எமன் நசி

You might also like

You are on page 1of 10

நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்

எமதர்மன்: வரவேண்டும் நசிகேதா! என் இருப்பிடத்திற்கு நீ விருந்தாளியாக


வருகைதந்து இருக்கிறாய்! ஆனால் என்னால் உன்னை உடனே வரவேற்க
முடியவில்லை ஆகையால் என்னை மன்னிப்பாயாக உனக்கு நான் மூன்று வரங்கள்
அளிக்கின்றேன்.கேள்!

நசிகேதன்: வணங்குகின்றேன் எமதர்மராஜா! வரங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி என்


தந்தை என்னை புரிந்து கொள்ள வேண்டும்.என் மீ து கோபப் படக்கூடாது. இதுவே
நான் கேட்கும் முதல் வரம்.

எமதர்மன்: அப்படியே ஆகட்டும்! உன் தந்தை உன்னை புரிந்து கொள்வார். உன்னை


அன்பாக ஏற்றுக்கொள்வார். உனது விருப்பப்படியே நடந்தேறட்டும்

நசிகேதன்: மிக்க நன்றி எமதர்மராஜா! நான் எனது இரண்டாவது வரத்தைக்


கேட்கலாமா? சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவத் தன்மையை பெறுகின்றனர். அதனால்
நானும் அங்கே செல்ல ஆசைப்படுகின்றேன். அதனால் சொர்க்கத்திற்கு செல்ல செய்ய
வேண்டிய யாகத்தைப் பற்றிக் கூறுங்களேன்.

எமதர்மன்: சிறுபிள்ளையானாலும் நீ தெளிவாக கேட்பதால் வேள்வி விவரங்களை


நான் உனக்கு மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். எள்ளுக்குள் எண்ணெய் மறைவாக
உறைவது போல் வேள்வித்தீ நம் மனதின் உள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு நெறிகளை கைக்கொண்டு மனதை
ஒருநிலைப்படுத்தி புரிய வேண்டிய வேள்வி அது. இந்த வேள்வியை பழகிய
மனிதர்கள் மரணம் மற்றும் பிறவி என்ற இவ்விரண்டு நிலைகளையும் தவிர்ப்பார்கள்.
இந்த வேள்வியின் முறையையும் சிறப்பையும் நீ கேட்டு தெரிந்து கொண்டதால்
இன்று முதல் இந்த யாகம் நசிகேத யாகம் என்று அழைக்கப்படும்.

நசிகேதன்: நன்றி எமதர்ம ராஜா! மரணத்திற்குப் பிறகும் மனிதன் வாழ்கிறான் என்று


பலரும் பேசிக் கொள்கிறார்களே! மரணத்திற்கு அப்பால் நடப்பது என்ன? இதை நான்
தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இதுவே நான் கேட்கும் மூன்றாவது வரம்.

எமதர்மன்: என்ன கேட்கிறாய் நசிகேதா? தெளிவாக கேள்.

நசிகேதன்: நூல் போன்ற உயிரானது அறுந்த பின் எங்கே செல்கிறது? இதை நான்
தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
எமதர்மன்: நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது இது
மிகவும் நுண்மையான விஷயம். எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால் நீ
வேறு வரம் ஏதாவது கேள்.

நசிகேதன்: ஒ! அப்போ தேவர்களுக்கே இதைபற்றி சந்தேகம் உள்ளதா? அப்போ


இதுவே எனது மூன்றாவது வரம்.

எமதர்மன்: அடடா பாலகா! புரிந்துகொள் உனக்கு நான் பல நூறு ஆண்டு ஆயுளை


கேள் தருகிறேன்.

நசிகேதன்: எனக்கு வேண்டாம் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கின்றது என்பதை


மட்டும் கூறுங்கள் வேறு ஏதும் தேவையில்லை.

எமதர்மன்: ஏராளமான பொன்னும் பொருளும் தருகிறேன்.

நசிகேதன்: எனக்கு வேண்டாம். இதெல்லாம் நிலையற்றது. நிலையற்றதை நான்


அடைய விரும்பவில்லை. நிரந்தரமான உண்மை எதுவோ அதையே நான் அறிய
விரும்புகிறேன். மரணத்திற்குப் பின்பு என்ன நடக்கிறது? உயிர் எங்கே செல்கிறது?
கூறுங்கள்.

எமதர்மன்: அழகிய பெண்கள் தருகிறேன்.

நசிகேதன்: எனக்கு வேண்டாம்! இன்று பெண்கள் இனிமையாகப் பேசுவார்கள். நாளை


வசைமொழி பேசுவார்கள். நான் கேட்கும் வரம் மட்டுமே நிலையான இன்பத்தை
தரவல்லது.

எமதர்மன்: ஆயிரக்கணக்கான பசுக்கள், யானைகள், குதிரைகள் தருகிறேன்.இதை


மட்டும் கேட்காதே!

நசிகேதன்: இதையெல்லாம் நான் எத்தனை நாள் அனுபவிக்க முடியும். அமுதும்


நஞ்சாக மாறுமே! அப்படியே மாறாமல் இருந்தாலும் நீங்கள் வந்த உடனேயே இந்த
இன்பம் எல்லாம் முடிந்து விடுமே! குமிழி எப்போது வெடிக்கும் என்று யாருக்கும்
தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதுதான். ஆகையால் எனக்கு நிலையான
இன்பத்தை கூறுங்கள். மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? உயிர் எங்கே
செல்கிறது? கூறுங்கள்.

எமதர்மன்: இந்த பூமியில் ஒரு பரந்த அரசைக் கேள் தருகிறேன்!


நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
நசிகேதன்: எனக்கு வேண்டாம்! நீங்கள் கூறிய இன்பங்கள் எல்லாம் தூக்கத்தில் நான்
காணும் கனவு போன்றது. நான் பிரகாசத்தை பற்றி தெரிந்து கொள்ள
ஆசைப்படுகிறேன். நீங்கள் இருளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

எமதர்மன்: என்ன நீ மனிதர்கள் இவற்றை தானே அடைய ஆசைப்படுகிறார்கள். இதை


போய் வேண்டாம் என்கிறாயே!

நசிகேதன்: அதெல்லாம் நிலையற்றது சிற்றின்பங்கள் நிலையற்றதை நான் அடைய


விரும்பவில்லை. நிரந்தரமான உண்மை எதுவோ அதையே நான் அறிய
விரும்புகிறேன்.மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது உயிர் எங்கே செல்கிறது
கூறுங்கள்

எமதர்மன்: எத்தனை சலுகைகள் தந்தாலும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே


சொல்லிக் கொண்டு இருக்கிறாய். உனது வயதுக்கு மீ றிய வரத்தை கேட்கிறாய் நீ..
பிடிவாதத்தை விட்டுவிடு.

நசிகேதன்: நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன். மரணத்திற்குப் பிறகு என்ன


நடக்கின்றது? உயிர் எங்கே செல்கிறது? கூறுங்கள்.

எமதர்மன்: நீ குரங்கு போய் பிடிவாதம் பிடித்தால் நான் குரங்காட்டி போல கோலால்


அடிப்பேன். பிறவிக்கு பின் பிறவி கொடுத்து உன்னை தண்டிப்பேன்.

நசிகேதன்: நீங்கள் அன்பாக சொல்லும் போதே நான் வசப்படவில்லை. உங்கள்


கோபத்துக்கா நான் கட்டுப்படுவேன். நான் கேட்ட வரத்தைத் தாருங்கள் ஐயா!
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கின்றது? உயிர் எங்கே செல்கிறது? தயவு செய்து
கூறுங்கள்.

எமதர்மன்: என்ன திமிர் உனக்கு! எனது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்க வில்லை.
உன்னை நான் பிறவிப்பிணியில் சிக்க வைக்கப் போகிறேன்.

நசிகேதன்: தூக்கத்தின் அரசனே! உன்னை பார்த்து எனக்கு பயமில்லை. மரணத்திற்கு


அப்பால் நடப்பது என்ன? என்பதை தெரிந்து கொள்வதே எனது விருப்பம். எலும்பு, நரம்பு
வைத்து கட்டிய உடலை விட்டு போன உயிர் எங்கே செல்கிறது தயவு செய்து
கூறுங்கள்.

எமதர்மன்: நசிகேதா! அறிவை வழங்குமாறு கேட்ட உன்னை அறிவைப் பெற தகுதி


பெற்றவனா என்று பல வகையில் சோதனை செய்து சாதனை செய்யும் சிறுவன் நீ
என்பதை அறிந்து கொண்டேன். உன்னை என் மாணவனாய் ஏற்று ஆன்மாவைப்
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
பற்றிய அறிவை வழங்குவேன். அறியாமை இருள் விலகி உலகத்தோரும் உன்
தயவால் மேன்மை அடையட்டும்.

நசிகேதன்: வணங்குகின்றேன் எமதர்மராஜா!

எமதர்மன்: நீ நல்ல மாணாக்கன். என் மகன் போன்றவன். உனக்கு மெய்யறிவை


வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி. எத்தனையோ சுகமும் செல்வமும் தருவதாக
சொன்னேன். அனைத்தையும் ஒதுக்கி வைத்து மெய்யறிவே வேண்டுமென்றாய்.
இருப்பினும் நீ அறிவைப் பெறுவதில் தொடர்ந்து தீவிரம் காட்ட வேண்டும்.
மெய்யறிவை நீ வெளியே தேட வேண்டியதில்லை. அறிவொளி உனக்குள்ளேயே
இருக்கிறது. அந்த ஒளியை வைத்து உன் அறியாமை எனும் இருளை போக்குவாய்.
தம்முள் இருக்கும் அறிவுச் சுடரை அணையாமல் காத்து அறிவு தீப்பந்தம் ஆக்குவதே
ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டிய பிறவி ரகசியம்.

எமதர்மன்: உங்களிடமிருந்து மெய்யறிவை பெறுவதில் மிக ஆர்வமாக உள்ளேன்

எமதர்மன்: அறிவுடையோர், அறிவில்லாதவர் என்று இருவகை மானிட இனங்கள்


உண்டு.

நசிகேதன்: அறிவற்றவர்கள் இயல்புகள் யாவை? எமதர்மராஜா!

எமதர்மன்: அறிவற்றவர் பொன்னும் பொருளும் புகழும் மிக நாடி இன்பம்


பெறுவார்கள்.

கிணற்றுக் கடல் குளியல் காணும் அறியார்

சுணக்கராய் தற்பெருமை சொல்வார்

கணமும் குருடர் பின் போகும் குருடனைப் போலே

இருளில் இருப்பார் இவர்

நசிகேதன்: புரியவில்லையே! தெளிவாக கூறுங்கள்.

எமதர்மன்: அதாவது நசிகேதா! அறிவற்றவர்கள் கிணற்றுக்குள் முங்கி குளித்து விட்டு


ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளிப்பது போல் தற்பெருமை பேசுவார்கள். கண்ணிழந்த
குருடர்கள் பார்வை மிகுந்தோரை வழிகாட்டியாக ஏற்று பின்பற்றினால் போகும் வழி
அறிவார்கள். அதை விட்டுவிட்டு இன்னொரு குருடனை பின்பற்றினால் அவர்களுக்கு
தாங்கள் போக வேண்டிய பாதையே தெரிவதில்லை. அப்படித்தான் அறிவற்றவர்களும்.
தான், தன் மக்கள், தன் சுற்றம், தன் இனம் என்று ஒரு வட்டத்திற்குள் சுழல்வதால்
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
ஒருவரை ஒருவர் தொடர்ந்து, அறியாமை இருளில் வழ்ந்து
ீ வடிவே
ீ இல்லாமல்
கிடக்கிறார்கள்.

நசிகேதன்: அப்படி என்றால் அவர்களின் கதி?

எமதர்மன்: இரு இரு அறிவற்றவர்களைப்பற்றி முழுமையாக கூறிவிட்டு அவர்களின்


கதி என்ன என்பதை பற்றி கூறுகிறேன்.

நசிகேதன்: இன்னும் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அறிவு,அன்பு, நன்றி, கருணை,


அடக்கம், பொறுமை, நேர்மை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ளாதவர்கள்
பகுத்தறிவு மழுங்கியர்வர்கள். சந்தனத்தில் சாக்கடை கலந்தது போன்ற சொல்லும்
செயலும் கொண்டவர்கள். தன்னைப் பற்றிய அறிவே இல்லாதவர்கள் அவர்கள்.

நசிகேதன்: மற்றவர்களின் கதி என்ன?

எமதர்மன்: இன்பங்கள் உண்டு இதுவே உலகென்பார்

அந்தோ பரிதாபம்! உன் மணி ஆண்டும் பெறாது

உருக்குலைவார் என் வலையில் மீ ண்டும் விழுந்து!

அறிவற்றவர் இந்த மாயையான உலகத்தை இன்பமானது எனக் கருதிவாழ்வார்.


அவர்களின் சொல், செயல், சிந்தனை அனைத்துமே இந்த உலகம் நிலையானது, தேகம்
நிலையானது இவற்றால் கிடைக்கும் இன்பம் நிரந்தரமானது என்பதை
வெளிப்படுத்தும்.அவர்கள் உயர்ந்த ஞானத்தை எப்பிறவியிலும் பெற வழி இல்லாது
பிறவிக்குப் பின் பிறவியாக எடுத்து கலைத்து மீ ண்டும் மீ ண்டும் என் பிடியில் வந்து
சிக்குவார்கள்.

நசிகேதன்: ஐயா! நீங்கள் கூறுவதை கேட்டதும் எனக்கு பயம் ஏற்படுகின்றது. நான்


அறிவுள்ளவனா ?அறிவற்றவனா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. தயவுகூர்ந்து
அறிவுடையோர் குணங்களைப்பற்றிக் கூறுங்கள்.

எமதர்மன்: சொல்கிறேன் கேள்! இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிப்பவர்கள்


அறிவுள்ளவர்கள். எல்லாம் நன்மைக்கே! என்ற நிலை கொண்டவர்கள் என்பதால்
இன்பங்களினால் பாதிக்கப்படுவதும் இல்லை. இயல்பாக பெறுவதையும்
ஒதுக்குவதில்லை. தொடர்ந்து இன்பம் தேடும் முயற்சியிலும் ஈடுபடுவதில்லை.
அறிவுள்ளவர்கள் புலனறிவு, பகுத்தறிவு மெய்யறிவு வாலறிவு என்னும் நால்வகை
அறிவினை உடையவர்கள். தங்களுக்குள் இருக்கும் அபூர்வ சக்தியை புரிந்துகொண்டு
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
அதனால் தானும் தன்னை சுற்றி இருப்போரும் பயனடையும் வகையில் நடந்து
கொள்வார்கள். அறிவுள்ளவர்கள் தற்பெருமை பேச மாட்டார்கள் .தன்னையும்
பிறரையும் மதிப்பவர்கள். நற்குணங்களை கொண்டவர்கள் தீக்குணங்களைக்
களைந்தவர்கள். அறிவுள்ளவர்களிடம் அற்பமான எண்ணமோ செயலோ
காணமுடியாது.

நசிகேதன்: அறிவுடையோர் குணங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க


மகிழ்ச்சி.ஆனாலும் எனக்கு ஒரே வெறுமையாக உள்ளது. அறிவு என்பது இதுதானா?
இதற்குத்தானா இவ்வளவு தூரம் வந்தேன்? இவ்வாறு நடந்து கொண்டால்
பிறவிப்பிணி போகுமா?

எமதர்மன்: உன்னுடைய அடங்கா அறிவுப் பசியை கண்டு வியக்கிறேன்.


அறிவுள்ளவர்களைப் பற்றி மேலும் கூறுகிறேன் கேள். அறிவுள்ளோர் நமது பிறப்பால்
பெறப்படும் மூன்று சொத்துக்களில் தன்னறிவு மட்டுமே மனிதன் இறக்கும் போதும்
உடன் வருவது என்பதை அறிந்தவர்கள்

நசிகேதன் பிறப்பால் வரும் சொத்துக்களா? அப்படி என்றால் என்ன?

எமதர்மன்: மனிதர்கள் பிறக்கும் போது உடன் கொண்டு வருபவை மூன்று. முதல்


சொத்து தாய் தந்தை என்ற உறவு. இரண்டாவது உயிர்த்துடிப்பு. மூன்றாவது தன்னறிவு
.மனிதன் இறக்கும்போது உயிர்த்துடிப்பு நின்றுவிடுகிறது. உயிர் நின்ற கணமே உடன்
வந்த பெற்றோர் உறவும் முறிந்து விடுகிறது. அந்நிலையில் தன்னுடன் வருவது
தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்.

நசிகேதன்: ஐயா! எனக்கு ஏதோ புரிவது போல் உள்ளது. நான் தேடிய விடை
தன்னறிவே என்று என் உள்ளத்தில் தோன்றுகிறது. ஐயா! தன்னறிவு என்றால் என்ன
தன்னறிவு அடைந்தோர் குணங்களைப் பற்றி கூறுங்கள்.

எமதர்மன்: தன்னறிவு….. தன்னறிவு என்பது மிக நுண்மையான அறிவாகும். தெரியும்


ஆனால் தெரியாது. புரியும் ஆனால் புரியாது.

நசிகேதன்: நீங்கள் சொல்வது எனக்கு புரியவே இல்லை.

எமதர்மன்: ஆன்மாவைப் பற்றிய ஞானமே தன்னறிவாகும் நசிகேதா! அண்டம் எங்கும்


பரந்து விரிந்துள்ளது. ஆனால் நம் கண்களுக்குத் தெரிவது மிகச் சிறிதே. அதுபோல
தன்னறிவு என்பதும் நம் பார்வைக்கு உணர்வுக்கு தெரிந்ததும் புரிந்ததும் மிகச்சிறிதே.
எனினும் மிகப்பரந்ததாகும். தேடத் தேட வளரும் அறிவாகும்.
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
எமதர்மன்: ஐம்பூதங்களை தன்னுள் கண்டவரை அறிவாயோ?

நசிகேதன்: இல்லை.

எமதர்மன்: அறிய மாட்டாய். காரணம் அவர்கள் மிக மிக அரிதானவர்கள். தன்னறிவு


பெறுவதும் அரிதான செயலே. தன்னறிவைப் பெற விழையும் மாணவன்
குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்கள்
கிடைப்பது மிக அரிது. தன்னறிவைத் தகுந்த முறையில் கற்பிக்க தகுதி வாய்ந்த
ஆசிரியர் கிடைப்பது அதனினும் அரிதாகும்.

நசிகேதன் அந்த அரிதான மூவாசான் தாங்கள் தான் எமதர்மராஜா!

எமதர்மன்: அருமையாக பேசுகிறாய்

நசிகேதன்: ஆன்மாவைப் பற்றிய ஞானமே தன்னறிவா? எமதர்மராஜா. அப்படி என்றால்


ஆன்மா எங்கே இருக்கிறது? எனக்கு விளக்கிக் கூறுங்கள்.

எமதர்மன்: ஆன்மாவிற்கு தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை, ஆன்மா நமது


சிரசினுள் விளங்குகிறது நசிகேதா.

எமதர்மன்: ஆன்மா நமது சிரசினுள் விளங்குகிறதா? அதை நான் எப்படி கண்டு


கொள்வது?

எமதர்மன்: வெளியே இருப்பவற்றை கண்டு புரிந்துகொள்ள உதவும் புறப்பார்வை


போலவே மனிதருக்கு அகப்பார்வையும் உண்டு. மனிதர்கள் அகப்பார்வையினால்
தனக்குள்ளே ஆன்மாவை தேடிப் பார்க்கவேண்டும். தவத்தாலும் முயற்சியால்
தொடர்ந்து தேடினால் ஆன்மாவை அடையாளம் காணலாம்.

நசிகேதன்: மனிதர்கள் இறந்ததும் ஆன்மாவிற்கு என்ன ஆகிறது? அது ஏன்


அழிவதில்லை?

எமதர்மன்: நிதானமாக சொல்கிறேன். பொறுமையாக கேள். உடல் அழிகிறது உடல்


அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை. அதற்கு காரணம் ஆன்மா பிறவியை விட
பெரியது. பரந்து இருப்பது. முக்கால அறிவையும் பெற்று தொடர்ந்து வளர்ந்து
கொண்டே இருக்கும் பிரம்மாண்டமாகும்.ஆன்மா எதனின்றும் உருவாவதில்லை.
எதையும் உருவாக்குவதும் இல்லை. என்றைக்கும் எப்போதும் நிலையாக
இருப்பதாகும். தீயானது தன்னிச்சையாக எப்படி தாவிப் பரவுகிறதோ அதுபோல்
ஆன்மா எனும் ஞான ஒளி நிரந்தரமாக அழிவில்லாமல் உன்னிலும் என்னிலும்
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
ஏனையோரிலும் தாவிப் பறந்து வசுகிறது.
ீ நசிகேதா! ஆன்மாவைப் பற்றி மேலும்
சொல்கிறேன் கேள். ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும்
அழிக்கவும் முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே
தவிர மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதன் இறக்கும் பொழுது
மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை.அழிவதில்லை

நசிகேதன்: மனிதன் இறந்துவிட்டான் என்று சொல்கிறோமே.

எமதர்மன்: மரணம் நிகழ்வது உடலுக்கு ஆன்மா அழிவதில்லை.

நசிகேதன்: சற்று குழப்பமாக இருக்கிறது.

எமதர்மன்: நசிகேதா! உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா?

நசிகேதன்: கேளுங்கள்.

எமதர்மன்: இதோ இந்தப் பானையை பார். இதற்குள் என்ன இருக்கிறது?

நசிகேதன்: வெறும் பானை உள்ளே ஒன்றும் இல்லை.

எமதர்மன்: உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா?

நசிகேதன்: சரிதான் பானைக்குள் காற்று இருக்கிறது.

எமதர்மன்:பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது? எங்கே


கொட்டியது? என்ன ஆனது?

நசிகேதன்: பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை. உடைந்த பின் கொட்டவும்


இல்லை. காற்று அங்கேயே தான் இருந்தது.

எமதர்மன்: சபாஷ் நசிகேதா! ஆன்மாவும் அப்படியே பானையைச் செய்த குயவன்


காற்றை அடைக்கவில்லை. காற்றை சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம் மனித
உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கி பிறக்கிறது. காற்று பானைக்குள்ளும்
அடக்கம் வெளியிலும் அடக்கம். பானை ஒரு சிறு தடுப்பு. அவ்வளவுதான் மனித
உடலும் பரந்த ஆன்மாவின் வச்சில்
ீ ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளி
காற்றுடன் கலப்பதை போலவே உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகி
கலந்துவிடுகிறது. அடுத்த பானைக்கு காத்திருக்கும் காற்று போல அடுத்த உடலுக்கு
ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படி காற்றானது பானைக்கு சொந்தமில்லையோ
ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்லை.
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
இந்த உண்மையை உணரும் மனிதர் தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை
பிறருடைய மரணத்துக்கு வருந்துவதும் இல்லை.

நசிகேதன்: ஆன்மாவை நான் எப்படி அடையாளம் காண்பது?

எமதர்மன்: ஆன்மாவை அடையாளம் காண முடியாது.

நசிகேதன்: ஐயா! இத்தனை நேரம் ஆன்மாவை அறிய வேண்டும், ஆன்மா


அப்படிப்பட்டது ஆன்மா இப்படிப்பட்டது என்று பலவாறாகச் சொல்லி ஆர்வத்தையும்
அறிவையும் தூண்டிவிட்டு இப்போது ஆன்மாவை அடையாளம் காணமுடியாது
என்கிறீர்களே புரியவில்லையே..

எமதர்மன்: ஆன்மாவை அடையாளம் காண முடியாது ஆனால் உணர முடியும்

நசிகேதன்: ஆன்மாவை அடையாளம் காண முடியாது உணர முடியும் என்கிறீர்கள். ஒ!


உணர்ந்தவுடன் காணலாம் என்கிறீர்களா

எமதர்மன்: மிகச்சரி நசிகேதா ஆன்மா உருவமற்றது பிறப்போ இறப்போ அற்றது


அழிவற்றது அப்புறம் அத்தனை சுலபமாக அடையாளம் காண முடியுமா? ஆன்மாவின்
இன்னொரு தன்மையை விளக்குகிறேன். ஆன்மா மனிதத்தினும் பெரியது நம்
அத்தனை உயிரிலும் பரந்தது.

எமதர்மன்:உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஆன்மாவின் வடிவங்களே இதில்


பேசிக்கொண்டிருக்கும் நீயும் நானும் அதில் ஒரு அங்கம். வடிவங்களை ஆன்மா
மாற்றிக்கொண்டே இருக்கும். அது ஒரு முடிவில்லாத தொடர் ஆகும்.

நசிகேதன்: ஓ!பிரம்மிப்பாக உள்ளது. அப்படி பட்ட ஆன்மாவை என்னால் காண


முடியுமா?

எமதர்மன்: கடல் நீரின் தன்மை ஒரு சிறு குமிழியிலும் அடங்கியுள்ளது. குமிழியின்


தன்மை அறிந்தால் கடல் நீரின் தன்மையை அறியலாம். அதுபோல உன்னுள்
இருக்கும் ஆத்மாவின் தன்மையை அறிந்தால் எங்கும் பரவியிருக்கும்
பரமாத்மாவின் தன்மையை அறியலாம்.

நசிகேதன்: ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடல்


அலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா? என்ற கேள்வியும் சிறு அலையாய்
பின்தொடர்கிறதே நான் என்ன செய்வேன்?

எமதர்மன்:அறிவார் நிலைத்து நிற்பார் அறியாதவர்கள் நாளை என்னிடம் வருவார்.


நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
நசிகேதன்: அப்படி என்றால் ஆன்மா நமக்கு புலப்படும் என்கிறீர்களா?

எமதர்மன்: நிச்சயமாக ஒருமையில் மனதை செலுத்தி தேடும் முயற்சியில் தீவிரமாக


இருந்தால் அவர்களுக்கு ஆன்மா புலப்படும். புலப்பட தானே பரந்து இருக்கிறது
ஆன்மா.

ஆனால் தீய குணங்களை அடக்காதவர்கள் தங்கள் தேடலை இடையிலேயே


கைவிட்டு தாங்கள் இறக்கும் வரையிலும் ஆன்மாவை அறிய மாட்டார்கள்.
ஆன்மாவோஅவர்களின் உள்ளத்திலேஒரு அகல் விளக்கின் சாதாரண சுடர் போல
அடங்கிவிடும்.

நாடி அடங்கும் முன் நுட்பத்தை உள்ளக பாடியில் கண்டு பெறவேண்டும்

நான் உன்னிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன் ஆன்மாவை உணர்ந்தவர்கள் என்னிடம்


மீ ண்டும் வருவதில்லை.

என்னிடம் வருவதும் பூமியில் நிலைத்து நிற்பதும் உன்னிடம் உள்ளது.

முயற்சி செய்ய தயாரா?

____________________#################______________##################________________

You might also like