் இல்லையென்று கூறி இயைவதைச் செய்யாது கரத்தல் மாட்டாத நெஞ்சம்
வற்புறுத்தலின் நம் காதலர் காதலித்தது நம்மினுங்காட்டில் பொருளேயாகும் நீயோ காதலர்
காதல் நம்பால் அருள் செயலே என்னா நின்றாய் ஆதலால் நீ அறியாய்காண்.
98
பாடம் பதினெட்டு
ஆ. கலித்தொகை
3.4.0. கலித்தொகை அறிமுகம்
கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல்.
அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் அகப்பாடல் செய்வதற்குரிய
வடிவமாகப் போற்றப்பட்ட இரு யாப்பு வடிவம் கலியும் பரியுமாகும். தொல்காப்பியருக்குப் பின்னர்
எழுந்த சங்க நூல்களில் கலித்தொகையும் பரிபாடலும் என்ற இவ்விரு நூல்கள் அவ்வவ் யாப்பின்
பெயராலே எட்டுத்தொகையில் அமைகின்றது.
பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக்
குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.
பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி - கபிலர்
மருதம் - மருதன் இளநாகனார்
முல்லை - சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் - நல்லந்துவனார்
நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே
பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.
நூல் நுட்பங்கள்
காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இருக்கின்ற ஒரே
ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும், மனம் ஒன்றி வாழும்
வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர், ஒன்றன் கூறாடை உடுப்பவரே
ஆயினும் / ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை ! என்று பாடுகின்றார். காதலன் துன்பத்தில்
பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி. ஆயர்கள்
ஏறுதழுவிப் பெண்ணை மணத்தல் இந்நூலில் மட்டுமே காணப்படுகிறது. கைக்கிளை,
பெருந்திணை ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் மட்டுமே காணப்படுகின்றன.

உரையும் பதிப்பும்
கலித்தொகை முழுமைக்கும் நச்சைனார்க்கினியர் உரை எழுதி உள்ளார். இதனை
அச்சில் முதன்முதலில் வெளியிட்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். இவருக்குப் பின்னர்
இ.வை அனந்தராமையரின் பாட வேறுபாடுடன் கூடிய விளக்கவுரையினையும் இளவழகனார்
எழுதிய ஆராய்ச்சி உரையும் குறிபிடத்தக்கன. புத்துரைகள் மாணவர் நலன் கருதி வெளியிடப்ம்
பெற்றன. அவற்றுள் குறிக்கத்தக்கது புலியூர் கேசிகன் உரையாகும்.

தொகுப்புரை
மிகச் சிறந்த தனிமொழி உரையாடலும் நாடகத்தன்மையும் வாய்ந்த நூல். கற்றறிந்தோர்
ஏத்தும் கலி என்றும் கல்வி வலாளர் கண்ட கலி என்றும் அறிஞர்களால் பாரட்டப்படுகிறது.
முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் என்னும் பழந்தமிழர் வீர விளையாட்டு தமிழரின் தற்கால
ஜல்லிக்கட்டு விளையாட்டின் முன்னோடியாக அமைகிறது. பண்பெனப் படுவது பாடறிந்து
ஒழுகல் என்று பண்பாடு என்னும் சொல்லடியை முதன்முதலில் பதிவுசெய்த இலக்கியம்
கலித்தொகை.
99

பாடம் பத்தொன்பது
கலித்தொகை குறிஞ்சிக் கலி பாடல் விளக்கம் ( எண். 2 -6)
பாட முன்னுரை
இப்பாடப்பகுதியில் குறிஞ்சிக்கலி இரண்டாம் பாடல் முதல் ஆறாம் பாடல் வரை விளக்கம்
பெறுகின்றன. இப்பகுதியில் அமைந்த ஐந்து பாடல்களும் தோழி கூற்றாக அமைந்தவை.
தலைவனுக்குச் சிறைப்புறமாக கூறிய துறையில் ஒன்றும், ஆற்றாமை கூறி வரைவு கடாயது
துரையில் இரு பாடல்களும் தோழி தலைவியை ஆற்றுவித்தல் துறையில் ஒன்றும் தோழி
தன்னுள்ளே கூறியது ஒன்றுமாக ஐந்து பாடல்களும் அமைகின்றன.
3.5.1 குறிஞ்சிக் கலி எண்: 2
இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி
அவனை வரைவு கடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து
கூறியது, கூற்று: தோழி கூற்று
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்பப் து ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்
என ஆங்கு,
100
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே
(அடிகள்:1-9): இமைய வில் ……………… நாட! கேள்:
இமயமலையை வில்லாக வளைத்தும் கங்கயினை முடிமேல் சுமந்தவனுமான சிவன்,
உமையோடு கயிலை மலையில் வீறற ் ிருக்கின்றான். அக்கயிலைமலையினை பத்து தலையினை
உடைய இராவணன் பெயர்தது ் எடுக்க முனைந்து அதைப்பெயர்க்கவோ மலையில் சிக்கிய கையினை
எடுக்கவோ முடியாமல் வருந்தினான். அது போல, புலி என்று எண்ணி வேங்கமரத்தினைச் சினங்
கொண்டு குத்திய யானை அம்மரத்தில் இருந்து தனது கொம்புகளை எடுக்க முடியாது
மலையில் எதிரொலிக்குமாறு பிளிறும் மலை நாட்டின் தலைவானே! நான் கூறுவதைக்
கேட்பாயாக!
(10-13),ஆர் இடை ………….. , உரைத்தைக்காண்
அவளைக் காணச் செல்வதற்கு அரிய வழி என்று பாராதும் அரவங்களுக்கும் அஞ்சாமல் நீ
வரும் சமயம் நீர் அற்ற நிலம் போல வாடிக் கிடந்த தலைவி உன்னைக் கண்டதும் மழை பெய்த
நிலம் போல அழகு பெறுவாள். அவ்வழகு அழியாமல் காக்கும் வழி உண்டெனில் அதை
எங்களுக்குக் கூறுவாயாக.
(14-17) இருள் இடை …………….. உரைத்தைக்காண்
இரவு என்றும் பாராது அவ்விரவில் அஞ்சானாய் நீ வந்தக்கால் , உன்னைக் காணாது பொருள்
இல்லாதவன் இளமை போல வன்ப்பிழந்த தலைவி, உன் வருகை கண்ட பின்னர் அருள் உள்ளம்
உடையவன் செல்வம், நாள்தோறும் வளர்ந்து வளம் பெற்றது போல வளம் பெறுவாள். அவ்வழகு
மயங்காமல் காக்கும் வழி உண்டெனில் எமக்கு உரைப்பாயாக.
(18-21) மறம் திருந்தார் ………………… உரைத்தைக்காண் என ஆங்கு,
அறநெறியைக் கைவிட்டு வாழ்ந்து முதியவன் மறுமை செல்வத்தையும் இழந்து சீரழிவது போல
உன்னைக் காணாது தவித்தாள் தலைவி. உன்னைக் கண்டதும் விடியலில் துயில் எழும் கடமை
உடையவன் சிறப்பு பெறுவது போல சிறந்த திருவினைப் பெற்றாள். அத்திருவால் புறங்கூறும்
பெண்கள் வாயை அடக்க வழி உண்டென்றால் எங்களுக்கு சொல்வாயாக! (எனக் தோழி கூற,
தலைவன்)
(24-26) நின் உறு விழுமம் …………..வரைந்தனன் கொளற்கே
வேங்கை மலர்ந்து காட்டும் மணநாளை எதிர் நோக்கி இருந்து உன் தோளை மணந்து கொள்ள
வருகின்றான். ஆகவே, இனி வருத்தம் ஒழிவாயாக.
கருத்து: தோழி, தலைவியின் மணவருத்தம் கூறத் தலைவன் தலைவியை மணம் செய்ய
சம்மதம் தெரிவிக்கின்றான்.
3.5.2. குறிஞ்சிக் கலி எண்: 3, தோழி கூற்று
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப், புரை தீர் கிளவி தாயிடைப்
புகுப்பினும்’ என்னும் விதி பற்றித் தமர் வரைவு மறுத்துழி, தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப,
அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர் முதலியோர்க்கு அறத்தொடு நிற்ப,
அவரும் ஒருவாற்றான் உடன்பட்டமை தோழி, தலைவிக்குக் கூறி, ,தானும் அவளும், வரைவு
கடிதின் முடிதற் பொருட்டு, வரை உறை தெய்வத்திற்குக் குரவை ஆட, அவன் வரைய
வருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது(3)
101
தோழி தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறி, தாங்கள் ஆடும் குரவையுள்
கொண்டுநிலை பாட, அவளை வேண்டுதல்
‘காமர்கடும் புனல்கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள்நாக நறுந் தண்தார் தயங்கப்பாய்ந்து, அருளினால்,
பூண்ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 5
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும்தான், ஏனல்இதணத்து அகிற்புகை உண்டுஇயங்கும்
வான்ஊர் மதியம் வரைசேரின், அவ்வரை,
"தேனின் இறால்" என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன் 10
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா;
கொல்லை குரல்வாங்கி ஈனாமலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்
காந்தள் கடிகமழும், கண்வாங்கு, இருஞ்சிலம்பின் 15
வாங்குஅமை மென்தோட் குறவர் மடமகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்
அவரும் தெரிகணை நோக்கி, சிலைநோக்கி, கண்சேந்து,
ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்துஆறி,
இருவர்கண் குற்றமும் இல்லையால்’ என்று,
தெருமந்து சாய்த்தார் தலை 25
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்
நல்லாய்! 30
நல்நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம்நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?
புனவேங்கைத் தாதுஉறைக்கும் பொன்அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35
கனவில் புணர்சச ் ி கடிதுமாம் அன்றோ?
விண் தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ? 40
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
102
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன!
என ஆங்கு, 45
நெறிஅறி செறிகுறி புரிதிரிபுஅறியா அறிவனை முந்துறீஇ,
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக,
வேய்புரை மென்தோள் பசலையும், அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன்நீங்க,
சேய்உயர் வெற்பனும் வந்தனன்; 50
பூஎழில் உண்கணும் பொலிகமா, இனியே!
(1- 6), காமர்கடும் புனல் …………… பெருமையளே
ஆற்றில் எங்களோடு விளையாடிய தலைவி, கால் வழுக்கிவிட வெள்ளத்தால் அடித்துச்
செல்லப்பட்டாள். அச்சமயம் ஆங்கு வந்த இளைஞன் தயங்காமல் திடுமெனப் பாய்ந்து
தலைவியைக் காப்பாற்றித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கரை மீண்டான். அவன் மார்பு
தன் மார்பில் அணைந்தமை அன்றே அவளும் மழையை வேண்டும்போது வருவிற்கும் தெய்வக்
கற்பினள் ஆகினள்.
(7-10) அவனும்தான்,…………………… நாடன் மகன்
அவள் விரும்பிய தலைவனோபுனம் காக்கும் மகளிர் தம் கூந்தல் காய எழுப்பும் அகிற்புகையால்
மறையும் மதி மலையில் சேரும்போது அதனைத் தேனடை என்று கருதிய மலைக் குறவர்கள்
அத்தேனடையைக் கைப்பற்ற முங்கில் ஏணி ஆக்கி வைத்திருக்கும் அகன்ற காட்டின்
உரிமையுடைய நாட்டு மன்னனின் மகன்.
(11-14) சிறுகுடியீரே! …………………….ஒழுகலான்
சிறுகுடியில் உள்ளவர்களே, அவளை, அம்மன்னன் மகனுக்கு மணம் செய்து தர மறுத்து
அறமில்லா செயலைச் செய்தால், வள்ளிக் கொடி கிழங்கு விடாது; மலகளில் தேனடைகள்
கட்டபடாது; தினைப்புனங்களும் பெரிய கதிர்களை தராது
(15-18) காந்தள் கடிகமழும்………… தொடுத்த கோல்'
காந்தள் மணம் கமழும் காண்போரை ஈர்க்கவல்ல மெல்லிய தோள்களைப் பெற்ற குறமகளிர்
கணவனுக்குத் துரோகம் செய்யாது வழ்நத ் மையால் கணவரும் வேட்டையில் வெற்றியே பெற்றனர்.
(19-22) என ஆங்கு,…………… கண்சேந்து,
என நான் உரைத்த உண்மையினைக் கேட்ட தாய், எமது தந்தை தமிஅய்ர்க்கும்
எடுத்துரைத்தாள்.
(23-25) ஒருபகல் ……….. தலை
அது கேட்ட அவர்கள் ஒருநாள் வரைஅம்புகளையும் வில்லையும் மாறி மாறிப் பார்த்து ஒருவாறு
சினம் ஆறினர். மேலும், காதல் கொண்ட இருவர்மீதும் குற்றம் இல்லை என்று மணத்திற்கு
ஒப்புக் கொண்டனர்.
(26-29) தெரியிழாய்!.................. பாடிக்காண்
தலைவியே, நீயும் உன் கேள்வனும் இணைந்து வாழ மலையில் உறை தெய்வம் மகிழும்படியாக
குரவை ஆடுவோம், வா, வந்து கொண்டு நிலைச் செய்யுளைப் பாடுக.

தலைவியின் மறுமொழி
(30-32) நல்லாய்! ………… என் நோற்றனர்கொல்?
தோழியே! நம் தலைவர் நம்மை மணக்க வரும் அந்நன்னாளில் நமது சுற்றத்தார் தமது
வெட்கத்தை எவ்வாறு தாங்குவர். முற்பிறவில் இதற்கு என்ன தவம் செய்தார்களோ?
103
(33-36) புனவேங்கைத்……….. கடிதுமாம் அன்றோ?
வேங்கை மரத்தின் பொன்போன்ற தாது உதிர்ந்து கிடக்கும் நம் இல்லத்தின் முன்னர் பலர்
அறியத் தலைவருடன் கூடி மகிழ்தல் கிடைக்கும். கனவில் மட்டுமே கூடிக் களித்த செயலை
இனி நான் கைவிடுவேன்.
தோழி கூற்று
( 37-41 )விண் தோய்……… கண்களோ?
திருமணநாள் அன்று நீயும் தலைவனும் முன்பு ஒருவொருக்கொருவர் அறியாதவர் போல
இருப்பீர்களா? முன்பே பழக்கம் இலாதாவர் போல நீங்கள் இருவரும் நடநது கொண்டால் நானும்
உங்கள் காதல் அறியாதவள் போல நடிப்பேனா? மேகம் தவழும் மலைநாட்டுத் ததலைவனுடன் நீ
பெறும் மண வாழ்வு காணாது நாண மிகுதியால் கைளால் மறைக்கப்பெறும் கண்களும் கண்கள்
ஆகுமா?

தலைவியின் மறுமொழியும் மீணடு ் ம் தோழி உரைத்தலும்


(43-45) என்னை ………… என ஆங்கு
என் கண்ணை மறைத்தால் என்ன தோழி உன் கண்களால் மணக்கோலத்தைக் காண்பேன் நான் ?
நெய்தல் மலர் நிகர்க்கும் உன் கண்களா என் கண்கள் மாறும் பேறு பெற்றது எனத் தோழி
உரைக்க,
(46-51) நெறிஅறி …………….. இனியே
நெறிமுறைகளை அறிந்த திருமண நாள் குறிக்க வல்லோன் ஆகிய அறிவனை அடைந்து
தொகைவகை கூறவல்ல சான்றோர்களை அழைத்துக் கொண்டு தலைவியின் மெல்லிய தோள்
பசலை நீங்கவும் அம்பலும் கனவில் மட்டுமே கூடி களித்த துயர் நிலையும் ஒருசேர அழியும்படித்
தலைவன் திருமணம் செய்து கொள்ள வருகிறான். இனி, உன் கண்கள் பூப்போல தன் அழகை
மீண்டும் பெற்று மகிழ்வாயாக.
3.5.3. குறிஞ்சிக் கலி எண்: 4, தோழி கூற்று
தோழியும் தலைமகளும் தலைமகனது மலையை வாழ்த்திப் பாடுகின்ற
வள்ளைப்பாட்டில்,தோழி இயற்பட மொழிய, தலைமகள் இயற்பழித்தமை தலைமகன்
சிறைப்புறமாகக் கேட்டு, வரைய வருகின்றமை தோழி, தலைமகட்கு உரைத்தது (வள்ளைப்பாட்டு
என்பது, நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு. மகளிர் நெல் முதலான
தானியங்களைக் பாறை உரலில் இட்டு உலக்கையால் குற்றுவர். இருவரின் கைகளாலும்
உலக்கைமூச்சுப் போடும்போது அப்போது அவர்களது வளையல்கள் குலுங்கிப் பண்ணிசை
போலத் தோன்றும். இதற்கு வள்ளை என்று பெயர். இப்படிக் குற்றும்போது பாடலும் பாடுவர்.
இதற்கு வள்ளைப்பாட்டு என்று பெயர்.)
‘பாடுவோம்’ என்ற தோழியை நோக்கித் தலைவி உடம்பட்டுக் கூறுதல்
‘அகவினம் பாடுவாம், தோழி!’ ‘அமர் கண்
நகைமொழி, நல்லவர் நாணும் நிலைபோல்,
தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ,
முகைவளர் சாந்துஉரல், முத்துஆர் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஓச்சி, 5
பகைஇல் நோய்செய்தான் பயமலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்’
தோழியின் மறுமொழி
ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
104
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை
தலைவி இயற்படப் பாடாமையின் தோழி பாடுதல்
கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்
தொடுத்த தேன்சோர, தயங்கும் தன்உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை
கல்லாக் கடுவன் கணம்மலி சுற்றத்து,
மெல்விரல் மந்தி குறைகூறும் செம்மற்றே
தொல்எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற் படுவான் மலை
தலைவி இயற்பழித்துப் பாடுதல்
புரிவிரி, புதைதுதை, பூத்ததைந்த தாழ்சினைத்
தளிர்அன்ன எழில்மேனி தகைவாட, நோய்செய்தான்
அருவரை அடுக்கம்நாம் அழித்துஒன்று பாடுவாம்
விண்தோய் வரைபந்து எறிந்த அயாவீட,
தண்தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே
பெண்டிர் நலம்வௌவி, தண்சாரல் தாதுஉண்ணும்
வண்டின் துறப்பான் மலை
தோழி இயற்பட மொழிதல்
ஒடுங்கா எழில்வேழம் வீ பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ்சினைத்
தீம்கண் கரும்பின் கழைவாங்கும் 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை
தலைவன் வரைவொடு புகுந்தமையைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்
என நாம், 30
தன்மலை பாட, நயவந்து கேட்டுஅருளி,
மெய்ம்மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்துஆரா
மென்முலை ஆகம் கவின்பெற,
செம்மலை ஆகிய மலைகிழ வோனே.
(1-7) அகவினம் பாடுவாம்………, நாம்’
பெண்ணே! நாம் அகவல் பாட்டுப்பாடியபடி உலக்கை குத்துவோம் வருக.
நகைமொழி பேசும் நல்ல மகளிர் நானித் தலைவணங்கி நிறப்து போல முற்றித் தாழ்ந்து
நிற்கின்றன கதிர்கள், அக்கதிர்களை உருவிச் சந்தன் உரலிலே இட்டு உலக்கையால் மாறி மாறிக்
குத்தியவாறு அகவல் பாட்டு பாடுவோம், நாம்.
(8-10) ஆய் நுதல்……………. பாடித்தை
ஆய்ந்த நெற்றியும் அழகிய கூந்தலும் மூங்கில் போலத் தோளும் மணம் வீசும் கூந்தலை
உடையவளே! தலைவனைப் புகழ்ந்து நான் பாடுகிறேன். நீயும் அவன் மலையினைப் பழிக்கும்
பாட்டினைப் பாடுவாயாக.
(11-18) கொடிச்சியர் கூப்பி ……... மலை
தமது உறவினர்களின் துன்பம் தீர்க்கும் தலைவன் மலையில் முருகனைத் தொழக் கூப்பிய
கொடிச்சியர் கைகள் போன்ற தேன் நிறைந்த காந்தள் மலர்கள் அசைந்து நிற்கும். தன்னைக்
காதலித்த மகளிர் துன்பத்தினைத் தனது துன்பமாகக் கருதும் தலைவனின்ம் மலையில் உள்ள
105
குரங்கு தான் தாதலித்த மந்தியை மணக்க் அம்மந்தியின் சுற்றத்தினரிடம் மணம் செய்து
தாருங்கள் என்ற கூறும் சிறப்பினை உடையது.
(19-25) புரிவிரி, ………………. துறப்பான் மலை
தேனைக் குடித்துவிட்டு மலரை மறந்து செல்லும் மலைச்சாரல் வண்டு போல மகளிர் இன்பத்தை
நுகர்ந்து அவரைக் கைவிடும் கொடியோனாகத் தலைவன் இருந்தும் அவன் மலையில் வீழ்
அருவியில் பந்தாட்டம் ஆடிய களைப்பு நீங்க தேவ மகளிர் நீராடுகின்றனர், இது என்ன
அதிசயமோ?
(26-29) ஒடுங்கா……… நீங்கலம்' என்பான் மலை
ஒடுங்காத ஆண்யானை தனது சூலுற்ற பெண்யானை விருப்பம் தீர கரும்பினை முறித்துத்
தரும் இனிய மலைநாட்டுத் தலைவன் தன் சுற்றத்தினை என்றும் கைவிடாதவன்ஆவான்.
(30*34) என நாம்…… மலைகிழ வோனே.
இவ்வாறு அவன் மலையைப் பழித்தும் பாராட்டியும் பாடிய பாடல்களை விரும்பிக் கேட்ட
தலைவன், உள்ளம் மகிழ்ந்து பேரின்பம் தரும் உன் மெல்லிய மார்புடைய தேகமானது அழகு பெற
திருமண ஏற்பாடுகளோடு வந்து சேர்ந்தான்.
3.5.4. குறிஞ்சிக் கலி எண்: 5, தோழி கூற்று
முன்பு பெற்ற வழி மலிந்ததனைப் பின்பு பிரிந்த வழிக் கலங்கிக் கூறியது. என்னை?
தலைவன் அருமை செய்து அயர்த்தவழி, தோழி தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தலைவன்
இயற் பழிப்ப, தலைவி இயற்பட மொழிந்ததனைச் சிறைப்புறமாகக் கேட்டு, தலைவன் முன்
ஒருகால் வந்து சிறு புறம் சாரத் தான் ஆற்றினமை குறித்து, பின் ஒருகால் அவ்வாறு பாட, அவன்
சிறு புறம் சாராமையின் கலங்கி, நெஞ்சொடு கூறியது

வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்


பாடுகம் வாவாழி தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல்சேம்பின் இலைசுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், 5
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறி,
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், 10
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா,
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி,
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி,
குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, 15
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வாவாழி, தோழி! நல்தோழி! பாடுற்று
தலைவி இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை 20
தோழி பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
106
‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று
தலைவி இள மழை ஆடும்; இள மழை ஆடும்; 25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று
தோழி வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து
நீருள் குவளை வெந்தற்று
தலைவி மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை
தோழி துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று
என ஆங்கு
தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்
நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே
(1-4) பாடுகம் வாவாழி …….. நல்தோழி! பாடுற்று
தலைவி: வலிமையான தந்தத்தை உலக்கையாகக் கொண்டும் சேம்பின் இலையை முறமாகவும்
மூங்கில் நெல்லை உரலுள் இட்டு உலக்கையால் குத்தியவாறு பாடுவோம் வாழி தோழி!
(5-17) இடி உமிழ்பு ………….. நல்தோழி! பாடுற்று
தோழி: இடிமுழங்கிட மழை பெய்திடும் நடு இரவில் பிடியுடன் வந்த யானையினை மின்னல்
ஒளியில் கண்ட கானவன், பலாமரத்தில் அமைந்த பரண் மீது ஏறி கவண் கல் வீசுகிறான்.
அக்கல்லானது வேங்கை மலர்களைச் சிதறடித்து ஆசினிப் பலவினைத் துளைத்துக் கொண்டு
ஆங்குள்ள தேனடையைக் கிழித்துக் கொண்டு கொத்தாக இருக்கும் மாவின் பிஞ்சினை
உதிர்த்துச் சென்று பலாப்பழத்தின் உள்ளே சென்று தங்கும்.
(18-20) இலங்கும் அருவித்து …. பொய்த்தான் மலை
தலைவி: தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றாத் தலைவன் மலையில் அருவி நீர் ஒழுகிறது;
அருவி நீர் ஒழுகிறது, வானில் இருந்து பெய்யும் அருவி நீர்க் கொட்டுகிறது.
(21- 24) பொய்த்தற்கு ……… தோன்றியற்று
தோழி: தலைவன் பொய்யுரைத்தலுக்கு உரியவனா? அஞ்சாதே என்று நமக்கு அருள் செய்த
தலைவன் பொய்யுரைத்தலுக்கு உரியவனா? மலைநாட்டுக்குரிய இத்தலைவன் மெய்யுரையில்
பொய் தோன்றும் எனில் அது, திங்களில் தீ தோன்றிய தன்மை போன்று வியப்புக்குரியது.
(25-27) இள மழை ………..….. குன்று
தலைவி: என் கைவளைகள் கழலுமாறு வருத்தம் செய்த கொடியோனின் மலையில் நீர் உண்ட
மேகங்கள் எந்நாளும் உலவுகின்றன. இஃது என்ன வியப்போ!
107
(28-31) வாராது ………………வெந்தற்று
தோழி: உன் காதலன் வராமல் இருக்க மாட்டான். தண்ணிரில் மலரும் குவளை மலர்
அத்தண்ண்ணீரில் வெந்து அழியும் எனில் வியப்புக்குரியது. அது போன்று உன் மீது அன்பு
கொண்ட காதலன் கொடுமை செய்ய மாட்டான்.
(32-34) மணி போலத் …………..மலை
தலைவி: என் உடல் தழுவ மறந்த தலைவனின் மலையாய் இருந்தும் நீலமணி போல பிரகாசமாய்
விளங்குகிறது. இஃது என்ன வியப்போ!
(35- 39) துறக்குவன் அல்லன்…….என ஆங்கு
தோழி: சிறுமலைகள் பல நிறைந்த மலைநாட்டுத் தலைவன் உன்னைக் கைவிட மாட்டான். அவன்
உறவில் கொடுமைகள் உண்டெனில் அது ஞாயிற்றில் இருள் தோன்றிய தன்மை போல
வியத்தற்குரியது.
(40- 44) நன்று ……….. மலைகிழவோற்கே
இவ்வாறு நாம் வள்ளைப்பாட்டுப் பாட உன் தோளுக்கு உரிமையான மலைநாடன், நாம் பாடியதை
மறைந்து நின்று கேட்டான். உன் தந்தையும் தலைவனுக்கு மண இசைவு தந்தான். எல்லாம்
நன்மையாக முடிந்தன்.
3.5.5. குறிஞ்சிக் கலி எண்: 6, தலைவி கூற்று
இருவரும் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு,
வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது
108
வள்ளைப் பாட்டுப் பாடத் தோழி அழைக்க, தலைவி இசைதல்
‘மறம்கொள் இரும்புலித் தொல்முரண் தொலைத்த
முறம்வி வாரணம் முன்குளகு அருந்தி,
கறங்கு வெள்அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இருஞ்சோலை நல்மலை நாடன்
மறந்தான்; மறக்க,இனி; எல்லா! நமக்குச் 5
சிறந்தமை நாம்நன்கு அறிந்தனம்ஆயின்; அவன் திறம்,
கொல்யானைக் கோட்டால் வெதிர்நெல் குறுவாம்நாம்,
வள்ளை அகவுவம், வா’ ‘இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா’
தோழி இயற்பழித்தல்
காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு 10
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாணிலி நாட்டு மலை
தலைவி இயற்பட மொழிதல்
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வுஉற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத்தவன்? 15
தோழி தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை
தலைவி கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத் 20
தேர்ஈயும் வண் கையவன்
தோழி வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று
தலைவி எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி 25
அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்,
தாழ்இருங் கூந்தல் என்தோழியைக் கைகவியா,
சாயல்இன் மார்பன் சிறுபுறம் சார்தர, 30
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்ததுஎன்
ஆயிழை மேனிப் பசப்பு
(1-4) ‘மறம்கொள் ………..மலை நாடன்
புலியைக் கொன்று பழம் பகையினைத் தீர்தத ் யானை அருவியின் சாரலில் இனிது உரங்கும்
மலை நாட்டுக்கு உரியோன் தலைவன்.
(5-9 ) மறந்தான் ……….. அகவுவாம் வா
அவன் நம்மை மறந்தான். நம்மை மறந்தாலும் அவனே நமக்குச் சிறந்தவன். ஆதலின், யானைக்
கொம்பால் மூங்கில் நெல் குற்றி நாம் உலக்கைப் பாட்டின் பொருளாக தலைவன் சிறப்புகளைப்
பாடுவாம் வா.
(10-12) காணிய வா…… நாட்டு மலை
109
பெண்ணே நீ வாழ்க, நம்மீது கொண்ட அருளை மறந்த நாணம் இல்லாத த்லைவனாய் இருந்தும்
அம்மலைகளில்பாய்நது
் வீழும் அருவிகளைப் பெற்றுள்ள அதிசியத்தைநீ காண்பாயாக.
(13-15) ஆர்வுற்றார் ……. நெஞ்சத்தவன்
தன்பால் வந்த வழக்கின் நிலையை நன்கு ஆராய்ந்து ஒரு பக்கத்தில் சாய்ந்து விடாது நேரே
நிற்கும் துலாக்கோல் போல நடுநிலைமையாய் நின்று அறம் வழங்கும் உள்ளம் உடையோன்
தலைவன். தன்மது ீ அன்பு கோண்டோரின் உள்ளம் உடைந்து போகும்படி அவன் கைவிடுவானா?
(கைவிடான்.)
(16-18) தன்னறும் ………. நாட்டு மலை
நம்ம்மீது அருள் காட்டாமல் வீணே அருள் அல்லாத செயல்களில் ஈடுபட்டுத் திவானின்
மலையாய் இருந்தும் மணம் வீசும் கோங்கு மலர் பொன்னணி பூண்ட யானை போன்று காட்சி
அளிக்கிறது. இஃது, என்ன வியப்போ? (19-21) தண் நறுங் ……..நாட்டு மலை
தன் மலைச்சுனை நீரைக் காட்டிலும் அருள் உள்ளம் கொண்டு, தன்னை விரும்பி வருவார்ககு் த்
தேர்க் கொடையாளன் நம் தலைவன், நான் வருந்துமாறு கைவிடுவானா? (மாட்டான்) (22-24) கூரு
நோய் ………..கையவன்
அணிகள் தாமே கழன்று போகுமாறு, நம் உடல் தளருமாறு துன்பம் தந்தவன் மலை உச்சியில்
கட்டப்பட்டுள்ள தேன்கூடு மேகத்தின் இடையே நுழைந்து செல்லும் மதிபோலத் தோன்றுகிறதே?
இது என்ன வியப்போ?
(25-27) வரைமிசை ………………குன்று
தோழி, என் உள்ளம்கவர் கள்வனாகிய தலைவன், அஞ்ச வேண்டிய பழிபாவத்திற்கு அஞ்சாத
அறமுறை அறியாதவன் அல்லன். ஆகவே எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அவனைப்
பழிக்காதே.
( 28-35) எஞ்சாது,…………. மேனிப் பசப்பு
இவ்வாறு நாங்கள் பாட, மறைந்து நின்று கேட்ட தலைவன், தனது வருகையை
அறிவிக்காவண்ணம் தோழிக்குக் கையாட்டிவிட்டு, பின்புறமாய் வந்து என் கழுத்தைக் தழுவிக்
கொண்டான். அவ்வளவே, என்னைப் பற்றிய பசலை ஞாயிற்றைக் கண்டு மறைந்தோடும் பனி
போல ஓடியது.
110

பாடம் இருபது
3.6.0. பாட முன்னுரை
இப்பாடப்பகுதியில் குறிஞ்சிக்கலி ஏழாம் பாடல் முதல் பதினோராம் பாடல் வரையிலான
ஐந்து பாடல்கள் விளக்கப்படுகின்றன. இப்பகுதியில் அமைந்த ஐந்து பாடல்களும் தோழி கூற்றாக
அமைந்தவை. தலைவனுக்குச் சிறைப்புறமாக கூறிய துறையில் ஒன்றும், ஆற்றாமை கூறி
வரைவு கடாயது துரையில் இரு பாடல்களும் தோழி தலைவியை ஆற்றுவித்தல் துறையில்
ஒன்றும் தோழி தன்னுள்ளே கூறியது ஒன்றுமாக ஐந்து பாடல்களும் அமைகின்றன.
3.6.1. குறிஞ்சிக் கலி எண்: 7, தோழி கூற்று
வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தோழி தானும் தலைவியும் வள்ளைப் பாடலுள்
முருகனைப் பாடுவார் போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப் பாட, தலைவி ஆற்றினமை தோழி
தன்னுள்ளே கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகக் கூறியது.
தோழி வள்ளைப் பாட்டுப் பாடத் தலைவியை அழைத்தல்
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 5
மை படு சென்னிப் பய மலை நாடனை,
தையலாய்! பாடுவாம், நாம்
தோழி தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் 10
தோற்றலை நாணாதோன் குன்று
தலைவியைப் பாடுமாறு தோழி வேண்டுதல்
வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை 15
தலைவி நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று
தோழி புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 20
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை
தலைவி கடுங் கண் உழுவை அடி போல வாழைக்
கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் 25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை
தோழி என ஆங்கு
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
111
வாடிய மென் தோளும் வீங்கின 30
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே
தோழி: வேன்கைப்புலியைக் குத்திக் கொன்ற வேழத்தின் கொம்பாலும் சந்தன
மரத்தாலான உலக்கையால்மூங்கில் நெல்லைப் பாறை உரலில் இட்டுக் குற்றும் நாம், முருகனைப்
பாடுவது போல தலைவனைப் பாடுவாம் வருக.
தலைவி: பகைத்து வருவவன் யமனே ஆயினும் பின்வாங்காது கோல்லும்
குணமுடையவன்; நட்புடையவர் ஆயின் நன்பன் தாம் தோற்க விரும்பினால் தோல்விக்கு
நாணாதவன். அத் தலைவனின் மலையில் மகளிர் இட்ட மோதிரம் போல காந்தள் அரும்பு விரியக்
காத்திருக்கும் தும்பி.
தோழி: மான்குட்டி, பாறையில் அமர்ந்திருக்கும் கஎஉங்குரங்கை கண்டு மருண்டு நோக்கி
பெரிய மலையில் ஏறி இறங்கி ஆடி மகிழும். இம்மலைவளம் மிக்க தலைவனைப் புகழ்ந்து ஒரு
பாட்டு பாடுவாயாக.
தலைவி: கல்வி, செல்வம் முதலியவற்றில் தன்னோடு பகை கொண்டு தன் பெருவாழ்வு
கண்டு மனம் பொறாத கொடுமை உடையவரும் அவர் குற்றத்தைப் பிறர்க்குப் கூறும் கொடுமை
அறியாத தலைவனுக்குரிய மலை. சிறு சிறு புள்ளிகளை உடைய மாஇன் காதுகளைப் போல
மூங்கில் மூடியிருக்கும் பானைகள் கழன்று விழும் கவின் உடையது.
தோழி: பிடி யானையோடு கூடி, வளருந் தழை தின்ற அழகிய யானைகள் உடைய
மலைநாடனை, மணம் வீசும் கூந்தலை உடையவளே! மீண்டும் தலைவனைப் பாடுவோமாக.
தலைவி: வறுமைத் துன்பத்தால் வந்து, தம் வறுமையைக் கூறி இரந்து நிற்போருக்கு
வேண்டுவன அளித்து அவர் வறுமையைப் போக்கமாட்டாத நிலை வரும்போது உடலைத் துரந்து
உயிர் இழந்து போகும் போது உயர்ந்த பண்பாடுமிக்க நம் தலைவனுக்குரிய மலையில் , புலியின்
கால் போன்று வாழையின் வளைந்த காய்கள் குலைதோறும் தொங்கும் என்று நானும் அவளும்
ஒன்று கலந்து அவனைப் பாட, உயிர்த் தோழியாகிய அப்பெண்ணுக்குக் காதலனைக்
காணாமையால் வாடிய தோள்கள் அவள் காதலன் அன்பு காட்டிய போது மகிழ்ந்து அழகு
பெற்றன.
3.6.2. குறிஞ்சிக் கலி எண்: 8, தோழி கூற்று
வரையாது வந்து ஒழுகும் தலைவனைத் தோழி, தலைவியது கற்பு மிகுதியும், இவ்
ஒழுக்கம் அலராகின்றமையும், அவளது ஆற்றாமையும், கூறி வரைவு கடாயது
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, 5
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!
தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, 10
கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு,
‘ஓரும் நீ நிலையலை’ எனக் கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, 15
112
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி,
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் 20
மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே
ஞாயிற்றின் கதிர்களால் அழகுபெறும் மலைச்சரலில், எதிரெதிராய்நிற்கு இரு மலை
உச்சியில் இருந்து வீழும் அருவி அழகிய கிளைகளில் வீழ முற்றிய பூங்கொத்துகளை வரிசை வரிசயாக
நிற்கும் வேங்கை மரம், வரியுடைய நெற்றி உடைய அழகிய இரு யானைகள் இரு பக்கத்திலும்
நின்று, பூவோடு கலந்து நீரைச் சொரிய மலர்ந்த தாமரை மலரில் திருமகள் தெய்வச் சிறப்போடு
வீற்றிருப்பது போல விளங்கித் தோன்றும் மலை நாட்டுக்குரிய தலைவனே!
அவளை மறந்துவிட்ட உன் அருளற்றச் செயலை நான் அறிந்தால் உன்னைப் பிறர்முன்
பழிப்பேன் என்றஞ்சி, காதல் நோய் பெருகிய காலத்திலும் அக்கொடுமையை எனக்கு அறிவிக்காது
மறைத்து விட்டாள்.
அவளை மறந்துவிட்ட உன் அருளற்றச் செய்லை உடன் ஆடும் தோழியர் அறிந்தால்,
அவர்கள் உன் பண்பற்றசெய்லை பிரர் முன்னால் பழிப்பர் என நாணி, காமநோய் வருத்த
வருந்திபோது, அக்கொடுமையை அவரும் அறியாதபடி மறைத்துக் கொண்டாள்.
பெரும, இவ்வாறு உனக்கு நேர இருந்த பழி முதலான தீமைகளைக் காத்தல் தன் கடன் என
அறிந்து காத்து, அச்செயலால் உனக்கு உண்டாகும் தீமைகளைக் காத்தவளுடைய தீதத ் ற்குரிய அரிய
துன்பத்தைச் செய்யும் கொடிய காமநோயைத் தீரக ் கு
் ம்மருந்தாகுமாறு வரைவிற்குரிய விரைந்து
செல்வோம் வருக.
3.6.3. குறிஞ்சிக் கலி எண்: 9, தோழி கூற்று
வரைவிடை ஆற்றாத தலைவிக்கு, தோழி தான் தலைவனை நெருங்கி வரைவு கடாவ,
அது கேட்ட தலைவன் வரைவு முயற்சியான் வருதல் இடையிட்டதூஉம், தமர் வரைவு
எதிர்ந்ததூஉம், கூறி, அவளை ஆற்றுவித்தது
விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 5
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆராப் புணர்சச் ியால் புலம்பிய என் தோழி 10
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை?
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை? 15
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ?
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
113
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை?
என ஆங்கு, 20
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே
ஞாயிற்றின் கதிர்களை மறைக்கும் மூங்கில்கள் வளர்ந்த மலையில் சுனையில் பூத்த
காந்தள் மலர்க் கொத்தை, பாம்பு நீர் உண்பதாகக் கருதி அதை அழிக்க காற்றோடு பெய்த
பெருமழை காலத்தில் எழுந்த இட்யோசை கேட்டு சிரு குடிசைகளில் வாழும் கானவர் துயில்
நீங்கி எழும் சிறப்பு வாய்ந்த மலை நாடனே!
புணரின் வெறுப்பில்லாத புணர்வினை விரும்பி அது கிட்டாததால் வருந்திய என்
தலைவியின் கண்கள் ஒளி இழந்து போகுமாறு செய்ததற்குக் காரணம், உன் மலைச்சுனை
மலர்களைவிட அழகானது என்பதாலா?
உயிர்போகும் இறுதி நிலை வந்து விட்டது எனக் கலங்குவதற்கான காமநோய் அளவு
கடந்து பெருகியதால் தலைவியின் தோள்கள் அழகு கெடும்படி நீ கேடு விளைவித்தாய். புலி
யானையோடு போர் செய்யும் உன் அகன்ற மலை மூங்கிலுக்கு நிகரானது என்ற
காரணத்தினாலோ?
உன் நினைவால் நள்ளிரவிலும் உறக்கமின்றித் தடுமாறும் என் தலைவியின் மேனி அழகு
கெடும்படி நீ கேடு விளைவித்தது, அம்மேனிம் உன் மலைவேங்கை மரத்தின் நெருப்புற்ற
மலர்களோடு ஒத்துள்ளது என்ற பொறாமையினால்தானோ?
இவ்வாறெல்லாம், அவன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்க,
களவுகாலத்தில் வந்து கூடி மகிழ்ந்ததாலுண்டான நட்பு அறுந்துவிடுவதற்கு அஞ்சி அவன்
வேண்ட அவன் வேண்டுகோளை ஏற்று அவன் வேண்டிய அந்நாளில் திருமணம் நிகழ நம்
சுற்றத்தாடும் ஒப்புக் கொண்டனர்.
3.6.4. குறிஞ்சிக் கலி எண் 10, தோழி கூற்று
அல்ல குறிப் பட்டுத் தலைவன் மீள, அதனை ‘என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று
ஆற்றாளாகி, ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி,
தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய’ தலைவியது நிலைமை தோழி தலைவற்குக் கூறி, "இவ்
இடையீடு நின் தோழியின் ஆயிற்று" என, எனது பிழைப்பு ஆக்கி, அவளை ஆற்றுவிப்பாய்; நீ
உரைத்ததே உரையாம் அவட்கு' என அவளது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது.
வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், 5
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம்இழி அருவிய அணிமலை நல்நாட!
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப 10
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன்,
114
வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப் 15
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்,
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக 20
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும், 25
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே
115
தும்பியின் செயல்
(1-8) வீயகம் புலம்ப………… நல்நாட!
தானிருந்து தேனுண்ட பூ, தனித்துக் கிடக்க வேறுவேறு பூக்கலைத் தேடி செல்லும்
தும்பி, மத்நீர் ஒழுகும் யானையுடன் புலி போர் செய்யும்போது வேன்கைமரக்க்கிளை எனக் கருதி
புலிபக்கம் சென்றும் யானையின் மதநீர் மணத்தால் அதனை அணுகியும் மாறி மாறி பறக்கிறது.
இக்காட்சியானது இருவேறு அரசர்கள் போர்க்களத்தில் மாறுபட்டு நிற்க அவர்களைச்
சமாதானம் செய்ய சான்றோர் இரு மன்னர்களிடமும் மாறிமாறிச் செல்வதைப் போல இருகின்ற
மலைக்கு உரிய நாடனே!
(10-13) ஏறு இரங்கு ………… யானாக
தோழி, காதலனைக் கூடி மகிழ வேண்டுமென்ற வேட்கையால் வந்து தன் செய்யும் குறிப்பை
எதிர்நோக்கி நொச்சிப்பூ விழும் அரவத்தை ஊன்றிக் கேட்கும் காதுகளோடு நான் காத்திருந்து
வருந்தவும் இடி இடிக்கும் இரவின் நள்ளிரவில் வந்து என்னைப் பார்க்காதே திரும்பும் தலைவன்
நான் ஏமாற்றிவிட்டேன் என்று மனம் வருந்துகிறான். அதற்கு நான் என் செய்வேன்?
(14-17) அருஞ்செலவு ……… யானாக
தோழி திருமணம் நிகழ்ந்து என் நிலை உயரத் துணைபுரியும் தெய்வங்களுக்கு என்ற
எண்ணத்தில் அவனை எவ்வாறு காண்பது என்ற ஏக்கம் எழ , நான் வருந்தி இருந்தேன். காட்டு
வழிகளை இவள் மீது கொண்டுள்ள அன்பினாள் நான் கடந்து வந்தாலும் இவளின் அன்பைப்
பெற முடியவில்லை என்று வருந்திப் பலப்பல கூறினால் நான் என்ன செய்வேன்?
(18-22)கனைபெயல்…………………யானாக எனவாங்கு
தோழி, மழைத்துளியை விரும்பும் வானம்பாடி எப்பொழுதும் வானம் பார்த்துப் பறப்பது போல நான்
அவன் அன்பினால் ஆசை கொண்டு, மாறாக் காதல் உடையேனாய் மழி பெய்யும் இடை
யாமத்தில் வந்து, குறியிடத்தில் உன்னைக் காணா முடியாது போனால் அதை என் பிழையாகக்
கூறுவதர்கு யான் என்ன செய்ய முடியும்?
(23-27) கலந்த நோய் ………………..இவளுடைய நோயே
என்றெள்ளம் கூறி புலம்பியவாறு இவள் காமநோய் பெருகிவிடவே அக்கவலையால் தூக்கம்
இல்லாமல் துயர் கொள்ளும் என்மீது அக்குற்றத்தை ஏற்றிவிட்டால் உன்மலையில் கூறுவார்
கூறுவனவற்றை எதிரொலிப்பது போல நீ உரைக்க்ம் பொய்யே உனக்கு வெற்றியை உண்டாக்கும்.
அதை இன்றே செய்வாயக.
உள்ளுறை: பூ-திருமணம், விடுத்துச் சென்ற தும்பி- மணம் செய்து கொள்ள விரும்பாத
தலைவன், தும்பி, புலியிடத்தும் யானியிடத்தும் திரிதல் – தலைவன் பகற்குறி இரவுக்குறிகளில்
இன்பம் பெற்று மகிழ்தல்.
3.6.5. குறிஞ்சிக் கலி எண். 11, தோழி கூற்று
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி, அவன் தன்மையும், அவன் தனக்குக்
கூறுவனவும்,அக் கூற்றுத் தன்னால் பொறுக்கவொண்ணாதவாறும், அவன் கருத்தும்,
தலைவிக்குக் கூறி, அவன் குறை நயப்ப, தன்னுள்ளே சொல்லியது
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்:
116
‘நின் இன்றி அமையலேன் யான்’ என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், 10
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!
‘அறியாய் நீ; வருந்துவல் யான்’ என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?
‘வாழலேன், யான்’ என்னும் ‘நீ நீப்பின்’ அவன் ஆயின், 15
‘ஏழையர்’ எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்
‘அவனை,
நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; 20
"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா’ எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!
(1- 8)ஒன்று, இரப்பான்……… கேட்டீ
ஒளிவீசும் உயர்நத் அணிகலன்களை அணிந்தவளே, வழியில் ஓர் இளைஞனைக்
கண்டேன். அவன் யாதோ ஒரு பொருளை என்னிடம் இரப்பான் போல பணிந்து சில கூறத்
தொடங்கினான். ஆணால் அவன் நிலையை நோக்கினாலோ உலகம் காக்குக் பெருஞ்
செல்வந்தன் போல உள்ளான். கல்வி கேளிவிகளி சிறந்த சான்றோரிடத்து பயின்ற தன்னடக்கமும்
பெற்றிருந்தான். வறியோர்களின் பசித் துன்பத்தினை போக்கவல்ல பெரும்பொருள் திரட்ட
வல்லவன். அத்தகையான் தன் தகுதிபாட்டை இழந்து என்னிடம் சொல்லிய சொற்களைக்
கூறுகின்றேன் கேள்.
(9-11) நின் இன்றி …………….உளகொல்லோ
நறுமணம் நாறும் நெற்றியை உடையவளே, நீ இல்லாமல் நான் உயிர் வாழேன் என்கிறான். ஆனால்,
இறக்கத் துணியும் அவன் சொல்லை நம்பக்கூடாது. இந்நிலையில் எனக்கு வந்த துன்பம்
பிறர்க்கும் உண்டாகுமோ?
(1214)-அறியாய் …………..வலைப்பட்டார்
நான் உனைப் பெற இயலாத கவலையால் வருந்துகிறேன் . ஆனால், இதை நீ அறியவில்லை என்று
கூற்கிறான். அவன் சொல்லும் சொல்லின் உண்மை இயல்பை ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவது
என்னைப் போன்ற பெண்டிர்க்கு இயலாது.
(15-18)வாழலேன் யான் ………….சூழ்குவோம்
நீ என்னை கைவிட்டால் வாழ மாட்டேன் என்று கூறுகிறான். அயலான் ஒருவனுக்காக நான்
இவ்வாறு வருந்துவது குறித்து ஊரார் இவள் போன்ற மகளிர் பேதையரே என்ரு கூறுதல் நமக்குப்
பழியாகும். ஆதலின், இந்நிலை குறித்து நாம் இருவரும் ஒன்று கூடி ஆராய்ந்து பார்ப்போமா?
(19-24) அவனை ………….மேவாய் நெஞ்சே
நமது நாணம் அழியும்படிஅவன் முன்னே சென்று நில்லாதே போ என்ரு துரத்திவிட முடியாது.
அயலான் ஒருவனை ஏற்றுக்கொண்டேன் என்று ஊரார் சொல்லும் பழியும் நம் பெண்மைக்குப்
பொருந்தாது. அவனோ நம்மைக் கைப்பற்றத் துணிந்துவிட்டான். ஆனால், நெஞ்சே அதற்கு
இவள் சம்மதம் தரவில்லை. ஆகவே, நீ அவனை வருக என நான் கூறுவதுபோல் குறிப்புக் காட்டி,
அவன் விரும்பும் இடத்திற்கு விரும்பிச் செல்வாயாக.
3.6.6. தொகுப்புரை
117
கலியோசை நிறந்த இசைப்பாடல்களைக் கொண்ட இந்நூல் கற்றறிந்தோர் ஏத்தும் கலி
எனப் புகழப்படுவதின் உண்மைக் காரணத்தை மாணவர்களே! உணர்ந்து சுவைத்து இருப்பீர்கள்.
நாடகப் போக்கில் அமைந்த இருவர் உரையாடல்களாக அமைந்த இக்குறிஞ்சிக்கலி பாடல்கள்,
பழந்தமிழரின் வள்ளைப்பாட்டு, மகளிர் வாழ்வில் உணர்ச்சியை வெளிப்ப்படுத்த ஒரு உத்தியாகப்
பயன்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
118
அலகு மூன்று
இ. பரிபாடல் செவ்வேள் (14 ஆம் பாடல்)
பாடம் இருபத்தொன்று
பரிபாடல் அறிமுகம்
பாட முன்னுரை
பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல்
'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
பரிபாடல் வரலாறு
பரிபாடல் என்னும் நூல் சங்க இலக்கியம் தொகுப்பில் எட்டுத்தொகை நூல்களில்
ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும்
இது வழங்கப்பட்டிருக்கிறது.இந்த நூலில் 70 பாடல்கள் இருந்ததை இறையனார் களவியல் உரை
குறிப்பிடுகிறது. அவற்றில் இன்றைய நிலையில் கிடைத்தவை 22 பாடல்கள் மட்டுமே. இதன்
ஒவ்வொரு பாடலின் இறுதிலும் பாடுபொருள், பாடியவர், இசை அமைத்தவர், இன்ன பண்ணில்
பாடப்பட்டது என்னும் குறிப்புகள் உள்ளன.
பாடல்களின் தலைப்பு மொத்த பாடல்கள் கிடைத்தவை
திருமால் 08 6
செவ்வேள் 31 8
கொற்றவை 01 0
வையை 26 8
மதுரை 04 0

70 22

பாடிய புலவர்கள்
கீரந்தையார், கடுவன் இளவெயினார், நலந்துவனார், மேயோடக் கோவனார், குன்றம்
பூதனார், நல்வழுதியார், நல்லெழுநியார், கேசவனார், இளம்பெருவழுதியார், நப்பண்னையார்,
நல்லழ்சியார், நல்லச்சுதனார் ஆகிய பதின்மூவர்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள்
(காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள
வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள்
உள்ளன.
உரையும் பதிப்பும்
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில்
அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன்
பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918 ஆம்
ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் பேராசிரியர்
வையாபுரிப்பிள்ளை மற்றும் மீ.பொன் இராமநாதன் செட்டியார் என வேறு
பலரும்வெளியிட்டுள்ளனர்.
தொகுப்புரை
பரிபாடல், தொல்காப்பியர் காலத்தில் அகபாடல்கள் செய்வதற்குரிய யாப்பு வடிவமாக
விளங்கியது. சங்க நூல்களில் பண்ணமைப்பு குறிக்கப்பெற்ற இசை நூல் இது.
119
120

பாடம் இருபத்திரண்டு
(துறை: பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இம்
பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
பாடியவர் : கேசவனார், இசையமைத்தவர் : கேசவனார், பண் : நோதிறம்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே, 5
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
(இதன் பொருள்:) மேகம் பெருமழையைப் விரைவாகப் பெய்தன. அம்மழை நீரை
ஏற்றதால் நீர் மிகுந்த சுனைகளில் மலர்கள் மலர்ந்து நின்றன. குளிர்ந்த நறிய கடம்பினது மலரின்
தாதினை ஊதிய வண்டுகள் முரல்வது பண் இசையைப் போன்று ஒலித்தது. முருகனின்
திருப்பரங்குன்றத்துச் சாரலிலே தழைத்த மூங்கில்கள் நினது திருமுன்னர்க் கூத்தாடும்
அடியவராகிய அடியுறை மகளிருடைய தோள்களை ஒத்தன. வாகையினது ஒள்ளிய மலரை
ஒக்கும் மயில்களின் அகவற் குரல் ஓசையானது, தலைவியரைப் புணர்ந்து பின்னர்ப்
பிரிந்துசென்ற தலைவரைக் காலம் நீட்டியாதே விரைந்து வாருங்கள்(வம்மின்) என
அழைப்பவருடைய சொல்லை ஒத்தனவாய்த் திகழ்ந்தன.
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; 10
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15
பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,
(இ-ள்.) புதுமலர்களைக் கொண்ட கொன்றையின் பூச் சரங்கள் பொன் மாலைகள் போன்று
தொங்கின. அழுகினற் சிறுமிகளின்அவ்வழுகைநிறுத்தும் பொருட்டுத் தாயர் அதோ புலிபுலி என்று சுட்டிச்
சொல்லும்படியாக பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் மலர், அகன்ற பாறைக்கல்லின் மேல்
உதிர்ந்து பரவி உள்ளன. இவற்றோடு, நீர்நிலையின் பக்கத்தே அரும்புகளையுடைய காந்தளின்
பூங்கொத்துக்கள் மலர்ந்த ஒழுங்குபட்ட இதழ்களோடு அதனருகே கொடிவிட்டுப் பரந்த
தோன்றியின் செந்நிறப் பூக்கள் வீழ்ந்து கிடந்தன. இவ்வாறாக, நினது திருப்பரங்குன்றத்தில்
வேனிற்காலத்தும் கார்காலத்தின் தன்மையே நிறைந்து இருந்தது.
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! 20
அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
121
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
(இ-ள்.) போரிலே சூரனை அவன் சுற்றத்தோடும் அறுத்தருளிய ஒளியுடைய வேற்படையை
ஏந்திய பெருமானே! இஃது ஃஇன் பரங்குன்றச் சிறப்பாகும்.
களங்கம் இல்லாத கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்தெழுந்தாற் போன்ற நறிய அகில்
நறுமணப் புகையை மிக விரும்பியவனே ஆறு முகமும் பன்னிரண்டு கைகளுடன் தோன்றித்
தமது அழகாலே பிறமகளிரை வென்ற வள்ளியை விரும்பியவனே! தலைவியர் தம்மைப்
பிரிந்துசென்ற தங் கணவர் விரைந்துவந்து புணர்ந்து பின்னர் நீங்காமைப் பொருட்டு யாழிசை
எழுப்பி நின்னைக் குறித்துப் பாடும் பாட்டினை விரும்புவோனே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் 25
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!-
(இ.-ள்)நீ பிரந்த நால் முதல் உன்னைக் கண்டு நடுக்குற்றத் தேவர்களுக்கெல்லாம்
அருளியவனே! உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒருபிறப்புமாகிய இரண்டு
பிறப்பினையும் அருள் விளங்கும் நெஞ்சத்தோராக விளங்கும் அந்தணர் என்ர ஒப்பற்ற புகழை
உடையோரின் அற வாழ்விடத்து பொருந்தியவனே!
விண்ணப்பம்
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக--
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! 32
(இ-ள்.) நீ அத் தன்மையுடைய சிறப்பினை ஆதலால் அடியேன் நின்னைப் பெரிதும்
விரும்பி உன் திருவடிகளை அடுத்தடுத்து வழிபட்டு நின்றோம். பழமையாக முதிர்ந்த மரபினை
உடைய நின் புகழினும் பலவாக உன்னை வழிபடுவோர் பெறும் பயன் இன்னும் இன்னும் பலவாகப்
பல்கிப் பெருகுவதாகட்டும். பெருமானே!
தொகுப்புரை
பரிபாடலில் முருகனைக் குறித்த பாடல்கள் செவ்வேள் என்னும் தலைப்பில்
அமைந்துள்ளன. இப்பாடலில், முருகன் உறைவிடத் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றச் சிறப்பும்
முருகனின் சிறப்புகள் மற்றும் புலவரின் போற்றி பரவுதல் ஆகியன கண்டோம்.
122
தன் முயற்சி வினாக்களும் விடைகுறிப்புகளும்
1. பரிபாடல் – சிறு குறிப்பு வரைக.
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களில் அகம் புறம் தழுவியதோர் நூல். இந்நூலின்
மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 70 ஆகும், ஆனால், தற்போது இரபத்திரண்டு பாடல்களே
காணக்கிடைக்கின்றன. பரிமேலழகர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
2. பரிபாடல் செவ்வேள் பாடலில் முருகனின் புகழ் பேசப்படும் விதத்தினை விவரிக்க.
முருகனின் குன்றப் பெருமை – சூர பதுமனை அழித்தவன் – பன்னிரு கைகள்
ஆருமுகம் தாங்கியவன் – வள்ளி மணாளன் – வைதீக அறம் பொருந்தியவன்.
123
அலகு நான்கு
புறநானூறு 100 – 120 ( 21 பாடல்கள்)
பாட நோக்கம்
பழந்தமிழரின் புற வாழ்க்கையினை அறிமுகம் செய்தல். தமிழரின் பொற்கால
நாகரிகத்தை நாம் அறிந்து கொள்ளத் துணை செய்தல். புறத்திணைகள் குறித்த தெளிவினை
ஏற்படுத்துதல்
மாணவர் பெறும் திறன்
1. பழந்தமிழரின் கொடைத்திறனை அறிந்து கொள்ளுதல். குறிப்பாக, சமகாலத்தில்
வாழ்ந்த கடையேழு வள்லல்களான அதியமான் அஞ்சி குறித்த செய்திகள் மற்றும்
பறம்புமலை ஆண்ட வேள்பாரியின் பாடல்கள் தரும் செய்திகளை அறிந்து கொள்ளுதல்.
2. பாடாண்திணை, நொச்சித் திணை மற்றும் பொதுவியல் திணை குறித்து
மாணவர்களுக்கு தெளிவு உண்டாடல்.
3. இயன்மொழி வாழ்த்து, அரச வாகை, விறலியாற்றுப்படை, மகண்மறுத்தல் மற்றும்
கையறுநிலை துறைகளுக்கான விளக்கங்களும் அத்துறையில் எழுந்த பாடல்களுக்கான
விளக்கங்களும் மாணவர்கள் அறிந்து கொள்ளுதல்.
பாடம் இருபத்திமூன்று
புறநானூறு அறிமுகம்
1.1 பாடமுன்னுரை
புறப்பொருள் பற்றிய 400 ஆசிரியப்பாக்களைக்(அகவற்பா) கொண்டது புறநானூறு. புறம்,
புறப்பாட்டு எனவும் அழைப்பர். இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத்
தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுள்களும் கிடைத்தில. இந்நூலின் கடவுள்
வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவ்வாழ்த்தில் சைவசமயக் கடவுளான
சிவனைப் போற்றிப் பாடுகிறார். இந்நூலுக்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு.
இதனை இயற்றியோர் 158 புலவராவர். புறநானூற்றினைமுதன்முதலில் நூலாக அச்சிட்டவர் தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார். இந்நூலுள் உழிஞைத் திணை குறித்துப் பாடப்பெறவில்லை.
124
1.2 வரலாற்றுச் செய்திகள்
தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத் துணை நிற்கும் அரும்பெரும்
பெட்டகமாக விளங்குவதால் இந்நூலினைத் தமிழர் வரலாற்றுக் கருவூலம் என்பர். புறநானூறு.
வடநாட்டு பேரரசர்களாகத் திகழ்நத ் நந்தர்கள் மற்றும் மௌரியர்களைப் பற்றிய அரிய
குறிப்புகளைத் தருகிறது.
1.3 மன்னர்கள் வாழ்வு
சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள், பாரி, காரி, ஓரி, பேகன், ஆய்,
அதியமான், நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள் ,
கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது. மன்னர் சிலர்க்கும், புலவர்
பெருமக்கட்கும் இடையே நிலவிய வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம்
வியக்கும் தன்மை உடையனவாகும்.
1.3 பண்பாட்டு நிலை
கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும், பிற அணிகளையும்
களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல், இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி
எரித்தல், வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை
வாளால் கீறிப் புதைத்தல், கணவனைஇழந்த பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர்
பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.
1.4. தமிழரின் பிற துறை அறிவு
தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு இசைத் துறைகளை
பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது
பற்றியும் இந்நூலிலிருந்து அறிய வருகிறது. பழந்தமிழகத்தின் அரசியல், சமூகநிலை, பழக்க
வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த
வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க வல்லதாகும்.
1.5. தொகுப்புரை
தமிழறிந்தார் அனைவரும் புறநானூறு கற்க வேண்டும். புறநானூற்றுத் தமிழரைப் போல
அஞ்சா நெஞ்சமும் குறையாத தமிழ்ப்பற்றும் மானவுணர்வும் பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
அருளும் ஆண்மையும் பண்பும் பாசமும்மன்னரும் புலவரும் வாழ்ந்த வாழ்க்கையைப்
புறநானூற்றினைப் படித்து இன்புறலாம். இவ்வொப்பற்ற அறிவுச் சுரங்கத்தைக் கற்று மகிழ
வேண்டும்.
125
பாடம் இருபத்தி நான்கு
4.2 பாடப்பகுதியின் முதல் ஆறு பாடல்கள்
(எண்கள்: 100 முதல் 105 வரை)
101. திணை: பாடாண் திணை துறை: பரிசில் கடாநிலை, பாடியவர்: ஔவையார்,
பாடப்பட்டவன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
(பாடாண் திணையாவது, பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய புகழ், வலிமை,
கொடை, அருள் தன்மை முதலியவற்றை ஆய்ந்து சொல்வதாகும். பாடு + ஆண்- பாடாண்
எனவரும். பாடப்படும் ஆண்மகனது சிறப்பியல்புகளைக் கூறும் திணை - பாடாண் திணை
எனப்படும். புகழ் எனின் உயிரும் கொடுக்கும் விருப்புடைய மன்னரை, பொருள் தேவை
உள்ளவர்கள் பரிசில் வேண்டிப் பாடும் பகுதி பாடாண் திணை ஆகிறது. பரிசில் கடாநிலை என்பது
பரிசில் தரும்படி வேண்டிக் கொண்டு புலவர் வாயிலில் நிற்பதைக் குறிக்கும். பரிசில்
வேண்டுவோர் வாயிலில் நின்று கொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு
வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள்
வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்று குறிப்பிடுகிறது.)
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் 5
நீட்டினும், நீடட
் ா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது; பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! 10
126
பாடல் கருத்து
ஒருநாள், இருநாள் அன்று. பலநாள்கள் பலரோடு திரும்பத் திரும்பச் சென்று பரிசில்
வேண்டினாலும் முதல்நாள் விருப்பத்துடன் வழங்கியது போலவே எல்லா நாளும் எல்லாருக்கும்
விருப்பத்தோடு அணிகலன் பூண்ட யானைமேல் வரும் ‘அஞ்சி அதியமான்’ வழங்குவான்.
அவனிடம் பரிசில் பெறுவதற்குக் காலம் தாழ்நத ் ாலும், தாழாவிட்டாலும் களிறு தன்
தந்தங்களுக்கு இடையில் வைத்துக்கொண்ட சோற்றுக் கவளம் தவறாது அதற்குப்
பயன்படுவது போல அவன் பரிசில் நமக்கு உதவும். நெஞ்சமே! வருந்த வேண்டாம். வாழ்க அவன்
தாள்கள்!
கருத்து: காலம் தாழ்த்தினாலும் அதியன் கொடை தவறாது அளிப்பான்.

102. திணை: பாடாண். துறை: இயன்மொழி. பாடியவர்: அவ்வையார்.


பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
(இயன்மொழி துறை என்பது மன்னவனின் இயல்பை மொழிவது ஆகும்.)
எருதே இளைய; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்? என, உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன, 5
இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை; இருள்
யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?
வண்டியில் ஏற்றியுள்ள பாரம் பெரிது. எனினும் வண்டியில் பூட்டியிருக்கும் நுகத்தில்
அதனை இழுத்துச் செல்லும் இளமைப்பருவத்து எருதுக்கு நுகத்தில் பாரம் தெரியாது. வண்டி
பள்ளத்தில் இறங்கினாலும் மேட்டில் ஏறினாலும் பாரமானது எருது இழுக்கும் நுகப்பகுதியில்
தாக்காமல் இருக்க வண்டியின் பின்பக்கம் சேம அச்சு கட்டித் தொங்கவிட்டிருப்பர். அதுபோல
இளவரசன் பொகுட்டெழினி ஆட்சிக்கு அரசன் அதியமான் சேமபிறர் வாழ்வு கவிழாமல் தாங்கிக்
காப்பவன் நீ. உன்னைச் சார்ந்தவர்களின் துன்ப இருளினைப் போக்கி உலகின் இருளை நீக்கும்
நிலவு போல் விளங்குகிறாய்.
கருத்து: பிறர் துன்பம் நீஙக
் வணிடியின் சேம அச்சாக விளங்குபவன் பொகுட்டெழினி.
103. திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை. பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
(விறலியாற்றுப்படை என்பது ஒரு விறலியை இன்னொரு விறலி மன்னனின்
கொடைத்திறன் கூறிஆற்றுப்படுத்துவாள். ஈண்டு, ஔவையார் விறலியைஆற்றுபடுத்துகிறார்.)

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்


தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்; 5
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
127
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப, 10
வறத்தற் காலை யாயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!
விறலியே! ஒருபக்கம் பதலை, மற்றொரு பக்கம் முழவு என்று இருபுறமும்
இசைக்கருவிகள் தொங்க, கவிழ்த்து வைத்திருக்கும் மண்டை மலரும்படி உணவு அளிப்பவர்
யார் எனத் தேடிக்கொண்டு காட்டு வழியில் அமர்ந்திருக்கிறாய். அஞ்சி அரசன் பல
வேல்களுடனும், மேகம் போல யானைக் கூட்டத்துடனும் பகைநாட்டில் இருக்கிறான். உலகமே
வறுமையுற்று வாடினாலும் பாதுகாக்கும் திறன் படைத்தவன். அவனிடம் செல்வாயானால், அவன்
துன்புற்றுக்கொண்டிருக்கும் காலமானாலும் உனக்கு கறியும் சோறும் தந்து என்றும் உதவுவான்.
அவன் திருவடி நிழல் வாழ்க.
கருத்து: பசியோடு வருவோர்க்கு ஊன் விருந்து அளிப்பவன் அதியமான் அஞ்சி.
128
104. திணை: வாகை, துறை: அரசவாகை, பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
(வாகைத் திணை என்பது பகை மன்னனை வெற்றி பெறுதலாகும். மன்னனின்
வாகைப்பூச் சூடி வெற்றியைக் கொண்டாடுவான். அரச வாகை என்பது அரசனின் இயல்பையோ
வெற்றியையோ எடுத்துரைப்பதாகும்.)
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது, 5
இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
சிறுவர் விளையாடிக் கலக்கும் முழங்கால் அளவு நீரிலும் முதலை யானையை வீழ்தத ் ி இழுத்து
அழித்துவிடும். அதுபோல, எம் தலைவனின் வலுவையும் ஆற்றலையும் அறியாது இளையன்
என்று கூறிக்கொண்டு போரிட வந்தால் வெற்றி பெறுதல் அரிது.
கருத்து: அதியனை இளையோன் என்று எண்ணிப் போரிடுதல் முதலை வாயில் அகப்பட்ட
யானையின் நிலை போன்றது.
105. திணை: பாடாண், துறை: விறலியாற்றுப்படை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
(ஆற்றுப்படை என்பது பரிசு பெற்ற ஒருவன் பரிசில் பெறா ஒருவனை நோக்கி வள்லலிடம்
ஆற்றுப்படுத்துவது ஆகும். இம்மன்னனால் இன்னது பெற்றேன்; நீயும் சென்று பெறுவாயாக
என்பர். ஒரு விறலியை இன்னொரு விறலி மன்னனின் கொடைத்திறன் கூறி ஆற்றுப்படுத்துவாள்
இது விறலியாற்றுப்படை. ஈண்டு, கபிலர் விறலியை ஆற்றுபடுத்துகிறார்.)
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட, 5
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
விறலியே! வண்டு ஊதும் குவளை மலரில் சிதறி மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும்,
கொள் விதைக்க உழுத வயலின் படைச்சால் வாய்க்கால் வழியே ஓடும்படி பாயும் அருவி நீரைக்
காட்டிலும் அவன் இனிய பாங்கினை உடையவன் வேள்பாரி. அப்பாரியிடம் பாடிச் சென்றால்
சிறந்த அணிகலன்களைப் பரிசாகப் பெறுவாய்.
கருத்து: விறலியே இனிய பண்புகளைப் பெற்றவன் பாரி. அவனிடம் பாடிப் பரிசு பெறுவாய்.
129
பாடம் இருபத்தியாறு
பாடல் எண்கள் 106 முதல் 110 வரையிலான ஐந்து பாடல்கள்
106. திணை: பாடாண், துறை: இயன்மொழி, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே. 5
நல்லது, தீயது என்பது கடவுளர்க்கு இல்லை. புல்லிய இலைகளை உடைய எருக்கம்
பூவையும் கடவுளர் விரும்பி ஏற்பர். அதுபோன்று அறிவில்லாதவரும் புல்லிய குணத்தாரும்
தாமறிந்த அளவில் பாடிப் புகழ்நது
் சென்றாலும் பாரி மிக்க மகிழ்ச்சியோடு தனது கொடையைக்
கடமையாகக் கருதும் வண்மை உடையவன்.
கருத்து: கொடை மடம் உள்ளம் படைத்தவன் பாரி. தன்னை நாடி வருவோர்க்கு தகுதி
பார்க்காது வழங்குவான்.

107. திணை: பாடாண், துறை: இயன்மொழி, பாடியவர்: கபிலர்,


பாடப்பட்டோன்: வேள் பாரி
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.
செந்நாப் புலவர் எல்லோரும் பாரி பாரி என்று அவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன்
மட்டுமே அல்லன்; இவ்வுலகைக் காப்பதற்கு இங்கு மாரியும் உள்ளது அல்லவா? பாரியைப் போல
வழங்கும் மழை ஒன்றும் இருக்கிறதே! (பாரியின் கொடையைப் பழிப்பது போலப் புகழும் பாடல்
இது. தண்டியலங்காரம் போன்ற அணி நூல்கள் இவ்வாறு பாடுவதை ‘ வஞ்சப்புகழ்ச்சி அணி’
என்று கூறுகின்றன. பாரியை இகழ்ந்தது போலப் புகழ்ந்தது ‘ பயனிலை புரிந்த வழக்கம் இது
என்பர் பேராசிரியர்.)
கருத்து: மழை போன்று பயன் கருதா கொடை உள்ளம் படைத்தவன் பாரி.
108. திணை: பாடாண், துறை: இயன்மொழி. பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின், 5
வாரேன் என்னான், அவர் வரை யன்னே.
மலைவாழ் குறத்தியர் சந்தனக் கட்டையின் ஒரு நுனியில் தீ மூட்டித்
தொங்கவிட்டிருப்பர். அதன் மணம் பூத்திருக்கும் வேங்கைப் பூ மணத்தோடு சேர்ந்து
மலைச்சாரலில் கமழும். இம்மணம் கமழும் மலைச்சாரல் நாட்டின் அரசன் பாரி. பரிசில்
130
வேண்டுவோர் கேட்டால் வாரேன் எனக் கூறாது பாரி தன்னையே பரிசாக (உடமையாக) அவர்களுக்குக்
கொடுத்துவிடுவான்.
கருத்து: காலம் தாழ்த்தாத உள்ளம் படைத்தோன் வேள்பாரி.

109. திணை: நொச்சி, துறை: மகண் மறுத்தல், பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி
(நொச்சித்திணை என்பது மதில் காத்தல் ஆகும். எனினும், தொல்காப்பியர்
நொச்சியைத் தனித் திணையாகக் கூறவில்லை. மகள் மறுத்தல் என்பது மகட்கொடை நேரும்
அரசர்களுக்குத் தன் குடி பெருமை கூறி மறுத்தல். மகள் மறுத்தல் என்னும் துறையில் வரும்
பாடல்களில் மகளின் தந்தை இன்னார் எனக் காட்டப்பட்டிருக்கும்.
அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, 10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 15
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.
பாரியின் பறம்புநாடு இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளது. மூன்று வேந்தர்களும் இதனை
முற்றுகை இட்டிருக்கிறீர்கள். உங்கள் முற்றுகை அதனை ஒன்றும் செய்ய இயலாது. காரணம்
உழவர் விளைவித்துத் தராத நான்கு வகையான வளங்கள் பறம்பு மலையில் உள்ளன. ஒன்று,
மூங்கில் நெல் விளைகிறது. இரண்டு, பலாப்பழம் உண்டு. மூன்று, வள்ளிக்கிழங்கு உண்டு.
நான்கு, ஒரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள் உண்டு. வான் போன்று பரந்த
இடத்தைக் கொண்டது அவன் மலை. வானத்து மீன்கள் போல் அதில் சுனைகளும் உண்டு.
இத்தகைய வளம் நிறைந்த அவனது மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர்
யானைகளைக் கட்டிவைத்தாலும், இடமெல்லாம் தேரை நிறுத்திவைத்தாலும், உங்கள் போர்
முயற்சியால் அவனை வெல்ல முடியாது. வாள் வீசிப் போரிட்டாலும் அவன் தரமாட்டான். அவனது
பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு உரிய வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன். யாழ்
மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள். உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.
ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன்
பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம். அதுவே சிறந்த வழியாகும்.

கருத்து: போர் முயற்சியால் பறம்பு மலையினைக் கைக்கொள்ள இயலாது. விறலியர்


போன்று பாடிச் சென்றால் நாட்டை பரிசிலாகப் பெறலாம்.
131
110. திணை: நொச்சி, துறை: மகள் மறுத்தல். பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே; 5
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.
போர்களில் வெற்றி கண்ட படையுடன் மூவேந்தர்களும் கூடிப் பாரியை எதிர்த்து
நிற்கிறீர்கள். அவனது பறம்பு நாட்டை உங்களால் கைப்பற்ற இயலாது. காரணம் பறம்பு நாட்டிலுள்ள
300 ஊர்களையும் அவனை நாடிவந்து இரந்தவர்கள் தானமாகப் பெற்றுச் சென்று விட்டனர்.
இப்போது அவன் நாட்டில் இருப்பது பாரியும் நானும் மட்டுமே உள்ளோம் . மேலும், அவன் இருக்கும்
குன்றும் உள்ளது. அவனைப் பாடிக்கொண்டு இரவலராகச் சென்றால் அவற்றையும் நீங்கள்
பெற்றுக்கொள்ளலாம்.
கருத்து: பறம்புமலை முவேந்தர்களாலும் கைப்பற்ற இயலாது. பாடி வந்தால் மலை
மட்டுமே உள்ளது. அதனைப் பரிசாகப் பெறலாம்.

பாடம் இருபத்தியேழு
பாடல் எண்கள் 106 முதல் 110 வரையிலான ஐந்து பாடல்களுக்கான
விளக்கம்
111. திணை: நொச்சி, துறை: மகள் மறுத்தல். பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.
அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.
பறம்பு மலை இப்போது பெரிதும் இரக்கம் கொள்ளளத் தக்க நிலையில் உள்ளது. அதனை
மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டிருக்கின்றனர். அவர்களின் வேல் படையால் பறம்புமலை
வேந்தனை வெல்ல முடியாது. என்றாலும் பறம்பு மலையைக் கிணை முழக்கத்துடன்
பாடிக்கொண்டு செல்லும் விறலி அதனைத் தானமாகப் பெற்றுக் கொள்வது எளிது.
கருத்து: மகள் தர மறுத்த பாரியைப் போரில் வேல்லுதல் அரிது. ஒருவேளை கிணைமகள்
போல் பாடி வந்தால் குன்றம் பெறுவீர். எனினும் மகளிரைப் பெற மாட்டீர். பாரியின் மற வலிமையும்
கொடை மடமும் பேசப்படுகிறது.

112. திணை: பொதுவியல், துறை: கையறு நிலை, பாடியவர்: பாரி மகளிர்,


பாடப்பட்டோன்: வேள் பாரி
132
(பொதுவியலாவது, வெட்சி முதலான திணைகளுக்கெல்லாம் பொதுவாகவுள்ளனவும்
அத்திணைகளில் கூறாமல் தவிர்தத ் னவும் ஆகிய இலக்கணங்களைக் கூறும் பகுதியாகும். தலைவன்
இழந்து செயலற்ற நிலையினைக் கையறுநிலை ஆகும்.)
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 5
கடந்த முழுநிலா நாளன்று எங்களுடன் தந்தை இருந்தார். எம்முடைய குன்றமும்
எங்களுடையதாக இருந்தது. இத்திங்களில் வென்றெறி முரசின் வேந்தர்கள் எம் குன்றத்தையும்
கவர்ந்தனர்; யாமோ எம் தந்தை இலாதவர்களாய் ஆயினோம்.
கருத்து: மலையும் இழந்தோம் தந்தையும் இழந்தோம் என்று தம் நிலைக்குப் பாரி மகளிர்க்
கலங்கிக் கூறியது.
113. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழப் ்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று, 5
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.
பெரும்புகழ் பெற்ற பறம்பு மலையே! முன்னர் இருந்த நின் வளம் எத்தகையது? நின்னை நாடி
வரும் இரவலர்க்கு மதுவைத் தருவார் சிலர்; ஆட்டுக்கிடாய் சமைத்து ஊனும் சோறும் அளிப்பர்
சிலர்; அத்தகைய வளத்துடன் அப்போது நீ எமக்கு அப்போது நட்புக் கொண்டிருந்தாய். இப்போது
பாரி இறந்துவிட்டான். அவனது மகளிர்க்கு உரியவரைத் தேடிக்கொண்டு செல்கிறேன். கலங்கிச்
செயலற்றவனாய் கண்ணீர் அரும்ப உன்னைத் தொழுதும் வாழ்த்தியும் செல்கிறேன்.
கருத்து: பாரி இல்லாமல் பறம்பு மலை கொடை வண்மை இழந்தது.
133
114. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.
ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில், 5
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
யானை தின்று உமிழ்ந்த கவளம் போல நறவுநீர் பிழிந்துவிட்டு எறிந்த கோது முற்றத்தில்
சிதறிக் கிடக்கும். அவ்வாறு சிதறிய மது சேறாகி நாற்புறமும் ஒழுகி நிற்கும் பறம்பு மலையே!
நீயோ, அருகாமையில் இருப்பவர்களுக்கும் தோன்றுவாய். சிறு தொலைவு சென்று
பார்ப்பவர்களுக்கும் தோன்றுவாய். காரணம் நின்பால் தங்கி இருந்த பாரியின் சிறப்பால்
அல்லவா?
கருத்து: பாரியின் பறம்புமலையின் நாற்புறமும் நறவு(கள்) ஓடி வளம் சேர்தத
் தன்மை உடையது.
பாரி, உயிரோடு இருந்தபோது வளமிக்க மலையாக இருந்தது பறம்பு மலை
115. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு 5
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
ஒரு பக்கத்திலே அருவி ஒலியொடு வழியும். மற்றொரு பக்கத்திலே பாணர் ஏந்திய கலங்கள்
மதுவால் நிரம்பி வழியும். கள் வடிக்கும் போது சிந்தின தேறல் மலைக்கற்களை உருட்டும்.
இவையனைத்தும் முந்நாள் கண்டேன். வேல் படையும் யானைப் படையும் உடைய மூவேந்தர்ககு ் ம்
இன்னாதவனாகவும்(பகைவன்) எங்களுக்கு இனியவனாகவும் விளங்கினான் பாரி. அப்பாரியின்
பறம்பு மலையே! அந்தோ, நீ என் கண் பார்வைல் இருந்து இப்பொழுது மறைந்து செல்கிறாய்.
கருத்து: முவேந்தர்ககு ் பகைவனாகவும் பரிசிலர்ககு ் இனியனாகவும் காட்சியளித்த பாரியின்
பறம்பு மலையே! இனி நீ உன் நிலை இரங்கத்தக்கது.
134
பாடம் இருபத்தி எட்டு
பாடல் எண்கள் 115 முதல் 120 வரையிலான ஐந்து பாடல்களுக்கான
விளக்கம்
116. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், 5
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், 10
கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது 15
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.
மயிலினம் சோலையில் ஆட, குரங்கினம் மலை முகடுகளில் தாவி விளையாட, அக்குரங்கினம்
அனைத்தும் கூடித் தின்றும் தீராத கனிவகைகள் கணக்கில்லாமல் பாரியின் மலையில் எங்கும்
விளங்கின. அம்மலைஇன் உச்சியில் நின்று தம் தந்தையை வெல்ல வழி அறியாதாராய் போர்
செய்ய வந்தவர்களின் குதிரைகளை முன்னர் வேடிக்கையாக எண்ணினர் இவர்(பாரி மகளிர்).
இன்றோ, வேலி சூழ்நத ் சிற்றில் முற்றத்தில் ஈந்திலைக் குப்பமேட்டில் நின்று உப்பு வண்டிகளை
எண்ணுகின்றனர். அந்நிலையை எண்ணி வருந்துகிறேன். என் ஆயுள் இப்பொழுதே கெடுவதாக.
கருத்து: பாரியின் அருமை அறியாது மூவேந்தர் அவனை வீழ்தத ் ினர்.

117. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,


பாடப்பட்டோன்: வேள் பாரி
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், 5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
135
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. 10
சனி நட்சத்திரம் புகையினும் தூமகேது தோன்றினாலும் வெள்ளி நட்சத்திரம் தென்
திசையில் உதித்தாலும் புதர்களில் பூக்கள் மலர்ந்தன; பசுவினம் நல்ல புல்லை மேய்ந்தது;
மக்களும் பலராயினர். அந்த நிலமே இம்மகளிரின் தந்தை நாட்டு முன்னைய நில்லை. தற்போது
அவை அனைத்தும் அழியக் காண்கின்றேன்.
கருத்து: கோள்கள் நிலைமாறி மழை வளம் குறைந்தாலும் பாரியின் பறம்பு மலை வளம்
குன்றாது. பாரி இறந்த பின்னர் அதன் நிலை மிகவ்ம் வேதனைக்குரியது.
118. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே! 5
பாரி, கூர்வேலேந்திய திண்ணிய தோள்கள் உடையவனும் தேர்ப்படையால் சிறந்தவனும்
ஆவான். அந்நாட்டில் எட்டாம் நாள் பிறை போன்று தெள்ளிய நீரை உடைய குளம் பாதுகாவாரின்றி
உடைந்து போனது.
கருத்து: பாரி இறந்த நிகழ்வானது குளம் பாதுகாவல் இன்றி உடைந்தது போல் ஆயிற்று.
119. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப், 5
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!
முன்பு, கார் பெய்து மாறியது. அதனை அடுத்து யானை முகத்துப் புள்ளி போல பறம்பில்
எங்கும் புத்தம் புது மலர்கள் பூத்தன. அவ்வேளையில் செம்புற்றில் உள்ள ஈசலை இனிய
மோருடன் கூட்டிச் சமைத்த புளிங்கறி உண்போம். அத்துடன், புது வருவாயினை உடையதாக
இருந்தது அந்நாடு. தற்போது, நிழற்ற நெடிய வழியில் தனிமரம் போல நின்று, பாரியை
இழந்ததால் இனி அழிந்து போகுமோ?
கருத்து: என்றும் புது வருவாயினை உடைய பாரி பறம்பு நாடு அவனில்லாமல் அழிந்து போகும்.
120. திணை: பொதுவியல், துறை: கையறுநிலை, பாடியவர்: கபிலர்
பாடப்பட்டோன்: வேள் பாரி
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, 5
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
136
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக் 10
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர, 15
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட 20
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!
இக்கருங்கூந்தல் மகளிரின் தந்தை நாடான இப்பறம்பு மலை, மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த
கோடுகளை உடையது; பாரி, எதிரிகளுக்குப் புறங்கொடாது போரிடும் பண்பினன். அவன் வாழும்
காலத்தில் வரகறிதல், தினையரிதல், எள்ளிளங்காய் அறுத்தல் மற்றும் வெள்லை அவரைக்காய்
அறுத்தல் ஆகியன் எங்கும் நடைபெறும். தினை கொய்வர். வரகு அறுப்போர், தினை
கொய்வோர் ஆகியோரின் ஆரவாரம் கேட்கும். நிலத்தில் புதைத்து ‘ மட்டுத்தேறல்’
விளைந்திருக்கும். இவற்றையெல்லாம் குடிதோறும் பங்கிட்டுக்கொள்வர். நிலக்கடலை
வேகவைத்துக்கொள்வர். சோறும் சமைத்துக்கொள்வர். தாலம் என்னும் வட்டில் போட்டுத்
தோளில் சுமந்துசெல்வர். வேண்டும்போது உண்பர். இவ்வாறு முன்னர் விளங்கிய பறம்பின் புது
வருவாய் இனி கெட்டழிந்தது.
கருத்து: புது வருவாயினை உடைய பறம்பு மலை பாரியின் அழிவிற்குப் பின்னர் தாமும் அழிந்தது.
137
தொகுப்புரை
பாடாண் திணை, வாகைத் திணை, நொசித்திணை மற்றும் பொதுவியல் திணைக்குரிய
விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அரச வாகை, இயன்மொழி வாழ்த்து, மகள் மறுத்தல் மற்றும்
கையறுநிலை ஆகியனவற்றுக்கான துறைகளுக்கான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதியமான் அஞ்சியின் கொடைத்திறன் யானைக் கோட்டிடை வைத்த கவளத்திற்கு
உவமை கூறப்பட்டுள்ளது. மூவேந்தர்க்கு மகண்மறுத்து மொழிந்தவன் பாரி.முவேந்தர் பாரியுடன்
பறம்பு மலை வளத்தினையும் அழித்தனர்.பாரி மகளிர் தந்தை இறப்பின் இழப்பைக்
கையறுநிலையில் பாடியுள்ளனர்.
தன் முயற்சி வினாக்கள்
1. மகண்மறுத்து மொழிதல் துறையில் அமைந்த புறநானூற்றுப் பாடல்களின் கருத்துகளைத்
தொகுத்துரைக்க.
மகள் மறுத்தல் துறை விளக்கம் – வேள்பாரி மீது மூன்று பாடல்கள் கபிலர் பாடியது –
போர் முற்றுகையால் பயனில்லை – பறம்புமலை வளம் நிறைந்தது – பாடுநராக வந்தால் கிட்டும் –
தானம் அளித்து விட்டதால் பாரியிடம் இனி பெற ஒன்றுமில்லை – விறலியர் போன்று ஆடிப்பாடி
மலையினைப் பரிசாகப் பெறுங்கள்.
2. அதியமான் அஞ்சியின் கொடைத்திறனை ஔவையார் யாங்ஙனம் பாடுகிறார்?
யானை கோட்டிடை வைத்த கவளம் போன்றது – போர்க்களத்திலும் ஊன் உணவு
அளிப்பவன்.
3. தந்தையை இழந்த பாரி மகளிர் பாடல் கருத்தினைத் தருக.
முன்னாளில் பௌர்ணமி நாள் எந்தையும் குன்றும் இருந்தது – இந்நாளில்
மூவேந்தர்களும் எமது குன்றைக் கைப்பற்றினர் – எந்தையை இழந்தோம்.
4. பாரி பாரி என்றுபல ஏத்தி எனத் தொடங்கும் கபிலரின் பாடற்கருத்தினைத் தருக.
பழிப்பது போலப் புகழும் வஞ்சப் புகழ்சச ் ி அணிக்கான விளக்கம் – கபிலர் கூறும்
பாடற்கருத்து விளக்க வேண்டும்.
5. கபிலரின் கையறுநிலைத் துறையில் அமைந்த புறப்பாடல்களின் கருத்தினை விவரிக்க.
பாரி இறப்பில் கபிலர் பாடியதாக கையறுநிலை துறையில் ஏழு பாடல்கள் உள்ளன –
தன்னைக் காண வருவோர்க்கு கறிச்சோறு அளித்தவன். மேலும், அவன் நாட்டில் என்ரும் கள்
விருந்தினர்களூக்குப் பரிமாறப்பட்டது – தானியங்களின் விளைச்சல் மற்றும் அறுவடை
இடையறாது நடைபெறும் – வேள்பாரி இறப்பிற்கு பின்னர் இவை தொடராது என்று கையற்று
பாடியதை விளக்க வேண்டும்.
அலகு ஐந்து
அ. பதிற்றுப்பத்து – ஐந்தாம் பத்து (பத்து பாடல்கள்)
பாட நோக்கம்
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துக்குரிய பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கோட்டிய
செங்குட்டுவன். அவனைப் பரணர் பத்துப் பாடல்களில் பாடியுள்ளார். இவற்றின் கருத்துகளையும்,
இவற்றில் உள்ள செங்குட்டுவனைப் பற்றிய செய்திகளையும் இப்பாடம் எடுத்துரைக்கிறது.
செங்குட்டுவனின் வெற்றிகள், அளித்த கொடைகள், கலைகளைப் போற்றும் உள்ளம்
ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.
பதிற்றுப்பத்து என்னும் சேரர் இலக்கியம் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற நான்கைப்
பெற்றிருக்கிறது. இதில்புறநானூற்றோடுவேறுபடுவதைஇப்பாடத்தின்வழியறியலாம்.

மாணவர் பெறும் திறன்


1. சேரர் இலக்கியமாகிய பதிற்றுப்பத்தின் சிறப்பை அறியலாம்.
138
2. செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தவன் என்பதைப் பதிகத்தின் வழி
அறியலாம்.
3. செங்குட்டுவன் தன் நண்பன் அறுகைக்காக மோகூர்ப் பழையனை வென்ற
வரலாற்றை அறியலாம்.
4. சங்ககால வழக்காறு சொற்கள் பலவற்றுக்குப் பொருள் அறியலாம்.
139
பாடம் இருபத்தி ஒன்பது
பாட அறிமுகம்
5.27.0 பாட முன்னுரை
எட்டுத் தொகையில் அமைந்த புறநூல்களின் தொகுப்பு இரண்டாகும். ஒன்று புறநானூறு,
மற்றொன்று பதிற்றுப்பத்து நூலாகும். புறநானூற்றுப் பாடல்களுக்கான விளக்கம் நான்காம்
அலகில் இயம்பப்பட்டது. இனி. ஐந்தாம் அலகான இவ்வலகில் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில்
அமைந்துள்ள பத்து பாடல்களின் இலக்கியச் சுவை விளக்கப்படுகிறது.
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் சேரரும் ஒருவர். பத்துச் சேர மன்னர்களின்
வரலாற்றினைக் குறித்துப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடல்களாகப் பாடியுள்ள நூறு
பாடல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. பத்து + பத்து = பதிற்றுப்பத்து (இடையில்
சாரியை இடம் பெற்றது). இன்று இந்நூலில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
எஞ்சிய எட்டுப் பத்துகளின் எண்பது பாடல்கள் தற்போது உள்ளன. இதனைத் தொகுத்தார்
தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறித்து இரண்டாம் பத்தைக் குமட்டூர்க்
கண்ணனார் பாடியுள்ளார். மூன்றாம் பத்தைப் பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு
குட்டுவன் மீதும் நான்காம் பத்தைக் காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரலைக் குறித்தும் இயற்றியுள்ளனர். ஐந்தாம் பத்தைப் பரணர் செங்குட்டுவனைக்
குறித்துப் பாடியுள்ளார். ஆறாம் பத்தைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன் மீதும் ஏழாம் பத்தைக் கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்தும்
இயற்றியுள்ளனர். எட்டாம் பத்தை அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப்
பற்றியதாகவும் ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையின் மீதும்
புனைந்துள்ளனர். இவற்றுள் ஐந்தாம் பத்து இங்கு உங்களுக்கு பாடமாக இடம் பெறுகிறது.
இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி
செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இப்பதிகம், பாடிய புலவர், பாடப்பட்ட
மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட காலம், பாட்டுகளின் தலைப்புகள்,
புலவர் பெற்ற பரிசில் போன்ற அரிய செய்திகளைத் தருகின்றது.
5.27.1 பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து, பரணரால் செங்குட்டுவன் மீது பாடப்பெற்றது என்பதை
முன்னர்க் கண்டோம். பரணர் சங்க காலப் புலவர்களில் புகழ் மிக்கவர் . சங்க இலக்கியங்களில்
இவர் எண்பத்தாறு பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்
மிகுதியாக இடம் பெறும்.
ஐந்தாம் பத்து, பாட்டுடைத் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன். மேற்குக் கடலில் வணிகக் கப்பல்களைக்
கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். இவர்களைத் தன்
கப்பல் படை கொண்டு அடக்கி வெற்றி பெற்றான். இதனால், இவன் கடல் பிறக்கோட்டிய என்ற
சிறப்புப் பெயரைப் பெற்றான். இப்பத்துப் பாடல்களில் பரணர் செங்குட்டுவனின் வீரம், கொடை,
போர் வேட்கை ஆகியன குறித்துப் போற்றுகிறார்.

5.27.2. ஐந்தாம் பத்தின் பதிகம் தரும் செய்திகள்


பதிகம் என்பது பாட்டின் முன்னுரை போன்றது. பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்கும்
ஒரு பதிகம் உள்ளது. இப்பதிகத்தில் பாட்டுடைத் தலைவனைப் பற்றிய செய்திகளைக்
கூறுவதோடு பாடல்களில் இல்லாத செய்திகளையும் இடம்பெறக் காணலாம். ஐந்தாம் பத்தின்
140
பதிகம் “செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும்
பிறந்தவன். கண்ணகிக்குக் சிலை எடுக்கக் கல்லைக் கொண்டு வருவதற்காக இமயம்
சென்றவன். வட ஆரிய மன்னர்களை வென்றவன். பழையன் என்ற குறுநில மன்னனின் காவல்
மரமாகிய வேம்பினைத் துண்டுகளாக ஆக்கிப் பகை வேந்தனின் உரிமை மகளிர் கூந்தலைக்
கயிறாக்கி யானைகளைக் கொண்டு இழுத்து வந்தவன்” என்று கூறுகின்றது. கண்ணகி
சிலைக்குரிய கல்லெடுத்து வந்த செய்தி உள்ளே இருக்கும் பத்துப் பாடல்களிலும் இல்லை என்பது
குறிக்கத்தக்கது. அந்நிகழ்ச்சி பதிற்றுப்பத்துப் பாடியதன் பின் நிகழ்ந்திருக்கலாம் என்பர் அறிஞர்.
141
பாடம் முப்பது
5.28.1. முதல் இரு பாடல்கள்
பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்திலுள்ள சுடர்வீ வேங்கை மற்றும் தசும்பு துளங்கிருக்கை
எனும் தலைப்பிலுள்ள முதல் இரண்டு பாடல்களுக்கான விளக்கம் இப்பாடத்தில் காணலாம்.
முதல் பாடலில் செங்குட்டுவனின் கொடைச் சிறப்பும் இரண்டாம் பாடலில் கொடைச் சிறப்பும்
வெற்றிச் சிறப்பும் விதந்து கூறப்படுகின்றன.

1. சுடர்வீ வேங்கை (முதல் பாடல்)


துறை : காட்சி வாழ்த்து, வண்ணம் : ஒழுகு வண்ணம், தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர்வீ வேங்கை.
(காட்சி வாழ்த்து என்பது அரசனை நேரிற் கண்டு வாழ்த்துதல். வண்ணம் என்பது
பாட்டின் ஓசை நயம்; ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் ஓட்டம் போன்ற ஓசை. தூக்கு என்பது
பாட்டு என்னும் பொருளுடையது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவாகும். பாட்டின் பெயர் சுடர்வீ
வேங்கை.
பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும், அப்பாட்டில் இடம் பெறும் சொற்றொடரே
பெயராக அமைந்துள்ளது. சுடர்வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது போன்ற பூக்கள்
கொண்ட வேங்கை மரம்’ என்பது பொருளாகும். ஏற்றி வைத்த சுடர்கள் போல ஒளி வீசும்
மலர்களை உடைய வேங்கை என்ற அழகான கற்பனையைக் கொண்ட தொடராக இருப்பதால் ,
இது பாட்டுக்கு உரிய தலைப்பாகச் சூட்டப்பட்டுள்ளது.
பாட்டின் கருத்து
அடிகள் 1-6. புணர்புரி …… கடவுள் பழிச்ச
இசையை எழுப்புவதற்குரிய நரம்புகள் கட்டப் பெற்ற வளைந்த யாழை இளைய மகளிர்
சுமந்து வருவர். பண்ணோடு பொருந்திய முழவு, ஒரு கண்ணை உடைய மாக்கிணை, மற்றும்
ஆடல் துறைக்கு உரியதும், கணுவை இடைவிட்டு மூங்கிலால் அறுத்துச் செய்யப்பட்டதுமான
பெருவங்கியம் (பிற இசைக்கருவிகள்) ஆகியனவற்றை மூட்டையாக கட்டுவர். அவ்வாறு கட்டிய
மூட்டையைத் தோளில் தொங்கும் காவடியில் ஒரு பக்கத்தில் கட்டி, அதை இளைஞர்கள்
தூக்கிக் கொண்டு அச்சம் மிக்க காட்டு வழியில் என்னோடு நடந்து வருவர்.நடைவருத்தம்
மறப்பதற்காக அவர்கள் கடவுளை வாழ்தத ் ிக் குரல் எழுப்புவர்.
அடிகள் 7-13. மறப்புலி ……… சிலம்பப் பிளிறும்
அவ்வோசை புலியின் உறுமல் போல் கேட்கும். அதைக் கேட்டு அங்குள்ள வலிமை மிக்க
யானை சுடர்கள் போல ஒளி வீசும் பூக்களை உடைய வேங்கை மரத்தை புலியின் தோற்றமாக
எண்ணிச் சினம் கொள்ளும்; வேங்கை மரத்தின் கிளையைப் பிளந்து அதனைத் தன் தலையிலே
அணிந்து கொள்ளும். பகைவர் மீது போர் கருதிச் செல்லும் வீரர் தண்டாயுதம் தாங்கி
ஆரவாரிப்பது போல அந்த யானை பேரொலி எழுப்பும். அவ்வோசை சுரபுன்னை மரம் நிறைந்த
காடு முழுவதும் கேட்கும்.
அடிகள் 14-16. மழைபெயல் ………. கண்குவந்திசினே
மழை இல்லாமையால் காய்ந்த மூங்கில்கள் உள்ள வழிகள் பலவற்றைக் கடந்து திண்மை
மிக்க தேர்களையும் புகழையும் கொண்ட உன்னைக் காண வந்தேன்.
அடிகள்17-27. தாவல் ……….பனிக்கடல் உழந்த தாளே
பகைவரை வெல்வதாக உன்னுடன் சேர்ந்து வஞ்சினம் (சபதம்) கூறிய உன் படை வீரர்கள்
வாய்மை தவறாது முடித்தனர். அவர்களோடு சென்று முரசு முழங்கும் போரில் பகை அரசர்
வீழ்ந்து படுமாறு போர் செய்தாய். நட்புக் கொண்ட அரசர் ஆக்கம் பெறச் செய்தாய்.
பகைவருடைய தலைகளை உலக்கையால் மிளகை இடிப்பதைப் போல் நீ ஏந்திய தோமரத்தால்
142
(மரத்தால் ஆன ஆயுதம்) இடித்து அழித்தாய். முழங்குகின்ற கடல் போல உன் முரசு
குறுந்தடியால் அடிக்கப்பட்டு முழங்கும். நீயோ தலையாட்டம் என்னும் அணியை அணிந்த
வெள்ளைக் குதிரை மீது ஏறி வருபவன். கடலின் அலைகள் திவலைகளாக (துளிகளாக)
உடைந்து போகுமாறு நடந்து சென்று போர் செய்து வருந்தின உன் கால்கள் . அக்கால்கள் தாம்
கொண்ட வருத்தத்தை நீங்குமா? சொல்வாயாக.
திரள் கருத்து: இப்பாடலில் செங்குட்டுவனின் வெற்றிச் சிறப்புக் கூறப்படுகிறது. இசைக்
கருவிகளை எல்லாம் இளைஞர் சுமந்துவர நான் காடு பல கடந்து உன்னைக் காண வந்தேன்.
அதற்கே என் கால்கள் வருந்தினவே! கடலில் சலியாது போர் செய்த உன் கால்கள் மிக
வருந்தியிருக்குமே'' என்று பாணன் ஒருவன் செங்குட்டுவனைக் கேட்பது போல் புலவர்
பாடியுள்ளார்.
2. தசும்பு துளங்கிருக்கை (இரண்டாம் பாட்டு)
துறை: செந்துறைப் பாடாண், வண்ணம்: ஒழுகு வண்ணம், தூக்கு: செந்தூக்கு,
பாடல் தலைப்பு: தசும்பு துளங்கிருக்கை.
(இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. செந்துறைப் பாடாண் என்பது
தேவர்களை வாழ்தத ் ித் தொழுதல் போல் இல்லாமல் இயல்பாக மக்களைப் போற்றுவது போல்
புகழ்தல். வண்ணமும் தூக்கும் முன்பாட்டுக்குக் கூறிய அவையேயாம். தசும்பு துளங்கிருக்கை
என்பது இப்பாட்டின் பெயர். கள்குடங்கள் வைக்கப்பெற்ற அசைகின்ற இருக்கை என்பது
இதன்பொருள்.)
(தலைப்பு விளக்கம்: கள் நிரம்பிய மிகப் பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை
ஓர் இருக்கையில் வைப்பார்கள். வீரர்கள் மீணடு
் ம் மீணடு
் ம் குடங்களிலிருந்து முகந்து அக்கள்ளை
உண்பார்கள். அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட
குடங்களும் ஆடும். வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது, குடமும்
இருக்கையும் ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்நது ் ஆடும் என்னும்
அழகிய நயம் தோன்ற இத்தொடர் அமைந்து உள்ளதால் அதுவே, பாடலின் பெயராக அமைகிறது.)

பாடல் கருத்து
அடிகள் 1-8. இரும்பனம் ……….அடுபோர்க் குட்டுவ.
கருமையான பனம்பூ மாலையையும் பொன்னாலான வீரக்கழலையும் சூடிய அஞ்சாத
வீரர்கள் மார்பில் விழுப்புண்(தழும்பு) கொண்டிருப்பர். குளத்தில் மீனைப் பிடிக்கப் பாய்ந்து மேலே
எழும் சிரல் என்னும் மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற நீணட ் வெண்மையான ஊசியால்
தைக்கப்பட்ட விழுப்புண்களால் உண்டானவை அத்தழும்புகள். அத்தகைய வீரர்கள் தம்மைப் போல
மார்பில் புண்பட்ட வீரனோடு மட்டுமே தும்பைப் பூச்சூடிப் போர் புரிவர் . இத்தகைய வீரர்களுக்குத்
தலைவனே! நல்ல நெற்றியை உடைய இருங்கோ வேண்மாளுக்குக்(அரசிக்கு) கணவனே! பெரிய
யானைகளையும் வெல்லுகின்ற போரையும் கொண்ட செங்குட்டுவனே!
அடிகள் 9-15. மைந்துடை நல்லமர் ………. எண்ணின்
வலிமை மிக்க போர்களில் வெற்றி பெற்றபின், இஞ்சியையும் மணமிக்க மலர்களையும் கலந்து
தொடுத்த மாலை சூட்டிய சந்தனம் பூசிய கள்ளின் குடங்களிலிருந்து வீரர்களுக்கும்
வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும் அளவின்றிக் கள்ளை அளிப்பாய். அக்கள் இனிய
சுவையும் நீலமணி போன்ற நிறத்தை உடையது. அக்கள் இருக்கும் குடங்கள் ஆடும். அதனால்
இருக்கையும் ஆடும். கூத்தர்களின் சுற்றத்தார் மகிழுமாறு நீ அவர்களுக்குத் தலையாட்டம்
அணிந்த குதிரைகள் பலவற்றைப் பரிசிலாகக் கொடுத்தாய்.
அடிகள்16-23. மன்பதை ………… புணரியிற் பலவே.
143
உலகம் அஞ்சும்படியாகப் பல அரசர்களை வென்ற பின், இனி வெல்லுதற்கு யார் உள்ளார்
என உன் வீரர்கள் உலகமெலாம் செல்லவும், உன் தேர் வீரர்களும், யானைமேல் ஊர்ந்து வரும்
அரசரும் உன்னைப் பாராட்டவும், உன்னால் துரத்தி அடிக்கப்பட்ட கடலின் பெரிய நீர்ப்பரப்பில்,
நுரையாகிய வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள் உடைந்து சிதறும்படி, மேலும்
மேலும் வந்து மோதும் கடல் அலைகளை விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை
அல்லவா நீ இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!''
திரள் கருத்து: மன்னனின். படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.
மன்னனின் படைவீரர் சிறப்பு, வீரர்களுக்கும் வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும் கள்
விருந்தளித்தல், குதிரைகளைப் பரிசளித்தல் ஆகியன விவரிக்கப்படுகின்றன.

பாடம் முப்பத்தொன்று
5.29.2. மூன்று மற்றும் நான்காம் பாடல்கள்
பாட முன்னுரை
ஏறாஏணி என்ற பாடலும், நோய்தபு நோன்தொடை என்ற பாடலும் முறையே மூன்றாம்
நான்காம் பாடல்களாக உள்ளன. அபாடல்களுக்கான விளக்கங்கள் இப்பாடத்தில்
கூறப்படுகின்றன. மூன்றாம் பாடலில் மன்னனின் செல்வ மகிழ்வும் நான்காம் பாடலில் நீணட
் காலம்
வாழ வாழ்தது் ம் புலவரின் திறனும் பேசப்படுகின்றன.
144
3. ஏறா ஏணி (மூன்றாம் பாட்டு)
துறை: இயன்மொழி வாழ்த்து, வண்ணம்: ஒழுகு வண்ணம், தூக்கு: செந்தூக்கு,
பாட்டின் பெயர் ஏறா ஏணி. (இயன்மொழி வாழ்த்து என்பது கொடை முதலான இயல்புகளைக்
கூறி வாழ்த்துதலாகும்.
கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற
ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்க
இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறாஏணி என்று நயமாகக்
குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.

பாட்டின் கருத்து
அடிகள் 1-11. கவரி முச்சி ………. பொலந்தார்க் குட்டுவ
இமயமலைச் சாரலில் வசிக்கும் மகளிர், கவரிமானின் முடியைத் தம் மேகம் போன்ற
கூந்தலில் கலந்து முடித்த கொண்டையும் ஊஞ்சலாடும் விருப்பமும் உடையவர்களாக
வாழ்கின்றனர். அவர்கள் காட்டில் உரல் போன்ற பெரிய கால்களையும் ஒளிமிக்க தந்தங்களையும்
உடைய ஆண் யானைகளுடன் வந்த பெண் யானைகள் எத்தனை என எண்ணிக் கணக்கிட
முயல்வர். பின்பு எண்ண முடியாத அளவு கூட்டமாக வருவதால் எண்ணுவதைக் கைவிடுவர்.
அத்தகைய காடுகளில் கடவுளர் தங்கும் இடங்கள் இருக்கும். அத்தகு இடங்களைக் கொண்ட
இமயமலையை வடக்கு எல்லையாகவும், குமரி முனையைத் தெற்கு எல்லையாகவும் கொண்ட
அகன்ற நிலப்பகுதியில் ஆட்சி செய்த பகையரசர்களின் புகழ் மிக்க பல நாடுகளையும் வென்று,
அவற்றின் நலத்தைக் கெடுத்தவனே! போரில் எப்போதும் வெல்கின்ற படையைக் கொண்ட,
பொன்னாலாகிய மாலை அணிந்த குட்டுவனே!
அடிகள் 12-20. இரும்பணை ……….. நன்கலம் சிதறி
பெரிய மழையின்றிப் போவதால் காட்டில் உள்ள மூங்கில்கள் வாடி உலரும்; குன்றுகள்
பசும்புல் இல்லாமல் கெடும்; வெயில் மிகுதியாய்த் தோன்றும்; அருவிகள் நீரற்றுக் கிடக்கும்.
இத்தகைய வறண்ட காலத்திலும் வற்றாத உன் பேரியாற்றங் கரைகள் உடைந்து நீர்
ஓடும்படியாகவும், புதிய ஏரைப் பூட்டி உழுகின்ற உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடி
மகிழும்படியாகவும், மேகம் இடித்து மழையை மிகுதியும் பெய்தது போல, நீ உன்னை அடைந்த
வறியவர்களான பாணர், கூத்தர் முதலானோர் மகிழ்ச்சி பெறப் பொன்னை வாரி வழங்குகிறாய்.
அவர்களை உண்ணச் செய்து நீயும் உடன் அமர்ந்து உண்கிறாய்.
அடிகள் 21-30. ஆடுசிறை ……….. முழவின்
அசைகின்ற சிறகைக் கொண்ட கின்னரப் பறவையின் இனிய இசையை வென்ற யாழின்
இசையோடு ஒத்த குரலை உடைய விறலியர்க்குப் பல பெண் யானைகளைப் பரிசாகத் தருகிறாய்.
வாகைப் பூவை மேலே வைத்து, நுண்ணிய கொடியில் பூத்த உழிஞைப் பூவைச் சூடுகின்ற
வீரர்கள் பெற்று மகிழ, கொல்லும் தொழிலையுடைய ஆண் யானைகளைப் பரிசிலாக
அளிக்கிறாய். கணுக்களைக் கொண்ட நுண்ணிய கோலை ஏந்திச் சென்று தெருக்களில் உன்
குலத்தைப் புகழ்ந்து வெற்றியை வாழ்த்திப் பாடும் பாணன் பெறுமாறு குதிரைகளைத்
தருகிறாய். இவ்வாறு நீ கொடைத் தொழிலையும் போர்த் தொழிலையும் சமமாக விரும்புகிறாய்.
மேலும், பகைவராலும் புகழப்படும் நல்ல கல்வி அறிவு ஒழுக்கங்களை நீ பெற்றுள்ளாய்.
அடிகள்ன் 31-36.தொலையாக் கற்ப ………. மகிழானே
வள்ளல் தன்மை மிகுந்த கைகளை உடையோனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப்
பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும்,
வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில்
வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து
145
பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம்
இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு
விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.
திரள் கருத்து: குட்டுவனின் செல்வ மகிழ்ச்சி கூறியது. குட்டுவனின் ஆட்சி பரப்பின்
எல்லைகள் கூறப்படுதல். வடக்கே இமயமலை தெற்கே குமரிமுனை வரை பரவியிருந்த செய்தி
கூறப்படுகிறது, இமயமலைச் சாரலில் வாழும் மகளிர் பழக்கம் மற்றும் வீரர்களுக்கும் பாடினி கூத்தர்
மற்றும் வீரர்களுக்கு யானைகளைப் பரிசளிக்கும் வண்மையினைப் பரணர் பாடியுள்ளார்.
4. நோய்தபு நோன்தொடை (நான்காம் பாட்டு)
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு
வண்ணமும் செந்தூக்கும். பாட்டின் பெயர் நோய் தபு நோன்தொடை.
(தபு என்றால் கொல்லுதல் என்று பொருள். நோய்தபு என்றால், நோயையே கொன்று
வெற்றி கொள்ளுதல். அதனால், நோய்தபு நோன்தொடை. என்பதற்கு நோயில்லாத ஆற்றல் மிக்க
உடம்பு என்பதாம்.)
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. நிலம் புடைப்பன்ன …… ஆடுநடை அண்ணல்
நிலத்தை இடிப்பது போன்ற முழக்கத்தோடு, வானத்தைத் தடவுவது போல் உயர்ந்த கொடி
தேரில் அசையப் பல போர்களைச் செய்தாய். அப்போர்களில் வென்று பெற்ற பொருள்களைத்
தனக்கென்று எடுத்துக் கொள்ளாமல் பிறர்க்குக் குறையாமல் வாரி வழங்குபவனே! கனவிலும்
பிறரிடம் சென்று என் துன்பம் நீக்குக என்று கேளாதவனே! குற்றமற்ற நெஞ்சத்தையும்
பெருமிதமான நடையையும் உடைய தலைவனே!
அடிகள் 10-17. நுண்கொடி உழிஞை …….. ஒழுகை உய்த்தோய்.
நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவைச் சூடும் முற்றுகைப் போரில் வல்லவன்
அறுகை என்பவன். ஆனால், அவன் மோகூரில் உள்ள பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி
ஒளிந்தான். நீ, நெடுந்தொலைவில் இருந்தாலும் அறுகை உன்னைத் தன் நண்பன் என்று பலரும்
அறியச் சொன்னவன் என்பதனால், அவனுக்கு உதவிட மோகூர்ப் பழையன் என்பவனின்
அரண்களைத் தெய்வத்தால் அழிக்கப்பட்ட இடம் போன்று அழித்தாய். அவன் காவல் முரசைக்
கைப்பற்றி அவன் கூறிய வஞ்சினத்தை மாறுபடச் சிதைத்தாய். அவனுடைய காவல் மரமாகிய
வேம்பை வெட்டி வீழ்த்தி முரசு செய்வதற்குரிய துண்டுகளாக ஆக்கி வண்டியில் ஏற்றி
யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தாய்.
அடிகள் 8-9. நின்புகழ் யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
வீரர்கள் வியந்து புகழ்ந்து போற்றும் நோயற்ற உன் வலிமை மிக்க உடம்பை, உன்னைப்
பாடும் பாடினி கண்டு வாழ்தத ் ிப் பாடுவாளாக.
அடிகள் 18-23. கொழுவில் ……… விளன்கிய காடே
பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து
விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும்
வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர்
தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே
புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது
நீங்குவதாக.
திரள் கருத்து: போரில் ஆற்றலும் உடம்பில் வலிமையுமுடைய நீ என்றும் இறவாது நீடு
வாழ்வாயாக என்று பரணர் பாடியுள்ளார். அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச்
செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக்
குறிப்பு இப்பாட்டில் கூறப்படுகிறது.
146
பாடம் முப்பத்தி இரண்டு
5.30.3. ஐந்தாம் பாட்டும் ஆறாம் பாட்டும்
ஐந்தாம், ஆறாம் பாடல்களாக இடம் பெற்றிருப்பவை ஊன்துவை அடிசில், கரைவாய்ப்
பருதி என்பவையாகும். ஐந்தாம் பாடல் சேரனின் வெற்றிச் சிறப்பும் ஆறாம் பாடலில் கொடைச்
சிறப்பும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
5. ஊன்துவை அடிசில் (ஐந்தாம் பாட்டு)
துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும்.
பாட்டின் பெயர் ஊன் துவை அடிசில் (ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும்.
ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன்
செங்குட்டுவனின் வீரச் சிறப்பைப் பேசுகிறது.}
பாட்டின் கருத்து
அடிகள் 1-6. பொலம்பூ ………. எய்திய சேரல்
பொன்னால் செய்யப்பட்ட அழகிய தும்பைப் பூவையும், புற்றில் அடங்கிய பாம்பு போல
அம்பறாத் தூணியில் ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளையும் வில்லையும், வளையாத
நெஞ்சையும் யானைகளைத் தாக்கிக் கொல்வதால் நுனி முறிந்த வேலையும் கொண்டவர்கள்
உன் வீரர்கள். இவர்கள் செய்யும் போரின்கண், பகையரசர் எழுவரின் முடிப் பொன்னாற் செய்த
ஆரத்தை மார்பில் அணிந்து தோன்றும் செங்குட்டுவனே! கேட்பாயாக!
அடிகள் 7-14 குண்டுகண் அகழி ………. இறுத்து
ஆழ்நத ் அகழிகளை உடைய மதில் பல கடந்து உட்புகுந்து அழித்த உன் வீரர்கள்,
அரண்களைக் காக்கும் கணைய மரம் போன்ற தம் தோளை உயர்தத ் ி ஆடுவர் . அவர்கள் ஆடும்
அக்களத்தில் பிணங்கள் குவிந்து கிடக்கும். இவ்வாறு முன்பும் பல முறை உன் வீரர்கள் வெற்றி
பெற்ற களத்தில் துணங்கை என்னும் வெற்றிக் கூத்து நிகழ்த்தியிருக்கின்றனர். சோறு வேறு
ஊன் வேறு என்று பிரித்து அறிய முடியாதவாறு ஊன் குழைந்த சோற்றைப் பகைவரை அழித்த
வீரர்களுக்குப் பெருவிருந்தாகக் கொடுத்தல் அரசர்களுள் உனக்கு ஒப்பானவர் ஒருவரும்
இல்லை.
அடிகள்15-17. முள்ளிடுபு …………………மன்னர்
பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் வேலி இட்டு வைத்தலை
அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட
அரசர்களில் நீ ஒப்பற்றவன்.
அடிகள் 18-22. இனியார் உளரோ ………. மறுத்திசினரே
கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து
சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது
அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்தத ் பகைவரை வெற்றி கொண்ட
உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.
திரள் கருத்து: சேரன் செங்குட்டுவனைப் போன்ற சிறந்த மன்னன் முன்னோரிலும் இல்லை;
இனி இதுபோன்ற ஒருவர் பிறக்கப் போவதுமில்லை என்று அவனது வெற்றிச் சிறப்பு
கூறப்படுகிறது.
6. கரைவாய்ப் பருதி (ஆறாம் பாட்டு)
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும்.
பாட்டின் பெயர்: கரைவாய்ப் பருதி. (ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது
பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)
147
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. இழையர் …… சுரத்தலின்
நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய
பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை
விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்;
அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால்
தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின்
உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல
அளிப்பான்.
அடிகள் 8-14. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி …… பெயர்ந்தே
போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும்
தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில்
அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய
யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர்
செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப்
பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீணடு ் செல்லக் கருத மாட்டார்.
திரள் கருத்து: சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து
கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த
அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்சச ் க்கரத்தை வைத்தே குறிப்பாக
உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த
வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின்
பெயராக ஆயிற்று.
பாடம் முப்பத்தி நான்கு
5.31.4. ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்
நன்னுதல் விறலியர் என்ற ஏழாம் பாட்டில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், பேரெழில்
வாழ்க்கை என்ற எட்டாம் பாட்டிலுள்ள செய்திகளையும் பார்ப்போம். ஏழாம் பாடல் மன்னனை
நீண்ட காலம் வாழ வழ்த்துதலும் எட்டாம் பாடல் கொடைச்சிறப்பும் கொடைக்காகப் போரிடுதலும்
குறித்தச் செய்திகள் கூறப்படுகின்றன.
7. நன்னுதல் விறலியர் (ஏழாம் பாட்டு)
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு முதலியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டவையே.
பாட்டின் பெயர் நன்னுதல் விறலியர்.
(நன்னுதல் விறலியர் என்பது இப்பாட்டின் பெயர். நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர்
என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை
உணர்த்தும் மரபுச் சொல்.)
பாட்டின் கருத்து
அடிகள் 1- 8. அட்டானே குட்டுவன் ……….உரை ஆனா
சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை
அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை.
மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப்படும்
கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர்.
அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரியானது
பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய
ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை.
148
திரள் கருத்து: ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து
விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர்
என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.
8. பேரெழில் வாழ்க்கை (எட்டாம் பாட்டு)
துறை: இயன்மொழி வாழ்த்து. இது செங்குட்டுவனின் கொடை இயல்பைக் கூறியமையின்
இப்பாட்டு இயன்மொழி வாழ்த்துத் துறை பெற்றது. வண்ணமும் தூக்கும் முந்திய
பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை.(பேரெழில் வாழ்க்கை பெருமையும் அழகும்
உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.
149
பாட்டின் கருத்து
அடிகள் 1- 4. பைபொன் …………பரதவ
பாணர்களுக்குப் பொன்னால்ஆன தாமரையை அணியத் தருபவனே! விறலியர் சூடப்
பொன்னரி மாலை அளிப்பவனே! பல புகழும் நிலைபெறக் கடற் பரப்பிற் சென்று பகைவரோடு
போர் செய்த குளிர்ந்த கடல்துறையை உடைய பரதவனே!
அடிகள் 5-8. ஆண்டு நீர்ப் ………….…நிரப்ப
கடலில் மிக்க துன்பங்களுக்கு இடையே பகைவருடன் கடும்போர் செய்து, வென்று
பெருஞ் செல்வங்களைக் கொண்டு வந்தாய். அவ்வாறு அரிய முயற்சியால் பெற்ற பொன்னையும்
பொருளையும் இரக்கக் குணத்தினால் மிக எளிதாக வாரி வழங்கி விடுகிறாய். அதுவும், உன்
புகழைச் சிறப்பாகப் பாடும் திறமையில்லாதவர்கள் பாடும் தகுதியற்ற பாடல்களுக்கு! இதனால்
உன்னை, ‘பாட்டின் தரம் உணர இவன் உண்மையில் கல்லாதவன்’ என்று எண்ணிக் கொண்டு
அந்தப் புலவர்களும் பாணர்களும் தங்கள் சுற்றத்தாராகிய மற்ற கலைஞர்களின் கைகளை ஏந்தச்
செய்து பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அடிகள் 9-12 வணங்கிய சாயல் ………மார்ப
அன்புடையவர்களுக்கும், மகளிர்ககு
் ம் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு
வணங்காத ஆண்மையினையும் உடையவன் நீ. பகைவரின் ஊரைச் சுடுதலால் வாடிய மலர்
மாலையையும் காய்ந்த சந்தனம் பூசிய மார்பையும் உடையவன் நீ!
அடிகள் 13-18 நின்பெயர் ………. பலவே
உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த
ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில்
விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்ககை ் . உன்னுடைய சுற்றத்தாரோடு
சேர்நது
் உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த
நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!
திரள் கருத்து; புகழ் பாடும் அனைவருக்கும் இரக்க குணத்தால் வாரிவழங்கும்
குட்டுவன் காஞ்சி ஆற்றின் நுண்ணிய மணலின் எண்ணிக்கை காட்டிலும் பல ஆண்டுகள்
வாழட்டும். பரணர் குட்டுவனைக் கொடைமடம் கொண்டவனாகக் காட்டுகிறார். தகுதி இல்லாதவர்க்குக்
கொடை தருவது கொடை மடம் ஆகும். ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக
ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்ககாலக் கவிதை மரபு. வேனிற்காலத்தில்
அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும்
குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின்
பெயர் ஆகியது.
150
பாடம் முப்பத்தி ஐந்து
5.32.5. ஒன்பது மற்றும் பத்தாம் பாடல்கள்
செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றியும், வெருவரு புனல்தார் என்ற பாடலைப் பற்றியும்
இப்பாடத்தில் காண்போம். ஒன்பதாம் பாடல், மன்னவனது வரையா ஈகைத் திறன் குறித்தும்
பத்தாம் பாடல், மன்னவனது காம வேட்கையினும் போர் வேட்கையை மிகுதி பற்றியும்
கூறுகின்றன.
9. செங்கை மறவர் (ஒன்பதாம் பாட்டு)
துறை: விறலியாற்றுப்படை. (விறலி என்பவள் நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில்
பெற்ற ஒருவன் விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும் பரிசில்
பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது பெறலாமென்றும் கூறுவது விறலியாற்றுப்படை
ஆகும்). வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே. பாட்டின் தலைப்பு: செங்கை மறவர்.
செங்கை மறவர் என்பது சிவந்த கையினையுடைய மறவர் என்ற பொருளைத் தரும்.
பாட்டின் கருத்து
அடிகள் 4-9. களிறு ….. மண்டி
யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களோடு அணியாகச்
செல்ல, கொடியுடைய தேர்கள் சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட் படையினரும்
வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்நது ் செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி
வந்தான் மோகூர்ப் பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர் சேர வீரர்கள்.
பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர் வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின்
மார்பிலிருந்து ஒழுகிய குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல் பள்ளம் நோக்கிப்
பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன்.
வெற்றி முரசு முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு வாழ்ந்தோர்
பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக் கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால்
வீழ்த்தப் பெற்றது.
அடிகள் 1-3. யாமும் …… உணீஇயர்
சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக நாங்கள் போகிறோம்.
அசையும் கூந்தலையும் ஆடும் இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும் உணவும் பெறுவர்.
திரள் கருத்து: செங்குட்டுவன் நாடுகளை வெல்வதே விறலியர் பாணர்
போன்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காக என்பது இப்பாடலின் கருத்து. இவ்வாறு சேரன்
கொடைச் சிறப்பைப் படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர்.
அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும் போதுதான் அதைச் செங்கை
என்று பாராட்டுவது வழக்கம். இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர். ஆனால்
அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப்
பொன், பொருளை வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே சிவந்து -
வள்ளலின் கை செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக் குறிப்பு மொழியால் சொல்கிறார்.
இதனால் இப் பாடல் செங்கை மறவர் என்று பெயர் பெற்றது
10. வெருவரு புனல்தார் (பத்தாம் பாட்டு)
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்
வண்ணமும், பாடல் தலைப்பு: வெருவரு புனல்தார். தூக்கு: செந்தூக்கு.
(தனது மண்ணின் மீது விருப்பம் கொண்டு போருக்கு வந்த மன்னர் அஞ்சுமாறு சென்று
போர் தொடுத்ததைப் புகழ்ந்து கூறுவதால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று.
151
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். ஒழுகு வண்ணம் என்பது
ஆற்றொழுக்காகச் செல்லும் சந்தம் ஆகும். அளவடி என்பது நான்கு சீர்கள் கொண்ட அடி.
சொற்சீர் வண்ணமென்பது, அளவடியிற் குறைந்து வந்தாலும் அகவலோசையோடு வருதல்.
பாட்டின் பெயர் வெருவரு புனல்தார்.அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன்
பொருள்).
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. மாமலை ………. அனையை
பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான் கூட்டம் அஞ்சும். காற்று
அசைப்பதால் ஆலங்கட்டி சிதறக் கடுமழை பொழியும். கரும்பு வயல்களை உடைய நாடுகள் வளம்
பெருகவும், வளம் பொருந்திய உலகைப் பாதுகாக்கவும் காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக
ஓடிவரும். அரசே! நீ அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள் விரிந்த நீரைக் கொண்ட
மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும் ஒத்தவன்.
அடிகள் 8-16. கொல்களிறு ………….. நிரப்பினை
கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர, வலிமை மிக்க விற்படை
அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர, கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக
விளங்க, போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு
அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்தத ் வரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும்
உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற
இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும்
பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை
அவித்துவிடும். இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே!
அடிகள் 16-22. ஆதலின் ……….. கழியுமோ
சாந்து பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும் கலையும்படி
அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான கூந்தலாகிய படுக்கையில் கிடந்து, அவர்களைத்
தழுவிச் சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்கக ் ளத்திலேயே நாள் பலவும் கழிந்தன.
இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு கழியுமோ?
திரள் கருத்து:
வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்து விடுகிறாய் .
எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதல்
வாழ்வுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே என்று கவலையோடு கேட்கிறார் பரணர்.
5.7 தொகுப்புரை
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், தன்னைக் காணவந்த வறுமையுற்றவர்களான விறலி,
கூத்தர் ஆகீயோர்க்கும் வெற்றியத் தனக்கு என்றும் தரும் படை வீரர்களுக்கும் அளவிலாப்
பெருஞ்செல்வம் அளிப்பவன்.
பகைவர்களின் திறைப்பொருள்களான குதிரைகள், யானைகள் ஆகியவற்றைத் தாம்
கொள்ளாது கொடை மடம் தரும் இரக்கமுள்ளவன். கடற்போரிலே தன்னை எதிர்தத ் பகைவரை
வென்றவன்.
இமயம் முதல் குமரிமுனை வரை அரசர் பலரை வென்று நாட்டு எல்லையை
விரிவுபடுத்தியவன்.
அறுகை என்ற தன் நண்பனுக்காக மோகூர்ப் பழையன் மீது படையெடுத்துச் சென்று
வென்று, அவன் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி வீழத ் த
் ியது மட்டுமல்லாமல் அவனது அரணினை
முற்றிலும் சிதைத்தவன்.
152
இல்வாழ்வில் இன்பம் காணாது போர்கக ் ளத்திலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிப்பவன்
என்ற சிறப்புக்குரியவன் எனப் பரணர் ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவனைச் சித்திரிக்கின்றார்.
153
தன் மதிப்பட
ீ ்டு வினாக்களும் விடைக் குறிப்புகளும்
1. பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாகும் சேரன் செங்குட்டுவனின் போர் வெற்றிகளைத்
தொகுத்தெழுதுக.
சுடர்வீ வேங்கை - தசும்பு துளவிருக்கை – ஊந்துவை அடிசில் இம்மூன்று பாடல்களிலும்
கூறப்பட்டுள்ள போர்ச் செய்திகளை எழுதிப் பழக வேண்டும்.
2. சேரன் செங்குட்டுவனின் கொடைத்திறனைப் பரணர் எவ்வாறு பாடுகின்றார்?
கரைவாய்ப் பகுதி – நன்னுதல் விறலியர் - செங்கை மறவர் என்னும் தலைப்பில் அமைந்த
பாடல்களின் கருத்தைத் தொகுத்துக் கூற வேண்டும்.
3. “பேரெழில் வாழ்க்கை” என்னும் பாட்டு செங்குட்டுவனைக் குறித்துக் கூறுவன யாவை?
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை என்னும் தொடருக்கான விளக்கம் – போரிலே
கழியும் குட்டுவன் வாழ்வு – பாடல் எட்டுக்கான விளக்கம்.
4. “வெருவரு புனல்தார்” என்ற பாட்டு செங்குட்டுவனின் வீரத்தை யாங்ஙனம்
கூறுகின்றது?
வீரன் குட்டுவனின் தன்னலம் அற்ற கொடை உள்ளம், தன் குடிமக்களுக்காகக் காதல்
இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப்
பகைவர் நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து பாடுகிறார் .
இப்பாடலில் காணப்படும் சேரனின் வீரத்தை வெளிப்படுத்தி எழுத வேண்டும்.

You might also like