You are on page 1of 10

சொற்களை விரிவுபடுத்துதல்.

1. இஃது இலை.
2. இது பெரிய இலை.
3. இது பச்சை இலை.
4. இலை செடியில் இருக்கும்.
5. இலையில் பச்சையம் இருக்கிறது.
1. பூ.
2. இது பூ.
3. இது சாமந்திப் பூ.
4. சாமந்திப் பூ மணமாக இருக்கும்.
5. சாமந்திப் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
1. தடி.
2. இது தடி.
3. இது தாத்தாவின் தடி.
4. தாத்தா தடியைக் கொண்டு நடப்பார்.
5. தாத்தாவின் தடி தேக்கு மரக்கட்டையால் செய்யப்பட்டது.
1. சட்டை.
2. இது சட்டை.
3. இது முகிலனின் சட்டை.
4. இது முகிலனின் புதிய சட்டை.
5. இது முகிலனின் புதிய நீலச் சட்டை.

1. கப்பல்.
2. இது கப்பல்.
3. இது பெரிய கப்பல்.
4. இந்தக் கப்பலில் பயணம் செய்யலாம்.
5. இந்தக் கப்பலில் சொகுசாகப் பயணம் செய்யலாம்.

1. புத்தகம்.
2. இது புத்தகம்.
3. இது பாடப் புத்தகம்.
4. இது தேவியின் பாடப் புத்தகம்.
5. இது தேவியின் புதிய பாடப் புத்தகம்.

1. தகப்பனார்.
2. இவர் அமுதனின் தகப்பனார்.
3. அமுதனின் தகப்பனார் மிகவும் நல்லவர்.
4. அமுதனின் தகப்பனார் எல்லோரிடமும் அன்பாகப்
பழகுவார்.
5. அமுதனின் தகப்பனார் அவனுக்குப் பாடம் சொல்லித்
தருவார்.

1. திருவள்ளுவர்.
2. இவர் திருவள்ளுவர்.
3. திருவள்ளுவர் சிறந்த தமிழ்ப் புலவர்.
4. திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
5. திருவள்ளுவர் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களை
இயற்றி உள்ளார்.
1. மூக்குக்கண்ணாடி.
2. இது மூக்குக்கண்ணாடி.
3. இது பாட்டியின் மூக்குக்கண்ணாடி.
4. பாட்டி தினமும் மூக்குக்கண்ணாடியை அணிவார்.
5. பாட்டியின் மூக்குக்கண்ணாடி கருப்பு நிறத்தில் இருக்கும்.
1. விளையாட்டு மைதானம்.
2. இது விளையாட்டு மைதானம்.
3. விளையாட்டு மைதானத்தில் விளையாடலாம்.
4. விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் விளையாடலாம்.
5. விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாடலாம்.

1. வழிப்பாட்டுத்தலம்.
2. இது வழிப்பாட்டுத்தலம்.
3. இது இந்துக்களின் வழிப்பாட்டுத்தலம்.
4. இந்துக்களின் வழிப்பாட்டுத்தலத்தைக் கோயில்
என்பர்.
5. நாம் வழிப்பாட்டுத்தலத்தில் ஒழுக்கத்தைப் பேண
வேண்டும்.

You might also like