You are on page 1of 201

*கீ தை காட்டும் பாதை*

நூல் ஆசிரியர்
திரு N. கணேசன்.

1.

நமக்குள்ளே ஒரு குருக்‌


ஷேத்ரம்!

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு


குருக்‌
ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை,
பலம்-பலவனம்,ீ கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை,
லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே
அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில்
ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே
அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும்
தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத்


தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன்
பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து
குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல்
திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த
திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப்
போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து
நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும்
பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக்
கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல்
சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று
நினைக்கிறார்கள்.

அர்ஜுனன் குருக்‌
ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான்.
அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத்
கீ தை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு
பெற வைத்து அவனை உறுதியுடனும் வரத்துடனும்
ீ செயல்பட வைத்தது.
அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீ தை ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும் பிற்கால
மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான
கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது
என்று உணரத்தக்க வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய
பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்பு பெற்று
அமரத்துவம் அடைந்து விட்டது.
முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன்
நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம்
முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும்,
உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம்,
துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க
நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம்
முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக்
கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த
குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது
தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக
ஒளிரும் கீ தை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில்


பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீ தை.
வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் முழு சாராம்சத்தையும்
பகவத் கீ தையில் தந்துள்ளார். குருட்டு மன்னன் திருதராஷ்டிரன்
ஷேத்ரமான குருக்‌
“தர்மக்‌ ஷேத்திரத்தில்” என்ன நடக்கிறது என்று
சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட
ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல
ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீ தையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான்
ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை எந்த


மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை,
விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த
பொருள்களில் எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து
விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி ஒருவன்
இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம். அப்படி இருக்கும் வரையில்
மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர் அமைதிக்கும் தீங்கு
விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த தர்ம நெறியில்
இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து பிறர்க்கும்
தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும்
இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும்.

கீ தையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன்


தன் தர்மம் மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்திற்கும் குழப்பத்திற்கும்
காரணமாக அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன்
தேரை ஓட்டிச் சென்று நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான்
கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார். இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச்
செலுத்துகிறான். உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள்
முதலானோரே இருபக்கமும் இருக்கக் கண்டான். அனைவரும் தன்னுயிரைத்
துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் தயாராக உறுதியுடன் கூடி இருக்கும்
நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே விவரிக்க முடியாத துக்கம்
ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி பெறக்கூடிய வெற்றி
வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின. கையிலிருந்து
காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம் என்று முடிவு
செய்கிறான்.
கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்ல
ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம் பெருகும், மக்கள் மனம்
போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம் அதிகரிக்கும், பஞ்சம்
வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றெல்லாம் எடுத்துச்
சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக
இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீ து அவனுக்கு இருந்த அளவு கடந்த
பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும்
அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம்
இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள் புதிதல்ல. அவன் கொன்று குவித்த
ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம் வரம் ீ நிரம்பியே
இருந்தது. அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக தனியொருவனாக
நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை
எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத
ஞானோதயம் இப்போது அவனுக்கு வரக் காரணம் இந்த மகத்தான யுத்தத்தில்
பலருடைய மரணத்தின் மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி
இறக்கப் போகிறவர்கள் அவனுடைய பாசத்திற்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது.


இறந்தவர்கள் அவனது உறவினர்கள் அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக்
காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட துக்கமும், போரின்
வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர வைத்ததும் மன
ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி
வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம்
அப்படிப்பட்டதல்ல. கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு
உறவுகளையும், அன்பு வைத்த மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம்
அவனுடையது.

சூதினாலும், சூழ்ச்சியினாலும் கவர்ந்த இராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா


விட்டாலும் ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக
அதிகமாகத் தாழ்ந்து வந்த போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன்
என்று அகம்பாவத்தோடு மறுத்தவன் துரியோதனன். அவனைப்
போன்றவனிடம் அவர்களுடைய இராஜ்ஜியத்தை விட்டு விட்டால் அவன்
ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும்
துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா
முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற
வேண்டியவர்கள் சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது
மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல் தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த
மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா? அதை விடப் பெரிய அதர்மம் என்ன
இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான
மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த விதத்தில் தர்மம்?

மனம் பலவனமாகீ இருக்கின்ற நேரத்தில் செயல்பட வேண்டிய மனிதன்


செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித
சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய
நல்லவை, கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே
பகவானிடம் கொட்டிய அர்ஜுனன் கடைசியில் தன் குதிரையின்
கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன் மனதின்
கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். “நான் சிறியவன்.
குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு
மயங்குகிறது. அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு
உறுதியாகச் சொல். நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்”

வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி


நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும்
அர்ஜுனன் செய்ததையே செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன்
இருக்கிறார். அவர் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும்,
சிக்கல்களையும், துக்கங்களையும் அவர் முன் வைத்து வழி காட்ட வேண்டும்
என்று வேண்டி சரண் அடைவோம். அவர் கண்டிப்பாக வழி காட்டுவார்!

அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் ஞானமும் தெளிவும் பெறத் தயாராவோமா?

2.

இந்த துக்கம் அர்த்தமற்றது!

ஒருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய


அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப்
பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத்
தோன்றும். அதே போல அறிவுரையை யாருக்கும், எப்போதும், இலவசமாக
அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம். கேட்டால் மட்டுமே,
தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை சொல்ல முற்படுவதும்
அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான்
கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது. திடீரென்று தத்துவஞானியாக மாறிய
அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம்
சூழும் என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி
முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவன்
”உன்னை சரணடைகிறேன், எது தர்மம் என்று சொல்” என்று சொன்ன பின்னரே
தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.

பகவத் கீ தையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில்


பதினோராம் சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம்
ஆரம்பமாகிறது.

“யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய்.


விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட
மாட்டார்கள்.

நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை.


இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.

உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம்,


இளமைப்பருவம், மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை
அடைவதும் (அதாவது மறுபிறப்பும்). விவேகி இதற்கு மயங்குவதில்லை.
இந்த ஆன்மா ஒரு போதும் பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது
இல்லாதிருந்து பின் உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது,
புராதனமானது. உடல் கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.

கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை


அணிந்து கொள்வது போல் ஆத்மா சிதைந்து போன உடம்புகளைக் களைந்து
விட்டு புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது”

என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின்


நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.

ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண


முற்படும் போது அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான
அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து
துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி உடலையே “நான்” என்றும் “மற்றவர்”
என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே. எனவே தான் பகவான்
கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக் காட்டுகிறார்.

நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான செல்கள் பிறக்கின்றன,


ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய விஞ்ஞானம்
சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி
விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி
இருப்பதில்லை என்றும் நவன ீ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு
தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில
நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி
உடல் இயங்கத் தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக
இருப்பதிலை. இன்று “நான்” என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல்
ஒரு நாள் தாவரத்தின் ’நானாக’ இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின்
‘நானாக’ இருக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது
நம்முடையது? கணந்தோறும் மாறுவதும், கணந்தோறும் அழிவதுமான உடல்
தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப்


பொறுத்த வரை பார்வைக்கு உடல் தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால்
கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயதுப் பருவம்,
வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல் மாறிக் கொண்டே போகிறதே
இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.

மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது


ஆன்மா அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல்
ஒரு ஆடையைப் போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால்
மரணம், அது யாருடையதானாலும், நம்மை வருத்தாது. தினம் தினம் உடை
மாற்றுகிறோமே அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?

நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட முடியாது. நீங்கள்


எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள் உபயோகிக்கும் கருவி தான்
இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது அந்த அடையாளம்
அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு சேர்ந்து
விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது
நண்பர்கள் என்று அந்த ‘நானு’டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே
சேரும் போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம்
நம்மைப் பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி,
எனது செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய
‘நானு’டன் சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட
நம்மைப் பாடாய் படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய
காரணங்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான்
கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான இந்த உடலை நானாக நினைக்கும்
அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறார்.
அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட
அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.

பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

“இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும்


அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க


முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?”

பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை


இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த
ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல்
தான் நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி
தான் இது.

“நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்


பெருமை உடைத்திவ் வுலகு”
என்று திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை
வாழ்ந்தவனும் திடீர் என்று இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா?
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமல்லவா?

கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல ”இந்த உலகத்திற்கு


வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம் சகித்துக்
கொள்ளவே வேண்டும்” அல்லவா?

எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இந்த விதிக்கு நாமும்


கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இது
இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இதை
எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில் நிகழும்
போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத
நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும்
என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த உண்மைகளை எல்லாம் சொல்வது ஒருவன் ‘கல் மனம்’


கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல. மரணம் நிகழும் போது,
இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல் சாதாரண
மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீ ளுதல் மிக
முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க
ஆரம்பிப்பதற்கு பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து,
அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம்.
நம்மை சில இழப்புகள் செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப்
பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற இந்த உண்மைகள் நமக்கு
பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணன் கீ தோபதேசத்தின் மிக முக்கியமான


தத்துவம் ஒன்றை, வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரு மனிதனும் பின் பற்ற
வேண்டிய ஒரு தத்துவத்தை, சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன என்று
பார்ப்போமா?....

3.

சுதர்மமே சிறந்தது !

இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத்


கீ தையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.

பகவத்கீ தையின் ஆரம்பம் ”தர்மம்” என்ற சொல்லில் துவங்குவதை முன்பு


குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீ தை “மம” என்ற சொல்லில் முடிகிறது. ’மம’
என்றால் “என்னுடைய” என்று அர்த்தம். “தர்மம்” மற்றும் “என்னுடைய” என்ற
சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீ தை ஒளிர்கிறது.
இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள் “என்னுடைய தர்மம்” என்பதன் விளக்கமே
பகவத் கீ தையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள்
சொல்வது உண்மையே. அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய
கீ தையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல்
இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீ தையின் மிக முக்கியமான தத்துவம்.

ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய


பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான
அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும்,
தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து
வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே
வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை
நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை
அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.

இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு


வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன்


எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம்.
ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும்,
மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன்
திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி
அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது.
சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி
விடுதலோ கூடாது.

பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக்


கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீ ன்களிடம்
‘நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து
வாழுங்கள்’ என்று எவரேனும் சொல்வாராயின் மீ ன்கள் அதை ஏற்குமா?
மீ ன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.

அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக்


கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த
போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய்
விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக
சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து
விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா?
அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான
தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில்
அவனையும் மீ றியல்லவா வெளிப்படும்.

இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான்.


நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை
பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா
கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை
இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை
அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால்
தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து
பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை
விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.

எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில்


நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய
மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று
தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள்
பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா,
இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து
விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து
டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும்
பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.

எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம்


அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல
வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும்.
அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும்
சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக
வாழ்கின்றான்.
கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய
மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால்
பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை
கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி
செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல்
பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால்
கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை
தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க
வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித
ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ
கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.

ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள


திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள்.
அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல்
அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக
இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும்
அரிதாக இருக்கிறது.

பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக


இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன.
வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப்
படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும்
இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால்
அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது
நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய
நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும்
உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.

இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள்.


பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும்
முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி
பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால்,
அவர்கள் தினசரி வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல
ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள்
விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால்
சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.

எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை


உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு
தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல
இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை
அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால்
அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது
உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவதம் ீ நாமாக
இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண
முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில்
பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு
மறந்து விடக்கூடாது.

சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே பகவான்


கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு
இடத்தில் “சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும்
நல்லதே” என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க
எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால்
அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.

இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை


என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள்
சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக்
காரணமும் அது தான்.

கீ தை சொல்லும் சுதர்மம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்…

4.

எது எல்லாம் சுதர்மம் ?

சுதர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து


கொள்வதே. தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள்
அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே
தான் பிறப்பாலும், தன்மையாலும் வரனான ீ அர்ஜுனன், அது வரையில் தன்
சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன்,
குருக்‌
ஷேத்திர பூமியில் மடியப் போகும் உறவுகளைக் கண்டு சுதர்மத்தை
விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான் கிருஷ்ணர் சுட்டிக்
காட்டுகிறார்.

சுதர்மத்தின் அடுத்த படி என்ன? மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்.


நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும் பிறந்து விடுகின்றன. எந்த
பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கு நாம் ஆற்ற
வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய
வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி ஆகின்றன.
இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும்
முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று
நாம் வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம்
நம் கடமைகளும் கூடவே இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இது ஒரு வழிப் பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ,


வேறு வழியாகவோ நாம் நிறைய பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது.
அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன்
தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச் செய்யாமல் கோடி கோடியாய்
திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது ஒருவருடைய
கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.
சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை
தேவையான அளவே செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீ றினால்
அமிர்தமும் நஞ்சு என்பது இந்த விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும்.
மேலும் அளவுக்கு மீ றி ஒன்றைச் செய்கையில், செய்ய வேண்டிய
இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா? சில நல்ல
விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள்
நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம்.


ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக்
காட்டி வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு
கடந்த பாசம் அவனை உறுதியுடன் பிள்ளைகளின் தவறுகளைக் கண்டித்து
திருத்த விடவில்லை. அது கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா
வழி வகுத்தது? திருதராஷ்டிரனும், காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி
சொல்லாமல் இல்லை. ஆனால் ஏதோ பேருக்கு புத்தி சொன்னார்களே ஒழிய
அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி இருக்கவில்லை.
புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான
அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்கவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு
தங்கள் கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான
விளைவை ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது
சுதர்மம் ஆகாது, அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.

(சில அறிஞர்கள் திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும்


உருவகம் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன்.
காந்தாரியோ கணவன் காணாத உலகத்தைத் தானும் காண விரும்பாமல்
கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம் விருப்பு வெறுப்புகளின் தன்மை
உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத் தன்மை உடையது.
அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே மாறுமானால்
அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு
பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக
வியாக்கியானம் செய்கிறார்கள்.)

வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு உறவிலும், வகிக்கும்


ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீ கக் கடமைகள் ஒரு
மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு அங்கமே. அந்தக்
கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த மனிதன்
எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான்.
அதற்கும் மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப்
போன்ற தர்மவான் இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை
ஏந்தியும் இருக்கிறார். அவனிடம் தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு
புண்ணியாத்மாவான கர்ணன் நண்பன் துரியோதனன் தவறு செய்யும் போது
சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு போனதை நண்பனாக சுதர்மம்
தவறியதாகச் சொல்லலாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்


மேற்சென்று இடித்தற் பொருட்டு.
என்கிறார் திருவள்ளுவர். இதில் “மேற்சென்று” என்ற சொல் பொருள்
பொதிந்தது. கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன்
எடுத்து விடக் கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச்
சென்று இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம்.
அவன் சொன்னால் துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம்.
நியாயமற்ற செயல்களைச் செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற
செயல்களைச் செய்யும் நண்பனைத் திருத்த முற்படுவதன் மூலம் அவனை
அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? இப்படி சுதர்மம் என்பது
ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட முடிந்த சொல் அல்ல. சுதர்மம்
என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல்.

முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும் சுதர்மம் அல்லாத செயல்.


சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு நடக்கும் மையத்திற்குச்
செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது இருக்கக்கூடிய
மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால் டிக்கெட்
முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த அறையில்
அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு
பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப்
பேனா, ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு
வெளியே சென்றார். தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை
எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை
தன் சுதர்மத்தைப் பின் பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று
யாராவது சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த மகனின் ஏழெட்டு
வயதில், உண்மையிலேயே அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு
இருக்கக்கூடிய காலத்தில், அவர் இதைச் செய்திருப்பது அவர் கடமை .
ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச் செய்வது அவனுக்குத்
தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து அவனுடைய
வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு கண்கூடாகப்
பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

சிலர் தங்கள் வட்டில்


ீ ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள்.
ஆனால் அடுத்தவர்கள் வட்டில்
ீ ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில்
புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச்
சொல்லலாமே ஒழிய சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.

அது போல சில விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை.


எனக்குத் தெரிந்த ஒரு வட்டில்
ீ ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில்
மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை வரும் போது அவருடைய உடன்
பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக் கரையேற்றி
விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள்
நமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு
பொறுப்பற்ற முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன்
பிறந்தவர்களின் தர்மம், சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
கடைசியில் அவர்களும் உதவ முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக்
கொள்ளாமல் ஒரு நாள் தலைமறைவாகிற நிலை வந்து விட்டது.
எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு தெளிவில்லையானால் சுதர்மம்
என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு அது காரணமாகி விடும்.
சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் செய்ய நேர்ந்து
விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதன்
விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல்படுவதும் முக்கியம். நம்
உதவி அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும்
ஆக்குமானால் அது கண்டிப்பாக சுதர்மம் அல்ல.

பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம் கண்மூடித்தனமானதல்ல. அது இதய


பூர்வமானது. அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில்
ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடைபிடிப்பார்களேயானால்
இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணர் இன்னொரு அற்புதமான உபதேசத்தைச்


செய்கிறார்.

அதைப் பார்ப்போமா ?....

5.

அர்த்தம் அனர்த்தம்
ஆகும் தருணங்கள் !

சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள்


கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு
வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீ தையின் இரண்டாம்
அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்” தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற
அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய
யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.

சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது


செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும்
வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில்
புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.

“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத்


தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள்
சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள்
போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள்.
அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான
லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய்
விடுகிறது”

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று


முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே
ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும்,
சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும்
உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.

இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம்.


எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து
அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு
மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும்,
சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.

மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப்


படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில்
பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும்,
தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும்,
உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த
மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை
அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள்
மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும்
வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள்
செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில்


இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள்
வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித
உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல்
இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல்


அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால்
முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள்
மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும்
இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக
நம்மிடையே பார்க்கலாம்.

இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை


மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும்,
உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி
ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து
பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து
உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து
அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை
முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.

அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம்,


அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை
அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள்,
சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த
மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக
சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை
விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக்
கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர்
எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத்
தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.

ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை


ஊக்குவிக்கவில்லை. பகவத் கீ தை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல
கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி
சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது
போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம்
அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில்
அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து
கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம்
இருப்பதுமே கீ தையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை


நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால
சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும்.
அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகக் கூட
இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால்
மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி
பலனடைய முடியும்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும்


வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே
முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும்
இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும்
தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீ தையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு
அழகான உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ண ீர் இருக்கையில்
கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை
உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.

இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய


நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக
பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால்
நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம்,
சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம்
அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய
ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த
அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.

வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து


சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு
தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல
உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு
படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன்.
அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி
வைக்கப் படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக
இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு
கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது.
இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற
தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை
செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற
பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.

அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன்


ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம்
அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில்
வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும்
இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம்
திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும்
கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.

எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்?


நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர்
நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல
உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக
அல்லவா வந்து விட வேண்டும்?

வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும்


ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய
ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீ ண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து
கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.

ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு


பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம்
நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய
மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக
நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான்
இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக
இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள்
கோடிட்டுக் காட்டுகின்றன.

இனி கீ தையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப்


பார்ப்போம்.

6.

உயர்ந்த செயலின் ரகசியம்.

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர்


முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.
“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள்
உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று
எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில்


உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல்
புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, பற்றுள்ள செயல், பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது.


ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது
நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய


பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த
ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத்


தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர்
சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது
இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும்
ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது
விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல்


என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும்
மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச்
செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில்
தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை.
விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே
அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது
அர்த்தமற்றது.

ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச்


செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும்.
பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும்,
கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது.
அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவத ீ கவனத்தோடு,
மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா.
உதாரணத்திற்கு சுமார் இருபது சதவத
ீ கவனம் பலன் குறித்த உணர்வுகளில்
தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20
சதவதம்
ீ குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும்
குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே
தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும்


ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில
மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில்
அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச்
சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை


முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன்
நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில்
பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன்
கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம்
நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது
எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில்
முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல்
செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு
உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த


செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச்
சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன்
கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள்
காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில்
அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள்
இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால்
நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு
உன்னதப் படைப்பாக இருக்காது.

அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும்,


உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை
எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச்
செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை.
எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற
எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா
சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய
முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக
வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப்
போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய
விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து
கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள்


எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள்
முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும்.
எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த
படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.


குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே
கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய
வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய
நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை
வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க
வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு
குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
(காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த
அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி
வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர்
தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன.
பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீ ழ் தாங்கள் வந்து
விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு
வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி
தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும்
ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல்


இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த
காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ,
பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான்
பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி
விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக
இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.


அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால்
அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது
பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை
வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த
செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள்
செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும்
தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும்
கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும்
மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும்.
இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே
தான் பலன் மீ து அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை.


அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை
விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த
ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும்
சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும்


என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில்
முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீ ழ், மேல் என்ற பாகுபாடுகள்
இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது
சக்திகளை வணடிக்காமல்
ீ செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது.
பலன் தானாக வரும் என்கிறது கீ தை.

குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா


ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன்.
இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி
செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ
என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும்,


விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய்
கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான
அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில்
வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு
நிறுப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள்.


அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச்
சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக
இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக்
கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீ தை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும்


விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின்


உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக்
கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து
சொன்ன 18 சுலோகங்கங்களில் கீ தையின் முழுமுக்கிய சாராம்சத்தையே
அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும்
இனி பார்ப்போமா?

நிலைத்த அறிவுடையவன் யார் ?

வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர்


சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும்
இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும்
ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத்
தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற
மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி இருப்பான்,
எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான்.
தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக்
கேட்டான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த
பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில்
கீ தையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று
கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய
ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர்
வடுகளிலும்
ீ இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின்
போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த
சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால்
அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள்
நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.

“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன்


மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன்
ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன்
எனப்படுகிறான்

துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார்


இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து
யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில்


மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ
அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக்


கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில்
இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை
அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான


சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல்
உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன்
அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ


முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக
மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே


அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன்
எவனோ அவனது அறிவே நிலையானது”

இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய


குணாதிசயங்களை விவரிக்கிறார்.
1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்

ஆசைகளைத் துறத்தல்:

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர்.


வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே
கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான
உண்மை.

வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும்,


ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று
தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில்
ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீ டுகள் வந்தால் குமுறுகிறோம்,
அழுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஒருவழியாக அந்த தேவைகளையும்,
ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது
ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும்
ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு
வரலாறு உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும்


அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும்
அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று
சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம்.
இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே
ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று
எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே
இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே


பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த


அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)

ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர்.


அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார்.
இதே கருத்தைத் தான் கீ தையிலும் பார்க்கிறோம்.

2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த


நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள்
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த
நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக்


கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது
மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன்
சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்


துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது


மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள்.


சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக
இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக
மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம்
சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன்
அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி


வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து
கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப
வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில்
ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி
தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம்
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்


எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில்


பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.

இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த


அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது
என்கிறது கீ தை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ
வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.

இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக


இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க
ஆரம்பிக்கிறார்.
8.

ஆசையில் இருந்து
அழிவு வரை.

நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில்


ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து
விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.

”புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு


அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது;
ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது.
மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி
பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்”

எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன.


உயர்விற்கும் அழிவிற்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள்
வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு
சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன்
வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது
இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை
அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று
விடுகிறது.

விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது


இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ
மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம்
அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது
என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை,
தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும்
மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை
இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.

எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது


அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம்
தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம்
தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக்
கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன்
விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

மலை மீ திருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீ ழே


வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட
விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில்
இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.
தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வண்.
ீ கல் தன் பயணத்தை
முடித்தே நிற்கும். எனவே கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள்
எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது
புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீ து கட்டுப்பாடு உங்கள் கையில்
இருக்கிறது.

புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம்


என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத,
திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி
செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான்
என்று சொல்கிறார். மேலும் வட்டில்
ீ விளக்குகள் எரியும் போது திருடர்கள்
உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு
வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம்
கூறுகிறார். இங்கு விழிப்புணர்வு தான் விளக்காக உதாரணம்
காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக
சித்திரிக்கப்படுகின்றன. வட்டு
ீ எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள்
நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான்
திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

விழிப்புணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக


இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க
ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள்
பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை
விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த
பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள்
தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி
விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். “புலன்கள் அலைந்து திரிகையில் மனமும்


பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல
அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது.” இது மிக அழகான
உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம்
அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற
பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும்
கஷ்டப்படுகிறான்.

கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும்


கூறுகின்றார். “சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச்
செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை
ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”

இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை


ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை
படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக்
கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப்
பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில்
ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி
அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். ‘ஆசையே அலை போலே,
நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே’ என்று
கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி
செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீ தமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள
ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத
காரியமாகி விடும்.

சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக்


கூறுகிறார். “மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின்
மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ
குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள்
பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு
இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது
குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி
செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக
அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து
கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள்
நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து
கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்”.

ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க


முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம்
ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும்
போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக
அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை
உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும்
போது, தூண்டிலை வசும்
ீ போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன்
மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத்
தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி
ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர்
உறுதியாகக் கூறுகிறார்.

சில சமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்திற்கும், அழிவிற்கும்


மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப்
பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின்
காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது.
சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும்
போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.

மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து,


இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக
இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய
இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும்
நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை
இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.

எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை


வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும்
சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று
அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே
வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த
துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும்
கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது. கிரேக்கத்தில் மாசிடோனியா
என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த
இடங்களையெல்லாம் வென்ற மாவரன். ீ அவன் வாழ்நாள் நீடித்திருந்தால்
உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து
தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற
முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த
துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு
உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான
வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே
பெற முடியும்.

நேர் எதிர் கோணங்கள்.

நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு


அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து
எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை
விளக்குகிறார்.

“சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய


மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக்
கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்”

நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி


உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர்
எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப
நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால்
நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில்
எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள்,
ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க
அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.

சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த


அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல
நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள்
சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். சாதாரணமான
மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக
முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக்
களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன்
அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது
ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான்
போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம்
மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது
ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட
முடியாமல் தவிக்கிறான்.

மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம்


ஆகியவை துக்கத்திற்கான தூண்டில்கள் என்றும், என்னேரமும் எப்படியும்
மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில்
சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம
சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப்
பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும்
தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும்
கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.

சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்திற்கு மிக அதிக முக்கியத்துவம்


தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும்,
பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின்
சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்திற்காகவே
மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற
மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை
குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத
வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம்
புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது.
அகத்திற்கும், புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக
அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம்


அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில்
பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி
இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான
செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான். அந்த
செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது
குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக
கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக்
கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இடைவெளி
இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு
இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத்
தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால்
அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.

“நதிகளிலிருந்து எப்போதும் தண்ண ீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும்


அது நிரம்பி வழிவதில்லை.அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில்
அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை
வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை”
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். “ஆன்மா
மாகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும்
தினந்தோறும் வெள்ளத் தண்ண ீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன்
காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ண ீர்
கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ண ீர்
வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற
நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின்
உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன்
நிலை குலைவதில்லை.”

நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது


பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை.
ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள்
வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம்.
அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே
அறிந்து கொள்ளலாம்.

உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள்


தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல
மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம்,
தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர்
சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற
அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி
வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற
உறுதியை அவர்களிட்ம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை
சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய்
விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில்
மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில்
ஆச்சரியம் இல்லை.

சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல


முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக
வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது.
வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து
விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும்
வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப
சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது
போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய
கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது
அறிவனம்.

அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன்
பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை
ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை
ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும்,
சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம்
செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக்
கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று
வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால்
வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற
முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான்.
மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும்
என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன்
நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல்
இருக்கிறான்.

இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர்


சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே
விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில்
பயணிப்போம்.

10.

செயலில் பாவனை
மிக முக்கியம்.

ஸ்ரீ கிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு


அர்ஜுனனிற்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று
சொல்வது புரிந்தது. உடனே அவன் ”செயலைக் காட்டிலும் அந்த அறிவே
சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன்
புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு
மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்” என்று
பொறுமையிழந்து சொல்கிறான்.

வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு


வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது
மனிதனிற்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு
வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி
விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீ தையின் மூன்றாம் அத்தியாயமான
கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல
ஆரம்பிக்கிறார்.

“பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள்


பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை,
மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.

ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை


அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.

எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில்


உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது”

ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே


உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா
இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை
எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி
பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள்.
அதையும் மீ றி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக்
கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத
காரியமே.

இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும்


வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும்
நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. ‘கள் குடித்த
குரங்கிற்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை’யை மனதின்
நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு
கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும்
கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும்,
ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது.
அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது.
வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை
இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது
கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.

உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க


முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள்
இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில்
அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும்
தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப்
பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ
அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.

எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது


அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.
ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன்
வந்ததல்லவா. அது சொன்ன அளவிற்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று
புரிய வைக்கிறார்.

மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால்


ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும்.
வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும்
ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: ”கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன்


புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின்
அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்”.

போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம்.


தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும்,
எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில்
சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்த
நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும்
இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வகீ நிலையை அடைய முடியும்.
இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே
இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள்,
என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.

இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.

“ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா

பேதையின் பேதையார் இல்.”

உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச்


சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற
முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார்
வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை.
ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப்
பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். ”உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய்.


செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே
உனக்கு பாரமாய் போய் விடும்.

பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம்


மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு
எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்”

மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான


குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால்
மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது
என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப்
போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வணாய் ீ
போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது
புத்திசாலித்தனம் என்கிறது கீ தை. அதையும் பற்றில்லாமல் இறைவன்
விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீ தை
வலியுறுத்துகிறது.

முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா


வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ,
பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே
சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம்
என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப்


பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு
செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி
சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி
விடுகிறது. டால்ஸ்டாய் கூறுகிறார். “மக்கள் ஏசுநாதரது தியாகத்தை
வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள்
தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு
கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த
மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும்
ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப்
பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி
விடுவார்களே!”.

எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல.


எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக்
கூறுகிறார். “கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற
காகிதத்திற்கு மதிப்பில்லை”

ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும்
பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன்
மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான்.
ஒருவன் சொன்னான். “கல்லுடைத்துக் கொண்டிருக்கிறேன்”. இரண்டாமவன்
சொன்னான். “வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்”.
மூன்றாமவன் சொன்னான். “கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்”. மூவர்
செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத்
தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான்
போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு
ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?

பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய


செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும்.

ஒவ்வொரு கடமையையும் ’இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான்


சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற பாவனையுடன் செய்து பாருங்கள்.
வாழ்க்கையே தெய்வகமாக
ீ மாறி விடும்.

11

போதிப்பவனே
முன் மாதிரியாக !

செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம


யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும்,
பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து
சொல்கிறார்.

“சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும்


செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.

பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே


இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும்
இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே
இருக்கிறேன்
நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு
வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்”

யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித்


தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது.
எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே
சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய
உண்மை. இக்காலத்தில் எத்தனையோ சீரழிவுகளுக்கு நல்ல முன்மாதிரிகள்
நமக்கிடையே மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க
முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப்
பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும் அதன் படி வாழ்ந்து காட்டி மனதில்
பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?

அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ,


அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லா
விட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து
விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த


ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம்
பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று
கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை,
சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன் தன் விஷயத்திலும்
அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.

அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை


என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில்
போர் புரியும் வரன்
ீ யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு
விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில்
குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின்
வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ண ீர்
காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி
விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.

இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பதை வியாசரின் மகாபாரதம்


முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப்
பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளை எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக்
கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே
இல்லை.

இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது.


சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான்
யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக
நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத்
தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன்
இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில்
குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்கா விட்டால் தேரில் இருப்பவன்
தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட
ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல்
ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம்
சொல்கிறது.

அதே போல தேரில் இருந்து போர் புரியும் வரன்


ீ எந்தப் பக்கம் தேரைத் திருப்ப
வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது.
யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல
சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வரன் ீ
சாரதி தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால்
வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல
வேண்டும்.

இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது


என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும்
அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை
பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன்
கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.

அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார்


என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஸ்டிரத்தில்
உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன்
வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன்
செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல
காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான
விஷயமே.

தன் பக்தனின் சேவையை மெச்சிய விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி


சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது
தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன்.
தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த
போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம்
ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர்
பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை. ”என் பெற்றோரின்
வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத
நிலையில் இருக்கிறேன் இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலை
முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்” என்று கூறிய
புண்டலீகன் விட்டலனும், ருக்மணியும் அழுக்கு நீரில் கால்கள் படாமல் நிற்க
ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.

துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:

“என்ன பைத்தியக்கார அன்பிது

விட்டலனை நிறுத்தி வைத்ததே

என்ன முரட்டுத் துணிவிது


விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே”

தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே


ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும்
பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது.
தனக்கும் அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை
மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?

இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும்


வருகிறது. “என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து
கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை
பளுவாக இல்லை”

பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது


என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக்
கொள்ளலாம். உண்மையில் சுமை எதிர்பார்ப்பாலும், விளைவின் மீ து
வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படும் சுமையே. கடமையை பலன்
எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக
எளிமையாகிறது.

இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

12.

உபதேசம்
தவிர்ப்போம்.

உதாரணமாக
இருப்போம்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

”பார்த்தா, பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல்


பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.

கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது.


அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய
வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.

ஞானி கூட அவனது இயல்பின் படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும்


அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில்
நிர்ப்பந்தப் படுத்துவதால் என்ன பயன்?”
இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன்
உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை
மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த
செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய
மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும்,
தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை
எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த
காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

எல்லோரும் அவரவர் இயல்பின் படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி,


பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி
நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் எத்தனை உயரிய
தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை
அவரிடம் உபதேசிப்பது வண் ீ தான். அறிவுக்கெட்டும் போதே அதை
நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீ ரதப்
பிரயத்தனமாக இருக்கிறது என்பதை ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம்
சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது
அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த
வழியின் படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ
தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு
போகும் அவன் வாழ்க்கை ஓட்டத்தை, அறிந்தவன் அவனுக்குக் குழப்பத்தை
ஏற்படுத்தி முடக்கி விடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தி விட


முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும்
உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே
உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை.
நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன்
உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான்.
எனவே கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே
விளைவிக்கும்.

அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டு விடுவதா? அறிவுக்கு


எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால்
அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது? இந்தக் கேள்விக்குப்
பதிலாக பகவான் கூறுகிறார்- நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி
அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல
சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன்
இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே
புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி
புரிய வை என்கிறார்.
இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து
கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிக்கையாளர் இருவர் கண்
முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக் காட்டாகச்
சொல்லலாம். மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது
அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில்
அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில்
ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வரர்கள் ீ ஆங்கிலேய சிப்பாய்களை
ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வரர்களின்
ீ ஒரு குழு
முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து
காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வரன்
ீ கூட திருப்பி அந்த
சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வழ்கிறது.
ீ அடுத்த
குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே
அடிபட்டு வழ்கிறது.
ீ அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப
ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு
முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல்
விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!

இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப்


பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக
தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த
மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை
பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும்
எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வக ீ முறையில் போராடிய
விதத்தை நேரில் கண்டிரா விட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப
முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.

வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த வரர்கள் ீ நிலையில் நம்மை


இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள்
வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும்
முற்படாத அத்தனை போராட்ட வரர்களும் ீ மகாத்மா காந்தியின்
சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி
உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில்
சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு
உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப்
புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற
முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல்
அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ
நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.

எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து


கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது.
இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய
உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும்
பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப்
பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.
அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால்
உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட
இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம்.
என்னால் தானே இப்படி முடிந்தது என்கிற எண்ணம் வந்து விட்டால் பின்
கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். ’நான்’ என்கிற அகங்காரத்தை
மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி
விடும். எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

”இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும்


நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக
நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும் அதில் தன்


செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே எல்லாம் இயற்கையின்
இயக்கமே என்று பற்றில்லாமல் இருப்பான்.”

எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன.


எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது
கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில்
இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு
நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம்.
எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும்
வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப்
பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் “எல்லாம் அவன்
செயல்” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.

அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார்


ஸ்ரீகிருஷ்ணர்: ”உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி
உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு.
பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் “எனது” என்ற உணர்வின்றியும் மன
வேதனையை உதறித் தள்ளி போர் செய்”

செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக்


கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த
கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். செய்கின்ற
ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும்
தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப்
போன்றவன் ஆகிறான்.

13.
பாவம் செய்யத்
தூண்டுவது எது ?

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான்.
நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும்
என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று
வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக
அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீ றி அவனைத் தீய
செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன்
மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த


கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக
ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத்
தூண்டுவது எது?”

இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின்


மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற
உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும்
குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான்
இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று
வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக
அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.

“அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது


எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது
தான் என்பதை அறிந்து கொள்.

புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால்


கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம்
மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு


அன்றாட விரோதியாக உள்ளது.

புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை


மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”
காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு
நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான
அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத்
தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய
யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று
முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச்


செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும்
கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான
விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக


இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது
தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன்
அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின்
ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால்


கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்
பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள்
கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச
குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை


அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது
ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம்
அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை.


இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக்
குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை
மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான


உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும்
தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது.
இடையிடயே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ
குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு
அவ்வப்போது ஒரு திரையே.
அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான
உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால்
உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும்,
தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும்
மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம்.


இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை
ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வசிீ புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும்


தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில்
கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில்
தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ
குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று
கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச
குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி
அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய
முடியும்.

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன்


ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக
வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை
விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி


வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச்
செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும்
ஆட்கொள்கின்றன. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த
சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும்
ஆட்கொள்கின்றன. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய
முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகின்றன.

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீ ள்வது? அதற்கு


ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும்


அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.
புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது.
மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும்
ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை


அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய
விரோதியை அழித்திடுவாயாக!”

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக


இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார்
ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன.


புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும்,
அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய


நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது
முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும்
தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால்
அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால்
மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும்
கிடைக்கும்.

எனவே ஆசை புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு


நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த
விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும்
அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.

14.

தர்மம்
நிலைநாட்டப்படும்
விதம்

இது வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால்


உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு
பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும்
ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல அர்ஜுனனிற்கு
சந்தேகம் வருகிறது. “நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே
உபதேசித்திருக்க முடியும்” என்று கேட்கிறான்.

கீ தையின் மிகப் பெரிய சிறப்பு ’நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ


கேட்டுக் கொண்டே வா” என்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக
பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில்
அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக்
கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன்
உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே
சொல்லவும் செய்கிறான். எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக
எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது
போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணரிடம் எழுப்பவில்லை.

ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே


கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர்
பதிலளிக்கிறார்.

”அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும்


அப்படியே. அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய
மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும்


ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை
வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.

பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம்


தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக்
கொள்கிறேன்.

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை


நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.”

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத


காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல.
எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை
நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு
இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனிற்கு அவை குறித்த எந்த
நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.
கீ ழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன்
எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம
ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள்
அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான ’நான்’ என்பதை அவன்
உணரும் முன் எத்தனையோ பொய்யான ’நான்’களை அந்தப் பிறவிகளில்
பாவித்து பின் அதெல்லாம் ‘நான்’ அல்ல என்று தெளிவடைய வேண்டி
இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள்
அனுபவிக்க மீ தி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி
தேவைப்படுகிறது.

இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன்


இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும்
அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால்
இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி
எழுகிறது. அதற்குப் பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்திற்குத் தாழ்வு
ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக்
கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு
யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகக் கூறுகிறார்.

தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால்


இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட-தர்மத்தைக்
கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும்
நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன்
தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும்
தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து
அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல்
உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.

அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும்.


அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும்
இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன்
அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி
கர்வத்துடன் அதர்மம் அத்துமீ ற ஆரம்பிக்கும் போது ’நல்லதிற்குக்
காலமில்லை’ என்ற விரக்தியையும் பார்ப்பவர்கள் மனதில்
ஏற்படுத்துவதுண்டு.

அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன்


தோன்றுவதாக கீ தை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன்
தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர்
மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.
அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை
காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும்
அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீ றிய சக்தி அவர்களை
உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே
இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின்


பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது.
ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை
விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம்
எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து
விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட
அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை
நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று
எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக்
கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு
இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ
உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற
வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால


இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி
மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும்
காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புறையோடிப் போயிருக்கையில்,
ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு
அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான
மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின்
மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி
ஏற்படுகிறது.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

”அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய


செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை
விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே
அடைந்து விடுவான்.”

இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின்


செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள
எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும்
கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு
மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து
விடுவான்.
”பிறவாமை வேண்டும்” என்று காரைக்கால் அம்மையாரும், ”இருப்பையூர்
வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா” என்று
பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப்
பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட
ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின்
லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
கூறியிருக்கிறார்.

15.

நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன் !

அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால்


அந்த அளவு சூட்சும அறிவு இல்லா விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி
தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர்
தொடர்ந்து சொல்கிறார்.

”விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே


அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன்
ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.”

பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ,


செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை
இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக
மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை
வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடா விட்டால் ஏதாவது பிரச்னையை
உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற
பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி
இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின்
காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.

ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக


இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான
இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட
வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம்
இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல
தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும்,
செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவனமானீ நிலையில்
இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி
இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?
இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி
விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும்
சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது
மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது.


”மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான்
அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும்
மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.”

இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி


இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற
நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக,
சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும்
காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல
விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது
ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று
உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால்
எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய
வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.

இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவரவர் தமதம தறிவறி வகைவகை


அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.

இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம்


மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம்
ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான
பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது,
வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும்
ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில்
குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம்
பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை
அனுக்கிரகிக்கிறார்.

இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும்,


கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை
ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை.
அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை.
ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக்
காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க
வேண்டும், இந்த வழி தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று
மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள்
இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப


நாயனாரும் இறைவைனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக்
கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும்,
கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில்
என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட
முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீ தையில்
சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான்
சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கே
அல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். “மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள்


கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த
மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.”

முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல்


என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று
பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும்
வேலையும் நடக்கிறது. ’நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச்
செய்கிறேன்’ என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும்
வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை
அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீ ழ்மட்டம் என்றெதுவும் இல்லை.
எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.

ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக்


காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். ’அந்த நாட்டை
நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த
செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...” என்று இடைவிடாமல்
கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். ”நானே


தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த
சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை
கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக
தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல”
ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான்.
பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர்
நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின்
பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம்
கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி
வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச்


சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல்
செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட
விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி
வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீ க
எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன்
கிடைப்பதாகச் சொல்கிறார்.

ஏன் லௌகீ க செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா?


கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே
இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக்
கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று
பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால்
நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான
அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான்
நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை
உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன்
சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான்
விரைவில் பலன் தருகிறார்.

இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத்


தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க
வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல. கடற்கரையில்
கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும்
குழந்தைகளைப் பார்த்து “இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா
குப்பைகளைச் சேர்க்காதீர்கள்” என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள்
கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வட்டில்
ீ இருந்து எடுத்து
வசிப்பாருங்கள்.
ீ ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட
பிறகு அதைத் தானாகவே வெளியே வசி ீ விடுவார்கள். கிளிஞ்சல்கள்
விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள்
விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று
விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.

மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது.


அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால்
பொருளல்லாத மற்ற உயர்ந்த உணர்வுகளையும் அனுபவங்களையும்
மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக்
கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு
சொற்பமே.

16.

கர்மம்
விகர்மம்
அகர்மம்

ஞான யோகத்தில் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

”செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை. அவற்றின் பலன்களிலும் எனக்குப்


பற்றில்லை. இவ்விதம் என்னை யார் அறிகிறானோ அவன் என்றும்
செயல்களால் கட்டுண்டிருப்பதில்லை.”

பலனில் பற்று வைக்காமல் செயல்களைச் செய்யச் சொன்னதன் காரணமே


அந்த செயல்களால் நாம் கட்டுண்டு இருந்து விடக்கூடாது என்பதால் தான்.
அதை விரிவாகவே கர்மயோகத்தில் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு எப்படி
முன்னுதாரணமாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் பார்த்தோம். போதித்த
படியே இருந்து காட்டிய அவர் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்
வழியை அறிந்து உணர்ந்தவர்களும் செயல்களால் கட்டுண்டு இருப்பதில்லை
என்கிறார்.

உடல், மனம், அறிவு என்ற அடையாளங்களுக்குள் புகுந்து கொண்டு விடும்


போது தான் நாம் இன்ப துன்ப அலைகளில் அலைக்கழிக்கப்படுகிறோம்.
அளவில்லாத, அழிவில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத ஆன்மாவாக நாம்
தெளிவு பெற்று நம்மைக் காண்கையில் எந்த நிலையும், எந்த செயலும்
நம்மைப் பாதிப்பதில்லை.

தெளிவான நீரிலும், அழுக்கான நீரிலும், அலைபாயும் நீரிலும் சூரியன்


பிரதிபலிக்கிறது என்றாலும், பிரதிபலிப்புகள் ஒன்று போலவே
இருப்பதில்லை. தெளிவான நீரில் தெளிவாகவே சூரியன் தெரிகிறது. சேற்று
நீரிலோ சூரியன் பிம்பம் மங்கித் தெரிகிறது. அலைபாயும் நீரிலோ சூரியனும்
அலைபாய்வது போலத் தெரிகிறது. ஆனால் இந்தப் பிரதிபலிப்புகள் நீரின்
தன்மைக்கேற்ப மாறுகிறதே ஒழிய சூரியனின் தன்மை எந்த விதத்திலும்
மாறுவதில்லை.
நீருக்கு சூரியனின் தன்மையை மாற்றுகிற சக்தி அணுவளவும் கிடையாது.

அதே போல ஆத்மாவும் குடிபுகும் மனிதர்களின் உடல், மனம், அறிவுக்கேற்ப


வெளிப்படும் தன்மை மாறி மாறித் தெரிகிறதே ஒழிய அதன் உண்மைத்
தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை. தன் உண்மைத் தன்மைக்கு
எதனாலும், எப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்பதை என்னேரமும்
நினைவில் வைத்திருக்கும் மனிதனை எது தான் கட்டுப்படுத்தவோ,
பாதிக்கவோ முடியும்?

அடுத்ததாக கர்மயோகத்திலும் சொல்லாத கர்மயோகத்தின் மிகப்பெரிய


சூட்சுமத்தை இந்த ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆழமாக விளக்குகிறார்.

”எது கர்மம்? எது கர்மமல்ல? இதை அறிந்து கொள்வதில் அறிஞர்களும்


குழப்பமடைந்து விடுகிறார்கள். அதனால் கர்மத்தை உனக்கு விளக்கப்
போகிறேன். இதை அறிந்து விட்டால் நீ இந்தப் பிறவியின் தீமைகளில் இருந்து
விடுபடுவாய்.

நீ உண்மையான கர்மத்தைப் பற்றி அறிய வேண்டும். அதே போல


விகர்மத்தைப் பற்றியும், அகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும்.
ஏனென்றால் கர்ம மார்க்கம் ஆழமானது. அதை சரியாகப் புரிந்து கொள்வது
சுலபமல்ல.

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார்


காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச்
செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்.

யாருடைய ஒவ்வொரு கர்மமும் ஆசையிலிருந்தும் சுயநல நோக்கத்தில்


இருந்தும் விடுபட்டிருக்கிறதோ, யார் தன் கர்மங்கள் அனைத்தையும் ஞானம்
என்ற தீயில் எரித்து விட்டானோ, அத்தகைய ஒருவனைத் தான் பண்டிதன்
என்று விவேகிகள் கூறுகிறார்கள்” .

இந்த கர்மம், விகர்மம், அகர்மம் என்ற சொற்களில் மனிதனின் வாழ்க்கையே


அடங்கி விடுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் செய்ய வேண்டிய
செயல்கள் செய்வது கர்மம். செய்யக் கூடாத செயல்கள் செய்வது விகர்மம்.
செயலற்று இருப்பது அகர்மம். இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் என்ன
இருக்கிறது, இதைப் புரிந்து கொள்வது சுலபமல்ல என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறக்
காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம்.

இந்த மூன்றையும் பார்வையால் அறிந்து கொள்வது கிட்டத்தட்ட முடியாத


காரியமே. ஏனென்றால் பார்வைக்கு ஒன்று இன்னொன்றாகத் தெரிய
வாய்ப்புகள் அதிகம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவனைப்
பார்த்தால் அவன் செயல் புரிகிறான், அதனால் அது கர்மம் என்று
தோன்றலாம். ஆனால் அவன் செய்வது அவனுக்குத் தேவையும் பயனும்
அற்ற வேலையாக இருந்தால் அது உண்மையில் விகர்மம். அதனால் எந்த
மாற்றமும் ஏற்படாமல் முன்னிருந்த நிலைமையே தொடர்ந்து
இருக்குமானால் அது செயல் புரிந்ததே அல்ல என்பதால் அது அகர்மம்.

அதே போல் ஒருவன் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் என்று


வைத்துக் கொள்வோம். பார்வைக்கு அவன் ஒன்றுமே செய்யாமல் சும்மா
இருக்கிறான், எனவே அது அகர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன்
மனதில் ஓராயிரம் எண்ணங்கள் ஓடுமானால் அது அகர்மம் அல்ல. மனதில்
ஏற்படும் எண்ணங்கள் அவனை நல்வழிப்படுத்துவதாகவும், செய்ய வேண்டிய
செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் இருக்குமானால் அது கர்மமே.
அந்த எண்ணங்கள் பயன் இல்லாதவையாகவும், அவனுக்குத் தேவை
இல்லாதவையாகவும் இருந்தால் அது விகர்மமே.

உடலால் நடக்கும் செயல்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. மனதிலும்,


அறிவிலும் கர்மம் அல்லது விகர்மம் நடந்து கொண்டே இருக்கின்றது. எந்த
அளவு மனிதன் கர்மத்தை சிரத்தையுடன் செய்து, விகர்மத்தை
தவிர்க்கிறானோ அந்த அளவு நன்மை அடைகிறான். அதற்கு எதிர்மாறாக
இருக்கும் போதோ தீமையை சம்பாதிக்கிறான்.

இதனைத் திருவள்ளுவர் ரத்தினச்சுருக்கமாகச் சொல்வார்:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க


செய்யாமையானும் கெடும்.

(ஒருவன் செய்யத்தகாத செயலைச் செய்தாலும் கெடுவான். செய்ய வேண்டிய


செயலைச் செய்யா விட்டாலும் கெடுவான்.)

உண்மையில் செயலற்று இருக்கும் அகர்மம் எளிதில் சாத்தியமல்ல. சும்மா


இருப்பது சுகம் என்று பலருக்கும் தோன்றினாலும் அது தான் மிகவும்
கஷ்டமான காரியம். பலருக்கும் அசையாமல் இருப்பதே முடியாத காரியம்.
கை கால்களையாவது ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். அசையாமல் இருக்க
முடிந்தாலும் மனதினுள் நடக்கும் செயல்களோ ஓராயிரம் கோடி. ஆழ்ந்த
உறக்க நிலையில் தான் ஓரளவாவது அகர்மம் அவர்களுக்கு சாத்தியமாகிறது.
முழுமையாக அகர்மம் சாத்தியமாவது என்பதோ மரணத்தில் தான்.

எனவே தோற்றத்தை வைத்து செயல் செயலின்மையை சாதாரணமாக யாரும்


கண்டுபிடித்து விட முடியாது. செயலில் செயலின்மை இருக்கலாம்,
செயலின்மையில் செயலும் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க
ஞானியாலேயே முடியும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
கரையிலிருந்து பார்க்கையில் தூரத்தில் கப்பல் சென்று கொண்டிருந்தாலும்
அது அப்படியே நிற்பது போலத் தான் தோன்றும். இது செயல்
செயலின்மையாகத் தெரிவது. அதே போல ஆழ்ந்த சிந்தனையில் ஒரு
ஞானியோ, விஞ்ஞானியோ இருப்பது செயலற்ற நிலை போலத்
தோன்றினாலும் அது வரியமுள்ள
ீ செயல்நிலை என்றே சொல்ல வேண்டும்.
பின்னால் வரும் பல தலைமுறைகள் வாழ்க்கை முறைகள் அவர்கள்
சிந்தனைகளால் மாறக்கூடும்.

(தியானத்தின் போது யோகிகளும், ஆராய்ச்சிகளின் போது ஐன்ஸ்டீன் போன்ற


விஞ்ஞானிகளும் வேகம் குறைந்த, அதிக செயல்பாடுகள் இல்லாத ஆல்ஃபா
மன அலைகளில் இருப்பதை ஆழ்மனதின் அற்புத சக்திகள் ஆகும்.)

ரயிலில் பயணம் செய்கையில் பார்க்கின்ற மரம், செடி, கொடி எல்லாம்


வேகமாக நம்மைக் கடந்து செல்வது போலத் தோன்றும். ஆனால் அவை
எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியே தானே இருக்கின்றன. இது தான்
செயலின்மை செயலாகத் தெரிவது. அதே போல சில மனிதர்களின்
சுறுசுறுப்பும் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் ஒன்றை செய்து அதற்கு
எதிர்மாறாக இன்னொன்றை செய்து விளைவைப் பூஜ்ஜியமாக்கி விடுவார்கள்.
பார்வைக்கு நிறைய செயல்கள் நடப்பது போலத் தோன்றினாலும்
அத்தனையும் வண் ீ தான்.

எனவே தான் எதையும் பார்வைக்குத் தெரிகிற மாதிரி எடுத்துக் கொள்ளாமல்


ஒரு ஞானியின் பார்வையில் காணச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நாமும் நிறைய செயல்கள் புரிகிறோம். அப்படி செயல்புரிந்து பல


சந்தர்ப்பங்களில் களைத்தும் போகிறோம். அவையெல்லாம் பெரிய
விஷயங்கள் என்று எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ஸ்ரீகிருஷ்ணரின் இந்த
வகைப்படுத்தலில் எந்த வகையில் வருகிறது என்பதை நாம் சிந்தித்து அறிய
வேண்டும். ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ள வேண்டிய
சுயபரிசோதனை இது. அப்படி செய்தால் தான் சரியான பாதையில் தான் நம்
வாழ்க்கை முன்னோக்கிப் போகிறதா என்பதை நம்மால் உணர முடியும்.
அவ்வப்போது இப்படிப் பார்க்கா விட்டால் பாதை மாறி நாம் சற்றும்
நினைத்திராத, நம் இலக்கில்லாத வேறு ஏதோ ஒரு இடத்திற்குப் போய் சேர
வேண்டி இருக்கும்.
மறுபடியும் நம் இலக்கை அடைய திரும்பவும் அதே அளவு தூரத்தைக் கடக்க
வேண்டும் என்பதால் அவ்வப்போது நம் செயல்களை சோதித்துப் பார்ப்பது
தேவையில்லாத அலைச்சலையும், அதனுடன் சேர்ந்து வரும்
பிரச்சினைகளையும் தவிர்க்கும்.

17.

கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு !


செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு
செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய
முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம்,
விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர்,
கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை
விளக்க ஆரம்பிக்கிறார்.

”கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன்


இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும்,
கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.

ஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து


தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத்
தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன்
செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.

தானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு,


போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி
தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும்
பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.

செயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால்


பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன்
விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன
அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது
முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத காரியமாகவும்
நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

மனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது


உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான,
பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை
மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான
மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது
குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும்.
அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே
அவனை அமைதியடைய விடாது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ


என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன
நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான
தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான
சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க
வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோ’விற்கு அதிக சிரத்தை இருக்கும்.
யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து
விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும்.
யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத்
தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும்.
செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும்,
வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வணாக்கி ீ
விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும்
அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.

ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவதம் ீ மனம் லயிக்க வேண்டும்.
அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல்
குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப்
பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி
இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற
வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவதம் ீ இல்லை என்று
பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவதத்தில்
ீ இருந்து எடுக்கப்பட்டு சில
சதவதங்கள்
ீ செயலிற்கு உதவாத எண்ணங்களில் வணாகின்றன
ீ என்று
அர்த்தம்.

ப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட


வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும்,
வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும்
எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு
இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு.
அப்போது தான் உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய
வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும்”. (இந்தக் கருத்தைச்
சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய
காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு
செயல்வரனின்
ீ கருத்து இது என்பதை நினைவில் கொண்டால்
ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)

அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது.


எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும்
கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை.
முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா
சிற்பங்களையும், ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும் உருவாக்கியவர்கள்
தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப்
பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட
அவர்களிடமில்லை.

அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள்


எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில்
இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர்
கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.

”அர்ஜுனா! நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து


சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா
கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.

ஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி


சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை
அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.

ஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான்.


சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை,
சுகமும் இல்லை.

இந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால்


சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில்
நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.

பரதபுத்திரனே! எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள


உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு
கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு!”

உண்மையான ’நான்’ என்பது அழிவில்லாத, தனிப்பட்ட


அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம்.
அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக
ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது
புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு
நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே
சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக
மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது
சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும்
தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க
முடியும்?

முழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க


வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில்
கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ
அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே
விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை,
மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை
அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.
எதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த
பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க
முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன்
சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும்.
இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்


தீரா இடும்பை தரும்”

அறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை


முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம்.
ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீ றிய
ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட
முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது
தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து
பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக்
கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள்,
ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும்
கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும்
மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு
வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.

ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?

இத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது.

18.

உண்மையான
துறவி யார் ?

கர்ம யோகத்தைப் பற்றி விவரித்த ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தைத் துறந்த


ஞானத்தைப் பற்றியும் பெருமையாகவும், உயர்வாகவும் சொல்லக் கேட்ட
அர்ஜுனனின் இந்தக் கேள்வியோடு பகவத் கீ தையின் ஐந்தாவது
அத்தியாயமான கர்மசன்னியாச யோகம் ஆரம்பிக்கிறது.

"”கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். அதோடு


கர்மயோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இந்த இரண்டில் எது உயர்ந்தது
என்று முடிவாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் எனக்கு சொல்”
உண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு
முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட
மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித
இயல்பாக இருக்கிறது. செயல் சிறந்தது என்றால் செயலைத் துறந்த ஞானம்
சிறந்ததாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு இயற்கையாக
வர இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாகச் சொல்லுமாறு பொறுமை
இழந்து ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்கிறான்.

பகவத்கீ தை குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனனிற்கு மட்டும் சொல்லப்பட்ட


வாழ்க்கைத் தத்துவம் அல்ல. தனக்குள்ளே ஒரு குருக்‌ ஷேத்திரத்தை
அவ்வப்போது சந்தித்து குழப்பம் அடையும் ஒவ்வொரு மனிதனுக்கும்
சொல்லப்பட்டது. அதனாலேயே உண்மையின் பல பரிமாணங்களை
அறிவுபூர்வமாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்கும் சிரமத்தை
மேற்கொள்கிறார். இரண்டில் ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன்
கேட்டதற்கு இரண்டுமே மோட்ச நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்வன
என்றாலும் இரண்டில் கர்ம யோகமே சிறந்தது என்று சொன்னதோடு
இரண்டையுமே விளக்கவும் முற்படுகிறார். “எவனொருவன் வெறுப்பு, விருப்பு
இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய
வேண்டும். தோள் வலிமை படைத்தவனே! அத்தகையவன் இரட்டை
நிலைகளை நீக்கியவனாக இருப்பதால் எல்லாத் தளைகளில் இருந்தும்
சுகமாக விடுபட்டவனாக இருக்கிறான். ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு
என்று அறியாதவர்கள் சொல்வார்கள். நன்றாக அறிந்தவர்கள் அவ்வாறு
சொல்ல மாட்டார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக்
கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.

"புஜ பலமிக்கவனே !
கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும்
கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக
பிரம்மத்தை அடைகிறான்”

இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக்


கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம்
துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய
அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச்
சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது. துறவு என்பது
மனதில் உண்மையாக நிகழ வேண்டும். அப்படி நிகழாத வரை அந்தத் துறவுத்
தோற்றம் கேலிக் கூத்தாகவே இருக்கும். திருவள்ளுவர் மிக அழகாகச்
சொல்கிறார்.

"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்”


வஞ்சனை பொருந்திய மனத்தைக் கொண்டவனது பொய் ஒழுக்கத்தைக்
கண்டு அவனுள்ளே இருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே ஏளனமாக
சிரித்துக் கொள்ளும்.

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை,


வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம்
தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு என்கிறார்
ஸ்ரீகிருஷ்ணர்.

இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து


விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை
ஏமாறுகிறான். ஆனால் அது முடியாத விஷயம் என்பதை புத்தியுள்ளவனால்
சீக்கிரமே கண்டு பிடித்து விட முடியும். விருப்பு என்று ஒன்றை வைத்துக்
கொண்டால் அது கிடைக்காத போதோ, அதற்கு எதிர்மாறானது கிடைக்கின்ற
போதோ வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று
சந்தோஷப்பட்டுக் கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம்
ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால்
இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது. இப்படி இந்த
இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து
இன்னொன்று பிரிக்க முடியாதது. ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு சுகம்
காண ஆசைப்படுவது இயற்கைக்கு
எதிர்மாறான ஒன்று. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின்
பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான
துறவு. இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை. துறவு
அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும்
சுகானுபவம். இதில் புறத் தோற்றத்தை மட்டும் உருவாக்கி உள்ளுக்குள்
எதிர்மாறாக இருப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களை ஏமாற்றுவதை விட
அதிகமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

திருவள்ளுவர் கூறுவது போல அவர்களுக்கு உள்ளே ஆட்சி செய்யும்


ஐம்புலன்களும் “நீ எங்களுக்கு அடிமை” என்று எள்ளி நகையாடும் பரிதாப
நிலையில் தங்கி இருந்து விடுகிறார்கள். உண்மையான துறவிக்கு பணம், புகழ்,
பெருமை, அங்கீ காரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை
இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது
புறத்தோற்றம் கண்டு ஏமாறும் மனிதர்களும் கீ தை, திருக்குறள் போன்ற உயர்
நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப்
பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது போல செயல்படாமல், செயல்களால்


பரீட்சிக்கப்படாமல் யாரும் ஞானத்தை அடைந்து விட முடியாது. மேலும்
கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத்
தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான
ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது.
அதே போல ஒரு கர்ம யோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.
இருபத்தி ஒன்பது வயது வரை அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தர் இல்லற
வாழ்வைத் துறந்து ஆறு வருட ஞானத் தேடலின் முடிவில் தன் 35 வயதில்
ஞானோதயம் பெற்றார். அவர் தனக்குக் கிட்டிய ஞானத்தில் அமைதியடைந்து
அந்த உயர் உணர்வு நிலையில் அமைதியாக மீ தி வாழ்க்கையைக்
கழித்திருக்க முடியும். ஆனால் தான் அடைந்த ஞானத்தை, வாழ்க்கையின்
பிரச்சினைகளுக்குத் தான் கண்ட விடையை, மற்றவர்களிடம் பகிர்ந்து
கொள்ளத் துடித்தது அவர் கருணை உள்ளம்.
அரசர்கள், பிரபுக்கள் போன்றோருக்கு மட்டுமல்லாமல் பிச்சைக்காரர்கள்,
தாழ்த்தப்பட்டவர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள்
போன்றவர்களுக்கும் கூட உப்தேசித்து அவர்களுக்கு உயர் வழியைக்
காட்டினார். உடலை விட்டுப் பிரிந்த 80 ஆவது வயது வரை தன்
போதனைகளைத் தொடர்ந்து உலகிற்குத் தந்து கர்ம யோகியாகவே அவர்
வாழ்ந்தார். அதே போல ஞானத்தைத் தேடி திருவண்ணாமலைக்கு
இளமையிலேயே வந்த ரமண மகரிஷி கடைசி வரை ஞான நிலையிலேயே
தான் அதிகம் இருந்தார் என்றாலும் அவரால் ஈர்க்கப்பட்டு ஞான
வேட்கையால் தேடி வந்த பக்தர்களை அவரது நிர்விகல்ப சமாதிக்குத்
தொந்திரவாக எண்ணி துரத்தி விடவோ, அங்கிருந்து ஓடி விடவோ இல்லை.
பலருக்கு ஞான விளக்காக இருந்து வாழ்ந்து மறைந்தார். ஞான உபதேசம்
தந்தது மட்டுமல்லாமல் ரமணாஸ்ரமத்தில் காய்கறிகள் நறுக்கும்
வேலைகளைக் கூட தானே ஏற்றுக் கொண்டு செய்யும் கர்ம யோகியாக அவர்
வாழ்ந்தார். இவர்கள் தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லை.
தாங்கள் பெற்ற ஞானத்தை விலை பேசி மக்களிடம் விற்க வில்லை. பகட்டு
வாழ்க்கை வாழவில்லை. ஞானமடைந்து விட்டதால் தாங்கள் உயர்ந்தவர்கள்
என்றும் இனி எந்த வேலையும் செய்யத் தேவையற்றவர்கள் என்றும் காட்டிக்
கொள்ளவில்லை. செயல்படும் அவசியத்தை உணர்ந்த போது அதிலிருந்து
தப்பிக்க முனையவில்லை. அதே போல ஜனகர் போன்ற கர்மயோகிகளும் உலக
வாழ்க்கையில் தங்கள் சுதர்மத்தை முறையாகச் சிறப்பாகச் செய்தார்கள்.
ஆனால் மனதளவில் தாமரை இலையில் தண்ண ீர் போல பற்றறவர்களாகவே
வாழ்ந்தார்கள். கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையில்லாமல் நிறைவாகச்
செய்வதும் தன் பகுதி முடிவடையும் போது எந்த வித வருத்தமுமில்லாமல்
மேடையில் இருந்து விலகத் தயாராக இருக்கும் விஷயத்தில் ஞானிகளாகவே
இருந்தார்கள். இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை
ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய
முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால்
உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்.

19

இயக்குவது
இறைவனா ?
ஈகோவா ?

கர்மம் இன்னொரு விதத்திலும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெற்ற


ஞானம் உண்மையானது தானா என்று பரிட்சித்துப் பார்க்க உதவும்
உரைகல்லாகவும் கர்மம் விளங்குகிறது. செயல் புரியும் போதுதான், தான்
பெற்றிருப்பது ஞானமா இல்லை வெறும் பிரமையா என்று புரியும்.

ஆசிரமத்திற்கு சென்று தியானம் கற்றுக் கொண்டு அந்த அமைதியான


சூழ்நிலையில் தங்கி இருக்கும் போது மனம் அமைதி அடையலாம். அதை
வைத்து ஞானம் பெற்று விட்டதாக ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால்
வெளியுலகிற்கு வந்து செயல்படும் போது தான் வெளியுலக ஆரவாரத்திலும்,
நிர்ப்பந்தங்களிலும் கூட அந்த அமைதி தங்குகிறதா, இல்லை காணாமல்
போகிறதா என்பது புரியும். இமயமலையில் இயற்கையின் பேரமைதியில்
தியானம் கைகூடுவது பெரிய விஷயமல்ல. அந்த தியானம் ஒரு
குழந்தையின் அழு குரலில் கலைந்து மனதில் எரிச்சல் கிளம்பினால் தியான
மார்க்கத்தில் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று
அர்த்தம்.

சத்சங்கத்திலும், எதிர்ப்புகள் அற்ற சூழலிலும் மனம் அமைதியாக இருப்பது


பெரிய விஷயமல்ல. கோபத்தோடு ஒருவன் வந்து திட்டினாலோ,
சிறுமைப்படுத்தினாலோ மனம் கொதிக்க ஆரம்பித்தால் பெற்ற ஞானம்
இன்னும் போதவில்லை என்று அர்த்தம். இது போல கர்மம் புரிகையில் தான்,
வெளியுலக வாழ்க்கையில் பங்கு கொள்ளும் போது தான், ஞானம்
பரிட்சிக்கப்படுகிறது. அதில் குறைபாடு இருந்தால் அது சுட்டிக்
காட்டப்படுகிறது. எனவே இந்த வகையிலும் ஞான மார்க்கத்திற்கு கர்மம்
உதவுகின்றது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

”கர்மயோகத்தைக் கடைபிடித்து ஆத்மசுத்தியை அடைந்து மனத்தையும், மற்ற


புலன்களையும் வெற்றி கொண்டு அனைத்து உயிர்களிலும் உள்ள
ஆத்மாவைத் தன் ஆத்மாக உணர்கிறவன் கர்மங்களைச் செய்தாலும்
அவைகளில் ஒட்டுவதில்லை. உண்மையை உணர்ந்த யோகி பார்த்தாலும்,
கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், சாப்பிட்டாலும், நடந்தாலும்,
தூங்கினாலும், மூச்சு விட்டாலும் புலன்கள்
தங்களுக்குரிய விஷயங்களில் இருக்கின்றன என்பதையும், செயல்புரிவது
தானல்ல என்பதையும் அறிவான்.”

கர்மயோகத்தினால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மையாகும் போது


ஆத்ம ஞானம் சுலபமாகக் கைகூடும். புலன்கள் ராஜாங்கம் செய்யாமல்
பார்த்துக் கொள்வது எளிதாகும். ”நான்” என்ற ஈகோ அழிந்து போகும். அதன்
பின் அனைத்து உயிர்களிலும் தன்னிடம் உள்ள ஆத்மாவையே ஒருவனால்
காண முடியும். இது தான் ஞானம்.

இன்று “நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்ளும் துறவிகள் அதிகமாகி


விட்டார்கள். சிலர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் கிட்டத்தட்ட கடவுள்
போலவே காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் கடவுள் தன்மை
எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அது தன்னிடம் மட்டும் உள்ள
தனித்தன்மை என்று நினைப்பது அஞ்ஞானமே.
“நான் கடவுள்” என்று சொல்லிக் கொள்பவர்களில் 99% பேர் அந்த இரு
சொற்களில் கடவுளைக் காட்டிலும் “நானி’ற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கும் அஞ்ஞானிகளே. தன்னிடம் உள்ள கடவுளை அடுத்தவனிடம்
காண முடியாத அஞ்ஞானக் குருடர்களே. சாதாரண மனிதர்களிடம் உள்ள
ஈகோவை விட, அறியாமையை விட இவர்களின் ஈகோவும், அறியாமையும்
பல மடங்கானவை என்றே சொல்ல வேண்டும்.

உண்மையான கர்மயோகி ஞானத்தையும் இயல்பாகவே பெற்று விடுவதால்


அவன் செய்யும் செயல்களில் “நான்” என்ற அகந்தை இருப்பதில்லை. செயல்கள்
செய்யும் போது அதைத் தான் செய்வதாக நினைப்பதில்லை. செயல்களில்
“நான்” பின்னிப் பிணைந்திருக்காததால் அதன் விளைவுகளாலும் அவன்
அலைக்கழிக்கப்படுவதில்லை. எல்லாம் ”அவன் செயல்” என்று
வார்த்தைகளால் மட்டுமல்லாமல் நிஜமாகவே உணர்ந்து அமைதியாக
அவனால் வாழ முடிகிறது.

கனவில் வரும் நிகழ்வுகள் பாதிப்பது விழிப்படைந்தவுடன் நின்று


விடுகின்றது. அதே போல அறியாமை உறக்கத்திலிருந்து விழிப்படைந்த
நிலையில் உள்ளவனை அவன் பங்கு பெறும் உலகவாழ்க்கை பாதிப்பது நின்று
விடுகிறது.

கர்மயோகத்தின் சிறப்பைச் சொல்லி சலிக்காத ஸ்ரீகிருஷ்ணர் மேலும்


சொல்கிறார்.

”யார் தனது கர்மங்களை எல்லாம் பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்து, பற்றின்றி


செயல் புரிகிறானோ அவன் தாமரை இலையிலுள்ள தண்ண ீர் போல
பாவத்தால் களங்கப்படுவதில்லை. சரீரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும்,
புலன்களாலும், பற்றுதலில்லாமல் ஆத்ம சுத்திக்காகவே யோகிகள் கர்மத்தை
மேற்கொள்கிறார்கள். கர்மயோகி கர்மபலனைத் துறந்து நிலையான சாந்தியை
அடைகிறான். அப்படி இல்லாதவன் ஆசையால் தூண்டப்பட்டு பலனில் பற்று
கொண்டு கர்மங்களால் கட்டுப்படுகிறான்.”

ஒரு நீர்நிலையில் உள்ள நீரின் அளவு எந்த அளவில் இருந்தாலும் கூட அந்த
நீரால் தாமரை இலையை ஈரப்படுத்தி விட முடிவதில்லை. தண்ணீரிலேயே
இருந்தாலும் அதில் பாதிக்கப்படாமல் இருக்கும் தாமரை
இலை போல உலக வாழ்க்கையிலேயே இருந்தாலும் கூட கர்மயோகி
பாதிக்கப்படுவதில்லை. காரணம் அவன் எந்த செயலையும் தன் தனிப்பட்ட லாப
நஷ்டக் கணக்கை வைத்துக் கொண்டு செய்வதில்லை. செய்பவன் இறைவன்,
தான் ஒரு கருவி மாத்திரமே என்ற எண்ணத்தில் அத்தனையையும்
இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பற்றில்லாமல் செயல்படுகிறான். உடல்,
மனம், அறிவு, புலன்கள் – இவை எல்லாமே சும்மா இருக்க முடியாதவை.
ஏதாவது வகையில் செயல்படத் துடிப்பவை. எதற்காகப் பிறந்தோம் என்பதை
உணர்ந்து அதற்கான செயல்களாக அவை இருக்கும்படி பார்த்துக் கொள்பவன்
தான் கர்மயோகி. அப்படி செயல்படும் போது செய்கின்ற எல்லாமே இறைவன்
ஏற்படுத்தித் தந்தவை, செய்பவன் இறைவனே, விளைவுகள் இறைவனின்
திருவுள்ளத்தின் படியே ஏற்படுகின்றன என்கிற மனப்பக்குவம் வந்து
விடுகிறது. சந்தோஷப்படவோ, துக்கப்படவோ “நான்” என்ற ஈகோவிற்கு இதில்
எந்தப் பங்கும் இல்லை. அதனால் தான் அவன் நிலையான சாந்தியை
அடைகிறான்.

கர்ம யோகம் பிடிபடவில்லையானால், ஒருவன் செயல்களில் “நான்” என்ற ஈகோ


புகுந்து விட்டால் அதனுடன் விருப்பு, வெறுப்பு முதலான அனைத்து இரட்டை
நிலைகளும் புகுந்து விடுகின்றன. அலைக்கழித்தல் ஆரம்பமாகி விடுகின்றது.
நினைத்தபடி நடக்கிற போது கர்வத்தோடு கூடிய ஆர்ப்பரிப்பு, எதிர்மாறாக
நடக்கும் போது துக்கத்தோடு கூடிய அழுகை என்று மாறி மாறி மனிதன்
அலைக்கழிக்கப்பட ஆரம்பிக்கிறான். விளைவுகளால் அவன் கட்டுப்பட
நேரிடுகிறது. ஒரு கணமும் நிம்மதியாக இருக்க அவனை அந்த “நான்”
அனுமதிப்பதில்லை.

சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது போல ஆசையிலிருந்து அழிவு


வரை மனிதன் பெருவெள்ளத்தில் சிக்கிய துரும்பாக பயணிக்க நேர்ந்து
விடுகிறது. ”நான்” என்ற அகந்தைக்கு எல்லாமே அறிந்தது போலவும்,
எல்லாமே தன்னால் முடியும் என்பது போலவும், எல்லாவற்றிற்கும் தன்னிடம்
பதில் இருப்பது போலவும் அபிப்பிராயம் இருக்கும். எதுவும் எப்படி நடக்க
வேண்டும் என்ற முடிவான அபிப்பிராயமும் இருக்கும். அதனாலேயே அதன்
செயல்பாட்டில் இறைவனைக் கூட அனுமதிக்க அதனால் முடிவதில்லை.
முழுவதுமாக அந்த நானின் கட்டுப்பாட்டில் நடக்கும் செயல்கள் எத்தனை
தான் துக்கத்தைக் கொடுக்கும் விதமாக அமைந்தாலும் அதனால் விலக
முடிவதில்லை. இந்த விலக முடியாத தன்மையிலேயே அத்தனை பிரச்சினைகளும்
இருக்கிறது என்பதை அது உணர்வதில்லை.

மெத்தப் படித்த ஒரு பண்டிதர் ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார். அவரிடம்


பேசிக்கொண்டிருந்த போது பண்டிதர் தான் அறிந்ததையெல்லாம் கர்வத்துடன்
சொல்லிக் கொண்டிருந்தார். உலகில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும்
அவரிடம் பதில் இருக்கிறது என்றும், எது எது எப்படிச் செய்ய வேண்டும்,
எப்படி நடைபெற வேண்டும் என்றும் எல்லாம் பல மேற்கோள்கள் காட்டி
ஞானிக்கு விளக்கினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்
கொண்டிருந்து விட்டு ஞானி சொன்னார். “நீங்கள் பிறப்பதற்கு முன் இறைவன்
எப்படி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருந்தான் என்பது தான் எனக்கு
வியப்பாக இருக்கிறது ! "

20.

எது ஞானம் ?

எந்தக் குறையும் இல்லாத ஆத்மா இந்தக் குறைபாடுகளும் பிரச்சினைகளும்


நிறைந்த வாழ்க்கை ஓட்டத்தில் வந்து சிக்கிக் கொள்வது ஏன் என்ற கேள்வி
சிந்திக்க முடிந்த மனிதன் மனதில் எழுவது இயற்கை. இதற்கு விடையாக
சுவாமி விவேகானந்தர் கிளிக்கதை ஒன்றை அடிக்கடிக் கூறுவதுண்டு...

ஒரு ஜீவ விருட்சத்தின் உச்சியில் இரண்டு கிளிகள் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து


கொண்டிருந்தன. இரண்டுமே தெய்வக ீ ஒளியால் சூழப்பட்டு ஜொலித்துக்
கொண்டிருந்தன. அவற்றிற்கு எந்தக் குறையுமில்லை. எந்தத் தேவையும்
இருக்கவில்லை. பேரமைதியுடன் அவை இருந்தன. அந்த விருட்சத்தின்
கீ ழ்பகுதியில் நிறைய பழங்கள் அழகாகப் பழுத்திருந்தன. ஒரு கிளிக்கு அதை
சுவைத்துப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று. மெல்ல கீ ழே பறந்து வந்து ஒரு
கனியை சுவைத்தது. அந்தக் கனியின் இனிய சுவை அதற்கு மிகவும் பிடித்துப்
போகவே அது மேலும் இறங்கி வந்து அந்தக் கனிகளை சுவைக்க ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் இனிய சுவையுடன் கூடிய கனிகளே சுவைக்கக் கிடைத்தாலும்
மேலும் கீ ழே இறங்க இறங்க இனிப்புடன், புளிப்பு, கசப்பு போன்ற
விருப்பமில்லாத சுவைகளும் கனிகளில் கிடைக்க ஆரம்பித்தது.

மாறி மாறி கிடைத்த சுவைகள் அந்தக் கிளிக்கு மகிழ்ச்சியையும்,


ஏமாற்றத்த்தையும், வருத்தத்தையும் சேர்த்தே தர ஆரம்பித்தன. விருட்சத்தில்
கீ ழ்ப்பகுதியிலேயே வசிக்க ஆரம்பித்திருந்த அந்தக் கிளி தன் தெய்வக ீ
ஒளியையும் இழந்து விட ஆரம்பித்திருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் கிளி
உச்சியில் இப்போதும் வசித்து வரும் அதனுடைய ஜோடிக் கிளியை
அண்ணாந்து பார்த்தது. அந்த ஜோடிக் கிளி இப்போதும் அதே தெய்வக ீ
ஒளியுடன் ஜொலித்துக் கொண்டு ஆனந்தமாகவும் நிறைவாகவும்
இருந்ததைக் கண்ட கிளிக்கு உண்மை உறைக்க அது மீண்டும் உச்சிக்குச்
சென்று அந்த ஜோடிக் கிளியுடன் சேர்ந்திருக்கப் பறந்து சென்றது. ஆனால்
அங்கே அதனால் திருப்தியாக இருக்க முடியவில்லை. கனிகளை சுவைக்கும்
ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புளிப்பும் கசப்பும் மிகுந்த கனிகள்
அதிகம் கிடைத்தாலும் இடையிடையே இனிப்பான கனிகளும் கிடைக்கின்றன
அல்லவா? அந்த நினைவினை அதனால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
மேலே இருக்க முடியாத அந்தக் கிளி மறுபடி மறுபடி கீ ழே வந்து பல வித
சுவையுடைய கனிகளைச் சுவைத்து அதற்கேற்ற
மனநிலைகளில் இருந்து தவித்தது. அதன் தெய்வக ீ ஒளி முழுவதுமாக மங்கி
இருந்தது. ஆனால் அந்த ஜோடிக் கிளியோ குறையாத ஆனந்தத்துடன்
மேலிடத்திலேயே நிறைவுடன் இருந்தது.

இது தான் மனிதனின் நிலை. எதனாலும் பாதிக்கப்படாமல் முழுமையான


நிறைவுடன் அவன் ஆன்மா இருக்க அவன் மனமோ அறியாமையில்
பொய்யான சுகங்களைத் தேடி தன் நிலையில் இருந்து இறங்கி வந்து சுகம்,
துக்கம், பிறப்பு, இறப்பு விருப்பு வெறுப்பு என்ற இரட்டை நிலைகளில் சிக்கித்
தவிக்கிறது. மேலான உண்மைகள் அவனுக்கு அவ்வப்போது புரியாமல் இல்லை.
ஆனால் அறியாமையும், பலவனமும் ீ திரும்பத் திரும்ப அவனைக் கீ ழே
இழுக்கின்றன. இதில் ஆத்மாவின் பங்கு இல்லை.

இதை கர்ம சன்னியாச யோகத்தில் தொடர்ந்து வரும் சுலோகங்களில்


ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

”ஆத்மாவானது கர்மங்களைச் செய்யத் தூண்டுவதோ, கர்மங்களை


உண்டாக்குவதோ இல்லை. கர்ம பலன்களுடன் சேர்த்து வைத்தலையும்
செய்வதில்லை. இயற்கையே எங்கும் இயங்குகிறது. ஆத்மாவானது
எவனுடைய பாபத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. புண்ணியத்தையும்
எடுத்துக் கொள்வதில்லை. ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது.
அதனால் பிராணிகள் மயக்கமடைந்திருக்கின்றன. எவர்களுடைய
ஞானத்தால் அந்த அஞ்ஞானமானது அழிக்கப்பட்டதோ அவர்களுடைய
ஞானம் சூரியனைப் போல் அந்தப் பரம்பொருளைப் பிரகாசிக்கச் செய்கிறது.”

கனிகளில் பல சுவைக் கனிகள் இருப்பது இயற்கை. பார்த்தவுடனேயே சுவை


அறிந்து கொள்ள முடிவதில்லை. காட்சிக்கு அழகாக இருப்பவை சுவையிலும்
இனிமையாக இருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை.
இதெல்லாம் இயற்கையின் தன்மை. ஆத்மா இந்த இயற்கை தர்மங்களுடன்
யுத்தம் செய்வதில்லை. தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமில்லை. அதனால் அதன்
பாவ புண்ணியக் கணக்கையும் அது எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஆசை,
அறியாமையால் உந்தப்பட்டு சுவைக்க வந்த மனிதனோ அந்த இயற்கையின்
தன்மையுடன் பிணைக்கப்பட்ட விளைவுகளையும் சேர்ந்தே அனுபவிக்க வேண்டி
வருகிறது. அந்த தொடர் விளைவுகளில் சிக்கி கஷ்டப்பட நேர்கிறது.

இதில் ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது என்கிற வாசகம்


அறிவுபூர்வமானதா என்று சிலருக்கு சந்தேகத்தை எழுப்பலாம். ஒளி இருக்கும்
இடத்தை இருள் நெருங்கவே முடியாத போது ஒளியை இருட்டு எப்படி மூட
முடியும்? ஞானமும் அப்படிப் பட்ட ஒளியே அல்லவா? அதை அஞ்ஞான
இருட்டு எப்படி மூட முடியும்? சூரியன் பேரொளியுடன் மின்னிக்
கொண்டிருந்தாலும் கூட நாம் கண்களை மூடிக் கொண்டால் பின்பு நாம்
இருப்பது இருட்டிலேயே அல்லவா? மலையே எதிரில் இருந்தாலும்
கண்ணருகில் இரு விரல்களை வைத்து
மறைத்துக் கொண்டால் மலையும் நம் பார்வையில் இருந்து மறைந்து விடும்
அல்லவா? கண்களை ஏன் மூட வேண்டும், விரல்களைக் கண்ணருகில்
வைத்துக் கொள்வது எதற்காக? இதெல்லாம் அறியாமையால் நாமே செய்து
கொள்ளும் முட்டாள்தனங்கள். இந்த அஞ்ஞானச் செய்கையால் மெய்ஞான
சூரியனையும், மலையையும் நாமே மறைத்துக் கொள்கிறோம். பகுத்தறியக்
கூடிய அறிவை விட்டு விலகும் போது மனிதன் விலங்காகிறான்.
மயக்கமடைகிறான். இந்த அஞ்ஞானச் செய்கையை விலக்கிக் கொள்ளும்
போது ஞான ஒளியுடன் எல்லாமே பிரகாசித்து உள்ளது உள்ளது போலவே
தெரிகிறது. இப்படி அஞ்ஞானத்தை விலக்கி அதன் மாசுகளைக் களைந்து
கொண்டவன் எப்படி இருப்பான்?

இதற்கு ஸ்ரீகிருஷ்ணர் பதில் கூறுகிறார்.

”அந்தப் பரமாத்ம தத்துவத்தில் புத்தி, மனம், பற்றுதல், நோக்கு இவைகளை


வைத்து ஞானத்தால் மாசுகளை தீர்த்துக் கொண்டவர்கள் மிக மேலான ஒரு
நிலையை அடைகிறார்கள்.

கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடமும், பசுவிடமும்,


யானையிடமும், நாயிடமும், நாயைத் தின்னும் நீசனிடமும் அறிஞர்கள்
சமமான நோக்கு கொண்டிருப்பார்கள். யாருடைய உள்ளம் அனைத்து
உயிர்களிடமும் சமான நோக்குடன் இருக்குமோ, அவர்கள் இந்தப்
பிறவியிலேயே பிறப்பு, இறப்பு கொண்ட சம்சாரத்தை வென்றவர்கள்.
ஏனென்றால் அவர்கள் எந்த குறையும் இல்லாத, எங்கும் சமமான
பிரம்மத்திலேயே இருக்கிறார்கள்.” எல்லா உயிர்களிடத்திலும்
அந்தர்யாமியாய் இறைவன் இருப்பதை ஞானியால் மட்டுமே உணர முடியும்.
அதனாலேயே அவர்கள் வெளிப்பார்வைக்குத் தெரியும் வேறுபாடுகளைப்
பொருட்படுத்துவதில்லை. வெளித்தோற்றங்களை வைத்து எதையும் அவர்கள்
மதிப்பிடுவதில்லை. உள்ளே உண்மைப் பொருளாய் என்ன இருக்கிறதோ அதுவே
அவர்களுக்கு முக்கியம். அப்படிப் பார்க்கையில் எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் இறைவனைத் தவிர வேறு எதுவும் தென்படாததால்
அனைத்தையும் ஒன்று போலவே, உயர்வாகவே, அவர்கள் சம நோக்குடன்
பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்க முடிந்தவரையே ஞானியாகக் கருத முடியும்.

ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி


விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு
நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி
வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும்,
துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன்,
நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் “விலகி நில்.
எங்களுக்குப் போக வழிவிடு” என்று சொன்னார். புலையன் சொன்னான். “யார்
விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா? உடலுக்குள் இருக்கும்
என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால்
இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே. அது தானாக நகர முடியாதது. உள்ளே
உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள
உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று
தான். ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக
முடியும்? எல்லாம் ஒன்றே என்று அத்வைதம் பேசுகிற நீங்கள் உண்மையில்
அப்படியே காண்பதில்லை போல் இருக்கிறதே”
அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி
மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது.

”எல்லாவற்றிலும் மூலமாக இருக்கும் பரம்பொருளை உணர்ந்ததோடு


மட்டுமல்லாமல் அப்படியே நடந்து கொள்ளவும் முடிந்த தாங்களே என் குரு.
உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்” என்றார்.

உடனடியாகப் புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும்


அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர்
பரவசத்துடன் ”மண ீஷ பஞ்சகம்” என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில்
புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.
முதல் நான்கு சுலோகங்கள் நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அத்வைத
சாரமாகவும், ஐந்தாவது சுலோகம் நான்கு
வேதங்களையும் உள்ளடக்கிய ஓம் என்ற பிரணவ மந்திரச் சிறப்பாகவும்
இருக்கின்றன.

உடலாகவும், வெளிப்புறத் தோற்றமாகவும் தன்னை இணைத்துக் காண்பவன்


அந்த அஞ்ஞானத்தில் தன்னை சிறைப்படுத்திக் கொள்கிறான். மாறாக உண்மை
அறிந்து பேதம் நீங்கித் தன்னை ஆத்மாவாகக் காண்பவன் இப்பிறவியிலேயே
சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். எல்லோரையும்
சமமாக நோக்கும் தன்மை இருப்பதுடன் மாசற்ற சமநிலை கொண்ட
பிரம்மமாகவே அவன் மாறியும் விடுகிறான். இது மிக உயர்ந்த ஆன்மிக நிலை
மட்டுமல்ல சமுதாய கோணத்தில் பார்க்கையில் சாதி, மத, மொழி, இன, நிற,
தோற்ற வேறுபாடுகளைத் தாண்டிய மிக உயர்ந்த மனிதமும் மலர்ந்த
மகோன்னத நிலை அல்லவா ?

21.

பிரம்மானந்தம்
யாருக்கு
வாய்க்கும் ?

ஒவ்வொரு மனிதனும் ஆனந்தத்தைத் தேடுகிறான். அது அவனுடைய மிக


இயல்பான தேடலாகவே இருக்கிறது. பிரச்சினை அவன் ஆனந்தத்தைத்
தேடுவதில் இல்லை. அவன் தேடும் இடத்தில் தான் இருக்கிறது. அவன்
ஆனந்தத்தை வெளியே தேடுகிறான். இடம் மாறித் தேடுவதால் தான்
ஆனந்தம் அவனுக்கு சிக்குவதில்லை.

இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தில் அடுத்தபடியாகச் சொல்கிறார்.

"புறப்பொருள்களில் உள்ள பற்றுதலை விட்டவன் ஆன்மாவில்


பேரானந்தத்தைக் காண்கிறான். அவன் பிரம்மத்துடன் கலந்து பேரானந்தத்தை
அடைகிறான். புலன்களினால் ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும்
துக்ககரம் ஆனவை.
ஆரம்பமும், முடிவும் அவற்றிற்கு உண்டு. எனவே விவேகமுள்ளவன்
அவற்றில் நாட்டம் கொள்ள மாட்டான். யார் உடலில் இருந்து விடுபடுவதற்கு
முன்பே இந்தப் பிறவியிலேயே விருப்பு வெறுப்புகளால் உண்டாகும்
வேகத்தைத் தடுக்கிறானோ அவனே யோகி, அவனே சுகம் பெற்ற மனிதன்."

புறப்பொருள்களுக்கு என்று சில அடிப்படைத் தன்மைகள் உண்டு. அவை


மனிதனின் ஆனந்தத் தேடலுக்கு எதிரானவை. உதாரணத்திற்கு உங்களுக்கு
மிகப் பிடித்த தின்பண்டம் எதையாவது எடுத்துக் கொள்வோம். முதலாவதை
சாப்பிடும் போது ஏற்படும் சுவையே அலாதி தான். ஆனால் அதையே
தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது அது தரும் ஆனந்தம் குறைந்து
கொண்டே வருகிறது. இதை பொருளாதாரத்தில் Law of diminishing marginal utility
என்கிறார்கள். இப்படி இது விதியாகவே இருக்கிறது. தின்பண்டம் மட்டுமல்ல
எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. மனிதனுக்கு சலிப்பே
ஏற்படுத்தாததாய் நாம் நினைக்கும் பணத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு
காலத்தில் பெரும் திருப்தியைத் தரும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம்
இன்னொரு காலத்தில் அதிருப்தியையே தருகிறது. பல மடங்கு வந்தால் தான்
ஆனந்தம் வருகிறது. பின் அந்தப் பல மடங்கும் மேலும் பலப் பலவாக வந்தால்
தான் சந்தோஷம் என்று ஆகிறது. ஆயிரம், லட்சம், கோடி, பல கோடி, நூறு
கோடி, ஆயிரம் கோடி என்று அவரவர் நிலைகளுக்கேற்ப தேவைகளை
மனிதர்கள் அதிகமாக உணர ஆரம்பிக்கிறார்கள். பரம தரித்திரனாக இருக்கும்
போது ஆயிரக்கணக்கில் திருப்தியைத் தரும் பணம், அரசியல்வாதியாக
மாறிய பின் ஆயிரம் கோடிகளிலும் திருப்தி தராமல் ஆட்டி வைப்பதை இன்று
சர்வ சாதாரணமாக நாம் காண்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல ஆனந்தம், துக்கம் என்ற இரட்டை அலைகளில்


நம்மை அலைக்கழிப்பதாகவே புறப்பொருள்களும், புலன் வழி சாதனங்களும்
இருக்கின்றன. மேலும், வரும் போது மகிழ்ச்சி தருவதை நிறுத்தினாலும் கூட
நம்மை விட்டு விலகும் போது துக்கம் தருவதை இவை நிறுத்துவதில்லை.
முடிவுள்ள விஷயங்கள் ஒரு நாள் முடிந்து தானே போகும். அந்த
இயற்கையான தன்மைக்கே துக்கப்படுவது என்றால் மனிதனின் துக்கத்திற்கு
முடிவு இருக்க முடியுமா? மரணத்தின் போது எல்லாத் திரைகளும் விலகி
மனிதன் பேருண்மைகளை தரிசிக்கிறான். அப்போது விருப்பு, வெறுப்புகளின்
அர்த்தமின்மையை உணர்கிறான். ஆனால் காலம் கடந்து அறியும் உண்மைகளால்
என்ன பயன்? உயிருடன் இருக்கும் போதே அவன் உண்மையை உணர்ந்து
பக்குவம் அடைந்து தன்னை சரிப்படுத்திக் கொண்டால் உயிரோடிருக்கும்
போதே சுகமாக இருக்கலாமே என்று தான் ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார்.
இவ்வுலகத்தில் வாழும் போதே சுகமாக இருப்பது மட்டுமல்ல, கூடுதலாக
ஆனந்தமாக இருப்பது மட்டுமல்ல, மேன்மையான பிரம்மானந்தத்தையே
பெறவும் முடியும் என்று ஊக்கப்படுப்படுத்துகிற ஸ்ரீகிருஷ்ணர் அதற்கான
வழிகளையும் சொல்கிறார்.

" எவனொருவன் ஆத்மாவிலேயே சுகத்தை அடைகிறானோ, ஆத்மாவிடமே


விருப்பம் கொள்கிறானோ, ஆத்மாவிடமே ஒளி பெறுகிறானோ அந்த யோகி
தானே பிரம்மமாகி பிரம்மானந்ததை அடைகிறான்."

மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகங்களை அறவே ஒழித்தவர்களும்


மனத்தைக் கட்டுப்படுத்தியவர்களும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை
செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்களும் பிரம்மானந்தத்தை
அடைகிறார்கள். விருப்பு வெறுப்புகளை விட்டவர்களும், மனத்தை
அடக்கியவர்களும், ஆத்மாவை அறிந்தவர்களும் ஆன துறவிகளுக்கு வாழும்
போதும் மரணத்திற்குப் பின்னும் பிரம்மானந்தம் இருக்கும். விருப்பு இல்லை,
வெறுப்பு இல்லை என்றால் கல்லைப் போல் இரு என்று அர்த்தமல்ல. எந்திரம்
போல் வாழ் என்ற அறிவுரையும் அல்ல. உண்மையில் ஆனந்தமாக இருக்கவே
ஸ்ரீகிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

யாருமே ஆனந்தத்தைப் பொய்யின் மூலமாகப் பெற முடியாது. பொய் சொற்ப


காலத்துக்கு மாயையான சந்தோஷத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால்
அஸ்திவாரம் இல்லாத கட்டிடங்கள் போல் பொய்யான சந்தோஷங்கள்
விரைவிலேயே தரை மட்டமாகிப் போய் துக்கமே மிஞ்சும். உண்மையாகவே
ஞானம் பெற்று தெளிந்தால் ஒழிய நிலையான நிம்மதியும், பேரானந்தமும்
வாய்க்க வாய்ப்பேயில்லை. பிரச்சினைகள் வராத வரை அமைதி இருக்கவே
செய்யும். பிரச்சினைகள் வந்த போதும் அமைதியைத் தக்க வைத்துக்
கொள்வது தான் கஷ்டம். வினோபா மிக அழகாகக் கூறுவார். “தண்ண ீர் மேலே
பார்ப்பதற்குச் சுத்தமாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு கல்லைப் போடுங்கள்;
உடனே அதன் அடியில் உள்ள சகதி மேலே எழும்பி வரும். நம் மனத்தின்
நிலையும் இத்தகையதே. மனத்தின் அடித்தளத்தில் முழங்காலளவு சகதி
சேர்ந்திருக்கிறது. புறத்தில் உள்ள பொருளொன்று அதைப் போய்த்
தொட்டவுடன் அது புலனாகத் தொடங்குகிறது. நாம் ஒருவனுக்குக் கோபம்
வந்து விட்டது என்கிறோம். அக் கோபம் வெளியில் இருந்தா வந்தது? அது
உள்ளே இருந்ததே. மனத்தில் இல்லா விட்டால் வெளியில் தென்படவே
தென்படாது” எனவே உள்ளே என்ன இருக்கிறது என்பது மிக முக்கியம்.
உள்ளே மாசுகள் இருந்தால் நீக்கிக் கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால்
நிவர்த்தி செய்து தெளிந்து கொள்ள வேண்டும். அலை பாயும் கட்டுக் கடங்கா
மனம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். விருப்பு
வெறுப்புகள் எந்த அளவு பலமாக உள்ளதோ அந்த அளவு மனிதன்
பிரச்சினைகளை தருவித்துக் கொள்கிறான். சந்தோஷமின்றி தவிக்கிறான்.
எனவே இதையெல்லாம் சரி செய்து கொண்டால் சாதாரணமான ஆனந்தம்
அல்ல பிரம்மானந்தமே கிடைக்கும் என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகச்
சொல்கிறார்.

மாறிக் கொண்டே இருக்கிற புறப்பொருள்களில் நாட்டம் கொள்ளாமல்


மாறாமல் இருக்கிற நித்தியமான ஆத்மாவில் நாட்டம் கொண்டால்,
அறியாமை இருளை அகற்ற ஆத்மாவின் ஞான ஒளியை பயன்படுத்திக்
கொண்டால் அவன் யோகி ஆகிறான். அவனே பிரம்மமாகி பிரம்மானந்தத்தை
அடைகிறான் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

உள்ளே ஆத்மஞானம் ஒளிராத வரை வெளியே இருக்கின்றவை


எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறையை மனிதன் கண்டு பிடிக்கவே செய்வான்.
உள்ளிருக்கும் இருட்டு புறத்தில் படரவே செய்யும். அதனால் உள்ளதை
உள்ளது போல் அறிய முடியாது. இருட்டில் கயிறு பாம்பாவதைப் போல்
எத்தனையோ கற்பனை பயங்கள், கற்பனை துக்கங்கள், கற்பனை
பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். ஆத்ம ஞான ஒளியைப் பெற்று
விட்டாலோ கற்பனைகள் உயிர் பெற முடியாது. அதன் தீய விளைவுகள்
கிடையாது. உள்ளே சரியாகாத வரை வெளி உலகத்தில் எதுவுமே சரியாகாது.
உள்ளே சரியான, தெளிவான ஞானம் இருந்தாலோ உலக வாழ்வில் எதிலுமே
குறை இருக்காது என்று சொல்லும் இந்த சிந்தனையோடு கீ தையின் ஐந்தாவது
அத்தியாயம் இத்துடன் நிறைவுகிறது.

22.

முடிந்தவுடன் நிறுத்து.

கீ தையின் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தை ஸ்ரீகிருஷ்ணர்


இவ்வாறு தொடங்குகிறார்.

”எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல், செய்ய வேண்டிய கர்மங்களைச்


செய்கிறானோ அவனே துறவி. அவனே யோகி.
அக்கினியைப் பற்ற வைக்காததாலோ கர்மங்களைத் துறந்ததாலோ ஒருவன்
துறவியாக மாட்டான். துறவு என்று எதனைச் சொல்கிறார்களோ அதுவே
யோகமென்று அறி. கர்மபலன் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி
ஆக மாட்டான். யோகமாகிய சிகரத்தைத் தாண்ட விரும்புபவனுக்கு கர்மம்
ஒரு சாதனமாகக் கூறப்படுகிறது. அந்த சிகரத்தை அடைந்த பின் அவனுக்கு
மன அமைதியே சாதனமாகும். புலன்களிலும் கர்மங்களிலும் பற்றில்லாமல்
எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனே யோக நிலையைச் சேர்ந்தவன்
என்று கூறப்படுகிறான்.”

தன் கடமையைச் செய்வதைக் காட்டிலும் துறவறம் போவது மேல் என்று


ஆரம்பத்தில் நினைத்தவன் அர்ஜுனன். அது அவனுடைய தனிப்பட்ட
குணாதிசயம் அல்ல. நம்மில் பெரும்பாலானோருக்கும் ஒருசில நேரங்களில்
அந்த எண்ணம் வராமல் இருப்பதில்லை. வாழ்க்கையின் பிரச்சினைகள்
நம்மால் சமாளிக்க முடியாததாகப் போகும் போது இந்த வாழ்க்கையில்
இருந்தே ஒதுங்கி துறவியாகப் போவது நல்லதல்லவா என்ற எண்ணம்
தோன்றுகிறது. ஆனால் ஓடி ஒளிவது துறவல்ல. வேலை செய்யாமலேயே
இருப்பதும் துறவல்ல. துறவு என்பது செய்ய வேண்டியதை, பலனில்
பற்றில்லாமல், அதே நேரத்தில் அலட்சியமும் இல்லாமல், முறையாகச்
செய்து பிறகு அதை முற்றிலும் மறந்து அமைதியடைவது தான். அப்படி
அமைதியடையா விட்டால் செயலும் உபயோக நிலையைக் கடந்து நம்மைப்
பிணைத்து வைக்கும் சங்கிலியாகி விடும். சிலர் காரியம் முடிந்த பின்னரும்
அடங்க மாட்டார்கள். அந்தக் காரியத்தின் மீ து இருக்கும் ஈடுபாட்டை
அவர்களால் விட முடியாது. அது கர்மம் ஆகாது. கடமையும் ஆகாது. ஒன்றை
விட முடியாத பலவனமேீ ஆகும். தேவை இருக்கும் வரை தான் செயலுக்கு
மகத்துவம் உண்டு. அவசியமும் உண்டு. தேவை முடிந்த பின்னும் ஒன்றை
செய்து கொண்டே இருக்கத் தூண்டுதல் நம்முள் எழுமானால் அதைப்
பைத்தியக்காரத்தனம் என்று நாம் அடையாளம் காண வேண்டும்.

அதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சிகரத்தை அடையும் வரை நடக்க வேண்டிய


செயல் அவசியம். அதற்குப் பின் தேவை அமைதியே என்கிறார். அதற்கு
மேலும் நடந்தால் அதல பாதாளத்தில் தான் விழ வேண்டி இருக்கும்.
எத்தனையோ செயல்வரர்கள் ீ இந்த உண்மையை உணரத் தவறி விடுகிறார்கள்.
முடிவுக்குப் பின்னும் முன்னேறுதல் முன்னேற்றம் அல்ல. அது அழிவுக்கான
வழி என்பதை மறந்து விடுகிறார்கள்.

இதைத் தான் திருவள்ளுவரும் அழகாகக் கூறுகிறார்.

"நுனிக் கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதிஆகி விடும்."

மரத்தின் உச்சியில் ஏறி நின்றவர் மேலும் ஏற முயலக் கூடாது. அவ்வாறு


முயன்றால் கீ ழே விழுந்து உயிர் துறக்க நேரிடும்.

புலன்களின் மீ து வைக்கும் பற்று ஒருவனை எந்த நிலைக்குக் கொண்டு வரும்


என்பதை ஏற்கெனவே வேண்டிய அளவு விளக்கி விட்டோம். கர்மபலனில்
பற்று வைப்பதும் கவலையில் தான் முடியும் என்பதையும் நாம் பார்த்து
விட்டோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்லும் கோட்பாடுகள் மீ து
வைக்கும் பற்றைப் பார்ப்போம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாட்டை நம்புகிறோம். அது தான் சரி


என்று நினைக்கிறோம். அது தான் சரியாக இருக்குமேயானால் மற்றவை
எல்லாம் தவறாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில்
வலுப்பெறுகிறது. அதன் பிறகு அது எவ்வளவு தான் உயர்ந்த கோட்பாடாக
இருந்தாலும் அது நன்மையை விடத் தீமையே அதிகம் விளைவிக்கிறது.

இன்றைய காலத்தில் மதங்கள் தீமை ஆவதும் இந்த விதத்தில் தான். ஒரு


இறைத் தூதுவர் தான் உணர்ந்த பேருண்மைகளால் உலகமும் பலனடைய
வேண்டும் என்ற என்ற உன்னதமான நோக்கத்தில் அவற்றைச் சொல்லி
விட்டுப் போகிறார். அந்தப் பேருண்மைகளும் பின்பற்றுபவர்களுக்குப் பலன்
அளிக்கவே செய்கிறது, அது அவர்கள் பற்று வைக்கும் கோட்பாடுகளாக
மாறும் வரை. பற்று என்று ஒன்று எதன் மீ து வந்து விட்டாலும் அது நம்
சிந்திக்கும் சக்திக்கு ஒரு திரையைப் போட்டு விடுகிறது. பின் நாம் எதைக்
காண விரும்புகிறோமோ அதையே காண்கிறோம். எதைக் காண
விரும்பவில்லையோ அதைக் காண்பதில்லை. உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு
பற்று முன்னுக்குப் பிரதானமாக மாறி விடுகிறது.

கோட்பாடுகள் மீ து வைக்கும் பற்றும் அப்படித் தான். நாம் நினைப்பதே சரி,


நாம் நம்புவதே உண்மை என்று எண்ண ஆரம்பிக்கும் போது மாறாக நினைக்கும்
அடுத்தவர் நினைப்பது தவறு, பொய் என்று தோன்ற ஆரம்பிக்கும். பின்
அடுத்தவர்களே பொய்யர்கள், தவறானவர்கள் என்று தோன்ற ஆரம்பிக்கும்.
பின் நம் கோட்பாடுகளை நிலைநாட்டவும், காப்பாற்றவும், போராடவும்
தோன்றும். அதன் பின்
நடப்பதெல்லாம் அனர்த்தங்களே.

இன்று மதங்கள் பெயரில் நடக்கும் கலவரங்கள் எல்லாம் இப்படி


ஆரம்பிப்பவையே. இதுவும் ஒரு வகையில் சிகரம் தாண்டியும் போகும்
முயற்சி தான். ஒரு கோட்பாடு பின்பற்றப்பட்டு அது உங்களுக்கு நல்ல
உயர்வைத் தரலாம். அதை நான்கு பேருக்குப் பயன்படலாம் என்று எண்ணி
நீங்கள் தேவைப்படுபவர்களுக்கு சொல்லியும் தரலாம். அதோடு நிறுத்திக்
கொள்ள வேண்டும். அது பயனடையும் வழி. அமைதியின் வழி. அதற்கு மேல்
போய் அந்தக் கோட்பாட்டில் பற்று வைத்து அதன் காவலனாக மாறி
விடுவதோ அடுத்தவர் மீ து அதைத் திணிக்க முயல்வதோ மேன்மையான யோக
நிலைக்கு ஏற்றதல்ல. அது அமைதிக்கும் உகந்ததல்ல. எனவே தான் ஒரு
செயலை முடிந்தவுடன் நிறுத்தச் சொல்கிறார்
ஸ்ரீ கிருஷ்ணர்.

23.

உனக்கு நீயே
நண்பனும்
பகைவனும்.

அடுத்ததாக தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக


உயர்ந்த அறிவுரை. அது கலப்படமில்லாத சத்தியமுமாகும். அவர்
சொல்கிறார்:

"தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும்


இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே
பகைவன்."

"தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக்


கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக்
கொள்கிறான்."

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை


இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக
செய்து தர ஆசைப்படுகிறார்கள். கடவுளோ, குருவோ, தலைவனோ,
நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று
ஆசைப்படுகிறார்கள். இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை
அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி
விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது


என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். நான் பலவனமானவன்,ீ சக்தியற்றவன்,
என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம்
தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக்
கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக்
கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை
இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. அது தளிராகி, செடியாகி,
மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும்.
கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக்
கொள்ள வேண்டும். அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி.
அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக
நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும்
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும்
நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை


இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக்
கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல்
இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது
தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன்
மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன்
தன் வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து,
அதற்கான வழியும் தெரிந்து, அதன் படி அவனால் நடக்க முடியவில்லை
என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன்
இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த
இடத்தில் கூட நிற்க முடியாமல் தன்
முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து


தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை. சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச்
சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான்.
தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுக்கப்படுவதில்லை”. இரண்டிற்கும் இடையே
உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது. அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான
விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும்
மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே
தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை.

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து


அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின்
ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப்
பயணிப்பதில்லை. தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை
புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்
முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு
அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே
இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக்
கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான்.
அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே


பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை
வெளியே தேட வேண்டியதில்லை. புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”. எனவே லௌகீ கம் ஆகட்டும், ஆன்மிகம்
ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி
செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு
உலகமே சரியாகி விடும்.

சரி-தவறு, நல்லது-கெட்டது தெரிந்தும் மனிதன் நல்வழிப்பாதையில்


செல்லாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.
உடலில் கட்டுப்பாடு இல்லை, மனதில் கட்டுப்பாடு இல்லை, சம நோக்கு
இல்லை, மனத் திருப்தி இல்லை, பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை, ஆன்ம
சிந்தனை இல்லை என்ற பல இல்லாமைகள் இதற்குக் காரணமாக
இருக்கின்றன.

மிக உயர்ந்த நிலையாக பரமாத்ம நிலை அல்லது யோக நிலை பற்றிச்


சொல்லும் ஸ்ரீகிருஷ்ணர் அதைப் பெற்றிடும் வழியை அடுத்ததாகக் கூறும்
போது இவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

"தன்னை வென்றவனும், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், மானம்-அவமானம்


எல்லாவற்றையும் சமமாகக் கருதி அமைதியாக இருப்பவன் பரமாத்ம
நிலையைப் பெற்றிடுவான்."

ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் மனத்திருப்தி அடைந்தவனும் எதற்கும்


அசைந்து கொடுக்காதவனும் புலன்களை வென்றவனும், மண்-கல்-பொன்
மூன்றையும் ஒரே விதமாக மதிப்பவனும் யோகி என கூறப்படுகிறான்."

"யோகியானவன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும்


உடைமைகளையும் கைவிட்டு தனிமையில் இருந்து கொண்டு இடைவிடாத
ஆன்மசிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்."

சமநோக்கு பற்றி எல்லா இடங்களிலும் சலிக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் சொல்ல


மிக முக்கிய காரணம் அது இல்லா விட்டால் எதையும் உள்ளது உள்ளபடி
புரிந்து கொள்ள முடியாது என்பது தான். சரியாகப் புரிந்து கொள்ளாத போது
தவறாக நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பின்
விளைவுகள் அதற்குத் தகுந்தவாறு தொடர நமக்கு நாமே துன்பம்
விளைவித்துக் கொள்கிறோம்.

இதில் புதிதாக ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்தும் விஷயம், தனிமையில் ஆன்மிக


சிந்தனை. ’இனிது இனிது ஏகாந்தமினிது’ என்ற ஔவையாரின் கூற்றில்
பலருக்கும் உடன்பாடில்லை. தனிமை என்பது இக்காலத்தில் ஒரு
கொடுமையான விஷயமாகவே பலராலும் கருதப்படுகிறது. சிறிது நேரம்
தனிமை கிடைத்தாலும் அது சகிக்க முடியாததாகி விடுகிறது. அந்த நேரத்தில்
யாரிடமாவது போன் செய்து பேசினால் என்ன என்று
தோன்றுகிறது. எங்காவது போகத் தோன்றுகிறது. இல்லா விட்டால்
டிவியையாவது பார்த்துக் கொண்டு பொழுது போக்கத் தோன்றுகிறது.

ஆனால் பல நேரங்களில் ஆழமான உண்மைகளை உணர மனிதனுக்குத் தனிமை


தேவைப்படுகிறது. வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் இருந்தும், உலகின்
இடைவிடாத கருத்துத் திணிப்புகளில் இருந்தும் விலகித் தனியாக யோசிக்க
அவகாசம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்க்கை சரியான பாதையில்
தான் போய்க் கொண்டிருக்கிறதா, சொந்த வாழ்க்கை தான் வாழ்கிறோமா,
இல்லை யாரோ எவரோ வகுத்த வாழ்க்கை வாழ்கிறோமா, இப்படியே போகும்
வாழ்க்கை தான் நம் லட்சியமா, முடிவில் வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையான
திருப்தியை உணர்வோமா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்
கிடைக்கும்.

யோசிக்கவே நேரமில்லாமல் போவது தான் தவறான வாழ்க்கை


முறைகளுக்கு முக்கியமான காரணம். யோசித்தால் நம் வாழ்க்கையின் பல
குறைபாடுகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும் என்பதால் பலரும்
யோசிக்காமல் இருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால்
மருத்துவரிடம் போனால் வியாதியைக் கண்டு பிடித்துச் சொல்லி விடுவார்
என்று பயந்து கொண்டு அவரிடம் போகாமல் இருந்து விடும் முட்டாள்தனம்
போலத் தான். அவரிடம் போனால் வியாதி கண்டுபிடிக்கப்பட்டு குணமடைய
வாய்ப்பு உண்டு. போகாமலே இருந்து வியாதியை முற்ற வைத்துக் கொண்டு
சீக்கிரமாகவே அழிந்து போவது முட்டாள்தனம் தானே!

எனவே தனிமையும் சிந்தனையும் எந்த நல்ல மாற்றத்திற்கும் சுய


முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல
இடைவிடாத ஆன்ம சிந்தனை அனைவருக்கும் உடனடியாக முடியக்
கூடியதல்ல என்ற போதும் ஆன்ம சிந்தனையே இல்லாமல் யாரும் உலக
வாழ்வில் அமைதியை அடைந்து விட முடியாது என்பது நிச்சயம்.

அடுத்ததாக தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் விளக்க


ஆரம்பிக்கிறார்.

24.

கீ தை சொல்லும்
தியான முறை.

தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:

“சுத்தமான இடத்தில் உறுதியான ஆசனம் ஒன்றை அமைத்துக் கொள்ள


வேண்டும். அது அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும் இருக்க
வேண்டும். அந்த ஆசனத்தின் மீ து துணி, மான் தோல், தர்ப்பை பரப்பி அதன்
மேல் அமர்ந்து கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும்,
புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தைச் சுத்தம் செய்வதற்காக யோகத்தைப்
பயில வேண்டும்.

உடம்பையும், தலையையும், கழுத்தையும் சமமாக அசைவில்லாமல்


வைத்துக் கொண்டு, உறுதியோடு, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு,
திசைகளை நோக்காமல், அமைதியான மனத்துடன், பயமற்றவனாக,
பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாய், மனத்தை வசப்படுத்தி, என்னிடமே
மனத்தைச் செலுத்தி, என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர
வேண்டும்.”
மனதைச் சுத்தம் செய்ய நம்மைத் தயார்ப்படுத்தும் தியான முறைக்கு
முதலில் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார்
ஸ்ரீகிருஷ்ணர். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை ஒரு ஆரம்பம். மனத்திற்கு
நாம் தரும் ஒரு அறிவிப்பு. செய்யப் போகிற தியானம் பவித்திரமானது,
தெய்வகமானது
ீ என்று சொல்லும் சூட்சுமமான செய்தி. மேலும் பூச்சிகள்,
எறும்புகள், புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்கும் சுத்தமான இடம்
வலியுறுத்தப் படுகிறது. அதே போல உறுதியான ஆசனம் உறுதியான
மனநிலைக்கான ஆயத்தம். உறுதியில்லாத ஆசனம் அடிக்கடி மனதின்
கவனத்தை சிதறடிக்க வல்லது என்பதால் உறுதியான ஆசனம் பற்றி
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். அதிக உயரம், அதிக தாழ்வு இரண்டும்
தியானத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால்
அவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார்.

துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா


சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக்
கட்டத்தில் சௌகரியமாகவும், உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால்
ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி
இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய
வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான,
அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது.

அடுத்ததாக உடம்பை நேராக இருத்திக் கொண்டு அமர்வது மிக முக்கியம்.


பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு விறைப்பாக உட்கார்ந்து கொள்ள
முற்படுகிறார்கள். அது தவறு. விறைப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ள
முடியாது. உடல் பழைய நிலைமைக்கு வர போராட ஆரம்பித்து விடும். உடல்
தியானத்திற்கு அனுகூலமாக வேண்டுமே ஒழிய போர்க்கொடி உயர்த்தினால்
தியானம் கைகூடாது. எனவே உடலை விறைப்பில்லாமல் இயல்பாக நேராக
இருத்திக் கொள்ளப் பழகிக் கொள்வது முக்கியம்.

அதே போல ’மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு’ என்று ஸ்ரீகிருஷ்ணர்


சொல்லி இருப்பதையும் அப்படியே எடுத்துக் கொண்டு முயற்சித்தால்
தலைவலி, தலைசுற்றல் போன்றவை வந்து விடக்கூடும். பகவத்கீ தைக்கு
சங்கரர் தரும் விளக்கத்தில் முழுக் கவனத்தையும் மூக்கின் நுனிக்கு வரச்
சொல்கிறார். அதுவே சரியாகப் படுவதாக முயன்று பார்த்த
அனுபவஸ்தர்களும் கருதுகிறார்கள்.

கண்களை எல்லா திசைகளிலும் அலை பாய விடக் கூடாது என்று


ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண்
போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட
காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு
வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த
முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ
அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும்
அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.

புலனடக்கம், மனத்தை வசப்படுத்துதல் பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்து


விட்டோம். அடுத்ததாக ”என்னிடமே மனத்தைச் செலுத்தி, என்னையே
குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்” ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப்
பார்ப்போம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது அந்தப் பெயரைத் தரித்துக் கொண்டு
இருக்கும் உருவத்தை என்று எண்ணுவதை விட எல்லாவற்றிற்கும்
மூலமான சக்தியை என்று இதை எடுத்துக் கொள்வது மிகவும் பொருத்தமாக
இருக்கும். எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும்
இயங்குகிறதோ, எந்த சக்தி எல்லாவற்றையும் உருவாக்கி, காத்து, அழித்து
பிரபஞ்சத்தை நடத்திக் கொண்டு இருக்கிறதோ அதில், அதன் தன்மையில், அதன்
உண்மையில் அமைதியடைந்த மனம் லயிக்குமானால் அதனால் அறிய
முடியாதது என்ன இருக்க முடியும்? உண்மையைத் தானாக இப்படி உணர
முடிந்த பின் அடைய முடியாததும் என்ன இருக்க முடியும்? பின் அலைபாய
மனதிற்கு முகாந்திரம் என்ன இருக்கிறது?

எனவே தான் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த விதமாக


மனத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் யோகநிலையில் இருக்கும்
யோகியானவன் மோட்சத்தை இறுதியாகக் கொண்டதும் என்னிடம்
உள்ளதுமான சாந்தியை அடைகிறான்.

சாந்தி என்பது திருப்தியுடன், முழுமையான நிறைவுடன் சேர்ந்த அமைதி.


அதை வேண்டித் தான், அதைத் தேடித்தான் மனிதன் ஆரம்பத்தில் இருந்தே
ஓடிக் கொண்டு இருக்கிறான்.
அதுவே மோட்ச நிலையில் கிட்டக் கூடியது. அதுவே மூலசக்தியாம்
இறைவனிடம் உள்ளது. அந்த நிலைக்கு தியானம் ஒருவனை அழைத்துச்
செல்லும் என்கிறது கீ தை.

இந்த யோகம் யாருக்கு அமையாது என்பதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர்


சொல்கிறார்:

"அதிகமாகச் சாப்பிடுபனுக்கு யோகம் கிட்டாது. ஒரேயடியாகச்


சாப்பிடாதவனுக்கும் யோகம் கிட்டாது. அதிகமாகத் தூங்குபவனுக்கும் இல்லை,
அர்ஜுனா, அதிகமாக விழிப்பவனுக்கும் இல்லை."

”அளவுக்கு மீ றினால் அமிர்தமும் நஞ்சு” என்கிறது ஒரு அருமையான


பழமொழி. அமிர்தமே அளவை மீ றும் போது நஞ்சு என்றால் மற்றவற்றைப்
பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாப்பாடு-பட்டினி, உறக்கம்-உறக்கம்
இன்மை இவை எதிலுமே மிதமாக இருந்தால் தான் யோகம் சாத்தியமாகும்
என்கிறது கீ தை.

இதைத் தன் வாழ்க்கையில் உணர்ந்து தெளிந்த ஞானிகளில் மிக


முக்கியமானவராக கௌதம புத்தரைச் சொல்லலாம்.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் பழங்கால ஏடுகள்
அவரது ஞானத் தேடல் வழிகளை விவரித்திருக்கின்றன. ஞானத்தைத் தேடிய
சித்தார்த்தன் எதை எல்லாம் அக்காலத்தில் உயர்வாகவும், சிறந்ததாகவும்
சொல்லி இருந்தார்களோ அதை எல்லாம் முழுமையாக முயன்று
பார்த்திருக்கிறார். மாதக் கணக்கில் பட்டினி கிடந்திருக்கிறார். உடலை ஒரு
பொருட்டாகவே நினைக்காமல், உடல் பற்றிய பிரக்ஞை ஞானத்திற்கு
எதிரானது என்ற சித்தாந்தத்தில் உறுதியாக பல வருடங்கள் இருந்து
பார்த்திருக்கிறார். அவரது ஞானத் தேடல் முயற்சிகளின் போது ஒருசில
சாதகர்களும் அவருடன் சேர்ந்து எல்லா வழிகளையும் பரிட்சை செய்து
பார்த்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இதில் எல்லாம் ஞானம் கிட்டாது என்பதைப்
புரிந்து தெளிந்தார். முழுப்பட்டினி கிடத்தல், உடலை வருத்திக் கொள்ளல்
ஆகியவற்றை அவர் கை விட்ட போது அவருடன் இருந்த சாதகர்களுக்கு அவர்
மீ து இருந்த மதிப்பு போய் விட்டது. கடுமையான முயற்சிகளைக்
கைவிடுவதன் மூலமாக அவர் சுகவாழ்க்கைக்குத் திரும்புவதாக அவரை
அவர்கள் குற்றம் சாட்டினர். அவரிடம் இருந்து விலகிப் போயினர்
ஆனால் மிதமான அளவான வாழ்க்கைக்குத் திரும்பிய சித்தார்த்தன் அவர்கள்
நினைத்தது போல தன் ஞானத் தேடலில் உறுதியைக் குறைத்துக் கொண்டு
விடவில்லை. உள் நோக்கிக் குவிந்தன அவரது கவனமும், முயற்சிகளும்,
பயிற்சிகளும். சித்தார்த்தன் புத்தராக முடிந்தது. பிற்காலத்தில் அவரை விட்டு
விலகிய அந்த சாதகர்களும் அவரது சீடர்களாக மாறினார்கள்.

புத்தர் உணர்ந்த உண்மையைத் தான் முன்பே ஸ்ரீகிருஷ்ணர் கீ தையில் சொல்லி


இருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டே இருப்பவனுக்கும் சரி, சாப்பாட்டையே
மறுப்பவனுக்கும் சரி சாப்பாடு பற்றிய எண்ணம் பிரதானமாகிறது. தூங்கிக்
கொண்டே இருப்பவனுக்கும் சரி, தூக்கத்தை மறுப்பவனுக்கும் சரி தூக்கம்
பற்றிய எண்ணம் மிக முக்கியமாகிறது. எப்போது தூக்கம் அல்லது சாப்பாடு
போன்ற விஷயங்கள் பிரதானம் ஆகின்றனவோ அப்போது யோகம் அல்லது
ஞானம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது அல்லவா? பின் எப்படி யோகம்
கைகூடும் ?

25.

மேன்மையான
யோக நிலை.

தவழும் குழந்தை ஓடுவதற்கு முன் உட்கார, நிற்க, நடக்க கற்றுக் கொள்ள


வேண்டும். இது எல்லோருக்கும் தெரிகிறது. யாருமே தவழும் குழந்தை
நாளையே ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற வேண்டும் என்று
ஆசைப்படுவதில்லை. ஆனால் தியானம் விஷயத்தில் மட்டும் பெரும்பாலான
மக்களின் ஆசை அந்த அளவில் தான் இருக்கிறது. கட்டுக் கடங்காத மனம்
ஒரு சில பயிற்சிகளிலேயே உடனடியாக தியான நிலைக்கு வந்து விட
வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதில் தோல்வி வருவது
இயற்கை என்றாலும் அந்த இயற்கை விளைவிலேயே சலிப்பும்
அடைகிறார்கள்.

யோக நிலைக்கு செல்லும் முன் முதலில் வாழ்க்கை ஒரு ஒழுங்கு


முறைக்குள் ஒரு வரம்புக்குள் வர வேண்டும். அப்போது தான் மனம் ஒழுங்கு
நிலைக்கு வரும். அதன் பின் தான் அதற்கு அடுத்த நிலையான தியானம்
அல்லது யோக நிலைக்குப் போக முடியும். ஸ்ரீகிருஷ்ணர் தியான யோகத்தில்
அதை மறுபடியும் கோடிட்டுக் காட்டுகிறார்.

"ஒழுங்கிற்கு உட்பட்ட உணவும், செயல்களும் உடையவனாய், உறக்கத்திலும்


விழிப்பிலும்
விழிப்பிலும் ஒழுங்கிற்கு உட்பட்டவனாய் இருப்பின் அவனுடைய யோகம்
துயரை அழிக்கும்."
மனதை சிறிது சிறிதாக ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்த பின் தான்
முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒருவன் முயலவே முடியும்.
அப்போதும் கூட அது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் அதற்கான குறைந்த
பட்சத் தகுதியைப் பெற்று விட்ட நிலை அது. விடாமுயற்சியால் முடியக்
கூடிய யோக நிலையை மேலும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

"எப்போது ஒருவனுடைய சித்தம் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு ஆத்மாவிலேயே


நிலைத்திருக்குமோ, சகல ஆசைகளிலும் பற்று நீங்கியதாக இருக்குமோ
அப்போது அவன் யோகி என்று சொல்லப்படுகிறான்."

சித்தத்தை அடக்கி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியின் யோக


நிலைக்கு, காற்றில்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கே
உவமையாகும்.

ஒரு கணமும் ஓரிடமும் நிலைத்து நிற்க முடியாமல் அங்கும் இங்குமாய்


ஓடிக் கொண்டு இருக்கும் மனம், அதில் சந்தோஷம், இதில் சந்தோஷம் என்று
பொய்யான அனுமானங்களில் முயன்று முயன்று ஏமாறும் மனம்,
தெளிவடைந்து வெளி நோக்கை விட்டு விட்டு உள் நோக்கிப் பயணிக்கும்
போது யோகம் கைகூட ஆரம்பிக்கும். அனுபவத்தாலும், அறிவாலும்
ஆசைகள் புதைகுழி என்று கவனமாக அவற்றில் இருந்து கவனமாக விலகி
ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போது யோகம் முழுமையாக கைகூடுகிறது.
அப்போது தான் மனிதன் யோகி ஆகிறான்.

அவனது யோக நிலைக்கு கீ தை சொல்லும் இந்த உதாரணம் மிக அழகானது.


’காற்றில்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு’ தங்குதடை
இல்லாமல் சீரான ஒளியைத் தரக்கூடியது. திடீரென்று பிரகாசித்து திடீர் என்று
அணையக்கூடிய அபாயநிலைக்குச் செல்லும் விளக்கின் ஒளி தெளிவாக
எதையும் காட்டாது. தெரிவது என்ன என்று தெளிவாக அறிவதற்குள் அதன்
ஒளிக் குறைவால் குழப்பம் அல்லது அரைகுறையாய் அறியும் தடுமாறும்
நிலை காற்றில் அசையும் விளக்கில் அதிகம். காற்றின் வேகம் அதிகம்
இருந்தாலோ பெரும்பாலும் விளக்கு
அணைந்தே போய் இருட்டில் மூழ்க வேண்டி வரும். அப்போது விளக்கு
இருந்தும், திரி இருந்தும், எண்ணெய் இருந்தும் கூடப் பயனில்லை.

யோக நிலை கூடிய மனிதனோ காற்றில்லாத இடத்தில் அசைவின்றி எரியும்


விளக்கு போல எல்லா நேரங்களிலும் சீரான ஞான ஒளியுடன் திகழ்கிறான்.
ஞானம் அவ்வப்போது குறையும் பலவனமோ,
ீ ஞானம் அணைந்தே போகும்
அபாயமோ யோகியிடம் இல்லை.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் யோகத்தின் மேன்மையான நிலையை விளக்குகிறார்.

"யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட சித்தமானது எங்கே பூரணமாய்


லயித்து நிலைத்திருக்கிறதோ, எந்த நிலையில் ஆத்மாவினால் ஆத்மாவை
அறிந்து ஒருவன் மகிழ்ச்சி அடைகிறானோ,
எந்த நிலையில் புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை புத்தியால்
அறிகிறானோ, எதில் நிலைத்த பின் அவன் உண்மையில் இருந்து
வழுவுவதில்லையோ,

எதை அடைந்த பின் மற்றொரு லாபம் உயர்ந்ததென்று கருத மாட்டானோ,


எதில் நிலைத்த பின் பெரிய துக்கம் வந்தாலும் சஞ்சலப்பட மாட்டானோ

அதை துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம் என்று அறிவாயாக.


மனம் கலங்காமல் திடமாக ஒருவன் அந்த யோகத்தைப் பயில வேண்டும்."

புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை முட்டாள்கள் அடைய முடியாது.


எத்தனை சந்தர்ப்பங்களில் புலன்கள் வழிப்போய் அவஸ்தையில் மாட்டிக்
கொண்டாலும் அவன் அடுத்தது அப்படி இருக்காது என்ற மூட நம்பிக்கையில்
மேலும் புலன்வழியிலேயே சந்தோஷத்தைத் தேடுகிறான். அனுபவங்கள்
அவனுக்கு எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. பலர் பல சந்தர்ப்பங்களில்
மட்டுமல்லாமல் அப்படியே பிறவிகள் தோறும் முயன்று ஏமாறுகிறார்கள்.

சித்தம் ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போதே நிலையான இன்பம்


சித்திக்கின்றது. அது சாதாரண இன்பம் அல்ல பேரின்பம். அந்த நிலையை
ஒருவன் அடைய முடிந்தாலும் விவரிக்க முடியாது. விவரித்தாலும்
மற்றவர்க்கு விளங்க வைக்க முடியாது.
சமுத்திரத்து தவளை கிணற்றுத் தவளைக்கு சமுத்திரத்தை எப்படி விவரிக்க
முடியும். விவரிக்க முயன்றாலும் கிணறை மட்டுமே வாழ்நாள் முழுவதும்
அறிந்த கிணற்றுத் தவளை கிணறு என்ற அளவுகோலால் அல்லவா
சமுத்திரத்தை அளக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும். முடிகிற
காரியமா அது !

யோக நிலையை அடைந்தவனுக்குப் பொய்யின் அவசியம் இருக்காது. எந்தப்


பூச்சும் தேவை இருக்காது. எனவே உண்மையிலிருந்து விலகவோ, உண்மையைத்
திரிக்கவோ அவன் முயலமாட்டான். மேலும் அந்த யோக நிலையை அடைந்த
பின் வேறெதுவும் அதைக்காட்டிலும் லாபமாக இருக்க முடியாது. அதன் பின்
எந்த துக்கம் வந்தாலும் உண்மையில் கலங்க வேண்டிய காரணம் இருப்பதாக
யோகி நினைக்க மாட்டான். எல்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்த
பின் சஞ்சலப்பட என்ன இருக்கிறது ?

அந்த யோக நிலையை விளக்கிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணர் கடைசியில்


ஒரே வாக்கியத்தில் அதற்கு விளக்கம் தருகிறார்.

"துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம்."

எதெல்லாம் துக்கத்தை நம்மிடம் சேர்க்குமோ அதற்கு எதிர்மாறான யோகம்


என்கிறார். துக்கமே வேண்டாம் என்று சொல்பவர் அடைய வேண்டிய யோக
நிலை இது. அதை கலங்காத, திட மனதுடன் ஒருவர் கற்றுத் தேர்ந்தால் பின்
கற்க எதுவுமில்லை. பின் பெற வேண்டியதும் எதுவுமில்லை.

இந்த யோக நிலையை, ஸ்ரீகிருஷ்ணர் போலவே, திருமூலரும் மிக


எளிமையான சொற்களில் அழகாக விளக்குகிறார்.
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத்
தானி ருந்தானே!"

எந்தக் கேடும், எந்த துக்கமும் வேண்டாம் என்று நினைப்பவன் முதலில்


தன்னை அறிய வேண்டும். ஏன் என்றால் எல்லாத் தீமையும், எல்லாத்
துக்கங்களும் மனிதன் தன்னை அறியாத குறைபாட்டால் தான் வருகின்றன.
தன்னை அறியும் அறிவை, அந்த யோக நிலையை அடைந்த பின், அறிந்த அந்த
ஆத்மநிலையையே போற்றி அவன் பூரண திருப்தியுடன் வாழ்வான்.

26

யோகியின் பார்வை.

துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகத்தை விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர்


அடுத்ததாக பேரின்பத்திற்கு வழியைச் சொல்ல ஆரம்பிக்கிறார் :

"சங்கல்பத்தால் உண்டாகும் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் துறந்து,


புலன்களின் கூட்டத்தை மனத்தினாலேயே எல்லா இடங்களில் இருந்தும்
இழுத்துக் கட்டுப்படுத்தி, தைரியத்துடன் கூடிய புத்தியினால் மெள்ள மெள்ள
அடக்க வேண்டும். மனத்தை ஆத்மாவிலேயே நிலை நிறுத்தி வேறெதையும்
நினைக்காமல் இருக்க வேண்டும்."

"நிலையாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனதானது எந்தெந்த


விஷயங்களைத் தேடிச் செல்கிறதோ, அந்தந்த விஷயங்களில் அதைச்
செல்லாமல் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசமாக்கிக் கொள்ள வேண்டும்."

"மனம் சாந்தமாகி, ரஜோ குணம் நீக்கப்பட்டு, மாசு நீங்கி, பிரம்மமாக ஆன இந்த


யோகியை மிக உயர்ந்த இன்பமானது வந்தடைகிறது."

"இப்படி ஆத்மாவை எப்போதும் யோகத்தில் இருத்திய யோகியானவன்


பிரம்மத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பேரின்பத்தை எந்த விதமான
சிரமமும் இன்றி எளிதில் அனுபவிக்கிறான்."

எது நமக்குப் பிரதானமோ அதையே நாம் என்றும் பெறுகிறோம். ஆனால்


பிரதானமாக நாம் நினைக்கும் விஷயங்கள் நமக்கு அமைதியையும்
ஆனந்தத்தையும் தரக்கூடியவை தானா என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து
செயல்படுவது அவரவர் கையில் இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்றைப்


பிரதானமாக நினைத்து ஆசைப்படுகிறோம். அதை அடைய முடிந்தால் அது
வெற்றிகரமான வாழ்க்கை என்று நம்புகிறோம். ஆனால் அடைந்த பின்னும்
ஏதோ குறைகிறதே, அடைந்த பின்னும் நிம்மதி இல்லையே, சில சமயம்
வெறுமையும் சில சமயம் துக்கமும் நம்மை வாட்டுகிறதே என்று
எண்ணாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. இதற்கு என்ன தீர்வு?
பிரச்சினை மனதில் உள்ளதால் தீர்வையும் நாம் அங்கேயே தேட வேண்டும்.
முதலில் புலன்கள் பின்னால் போய் அலைந்து அலைக்கழிக்கப்பட்டு ஏமாறும்
மனதை அங்கிருந்து புத்தியால் இழுக்க வேண்டும். மனம் தானாக
அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. எண்ணற்ற முறை
ஏமாந்திருந்தாலும், துக்கத்தினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை அப்படி
நேர்ந்து விடாது என்று மனம் மறுபடி ஆசைப்பட்டு முயலக்கூடியது.
ஆசைகளின் பின் ஓடும் ஓட்டத்தின் விளைவுகள் என்றுமே ஒன்று தான் என்று
இடித்துச் சொல்லி இழுத்து நிறுத்த புத்தியால் மட்டுமே முடியும். அதையும்
‘மெள்ள மெள்ள’ தான் சாதிக்க முடியும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
மனதால் எதையுமே நினைக்காமல் இருக்க முடிவதும் கஷ்டம் என்பதால்
தான் அடுத்த அறிவுரையையும் தருகிறார் - மனதை ஆத்மாவில் நிலை
நிறுத்தச் சொல்லி. மனதிற்குப் பற்றிக் கொள்ள ஆத்மஞானம் இருந்தால்
வணாக
ீ வேண்டாததன் பின் செல்ல வேண்டி இராது அல்லவா?

ஆத்மாவில் நிலை நிறுத்தப்பட்ட மனம் சாந்தி அடைகிறது. உண்மையாக மனம்


சாந்தி அடையும் போது மூன்று குணங்களில் ஆசைக்கும், அதனால்
நடவடிக்கைகளுக்கும் மனிதனை உந்தும் ரஜோ குணம் நீக்கப்படுகிறது.
மனதின் மாசு நீக்கப்படுகிறது. அதன் பின் அந்த மனிதன் இன்பத்தை நோக்கி
ஓட வேண்டியதில்லை. யோகியாக மாறும் அந்த மனிதனை, சாதாரண இன்பம்
அல்ல, பேரின்பமே தேடி வரும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

புலன்களுடன் சிற்றின்பம் இணைந்திருப்பது போல பிரம்மத்துடன் பேரின்பம்


இணைந்திருக்கிறது. ஆத்மஞானம் பெற்று அமைதியடைந்தவன் அந்தப்
பேரின்பத்தை இடைவிடாமல் சிறிதும் சிரமம் இல்லாமல் பெறுகிறான். இப்படி
இந்த தியான யோகத்தில் கணிதக் கோட்பாடு சொல்வது போல ஸ்ரீகிருஷ்ணர்
பேரின்பத்திற்குப் படிப்படியாக வழி சொல்கிறார்.

சரி, இப்படி யோகியாக மாறியவன் பார்வை எப்படி இருக்கும்? அவன் உலகை


எப்படிப் பார்ப்பான்? அவனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு
எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகப் பதில்
சொல்கிறார் :

"யோகத்தில் நிலைத்தவன் எங்கும் சம நோக்குடையவனாய், எல்லா


உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா
உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்."

"எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும்


என்னிடத்தே காண்கிறானோ, அவன் என் பார்வையில் இருந்து
மறைவதில்லை. நானும் அவன் பார்வையில் இருந்து மறைவதில்லை."

"எல்லா உயிர்களிலும் ஒரே நிலையைக் காண்கின்றவனாய், எல்லா


உயிர்களிடத்திலும் உள்ள என்னைத் தொழும் யோகி எந்த நிலையிலும், எந்த
விதத்திலும் என்னிடமே இருப்பான்."

"அர்ஜுனா, இன்பமாயினும், துன்பமாயினும் தன்னைப் போல் எல்லோரையும்


சமமாகக் காண்பவன் பரமயோகியாகக் கருதப்படுவான்."

சமநோக்கைப் பற்றிச் சொன்ன அளவுக்கு ஸ்ரீகிருஷ்ணருக்குச் சலிப்பு


தட்டவில்லை
இங்கு மீ ண்டும் அதைப் பற்றி அவர் சொல்கிறார்.

அடுத்தவனை நேசி என்று என்று சொல்கிறார்கள். அவனை நேசிக்க


முடியாமல் இருக்கக் காரணமே அவன் அடுத்தவன் என்பது தானே? இன்றைய
பெரும் பிரச்சினைகளுக்கும், சீரழிவுகளுக்கும் முக்கியக் காரணமே எல்லை
இல்லாத சுயநலம் தானே? அடுத்தவர் நலத்தை அழித்தாவது நம்மை
வளர்த்திக் கொள்ள வேண்டும், நாம் சுகம் அனுபவிக்க வேண்டும் என்பது
தானே?

எல்லா உயிர்களிடத்தும் தன்னையும், தன்னுள் எல்லா உயிர்களையும் காண


முடியும் போது மட்டுமே உண்மையாக அடுத்தவனை நேசிக்க முடியும்.
யோகியானவன் அப்படிக் காண்கிறான் என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த
சுலோகத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறார். அந்த யோகி
எங்கும் எதிலும் இறைவனைக் காண்கிறான் என்கிறார். இறைவன் எங்கும்
எதிலும் நீக்கமற நிறைந்திருப்பதை அந்த யோகியினால் பார்க்க முடிகிறது
என்கிறார்.

எங்கும் எதிலும் இறைவனைக் காண முடிந்தால் உலகமே பவித்திரமாக


அல்லவா மாறி விடுகிறது? சித்தாந்தங்கள் வைத்து அந்த யோகி அப்படிச்
சொல்வதில்லை. அனுபவத்தில், உணர்வு பூர்வமாக அதை உணர்கிறான். அந்த
நிலையை அடையும் போது அவன் நடிக்க வேண்டி இருப்பதில்லை. இருவேறு
நிலைகள் இருந்தால் அல்லவா நடிக்கும் அவசியம்? இறைவனைக் காண
முடியாமல் மறைக்கும் அறியாமை கூடிய மனநிலைகள் இல்லாததால் அந்த
யோகிக்கு இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க முடிகிறது.
அதே போல் இறைவன் பார்வையில் இருந்தும் அவன் எப்போதும்
மறைவதில்லை.

இதற்கு அடுத்த மேல் நிலை ஒன்று உண்டு. இறைவன் பார்வையில்


இருப்பதை விடவும் உயர்ந்த அந்த சிறப்பு நிலை என்னவென்றால் அது
இறைவனிடத்திலேயே இருக்கும் நிலை. பார்வையில் இருப்பது என்றால் கூட
இறைவனுக்கும் இவனுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது என்றாகிறது.
இறைவனிடத்திலேயே இருப்பது என்றால் அந்த இடைவெளியும் அற்றுப்
போகிறது. அந்த நிலை எப்போது வரும் என்றால் ஒவ்வொரு உயிரிலும்
இறைவன் இருப்பதை அறிந்திருப்பதோடு நின்று விடாமல் அந்த உயிரில்
இருக்கும் இறைவனைத் தொழ முடியும் பக்குவம் வரும் போது வருகிறது.
அப்படித் தொழ முடிந்த
யோகி எந்த நிலையிலும் எந்த விதத்திலும் என்னிடத்திலே இருப்பான்
என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இங்கு அவர் தேவகி புத்திரனும், அர்ஜுனன்
நண்பனுமாகிய கண்ணனைச் சொல்லவில்லை, இறைவனையே
குறிப்பிடுகிறார்.

இன்ப காலத்தில் மனிதன் நடந்து கொள்ளும் விதமே வேறு, துன்ப காலத்தில்


நடந்து கொள்ளும் விதமே வேறு. இன்ப காலத்தில் கனிவாக நடந்து
கொள்ளும் எத்தனையோ பேர் துன்ப காலத்தில் எதிர்மறையாக நடந்து
கொள்வார்கள். கோபம், ஆற்றாமை, எல்லாம் அவர்களை மற்றவர்களிடம்
வேறு மாதிரி நடந்து கொள்ள வைத்து விடும். இதற்கு நேர்மாறான ஆட்களும்
இருக்கிறார்கள். கஷ்டகாலத்தில் அடக்கமாகவும், அனுசரணையாகவும்
நடந்து கொள்வார்கள். ஆனால் கஷ்டம் எல்லாம் நீங்கி சுகங்கள் வர
ஆரம்பித்தாலோ அவர்கள் தோரணையே மாறி விடும். அடக்கம், அனுசரணை
எல்லாம் போய் கர்வம், அலட்சியம் ஆகியவை அவர்களை ஆட்சி செய்ய
ஆரம்பித்து விடும்.

இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே போலவும் சரியாகவும் நடந்து கொள்ளக்


கூடியவர்கள் மிக மிக அபூர்வம். அந்த இரண்டு நிலைகளிலும் தன்னைப்
போலவே அடுத்தவர்களைக் காண்பதும், அதற்கேற்ப நடந்து கொள்வதும்
முடிவதும் அதையும் விட மிக அரிதானது. அது மிக உயர்ந்த யோக நிலையை
அடைந்தவன் யோகிகளிலேயே சிறந்த பரமயோகி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

27

முயன்று
தோற்றவர்களின்
கதி என்ன?

ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனனிற்கு ஒரு


சந்தேகம் வந்தது. அதைக் கேட்கிறான் :

”மதுசூதனா! சமநிலை என்று எந்த யோகத்தைப் பற்றிச் சொன்னாயோ அது


நிலையாக நிற்காது என்று நான் நினைக்கிறேன்."

"கிருஷ்ணா! மனம் சஞ்சலமானது; குழப்பத்தை விளைவிக்கக் கூடியது;


அடங்காதது; வலிமையானது; காற்றை அடைக்க முடியாதது போல அதையும்
அடக்க முடியாதென்று நான் நினைக்கிறேன்.”

அர்ஜுனனின் இந்த சந்தேகம் அறிவு பூர்வமானது. சமநிலை என்ற யோகநிலை


சுலபமானது அல்ல. அந்த நிலையை அடைவது மிகக் கஷ்டம். அப்படியே
அடைய முடிந்தாலும் அந்த மேன்மையான நிலையைத் தக்க வைத்துக்
கொள்வது அதை விடப் பெரிய கஷ்டம். ஏனென்றால் ஒரு சமயத்தில்
அடங்குவது போலத் தெரியும் மனம் இன்னொரு சமயம் கட்டுக்கடங்காமல்
ஓடக் கூடும். ஒரு சமயத்தில் தெளிவாக இருப்பது போல் தோன்றும் மனம்
இன்னொரு தருணத்தில் குழப்பமடைந்து விடும். இது யோக மார்க்கத்தில்
சிறிது தூரம் சென்றவர்களும் அனுபவித்திருக்கக் கூடிய குறைபாடு. எதிர்த்து
நிற்கும் போது மனம் பெறும் வலிமை அபாரமானது. பெரும் காற்றை எப்படி
அடக்க முடியாதோ அது போல மனதையும் அடக்க முடியாது. அதனால்
சமநிலை அடைந்து விட்டதாக ஒரு கணம் தோன்றினாலும் மறு கணம் அது
சந்தேகப்பட வேண்டிய நிலையே.

அதை மறுக்காத ஸ்ரீகிருஷ்ணர் அந்தக் காரணத்தினாலேயே மனமுடைந்து


போகவும், முயற்சிகளைக கைவிடவும், வேண்டியதில்லை என்று தைரியம்
சொல்கிறார்.

“மனதை அடக்க முடியாது என்பதில் ஐயமில்லை. மனம் சஞ்சலமானது தான்.


ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை இழுத்து நிறுத்தி
விடலாம்."
"மனதைக் கட்டுப்படுத்தாதவனுக்கு யோகம் கிட்டாது. மனதை வசப்படுத்தி
உபாயத்துடன் முயற்சி செய்பவனுக்கு யோகம் கிட்டும்.”

மனதைக் கட்டுப்படுத்துவது கஷ்டம் தான் என்றாலும் முடியாததில்லை என்று


ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு இரண்டு முக்கியத் தேவைகளைக்
கூறுகிறார். ஒன்று பயிற்சி இன்னொன்று வைராக்கியம். இரண்டில் ஒன்று
இல்லா விட்டாலும் மனதைக் கட்டுப்படுத்துவது என்பது ஒருவருக்குக்
கைகூடாது. மனதைக் கட்டுப்படுத்தா விட்டால் யோகம் கூடாது. மனதை
வசப்படுத்தினால் மட்டும் போதாது. உபாயத்துடன் கூடிய முயற்சி இருந்தால்
தான் யோகம் சித்தியாகும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். முயர்சிகள்
எந்திரத்தனமாக இருந்தால், அறிவார்ந்தவையாக இல்லாமல் இருந்தால்
யோகம் கூடாது.

உடனே அர்ஜுனனிற்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகம்


நியாயமாக எல்லாருக்கும் வருவது தான். நம் எல்லாருடைய பொருட்டும்
அன்றே அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டிருக்கிறான்.

“கிருஷ்ணா! நம்பிக்கை உள்ளவன் யோகத்தில் நிலை பெறாமல் அலையும்


மனம் காரணமாக முயற்சிக் குறைவினால் யோகத்தில் பூரண நிலையை
அடையாவிட்டால் அவன் கதி என்ன? இரண்டும் கெட்டானாய் பிரம்மத்தை
அடையும் மார்க்கத்தில் நிலைக்காமல் நழுவி சிதறிய மேகம் போல் அழிந்து
விடுவானா? இந்த சந்தேகத்தைத் தீர்க்க உன்னைக் காட்டிலும்
பொருத்தமானவன் வேறில்லை என்பதால் கேட்கிறேன். என் சந்தேகத்தைத்
தீர்ப்பாயாக”

பார்த்தனின் கேள்வி மிக முக்கியமானது. ஸ்ரீகிருஷ்ணர் சொன்ன


யோகநிலையோ மிக உயர்வானது. எந்த மனதைக் கட்டுப்படுத்தி அந்த யோக
நிலையை அடைய வேண்டுமோ அந்த மனம் நல்ல விஷயங்களுக்கு என்றால்
பலவனமாக
ீ இருக்கிறது. வேண்டாத விஷயங்களுக்கு என்றால் மிக
வலிமையாக நம்மை அந்தப் பக்கம் இழுக்கிறது. சரி

கஷ்டப்பட்டு ஒரு முறை அடக்கி விட்டாலோ நமக்கு நிரந்தரமான வெற்றி


என்று சொல்லி விட முடியாது. அடுத்த முறை மனம் அப்படியே அடங்கி
இருக்குமா என்று தெரியாது. அடுத்த முறை இருந்தாலும் அதற்கடுத்த
முறையும் அப்படியே இருக்குமா என்பது சந்தேகம். நிரந்தரமான வெற்றி,
நிரந்தரமாய் தங்கும் யோக நிலை ஒரு பிறவியில் நமக்கு சித்திக்கிற
சமாச்சாரம் போல் தெரியவில்லை. செய்ய ஆசைப்படும் காரியம் பெரிது,
வாழ்நாளோ குறுகியது. இந்த சஞ்சல மனதை வைத்துக் கொண்டு செய்யும்
இந்தப் பிறவியில் எடுக்கும் முயற்சிகளில் சறுக்கி விட்டால் (அப்படித் தானே
பெரும்பாலும் நடக்கிறது) அந்த மனிதனின் கதி என்ன? எல்லாம் வண் ீ தானா?
என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு நியாயமாக வர அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்
உறுதியாகப் பதில் சொல்கிறார்.

“பார்த்தா! இந்த உலகத்திலோ, பரலோகத்திலோ அவனுக்கு அழிவே


கிடையாது. நல்லதைச் செய்பவன் எவனும் துர் கதி அடைய மாட்டான்."

" அப்படி யோகத்திலிருந்து நழுவியவன், புண்ணியம் செய்தவர்கள் அடையக்


கூடிய லோகங்களை எய்தி நீண்ட காலம் வாழ்ந்து தூய்மையான
செல்வந்தர்கள் வட்டில்
ீ பிறக்கிறான். அல்லது ஞானிகளான யோகிகளுடைய
உயர் குலத்தில் பிறப்பான். உலகில் இத்தகைய பிறவி என்பது
கிடைத்தற்கரியது."

"அந்தப் பிறவியில் அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுவான்.


பிறகு யோக சித்திக்காக மறுபடி முயற்சி செய்வான். அவன் முற்பிறவிகளின்
பயிற்சிகளின் தொடர்ச்சியாக தன்னை அறியாமலே யோகத்தின் பக்கம்
இழுத்துச் செல்லப்படுகிறான். மாசுக்கள் நீங்கப்பெற்று அவன் உறுதியாக
முயன்றால், பல பிறவிகளின் முயற்சிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை
அப்பிறவியில் அடைகிறான்.”

ஒரு பெரிய பாறையை உளியால் உடைக்க ஒருவன் முயற்சிக்கிறான் என்று


வைத்துக் கொள்வோம். ஒரே அடியில் உடைப்பது என்பது இயலாத காரியம்.
நூற்றுக்கணக்கான அடிகள் தேவைப்படும். கல் உடைவது கடைசி அடியில்
என்றாலும் அந்த வெற்றிக்கு அத்தனை அடிகளும்
உறுதுணையாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை அல்லவா? அப்படித்
தான் நம் எல்லா முயற்சிகளும்.

மனிதனின் எந்த நல்ல முயற்சியும் வண் ீ போவதில்லை. முயற்சிகளுக்கு


இடையே உள்ள கால இடைவெளிகள் அதிகமாக இருந்தாலும் கூட இது
உண்மை. கால இடைவெளிகள் பிறவிகளாக இருந்தாலும் கூட இந்த உண்மை
பொருந்தும் என்று ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு உத்திரவாதம் தருகிறார். விட்ட
இடத்தில் இருந்து தொடர முடியும் என்கிறார் அவர். அதனால் நாம் நம்
பலவனங்களால்
ீ மனம் உடைந்து விட வேண்டியதில்லை. கை விட்ட
முயற்சிகளுக்காக, நழுவ விட்ட சந்தர்ப்பங்களுக்காக வருத்தப்பட
வேண்டியதில்லை.

இந்தப் பிறவியில் ஆன்மிக நாட்டம் ஏற்படுவதே, யோக சித்திக்காக சிறிய


அளவிலானாலும் சரி முயற்சிகள் மேற்கொள்வதே நாம் முந்தைய
பிறவிகளில் செய்த நல்ல முயற்சிகளின் பலனே. இப்போதைய நாட்டமும்
முயற்சியும் அவற்றின் தொடர்ச்சியே. சறுக்கியது எத்தனை முறை என்ற
கணக்கில் கவனம் வைத்து தன்னம்பிக்கை நாம் இழக்க வேண்டாம். இன்னும்
அந்தத் தேடலை தக்க வைத்திருக்கிறோம் என்று தேற்றிக் கொள்வோம்.

இந்த அறிவுரை மதங்களைக் கடந்த அறிவுரை. சொல்கிற பெயர்கள்


எதுவானாலும் இறை நாட்டம், மேன்மையான வழிகளில் நாட்டம் எல்லாம்
நம்மை உய்ய வைக்கும் வழிகள். குரானில் கூட கீ தையின் இந்த சிந்தனை
போன்றே உறுதியாக இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ”யார் நல்ல
தொண்டுகள் செய்பவனாகவும் நம்பிக்கை உள்ளவனாகவும் இருக்கிறானோ
அவனது முயற்சி நிராகரிக்கப் படுவதில்லை பார்! அவனுக்காக நாம் அதைப்
பதிவு செய்கிறோம்”

எல்லா நற்செயல்களும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது என்பதே நமக்கு


மிகப் பெரிய தூண்டுகோல் அல்லவா?

தியான யோகத்தைக் கடைசியாக இந்த வரிகளில் ஸ்ரீகிருஷ்ணர் முடிக்கிறார்.


"என்னையே நம்‌பி என்னையே நெருங்கி என்னையே சார்ந்து என்னையே
தொழுகின்றவனே யோகிகளுக்குள் சிறந்த யோகி”

இறைவனையே நம்பி, இறைவனிடமே நெருக்கமாக இருந்து, இறைவனையே


சார்ந்து வாழ்ந்து, இறைவனையே தொழுது அடையும் யோக நிலை
எல்லாவற்றிலும் சிறந்த யோக நிலை. அதுவே ஆன்மிகத்தின் சிகர நிலை.
அந்த நம்பிக்கையும், நெருக்கமும், சார்ந்திருத்தலும், பக்தியும் நமக்குள்
சாதாரணமாக நிகழ்ந்து விடாது. இப்பிறவியிலும், முந்தைய பிறவிகளிலும்
முயன்றிருந்தால் மட்டுமே நிகழ முடியும்!

கீ தையின் ஆறாவது அத்தியாயம் இத்துடன் முடிகிறது!

28.

அனைத்திலும் ஆண்டவன் !

பகவத் கீ தையை சில அறிஞர்கள் ”நீயே அதுவாக இருக்கிறாய்” என்ற மகா


வாக்கியத்தின் சாரமாகவே கருதுகிறார்கள். அந்த மூன்று சொற்களின் “நீ”
சம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் பகவத் கீ தையின் முதல் ஆறு
அத்தியாயங்களும், “அது” சம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் இரண்டாம்
ஆறு அத்தியாயங்களும், இரண்டிற்கும் இடையே ”இருக்கிற” தொடர்பான
தத்துவ விளக்கங்கள் கடைசி ஆறு அத்தியாயங்களும் விளக்குவதாக
அவர்கள் நினைக்கிறார்கள்.

அதன்படி பகவத்
கீ தையின் முதல் பகுதி முடிந்து இரண்டாம் பகுதி, அதன் ஏழாம்
அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில்,. ஞானத்தையும்,
விஞ்ஞானத்தையும் ஒருசேர அர்ஜுனனிற்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்குவதில்
ஆரம்பமாகிறது.

“ஞானம், விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுவதுமாக நான் உனக்குச்


சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது வேறு
ஒன்றுமில்லை."

"பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் சித்தி பெற முயல்கிறான். அப்படி முயற்சி


செய்யும் பலரில் எவனோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்”

ஞானம் மூலம் மட்டுமே இறைவனை அறியலாம் என்பதில்லை. விஞ்ஞானம்,


ஞானத்திற்கு எதிரானதும் அல்ல. இரண்டும் ஒரு உண்மையின் இரண்டு
கோணங்கள், இரண்டு பக்கங்கள். குழப்பம் இல்லாமல், தவறான
கண்ணோட்டம் இல்லாமல் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் உண்மை
விளங்கவே செய்யும். ஒன்றின் மூலமாக மட்டுமே அணுகியவனுக்கு மற்ற
கோணத்தில் பார்த்தால் வேறு விதமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம்.
அந்த சந்தேகம் உறுதியான ஒரு நிலைப்பாடிற்கு வர முடியாதபடி ஒருவனைத்
தடுக்கலாம். அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் இரண்டைப் பற்றியும் சொல்ல
முனைகிறார். இரண்டிலுமே தெளிவைப் பெற்று விட்டால் சந்தேகம் வர
வாய்ப்பில்லை. அதனால் மேலும் தெரிந்து கொள்ளவும் எதுவும் மீ தமில்லை.
பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் மட்டுமே உண்மையாக இறைவனையும்,
உண்மையையும் நாடுபவனாக இருக்கிறான். அந்த உண்மையான முயற்சி அந்த
அளவு அபூர்வமே. அப்படி முயற்சி எடுப்பவர்களிலும் எண்ணிலடங்கா
மனிதர்களில் ஒருவனே இறைவனை, அந்தப் பேருண்மையை, உள்ளதை
உள்ளபடி அறிகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆன்மிகப் பயணத்தில் பல கோடி பேர் பயணிப்பதாக நினைத்துக் கொண்டு


இருக்கிறார்கள். உண்மையில் அது ஆசைப் பயணமாகவும், அஞ்ஞானப்
பயணமாகவுமே பெரும்பாலும் இருக்கின்றது. கேட்டதெல்லாம் தரும்
இறைவனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ அதை எல்லாம் கேட்டு,
அது கிடைத்து முடிந்த பின் அடுத்த ஒரு பட்டியலைக் கேட்டு, இந்த கேட்டுப்
பெறலின் போது வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வைக் கேட்டு,
பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கை ஆசை நோக்கியதாகவே இருக்கிறது.

இவர்களில் இருந்து வேறுபட்டு உண்மையை அறியவோ, இறைவனை


அறியவோ முற்படும் அபூர்வ முயற்சியை சில நூறு பேர் மட்டுமே
மேற்கொள்கிறார்கள். அவர்களிலும் “உள்ளதை உள்ளபடி” அறிய முடிவது
ஓரிருவருக்கு மட்டுமே சித்திக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஏனென்றால் அறிய முற்படுபவர்களில் கூட, பலரும் உண்மையை தங்கள்


முந்தைய அபிப்பிராயங்களுக்கு ஏற்ப அதை வளைத்துப் பார்க்கவோ, தங்கள்
நம்பிக்கைகளுக்கு ஏற்ப
மாற்றிப் பார்க்கவோ முற்படுகிறார்கள். அதனால் அவர்கள் அறியும்
ஆண்டவனும், உண்மையும் அவர்களின் தன்மைகளுக்கேற்ப தெரியும் பிரமையே
ஒழிய உண்மை அல்ல. உள்ளதை உள்ளபடி அறிய முடிவது பல கோடிகளில்
ஒருவருக்கே சித்திக்கின்றது.

புத்தரின் தம்மபதமும் இதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறது.


“மனிதனாகப் பிறப்பது கடினம். மனிதனாய் வாழ்வது மிக மிக கடினம். தர்ம
நெறியைக் கேட்பது கடினம். ஆனால் புத்தராய் பிறப்பதும், புத்தரின் நிலையை
அடைவதும் மிக அபூர்வமாகும்”

அடுத்ததாக விஞ்ஞானக் கோணத்தில். தன் இயற்கையின் இரு வகைகளின்


வெளிப்பாடாகவே இந்த உலகம் இருக்கின்றது என்று ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகின்றார்:

”பூமி, நீர், நெருப்பு, காற்று, வான், மனம், அறிவு, அகங்காரம், இவ்வெட்டு


வகையாக என் இயற்கை (பிரகிருதி) பிரிந்து தோன்றுகிறது."

"இது என் கீ ழ் இயற்கை. இதைக் காட்டிலும் உயர்ந்ததாகிய என் மேலான


இயற்கையை
அறி. அதுவே உயிராவது. பெருந்தோளாய், அதனாலேயே இவ்வுலகு
காக்கப்படுகிறது."

"எல்லா உயிர்களுக்கும் அந்த இரண்டுமே காரணம் என்று உணர்ந்து கொள்.


அதனால் உலகம் முழுமைக்கும் நானே ஆக்கமும் அழிவும் ஆவேன்.”
இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கீ ழான இயற்கை மேலான இயற்கை என்று சொல்வது
குறைத்தோ, மேம்படுத்தியோ ஒப்பிட்டு சொல்லப்படுவது அல்ல. ஏனென்றால்
இயற்கையில் கீ ழ், மேல் என்றெல்லாம் இல்லை. நமக்குப் புலப்படும் அளவில்,
புரிந்து கொள்ளும் நிலையில் இலகுவாக இருப்பது கீ ழ்நிலை. புலப்படாத
அளவில், சூட்சும நிலையில் இருப்பது மேல்நிலை. இப்படி எடுத்துக்
கொள்வதே சரியாக இருக்கும்.

பஞ்ச பூதங்களுடன் நம் மனம், புத்தி, நான் என்ற பிரித்துணரும் தன்மை


எல்லாம் சேர்வது தான் உலக சிருஷ்டிக்கு அடித்தளமாக இருக்கின்றன. நாம்
காணும் உலகத்தின் தோற்றம் எல்லாமே இந்த எட்டின் கூட்டணிக்குள்ளேயே
அடங்குகிறது. ஆனால் அது ஜட உலகம் மட்டுமே. அதன் உயிராக,
சாராம்சமாக இறைவனின் சூட்சும சக்தி உள்புகும்
போது தான் அது இயங்கும் உலகமாக ஆகிறது. அந்த சூட்சும சக்தி இல்லாமல்
உலகம் இல்லை, அதன் இயக்கமும் இல்லை.

ஜட உலகமும் இறைவனே, அதன் உயிர்ப் பொருளும் இறைவனே என்றாலும்


உயிர்ச் சாரமாய் இருக்கும் இறைவனின் மேலான தன்மையே பொதுவாக
நம்மால் இறைவனாக கருதப்படுகிறது. அந்த சூட்சும சக்தியே படைப்பிற்கு
மட்டுமல்லாமல் அழிவிற்கும் காரணமாக அமைந்திருந்திருக்கிறது

பகவத் கீ தையில் ஏழாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் இந்த


விஞ்ஞான உண்மையைத் தான் சமீப காலங்களில் விஞ்ஞானிகள் ’கடவுள் துகள்’
என்ற கண்டுபிடிப்பில் எட்டி இருப்பதாகத் தோன்றுகிறது.

சிறு கல் முதல் பெரிய நட்சத்திரங்கள் வரை அனைத்திற்கும் அடிப்படையாக


இருக்கும் துகள்களைக் கண்டு பிடித்திருந்த விஞ்ஞானிகளுக்கு அந்த்த்
துகள்கள் மட்டுமே உலகம் இயங்கப் போதுமானதாக இல்லை என்பது மட்டும்
தெளிவாகத் தெரிந்திருந்தது. இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப்
போகிறது என்றும் அவர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும்
நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள் இருந்தால்
மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று
நினைத்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி.
அதை சமீ பத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது.
கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன் என்ற உப
அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து
இருக்கின்றனர்.

ஹிக்ஸ் போஸன் என்ற அந்த நிறைமிகு துகளின் இருப்பும், அதன்


இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப்
பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய்,
இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில்
மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) துகள் அமைந்துள்ளதால் ஹிக்ஸ்
போஸன் துகளைக் கடவுள் துகள் என்று அழைக்கின்றனர்.

ஒரு விஞ்ஞானப் பத்திரிக்கை இப்படி எழுதியது :

" As it turns out, scientists think each one of those fundamental forces has a corresponding
carrier particle, or Higgs- boson, that acts upon matter. That's a hard concept to grasp. We
tend to think of forces as mysterious, ethereal things that straddle the line between existence
and nothingness, but in reality, they're as real as matter itself. "

கடவுள் துகள் ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடைந்து விடவில்லை. பல


ஆராய்ச்சிகளுக்கு வித்திடும் திருப்புமுனையாக கடவுள் துகள் இருக்கின்றது
என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இது வரை இவர்கள் எட்டி
உள்ள புரிதல் நிலையும், பகவத் கீ தையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதும்
ஒரே தொனியில் இருப்பது சுவாரசியமாக உள்ளதல்லவா?

29.

ஆசையும்
ஆண்டவனாவது
எப்போது ?

ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகச் சொல்கிறார்.

”தனஞ்செயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில்


மணிகளைப் போல் இவ் வையகமெல்லாம் என்னைப் பற்றிக் கொண்டு
நிற்கிறது.”

மேலோட்டமாகப் பார்த்தால் “என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள்


வேறெதுவுமில்லை” என்பது ஸ்ரீகிருஷ்ணரின் சுயபுராணம் போலத்
தோன்றலாம். அது அல்ல என்பது அடுத்த சுலோகங்களைப் படிக்கையில்
தெரியும். இந்த சுலோகத்தில் சொல்லப்படுகிற அடுத்த உவமை மிக அழகான
பொருத்தமான உவமை. ஒரு நூலில் விதவிதமான மணிகளை
முழுமையாகக் கோர்த்தால் அந்த மணிகள் தெரியுமே ஒழிய நூல் தெரியாது.
ஆனால் கண்ணுக்குத் தெரியாத அந்த நூல் தான் அத்தனை மணிகளையும்
சேர்த்து வைத்திருக்கிறது. மணிமாலை தோற்றத்தை அந்த நூல் தான்
ஏற்படுத்துகிறது. அந்த நூலில்லா விட்டால் மணிமாலை இல்லை.
அந்த மணிகள் அந்த நூலைப் பற்றிக் கொண்டிருப்பது போல இந்த உலகங்கள்
எல்லாம் இறைவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் இப்போதைய
வடிவில் நமக்குப் புலப்படுகிறது என்பது இதில் காட்டப்படுகிறது. அடுத்ததாக
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

”குந்தி புத்திரனே, நான் நீரில் சுவையாகவும், சூரிய சந்திரர்களில் ஒளியாகவும்,


எல்லா வேதங்களிலும் ஓங்காரமான பிரணவமாகவும், ஆகாயத்தில்
ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன்."

"மண்ணில் தூய மணமாகவும், தீயில் ஓளியாகவும், எல்லா உயிரினங்களிலும்


உயிராகவும், தவம் செய்வோரின் தவமாகவும் நான் இருக்கிறேன்."

"அண்டசராசரங்களுக்கும் நான் சநாதனமாகிய (நிலையான) விதை என்று


உணர்ந்து கொள் பார்த்தா. நான் அறிவாளிகளின் அறிவாகவும், தேஜஸ்
படைத்தவர்களின் தேஜஸாகவும் இருக்கிறேன்."
"பரதகுலச் செம்மலே. ஆசையும், பற்றும் நீங்கிய பலசாலிகளின் பலம் நான்.
தர்மத்
தர்மத்திற்கு மாறுபடாத ஆசையும் நானாக இருக்கிறேன்.”

சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொன்றின் சாராம்சமாகவும், மூல


சக்தியாகவும் இறைவனே இருக்கிறார். தேவகி மைந்தனாக, அர்ஜுனனின்
நண்பனாக ஸ்ரீகிருஷ்ணர் இந்த வார்த்தைகளை முழங்கவில்லை. அண்ட
சராசரங்களுக்கும் சனாதன விதை என்று, பிறப்பும், இறப்பும் கொண்ட, ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து முடிந்த கண்ணன், கண்டிப்பாகச் சொல்ல
முடியாது. கீ தோபதேச கட்டத்தில் அந்த அவதாரத்திற்குப் பின் இருந்த
பரம்பொருளாகவே ஸ்ரீகிருஷ்ணர் அந்த வார்த்தைகளைச் சொல்லி
இருக்கிறார்.

ஒவ்வொன்றின் உயிராகவும், சாராம்சமாகவும், மூலமாகவும் இருக்கிற


பரம்பொருள் என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை என்று
சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்.

இதில் கடைசியாக ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது சிந்திக்கத் தக்கது. வெறுமனே


”பலசாலியின்
பலம் நான்” என்று சொல்லவில்லை. ஆசையும் பற்றும் நீங்கிய பலசாலியின்
பலம் நான் என்று கூறுகிறார். பலசாலி போல் தோன்றுபவனிடம் ஆசையும்
பற்றும் இருக்குமானால் அவன் பலசாலி அல்ல. ஆசையும், பற்றும் இருந்தால்
அதுவே பலவனம் ீ அல்லவா? பார்வைக்குத் தெரியும் பலம் வெறும் தோற்றமே
அல்லவா? ஆசைக் கடலின் அலைகளில் சிக்கியவன் யாரேயானாலும் அவன்
அலைக்கழிக்கப்படும் பரிதாபமே அல்லவா? அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர்
உண்மையான பலம் ஆசையும் பற்றும் நீங்கிய பின் மிஞ்சுவதே என்கிறார்.

அடுத்ததாக ”தர்மத்திற்கு மாறுபடாத ஆசையாக நான் இருக்கிறேன்” என்று


ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதும் மிக முக்கியமான பிரகடனம். ஆசையினால்
சங்கிலித் தொடர் போல வரும் பிரச்சினைகளை கணித கோட்பாடுகள் போலச்
சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் திடீர் என்று இப்படி ஏன் கூறுகிறார்?

ஒரு மனிதன் எதற்காகப் பிறந்தானோ அதை நிறைவேற்றுவதே அவன் தர்மம்.


அதைச் செய்து முடிக்கும் வரை‌அவனுக்கு நிம்மதி இருக்காது. அதற்கான
அவன் துடிப்பு ஆசை
போல் தோன்றினாலும் அது தர்மமானது, இதயத்துடிப்பு போல இயல்பானது.

ஒரு கலைஞன் தன் கலையில் முன்னேறி சாதிக்க ஆசைப்படுவது, ஒரு


விஞ்ஞானி கண்டுபிடிக்கத் துடிப்பது, ஞானவழியில் ஈடுபாடு உள்ளவன்
மெய்ஞானம் அடைய ஆழமாய் ஆசைப்படுவது, ஒரு நல்ல மனிதன் உயர்ந்த
நோக்கம் ஒன்றை ஆத்மார்த்தமாக உணர்ந்து அதை நிறைவேற்ற
ஆசைப்படுவது போன்றவற்றை அந்த வகையில் சேர்க்கலாம். இந்த
ஆசைகளும் தவறு என்றால் இந்த உலகின் அத்தனை அழகும், நன்மைகளும்
சாத்தியப்பட்டிருக்குமா?

சங்கீ த மேதைகளும், ஓவிய மேதைகளும், எழுத்துலக மேதைகளும்


தங்களுக்குள் இருந்த திறமையை படைப்புகளாகப் படைக்க
ஆசைப்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளின் உன்னதங்கள் தான் எத்தனை?
மின்சாரம் கண்டுபிடிக்க பல ஆயிரம் முறை தோற்றும் தன் ஆசையை
விலக்கிக் கொள்ளாத ஒரு தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசையின் பலனை
அல்லவா அவருக்குப் பிந்தைய தலைமுறைகளான நாம் அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம். ரமண மகரிஷியின் ஞானத்தேடலும், ராமகிருஷ்ண
பரமஹம்சரின் ஞானத்தேடலும் எத்தனை லட்சம் பேருக்கு இன்று
வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா கல்கத்தா வதிகளில்

ஆதரவற்று அலைந்து கொண்டிருந்த தொழுநோயாளிகளுக்கு தொண்டாற்ற
ஆசைப்பட்டாரே அந்த ஆசையின் விளைவில் எத்தனை பேருடைய
வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆசைகளில் நாம்
இறைவனைப் பார்க்க முடியா விட்டால் வேறு எதில் தான் அவரைக் காண
முடியும்? அது போன்ற தர்ம நெறியில் இருக்கும் உயர்ந்த ஆசைகளில் தான்
இருப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். உலகம் சீரழியாமல் ஓரளவாவது
நல்ல முறையில் இயங்குவதே இந்த வகை மேலான ஆசைகளாலும்,
அவற்றை நிறைவேற்ற எதையும் செய்யத் துணியும் அந்த மனிதர்களின் மன
உறுதியாலும் அல்லவா?

ஆனால் இந்த வாக்கியத்தில் இருக்கும் *தர்மம் தவறாத* என்ற சொற்கள் மிக


முக்கியமானவை. மேலே சொன்ன மேன்மைகளின் போர்வையில் மனிதன் தன்
ஈகோவையும், பேராசையையும் முன்னிலைப்படுத்தி இறங்கும் செயல்களில்
இறைவன் இருக்க முடியாது. தன் மொழியையும், மதத்தையும், இனத்தையும்
காப்பாற்றுவதாக காட்டிக் கொண்டு
தங்கள் வழிகளில் இருந்து வேறுபட்டவர்களை அழிக்கத் துணிபவர்கள்,
தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக உள்ளே ஆசைப்பட்டு, வெளியே ஒரு
குறிக்கோளுக்காக இயங்குவதாய் காட்டிக் கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகள்
எல்லாம் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் வகையில் சேரமாட்டார்கள்.

தர்மம் தவறாத ஆத்மார்த்தமான ஆசைகளில் மட்டுமே ஆண்டவன்


இருக்கிறான். அந்த ஆசைகளினால் தூண்டப்படுபவர்கள் இறைவனால்
தூண்டப்படுபவர்கள். இது வரை உலகில் நடந்த அனைத்து நன்மைகளும் சரி,
இனி உலகில் நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் சரி இது போன்ற
ஆசைகளாலேயே சாத்தியமாகும். இந்த ஆசைகள் செயற்கையாய் ஒருவர்
ஏற்படுத்திக் கொள்பவை அல்ல. இவை இயற்கையாய் இதயத்தின் ஆழத்தில்
இருந்து எழுபவை. அதனால் அனைவருமே பலன் அடைவார்கள். இவற்றை
அலட்சியப்படுத்த முடியாது, அலட்சியப்படுத்தவும் கூடாது. அது நம் பிறப்பின்
நோக்கத்தையும், இறைவனையுமே அலட்சியப்படுத்துவது போன்றது.

30.

மாயையைக்
கடப்பது
எப்படி?

முன்பே சத்துவ ராஜஸ தாமஸ குணங்களைப் பற்றிச் சுருக்கமாகப்


பார்த்திருக்கிறோம். மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ள பார்ப்போம்.

நம் வேதாந்திகள் மனோதத்துவ சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள். அவர்கள்


மனிதனின் மனநிலைகளை இந்த மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள்.
சத்துவ குணம் சாந்தமயமானது. நற்குணங்களை உடையது. ஆன்மீ கம்
மற்றும் மேலான விஷயங்களில் ஆர்வம் உள்ளது.

ரஜோ குணம் ஆசை மயமானது. அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத்


தேவையான துடிப்பும், வேகமும், உழைப்பும் கொண்டது. இங்கு நன்மை
தீமைகளின் கணக்குகள் இல்லை. விருப்பு வெறுப்புகளின் அடிப்படையாகக்
கொண்ட துடிப்பான மனநிலையே இங்கு பிரதானம்.

தாமஸ குணம் சோம்பல் மயமானது. ஆசைகள் இருந்தாலும் துடிப்போ


வேகமோ இல்லாதது. தானாக எல்லாம் நடந்து விட வேண்டும் என்று
எதிர்பார்ப்பது. எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டே சும்மா
இருந்து கொள்வதே சுகம் என்று இருப்பது.

நாம் யாரேயானாலும் அந்த மூன்றில் ஏதாவது ஒரு பிரிவில் நிரந்தரமாய்


இருந்து விடுவது மிக அபூர்வம். ஆனால் மூன்று குணங்களிலும் மாறி மாறி
சஞ்சரித்துக் கொண்டே இருப்போம். ஒரு சமயம் சத்துவ குணத்தில்
இருக்கின்ற நாம், முக்கிய உலகியல் தேவைகள் ஏற்படும் போது சடாரென்று
ரஜோ குணத்திற்கு மாறிவிடக் கூடும். வேறொரு சமயம் சோம்பலின் பிடியில்
சிக்கி தமோ குணத்தில் தங்கி, செயல்புரியவும் மனமில்லாமல் இருக்கக்
கூடும். சூழ்நிலைகள் மாறுகையில் மறுபடி மாறவும் கூடும்.

இப்படி இந்த மூன்று வகை குணங்களில் தான் இறைவன் தன் மாயையின்


வலையைப் இவ்வுலகில் பின்னி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப்
பார்ப்போம்.

"சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம்


என்னிடமிருந்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. ஆனால் நான்
அவற்றுள் இல்லை."

"இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப்


போய் இருக்கின்றது.
இம் முக்குணங்களுக்கு மேற்பட்டவனும், அழியாத இயல்பும் கொண்ட என்னை
உணராதிருக்கிறது."

எதுவும் நமக்குள்ளே இருப்பதற்கும், அதற்குள்ளே நாம் இருப்பதற்கும்


இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் நாம்
எஜமானனாக இருக்கிறோம். கட்டுப்பாடு நம்மிடம் இருக்கிறது. பின்னதில்
நாம் அடிமையாகி விடுகிறோம். அது நம்மைக் கட்டுப்படுத்தி வைத்து
விடுகிறது. இந்த நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொண்டால் நிறைய
பிரச்னைகளில் இருந்து நாம் நீங்கி விடுகிறோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணரும்
சூட்சுமமாக அதைப் புரிய வைத்து விடுகிறார்.

உலகமென்னும் நாடக மேடையில் வேஷம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும்


நாம் இந்த முக்குணங்களின் பிடியில் மயங்கிக் கொண்டிருக்கிறோம். சிரிப்பு,
சந்தோஷம், தேடல், ஓட்டம், துடிப்பு, வெறுப்பு, துக்கம், ஆசை, விரக்தி,
சோம்பல் என பலப்பல உணர்வுகளில் மாறி மாறி சஞ்சரித்து அலைக்கழிக்கப்
பட்டுக்கொண்டிருக்கிறோம். எதிலும் நிரந்தரமில்லை. எதிலுமே
திருப்தியுமில்லை. பல நேரங்களில் எல்லாமே போதும் போதும்
என்றாகி விடுகிறது. இதிலிருந்து மீ ளத்தான் என்ன வழி?

ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் :

"இந்த முக்குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யார்


எல்லாம் சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்."

இது இறைவனுடைய மாயை. இந்த மாயப் பெருங்கடலைக் கடக்க


வேண்டுமென்றால் இறைவனைச் சரணடைவது தான் ஒரே வழி. இதையே
தான் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார் :

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்."

இதையே வினோபாவும் அழகாகச் சொல்கிறார். “பிரஹ தாரண்யக


உபநிடதத்தில் பேரிகை உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரே
பேரிகையில் இருந்து வெவ்வேறு நாதங்கள் எழுகின்றன. சிலவற்றைக் கேட்க
நடுக்கமாய் இருக்கிறது. சிலவற்றைக் கேட்டதுமே துள்ளி குதிக்கத்
தோன்றுகிறது. இந்த எல்லா பாவங்களையும் வெல்ல வேண்டுமானால் நாம்
பேரிகை வாசிப்பவனைக் கையில் போட்டுக் கொள்ள வேண்டும். அவன் நம்
வசமானதும் எல்லா நாதங்களும் நமக்குக் கட்டுப்பட்டு விடும். அதைத் தான்
பகவான் ‘என்னைச் சரணடைபவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்’
என்று சொல்கின்றார்.

மெய்ஞானம் என்பது மனதைக் கடந்தது. மனதைக் கடக்காத வரையில்


மெய்ஞானம் சாத்தியமில்லை. எண்ணங்கள் நின்று போகும் அற்புத கணத்தை
ஒரு கண நேரமாவது உணர்ந்தவர்களுக்கு அது புரியும். அந்த ஒரு கண
நேரத்தில் நமக்குக் சத்திய தரிசனம், ஒரு பேரின்ப அனுபவம் வார்த்தைகளில்
வர்ணிக்க இயலாதது. மனமும் மௌனமாகும் அற்புத தருணம் அது. அதுவே
பிரபஞ்சத்துடன், இறைவனுடன் நேரும் சந்திப்பு.

ஒரு கண நேர அனுபவமே இந்த அளவு சிறப்பு என்றால் பின் ஏன் நாம் அதைத்
தொடர்வதில்லை. மறுபடியும் மாயை தன் குணங்கள் என்னும் வலையில்
நம்மைப் பிடித்து இழுத்துக் கொள்வதால் தான். நான் என்ற ஈகோ போகும்
வரை இந்த முக்குணங்களின் கைதிகள் தான். நான் என்ற ஈகோ போய்
இறைவனை சரணடையும் போது தான்
முக்குணங்களின் பிடி விலகி அந்த இறைசக்தியுடன் நாம் ஒன்றுபடுகிறோம்.

அப்படி சரணடைய விடாமல், இறைசக்தியுடன் ஒன்றுபட விடாமல் தடுப்பது


எது? அறியாமை தான். அடுத்ததாக அதையும் விளக்குகிறார் :

"மாயையினால் அறிவிழந்தவர்களும், அசுரத் தன்மை உடையவர்களும்,


மனிதர்களில் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைச் செய்பவர்களுமான
அறிவிலிகள் என்னை சரணடைவதில்லை."

மாயையின் உயிர் நாடியே அறியாமை தான். முழுமையான சிந்தனையும்,


அப்படி சிந்தித்து முடிவுக்கு வருதலும் மாயையில் இல்லை. அரைகுறை
சிந்தனைகள், அரைவேக்காட்டு முடிவுகள் இருந்து அதையே முழுமை என்று
நம்ப வைத்து தன் நாடகத்தை மாயை நடத்தும்.

சரணடையாதவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் அடையாளம் காட்டும் மனிதர்கள்


எல்லாரும் அவரே சொல்கிற மாதிரி அறிவிலிகள் தான். அசுரத்தன்மை
உருவாவதும், தரம் தாழ்ந்து நடப்பதும், இழிவான செயல்களைப் புரிவதும்
எல்லாமே மாயையின் செயலால் சரியான அறிவின் வழிகாட்டுதல்
இல்லாமல் போவதால் தான். அது தன் இருள் மிகுந்த வழிகளிலேயே
ஒருவரை பயணிக்க வைக்கும். எத்தனை தான் கஷ்டப்பட்டாலும் அதிலிருந்து
விலகி ஒளி உள்ள பாதைக்கு வர விடாது. இருட்டில் கற்பனைகளுக்கு இடம்
உண்டு, பொய்யான முடிவுகளுக்கும் வழியுண்டு. ஒளியிலோ எல்லாம்
தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது கற்பனைக்கு இடமேது. தவறான
முடிவுகளுக்கு வாய்ப்பேது?

ஒளிமயமான இறைவனை அண்டி, மாயையின் பிடியில் இருந்து விலகி நாம்


நம்மைக் காப்பாற்றிக் கொள்வோமா?

31.

இறைவனை
நாடுபவர்
நான்கு ரகம் !

இறைவனை நம்புபவர்கள் கூட எப்போதும் அவனை நாடுபவர்களாக


இருப்பதில்லை. அவசியம் ஏற்பட்டால் ஒழிய ஆண்டவனையும் எண்ணாமல்
இருப்பது சாதாரண மனித சுபாவம் தானே. அப்படியானால் இன்று
கோயில்களில் கூட்டம் எல்லா நேரங்களிலும் நிரம்பி
வழிகிறதே, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறதே என்று
கேட்கலாம். இன்று அவசியங்கள் அதிகமாகிக் கொண்டு வருவதால் தான்
இறைவனை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு
வருகிறது என்பது தான் இன்றைய யதார்த்தம். ஆனால் காரணம் எதுவாக
இருந்த போதிலும், இறைவனை நாடுவதே புண்ணியம் என்கிறது பகவத்கீ தை.

கீ தையின் ஏழாவது அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில்


இறைவனை நாடுபவர்களை நான்கு ரகங்களாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
பிரிக்கிறார். அவர் அர்ஜுனனிடம் சொல்கிறார் :

" அர்ஜுனா , துன்பம் அடைந்தவன், பொருளை நாடுபவன், ஞானத்தை


நாடுபவன், மெய்ஞானம் பெற்றவன் என புண்ணிய சீலர்களான நான்கு
வகையினர் என்னை வழிபடுகிறார்கள்."

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். துன்பம் வருகையில்


இறைவனைத் தவிர வேறு யாரை ஒருவன்
நம்பிக்கையோடு அழைக்க முடியும்? மனிதர்கள் உதவலாம். ஆனால் அதற்கு
அவர்களுக்கு சக்தியும், மனமும் இருக்கும் என்று உறுதியாக நம்மால்
சொல்ல முடியுமா? ஆபத்து காலங்களில் ஆத்மார்த்தமாய் மனிதன் கூவுவது
இறைவனை நோக்கியே அல்லவா?
பாஞ்சாலி ஐந்து பராக்கிரமசாலிகளைக் கணவர்களாகப் பெற்றவள்.
துச்சாதனனால் சேலை உருவப்பட்ட போது அந்த ஐந்து பேர்களும் அவளுக்கு
உதவ முடியவில்லை. குலத்தின் மூத்தவரான பீஷ்மர் உதவ முடியவில்லை.
தர்மம் அறிந்த விதுரன் உதவ முடியவில்லை. கௌரவர்களுக்கும் குருவான
கிருபாச்சாரியாரும், ஆசிரியரான துரோணரும் உதவவில்லை. அத்தனை
பேரிடமும் அவள் நியாயம் கேட்ட போது தலைகவிழ்ந்தனரே ஒழிய
அவளுக்கு உதவ முன்வரவில்லை. கடைசியில் சிறிது நேரம் தன்னையே நம்பித்
தன் கைகளால் தடுத்துப் பார்த்தாள் பாஞ்சாலி. தன் கையே தனக்குதவி
என்பார்கள். கைகளும் அப்போது கைகொடுக்கவில்லை. கடைசியில் அந்தக்
கைகளையும் மேல் உயர்த்தி பரந்தாமனை அழைத்தாள். எடுத்தார் இறைவன்
வஸ்திராவதாரம். சேலைக்குவியல் மலைபோலக் குவிந்தும் முடிவுக்கு
வரவில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று குவிக்க முடிந்த மகா
சக்திமானான துச்சாதனனுக்கு அந்த சேலையை இழுக்க சக்தி போதாமல்
தோற்றுப் போய் தரையில் உட்கார்ந்து விட்டான்.

தன்னைச் சேர்ந்தவர் பலமும், தன் பலமும் துன்ப காலத்தில் போதாத போது


கடைசியான புகலிடம் இறைவனே அல்லவா? அந்தக் காலத்தில் இறைவனை
நம்பிக்கையோடு அழைக்கவும் ஒருவர் முன்பே புண்ணியம் செய்திருக்க
வேண்டும். இந்த முதல் ரகம் தான் இறைவனை நாடுவதில் முதல் நிலையும்
கூட. இது அடிப்படை அவசியம். இதயத்தின் ஆழத்தில் உணரப்படும் தேவை.

அடுத்ததாக அது வேண்டும், இது வேண்டும் என்கிற ஆசையும் மனிதனை


இறைவனை நாட வைக்கிறது. மனித ஆசைகளும், தேவைகளும்
பாஞ்சாலியின் சேலையைப் போலவே எல்லையில்லாமல் வந்து கொண்டு
இருப்பவை தானே? அதனால் அதைக் கொடு, இதைக் கொடு என்று
எல்லாவற்றையும் தர முடிந்த கற்பகத்தரு ஆன இறைவனை நாடுவதும்
என்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி தேவைகளின் போதும்
இறைவன் மீ து மனிதனுக்கு ஏற்படும்
பக்திக்கு அளவே இல்லை. இந்த இரண்டாம் ரகம் மற்றும் இரண்டாம்
நிலையையும் இறைவன் இங்கு குறை கூறவில்லை. எதையாவது
கேட்பதற்காவது இறைவனை நினைத்தாலும் இறைவனை நினைக்கும்
செயலால் இந்த ரகத்தையும் புண்ணியசாலிகளாய் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

மூன்றாவதாக எதையும் அறிந்து கொள்ளும் தாகத்தை, ஞானத் தேடலை


ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்த ரகத்தில் கூட்டம் அதிகமில்லை. தன் தேவைகள்
முடியும் போது, மேலானது ஆன ஒன்றை அறிந்து கொள்ள ஏற்படும் தாகம்
என்ற தேவையை வெகுசிலரே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். எல்லா
ஞானத்தின் எல்லையும் இறைவனே என்பதால் ஞானத்தை நோக்கிப் போகிறவன்
இறைவனை நாடிப் போகிறவனே ஆகிறான். முதல் இரண்டு அடிப்படை
நிலைகளையும் கடந்து வருகிறவனே இந்த மூன்றாம் நிலையில்
பயணிக்கிறான்.

நான்காவது ரகமும், நிலையும் மெய்ஞானி. ஒன்றை அறிவது வேறு.


அறிந்ததில் ஐக்கியமாவது வேறு. இறைவனை நாடிச் சென்று, அறிந்து,
உணர்ந்து, அந்த
மெய்ஞானத்தில் ஐக்கியமாக முடிவது முடிவான உன்னத நிலை. அது மிகச்
சிலருக்கே வாய்க்கும். கோடிகளில் ஒருவருக்கு மட்டும் வாய்க்கும்
பெரும்பேறு அது. இந்த நிலையில் சாதாரண மனிதர்களின் இயல்பான
தேவைகளும் இல்லை. அறிவுமுதிர்ச்சியின் காரணமாக மனிதன் உணரும்
தேவைகளும் இல்லை. தேவைகளே இல்லாமல், இதற்கு மேல் வேறு எதுவும்
இல்லை என்று அறிந்து, அந்த நிலையிலேயே தங்கி விடும் உன்னத நிலை,
உன்னத ரகம்.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

"அவர்களுக்குள் எப்போதும் என்னுடன் தொடர்பு கொண்டவனும், என்


ஒருவனிடமே பக்தி பூண்டவனும் ஆன ஞானி உயர்ந்தவன். ஞானிக்கு நான்
மிகவும் பிரியமானவன். அதே போல எனக்கும் அவன் மிகவும்
பிரியமானவன்."

"மேற்கண்ட நால்வரும் உயர்ந்தவர்களே என்றாலும் ஞானி என்னுடைய


ஆத்மா என்பதே என் முடிவு. ஏனெனில் அவன் மனதை அடக்கி என்னையே
உயர்ந்த புகலிடமாகக் கொண்டிருப்பவன்.
பற்பல பிறவிகள் எடுத்து இறுதியில் சகலமும் வாசுதேவனே என்ற ஞானம்
பெற்று என்னை அவன் சரணடைகிறான். அத்தகைய மஹாத்மா கிடைத்தற்கு
அரியவன்."

இறைவனை நாடுவதாலேயே புண்ணியசாலிகள் ஆக கருதப்படும் இந்த


நான்கு ரக மனிதர்களும் உயர்ந்தவர்கள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதில்
நான்காம் ரகமான ஞானி மிகவும் பிரியமானவன் என்கிறார். அதற்குக்
காரணமாக இரண்டு காரணங்களையும், சிறப்புக் குணங்களையும் அவர்
சொல்கிறார்.

முதலாவதாக, ஞானி இறைவனிடம் எப்போதும் தொடர்பு


கொண்டிருக்கிறான். ஆபத்துகளோ, துன்பங்களோ மறைந்தவுடன்
இறைவனை மறக்கிறது முதல் ரகம். ஒரு தேவை முடிந்து இன்னொரு
தேவைக்காக ஏங்க ஆரம்பிக்கும் வரை இறைவனை மறக்கிறது இரண்டாம்
ரகம். அறிய விரும்பும் விஷயம் பிடிபடாத போதும், குழப்பும் போதும்,
சுவாரசியம் இல்லாத போதும் தற்காலிகமாக மூன்றாவது ரகமும்
இறைவனிடம் தொடர்பை இழக்கிறது. இறைவனிடம் தொடர்பை
இழக்காதவன் ஞானி ஒருவனே. மேலும் ஞான நிலையை முழுமையாக
அடைந்து இறைவனின்
அலைவரிசைகளிலே இருக்கக் கூடியவன் அவன். மற்றெல்லாவற்றையும்
விட இறைவனை அதிகமாக நேசிக்கிறவன் அவன். அப்படிப்பட்டவனை
இறைவனும் அதிகம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

ஆனால் அப்படிப்பட்ட நிலையை ஒருவன் அடைய முடிவது ஒரு பிறவியின்


சாதனை அல்ல. பல பிறவிகளில் முயன்று கடைசிப் பிறவியில் கிடைக்கும்
பலன் அது. எல்லாம் இறைவனே என்று சரணடைய முடிவது அப்படிப்பட்ட
ஒரு மகாத்மாவுக்கே சாத்தியம்.

32.

இறைவனை
முழுமையாக
நெருங்குங்கள் !

மூன்று வகை குணங்களையும், நான்கு ரக மனிதர்களையும் விளக்கிய


ஸ்ரீகிருஷ்ணர் மனிதர்களின் ஆன்மிகத் தேடலை வேறு கோணத்திலும் இந்த
ஏழாவது அத்தியாயத்தில் அலசுகிறார். தேவைகளைப் பூர்த்தி செய்ய சில
நியம நிஷ்டைகளைச் செய்து குறிப்பிட்ட தேவதைகளை வணங்கி பலன்
பெறும் மனிதர்களைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார் :

"மக்கள் தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை


இழந்து தம்முடைய சுபாவத்திற்குக் கட்டுப்பட்டு அந்தந்த நியமங்களைக்
கடைபிடித்து மற்ற தேவதைகளை (வடிவங்களை)ச் சரணடைகிறார்கள்."

"நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒருவன் எந்த வடிவத்தைப் பூஜித்தாலும்


அதே வடிவத்தில் அவனது நம்பிக்கை உறுதியாக இருக்கும்படி செய்கிறேன்."

"அவன் அந்த சிரத்தையுடன் அந்த தேவதையைப் பூஜிக்கிறான். நானே


அமைத்துத் தந்த பலனை அந்த தேவதை மூலமாகப் பெறுகிறான்."

ஆனால் அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்த பலன்


அழியக்கூடியது. தேவதைகளை வழிபடுபவர்கள் அந்த தேவதைகளையே
அடைகிறார்கள். என்னுடைய பக்தர்களோ எவ்விதம் வழிபட்டாலும் என்னையே
அடைகிறார்கள்."

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு காலத்தில் வர்ணன், வாயு, இந்திரன் போன்ற


தேவதைகளை தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள்
வணங்கியதைச் சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். சில தீவிர
கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு எந்தக் கடவுளை
வணங்கினாலும் அது தேவதைகளை வணங்குவது போல் தான் என்றும்
கிருஷ்ண பரமாத்மாவை வணங்குவது மட்டுமே மிக உயர்ந்த வழிபாடு
என்றும் கூட பொருள் கொள்கிறார்கள். ஆனால் பகவத் கீ தையை ஆழமாக
அறிவு பூர்வமாகப் படிப்பவர்களுக்கு அது பிழையான கருத்து என விளங்கும்.

தேவகி புத்திரனும், பார்த்தனுக்கு சாரதியும் ஆன ஸ்ரீகிருஷ்ணர் பகவத்


கீ தையை உபதேசித்த நேரத்தில் அந்தப் பாத்திரமாக இருக்கவில்லை. மிக
உயர்ந்த தெய்வக ீ நிலையில் இறைசக்தியாகவே பரிபூரணமாக மாறி
விட்டிருந்த அவர் கீ தையில் சொன்னதெல்லாம் பரம்பொருளாகச்
சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பகவத் கீ தை முழுவதும்
ஒலிக்கும் குரல் பரம்பொருளினுடையதே ஒழிய ஸ்ரீகிருஷ்ணர் என்கிற
அவதார பாத்திரத்தின் உடையது அல்ல என்று புரிந்து கொண்டால்,
வடிவங்களில் சிக்கிக் கொள்ளும் தவறை ஆன்மிக வாசகர்கள் செய்ய
மாட்டார்கள்.

இந்த வடிவத்தில் இப்படிப் பிரார்த்தித்தால் என் இந்தத் தேவையை இந்தக்


கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இறைவனைப்
பிரார்த்திப்பவன் முழுமையான இறைவனைப் பிரார்த்திப்பதிப்பதில்லை. அந்தத்
தேவையைத் தீர்த்து வைக்கும் பகுதியாகவே இறைவனைப் பார்த்து
அதற்காகவே அந்தப் பகுதி இறைவனை வணங்கவும் செய்கிறான். அந்த
இறைவனுக்கு அந்தப் பகுதி தவிர வேறு எத்தனையோ சிறப்பு அம்சங்கள்
இருக்கலாம், அவனுக்கு அதைப்பற்றிய அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை.
ஆனால் அந்தத் தேவைக்காக எப்படிப் பிரார்த்திக்கச் சொல்கிறார்களோ அப்படி
சிரத்தையுடன் அவன் பிரார்த்திப்பான். எல்லாம் வல்ல இறைவனைத் தன்
தேவையைப் பூர்த்தி செய்யவல்ல தேவதையாக மட்டும் குறைத்துப் பார்க்கும்
பிழை இது.

ஆசைத் தேவையால் முழுமையாக உந்தப்பட்டு இப்படி வணங்கும் மனிதனை


ஆட்டுவிப்பது அந்த ஆசையே. அப்படி வணங்கி அவன் இறைவனிடம் இருந்து
பெறுவதும் அந்த ஆசை பூர்த்தி அடைவதே. இப்படி ஆசையே முழுமையாக
வியாபிக்கும் இடத்தில் இறைவனை உணரும் வாய்ப்பு ஏது?

அதைக் கொடுக்கும் கடவுள், இதைக் கொடுக்கும் கடவுள் என்று வணங்கும்


போது கொடுக்கப்படுவது பிரதானமாய் போகிறதே அல்லாமல் கடவுள்
பிரதானமாக ஆவதில்லையே. ஆசையே பிரதானமாக இருக்கும் போது அறிவு
அந்த ஆசை சம்பந்தமாக கூர்மை பெற்றாலும் மற்ற விதங்களில் மழுங்கியே
விடும். ஆசையினால் கட்டுப்பாடில்லாமல் ஒருவன் பீடிக்கப்படும் போது
ஆசையின் சம்பந்தப்பட்ட ஓரறிவு ஜந்துவாகத் தான் இருப்பானே ஒழிய
ஆற்றிவு மனிதனாக இருந்து விட முடியாது. அதனால் தான் அறிவை
இழந்தவர்கள் என்றும் சிற்றறிவு படைத்தவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் இங்கு
சரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இங்கும் சிரத்தையுடன் எதைச் செய்தாலும் அதற்கான பலன்


கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும், அந்த நம்பிக்கை வண்
ீ போகாது என்றும்,
அந்தப் பலனை ஏற்படுத்தித் தருபவன் தானே என்றும் ஸ்ரீகிருஷ்ணர் உறுதி
அளிக்கிறார். இங்கு சிரத்தை பிரதான
பிரதானமாகிறது. அரைகுறை முயற்சிகள் அந்தப் பலனையும் தராது.

இங்கு இன்னொரு உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


சிரத்தையுடன் கேட்டு ஆசையை ஒருவன் பூர்த்தி செய்து கொள்ளலாமே
ஒழிய அந்த ஆசை பூர்த்தியாவதன் மூலமாக எத்தனையோ பிரச்னைகள்
உருவாகலாம். அதனால் எத்தனையோ கஷ்டப்பட வேண்டி வரலாம். அதற்கு
இறைவன் உத்திரவாதி அல்ல. ’நீங்கள் அதைத் தான் கேட்டீர்கள். நான் அதைக்
கொடுத்து விட்டேன். என் வேலை முடிந்தது’ என்று இறைவன் விலகியே
இருப்பான்.

சின்ன உதாரணம் ஒன்று பார்ப்போம். கோடிக்கணக்கில் பணத்தை


சிரத்தையுடன் வேண்டி ஒருவன் இறைவனிடமிருந்து பெறுகிறான் என்று
வைத்துக் கொள்வோம். அந்தப் பணத்தைத் திருட பலரும் முயற்சிக்கலாம்.
அந்தப் பணத்திற்காக பலர் பல விதங்களில் அவனைத் தொந்திரவு
செய்யலாம். பலர் அவனுக்கு எதிரிகளாகலாம். இப்படி ஒரு ஆசை நிறைவேறி
பல புதிய பிரச்னைகள் உருவாகுவதற்கு அவன் விலக்கு பெற்று விட
முடியாது.

ஆசையை மட்டும் வைத்து அழியக் கூடிய பலன்களை, அழிவு தரக்கூடிய


பலன்களைக் கேட்டுப் பெற்று அதனால் வரும் பிரச்னைகளை கவனத்தில்
கொள்ளாமல் தவிக்கும் மனிதர்கள் ஏராளம். பிறகு அவர்கள் அந்த ஒவ்வொரு
பிரச்னையை விலக்கும் தேவைக்காக மட்டும் வழிபட ஆரம்பிப்பார்கள்.
ஒவ்வொரு பிரச்னை விலகும் போதும் அதனால் ஒன்பது பிரச்னைகள்
உருவாகலாம். இந்த பரிதாப நீட்சிக்கு முடிவே இல்லை.

சரி எது புத்திசாலித்தனமான வழி?

எல்லாமாக இருப்பவனை முழுமையாக ஆத்மார்த்தமாய் வணங்கி


சரணடைந்தால் எல்லாமே நம்முடையதாகி விடுமே, இப்படி
ஒவ்வொன்றிற்காகப் பிச்சை கேட்கும் அவசியம் நமக்கு இருக்காதே என்று
உணர்வதே அறிவு. அப்படி உணர்ந்து வணங்கி முழுமையாகவே இறைவனை
சரணாகதி அடைபவனையே தன்னுடைய பக்தன் என்று ஸ்ரீகிருஷ்ணர்
சொல்கிறார்.

அப்படிப்பட்ட பக்தன் இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதி எல்லாம்


இல்லை
அவன் எப்படியும் வழிபடலாம். வழிபாட்டு முறைகள் சடங்குகள் மட்டுமே.
வழிபடுபவன் மனமே முக்கியம். அந்த மனமெல்லாம் இறைவன்
நிறைந்திருக்கும் போது எப்படி வழிபட்டாலும் அது ஆத்மார்த்தமானதே.
இறைவனுக்கு உகந்ததே. அவன் இறைவனைக் கண்டிப்பாக அடைவான்
என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

33.

பிறக்கும் போதே
மயக்கும் மாயை !

எந்த நோக்கத்தில் எப்படி வணங்கினாலும் அந்தத் தன்மைக்கேற்ப தன்னை


நெருங்குகிறார்கள், பலனடைகிறார்கள் என்று சொல்லிய ஸ்ரீகிருஷ்ணர்
அடுத்ததாக தன் உண்மையான சொரூபத்தை மனிதர்களால் உணர முடியாமல்
போவது பற்றி விரிவாக விளக்குகிறார்.

"அழிவற்றதும், ஈடில்லாததுமான என்னுடைய பரமாத்ம சொரூபத்தை


அறியாத அறியாத அறிவிலிகள் பிறப்பில்லாத என்னைப் பிறந்தவன் என்று
எண்ணுகிறார்கள்.
யோக மாயையினால் மறைக்கப்பட்ட நான் எல்லோருக்கும்
வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆகவே அறிவில்லாத இவ்வுலகம் என்னைப்
பிறப்பற்றவன் என்றும் அழிவற்றவன் என்றும் அறிவதில்லை."

"கழிந்து போனவைகளும், இருப்பவைகளும்,


வரப்போவைகளுமான சகல உயிர்களையும் நான் அறிவேன். ஆனால்
என்னையோ எவனும் அறியான்."

"பார்த்தா! விருப்பு, வெறுப்பு என்பவைகளால் எழும் இரட்டைகளாகிற


மோகத்தினால் சகல உயிர்களும் தாம் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன."

மனிதனின் பிரச்னைகளுக்கான வித்து பிறவியிலேயே விதைக்கப்பட்டு


விடுகின்றது. ஆத்மஞானம் மறக்கப்பட்டு மாயையால் சூழப்பட்டு
ஆரம்பிக்கப்படும் வாழ்க்கையில் காண்கின்ற வெளித்தோற்றங்களே
நிஜங்களாய் பாவிக்கப்படுகின்றன. தன்னையே எடுத்திருக்கும் பிறவிக்கான
புதுக்கதாபாத்திரமாய் நினைக்க ஆரம்பிக்கும் மனிதன் அதற்கும் மேலான
உண்மை இருக்கும் என்று எண்ணக்கூட முடியாத நிலை தான் பெரும்பாலான
நேரங்களில் இருக்கின்றது.
தன்னையே உண்மையாக அறிய முடியாதவன், இறைவனை அறிய முடியாமல்
போவதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது? அறிய முடியாதவைகளை
அனுமானங்களில் வடிப்பதல்லவா அறியாமையின் இயல்பு. அப்படித் தான்
என்னென்னவோ தவறாக நிர்ணயித்து அதையே உண்மை என்று நம்பி
அதனால் வரும் பிரச்னைகளில் மனிதன் உழன்று கொண்டிருக்கிறான்.
அப்படிப்பட்ட நிர்ணயங்களில் ஒன்று தான் இறைவனையும் தன்னைப் போல்
பிறந்து வந்ததாக உருவகப்படுத்திக் கொள்வது. உருவங்களிலும் தன்மைகளிலும்
முழுவதுமாக அடக்கி விட முடியாத மகாசக்தியை, ஆரம்பமோ, அழிவோ
இல்லாத பரமாத்ம சக்தியை, பிறப்பு இறப்பு என்ற எல்லைக்குள் அடக்கிப்
பார்க்கிற முட்டாள்தனத்தை அறியாமையால் மனிதர்கள் செய்கிறார்கள்.

இன்று மதங்களுக்குள் உருவாகும் சண்டைகளே இப்படி இறைவனைத் தங்கள்


வட்டங்களுக்குள் குறுக்கிப் பார்ப்பதனால் ஏற்படுவது தானே? எல்லாம் வல்ல
மகாசக்தியை உன் இறைவன், என் இறைவன் என இரண்டாகப் பிரித்து ஒரு
பாதியைப் பாராட்டி வணங்கி மறு பாதியை இகழ்ந்து வெறுத்து தங்களை
ஆன்மிகவாதிகளாக நம்பும் அறியாமை எத்தனை பேரிடம் நாம் பார்க்கிறோம்!.

இதற்கெல்லாம் காரணம் சூரியனை மேகம் மறைப்பது போல யோகமாயை


நம் கண்களில் இருந்து இறைவனை மறைப்பது தான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
அந்த மாயை தான் விருப்பு வெறுப்பு என்ற பின்னல்களால் இறைவன் உட்பட
எல்லாவற்றையும் மறைக்கிறது. ஒன்றை வேறொன்றாகக் காட்டுகிறது.
எல்லாம் அறிந்த இறைவனையே நாம் அறியாமல் தடுக்கிறது.

இந்த மாயையில் இருந்து விடுபட்டு அது ஏற்படுத்தும் துன்பங்களில் இருந்தும்


நீங்கி இருப்பது எப்படி என்ற கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் இப்படி பதில்
அளிக்கிறார்.

"ஆனால் புண்ணிய கர்மங்களைச் செய்கிற எந்த ஜனங்களுடைய பாவம் தீர்ந்து


போகிறதோ அவர்கள் சுகம்-துக்கம் போன்ற இரட்டை நிலைகளின்
மோகத்திலிருந்து விடுபட்டு உறுதியான விரதம் பூண்டு என்னையே
உபாசிக்கிறார்கள்.
மூப்பு, மரணம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காக என்னைச் சரணமடைந்து
முயற்சி செய்கிபவர்கள் அந்த பிரம்மத்தையும், ஆத்ம தத்துவத்தையும் சகல
கர்மங்களையும் நன்கறிந்தவர்களாவார்கள்."

மாயையில் இருந்து முழுவதுமாக மீ ள இங்கு பாவங்கள் தீர்ந்து புண்ணிய


கர்மங்கள் செய்வது, உறுதியான நிலைப்பாடு, சரணாகதி என்ற மூன்றையும்
ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.

விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம் போன்ற இரட்டை நிலைகளால் பின்னப்படும்


யோகமாயையில் இருந்து மீ ள ஒருவனின் பாவகர்ம வினைகள் தீர்ந்திருக்க
வேண்டும், புண்ணிய கர்மங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். பாவத்தின்
சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற வரையில், புண்ணியக் கணக்கை
ஆரம்பிக்காத வரையில் யோகமாயை எல்லாவற்றையும் தவறாகவே காட்டி
நம்மை வழிதவறச் செய்யும்.

அதே போல, மன உறுதி. மன உறுதி இல்லாத வரை பழகிப்போன


தவறுகளையே திரும்பத்
திரும்ப செய்து கொண்டிருப்போம். அந்த சுழியில் இருந்து தப்பிக்க மன
உறுதியுடன் கூடிய அபாரப் பிரயத்தனம் வேண்டும். அது மட்டுமே
இறைவனை விடாமல் உபாசிக்க வைக்கும். அப்படி உபாசித்து இறையருள்
பெறாவிட்டால் நம் சில்லறை அறிவுக்கு எட்டுகிற விஷயங்களைக் கூட
நம்மால் பின்பற்ற முடியாது.

அப்படி உபாசித்து மேலான சக்தியிடம் ஒரேயடியாய் சரணாகதி அடையும்


போது நம் பலவனங்கள்,
ீ குறைகள், அறியாமை எல்லாம் விலகி அந்த
மகாசக்தியால் நாம் நிரப்பப்பட்டு பலமாக, நிறைவாக, அனைத்தும் அறிய
முடிந்த அந்த சக்தியின் அங்கமாகி விடுகிறோம். அப்போது மாயையின் திரை
விலகி, பிரம்மமும், ஆத்மதத்துவமும், சகல கர்மங்களும் நம்மால் தெளிவாக
அறிய முடிந்தவைகளாக ஆகி விடுகின்றன.

எல்லாம் அறியும் போது தான் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாய்


இருக்கும் மாயையின் பிடியில் இருந்து முழுவதுமாக விலகி அமைதி
அடைகிறோம்.
இன்னும் ஒரு சுலோகத்துடன் பகவத் கீ தையின் ஏழாம் அத்தியாயம்
நிறைவுபெறுகிறது. அந்த சுலோகத்தில் உபயோகப்படுத்தி இருக்கும்
சொற்களுக்கான விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் ஆரம்பிப்பதால் அதை
அடுத்த எட்டாம் அத்தியாயத்தில் அந்த விளக்கத்துடன் பார்ப்போம்.

34.

மரண காலத்தில்
கடைசி நினைவு !

மரண காலம் மனிதனுக்கு மிக முக்கியமானது. அவன் எப்படி


வாழ்ந்திருக்கிறான் என்பதை மரண காலம் அவனுக்குத் தெளிவாகச்
சொல்லும். மரண காலத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீ தையின் எட்டாம்
அத்தியாயமான அக்‌ ஷர ப்ரஹ்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மிகத் தெளிவாகச்
சொல்கிறார். அதற்கு அச்சாரமாக கீ தையின் ஏழாம் அத்தியாயமான ஞான
விஞ்ஞான யோகத்தின் கடைசி சுலோகத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் :

"அதிபூதம், அதிவைதம், அதியக்ஞம் – இவற்றுடன் கூடியவனாகவும்,


எல்லாவற்றிற்கும் ஆத்ம சொரூபனாகவும் உள்ள என்னை
மரணத்தறுவாயிலும் கூட யார் அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய
மனதோடு கூடிய
அவர்கள் என்னையே அறிகிறார்கள் - அடைகிறார்கள்.

அந்த மூன்று சொற்களும் அர்ஜுனனுக்குப் புதிதானதால் அவன் அதிபூதம்,


அதிவைதம், அதியக்ஞம் என்ற சொற்களுக்கு என்ன பொருள் என்றும் இந்த
சரீரத்தை விட்டுப் புறப்படும் போது மனதைக் கட்டுப்படுத்தியவர்கள் உன்னை
எப்படி அறிய வேண்டும் என்று கேட்பதில் இருந்து எட்டாம் அத்தியாயம்
ஆரம்பமாகிறது.

அதற்கு பகவான் பதிலளிக்கிறார்.

“அழியும் சுபாவமுள்ளது அதிபூதம். புருஷன் அதிவைதம். இந்த உடலில்


அதியக்ஞமாக இருப்பவன் நானே."

"மரண காலத்திலும் என்னையே தியானித்துக் கொண்டு சரீரத்தை விட்டுச்


செல்பவன் என் நிலையை அடைகிறான். அதில் சந்தேகமேயில்லை."

"குந்திமகனே ! மரண காலத்தில் எந்தெந்த எண்ணங்களை நினைத்தபடியாக


மனிதன் சரீரத்தைத் துறக்கிறானோ எப்போது அந்த நிலையையே
நினைத்ததன்
பலனாக அவன் அந்தந்த நிலையையே அடைகிறான்.”

அதிபூதம் என்பது மூலப்பொருள்கள். இயற்கையாகவே தோன்றி, அழியும்


சுபாவம் உள்ளது. அதில் உறைந்திருந்து அது இயங்கத் தேவையான
தனிப்பட்ட சக்தி ( இங்கு புருஷன் என்ற சொல் கையாளப்படுகிறது )
அதிவைதம். அதில் மூல சக்தியாக இருப்பது இறை சக்தியான அதியக்ஞம்.

இந்த மூன்று பிரிவுகளின் மூலமாகவும் இயங்குவது எல்லாம் வல்ல


இறைவனே. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் அணுக்கள்
மூலக்கூறுகள் என்ற ஜடப்பொருள், அவற்றிற்குள் உறைந்திருக்கும்
தனிப்பட்ட இயங்கு சக்தி, எல்லாவற்றையும் தீர்மானித்து இயக்கும் பிரபஞ்ச
சக்தி எனச் சொல்லலாம்.

இன்றைய விஞ்ஞானிகள் அணுவையும் துளைத்தெடுத்து கடைசியில்


ஜடப்பொருளாகத் தோற்றம் அளிக்கும் அணுவில் இருந்து அண்டம் வரை
ஆராய்ந்து கொண்டே போனால் மிஞ்சுவது அனைத்துமே சக்தி வச்சுக்களே,

சக்தியின்
பேரியக்கமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதையே தான்
ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.

அடுத்ததாக இங்கு மரண காலத்திற்கும், அந்தக் கட்டத்தில் என்ன


நினைக்கிறோம் என்பதற்கும் இவ்வளவு முக்கியத்துவம் ஸ்ரீகிருஷ்ணர்
தந்திருப்பது ஏன் என்று பார்ப்போம்.

ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கையே மரணத்தை நோக்கிச் சென்று


கொண்டிருக்கும் பயணம் தான். மற்ற எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு
முயற்சியை மனிதன் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் மரணத்திற்கு
அவன் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அது தானாக ஒரு நாள்
நிகழும். அதிலிருந்து அவன் தப்பிக்க முடியாது. ஒரு இடத்திற்கு டிக்கெட்
எடுத்துக் கொண்டு ரயிலில் அமரும் பயணி தானாக மேற்கொண்டு எதுவும்
செய்ய வேண்டியதில்லை. தானாக அந்த ஸ்டேஷனுக்கு அவனை ரயில்
அழைத்துப் போகும். அப்படித்தான் நாமும் மரணத்திற்கு டிக்கெட் வாங்கி
வந்தவர்கள். வாழ்க்கை தானாக அதில் கொண்டு போய் விட்டு விடும்.
ஆனால் இந்த வாழ்க்கைப் பயணத்தில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்ன
என்றால் மரணம் என்ற அந்த ஸ்டேஷனில் இறங்கும் போது நமக்கிருக்கும்
மனநிலை அடுத்த பயணத்தைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றதாக
இருக்கிறது என்பதே. அதன் சூட்சுமத்தை இனி ஆராய்வோம்.

காலையில் விழித்தெழும் கணத்திலிருந்து இரவு உறங்கப் போகும் கணம்


வரை மனிதன் ஆயிரக்கணக்கான செயல்களில் ஈடுபடுகிறான். தானாக
செய்யும் செயல்கள், அனிச்சையாகச் செய்யும் செயல்கள் என தொடர்ந்து
அவன் செய்யும் செயல்கள் எண்ணிக்கையில் பல்லாயிரமாக விரிந்தாலும்
இரவில் உறங்கும் முன் தன் அன்றைய வாழ்வை அவன் திரும்பிப்
பார்த்தானானால் நினைவில் மிஞ்சுவது கைவிரல்களால் எண்ண முடிந்த
மிகச்சில செயல்களே. அவையே அவனுக்கு அன்றைய முக்கிய செயல்கள்.
அல்லது அவற்றின் தொடர்ச்சியாக அவன் மேற்கொண்டு செய்ய வேண்டி
இருப்பவை. மற்றவை எல்லாம் பரிபூரணமாக முடிந்து விட்டவை. அவற்றின்
நோக்கம் முடிந்து விட்டதால் அவன் தொடர செயல்கள். அதனால் அவை
மறக்கப்பட்டு விட்டன.

இப்படி ஒரு நாளைப் போலத் தான் வாரங்கள், மாதங்கள், வருடங்கள்


வாழ்க்கை முழுவதும் நடக்கின்றது. மரணத்தறுவாயில் மனிதனின்
நினைவில் மிஞ்சுவது வாழ்க்கையின் சாராம்சமும், முக்கியமாய்
நினைத்திருந்து முடித்து விடாத விஷயங்களும் மட்டுமே.

முழுமையாக வாழ்ந்து முடிந்தவனுக்கு மட்டுமே மரணத்தறுவாயில்


இறைவன் நினைவு வரும். பிரபஞ்சத்தின் ஜடப்பொருள்கள் முதலான
அனைத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனை உணர்ந்தவன்
ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு நிகழ்விலும்
இறைவனைக் காணுவதைத் தவற விடுவதில்லை. வாழ்க்கையின் முடிவிலோ,
அவன் வாழ்நாள் எல்லாம் உணர்ந்ததன் தாக்கம் கண்டிப்பாகத் தங்கவே
செய்யும். அதனால் அந்த நேரத்தில் அவனால் இறைவனை மனதார
நினைக்கவும் தியானிக்கவும் முடியும். அதுவே அவனை இறைநிலையை
அடையவும் செய்யும். இதைத்தான் பகவத் கீ தை சொல்கிறது.

நல்ல உதாரணமாய் மகாத்மா காந்தியைச் சொல்லலாம். சிறிதும்


எதிர்பாராமல் சுடப்பட்ட அதிர்ச்சியான நேரத்திலும் “ஹே ராம்”
என்று அவரால் சொல்ல முடிந்தது மனதளவில் அவர் இருந்த
தயார்நிலையையே சுட்டிக் காட்டுகிறது. வாழ்நாள் பூராவும் வாயால்
மட்டுமல்லாமல் மனதார வாழ்ந்த ஆன்மிக வாழ்க்கை அவரை அந்தக்
கணத்திலும் இறைவனை நினைக்க வைத்திருக்கிறது.

வெறும் வார்த்தைகளினால் மட்டும் இறைவன் இருந்திருப்பாரே ஆனால்


என்ன நடக்கும் என்பதற்கு ஒரு கிளிப் பிள்ளையின் உதாரணத்தை பெரியோர்
சொல்வார்கள். எப்போது பார்த்தாலும் ”ராதே கிருஷ்ணா” என்று அந்தக் கிளி
சொல்லிக் கொண்டிருக்கும். அதை வளர்த்தும் வட்டாருக்கோீ அதை
நினைக்கையில் ஒரே பெருமை. ஒருநாள் வட்டு ீ ஆள்கள் வெளியே
சென்றிருக்கையில் ஒரு பூனை வந்து விட்டது. அந்தப் பூனை கிளியைப்
பிடிக்கையில் அது வரை ”ராதே கிருஷ்ணா” சொல்லிக் கொண்டிருந்த
அந்தக்கிளி கீ ச்சு கீ ச்சென்று கத்த ஆரம்பித்து விட்டது.
வாழ்நாள் எல்லாம் வாயளவில் சொன்னாலும் இதயத்தில் நிலைக்காத வரை
இறை நினைவு இறுதியில் வராது!

35.

மறுபிறவி இல்லா
மகோன்னத நிலை
அடைய .!

வாழ்க்கையின் இறுதிக் கணத்தில் இறைவனை நினைக்க முடிவது எளிதில்


யாருக்கும் கைகூடுகிற பாக்கியம் இல்லை என்று பார்த்தோம். வாழும்
நாட்களில் இறைவனை எந்த அளவு பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை
அந்தக் கடைசி கணம் காட்டிக் கொடுத்து விடும்.

யோகியானவன் அந்தக் கடைசிக் கணத்திற்கு எப்போதும் தயார்


நிலையிலேயே இருக்கிறான். வாழ்க்கை என்ற நாடகத்தில் அவனுக்குக்
கிடைத்திருக்கும் வேடம் அரசனுடையதாய் இருந்தாலும்,
பிச்சைக்காரனுடையதாக இருந்தாலும் அவனுக்கு உண்மையில் தான் யார்
என்கிற எண்ணம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இருக்கும்.
கிடைத்திருக்கிற வேடம் அரசனுடையது என்றால் அதுவாகவே தன்னை
பாவித்து அகமகிழ்ந்தும், கிடைத்திருக்கிற வேடம் பிச்சைக்காரனுடையது
என்றால் அதுவாகவே மாறி துக்கத்தில் உழன்றும், தன்னை மறந்து போகும்
பேதைமை அவனிடத்தில் இருக்காது. கிடைத்திருப்பது மகுடமானாலும் சரி,
திருவோடானாலும் சரி முடிவில் அங்கேயே
விட்டு விட்டுப் போக வேண்டியவன் அவன். அவை அவனுடையதல்ல. அந்த
வேடத்தின் பொருள்கள் மட்டுமல்ல, அதன் சௌபாக்கியங்களும்,
பிரச்னைகளும் கூட அவனுடையதல்ல. அந்த மனப்பாங்கையே ஸ்ரீகிருஷ்ணர்
பல இடங்களில் பகவத் கீ தையில் வலியுறுத்துகிறார்.

ஆனால் நாடகத்தின் வேடதாரிக்கு நாடகத்திற்கு வரும் முன் கிளம்பி வந்த


வடு
ீ நினைவிருக்கிறது, தான் யார் என்ற நினைவிருக்கிறது, இரண்டு மூன்று
மணி நேரங்கள் என்று நாடகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறுகிய கால
அவகாசம் இருக்கிறது, நாடகம் எப்படியெல்லாம் போகும் என்று அவன்
அறிவான். வாழ்க்கை நாடகத்தில் ஈடுபட்டவனுக்கு இந்த சௌகரியங்கள்
இருப்பதில்லை. இந்த வேடமும், இந்த வாழ்க்கையும் தான் அவனுக்குத்
தெரிந்த ஒரே நிஜமாக இருக்கிறது. இது எப்போது முடியும், முடிவதற்கு முன்
என்னென்ன நிகழும் என்பதும் அவனுக்கு நிச்சயமில்லை.

அதனால் வாழ்க்கையே பல சமயங்களில் அவனுக்கு பிரச்னையாகவும்,


போராட்டமாகியும் விடுகிறது. தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல
தினம் தினம் குருட்சேத்திரத்தை அவன் சந்திக்க வேண்டி வருகிறது. மானசீக
யுத்தம் செய்ய வேண்டி வருகிறது. இந்தப் போராட்டத்தை தனி மனிதனாக
சந்திக்கும் திராணியை பல சமயங்களில் இழந்தும் விடுகிறான். அவனுக்கு
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :
"ஆகவே எல்லாக் காலங்களிலும் என்னையே நினைத்துக் கொண்டு யுத்தம் செய்.
என்னிடமே உன் மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வாயானால்
என்னையே நீ அடைவாய். இதில் சந்தேகமில்லை."

மனமும் புத்தியும் எல்லாம் வல்ல இறைவனிடம் உண்மையாகவும்


முழுமையாகவும் நிலைக்கும் தருணங்களில் மனிதன் இறைசக்தியுடன்
தொடர்பில் இருக்கிறான். இறைசக்தியுடன் தொடர்பில் இருந்து கொண்டு
செயல்படும் மனிதனால் முடியாதது என்ன இருக்க முடியும்? அப்படி நிலைத்த
மனத்தையும், புத்தியையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்து விடும்
பக்குவமும் அமைந்தால் அவன் முடிவில் இறைவனை அடைந்தே
விடுகிறான்.

பரம் பொருளான இறைவனை அடையும் வழியைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர்


விளக்குகிறார் :

"எல்லாமறிந்தவனும், அநாதியானவனும் (மிகப்பழமையானவனும்),


அனைத்தையும் ஆள்பவனும், அணுவைக் காட்டிலும் மிக நுட்பமானவனும்,
அனைத்தையும் படைத்தவனும், சிந்தனைக்கெட்டாத வடிவுடையவனும்,
சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவனும், அஞ்ஞான இருளைக்
கடந்தவனுமான பரம்பொருளை எவனொருவன் மரண காலத்தில் மனதை
நிலைநிறுத்தி பக்தியுடன் புருவங்களின் மத்தியில் பிராணனை நிறுத்தி
நன்றாக சிந்திப்பானோ அவன் அந்த ஒளிப்பிழம்பான பரம்பொருளையே
அடைகிறான்."

"புலன்களை அவைகளின் விஷயங்களில் செல்ல விடாமல் தடுத்து மனத்தை


இதயக்கமலத்தில் நிறுத்தி தன்னுடைய பிராணனை தலை உச்சியில்
நிலைநிறுத்தி யோகதாரணையை மேற்கொண்டு, பிரம்மத்தைச் சொல்லும்
ஓம் என்னும் ஓர் எழுத்தைச் சொல்லிக் கொண்டும், என்னை நினைத்துக்
கொண்டும் எவனொருவன்
உடலை விடுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான்."

எதை அதிகம் எண்ணுகிறானோ மனிதன் அதுவாகவே மாறி விட முடிந்தவன்.


எனவே எண்ணத்தில் இருக்கிறது சூட்சுமம். எல்லாமறிந்தவன்,
மிகப்பழமையானவன், அனைத்தையும் ஆள்பவன், அணுவைக் காட்டிலும் மிக
நுட்பமானவன், அனைத்தையும் படைத்தவன், சிந்தனைக்கெட்டாத
வடிவுடையவன், சூரியனின் ஒளி போன்ற ஞான ஒளியுள்ளவன், அஞ்ஞான
இருளைக் கடந்தவன் என்பதான சிறப்பு அம்சங்கள் கொண்ட ஒப்பில்லாத
பரம்பொருளை மனதில் பூரணமாய் நிரப்பி மரணத்தைச் சந்திப்பவன்
பரம்பொருளையே அடைகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இந்த சுலோகங்களில் புருவ மத்தியில் (ஆக்ஞா சக்ரா) பிராணனை


நிலைநிறுத்துவதையும், தலை உச்சியில் (சஹஸ்ராரா சக்ரா) பிராணனை
நிலைநிறுத்துவதையும், ஓம் என்ற ஓங்காரத்தை உச்சரிப்பதையும் கூட
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். ஓம் உச்சரிப்பு நம் அறிவுக்கு எட்டிய விஷயம்.
பிராணனை அந்தச் சக்ராவில் நிலை நிறுத்துவது
யோகிகளுக்கே புரியவும், முடியவும் கூடிய விஷயம். அதனால் சாதாரண
மனிதர்களைப் பொருத்த வரை மனதைக் கண்ட இடங்களில் சஞ்சரிக்க
விடாமல் பிடித்து இழுத்து இறைவனிடம் தங்க வைப்பது ஒன்றே இறைவனை
அடையப் போதுமானது.

இறைவனை அடைந்த பின் என்ன? ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

"உயர்ந்த சித்தியடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்த பின் துக்கத்தின்


இருப்பிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை எடுக்க மாட்டார்கள்."

பிறப்பெடுத்த பிறகு அதிர்ஷ்டசாலியானாலும் சரி, துரதிர்ஷ்டசாலியானாலும்


சரி நிலைத்த மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்வதில்லை. இன்பத்தோடு
துன்பமும் பிணைந்து இழைக்கப்படுவதே வாழ்க்கை. மாறி மாறி இன்ப
துன்பங்களால் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கையை துன்பத்தின் இருப்பிடம்
என்றும் நிலையற்றது என்றும் கூறுகிற பகவான் தன்னை அடைந்தவர்கள்
மறுபிறவி எடுக்க மாட்டார்கள் என்று உறுதி அளிக்கிறார்.

“இன்னுமோர் அன்னைக் கருப்பையூர் வாராமைக் கா” என்று பட்டினத்தார்


இறைவனிடம் வேண்டுவது போல ஆசைப்படுபவர்கள் திரும்பி வராத அந்த
திவ்யப் பிரதேசத்திற்குப் போய் சேர்ந்து சட்டவிட வேண்டும். முன்பே
சொன்னது போல் மரண காலத்தில் பரம்பொருளை நினைத்தால் போதும்
என்று தப்புக் கணக்கு போட்டு விடாமல் வாழும் காலத்தில் பயற்சி செய்து
பழகி அந்த இயல்பைப் பெற்றால் மட்டுமே கடைசி காலத்தில் கடவுள்
நினைவுக்கு வருவார். இறைவனடி சேர முடியும்.

எட்டாம் அத்தியாயமான அக்ஷர ப்ரம்ம யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும்


கூறும் சுலோகங்கள் பிரம்மாவுக்கு ஆயிரம் யுகங்கள் ஒரு பகல், ஆயிரம்
யுகங்கள் ஒரு இரவு என்கிற தகவலையும், எந்தெந்த காலங்களில் ஒரு யோகி
உயிர்நீத்தால் மறுபிறவி இல்லை, எந்தெந்த காலங்களில் உயிர் நீத்தால்
மறுபிறவி உண்டு என்கிற தகவல்களையும் சொல்கிறார்.

இறைவனை அடைந்தால் மறுபிறவி இல்லை என்கிற அந்த உறுதிமொழியே


போதும்
என்பதால் அதனை மேலும் விளக்குவது அவசியம் இல்லை.

36

இருந்தும்
இல்லாமலும்
இறைவன் !

”பொறாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை


உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிருந்து
விடுபடுவாய்” என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீ தையின் ஒன்பதாம்
அத்தியாயமான ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகத்தைச் சொல்ல
ஆரம்பிக்கிறார்.

பகவத்கீ தையின் நடுநாயகமாக அமைந்து இருக்கும் இந்த ஒன்பதாம்


அத்தியாய யோகத்தை ராஜ வித்யை என்றும், மிகப் புனிதமானது என்றும்,
அழிவற்றது என்றும், கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானது என்றும்
மேன்மைப்படுத்தியும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். பொறாமை இல்லாத உனக்கு இந்த
உபதேசம் என்று அவர் கூறுவதன் சூட்சுமம், பொறாமை இல்லாதவர்களே
இந்த உபதேசம் பெறத் தகுதியானவர்கள் என்பதே என்று அறிஞர்கள்
கருதுகிறார்கள்.

அடுத்தவர்களைப் பார்த்து வயிறெரியாமல் இருப்பதே பொறாமையற்ற நிலை


என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம் நீதி
நூல்கள் அதற்கு மேலும் சில தகுதிகளைச் சொல்கின்றன. உதாரணத்திற்கு
”பண்புள்ளவர்களின் நற்பண்புகளை மறுக்காமல் ஏற்பது, கொஞ்சம் குணம்
இருந்தாலும் அதைக் கொண்டாடுவது, பிறரிடம் குற்றங்குறைகள் கண்டாலும்
அவற்றைப் பேசி மகிழாமல் இருப்பது இவையே பொறாமை அற்ற நிலையின்
லட்சணங்கள்” என்று அத்ரிஸ்மிருதி என்ற சம்ஸ்கிருத நீதிநூல் கூறுகிறது.

மற்றவர்களின் நற்பண்புகளை ஒத்துக் கொள்ள மனம் வராமல் இருப்பது


பொறாமையின் முழு வெளிப்பாடே. பொறாமை இல்லாதவன் மட்டுமே
அடுத்தவனிடம் இருக்கும் நல்லதைக் காண மறுக்க மாட்டான். அத்ரிஸ்மிருதி
இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறது. கொஞ்சம் நல்லதிருந்தாலும்
அதைக் காண்பது மட்டுமல்லாமல் கொண்டாடவும் முடிய வேண்டும்
என்கிறது. எந்த நல்லதும் லேசில் வந்து விடாது. அதைத் தன் இயல்பாக
வைத்திருக்க ஒருவன் நிறையவே முயற்சித்திருக்க வேண்டும். அதை
மனதில் இருத்திக் கொண்டால் கொஞ்சம்
இருக்கும் நல்லதையும் மனதாரப் பாராட்ட முடியும். அது பொறாமை அற்ற
நிலையின் சற்று மேல் நிலை. சரி நல்லது கொஞ்சம் இருந்தாலும்
மோசமானதும் நிறையவே இருக்கிறது, அதையாவது சொல்லலாமா என்றால்
அதைப் பற்றிப் பேசி மகிழ்கிற சில்லறைத்தனம் இல்லாமல் இருப்பதும்
முக்கியம் என்கிறது அத்ரிஸ்மிருதி. இப்படிப்பட்ட விசாலமான,
கண்ணியமான, உயர்ந்த மனதிருப்பது ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தைப் பெற
உண்மையான தகுதி என்றாகிறது.

எனவே மேலும் படிக்கப் போகும் முன் நம்மை சுயபரிசோதனை செய்து


கொண்டு உண்மையாகவே பொறாமை அற்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ள
உறுதி கொள்வோமாக!

அசுபமான சம்சாரம் என்று ஏன் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்றார் என்றால் இந்த


சம்சார பந்தம் ஒன்றன் பின் ஒன்றாக துக்கங்களை உருவாக்கிய வண்ணமே
இருக்கிறது. சம்சார சாகரம் என்று சொல்லப்படும் இந்தப் பிறவிப்
பெருங்கடலில் ஓயாத துக்க அலைகள் உருவாகிக் கொண்டே இருந்து
வருத்தப்படக் காரணங்கள் இருந்து கொண்டே இருப்பதால்

இதை அசுபம் என்று சொல்வது சரியே அல்லவா?

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்கிறார் :

"இந்த தர்மத்தின் விஷயத்தில் சிரத்தை காட்டாதவர்கள் என்னை அடைய


முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டே
இருப்பார்கள்."
சிரத்தை என்பதென்ன? ஆதி சங்கரர் சொல்கிறார். “புனித நூல்கள் என்ன
சொல்கின்றன என்பதன் உண்மைப் பொருளைக் கூர்மதியால் உணர்ந்து
அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் சிரத்தை”. புனித
நூல்களைப் படிப்பது சுலபம் தான். கஷ்டமான பகுதி அவை சொல்வது
இன்னது தான் என்பதைச் சரியாக உணர்தல். அதுவும் கூர்மதி இருந்தால்
சாத்தியமே. மிக மிகக் கஷ்டமான பகுதி உணர்ந்தபடி வாழ முடிதல். இந்தக்
கடைசி விஷயத்தில் தான் அநேகமாக அத்தனை பேரும் கோட்டை
விடுகிறோம்.

ஸ்ரீகிருஷ்ணர் இந்த சிரத்தையை தான் காட்ட வேண்டும் என்கிறார். கீ தை


உட்பட எந்தப் புனித நூலையும் மனனம் செய்வதிலோ, அதை வியாக்கியானம்
செய்வதிலோ, ஒருவன் தன் பண்டித்தியத்தை வெளிப்படுத்தலாமே ஒழிய,
பிறவித் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அந்த சிரத்தை என்பது
உடனடியாக ஏற்படுத்திக் கொள்ள முடிந்த ஒன்றல்ல. பல பிறவிகளின்
பெருமுயற்சிக்குப் பின்னரே வரக்கூடிய ஒன்று. அது ஒன்றே ஒருவன்
கடைத்தேறும் வழி.

ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து தன்னை விவரிக்கிறார் :

"உருவமற்ற பரமாத்மாவான நான் உலகமெங்கும் பரவியிருக்கிறேன். சகல


ஜீவகோடிகளும் என்னுள்ளே அடங்கியுள்ளன. ஆனால் நான் அவற்றில்
அடங்கி இருக்கவில்லை."

"அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவை அல்ல. என்னுடைய


ஈஸ்வரத் தன்மை கொண்ட யோகசக்தியைப் பார். அனைத்து
உயிரினங்களையும் தாங்குகிறவனும், உண்டாக்குகின்றவனாகவும் இருந்த
போதிலும் என்னுடைய ஆத்மா
உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை."

"எங்கும் வசுகின்ற
ீ பெருங்காற்று எப்படி ஆகாயத்தில் இருக்கிறதோ அப்படியே
எல்லா உயிரினங்களும் என்னிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்."

பரந்தாமனின் இந்த சுலோகங்கள் வெறுமனே படிக்கையில் ஒன்றுக்கொன்று


முரண்பாடாய் இருப்பதாய்த் தோன்றலாம். பல பேருண்மைகள் எப்போதும்
அப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாய்த் தோன்றக்கூடியவையே. ஆனால்
ஒரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது உண்மையாய் தோன்றுகின்ற
ஒன்று இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கப்படும் போது அதற்கு
எதிர்மாறாகத் தோன்றலாம். அதனால் ஒவ்வொரு சுலோகமும் ஒவ்வொரு
கோணத்தில் அணுகப்பட்டது என்று எடுத்துக் கொண்டு பார்க்கலாம்.

சகல ஜீவன்களும் என்னுள்ளே அடங்கி இருக்கின்றன ஆனால் நான் அவற்றில்


அடங்கி இல்லை என்று சொல்வதற்கு
உதாரணமாய் கடல் அலைகளுக்கும், கடலுக்கும் உள்ள சம்பந்தத்தைச்
சொல்லலாம். கடலால் உருவாக்கப்படும் அலைகள் கடலில் அடங்கி
இருக்கின்றன. ஆனால் அலைகளுக்குள்ளே தான் கடல் அடங்கி இருக்கிறது
என்று சொல்ல முடியாதல்லவா? இறைவனும் அப்படித் தான். எத்தனையோ
ஜீவகோடிகளை உருவாக்கினாலும் அந்த ஜீவகோடிகளுக்குள் இறைவனை
அடக்கி விட முடியாது.
அடுத்ததாக அண்டசராசரங்கள் என்னுள்ளே இருப்பவை அல்ல என்கிற
உவமானம். கனவு காணும் ஒரு மனிதனை எடுத்துக் கொள்வோம். அவன்
எத்தனையோ கனவு காண்கிறான். அவனில்லை என்றால் கனவின்
நிகழ்வுகளும் இல்லை, பொருள்களும் இல்லை. ஆனாலும் கூட கனவில் காணும்
பொருள்களும், மனிதர்களும், இடங்களும் அவனுக்குள்ளே இருக்கின்றன
என்று சொல்ல முடியாதல்லவா? அத்தனைக்கும் ஆதாரம் அவன் தான்
என்றாலும் அவன் அதற்குள் இல்லை, அவையும் அவனுக்குள் இல்லை.

அடுத்த உவமானம் ஆகாயம் - காற்று. இங்கே ஆகாயம் என்பது


வெற்றிடத்தைக் ( SPACE ) குறிக்கிறது. ஆகாயத்தைப் போலவே
இறைவன் உருவமற்றவர், செயல் புரியாதவர், எதிலும் ஒட்டாதவர். வாயுவோ
ஆகாயத்திலேயே உருவாகி பரவி எங்கும் சஞ்சரிக்கும் இயல்புடையது.
ஆகாயத்திலேயே நிலைபெற்றிருப்பது. வாயுவுக்கு ஆதாரம் ஆகாயமே.
ஆனாலும் ஆகாயம் வாயுவிற்கு அப்பாற்பட்டதே. எல்லா உயிரினங்களும்
இறைவனின் சங்கல்பத்தாலேயே உருவாகி அவனிடமே நிலைத்து நின்ற
போதும் இறைவன் ஒட்டாதவனும், அப்பாற்பட்டவனுமே ஆவான்.

மொத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கின்ற ஈஸ்வரத் தன்மை கொண்ட யோக


சக்தி என்பதை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். எல்லாவற்றையும்,
உண்டாக்கி, எல்லாவற்றிலும் நிறைந்து, எல்லாவற்றையும் தாங்கிக்
காப்பாற்றுபவராக இருந்தாலும், ஒன்றிலும் ஒட்டாமல் விலகி இருக்கும்
இறைவனின் அற்புத சக்தியே ஈஸ்வர யோக சக்தி !

37.

உனக்குள்ளே
இறைவனைப்
பார் !

எல்லாவற்றிற்கும் மூலமும் முடிவுமாய் இருப்பவன் இறைவனே. சிருஷ்டி


காலத்தில்
அனைத்தும் அவனிடம் இருந்தே தொடங்குகின்றன. அழிவு காலத்தில்
அனைத்தும் அவனிடமே அடைக்கலம் அடைகின்றன. இதை அடுத்ததாக
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்.

”குந்தி மகனே ! பிரளய காலத்தில் எல்லா உயிரினங்களும் என்னுடைய


பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் சிருஷ்டி தொடங்கும் போது
அவற்றைத் தோன்றச் செய்கிறேன்."

"பிரகிருதிக்கு வசமானதால் தன் வசமிழந்த இந்த உயிரினங்களையும்


என்னுடைய பிரகிருதியை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப சிருஷ்டி
செய்கின்றேன்."

"அர்ஜுனா! அந்தக் கருமங்களில் பற்று வைக்காமல் ஒதுங்கி நிற்பவன்


போலுள்ள என்னை அந்தக் கருமங்கள் கட்டுப்படுத்துவதில்லை.”
துவக்கத்தில் தூய்மையாக இருக்கின்றவை கடைசி வரை தூய்மையாகவே
இருந்து விடுவதில்லை. எத்தனையோ மாற்றங்களை அடைந்து, பலவித
கர்மாக்களில் ஈடுபட்டு அதற்கேற்ற பலன்களை சம்பாதித்து, கடைசியில்
உயர்வையோ தாழ்வையோ பெற்று முடிவில் இறைவனை அடைகின்றன.

இறைவனை அடைந்து அங்கேயே தங்கி இருக்கின்ற சமயத்தில் உயர்ந்து


போனதும், தாழ்ந்து போனதும் ஒரே போலவே இருக்கின்றன. உறக்கத்தில்
உத்தமனும், அயோக்கியனும் ஒன்று தான். அவர்கள் உறக்கத்தில் அவர்களை
வித்தியாசப்படுத்துவது இயலாத காரியம். விழித்துக் கொண்டபின் அவரவர்
அவரவர் இயல்பின்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அது போலவே
இறைவன் சிருஷ்டியை மறுபடி ஆரம்பிக்கையில் தாங்கள் அடைந்திருந்த
மாற்றத்திலிருந்து மறுபடி துவங்குகிறார்கள். கர்மபலன்களை அனுபவித்துக்
கொண்டே வாழ்கையில் மறுபடி மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள்
கர்மாக்களிலும் கூட்டல், கழித்தல் நிகழ்கின்றன. இப்படியே பிரபஞ்சம்
இயங்குகின்றது.

ஆனால் இத்தனையிலும் ஒதுங்கி நிற்பதும், பாதிக்கப்படாமலும் இருப்பது


பகவானுக்கு எப்படி சாத்தியமாகிறது? திரையில் எத்தனை விதமான படங்கள்
வந்து
போனாலும் அந்தப் படங்கள் திரையைப் பாதிப்பதில்லை
அல்லவா? மழைக்காட்சி வந்தால் அது ஈரமாவதுமில்லை. கடும் வெயில்
அடித்தால் அது சூடாவதுமில்லை. திரை இல்லா விட்டால் அந்தப் படங்களே
இல்லை என்பது உண்மையானாலும் அந்தப் படங்கள் திரையின் உண்மைத் தன்மையை
மாற்றுவதில்லை அல்லவா? அப்படியே தான் இறைவனும் இருக்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் :

"ஜீவகோடிகளுக்கெல்லாம் மகேசுவரனான என்னுடைய மேன்மையை


அறியாமல் மனித உருவிலுள்ளவன் என்று என்னை மூடர்கள்
அவமதிக்கிறார்கள் !"

இந்த சுலோகத்தை மேலோட்டமாய் படித்தால் ஸ்ரீகிருஷ்ணர் சாதாரண


மனிதர்கள் போல புலம்புவது போல் தோன்றும். ஆனால் ஆழமாய் படித்தால்
தான் உண்மை விளங்கும். மனிதர்களைப் போல் இறைவன் எதையும்
எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் மற்றவர் மதிப்பதும்,
அவமதிப்பதும் இறைவனை என்றுமே அசைப்பதில்லை. பின் ஏன் மனித
உருவில் உள்ளவன் என்று
என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார்?

பிறவிகளில் உயர்ந்தது மனிதப்பிறவி. தாவரங்கள் தங்கள் இயல்பின்படியே


இலைகளைத் துளிர்க்கும், காய்க்கும், பூக்கும். அவற்றை மாற்றிக்கொள்ளும்
சக்தி தாவரங்களுக்கு இல்லை. வாழை மரத்தில் வாழை இலைகளே
துளிர்க்கும், வாழைக்காய்களே காய்க்கும், வாழைப்பூவே பூக்கும். அவை மாறி
கறிவேப்பிலையைத் துளிர்க்கவோ, ஆப்பிள்களைக் காய்க்கவோ,
மல்லிகைப்பூவைப் பூக்கவோ முடியாது.

விலங்கினங்களும் தங்களுக்கென்று இருக்கும் இயல்புகளை ஒட்டியே


வாழ்ந்து மடிகின்றன. பறவைகள் தங்கள் இயல்பின்படியே கூடுகட்டி அந்தக்
கூடுகளில் வசிக்கின்றன, பறக்கின்றன, இரை தேடுகின்றன. விலங்குகளும்
தங்கள் இயல்பின்படியே வசித்து மடிகின்றன. அவற்றிற்கு தங்கள்
இயல்புகளை மாற்றிக்கொள்ளவோ, வாழும் முறையை மாற்றிக் கொள்ளவோ
முடிவதில்லை.

உயிரினங்களிலேயே மனிதப் பிறவி தான் உயர்ந்தது. மனித இனம் தான்


உருவாக்கப்பட்டது போலவே இருந்து, வாழ்ந்து, மடியும் நிர்ப்பந்தம் அற்றது.
மாற முடிந்த சக்தியும் சுதந்திரமும் கொண்டது. ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் உருவான தற்போதைய மனித இனம், இன்று எல்லா
வகைகளிலும், பிரமிக்கத்தக்க மாற்றம் அடைந்துள்ளது. வாழும் இடம் முதல்
அனைத்திலும் அது அடைந்திருக்கும் பிரம்மாண்டமான மாற்றங்களையும்,
முன்னேற்றத்தையும் மற்ற உயிரினங்கள் அடையவில்லை.

மனம் வைத்து உறுதியோடு செயல்பட்டால் மனிதனால் எப்படியும் மாற


முடியும். எதையும் சாதிக்க முடியும். மனித இனம் இதை எத்தனையோ
கோடிக்கணக்கான விதங்களில் நித்தமும் நிரூபித்து வருகிறது. அதனால்
அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மன் குடி இருந்தாலும் மனிதப்
பிறவியில் மட்டும் சக்திகளிலும் சரி, அவற்றைச் செயல்படுத்தும்
சுதந்திரத்திலும் சரி சற்று அதிகப்படியாகவே பிரகாசிக்கிறான் என்பதை
நிச்சயமாகச் சொல்லலாம்.

ஆனால் அந்த மனிதப் பிறவியில் நாம் அவனை அடையாளம் காண்கிறோமா


என்றால் இல்லை. சிலையிலும், படத்திலும், சின்னங்களிலும் கூட
இறைவனைப் பார்க்க முடிந்த நமக்கு மனிதர்களில் அந்தர்யாமியை, சர்வசக்தி
வாய்ந்தவனாய் இருக்கும் இறைவனைப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக பல
சமயங்களில் மனிதர்களில் மிருகங்களையும், எதிரிகளையும்,
சைத்தானையும் பார்க்கிறோம், அப்படியே உருவாக்கிக் கொள்ளவும்
செய்கிறோம். உள்ளே இருக்கும் மகேசுவரனை உணராமல்
வெளித்தோற்றமாய் இருக்கும் மனிதனாகவே பாவித்து தாழ்த்திப் பார்ப்பதும்,
தாழ்ந்து போவதும் மூடத்தனமே அல்லவா? அதையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
சொல்கிறார்.

எல்லாம் வல்ல இறைவனை அடுத்த மனிதனிடம் பார்ப்பது அப்புறம். முதலில்


நமக்குள்ளே இறைவனைப் பார்த்து அறிகிறோமா? நமக்குள்ளே
உணர்கிறோமா? நமக்குள்ளே அந்த பரமாத்மாவை கௌரவப்படுத்துகிறோமா?
குப்பனாகவும், சுப்பனாகவும் அல்லவா கடைசி வரை எண்ணி அப்படியே
வாழ்ந்து மடிந்து போகிறோம்.

நமக்குள்ளே பரமாத்மனைப் பார்க்க முடிந்தால் தவறு செய்யத் தோன்றுமா?


தாழ்ந்த எண்ணங்கள் உருவாகுமா? ஜடமாய் இருக்க முடியுமா? பயமும்,
சந்தேகமும் பிடித்து நம்மை ஆட்டுமா? நமக்குள் ஒவ்வொரு அணுவிலும்
அவன் இருக்கிறான் என்று உணர முடிந்தால் உருவாகும் சக்திப் பிரவாகத்தில்
நம்மால் முடியாதது தான் என்ன?

நமக்குள் இருக்கும் இறைவனை உணராமல் தரம் குறைந்து போகும் போது


நமக்குள் இருக்கும் இறைவனை அவமானப்படுத்துகிறோம். இதையே
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.
முதலில் உனக்குள் இறைவனைக் காண ஆரம்பி. காலப்போக்கில்
அனைவரிடமும் அவனைப் பார்க்க உன்னால் முடியும்.

38.

வாழ்க்கையைக்
கடவுள் மயமாக்கலாம் !

மூடர்களின் மற்ற லட்சணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார் :

"வணான
ீ ஆசைகளையும், வணான ீ செயல்களையும், வணான
ீ அறிவையும்
வைத்துக் கொண்டு விவேகமற்றவர்களாய் ராக்‌ ஷஸீம், ஆஸரீம், மோஹின ீம்
என்ற தன்மைகளைக் கொண்டவர்களாகிறார்கள்."

மூடர்களின் கச்சாப் பொருள் என்ன தெரியுமா? வணானீ ஆசைகள், வணான ீ


செயல்கள், வணானீ அறிவு இந்த மூன்றும் தான். இந்த மூன்றையும் வைத்துத்
தான் தங்கள் வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொண்டு, மற்றவர்களையும்
துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். தாங்களே வணாகிப்
ீ போகிறார்கள். எது எதற்கு
என்னென்ன பலன் கிடைக்கும் என்கிற அடிப்படை ஞானம் கொண்டு
புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே விவேகம். அந்த விவேகம் இல்லாத
போது தான் வணானவற்றில்
ீ மனம், செயல், அறிவு ஆகியவை செயல்பட
ஆரம்பிக்கிறது. அதனால் உருவாகும் மூன்று வகைத் தன்மைகளை
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ராக்‌
ஷஸீம் என்கிற அரக்க குணம் காரணமே இல்லாமல் பகைமை பாராட்டி
அடுத்தவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

ஆஸரீம் என்கிற அசுரகுணம் காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு தன்


சுய நலத்திற்காக அடுத்தவர்க்குத் துன்பம் விளைவிக்கவும், பிறர் பொருளை
அபகரிக்கவும் முயலும் தன்மை கொண்டது.

மோஹின ீம் என்ற குணம் மோகத்தின் வசப்பட்டு துன்பம் ஏற்படுத்திக்


கொள்ளும் தன்மை கொண்டது.

இந்த மூன்று தன்மைகளாலும் எக்காலத்திலும் நாசம் அல்லாமல் நன்மைகள்


யாருக்கும் விளையப்போவதில்லை. அறிவை மங்க வைத்து, தவறான
ஆசைகளை அதிகரிக்க வைத்து, தறிகெட்டு ஓடும் செயல்களைச் செய்ய
வைத்து யாருக்குத் தான் நன்மைகள் விளைய முடியும்?

மூடர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்லியாகி விட்டது.


ஞானமுள்ளவர்கள் எப்படி இருப்பார்கள், என்ன செய்வார்கள் என்று சொல்ல
வேண்டும் அல்லவா? அதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"தெய்வகீ இயல்புடைய மகாத்மாக்களோ எல்லா உயிரினங்களுக்கும்


மூலமாய், அழிவில்லாதவனாய் என்னை அறிந்து வேறு எதிலும்
நாட்டமில்லாத மனத்துடன் இடைவிடாது வழிபடுகிறார்கள்."
"அவர்கள் இடைவிடாது என்னைப்பற்றிப் பாடிக்கொண்டும், கடினமான
விரதங்களால் முயற்சி செய்து கொண்டும், என்னைப் பக்தியுடன் நமஸ்கரித்துக்
கொண்டும், எப்போதும் என்னுடைய தியானத்தில் நிலைத்திருந்தும்
உபாசனை செய்கிறார்கள்"

*சிலர் ஞான யக்ஞத்தினால் என்னை உபாசிக்கிறார்கள். சிலர் என்னை


இரண்டற்ற ஒரே தெய்வமாகவும், சிலர் வெவ்வேறு உருவங்களாகவும், சிலர்
எங்கும் பரவியுள்ள என்னை மற்றும் பல விதமாகவும் உபாசிக்கிறார்கள்."

அழிகின்ற வெளிப்புறத் தோற்றங்களில் தெரிகிற வித்தியாசங்களையே


உண்மையாக நம்பி விடாமல், அவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் மூலமான
அழிவில்லாத இறைவனை
ஒவ்வொன்றிலும் அடையாளம் காண முடிந்தவனே உண்மையான ஞானி.
அழிவேயில்லாத மூலப்பொருளை உணர முடிந்தவனுக்கு அறிந்து
கொள்ளவோ, வழிபடவோ வேறு என்ன இருக்கிறது? இறைவனால்
ஈர்க்கப்பட்டவனை வேறு என்ன தான் ஈர்க்க முடியும்? எனவே தெய்வக ீ
இயல்புள்ள மகாத்மாக்களின் நாட்டம் முழுவதும் இறைவனிடத்திலேயே
இருக்கிறது. இடைவிடாது இறைவனையே வழிபடுகிறான்.

வழிபடும் விதங்கள் அவரவர் தன்மைக்கேற்ப மாறுபடலாம். இறைவனைப் பாடிக்


கொண்டும், இறைவனை எண்ணி விரதங்கள் இருந்து கொண்டும்,
இறைவனைப் பக்தியுடன் வணங்கிக் கொண்டும், இறைவனைத் தியானித்துக்
கொண்டும் வழிபடலாம். ஒருவருக்கு இயல்பாக லயிக்க முடிவது மற்றவர்க்கு
கடினமாக இருக்கலாம். இந்த வழிபாட்டு விதங்களில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்கள் இறைவனை ஒருவனாகப் பார்க்கலாம், இரண்டாகப் பார்க்கலாம்,


இருபதாகப் பார்க்கலாம், இருநூறாகவும் பார்க்கலாம். யக்ஞங்களால்
வழிபடலாம், ஞான மார்க்கமாகத் தியானித்து அந்த சுகானுபவத்தில்
நிலைக்கலாம். இப்படி காணும் விதங்களிலும் உயர்வு, தாழ்வு இல்லை.
காணப்படும் பொருள் இறைவனாக இருக்கும் வரையில் காணும் விதம்
எதுவாகவும் இருக்கலாம். காணும் விதமும், வழிபடும் விதமும்
ஆத்மார்த்தமாக இருக்கும் வரையில் எல்லாமே இறைவனுக்கு உகந்ததே.

இந்த சுலோகங்களில் ’இடைவிடாது’ என்பதை ஸ்ரீகிருஷ்ணர்


வலியுறுத்துவதைப் பார்க்கும் போது சிலருக்கு ஒரு யதார்த்தமான சந்தேகம்
வரலாம். இடைவிடாது இறைவனை நினைப்பது எல்லோருக்கும் சாத்தியமா?
உலக வாழ்க்கையைத் துறந்தவன் இறைவன் நினைவாகவே இருக்க முடியும்.
மற்றவர்களால் முடியுமா? மெய்ஞான ஈடுபாடு இருந்தாலும், ஆத்மார்த்தமான
தேடுதல் இருந்தாலும் இல்வாழ்க்கையைத் துறக்காதவனுக்கு இது முடிகிற
காரியமா?

வாழ்க்கையைத் துறக்காமலேயே ஒருவருக்கு இது முடிகிற காரியம் தான்.


செய்கின்ற எதையும் நீங்கள் இறை மயமாக்கலாம். ஏன் வாழ்க்கையையே
இறை மயமாக்கலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? வினோபா பதில்
சொல்கிறார், கேளுங்கள் :

”நம் அன்றாட வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு கணமும் சாதாரணமாகத்


தோன்றினாலும் உண்மையில் அது சாதாரணமானதல்ல. அதில் பெரிய பொருள்
பொதிந்திருக்கிறது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய யக்ஞ கர்மமே. உனது
உறக்கம் என்பதென்ன? அது ஒரு சமாதி நிலை. எல்லா வகைப்
போகங்களையும் நாம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டுத்
தூங்கினால் அத்தூக்கம் சமாதி நிலை அல்லாமல் வேறென்ன? குளிக்கும்
போது புருஷ சுக்தம் சொல்லும் வழக்கம் நம் முன்னோரிடத்தில் இருந்து
வந்தது. குளியலுக்கும் புருஷ சுக்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணிப்
பாருங்கள். பார்க்க விரும்பினால் நிச்சயம் புலனாகும்”.

”ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் உள்ள விராட புருஷனுக்கும், உன்


குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நீ எடுத்துத் தலையில் ஊற்றிக்
கொள்ளும் அந்தச் செம்பு நீரில் ஆயிரக்கணக்கான துளிகள் இருக்கின்றன.
அத்துளிகள் ஆண்டவனது ஆயிரம் கைகளில் இருந்து உன் மீ து பொழியும்
நீர்த்துளிகளாக எண்ணிக் கொள். இத்துளிகள் மூலமாக உன் தலையின்
உள்ளே உள்ள அழுக்கையும் சேர்ந்து ஆண்டவன் கழுவிக் கொண்டிருக்கிறான்.
இத்தகைய தெய்வக ீ
பாவனையை உன் குளியலில் புகுத்துவாயானால் அந்தக் குளியல்
ஆண்டவனின் ஆசி பொழிவது போலாகி அதில் அளவிட முடியாத சக்தி வந்து
சேரும்”.

எவ்வளவு அழகாக வினோபா சொல்கின்றார் பார்த்தீர்களா?

எல்லாவற்றிலும் இறைவனையும், இறைவனின் செயல்பாட்டையும் உணர


முடிவது மிக உயர்ந்த மெய்ஞானம். தினசரி வாழ்க்கையில் இறைவனை சில
நிமிட வழிப்பாட்டு சமாச்சாரமாக மட்டும் ஆக்கி விடாமல் ஒவ்வொரு
கணத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் மனதாரப் பற்றிக் கொண்டு
இருப்போமானால் அதற்கு மேல் அடைய வேண்டிய நிலை என்ன இருக்கிறது?

39.

அனைத்துமான
ஆண்டவனை
அணுகுவது எப்படி?

மகாபாரதம் எழுதப்பட்ட காலம் யாக யக்ஞங்கள் மற்றும் வைதீக கர்மங்கள்


அதிக முக்கியத்துவம் பெற்று சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த காலம். ’அந்த
வேள்விகளில் போடப்படும் மூலிகைகளும், நெய்யும்,
சொல்லப்படும் மந்திரங்களும், எரியும் அக்னியும் நானே’ என்று சொல்லி அந்த
யாக யக்ஞங்களின் ஒவ்வொரு அம்சமும் தானே என்று அறிவிக்கிற
ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார் :

இந்த உலகமனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயன்


அளிப்பவனும், தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத்தக்கவனும்
புனிதமானவனும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே!"

"கதியும் நானே;
தாங்குபவனும் நானே; ஆள்பவனும் நானே; சாட்சியும் நானே; இருப்பிடமும்
நானே; அடைக்கலமும் நானே; நண்பனும் நானே; பிறப்பிடமும் நானே;
ஒடுங்கும் இடமும் நானே; புகலிடமும் நானே; அழியாத விதையும் நானே!"

"அர்ஜுனா! வெயிலும் நானே; மழையும் நானே; அதை நிறுத்துபவனும்,


பொழிவிப்பவனும் நானே; சாகாமையும் நானே; மரணமும் நானே;
அழியாததும் நானே; அழியக்கூடியதும் நானே!"

எந்த மகாசக்தியால் பிரபஞ்சம் முழுவதும் இயங்குகிறதோ, எந்த மகாசக்தி


பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறதோ அந்த
மகாசக்தியை அறிவதை விட வேறு எதுவும் அறியத்தக்கதில்லை. வேறெதுவும்
புனிதமானதில்லை. அந்த மகாசக்தியே மாபெரும் புகலிடம். அதுவே
அனைத்துக்கும் சாட்சி. அந்த மகாசக்தியே நமக்கு மகத்தான நண்பன்.
எதையும் இயக்குவதும் அதுவே. இயங்காமல் தடுத்து நிறுத்துவதும் அதுவே.
அழிந்ததும், அழிவதும் அதுவே. இதுவரை அழியாததும், இனிவரும்
உலகங்களை சிருஷ்டிக்கும் அழியாத விதையும் அதுவே. அந்த
மகாசக்தியையே நாம் கடவுள் என்கிறோம்.

அந்தக் கடவுளை நாம் எப்படி அணுகுகிறோம்? அந்தக் கடவுளிடம் நான் என்ன


வேண்டுகிறோம். பதிலாக நாம் பெறுவதென்ன? அப்படிப் பெறுவது எத்தனை
காலம் நீடிக்கிறது? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இதில் இருந்து
கிடைக்கும் பதில்களே நம் வாழ்க்கையை செதுக்க முடிந்தவை.

எல்லாம் தர வல்ல கற்பக விருட்சமாக கடவுள் இருந்த போதும் நாம்


வேண்டிப் பெறுபவை நிரந்தர மகிழ்ச்சியையோ, நிரந்தர நிம்மதியையோ தர
வல்லவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. நம் பிரார்த்தனைகளும், நம்
வேண்டுதல்களும் சொற்ப காலத்திற்கானதாகவே இருக்கின்றன. இந்த
நன்மையைக் கொடு, இந்தத் தீமையை நீக்கு, இந்த சந்தோஷத்தைக் கொடு, இந்த
துக்கத்தை நீக்கு என்று தனிப்பட்ட வேண்டுதல்களோடே நாம் கடவுளை
அணுகுகிறோம். கடவுளிடம் கேட்டவை எதுவும் மறுக்கப்படுவதில்லை. அது
நிறைவேறி முடிந்தவுடன் அடுத்த பிரார்த்தனை அல்லது வேண்டுதல்
தயாராகி விடுகிறது. இதுவா புத்திசாலித்தனமான அணுகுமுறை?

சொர்க்கத்தையே வேண்டிப் பெற்றாலும் அங்கு கூட நிரந்தரமாய் தங்கி விட


முடியாது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் கூறுகிறார் :

"மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ள முறைகளின்படி, பயனை நல்கக்


கூடிய கர்மங்களைச் செய்து, யாகத்தில் சோமபானத்தை அருந்தி, பாவங்கள்
அகன்று தூயமை பெற்றவர்கள் என்னை யாகங்களால் உபாசித்து
சுவர்க்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின்
பயனாக சுவர்க்கத்தை அடைந்து அங்கு திவ்யமான தேவ போகங்களை
அனுபவிக்கிறார்கள்."

"அவர்கள் விசாலமான சுவர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து


போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள். ஆகவே வைதிக
தர்மங்களைக் கடைபிடித்து கோரிக்கைகளை வேண்டுபவர்கள், ஜனன மரண
சுழலைத் தான் அடைவார்கள்."
வேதங்கள் சொல்லி இருக்கும் வேள்விகளையே முறைப்படி செய்து
சொர்க்கத்தையே அடைந்தாலும் செய்த புண்ணியங்கள் தீர்ந்த பின் இந்த
உலகில் மீ ண்டும் பிறவி எடுக்க நேரிடும். இது தான் வேள்விகள் செய்து கூட
நாம் பெறும் பலன்களின் நிலை என்றால் சாதாரண வேண்டுதல்கள்,
பிரார்த்தனைகள் மூலம் நாம் பெறுவது எந்த அளவில் இருக்க முடியும்.

சரி அப்படியானால் கஷ்ட நஷ்டங்கள் நம்மை பாடாய் படுத்துகையில் நாம்


என்ன தான் செய்வது? நாம் மனிதர்கள் தானே, கஷ்ட நஷ்டங்களைப்
பொருட்படுத்தாமல் நம்மால் இருக்க முடியுமா? அதைப் போக்க என்ன தான்
செய்வது?
இதற்கு அடுத்த சுலோகத்தில் பகவான் பதில் அளிக்கிறார்.

"வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், யார் என்னையே தியானித்து


உபாசிக்கிறார்களோ அவர்களது யோக க்‌ ஷேமத்தை நானே தாங்குகிறேன்."

இல்லாத நன்மையைப் பெறுவது யோகம். பெற்ற நன்மையை காத்துக் கொள்வது


க்‌ஷேமம். நம் உண்மையான தேவைகளின் குறைபாடுகளை நீக்கி
தேவையானவற்றைத் தந்தருளி, பெற்றிருக்கும் அவசிய நன்மைகளை இழந்து
விடாமல் காத்தும் அருளி நம் யோக க்‌ ஷேமங்களை இறைவன் பார்த்துக்
கொள்வான் என்கிற உத்திரவாதம் இருக்கையில் அவனைச் சரணடைவதை
விட வேறு என்ன தான் நமக்கு அதிகமாக உதவ முடியும்.

தாயையே பற்றிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன எல்லாம் தேவை


என்பதை அறிந்து அத்தனையும் செய்து கொடுக்கும் தாய் போல பகவானையே
பற்றிக் கொண்டிருக்கும் பக்தனின் அனைத்து தேவைகளையும் பகவான்
பார்த்துக் கொள்வான். குழந்தை
என்ன கேட்கிறது என்பதை விட குழந்தைக்கு எது நல்லது என்பதற்கு தாய்
முக்கியத்துவம் தருவாள். அதற்கு எது எல்லாம் நன்மையோ அதை எல்லாம்
குழந்தை கேட்காமலே செய்து தருவாள். அது போலவே பகவானும் தன்னை
சரணடைந்த உண்மையான பக்தனுக்கு எதெல்லாம் நன்மையோ அதை எல்லாம்
ஏற்படுத்தித் தருவான்.

எனவே இறைவனையே தியானி. அவனையே சரணாகதி அடைந்து விடு.


அவனையே உபாசனை செய். அப்படிச் செய்தாயானால் தனித்தனியாகப் பல
விஷயங்களுக்காக நீ பிச்சை கேட்க வேண்டியதில்லை. ஏன், எதையுமே
அவனிடம் வேண்டிக் கேட்கத் தேவை இல்லை. உன்னுடைய யோக
க்‌ஷேமங்களை அவன் பார்த்துக் கொள்வான்.

40.

அன்போடு தருவதையே
ஆண்டவன் ஏற்பார்!

பரந்துபட்ட உலகம், பல கோடி மனிதர்கள், பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு


தேவைகள் என்று இருக்கையில் வழிபாட்டு முறையும், வழிபடும் தெய்வமும்
ஒன்றாக இருக்க முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
அதை உணர்ந்தே ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக் கூறுகிறார் :

"அர்ஜுனா! எவர்கள் வேறு தேவதைகளிடம் பக்தி கொண்டு சிரத்தையுடன்


பூஜை செய்கிறார்களோ அவர்களும் முறை தவறிய வழியில் என்னையே தான்
பூஜை செய்கிறார்கள்."

"சகல யக்ஞங்களையும் பெற்றுக் கொள்பவனும், பரிபாலிப்பவனும் நானே.


ஆனால் அவர்கள் என்னை உள்ளபடி தெரிந்து கொள்வதில்லை. அதனால்
யக்ஞபலனை நழுவ விடுகிறார்கள்."

தேவர்களுக்காக விரதம் இருப்பவர்கள் தேவர்களை அடைகிறார்கள்.


பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள். பேய் பூதம்
போன்றவைகளைத் தொழுபவர்கள் அவைகளையே அடைகிறார்கள். என்னை
உபாசனை செய்கிறவர்கள் என்னையே அடைகிறார்கள்."

எல்லாவற்றுக்கும் ஆதிமூலமாகிய இறைவன் ஒருவனாகவே இருக்க


முடியும் என்றாலும் கூட மனிதர்கள் தங்கள் தேவைகளைத் தீர்த்து வைக்கும்
தேவதைகளைத் தேர்ந்தெடுத்து வணங்குகிறார்கள். ஆனால் அப்படி
வணங்கும் பூஜைகள் பக்தி சிரத்தையுடன் இருக்குமானால் சுற்றுவழியில் ஆதி
மூலமாகிய இறைவனையே பூஜிப்பது போலத் தான். கடைசியில்
எல்லாவற்றையும் பெற்றுக் கொள்பவன் அவனே தான் என்றாலும் அது நேரடி
வழிபாடல்ல. எல்லா வேள்விகளிலும் படைக்கப்படும் அனைத்தையும்
பெற்றுக் கொள்பவன் ஒருவனேயான பரம்பொருளே. அந்தப் பரம்பொருளை
உண்மையாக உள்ளபடியே அறிந்து கொள்ளத் தவறும் போது அந்த
வேள்விகளை முறையாகச் செய்தாலும் கூட முழுமையான பலனைப்
பெறவும் மனிதர்கள் தவறிவிடுகிறார்கள். புரிதலில் உள்ள தவறு செயலின்
விளைவையும் சிதைத்து விடுகிறது.

மனிதன் வணங்கும் போது என்னவாக நினைத்து வணங்குகிறானோ


அப்படியே அதைச் சென்றடைகிறான். அவன் மனதில் வடித்திருப்பது
தேவர்களானால் அவன் தேவர்களை அடைகிறான். மனதில் வடித்திருப்பது
பித்ருக்களானால் அவன் பித்ருக்களை அடைகிறான். வணங்குவது பேய்,
பூதமானால் கூட அவற்றையே அவன் அடைகிறான். உள்ளது உள்ளபடியாக
அறிந்து அந்தப் பரம்பொருளை வணங்கினால் மனிதன்
அந்தப் பரம்பொருளையே அடைகிறான். வணங்கத் தேர்ந்தெடுப்பதையே
மனிதன் சென்றடைவான் என்கிற உத்திரவாதம் இறைவனால்
அளிக்கப்பட்டிருக்கிறது. எதையும் வணங்க சுதந்திரம் உள்ள மனிதன் எதைத்
தேர்ந்தெடுக்கிறான் என்பதை வைத்து அவன் சென்றடையும் இலக்கும்
நிர்ணயமாகிறது. அதனால், தான் வணங்குவதை அவன் புரிந்து கொள்வது மிக
முக்கியமாகிறது.

பைபிளில் “அற்பமாக விதைப்பவர்கள் அற்பமாகவே அறுவடை


செய்கிறார்கள். ஏராளமாக விதைப்பவர்கள் ஏராளமாக அறுவடை
செய்கிறார்கள்” என்ற வசனம் உண்டு. பரம்பொருளான மகாசக்தியை விட
குறைவான சக்திகளை வணங்குபவர்கள் அற்பமாக அறுவடை செய்பவர்கள்.
பரம்பொருளையே வணங்குபவர்கள் ஏராளமாக அறுவடை செய்பவர்கள்.
சரி, இறைவனுக்கு என்ன படைத்து வணங்க வேண்டும், எவ்வளவு படைக்க
வேண்டும், எப்படி வணங்க வேண்டும் என்ற கேள்வி எழுமல்லவா? அதற்கு
ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து ”பத்ரம், புஷ்பம், பலம், தோயம்” என்று ஆரம்பிக்கும்
அருமையான சுலோகத்தைச் சொல்கிறார் :

"எவனொருவன் ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, ஜலமோ


இவைகளில் ஏதாவது ஒன்றை எனக்கு பக்தியுடன் தருகிறானோ அப்படி
சுத்தமான மனமுள்ளவன் பக்தியோடு கொடுத்தவைகளை நான் திருப்தியாக
ஏற்றுக் கொள்கிறேன்."

உண்மையில் இறைவனுக்கு என்று எந்தத் தேவைகளும் இல்லை. அனைத்தையும்


படைக்க முடிந்தவனுக்கு என்ன தேவை தான் இருக்க முடியும். மனிதன் தன்
திருப்திக்காகவே இறைவனுக்கு எதையாவது படைத்து வணங்குகிறான்.
அவன் எதைத் தருகிறானோ அதை சுத்தமான மனதோடும், பக்தியோடும்
தருவதாக இருந்தால் மட்டுமே இறைவன் திருப்தியோடு ஏற்றுக் கொள்வான்.
அது விலையுயந்த பொருள்களாய் இருக்க வேண்டியதில்லை. ஒரு
பச்சிலையாகவோ, பூவாகவோ, பழமாகவோ, வெறும் நீராகவோ இருந்தால்
கூட போதும். இறைவன் அதன் மதிப்பை பணத்தை வைத்து அளப்பதில்லை.
தருவதன் பின்னால் இருக்கும் மனத்தை வைத்தே அளக்கிறான்.

வினோபா சொல்வார். ““ஆண்டவன் எதிரே எவ்வளவு கொண்டு போய்க்


குவித்தோம் என்பதற்கல்ல சிறப்பு. பேருக்கோ, உருவுக்கோ, பொருளின்
விலைக்கோ அங்கே மதிப்பில்லை. பாவனை ஒன்றுக்கே மதிப்பு. எதை
எவ்வளவு அர்ப்பணம் செய்தோம் என கேள்வி இல்லை. எப்படி அர்ப்பணம்
செய்தோம் என்பதே கேள்வி.”

எல்லாவற்றையும் பணத்தால் மட்டும் அளக்க முடிந்த மனிதனுக்கு மட்டுமே


இந்த உண்மை விளங்காமல் இருப்பது தான் பிரச்னையே. சாமிக்கு தங்க
கவசம், வைரக்கிரீடம், வெள்ளி மண்டபம், கட்டுக்கட்டாய் பணம் என்று
தந்தால் அவர் பிரத்யேகமாய் தன்னைக் கவனித்துக் கொள்வார் என்று பணம்
சார்ந்த வழிபாட்டுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறான்.

ஒரு அம்மாள் என்னிடம் யதார்த்தமாகவே “எனக்கு நீ கொடு. உனக்கு நான்


கண்டிப்பாக செய்கிறேன்” என்று கடவுளிடம் சொல்லி விட்டதாக
ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவித்தார். அவர் செய்வதாகச் சொன்னது
வெள்ளிக்காப்போ, வேலோ சரியாக எனக்கு நினைவில்லை. கடவுளுக்குத்
தேவையானால் இவருக்கு வேண்டியதைச் செய்து தர வேண்டும். இல்லா
விட்டால் நஷ்டம் கடவுளுக்குத் தான் என்பது போல அவர் பேச்சு இருந்தது.

மனிதனின் முட்டாள்தனத்திற்கு எல்லை தான் என்ன!

அங்கமெல்லாம் புழுதியுடன், உடம்பில் கந்தலாடையுடன், மிதியடிகள்


காணாத கால்களுடன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்க வந்தார் குசேலர். செல்வச்
செழிப்பான அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அவருடைய பால்ய
சிநேகிதன். இமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர். பாதாளத்தில் குசேலர். ஆனால் அந்த
இடைவெளி பரந்தாமனைப் பொருத்த வரை இருக்கவில்லை. ஓடோடிச் சென்று
ஆரத்தழுவி, குசேலர் கந்தலாடையில் கட்டி வைத்திருந்த அவலை அள்ளி
எடுத்து சாப்பிட்டு ‘என்ன ருசி’ என்றல்லவா ஆனந்தமாக அவர் சாப்பிட்டார்.
ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனையில் இல்லாத பண்டங்களா? பின் அப்படியென்ன
மகத்துவம் அந்த அவலில். குசேலரின் கள்ளமில்லாத மனமும், ஆழமான
அன்பும் அதில் கலந்திருந்தது தான் மகத்துவம்.

இது போல் விதுரர் வட்டில்


ீ சமைத்த சாமான்யக் கீ ரையிலும், சபரி தந்த எச்சில்
பழத்திலும் எப்படியெல்லாம் பகவான் மனம் மகிழ்ந்தார் என்று எத்தனையோ
நிகழ்வுகள் பற்றிப் படித்திருந்தாலும் மனிதர்கள் மனதில் அந்த உண்மை
பதிந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை சுத்தமான மனது தேவை என்ற
ஷரத்து கீ தையில் இருந்ததால், அது இல்லாததை சரிக்கட்ட பணத்தை
வைத்து ஈடு செய்ய நினைக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

தருகிறேன் என்கிற எண்ணம் கூடத் தவறு என்று பெரியோர்கள்


சொல்வார்கள். அன்பு மேலிடுகிற இடத்தில் கணக்கு இருப்பதில்லை.
அதனாலேயே கர்வமும் வருவதில்லை. கணக்கு சொல்ல முடிந்தால் அந்த
அன்பு சந்தேகத்திற்குரியதே. சக மனிதர்களிடமே இப்படி இருக்க வேண்டும்
என்று சொல்லும் போது இறைவனிடம் சொல்ல வேண்டியதே இல்லை.
தருவதாக பெருமையுடன் நினைத்தாலும் அது குற்றமே.

எனவே சுத்தமான மனமும், பக்தியும் இருந்து ஒருவர் என்ன செய்தாலும் அது


தெய்வத்திற்கு உகந்த காணிக்கையே. அவை இரண்டும் இல்லாமல் ஒருவர்
எத்தனை செய்தாலும் அது விளம்பரமே !

41.

பக்தன் என்றும்
அழிவதில்லை !

உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் கர்மத்தில் இருந்து தப்பிக்க


முடியாது. மரணம் வரை மனிதன் எந்த வகையிலாவது செயல் புரிந்தே ஆக
வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறான். மரணம் மாத்திரமே கர்மம்
என்கிற சங்கிலியில் இருந்து அவனை விடுவிக்கிறது. சாங்கிய யோகத்திலும்,
கர்ம யோகத்திலும் கர்மம் பற்றி நிறையவே அலசி இருக்கிறோம் என்றாலும்
மீ ண்டும் சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.

செயல் புரிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள மனிதனுக்குப்


பிரச்னையே அதன் விளைவுகள் தான். நல்ல விளைவு வந்தால் என்னைப்
போல் புத்திசாலி யார் என்று இறுமாந்து திரிகிறான். மோசமான விளைவு
வந்தால் ஏன் விதி என் விஷயத்தில் சதி செய்கிறது புலம்பி முடங்குகிறான்.
விளைவுகளால் சில செயல்களைச் செய்ய வேண்டி வருகிறது. அதிலும்
நல்லதும் கெட்டதுமான விளைவுகள். சந்தோஷம் துக்கம் இரண்டும் மாறி
மாறி அனுபவிக்க வேண்டிய சூழல். செயல் - விளைவு - செயல்கள் -
விளைவுகள் என்கிற சங்கிலித்தொடரில் அவன் இன்ப துன்ப அலைகளில்
சிக்கி அவன் சந்திக்க வேண்டி இருப்பது தான் எத்தனை? ஒரு கட்டத்தில்
அவனுக்கு ’போதுமடா சாமி’ என்று தோன்றுகிறது. இப்படி ஒரு வாழ்க்கை
தேவையா என்று நினைக்கிற அளவுக்கு எல்லாப் பக்கங்களிலும் ஏகப்பட்ட
பிரச்னைகள். இது தான் சராசரி மனிதனின் இயல்பான அனுபவம். இதிலிருந்து
எப்படி தான் தப்பிப்பது?

ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார் :

"குந்தி மகனே! எதையெல்லாம் நீ செய்கிறாயோ, எதையெல்லாம்


உண்கிறாயோ, எதையெல்லாம் படைக்கிறாயோ, எதையெல்லாம்
தருகிறாயோ, எந்த தவங்களெல்லாம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கு
அர்ப்பணம் செய்வாயாக !"

"இவ்விதமாக நீ கர்ம பந்தங்களில் இருந்தும், அதன் நல்ல தீய


விளைவுகளிலிருந்தும் விடுபடுவாய். துறவின் இந்தக் கொள்கையின் மூலம் நீ
முக்தி பெற்று என்னிடமே வருவாய் !"

உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதன் லாபநஷ்டங்கள்


உன்னுடையது. உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதனால் வரும்
பெருமையும், அவமானமும் உன்னைச் சார்ந்த்து. செய்வது அனைத்தையும்
இறைவனுக்கு அர்ப்பணித்து விடு. அவன் பிரதிநிதியாக நீ எல்லாவற்றையும்
செய். அவன் கொடுத்திருக்கும் கதாபாத்திரம் நீ. அவன் கருவியாக நீ
செயல்படு. இந்த பாவனையில் செய்யும் போது விளைவுகள்
உன்னுடையதல்ல. அந்த பரமாத்மனைச் சேர்ந்தவை. என்ன விளைவு
வந்தாலும் அது
அவன் வரவழைத்துக் கொண்டது. உனக்கு அதில் எதுவுமில்லை. இதுவே
துறவின் அம்சம். இதுவே துறவின் நிம்மதியும் கூட. செயல்கள் புரிந்தாலும்
விளைவுகளால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்க இது ஒன்றே மார்க்கம்.

மேலும் இந்த பாவனையுடன் செயல்புரியும் போது செயலின் தன்மையே


மாறிவிடும். விளைவுகளால் உனக்கு பாதிப்பில்லை என்பதால் மன அமைதி
மாறாமல் செய்யும் போது, இது இறைவனின் செயல் என்ற மேம்பட்ட
உணர்வில் ஈடுபாட்டுடன் செய்யும் போது செயல் சிறப்பாகவே இருக்கும்.
பெரும்பாலும் விளைவுகளும் சிறப்பாகவே இருக்கும். வாழ்நாள் எல்லாம்
இறைவனின் வேலைகளையே செய்த மனிதன் இறுதியில் இறைவன்
அடிகளையே சேர்வான். இந்த உத்திரவாதத்தைத் தான் பகவான் இங்கு
தருகிறார்.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் :

"சகல உயிர்களிடத்தும் நான் சமமாகத் தான் இருக்கிறேன். எனக்குப்


பகைவனோ, அன்பனோ இல்லை. ஆனால்
பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம் அவர்கள்
இருப்பார்கள். அவர்களிடமும் நான் இருப்பேன்."

"ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும் அவன் பக்தியில்


பிறழாமல் ஈடுபட்டிருந்தால் அவனை சாதுவாகவே கருத வேண்டும்.
ஏனெனில் அவன் நல்ல முடிவை எட்டியிருக்கிறான் அல்லவா?"
"அவன் வெகு விரைவில் தர்மாத்மாவாகி நித்தியமான அமைதியை
அடைகின்றான். குந்தியின் மகனே என் பக்தன் என்றும் அழிவதில்லை
என்பதைத் தைரியமாக அறிவிப்பாயாக!"

இறைவன் பாரபட்சம் உள்ளவனாக இருக்க முடியாது. அப்படி இருப்பவன்


இறைவனாக இருக்கவும் முடியாது. ஏனென்றால் விருப்பு வெறுப்பைக்
கடந்தவன் இறைவன். அதைக்கடந்து இயங்குங்கள் என்று அறிவுறுத்துபவன்
அவன். அப்படி இருக்கையில் இறைவனே விருப்பு வெறுப்பு கொண்டிருந்தால்
அது போலித்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும். எனவே தான் சகல
உயிர்களிடத்தும் தான் சமமாக இருப்பதாக பகவான் சொல்கிறார். ஆனால்
அடுத்த வரிகள் சிலருக்கு முரண்பாடாகத் தெரியலாம்.

*”ஆனால் பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம்


அவர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் நான் இருப்பேன்.”*

இதற்கு சின்மயானந்தர் அருமையான உதாரணத்துடன் விளக்கம் சொல்கிறார்.


சூரியன் எல்லோருக்குமே சமமாகவே ஒளிர்கிறான். ஆனால் கல்லில் அவன்
பிரதிபலிப்பதில்லை. கண்ணாடியிலோ தத்ரூபமாக பிரதிபலிக்கிறான்.
சூரியனுக்கு கல், கண்ணாடி என்கிற பாரபட்சம் இல்லை. ஆனால் உள்வாங்கி
பிரதிபலிக்கிற இயல்பு கண்ணாடிக்கே இருக்கிறது, கல்லுக்கு இல்லை.
எவ்வளவு அழகான உதாரணம் பாருங்கள்!

பக்தன் இறைவனிடம் மானசீகமாக இணைந்து இருப்பதால் இறைவன்


பக்தனிடத்தும், பக்தன் இறைவனிடத்தும் இருப்பது இயற்கையே அல்லவா?
இப்போது பகவான் சொன்னதில் முரண்பாடு இல்லையே.

ஆனால் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது மறுபடி அறிவார்ந்த மனிதர்கள்


மனதில் ‘இது சரியல்லவே’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும்.
மோசமான செயலைச் செய்திருந்தாலும் பக்தியில் பிறழாதவனாக இருந்தால்
அவனை சாதுவாகவே கருத வேண்டும் என்றால் பக்தி கொண்டிருப்பவன்
மோசமான செயலைச் செய்யலாமா? அது மட்டும் தவறாகாதா? மோசமான
செயலை எவன் செய்தாலும் சாது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

இன்றைய உலகில் எத்தனையோ பேர் பக்தர்கள் தோற்றத்திலேயே இருந்து


கொண்டு கொள்ளை கூட அடிக்கிறார்கள். அவர்கள் பகவானுடனேயே கூட்டணி
வைத்துக் கொண்டு இருப்பது போல, கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை
இறைவனுக்கு காணிக்கை செலுத்தி விடுகிறார்கள். கீ தை சொல்வது போல்
பார்த்தால் இவர்களும் சாதுக்கள் தானா? *அல்ல என்பது தான் உறுதியான
பதில்.*

இங்கே பிறழாமல் என்கிற சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த


வார்த்தை தான் தவறான யூகங்களை களைகிறது. பக்தியில் பிறழாமல்
இருப்பவனால் தெரிந்து மோசமான செயல்களைச் செய்ய முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை வேண்டுபவனால் அடுத்தவனைக்
கொள்ளை அடிக்கவோ, ஈனச்செயல்களில் ஈடுபடவோ முடியாது. இறைவனை
வேண்டுபவனுக்கு அதற்குக் கீ ழானவற்றுக்கு இறைவனை விட அதிக
முக்கியத்துவம் தர முடியாது. அதனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுவது
அறியாமலும், சந்தர்ப்பவசத்தாலும் செய்யப்படும் மோசமான செயல்களாகத்
தான் இருக்க முடியும். இறை எண்ணம் நிறைந்த மனதில், செய்த தவறுக்குப்
பரிகாரம் செய்யும் வழியும் புலப்படும். கோணலை நேர் செய்து கொண்டு
மறுபடி திருந்திய வாழ்க்கைக்கு பக்தனால் திரும்ப முடியும். இறைவனிடம்
பிறழாத பக்தி என்பதே பக்தன் எட்டியிருந்த நல்ல முடிவு என்பதால்
தற்காலிகத் தவறுகள் திருத்தப்பட்டு நல்வழிக்கு சீக்கிரமே பக்தன்
திரும்புவான்.

திருந்திய உள்ளத்தில் அமைதி மறுபடி குடிகொள்ளும். தற்காலிகத்


தவறுகளால் பக்தன் நிரந்தரமாக தண்டிக்கப்படுவதில்லை. மாறாக தர்ம
வழியில் மீ ண்டும் இயங்க ஆரம்பிக்கும் அவன் மனதின் அமைதி நிரந்தரமாக
இருக்கும். எனவே தூய்மையான, இடைவிடாத பக்தியே பக்தனை
அவ்வப்போது நல்வழிப்படுத்துவதால் இறைவனின் பக்தனுக்கு என்றும்
அழிவேயில்லை என்பது கீதை நாயகனின் பிரகடனமாக இருக்கிறது.

42

ஜாதி பேசுகிறதா கீ தை ?

பகவத் கீ தையை மேற்போக்காகப் படிக்கையில் சில சுலோகங்கள் பிற்


போக்கான, சமத்துவம் அற்ற கருத்துக்களைச் சொல்வது போலவும், பாரபட்சம்
இல்லாத பரமாத்மா அதைச் சொல்லி இருக்கக்கூடாது என்பது போலவும்
தோன்றும். ஒன்பதாம் அத்தியாய முடிவில் அப்படி இரண்டு சுலோகங்கள்
ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.

"அர்ஜுனா ! தாழ்ந்த பிறவிகளென்று கூறப்படுபவர்களும், பெண்கள்,


வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் கூட என்னை சரணடைந்தால்
பரமகதியை அடைய முடியும்."

"அப்படியிருக்க புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும், பக்தர்களான


ராஜரிஷிகளும் பரமகதியடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஆகவே நிலையற்றதும், சுகம் அற்றதுமான இந்த உலகை அடைந்த நீ எனது
அன்புத் தொண்டில் ஈடுபடுவாயாக."

பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் தாழ்ந்தவர்களா?


பிராமணர்களும்,
ராஜரிஷிகளும் உயர்ந்தவர்களா? யாரேயானாலும் என்னைச் சரணடைந்தால்
பரமகதி அடைவார்கள் என்று ஒற்றை வாக்கியத்தில் முடித்து விட்டுப் போக
வேண்டியதை இப்படி பிரித்துப் பேசி உயர்வு தாழ்வைக் குறிப்பிடுவது சரி
தானா? என்ற கேள்விகள் ஒருவருக்கு அறிவுபூர்வமாகவும், உணர்வு
பூர்வமாகவும் எழலாம்.

ஆழமாகப் பார்த்தால் மட்டுமே உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.


பிறப்பால் தீர்மானிக்கப்படுவது பற்றி இங்கு பகவான் பேசவில்லை. பொதுவாக
அன்பும், பாசமும் பெண்களுக்கு அதிகம். பிரியத்தால் பலவனப்படும்
ீ தன்மை
உடையவர்களைத் தான் இங்கு பகவான் பெண்களாகக் குறிப்பிடுகிறார். அதே
போல வியாபாரிகள் என்றும் சுய லாப நஷ்டக் கண்ணோட்டத்திலேயே
எதையும் அணுகும் தன்மை உடையவர்கள். அந்தத் தன்மை உடையவர்களைத்
தான் வைசியர்களாகக் குறிப்பிடுகிறார். அதே போல் உயர்ந்த இலக்குகளோ,
ஞானமோ, வேட்கையோ இல்லாமல் அடிமட்ட வாழ்க்கை வாழும் தன்மை
உடையவர்களை பகவான் சூத்திரர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல் பிரம்ம ஞானத்தில் நாட்டம் கொண்டு வாழ்பவர்கள் பிராமணர்கள்


என்றும், உயர் பதவிகளில் இருந்தாலும் அந்தப் பதவிகளில் கர்வம் அடைந்து
விடாமல் கர்ம யோகிகள் போல் சேவை புரிபவர்கள் ராஜரிஷிகள் என்றும்
பகவான் குறிப்பிடுகிறார்.

ஆக இங்கு எல்லாமே அவரவர் தன்மையால் மட்டுமே சொல்லப்பட்டு


இருக்கின்றன. பிறப்பினால் அல்ல. பிறப்பினால் பிராமணனாக இருப்பவன்
தன்மையால் சூத்திரனாகத் திகழ முடியும். அதே போல பிறப்பினால் சூத்திரனாக
இருப்பவன் பிராமணனாகவும் இருக்க முடியும். உயர்வு தாழ்வைத்
தீர்மானிப்பது அவரவர் தன்மையே ஒழிய பிறப்பு அல்ல.

அந்த வகையில் தாழ்வான தன்மை உடையவர்களாக இருந்தாலும் கூட


இறைவனைச் சரணடைந்தால் தங்கள் தாழ்வான தன்மைகள், பலவீனங்கள்,
நீங்கி பரமகதி அடையலாம். அப்படி இருக்கையில் உயர் தன்மை
கொண்டவர்கள் பக்தர்களாய் இருந்தால் சொல்ல வேண்டியதே இல்லை. நீக்கிக்
கொள்ளக் கூட பலவனங்கள்
ீ நிறைய இல்லாத அவர்கள் இன்னும் சுலபமாகப்
பரமகதி அடைவார்கள்.
இந்த உண்மையை மகாபாரதத்தை ஆழமாகப் படிப்பவர்களுக்கு உள்ளங்கை
நெல்லிக்கனி போல் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடியும்.
இனி சில உதாரணங்களையும் பார்ப்போம்.

மகாபாரதத்தில் ”ஜனக ஸுலபா சம்வாதம்” என்ற அத்தியாயம் இருக்கிறது.


அதில் சாதாரணப் பெண்ணான சுலபை என்பவளைத் தேடி சக்கரவர்த்தியான
ஜனகர் செல்கிறார். ஞானம் தேடிப் போன ஜனகருக்கு அந்தப் பெண் பிரம்ம
வித்தை போதிக்கிறாள்.

துலாதரன் என்ற வைசியனிடம் ஜாஜலி என்ற பிராமணன் ஞானம்


பெறுவதற்காகப் போகிறான். “என் தராசுக் கோல் என்னிடம் பொருள் வாங்க
யார் வந்த போதும் சமநிலையிலேயே இருக்கும்” என்று துலாதரன்
சொல்கிறான். அறிந்தவர், அறியாதவர், சிறியவர், பெரியவர், என யார் பொருள்
கொள்ள வந்தாலும் நேர்மையாக ஒரே போல் தராசுக் கோல் நிறுத்தி வணிகம்
செய்வதிலே தன் தர்மமும், ஞானமும் இருப்பதாக துலாதரன் சொல்லி
ஜாஜலிக்கு ஞானம் போதிக்கிறான்.

அதே போல் தர்ம வியாதன் என்ற கசாப்புக்கடைக் காரனிடம் கௌசிகன் என்ற


அந்தணன் ஞானோபதேசம் பெறுகிறான். மாமிசத்தை வெட்டுவதும்,
கழுவுவதும், கழுவியதை விற்பனைக்கு எடுத்து வைப்பதுமாக இருக்கும் தர்ம
வியாதன் தனக்கு விதிக்கப்பட்டிருந்த கர்மத்தை முடிந்த வரை தர்மம்
பிறழாமல் செய்வதாகவும், அப்படிச் சம்பாதித்துத் தன் பெற்றோருக்குப்
பணிவிடை செய்வதாகவும் கூறுகிறான்.

இப்போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருக்கும் சுலோகங்களையும் படித்துப்


பாருங்கள். பெண்ணிடம் ராஜ ரிஷியான ஜனகர் உபதேசம் பெற்றதும்,
வைசியன், சூத்திரன் ஆகியோரிடம் ஜாஜலி, கௌசிகன் போன்ற பிராமணர்கள்
உபதேசம் பெற்றதும் கீ தை இடம் பெற்ற மகாபாரதத்திலேயே இடம்
பெற்றிருக்கிறதா இல்லையா? பிறப்பால் தாழ்ந்தவர்களாகக்
கருதப்படுவர்களிடம், பிறப்பால் உயர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் தேடிச்
சென்று ஞானம் பெற்றதை நச்சென்று சொல்கிறதல்லவா மகாபாரதம்.

அது மட்டுமல்ல மகாபாரதம் எழுதிய வியாசரே சத்யவதி என்ற மீ னவப் பெண்


வயிற்றில் பிறந்தவர். கீ தை சொன்ன ஸ்ரீகிருஷ்ணரே இடையராக வாழ்ந்தவர்.
எனவே இறைவன் ஞானம் பெற்றதையே உயர் பிறவியாகவும்
ஞானக்குறைவையே தாழ்பிறவியாகவும் சுட்டிக் காட்டுகிறார் என்பதில்
யாரும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

கடைசியில் ஒன்பதாம் அத்தியாயத்தை இப்படிச் சொல்லி பகவான்


முடிக்கிறார்.

"என்னிடமே மனதை அர்ப்பித்தவனாக இரு. எனக்கே பக்தனாக இரு. எனக்கே


வந்தனை செய்து என்னை வழிபடு. இவ்வாறாக என்னில் முழுமையாக
லயித்தாயானால் என்னையே நீ வந்தடைவாய்."

சதாகாலம் ஒரு மனிதன் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, எதை


உத்தமம் என்று கொண்டாடுகிறானோ, எதில் மனம் லயிக்கிறானோ
அதுவாகவே மாறி விடுகிறான் என்பது பேருண்மை. அதனால் இறைவனையே
எண்ணி, வழிபட்டு, அவனிடமே மனதை அர்ப்பித்து, முழுமையாக மனமும்
லயித்தால் அந்த இறைநிலையை எட்டுவது இயற்கை தானே.

இத்துடன் கீ தையின் ஒன்பதாம் அத்தியாயமான ராஜவித்தியா, ராஜ குஹ்ய


யோகம் நிறைவு பெறுகிறது.

கீ தையின் சரி பாதி முடிந்து விட்டது. இனி பத்தாவது அத்தியாயத்திற்குள்


நுழைவோம்.

43​.

அஞ்ஞான இருளை
அகற்ற வழி என்ன?

பகவத் கீ தையின் பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தில் பரம்பொருளின்


விசேஷ தன்மைகள் விவரிக்கப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம்
கூறுகிறார் :

"என்னைப் பிறப்பற்றவனென்றும் மூலமற்றவனென்றும் உலகத்தை ஆளும்


ஈசர்களுக்கெல்லாம் ஈசனென்றும், மனிதர்களுக்குள் எவனொருவன்
அறிகிறானோ, மோகமற்ற அத்தகைய மனிதன் சகல பாவங்களிலிருந்தும்
விடுபடுகிறான்."

"என்னுடைய பெருமையையும், யோகத்தையும் உள்ளதை உள்ளபடி எவன்


அறிகிறானோ அவன் அசைக்க முடியாத பக்தி யோகத்துடன் கூடியவனாக
ஆகிறான். இதில் சந்தேகமில்லை."
"நானே இவ்வுலகத்தின் தோற்றத்திற்குக் காரணம். என்னிடம் இருந்தே
எல்லாம் இயங்குகின்றன என்று அறிந்து என்னிடம் பற்றுகொண்டு ஞானிகள்
என்னைத் துதிக்கிறார்கள்."

கீ தோபதேசத்தின் போது ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் மன்னனாகவோ,


அர்ஜுனனின் நண்பனாகவோ, ஏன் மகாபாரத காலத்தின் அவதாரமாகவோ
கூடப் பேசவில்லை. அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஆதி
அந்தமில்லாத மகாசக்தியின் கருப்பொருளாகவே லயித்து, அந்த மகோன்னத
நிலையிலிருந்தே பேசுகிறார். அதை மனதில் இருத்திக் கொண்டு படித்தால்
மட்டுமே இந்த சுலோகங்களின் உண்மைப் பொருளை ஒருவரால் விளங்கிக்
கொள்ள முடியும். இல்லாவிட்டால் இது சுய தம்பட்டமாகவே தெரியும்.

சுய தம்பட்டமடித்துக் கொள்ளும் ஒருவர் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக


வந்திருக்க மாட்டார். முன்பே கர்மயோக விளக்கங்களில் குறிப்பிட்டது போல
குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவிட்டு, நட்பு பாராட்டி போர்க்களத்திற்குக்
கூட்டி வந்து, தேரோட்டி, அர்ஜுனனின் கால்களில் உதைகள் பட்டிருக்க
மாட்டார். இங்கு பேசுகிற பரம்பொருளிடம்
சிறுமை இல்லை. இறைநிலையின் உச்சத்திலேயே நின்று உண்மையை உரத்துச்
சொல்கிற ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனி மனித அடையாளம் இல்லை. இதை நினைவு
வைத்துக் கொண்டு மேலே சொன்ன சுலோகங்களின் பொருளை ஆய்வு
செய்வோம்.

இறைவனின் மகா சக்திகளை முற்றிலும் உள்ளபடியே அறிந்து கொள்கிற


போது, அந்த சக்தியைத் தவிர இங்கு வேறொன்றுமில்லை என்பதையும்
ஒருவரால் உணர முடியும். அரைகுறையாய் அறிந்தவனுக்கு இருக்கும்
குழப்பங்கள், பலவனங்கள்
ீ முற்றிலும் அறிந்தவனிடம் இல்லை. எந்தப்
பரம்பொருளை அறிந்த பின் வேறெதையும் அறிய வேண்டிய அவசியம்
இல்லையோ, எந்தப் பரம்பொருளை அறிந்த பின் வேறெதன் மீதும் ஆசை
கொள்ள முடியாதோ அந்தப் பரம்பொருளை அறிந்த பின் தவறான
எண்ணங்கள் ஒருவர் மனதில் தோன்றுமா? பாவங்கள் செய்யும் தூண்டுதல்
தான் இருக்குமா?

தவறான எண்ணங்களும், பாவச் செயல்களும் அறியாமையால் வரும்


துன்பங்கள் அல்லவா? அவற்றின் அடிப்படையில் இருப்பது அறியாமையே
அல்லவா? பரம்பொருளை அறியும்
போது அவன் சக்தியின் அங்கமென நம்மை நாம் உணரத் தவறுவோமா?
அப்படி அறிந்த பின் ஒருவரால் இந்த அழுக்குகளை சகித்துக் கொள்ள
முடியுமா? அவை எல்லாம் உயர்ந்த நிலைக்கு எட்டிய ஆத்மாவிற்கு
அருவருப்பே அல்லவா? அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தகைய மனிதன்
சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவதாகச் சொல்கிறார்.

இறைவனை அறிந்தவன், பாவம் செய்து விட்டுத் தப்பிக்க முடியும் என்கிற


பொருள் கொண்டால் அது அறிவுப்பிழை. இறைவனை அறிந்தவனுக்கு பாவம்
செய்ய முடியாது, அவன் மனம் அவனை அனுமதிக்காது. அதனாலேயே
அவன் பாவங்களைத் தவிர்த்து அதிலிருந்து விடுபட்டிருக்கிறான் என்று தான்
இதன் மெய்ப்பொருள்.
இறைவனை முழுமையாக அறிந்து கொள்ளும் போது, அவன் அருமை
பெருமைகள் விளங்கும் போது அவன் மீ து பக்தி ஏற்படுவது இயற்கை.
உண்மையான பக்தி அவ்வப்போது வந்தும், மறைந்தும் போகிற சமாச்சாரம்
அல்ல. அப்படி வந்து போவது பக்தியுமல்ல. உண்மையான பக்தி உறுதியானது.
காலங்களும், கோலங்களும் மாறினாலும் மாறாமல்
இருப்பது. எல்லாப் பற்றுகளையும் நீக்கிய பின் அந்தப் பரமன் மேல் மட்டும்
பற்று வைக்க ஞானம் வேண்டும்.

இதைத் தான் திருவள்ளுவரும் சொல்கிறார்-

”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.”

பற்றுகள் இல்லாதவனாகிய இறைவன் மீ து பற்று வைக்க வேண்டும். அந்தப்


பற்றையும் பற்றுவது மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டொழிப்பதற்காகவே!

பரம்பொருளாகிய இறைவனைப் பற்றிக் கொண்டவர்கள் பெறுவது


என்னென்ன? ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

"என்னிடம் மனத்தைச் செலுத்தியும், என்னிடம் உயிரை அர்ப்பணித்தும்,


ஒருவருக்கொருவர் போதித்துக் கொண்டும், என்னைப் பற்றியே எப்போதும்
பேசிக் கொண்டும், மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகிறார்கள்."

"இவ்வாறு அன்புடன் என்னிடம் எப்போதும் ஈடுபட்டவர்களுக்கு நான் புத்தி


யோகத்தை அளிக்கிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்."

"அவர்களுக்குக் கருணை புரிவதற்காகவே நான் அவர்களின் உள்ளத்தில் தங்கி


ஒளி மிக்கதான ஞான விளக்கினால் அவர்களின் அஞ்ஞானமென்னும்
இருளை அழித்து விடுகிறேன்."

இறைவனை ஒரு கணமாவது உணர முடிந்த பாக்கியசாலிகள் பின் எப்போதும்


வேறெதிலும் முழுத்திருப்தி அடைய மாட்டார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்ததை
ஒரு கணமேனும் உணர்ந்தவனுக்கு அதை விடக் குறைவான மற்ற
அனைத்திலும் திருப்தி ஏற்படுமா? அதனால் ஒரு கணம் உணர்ந்த அந்த
பவித்திரத்தை, பரம்பொருளைப் பற்றிப் பேசியும், போதித்தும், கேட்டும்
மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறும் சுபாவம் வந்து விடும்.

அப்படி இறையுணர்வைப் பல வழிகளில் தக்க வைத்துக் கொள்பவன் தான்


உண்மையான அறிவாளி. அந்த ஈடுபாடு இருப்பவனுக்கு
புத்தியோகத்தை அளிப்பதாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அந்தப்
புத்தியோகத்தால் அவர்கள் இறைவனையே அடைவதாகவும் கூறுகிறார்.
அவர்கள் உள்ளத்தில் ஒளிமிக்க ஞான விளக்கை ஏற்றி அவர்களுடைய
அறியாமையென்னும் அக இருளை அழித்து விடுவதாகவும்
உறுதியளிக்கிறார்.

கால காலமாக நமது இதயங்களில் மண்டிக்கிடக்கும் காரிருள் எத்தனை


துன்பங்களில் நம்மைத் தள்ளியிருக்கிறது. அறியாமையால், அக இருளால்
எத்தனை கோடி வழிகளில் தவறிழைத்து அதன் விளைவுகளில் சிக்கி
வேதனைப்பட்டிருக்கிறோம். ஜென்ம ஜென்மங்களாக நம்மை ஆட்சி புரிந்து
துக்கத்தின் பிறப்பிடமாகவே நம்முள் மண்டி இருக்கும் அறியாமைக்
காரிருளைத் துரத்த எத்தனையோ வழிகள் தேடித் தேடித் தோல்வி
அடைந்திருக்கிறோமே! இந்த இருள் விலக ஆத்ம ஞான ஒளியல்லவா
வேண்டும்? அதை இறைவனால் அல்லவா ஏற்ற முடியும்?

அந்தப் பரம்பொருளின் உண்மைத் தன்மை அறிந்து, அதன் மூலம் பக்தி


உருவாகப் பெற்று, அந்தப் பக்தியால் அவனையே பற்றிக் கொண்டு அந்த
நிலையிலேயே
உறுதியாக நிற்பவன் மனதில் ஞான ஒளிவிளக்கை இறைவன் ஏற்றி
வைப்பதாக உறுதியளிக்கிறார். இதை விட ஒருவன் அடைய வேண்டிய
பேறென்ன இருக்க முடியும் ?

44.

எதெல்லாம் இறைவன் ?

பகவான் பக்தர்களின் உள்ளத்திலே தங்கி அஞ்ஞான இருளை நீக்கி வழி


காட்டுவதாகக் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் மேலும் இறைவனை
முழுமையாக அறிந்து கொள்ளவும், வணங்கவும் விருப்பம் கொள்கிறான்.
உடனே “நீயே பரம்பொருள், நீயே பரஞ்சோதி, நீயே தூயவன், நீயே
உயர்ந்தவன், நீயே நிலைத்தவன்......” என்றெல்லாம் துவங்கி, “எந்த
விபூதிகளால் (சிறப்புகளால்) இந்த உலகங்களை வியாபித்து நிற்கிறாயோ
அந்தத் திவ்ய விபூதிகளை ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி அருள்
புரிவாயாக” என்றும் “பகவானே! பக்தி யோகம் கொண்டவனான நான்
எப்பொழுதும் நினைவில் வைத்து உன்னை முழுவதும் எப்படி அறிவேன்?
எந்தெந்த உருவங்களில் உன்னை நான் தியானிக்க வேண்டும்?” என்றும்
கேட்கிறான்.

இறைவனை அவ்வப்போது மறந்து விடுவது தான் மனிதனின் நெடுங்காலப்


பிரச்னையாக இருக்கிறது. மீ ண்டும் இறைவனை நினைவில் கொண்டு
வருவதற்குள் அவனுக்கு எத்தனை எத்தனையோ தடமாற்றங்கள்,
தடுமாற்றங்கள், எத்தனை எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன.
எனவே இதையெல்லாம் தவிர்க்க எப்போதும் இறைவனை எப்படி நினைவு
வைத்திருப்பது, எந்தெந்த உருவங்களில் வணங்குவது என்று அறியும்
ஆர்வத்தில் அர்ஜுனன் கேட்டதற்கு ஸ்ரீகிருஷ்ணர், “விவரித்துச் சொன்னால்
முடிவே இராது அதனால் முக்கியமானவைகளை மட்டும் சொல்கிறேன்”
என்று சொல்லி விவரிக்க ஆரம்பிக்கிறார்.

”அர்ஜுனா! எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன்.


எல்லா உயிரினங்களின் முதலும், நடுவும், முடிவும் நானே.”

”ஜோதிகளுக்குள் ஒளிமிக்க சூரியன் நான், வேதங்களில் நான் சாம வேதம்,


மலைகளுக்குள் நான் மேருமலை, நீர் நிலைகளில் நான் சமுத்திரம்,
பொருளுள்ள சொற்களுக்குள் ஓரெழுத்தான பிரணவம் நான், நதிகளில் கங்கை
நான், வித்தைகளுக்குள் ஆன்ம வித்தை நான், எழுத்துக்களுள் அகரம் நான்,
எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் மரணம் நான், பிறக்கப்
போகிறவைகளின் பிறப்பு நான், காலங்களில் வசந்தம் நான், மாதங்களில்
மார்கழி நான், ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான், வெற்றி நான்,
முயற்சி நான், வ்ருஷ்ணி குலத்தவர்களுக்குள் வாசுதேவன் நான்,
பாண்டவர்களுக்குள் அர்ஜுனன் நான், முனிவர்களில் வியாசர் நான்,
ரகசியங்களுக்குள் மௌனம் நான், ஞானிகளின் ஞானம் நான்”

ஒவ்வொன்றிலும் எது சாராம்சமாக இருக்கிறதோ, எது மேன்மையிலும்


மேன்மையாக இருக்கிறதோ அதெல்லாம் நானே என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர்
இடையே, ஏமாற்றுபவர்களிடமுள்ள சூதாட்டம் நான் என்று சொல்வது
பலருக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். அந்தக் காலத்தில் ஏமாற்றுப்
பேர்வழிகளின் உச்சத்திறமை சூதாட்டத்திலேயே வெளிப்பட்டு வந்தது. இந்தக்
காலத்தைப் போல பலப்பல ஏமாற்று வழிகள் அக்காலத்தில் இல்லை.
அப்படிப்பட்ட சூதாட்டத்தில் கூட மனிதர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்றால்
இறைவனின் ஏதோ ஒரு அம்சம் அதில்
இருந்திருக்கிறது, அதுவே ஈர்த்திருக்கிறது என்றாகிறது.

சூதாட்டத்தினால் மனைவியை இழந்து, ராஜ்ஜியம் இழந்து, போர்க்களம் வரை


வந்து நின்று கொண்டிருக்கிற அர்ஜுனனிடம் சூதாட்டமே நான் என்று
சொன்னதோடு ஸ்ரீகிருஷ்ணர் நிற்கவில்லை. வாசுதேவன் நான், அர்ஜுனன்
நான், வியாசர் நான் என்றும் கூறுகிறார். இங்கு கீ தோபதேசம் நடத்திக்
கொண்டிருக்கிறவர் பரம்பொருள் ஆனதாலேயே, வாசுதேவன் நான் என்று
சொல்வதும், அர்ஜுனனை நீ என்று சொல்லாமல் மூன்றாவது நபர் போல
பெயர் சொல்லிக் குறிப்பிடுவதும் அவசியமாக இருந்திருக்கிறது என்கிற
சூட்சுமத்தை உணர வேண்டும்.

அது மட்டுமல்ல குருக்‌


ஷேத்திரத்தில் நின்று கொண்டு கேள்வி எழுப்பிக்
கொண்டிருக்கிற அர்ஜுனன், பரம்பொருளாக உச்சத் தியான நிலையிலே
உபதேசித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீகிருஷ்ணர், இதை எல்லாம் எழுதிக்
கொண்டிருக்கிற வியாசர் எல்லாமே ’நான்’ என்றால் இறைவனைத் தவிர,
இறைவனின் லீலையைத் தவிர வேறெதுவும் அங்கில்லை என்றல்லவா
ஆகிறது.

இது வரை சொன்னதை எல்லாம் சேர்த்து ரத்தினச்சுருக்கமாகத் தொகுத்துக்


கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

”எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தியுடையதோ அதெல்லாம்


என் தேஜஸின் ஒரு அம்சத்தால் உண்டானதென்று அறிவாயாக.”

எதிலாவது ஏதாவது ஒரு சிறப்பு இருக்குமானால் அது இறைவனின் ஒரு


அம்சத்தால் ஏற்பட்டிருக்கிறது என்கிறது கீ தை. இறைவனின் அம்சம்
இல்லாவிட்டால், அவன் அருள் இல்லா விட்டால் அந்தச் சிறப்பு
அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதை மனப்பூர்வமாக உணர்ந்தவனுக்கு கர்வம்
கொள்ளக் காரணம் இல்லாமல் போகிறது. எந்தத் துறையிலும், எந்த
விஷயத்திலும், நமக்கென்று ஒரு தனித்திறமை இருக்குமானால் அது
பரம்பொருளின் அம்சங்களில் ஒரு சிறு துளி நம்மிடம் அமைந்திருக்கிறது
என்று பொருள். அதனால் பிரத்தியேகமாய் ஏதாவது சிறப்பு
பெற்றிருப்போமானால் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமே
ஒழிய கர்வம் கொள்ளக்கூடாது.
பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார் :

”இவ்வாறு விரிவாக அறிவதன் தேவை தான் என்ன அர்ஜுனா? இந்தப்


பிரபஞ்சம் முழுவதையும் என் யோகசக்தியின் ஒரு அம்சத்தினால் தாங்கிக்
கொண்டு இருக்கிறேன்.”

ஒரு பிரம்மாண்டத்தை அடிப்படையாகப் புரிந்து கொண்டவர்களுக்கு அதன்


அம்சங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்வதின் அவசியம் இல்லை.
ஒன்றினுடைய சாராம்சம் புரிந்து விட்டால் அதைப் பற்றிய விவரங்களை
ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பல நேரங்களில்
ஆயிரக்கணக்கான தகவல்களை தனக்குள் திணித்துக் கொண்டு போகிறவன்,
ஒட்டு மொத்த சாராம்சத்தைத் தொலைத்து விடும் அபாயம் இருக்கிறது.
எனவே ’இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் என்னுடைய யோகசக்தியின் ஒரு
அம்சத்தினாலேயே தாங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லிய
ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஒன்றை அறிந்து கொள்வது போதும் என்று சொல்லி
பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தை நிறைவு செய்கிறார்.

45

இறைவனைக் காணும்
திவ்ய திருஷ்டி!

கீ தையின் பதினோராம் அத்தியாயமான விஸ்வரூப சந்தர்சன யோகத்தின்


துவக்கத்திலேயே அர்ஜுனன் தன் பேராவலை வெளிப்படுத்துகிறான்.

”தாமரைக்கண்ணா! சகல பூதங்களின் தோற்றம், மறைவு இவைகளைப்


பற்றியும் அழிவில்லாத உன் மகிமைகளைப் பற்றியும் விரிவாக நீ உரைக்க
நான் கேட்டேன்."

"பரமேஸ்வரா! உன்னைப் பற்றி நீ என்ன சொன்னாயோ அது அப்படித்தான்;


வேறுவிதமாக இல்லை. ஆயினும் புருஷோத்தமா! உன்னுடைய ஈஸ்வர
ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.

"ப்ரபோ யோகேஸ்வரா! அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ


எண்ணுவாயானால் அழிவில்லாத உன் வடிவத்தை எனக்குக் காட்டியருள
வேண்டும்.”

உடனிருப்பவன் இறைவன், அவனுடைய உண்மையான திருவுருவும் இந்த


மனித உருவமல்ல என்பது உணர்ந்த பின் அர்ஜுனனுடைய இந்த ஆவல்
எழுகிறது. அர்ஜுனன் யோகியல்ல. தலைசிறந்த பக்தன் என்றும் அவனைச்
சொல்ல முடியாது. இந்த
இரண்டுமே இறைவனைத் தரிசிக்க உதவுபவை. இந்த இரண்டுமே இல்லாத
நிலையில் அந்த பரம்பொருளின் ஈஸ்வர ரூபத்தைக் காணும் தகுதி தனக்கு
இல்லை என்கிற உணர்வு அவனிடம் இருந்திருக்க வேண்டும். அதனால் தான்
‘அந்த ரூபத்தை நான் பார்க்கலாம் என்று நீ நினைத்தால் உன் ஈஸ்வர
ரூபத்தைக் காட்டியருள வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கிறான்.
கருணை மயமான ஸ்ரீகிருஷ்ணர் அவன் கோரிக்கையை நிராகரிக்கவில்லை.
அவர் கூறுகிறார்.

”அர்ஜுனா! நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உள்ள என்


உருவங்களைப் பார். அவை பற்பல விதமாகவும், தெய்வகமாகவும்,
ீ பற்பல
வர்ணனைகளைக் கொண்டதாகவும் இருப்பதைப் பார்."

"என்னுடைய இந்த தேகத்திலேயே சராசரப் பிரபஞ்சம் முழுவதையும்


இன்னும் நீ எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ அவைகள்
எல்லாவற்றையும் இப்போது பார்."

"ஆனால் உன்னுடைய இந்தக் கண்களால் என்னைப் பார்க்க முடியாது.


தெய்வகமான
ீ பார்வையை உனக்குத் தருகிறேன். அதனால் என்னுடைய
ஈசுவர சம்பந்தமான யோக மகிமையைப் பார்.”

மனிதக் கண்களின் சக்திகளுக்கு எல்லைகள் உண்டு, வரம்புகள் உண்டு.


கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்று அவன் பிடிவாதம் பிடிக்க
முடியாது. காற்றும் மின்சாரமும் அவன் கண்ணால் பார்த்து இருக்கிறது என்று
முடிவு செய்வதில்லை. அவற்றின் செயல்திறன்களை வைத்தும்,
விளைவுகளை வைத்துமே அவன் அவை இருப்பதாக நம்புகிறான். இப்படி
இயற்கையின் சக்திகளையே கூட அவனால் நேரடியாகக் காண முடியாத
போது இறைவன் விஸ்வரூபத்தை அவனால் புறக்கண்களால் எப்படிப் பார்த்து
விட முடியும்? எனவே அதைக் காணும் விசேஷ சக்தியை, திவ்ய திருஷ்டியை
ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளிக்கிறார்.

இந்த திவ்ய திருஷ்டி மட்டுமல்ல எந்தப் பேருண்மையைக் காணவும், உணரவும்


முடியும் பெரும் சக்தியையும் இறைவன் அளித்தால் ஒழிய ஒருவருக்குக்
காணவோ,
உணரவோ முடிவதில்லை. யாரெல்லாம் பேருண்மைகளை உணர்கிறார்களோ
அவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கவும், அனுக்கிரக்கவும்
பட்டவர்கள் என்பது பொருள்.

வயலுக்குப் பாய்ச்சிய நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல அர்ஜுனனுக்கு


கிடைத்த அந்த மகத்தான வாய்ப்பு, திருதராஷ்டிரனுக்கு குருக்‌ ஷேத்திரத்தில்
நடப்பதை எல்லாம் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த சஞ்சயனுக்கும்
கிடைக்கிறது. தர்மாத்மாவும், புண்ணியாத்மாவுமான சஞ்சயன் திருதராஷ்டிர
மன்னனிடம் மெய்சிலிர்த்து இப்படி வர்ணிக்கிறான்.

”திருதராஷ்டிர மகாராஜனே! யோகங்களுக்கெல்லாம் பெருந்தலைவனான


ஹரி இப்படிச் சொல்லி அர்ஜுனனுக்குத் தன்னுடைய ஜகதீஸ்வர ரூபத்தைக்
காண்பித்தான்."

"பல முகங்கள், பல கண்கள், பல அற்புதக் காட்சிகள், பல திவ்யாபரணங்கள்,


பல திவ்யாயுதங்கள், இவைகளைக்
கொண்டதும், திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்ததும்,
திவ்யமான சந்தனத்தைப் பூசியதும், எல்லா ஆச்சரியங்களுக்கும்
இருப்பிடமும், ஒளிவசுவதும்,
ீ காலத்தைக் கடந்ததும், எல்லாத் திக்குகளிலும்
முகங்களையுடையதுமான தன் ரூபத்தைக் காட்டினார்."

"ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில்


கிளம்பினால் அது அந்த மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும்".

"பலவிதமாகப் பிரிந்துள்ள உலகம் யாவும் அந்த தேவதேவனின் சரீரம்


ஒன்றிலேயே இருப்பதை அர்ஜுனன் கண்டான்.”

"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள்.


வார்த்தைகளுக்கு அடங்காத அற்புதங்களே ஆனாலும் அந்த பேரானந்த
அனுபவத்தைப் பெற்றவனால், அறிந்த வார்த்தைகளால், முடிந்த வரை
விவரிக்காமல் இருக்க முடிவதில்லை. கடலை, துளிகளின் உவமையினால்
விளக்கி விளங்க வைக்க முடியுமா? ஆனாலும் முயற்சி செய்து வர்ணிக்கிறது
மனித மனம்.

எத்தனை முகங்கள், எத்தனை உருவங்கள், எத்தனையெத்தனை காட்சிகள்,


எல்லைகள் இல்லாத பேராச்சரியங்கள் என்று இறைவனின் விஸ்வரூபம்
விரிந்து கொண்டே போக மெய் மறந்து தரிசிக்கிறார்கள் அர்ஜுனனும்,
சஞ்சயனும். ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தோன்றினால்
அந்த ஒளி மகாத்மாவான ஸ்ரீகிருஷ்ணரின் ஒளிக்குச் சமமாக இருக்கும் என்று
தனக்குத் தெரிந்த மட்டில் வர்ணிக்கிறான் சஞ்சயன்.

பல கோடி கோடிகளாய் பிரிந்து வியாபித்திருக்கும் உலகங்கள் யாவும்


தேவர்களுக்கெல்லாம் தேவனான ஸ்ரீகிருஷ்ணர் சரீரத்திலேயே இருப்பதை
அர்ஜுனன் காண்கிறான். அனைத்துக்கும் மூலமான இறைவனிடத்தில்
அனைத்தையுமே ஒரே சமயத்தில் காண முடிந்தால் பின் இந்த உலகத்தில்
காண வேண்டியது என்ன இருக்க முடியும்?

வேறுபாடுகள் மாயையினால் உருவாக்கப்படுகின்றன. இறைவனை


உணர்ந்தவர்கள்
வேறுபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் இறைவனே மூலம் என்றால் பயப்படவோ,
கவலைப்படவோ என்ன இருக்கிறது?

46

இறைவனின்
கருவியா
நீங்கள் ?

இறைவனின் விஸ்வரூபத்தைத் தரிசித்த பின் அர்ஜுனன் மெய் சிலிர்க்க,


தலை வணங்கிக் கைகூப்பிச் சொல்ல ஆரம்பித்தான்.

“லோகநாதா! விஸ்வரூபா! எண்ணிலடங்காத புஜங்கள், வயிறுகள், முகங்கள்,


கண்களுடன் கூடியவனாய், முடிவில்லாத உன் உருவத்தை எங்கும்
காண்கிறேன். உன் உருவத்தின் முடிவையோ, நடுவையோ, அடியையோ
எனக்குக் காண முடியவில்லை."

"அறிய வேண்டிய பொருளாகக் கூறப்பட்ட அழிவில்லாத பரம்பொருள் நீ. இந்த


உலகத்திற்கு உயர்ந்த ஆதாரம் நீ. அழிவில்லாதவன் நீ. நிலையான தர்மத்தை
ரட்சிப்பவன் நீ. சனாதன புருஷன் நீயே என்பதை நான் தெரிந்து கொண்டேன்."

மகாத்மாவே! நீ ஒருவனே ஆகாயம் பூமிகளின் இடைவெளியிலும், சகல


திக்குகளிலும் பரவியிருக்கிறாய். அற்புதமாகவும், உக்கிரமாகவும் உள்ள
உன்னுடைய இந்த உருவத்தைக் கண்டு மூவுலகும் அச்சத்தால்
நடுங்குகின்றன. நானும் நடுங்குகின்றேன். உன்னைக்கண்டு நான் மனம் கலங்கி
தைரியத்தையோ, அமைதியையோ அடைய முடியாமல் இருக்கிறேன்."

"தேவர்களின் அரசனே! உலகின் உறைவிடமே! கோரைப்பற்களால்


பயங்கரமானதும், பிரளய காலத்து அக்கினி போன்றதுமான உன் முகத்தைப்
பார்த்ததுமே எனக்குத் திக்குத் தெரியவில்லை. அமைதியும் ஏற்படவில்லை. இந்த
அரசர்களின் கூட்டங்கள், திருதராஷ்டிரனின் புத்திரர்கள், பீஷ்மர், துரோணர்,
கர்ணன் இவர்கள் மட்டுமல்லாமல் நம் சேனைத்தலைவர்கள் எல்லோருமே
கூட கோரைப்பற்களுடன் கூடிய பயங்கரமான உன்னுடைய வாய்களில்
வெகுவேகமாய் நுழைகிறார்கள். சில
தலைகள் பொடியாக்கப்பட்டு பற்களுக்கிடையில் சிக்கியிருப்பதைக்
காண்கிறேன்."

"நதிகளின் பல வெள்ளங்கள் சமுத்திரத்தை நோக்கி எப்படி ஓடுகின்றனவோ


அப்படியே இந்த மானிட வரர்கள்
ீ சுடர் விட்டெறியும் உன் வாய்களில்
பிரவேசிக்கிறார்கள்."

"தேவ சிரேஷ்டனே! உக்கிர ரூபம் கொண்ட நீ யார்? எனக்குச் சொல். உனக்கு


நமஸ்காரம். அருள் புரிவாயாக!ஆதிமூலமான உன்னைப் பற்றி நான் அறிய
விரும்புகிறேன். உன்னுடைய செய்கை என்னவென்று எனக்குப் புரியவில்லை.”

இறைவனுடைய விஸ்வரூப தரிசனம் ஆரம்பத்தில் சஞ்சயன் சொன்னது


போல் ஆயிரம் சூரியன்கள் ஒருசேரத் தோன்றியது போல் ஒளிமயமாக
இருந்தாலும் உற்று உள்ளே பார்த்த போது அர்ஜுனனுக்கு வேறுபல
உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது. இறைவனின் முடியையோ,
அடியையோ, நடுவையோ காண முடியாமல் போன போது அவன் பிரமிப்பை
உணர்ந்தான்.
வேதங்களில் அறிய வேண்டிய அழிவில்லாத பரம்பொருள் இவன் என்றே
உணர்ந்தான். தர்மத்தைக் காப்பவனாகவும் அறிந்தான். ஆனால் அற்புதமாகத்
தோன்றிய தோற்றம், இறைவனின் அழிக்கும் சக்தியை அறிய ஆரம்பித்த
போது அச்சம் தருவதாகவும் மாற ஆரம்பித்தது.

பிரளய காலத்து அக்கினியாய் பகவானின் முகம் தெரிய ஆரம்பித்தது.


பகவானின் வாயில் பயங்கரமான கோரைப்பற்களை அர்ஜுனன் பார்க்கிறான்.
அப்படி ஒரு வாய் அல்ல பல்லாயிரம் வாய்களை அவன் பார்க்கிறான்.
தற்போது உயிருடன் இருக்கும் அவன் உறவுகளும், அரசர்களும், வரர்களும்

வேகமாக அந்த வாய்களில் பிரவேசித்து மடிவதைக் காண்கிறான். அது
அழகான காட்சி அல்ல. அதி பயங்கரமான காட்சி. நதி வெள்ளங்கள் கடலில்
சங்கமிப்பது போல குருக்ஷேத்திர வரர்கள்
ீ அந்த வாய்களில் சென்று
மடிவதைப் பார்க்கையில் அச்சத்தை உணர்ந்து அர்ஜுனன் நடுங்கினான்.

இது அவன் அறிந்த உருவம் அல்லவே. அழகுக்குப் பெயர் போன


ஸ்ரீகிருஷ்ணரின் உருவத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே
என்று குழம்பியவன் ”நீ யார்? இது என்ன தோற்றம்?” என்று வணங்கிக்
கேட்கிறான்.

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்:

“உலகத்தை அழிக்கும் காலன் நான். உலகத்தை அழிப்பதற்காகத் தொடங்கி


இருக்கிறேன். யுத்த பூமியில் நிற்கும் இந்த வரர்கள்
ீ நீ இல்லா விட்டாலும்
அழியப் போகிறார்கள்"

"ஆகவே நீ எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடைவாயாக. செல்வம்


நிறைந்த ராஜ்ஜியத்தை அனுபவி. இவர்களெல்லாம் ஏற்கெனவே என்னால்
கொல்லப்பட்டவர்கள். நீ நிமித்தமென்ற ஒரு கருவியாக மட்டும் இரு”

குருக்‌
ஷேத்திர யுத்த பூமியில் காலனாகவே நின்று கொண்டிருப்பதை பகவான்
தெரிவிக்கிறார். அந்த வரர்கள்
ீ எல்லாம் முன்னமே மரணத்தின் பிடியில்
சிக்கியாகி விட்டார்கள் என்றும் அர்ஜுனன் இல்லா விட்டாலும் அவர்கள்
மாண்டு போவது உறுதி என்றும் கூறிய பகவான் அவர்கள் எல்லாம் தன்னால்
ஏற்கெனவே கொல்லப்படுவதற்கு
தயாராகி விட்டவர்கள்
என்பதைத் தெரிவிக்கிறார். அதனால் அர்ஜுனன் யுத்தம் புரிந்து அவனாகக்
கொல்லப் போவதில்லை என்றும் பகவானின் கருவியாகவே இருக்கப்
போகிறான் என்றும் தெரிவித்து அவன் மனதில் எழுந்திருந்த குற்ற
உணர்வைக் கலைகிறார்.

இறைவனின் கருவியாக இரு என்று சொல்வதைப் பலரும் பல விதங்களில்


தங்கள் தவறுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இன்று
நம்மால் பார்க்க முடிகிறது. இறைவனின் கட்டளைக்கிணங்கி இறைவனின்
கருவியாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்லிப் பலரும் தங்கள்
பாவச்செயல்களுக்கும் இறைவனைக் கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கருவிக்கு விருப்பு வெறுப்பு இருக்காது. கரண்டியால் பரிமாறுவது


தேன் ஆனாலும் சரி, கசப்பான மருந்தானாலும் சரி, வேறெந்த சுவை கொண்ட
பதார்த்தமானாலும் சரி கரண்டி என்னும் கருவிக்கு அதில் எந்த
அபிப்பிராயமும் இல்லை, விருப்பு வெறுப்பும் இல்லை. அதற்கென்று அதில்
தனிப்பட்ட இலாப நஷ்டங்கள் இல்லை.
எதைப் பரிமாற வேண்டும் என்று பரிமாறும் கை விரும்புகிறதோ அதைப்
பரிமாறும் கருவியாக கரண்டி இருந்து விடுகிறது. அப்படியே ஒரு செயலில்
எந்த விருப்பும், வெறுப்பும் இல்லாத ஒரு கருவியாக நாம் இருக்கிறோமா,
இல்லையா என்பதை வைத்தே நம்மை இயக்குவது இறைவனா, ஈகோவா
என்பதை நாம் பிரித்தறிய முடியும்.

47
வாழ்க்கையின்
துன்பங்களில்
இருந்து மீ ள.

பகவானின் விஸ்வரூப தரிசனம் முழுவதுமாகக் கண்ட பின் உடல் நடுங்கி


குரல் தழுதழுக்க அர்ஜுனன் கூறுகிறான்.

“நீ ஸத் அஸத் என்பவைகளைக் காட்டிலும் உயர்ந்ததான அழிவில்லாத


பரம்பொருள். அறிந்தவன். அறியத்தகுந்தவன். எண்ணிலா வடிவம்
கொண்டவன். இந்த உலகெங்கும் நீ பரவியிருக்கிறாய். மறுபடியும் மறுபடியும்
உன்னை நமஸ்கரிக்கிறேன்."

"உன்னை முன்புறம் வணங்குகிறேன். உன்னைப் பின்புறம் வணங்குகிறேன்.


எல்லாம் ஆனவனே! உன்னை எல்லாப்
புறமும் வணங்குகிறேன். நீ எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். ஆகவே
எல்லாமாக இருக்கிறாய்."

"உன்னுடைய மகிமை அறியாமல் தவறாகவோ, அன்பினாலோ நான் உன்னைத்


தோழன் என்றெண்ணி அடக்கமில்லாமல் அழைத்திருக்கிறேன். பரிகசித்து
அவமதித்திருக்கிறேன். அதையெல்லாம் மன்னித்து விட வேண்டும். அளவிட
முடியாதவனான உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்."

"என் உடல் தரை மீ து படும்படி நான் சாஷ்டாங்கமாக உன்னை வணங்கி,


ஈசனும் துதிக்கத் தக்கவனுமான உன்னை அருள்புரிய வேண்டுமெனக்
கோருகின்றேன். மகனுக்குத் தந்தை போலவும், நண்பனுக்கு நண்பன்
போலவும், காதலனுக்குக் காதலி போலவும் இருந்து பிழையைப்
பொருத்தருள வேண்டும்."

"உன் உருவத்தைக் கண்டு என் மனம் பயத்தால் நடுங்குகிறது. இதற்குமுன்


இருந்த
அந்த பழைய உருவத்தையே எனக்குக் காட்டியருள வேண்டும்.”

சாதாரண புறக்கண்ணால் நாம் காண்பதே பல்லாயிரம். தூரதிருஷ்டிக்


கண்ணாடி கிடைத்து அதன் மூலம் பார்த்தால் பல லட்சம் பொருள்கள்,
உயிர்கள் பார்க்கலாம். அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலே
நமக்குத் தலைசுற்றி விடும். திவ்ய திருஷ்டியை அர்ஜுனனுக்கு அளித்ததன்
மூலம் ஸ்ரீகிருஷ்ணர் பலகோடி மடங்கு நுட்பமான மைக்ரோஸ்கோப்
திருஷ்டியை அளித்து விட்டார். எண்ணிலடங்கா கோடி கோடி பொருள்களும்,
உயிர்களும் தெரியும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பார்த்த பார்த்தனுக்கு
உடலும், மனமும் நடுங்கியதில் ஆச்சரியமில்லை.

ஸ்ரீ கிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கி இருக்கும் பகவான்,


ஆதியந்தமில்லா பரம்பொருள் என்றெல்லாம் புரிந்த போது
பிரம்மாண்டத்தோடு இன்னொரு உண்மையும் அர்ஜுனனுக்கு உறைக்கிறது.
தோழனாய், உறவினனாய் நினைத்து நாம் இவனை எப்படியெல்லாம் நடத்தி
இருக்கிறோம் என்றும் எண்ணிப்பார்க்கிறான். மன்னிப்பு கோரி
வணங்குகிறான். தந்தையைப் போல், நண்பனைப் போல், காதலியைப் போல்
மன்னித்தருள வேண்டுகிறான். பாசத்தாலும், நட்பாலும், காதலாலும்
அல்லவா மன்னித்தல் மனதார முழுமையாக சாத்தியமாகிறது.

மன்னிப்பு கேட்டவன் உடனே இந்த விஸ்வரூப தரிசனம் போதும், பயமாக


இருக்கிறது என்கிறான். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
அர்ஜுனன் ஆரம்பத்திலிருந்தே பயம் பற்றிப் பேசியவனல்ல. உறவுகளின்
பாசம், குருபக்தி, தவறிழைக்கிறோமோ என்ற நியாய உணர்வு எல்லாம் உந்த
யுத்தம் வேண்டாம் என்றானே ஒழிய பயத்தால் எதுவும் சொல்லவில்லை.
உண்மையில் பயம் என்றால் என்ன என்பதே அறிந்திராத வீரனவன்.
அப்படிப்பட்டவனை நடுங்க வைத்திருக்கிறது விஸ்வரூப தரிசனம். ஏன்?

பனிமலை தூரத்தில் இருந்தோ, அருகில் இருந்தோ பார்ப்பதற்கு மிக ரம்யமாக


இருக்கும். அதே போல் சமுத்திரமும் கரையிலிருந்து பார்க்க மிக அழகாய்
இருக்கும். ஆனால் ஒரு கணம் பனிக்குவியலில் சிக்கிக் கொள்வது போலவும்,
நடுக்கடலில் மாட்டிக் கொள்வது போலவும் நினைத்துப் பாருங்கள்.
அது மரண அவஸ்தையே அல்லவா? பாதுகாப்பாய் சௌகரியமான இடத்தில்
இருந்து கொண்டு பார்த்து ரசிக்க மிகவும் அழகாய் இருக்கிற இவற்றிற்குள் மிக
நெருங்கிப் போய் சிக்கிக் கொண்ட அவஸ்தையாகவே விஸ்வரூப தரிசனம்
கண்ட அர்ஜுனன் உணர்கிறான்.

விஸ்வரூப தரிசனத்தில் அர்ஜுனன் அடைந்த இன்னொரு பிரச்னை ஏக


காலத்தில் உயிர்களின் ஆரம்பத்திலிருந்து அழிவு வரை காண நேர்ந்தது. ஒரு
சுட்டிக்குழந்தையின் அழகை ரசிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த
அழகை ரசிக்கும் போதே அது முதுமை அடைந்து மரணப்படுக்கையில்
போராடுவதையும் பார்க்க நேர்ந்தால் முந்தைய அழகை முழுமையாக ரசிக்க
முடியுமா? இப்படி ஒவ்வொன்றையுமே ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏக
காலத்தில் பார்த்தால் எப்படி இருக்கும். ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்பது
உயிர்களைப் பொருத்த வரை தவிர்க்க முடியாத நிஜம். ஆனால் ஒவ்வொரு
கட்டத்தின் போதும் மீ தமுள்ளதை மறைத்து மாயை வாழ்க்கையை
ஆவலோடும் எதிர்பார்ப்போடும் வாழத் தகுந்ததாய் மாற்றிக் கொடுக்கிறது.
மாயையின் திரை விலகி உண்மை விஸ்வரூபம் எடுத்தாலோ எல்லாமே
பயங்கரமாய் தான் இருக்கிறது. அர்ஜுனன் போன்ற பயமறியாத மாவரனே ீ
பயப்படும் அளவு யதார்த்தம் இருக்கும் போது நம்மைப் பற்றி என்ன சொல்ல!

அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்று பேரழகானதும், சாந்தமானதும் ஆன தன்


பழைய வடிவத்துக்கே மீ ண்டும் வந்த ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் :

"மானுட உலகில் உன்னைத் தவிர மற்றவர் என்னை இந்த உருவில் என்னைக்


கண்டதில்லை. நீ என்னைக் கண்டது போல் வேதம் ஓதியோ, தவத்தாலோ,
தானம் செய்தோ யாரும் என்னைக் காண முடியாது."

எல்லாம் சரி, இந்த கோரமானதும், கசப்பானதுமான நிஜங்கள் கொண்ட


வாழ்க்கையை மாயை என்ற அழகான திரையைப் போட்டு என்ன தான்
மறைத்து வாழ்ந்தால் கூட அவ்வப்போது நிஜங்கள் எட்டிப்பார்த்து நம்மை
வதைக்கின்றனவே என்ன செய்வது? இதிலிருந்து தப்பிக்கத் தான் வழி என்ன?
அதற்கான பதிலை பதினோராவது அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் ஸ்ரீ
கிருஷ்ணர் சொல்கிறார் :

“பாண்டவனே! எவனொருவன் எனக்காகக் கர்மங்களைச் செய்து, என்னையே


உயர்நிலையாகக் கொண்டு, எனக்கே பக்தனாகி, பற்றுதலை நீங்கி எல்லா
உயிர்களிடமும் விரோதமின்றி வழிபடுகிறானோ அந்த பக்தன் என்னை
அடைகிறான்.”

ஆதிசங்கரர் தன் பாஷ்யத்தில் இந்த சுலோகத்தை கீ தையின் சர்வார்த்த சாரம்


(முழுமையான சாரம்) என்று கூறுகிறார்.

ஒவ்வொரு கர்மத்தையும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த கர்மம் என்ற


பாவனையோடு செய்து, இறைவனே நாம் அடையத் தக்க உயர்நிலை என்று
பக்தனாக வாழ்ந்து, பற்றுதலை நீக்கி, யாரிடமும் எந்த விரோதமும்
பாராட்டாமல் அன்பு மயமாக வாழ்கின்றவன் இறைவனையே அடைகிறான்.
இந்த போதனையில் எங்குமே தனிமனித ’ஈகோ’வுக்கு வேலை இல்லை.
தனிமனித விருப்பு வெறுப்புகள் இல்லை.

ஒரு துளி நீர்,


சமுத்திரத்தில்
கலக்கும் போது அந்தத் துளியின் தனித்துவ பலவனங்கள்
ீ இல்லை. 'வெறும்
துளி' என்ற நிலை போய் அது சமுத்திரமாகவே மாறி விடுகிறது. எப்படி ஒரு
துளி சமுத்திரமாகும் போது அதன் பழைய தனித்துவ பிரச்சினைகளில்
இருந்தும், குறைபாடுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறதோ, அது போல,
மனிதனும் இறைவனையே அடையும் போது அவனது துன்பங்களும்
ஒரேயடியாய் முடிந்து போகிறது.

கீ தையின் பதினோறாம் அத்தியாயம் முடிவுற்றது.

48.

பக்தியா ஞானமா ?

இலக்கிற்குப் பல வழிகள் இருக்கையில் எந்த வழி சிறந்தது என்பதைக்


கண்டுபிடித்து அந்த வழியிலேயே செல்லலாமே என்கிற எண்ணம் அறிவுள்ள
மனிதனுக்கு ஏற்படுவது இயற்கை. அர்ஜுனனுக்கும் அந்த எண்ணம் வந்தது.
அவனை ஈர்த்த வழிகளான பக்தி, ஞானம் என்ற இரண்டு வழிகளில் எந்த வழி
சிறந்தது, எந்த வழி ஸ்ரீகிருஷ்ணருக்கு உகந்தது என்பதை அறிய விரும்பிய
அவன் பகவத் கீ தையின் பன்னிரண்டாம் அத்தியாயமான பக்தி யோகத்தின்
ஆரம்பத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கிறான்.

"எப்பொழுதும் உன் மீ து பக்தி கொண்டு உன்னையே வழிபடுபவர்கள் யோகத்தில்


சிறந்தவர்களா? உருவமும், அழிவும் அற்ற பிரம்மத்தை வழிபடுபவர்கள்
யோகத்தில் சிறந்தவர்களா? இருவகையினரில் யார் யோகத்தில்
சிறந்தவர்கள்?"

இந்தக் கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:


"என்னிடத்தில் மனதை ஒருமைப்படுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த
நம்பிக்கையுடன் எப்போதும் என்னையே வழிபட்டிருப்பவர்களே யோகிகளில்
சிறந்தவர்கள் எனக் கருதுகிறேன்."

இரண்டுமே சிறந்த வழிகள் தான் என்றாலும் கூடத் தீர்மானமாக ஒன்றை


மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டது பகவானுக்குத் தர்மசங்கடமான
கேள்வி என்று வினோபா கூறுகிறார். தாயிற்கு இரண்டு பிள்ளைகளும் இரு
கண்களைப் போல இணையாக முக்கியமானவை. ஆனால் ஒரே
ஒருவரைத்தான் கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால்,
தன்னை விட்டு இருக்க முடிந்த பெரிய பிள்ளையை விட, தன்னை விட்டுப்
பிரிந்திருக்க முடியாத இளைய பிள்ளையைத் தான் சொல்வாள் அல்லவா? அதே
போலத் தான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தியைச் சொல்வதாகக் கூறுகிறார்.

தன்னை வணங்குபவனே மேலானவன் என்று சொல்வது பகவானே ஆனாலும்


அது ’ஈகோ’ எனப்படும் ‘நான்’ என்ற அகம்பாவம் சார்ந்த பதில் அல்லவா என்று
சந்தேகப்பட்டால் அது முற்றிலும் தவறு என்றோ அடிப்படைக் காரணம்
இல்லாதது என்றோ சொல்ல முடியாதல்லவா? அந்தச் சந்தேகம் வந்து
விடக்கூடாது என்பதற்காகவே அந்தப் பதிலுக்கான காரணங்களை அடுத்த
சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

"ஆனால் அழிவில்லாததும், குறிப்பற்றதும், வெளிப்படையாகத் தெரியாததும்,


எங்கும் பரவியிருப்பதும், நினைத்துப் பார்க்க முடியாததும், எல்லோருக்கும்
பொதுவானதும், அசையாததும், நிலையானதுமான பரம்பொருளை யார்
வணங்குகிறார்களோ, எவர்கள் புலன்களை அடக்கி, எல்லோரிடமும்
சமநோக்குடையவர்களாய் , எல்லா உயிர்களின் நன்மைகளையும் கவனத்தில்
கொண்டு இயங்குகிறார்களோ அவர்கள் என்னையே அடைகிறார்கள்."

ஆனால் உருவமில்லாத பிரம்மத்தை வழிபடுவதில் அதிக சிரமம் உண்டு.


உடலில் பற்றுடையவர்களால் உருவமற்ற பரம்பொருள் பற்றிய
எண்ணமாவது மிகுந்த சிரமத்துடனேயே உண்டாகிறது.

பரம்பொருள் அழிவில்லாதது, உருவமற்றது, புலன்களால் அறிய முடியாதது,


எங்கும் பரவியிருந்தாலும் எண்ணத்தில் அடங்காதது, அனைவருக்கும்
பொதுவானது (அதனால் தனிப்பட்ட உரிமையை யாரும் பரம்பொருளிடம்
கொண்டாட முடியாது), நிலைத்திருப்பது, மாறாதது. இந்த விசேஷ
குணாதிசயங்கள் அனைத்துமே சராசரி மனிதன் பற்றிக் கொள்ள
முடியாதவை. உடல் சார்ந்து வாழும் மனிதனுக்கு இவற்றை உறுதியாகப்
பற்றிக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாததால் வழிபடுவதும்
சிரமமாகவே இருக்கும். ஏனென்றால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றை
அவனால் எப்படி ஆத்மார்த்தமாய் வழிபட முடியும்? இந்தச் சிக்கல்
ஞானத்தில் இருக்கிறது. அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிந்தவர்களால்
கூட ஆத்மார்த்தமாய் இந்த ஞான முறையில் வழிபட முடிவது மிகவும்
கஷ்டமே.

ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தின் இன்னொரு பக்கத்தையும் சொல்கிறார். ஞானம்


என்றால் பக்கம் பக்கமாய் தத்துவங்களைப் படித்துச் சொல்வது அல்ல.
அதிலிருந்தும் இதிலிருந்தும் உதாரணம் சொல்வதும் அல்ல. உதாரணமாக
வாழ்வது தான் ஞானம். ஞானியாக இருப்பவன் எப்படி வாழக்கூடியவன்
என்பதையும் கூடவே ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பது சிறப்பு.

மூன்று மிக முக்கியமான அம்சங்களை ஞானத்தின் வெளிப்பாடாக இங்கு


ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அவை புலனடக்கம், சமநோக்கு,
அனைத்துயிர்களின் நன்மை. மூன்றுமே சுலபமானவை அல்ல.

புலன்கள் எவ்வளவு தான் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றினாலும்


எப்போது வேண்டுமானாலும் திடீரென்று தறிகெட்டு ஓடக்கூடும் என்பதே
யதார்த்தம். அவற்றை சதா சர்வகாலம் அடக்கி வைக்க வேண்டுமென்றால்
அதன் வழியாக வரும் கவர்ச்சிகள் சிறு சலனத்தையும் ஏற்படுத்த முடியாத
உயரத்தை ஒருவன் எட்டியிருக்க வேண்டும்.

சமநோக்கும் எளிதில் வசப்படுகிற தன்மை அல்ல. அதே போல


அனைத்துயிர்களின் நன்மையும் கருத்தில் கொண்டே இயங்குவது
எல்லா நேரங்களிலும் ஒருவரால் கடைபிடிக்க முடிந்த தன்மை அல்ல.
அனைத்தையுமே பரம்பொருளாகவும், பரம்பொருளின் அம்சங்களாகவும்
காண முடிகிற போதே சமநோக்கும், அனைத்து உயிர்களின் நன்மைகளையும்
கருத்தில் கொள்வது சாத்தியப்படும். ’நான்’ என்கிற அகம்பாவம்
முழுமையாகக் களையப்பட்டால் ஒழிய இரண்டுமே சாத்தியம் இல்லை.

இப்படிப்பட்ட ஞானம் வருவதும் ஞான முறையிலேயே வாழ்வதும் எத்தனை


பேருக்குச் சாத்தியம்? இந்தக் காரணங்களாலேயே இந்த ஞானத்தை விட பக்தி
சுலபமானதும், சிறந்ததுமாக ஸ்ரீகிருஷ்ணரால் சொல்லப்படுகிறது.

பக்தியில் பிடித்து நிலைத்து நிற்க உறுதியான இறைவன் உண்டு. மனம்


லயிக்க அழகான உருவம் உண்டு. பெருமையாக நினைக்க ஆயிரம்
அருமையான குணங்கள் உண்டு. காப்பாற்றுவான் என்ற பூரண நம்பிக்கை
உண்டு. உடன் அவன் இருக்கிறான் என்ற அசைக்க முடியாத தைரியம் உண்டு.
காதலால் கசிந்துருகி கண நேரமும் மறக்க முடியாத உன்மத்த நிலை உண்டு.
அதனால் பக்தி வழியில் ஆயிரம் வகைகளில் அவன்
இறைவனை வழிபடுவான். இதனால் எளியவனுக்கும் பக்தி கைகூடும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் அழகானதொரு சுலோகம் உண்டு. “பசுவிடம் பால்


கறக்கும் போதும், தானியங்களை உரலில் குத்தும் போதும், தயிர் கடையும்
போதும், வடுீ மெழுகும் போதும், குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்
போதும், அழும் குழந்தையைத் தாலாட்டும் போதும், வடு ீ பெருக்கும் போதும்,
தண்ண ீர் தெளிக்கும் போதும், பிற காரியங்களைச் செய்யும் போதும், அன்பு
நிறைந்த உள்ளத்தோடு கண்களில் நீர் பெருகத் தழுதழுத்த குரலில்
ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிப் பரவசம் கொண்டு, எப்பொழுதும் ஸ்ரீகிருஷ்ணனிடம்
லயித்தவர்களான அந்த விரஜப் பெண்மணிகள் பெரும்பேறு பெற்றவர்கள்.”

இப்படி எளிய வாழ்க்கையில் அடைந்து கிடக்கும் வட்டுப்


ீ பெண்மணிகளுக்கும்
கூட பக்தி மூலம் இறைவனிடம் மனதை நிறுத்துவது சுலபமாக இருக்கிறது.
இப்படி வாழ்க்கையே இறைவன் மயமானால் அவனையே அடைவதும்
முடிவான நிலையாக ஆகி விடுகிறது.
இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும். ஞானத்தின் மூலமாக அடையும்
பரம்பொருளான பிரம்மமும் ஸ்ரீகிருஷ்ணரும் வேறல்ல. அதனால் தான் ஞான
வழியை விளக்கிக் கொண்டு வந்த சுலோகத்தில் கூட அவர்கள் முடிவில்
என்னையே அடைகிறார்கள் என்று கூறுகிறார்.

49.

இறைவனை
அடையும்
வழிகள் !

இறைவனை அடைவது என்பது இறந்தவுடன் வைகுண்டம் போய் சேர்வதல்ல.


வாழும் போதே இறைநிலையுடன் வாழ்வது. இறைவனுடன் ஐக்கியமாகி
இறைத்துளியாகி வாழ்வது. இந்த நிலையில் சாதாரண மனிதர்களின்
சங்கடங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லை. துக்கங்கள் இல்லை. அப்படியே
இருப்பது போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றினாலும் உள்ளே
துளியளவும் பாதிக்கப்பட்டு விடாமல் சச்சிதானந்த நிலையுடன்
வாழ்க்கையை நகர்த்தும் நிலை.

இப்படிப்பட்ட நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?


ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்:

"அர்ஜுனா! யார் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பித்து, என்னையே


குறிக்கோளாகக் கொண்டு வேறெந்த நினைவுமின்றி என்னைத் தியானம் செய்து
உபாசிக்கிறார்களோ அப்படி என்னிடமே மனதை ஈடுபடுத்தியவர்களை
ஜனனம், மரணம் என்ற பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்த்து
விடுவேன்."

"உன் மனதை என்னிடமே வைத்து விடு. உன் புத்தியை என்னிடமே செலுத்தி


விடு. அதற்குப் பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய். இதில் சந்தேகமில்லை."

மனம், புத்தி, இரண்டும் இறைமயமானால் செயலும் இறைத் தன்மையோடு தான்


இருக்கும். வேறெந்த நினைவுகளும் உள்ளே நுழையாமல் இருந்தால், அவன்
நினைவாகவே இருக்கவும் முடிந்தால் அது உச்சக்கட்ட ஆன்மீ க நிலை. அந்த
நிலையில் பிறக்கும் கர்மங்களில் தனிமனிதனின் மனக்கசடுகள் இருக்க
வாய்ப்பில்லை. அவனுடைய தனி லாப நஷ்டங்கள் இருக்க வாய்ப்பில்லை.
கர்மங்களும் இறைவனைச் சார்ந்தவை. இறைவனே குறிக்கோள்.
இறைநிலையே குறிக்கோள் என்ற நிலையில் வாழ்பவனை
இருள்சேர் இருவினையும் சேர வாய்ப்பில்லை. அதனால் பிறப்பு இறப்பு என்ற
பந்தத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான். இறைவனிடமே,
இறைநிலையிலேயே மரணம் வரையில் மட்டுமல்ல, மரணத்திற்கப்பாலும்
தங்கி விடுவான். அதனால் இதில் சந்தேகம் தேவையில்லை என்கிறார்
பகவான்.

ஆனால் மனதை அப்படி இறைவனிடமே நிலைநிறுத்துவது எல்லோருக்கும்


முடிகிற காரியமா என்ன! ஒரு நிமிடம் தியானத்தில் அமர்ந்தால் ஓராயிரம்
வேறு எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கிறதே என்ன செய்ய?
அப்படியானால் இறைவனை அடையவே முடியாதா?

முடியும் என்கிற பகவான் இப்படிச் சொல்கிறார்:

"அப்படி ஒரு வேளை உன் மனதை என்னிடமே நிலை நிறுத்த முடியா விடில்
அப்யாச யோகம் என்ற பயிற்சி முறைகளினால் என்னை அடைய
விரும்புவாயாக."

"அத்தகைய அப்யாச யோகமும் செய்ய முடியவில்லை என்றால் எனக்காகக்


கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவாயாக.
எனக்காகக் கர்மங்களைச் செய்தாலும் சித்தியடையவாய்."

"அதையும் செய்ய முடியா விட்டால் நான் சொல்லிய கர்மயோக முறையைப்


பின்பற்றி மனதைக் கட்டுப்படுத்தி சகல கர்ம பலன்களையும் தியாகம் செய்."

அப்யாச யோகம் என்பது வழிபாட்டுப் பயிற்சிகளில் முழு மனதாக ஈடுபட்டு


இறைநிலையை மனதில் இருத்திக் கொள்வது. திரும்பத்திரும்ப இறைவனின்
திருநாமத்தை உச்சரித்தல், சேவித்தல், பூஜித்தல் போன்ற வழிபாட்டு
முறைகளில் பக்தியுடன் ஈடுபடும் போது மனம் சுலபமாக இறைவனிடம்
ஒட்டிக் கொள்ளும்.

அது முடியாவிட்டால் இறைவனின் பிரதிநிதியாக எல்லாக் கர்மங்களிலும்


ஈடுபடச் சொல்கிறார். எதுவுமே நமக்காகச் செய்வதில்லை, எந்த லாப
நஷ்டமுமே தனிப்பட்ட முறையில் நமக்கில்லை இறைவனுக்காக, அவன்
பிரதிநிதியாக இயங்குகிறோம் என்றால் நான் என்பது மறைந்து போய் நம்மில்
இறை குடிகொண்டு விடும்.

அதுவும் முடியவில்லை என்றால் எந்தப் பலனிலும் பற்று வைக்காமல் விருப்பு


வெறுப்பு இல்லாமல் கர்ம யோக முறைப்படி நமக்கு விதிக்கப்பட்டிருக்கும்
கடமைகளைச் செய்ய பகவான் உபதேசிக்கிறார். அப்படிச் செய்யும் போதும்
இறைநிலையில் இருப்பவர்களாகி விடுவோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லியிருக்கும் இந்த வழிகளுக்கு இராமாயணத்தின்


கதாபாத்திரங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.

இறைவனையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, மனம், புத்தி எல்லாம்


அவனிடமே வைத்து வாழும் நிலைக்கு இலக்குவன் ஒரு நல்ல உதாரணம்.
அவனுக்கென்று எதுவும் இல்லை. எல்லாம் இராமனே என்று வேறு எந்த
சிந்தனையும் இல்லாமல் இராமனைப் பின் தொடர்ந்து நிழலாக வாழ்ந்தவன்
அவன்.

இறைவனுக்காக செயல் புரிபவன், இறைவனின் பிரதிநிதியாகச்


செயல்புரிபவன் என்கிற நிலைக்கு பரதன் சிறந்த உதாரணம். இராமன்
கட்டளைப்படி இராமனுக்காக ஆட்சி செய்து வாழ்ந்தவன் பரதன். இராமனின்
பாதுகையை அரியணையில் வைத்து, இராமனின் பெயரில் ஆட்சி செய்தவன்.
அரசன் அவனல்ல,
ஆட்சியும் அவனுடையதல்ல. எல்லாம் இராமனுக்காக என்று வாழ்ந்தவன்
அவன்.

விருப்பு வெறுப்பு இல்லாமல், பலனில் பற்று வைக்காமல் கடமையைச்


செய்து வாழும் நிலைக்கு ஜனகரை உதாரணம் சொல்லலாம். இங்கு
இறைவன் கூடக் கணக்கில் இல்லை. விதிக்கப்பட்டிருக்கும் கடமையை,
விருப்பு வெறுப்பின்றி சரியாக, சிறப்பாக, தர்மநெறிப்படி ஆட்சி செய்த
ஜனகரும் இராமனைச் சாராமல் இருந்த போதிலும் இறைநிலை பெற்றவர்
தான்.

பகவான் சொன்ன இந்த வழிகளை ஆராய்ந்தோமானால் அவை “நான், எனது”


என்ற எண்ணம் மேலோங்காத நிலைகள் என்பது புரியும். நான், எனது, என்ற
நிலைகள் இருக்கும் வரை தனிமனிதனே வெளிப்படுவான். அவை போய்
விடும் போது தவறுகளுக்கோ, குறைபாடுகளுக்கோ வாய்ப்பில்லை.
இறைவனை நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அந்தத் தூய
நிலையில் இறைவன் குடி கொண்டிருப்பான், இறைநிலை கைகூடும்
என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

50.

இறைவனுக்குப்
பிரியமானவர் யார்?

பகவத்கீ தையின் முக்கிய நோக்கமும் கருப்பொருளும் மனிதனை


மேல்நிலைக்கு உயர்த்துவதும் அந்த நிலையிலிருந்து செயல்பட
ஊக்குவிப்பதும் தான். அதைப் பல இடங்களிலும் பல விதங்களிலும் சொல்ல
பகவானுக்குச் சலிப்பில்லை. சாங்கிய யோகமாகட்டும், கர்ம யோகமாகட்டும்,
ஞான யோகமாகட்டும், பக்தி யோகமாகட்டும் அந்த உச்சக்கட்ட உயர்ந்த
மனிதனைச் சுட்டிக் காட்ட பகவான் தயங்கவில்லை.

என்ன செய்கிறாய் என்பது, நீ என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே


உயர்வாகவோ, தாழ்வாகவோ அமைகிறது. அதனால் நான் என்ன செய்ய
வேண்டும் என்ற கேள்விக்கு முன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியை
மனிதன் கேட்டுக் கொள்வது முக்கியம். எப்படி இருக்க வேண்டும் என்று
அறிந்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடமிருக்காது. நீ
உயர்ந்திருக்கும் நிலையே உன்னை என்ன செய்ய வேண்டும் என்பதையும்
எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

அதனால் பக்தி யோகத்தில் கடைசியாக பகவான் தனக்குப் பிரியமானவர் எந்த


விதமான பக்தன் என்று விவரிக்கும் விதத்திலும் என்னையே வணங்கி வரும்
பக்தனாக இரு என்று வெறும் வணக்கத்துக்கு முக்கியத்துவம் தராமல்
இப்படிக் கூறுகிறார் :

"எல்லா உயிரினங்களிடமும் விரோதம் கொள்ளாமல் அன்பு கொண்டவனும்,


நான், என்னுடையது என்ற மமகார அகங்காரமற்றவனும், இன்ப
துன்பங்களைச் சமமாகக் கருதுபவனும், பொறுமையுள்ளவனும், எப்போதும்
திருப்தியாக இருப்பவனும், யோகியும், மனத்தை அடக்கியவனும், அசையாத
உறுதியுடன் மனத்தையும், புத்தியையும் என்னிடமே அர்ப்பித்தவனாய்,
என்னிடம் பக்தி கொண்டிருப்பவன் எனக்குப் பிரியமானவன்."

"எவனால் உலகம் பாதிக்கப்படுவதில்லையோ, எவன் உலகத்தாலும்


பாதிக்கப்படுவதில்லையோ, எவன் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கிளர்ச்சி
முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்."

"ஆசையற்றவனும், தூய்மையானவனும்,, பிறவிப்பயனை அறிந்தவனும்,


நடுநிலையானவனும், வருத்தமில்லாதவனும்,
செயல்களனைத்திலும் ‘நான் செய்கிறேன்’ என்னும் கர்வத்தை
நீக்கியவனுமாகிய பக்தன் எனக்குப் பிரியமானவன்."

"எவன் நண்பன்-பகைவன், மதிப்பு-அவமதிப்பு, குளிர்-வெப்பம், சுகம்-துக்கம்


என்ற இரட்டைகளில் சம நோக்கு உடையவனும், புகழ்ச்சி-இகழ்ச்சிகளை
ஒன்றாகக் கருதுபவனும், மௌனமானவனும், கிடைத்ததில் திருப்தி
அடைபவனும், வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றில்லாதவனும், நிலைத்த
புத்தியுடையவனுமாக இருக்கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்."

"நான் சொன்ன அமிர்தத்திற்கு ஒப்பான தர்மத்தை யார் சிரத்தையுடன்


அனுஷ்டிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்."

கிட்டத்தட்ட எல்லா வர்ணனைகளும் இதற்கு முந்திய யோகங்களில் சொன்ன


வர்ணனைகள் தான். ஆசிரியர் முக்கியமான பாடத்தைத் தன் மாணவனின்
மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க பல முறை சொல்வது போல்
ஸ்ரீகிருஷ்ணரும் இதைச் சொல்கிறார்.

அன்பு, அகங்காரமின்மை, பொறுமை திருப்தி, மனதை அடக்கிய நிலை,


அசையாத மன உறுதி முதலானவை எல்லாம் எந்தவொரு உயர்வுக்கும்
தேவையானவை. இவை இல்லாமல் வெற்றி இல்லை. இவை இல்லாமல்
நிம்மதியில்லை. இவை இல்லாமல் ஆன்மீகமில்லை. இந்தத் தன்மைகளைக்
கொண்டிருக்கும் பக்தன் தனக்குப் பிரியமானவன் என்று சொல்லும் பகவான்
தன்னுடைய ஆசிகள் இந்தத் தன்மையுடையவர்களுக்கு இருக்கும் என்பதையும்
சொல்லாமல் சொல்கிறார்.

இந்த வர்ணனைகளில் திருப்தி இரண்டு சுலோகங்களில் சொல்லப்படுகிறது.


வாழ்க்கையில் குற்றம் கண்டுபிடித்தே அதிருப்தியுடன் இருக்கும் மனிதர்கள்
ஏராளம். நல்லது மட்டுமே நடக்க வேண்டும், அதுவும் தொடர்ச்சியாகத் தனக்கு
நடந்து கொண்டேயிருக்க வேண்டும், இடைவெளிகளோ, எதிர்மறையோ
இதில் இருந்துவிடக்கூடாது என்று ஆசைப்படும் மனிதன் நிரந்தர
துக்கத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்பவனாகிறான். எதிர்பார்த்தது
ஒன்று நடந்தவுடனேயே அற்ப நேரத்துக்குத் திருப்திப்படும் மனிதனுடைய
மனம் அடுத்த எதிர்பார்ப்பை உடனடியாக ஏற்படுத்திக் கொள்கிறது. அதுவும்
முடிந்தால் இன்னொன்று தயாராகும். வாழ்க்கை கூட ஒரு நாள் முடிவுக்கு
வரும். அந்த முடிவு வரை இந்த எதிர்பார்ப்புகளுக்கு முடிவு வராது.

சொற்ப காலத்திற்கு நாம் வந்து போகும் இடம் இவ்வுலகம். இங்கு என்ன


கிடைத்தாலும் போகும் போது எடுத்துக் கொண்டு போக முடியாது. பெற்றது
எல்லாம் விட்டுப் போவதற்கே என்ற நிலை இருக்கையில் என்ன கிடைத்தால்
என்ன, எத்தனை கிடைத்தால் என்ன? வெறும் கையுடன் வந்த நமக்குக்
கிடைத்ததெல்லாம் லாபமே அல்லவா? பெறுவது குறைவாய் இருந்தால்
என்ன, கடைசியில் இழப்பதும் குறைவாகவே அல்லவா இருக்கும். அதனால்
இருப்பதில் திருப்தியாக இரு. கிடைத்ததில் திருப்தியாக இரு என்கிறது
பகவத்கீ தை.

என்னுடையது என்று எதையும் நினைக்காதே. செல்வங்கள் மட்டுமல்ல,


உறவுகள், திறமைகள், சௌகரியங்கள் எல்லாம் இங்கு பெற்றவையே. இந்த
வாழ்க்கைச் சுற்றுலா முடிவடைகையில் எல்லாம் கழற்றி விட்டுப் போக
வேண்டியவையே.

புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டிற்கும் கூட அதிக முக்கியத்துவம் கொடுத்தே நாம்


அமைதியிழக்கிறோம். புகழும் இகழும் யாரும் முழுவதுமாகப் புரிந்து
கொண்டு அடுத்தவர்களுக்குத் தருவதில்லை. அவரவர் நிலைகளையும்,
அவரவர் தேவைகளையும் வைத்தே புகழ்கிறார்கள் அல்லது இகழ்கிறார்கள்.
அதுவும் ஒருவரிடம் யாரும் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது. இன்று
புகழ்ந்தவர் நாளை இகழலாம். அதனால் அந்தப் புகழுக்கு இன்று மகிழ்ந்தால்
நாளை இகழும் போது வருத்தப்பட நேரிடும். நம் மகிழ்ச்சியையும், நம்
துக்கத்தையும் நாம் ஏன் அடுத்தவரிடம் ஒப்படைக்க வேண்டும்?

இதையெல்லாம் சிந்திக்க வேண்டியவையே அல்லவா? இந்த வர்ணனைகளை


அமிர்தத்திற்கு ஒப்பான தர்மம் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். உயர்நிலையில் வாழ
வைக்கும் அமிர்தமாகிய இந்தத் தர்மத்தை அறிவது பெரிதல்ல. சிரத்தையுடன்
அனுஷ்டிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று பகவான் சொல்கிறார்.
அப்போது தான் அறிந்தது பூர்த்தியாகும். அறிந்ததில் பலனும் அடைவோம்.
அப்படி அறிந்து, பின்பற்றி, உயரும் மனிதர்களே இறைவனுக்குப்
பிரியமானவர்கள் என்று சொல்லும் இந்தத் தகவலுடன் கீ தையின்
பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவடைகிறது.

51.

அனைத்திலும்
அந்தர்மியாய்
ஆண்டவன் !

பகவத் கீ தையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்‌ஷேத்ர க்‌


ஷேத்ரக்ஞ விபாக
யோகத்தில் நம்மையும், நாம் காணும் உலகத்தையும் க்‌ஷேத்திரம்,
க்‌ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் கலவையாக ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.
நம் தேகம் க்‌
ஷேத்ரம். தேகத்தை இயக்கும் ஆத்மா க்‌
ஷேத்ரக்ஞன். உலகின்
வஸ்துக்கள் எல்லாம் க்‌ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு
க்‌ஷேத்ரக்ஞன். இரண்டும் இணைவதாலேயே எல்லா இயக்கங்களும், எல்லா
நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும் சாத்தியமாகின்றன.

உடல் இருக்கின்றது. அதனுள் ஆத்மா நுழைந்து உயிர் பெறாவிட்டால் உடல்


ஜடம் தான். அதனால் எந்த இயக்கமும் இல்லை. எந்தப் பயனும் இல்லை.
கைகால்கள் இருக்கின்றன. ஆனால் அவை தானாக இயங்குவதில்லை.
உயிரும் உணர்வுமாய் கலந்த நாம் இயக்கினால் தான் அந்த
எண்ணங்களுக்கேற்ற இயக்கமாக அசைவுகள், செயல்கள் எல்லாம்
நிகழ்கின்றன. நாம் காணும் உலகமும் அப்படித்தான். அனைத்து
வஸ்துக்களும் அவற்றுக்குள் இருக்கும் மகாசக்தியாலேயே
இயக்கப்படுகின்றன. உள்ளிருக்கும் சக்தி தேகத்திலிருந்து விலகி விட்டால்
வாழ்க்கை முடிந்து விடுகிறது. அப்படியே வஸ்துக்களிலிருந்து சக்தி விலகி
விடுமானால் இயக்கமும் நின்று விடுகிறது.

இந்தச் சொற்களை விளக்கிய பின் ஸ்ரீகிருஷ்ணர் ”எல்லா உடல்களிலும்


இருக்கும் க்‌
ஷேத்ரக்ஞன் நானே” என்று அறிவிக்கிறார். நானும், நீயும், நாம்
காணும் மனிதர்களும் தனித்தனியாக உணரப்பட்டு, நம்பப்பட்டு நம் மாயா
உலகம் நடந்து கொண்டிருக்கையில் மாயையின் திரையின் பின் அனைத்தும்
நானே என்று இறைவனே எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதை நாம்
உணரும் போது தனிப்பட்ட “நானின்” பாரங்களும், துக்கங்களும் நமக்கு
உடனடியாக மறைந்து விடுகின்றன. இந்த உணர்தலே ஞானம். உணர
மறுத்தலும், உணர மறத்தலுமே அஞ்ஞானம்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார் :

"கர்வமின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருவுக்கு சேவை


செய்தல், தூய்மை, அசையாநிலை, சுயகட்டுப்பாடு, இந்திரியங்களுக்குரிய
விஷயங்களில் பற்றில்லாமை, அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு,
வியாதி, இவைகளில் இருக்கும் துக்கத்தையும், குறைபாடுகளையும் சிந்தித்து
அறிந்திருத்தல், மகன், மனைவி, வடு ீ முதலியவற்றில் பற்றில்லாமை,
என்னுடையது என்ற எண்ணமில்லாமை, விருப்பமானவை,
விருப்பமில்லாதவை இரண்டை அடையும் போதும் சம நிலையிலிருத்தல்,
மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனத்தால் கொண்ட
பிறழாத பக்தி, தனிமையில் இருத்தல், உலகியலில் ஈடுபாடு கொண்ட
மனிதக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை, ஆத்மஞானத்தில்
நிலைத்திருத்தல் இவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு மாறுபட்டதெல்லாம் அஞ்ஞானம் ஆகும்."

கர்வம் என்பதே நம்மைத் தவிர இன்னொன்று இருக்கும் போது தான்


சாத்தியமாகிறது. ஒப்பிட இன்னொன்று இல்லாத போது, கர்வத்தை
ஏற்படுத்தும் படியாக, நம்மை விடக் குறைந்தது ஒன்று இல்லாத போது கர்வம்
எப்படி எழும்? பகட்டின்மையும் அதே போல் தான். பகட்டை யாருக்குக்
காட்டுவது? அஹிம்சையும் அப்படியே சாத்தியமில்லை. நாம் ஹிம்சை
ஏற்படுத்தும் உயிர்களிலும் நம்மையே காண முடிந்தால், அடிப்படையில் அந்த
உயிரும், நாமும் ஒன்றே என்ற புரிதல் இருந்தால் அஹிம்சை தானாக நம்
இயல்பாகி விடும் அல்லவா? பொறுமை நேர்மையும் இதே வழிகளில் நமக்கு
சாத்தியமாகி விடும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.


அழகும் வலிமையும் கொண்டவர்களாய் அகங்காரம் கொள்பவர்கள் கூட மூப்பு
வியாதி என்று காலத்தின் ஓட்டத்தால் பாதிக்கப்பட வேண்டி வருகிறது.
அகங்காரம் அர்த்தமில்லாதது என்று உணர்தல் நிகழத்தான் செய்கிறது. நான்,
எனது மனைவி அல்லது கணவன், என் பிள்ளை என்ற மாயா பாசங்களும்
உறவுகளை அப்படி அப்படியே எடுத்துக் கொள்கையில் துக்கங்களின்
ஊற்றாகவே அமைகிறது. ஆனால் அத்தனைக்கும் பின் எல்லாம் ஒன்றே
என்று உணரும் போது அந்தத் துக்கங்களும் அர்த்தமில்லாதவை என்று உணர
முடிகிறது.

இந்த சுலோகங்களில் மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய


மனம் என்ற வாசகம் மிக முக்கியமானது. மேலோட்டமாகப் பார்க்கையில்
வேறெதையும் நினைக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் மீ தே செலுத்தும் மனம் என்று
தோன்றும். ஆனால் முதலில் ’எல்லா உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன்
நான்” என்று சொல்லி விட்டு இதைச் சொன்னதால் அப்படி ’எல்லா
உயிர்களிலும் அந்தர்மியாக இருக்கின்றவன் ஆன ஆண்டவனிடமே
செலுத்திய மனம்’ என்று சரியாக எடுத்துக் கொண்டால் அது மிக உயர்ந்த
ஞான வாக்கியமாக நாம் உணர முடியும்.

நான், இன்னொருவன், இன்னொருத்தி, இன்னொரு உயிர் என்று


மற்றொன்றாய் நினைக்காமல் எல்லாமே அவன் அல்லது எல்லாமே நாம்
என்ற உணர்வுடன் பார்க்கையில் உலகம் அன்பு மயமாகவும், ஆனந்த
மயமாகவும் மாறிவிடும். அப்படி நிகழ்வதே ஞானம். அப்படி உணர்வதே
ஞானம். மாறானது எல்லாமே அஞ்ஞானம் தான்.

இந்தச் சுலோகங்களில் தனிமை குறித்தும் ஜனக்கூட்டத்தில் இருக்க


விருப்பமில்லாமை குறித்தும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது சிலருக்கு துறவை
வலியுறுத்துவது போலவோ,
மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு எதிரானது போலவோ தோன்றலாம்.
ஆனால் சரியாகச் சிந்தித்தால் அது உண்மையல்ல என்பது புரியும்.

ஞானம் என்றுமே கூட்டமாக இருக்கையில் ஒட்டு மொத்தமாய்


அனைவருக்கும் வருவதில்லை. அதுவும் உலகியலில் ஈடுபாடு கொண்ட
கூட்டத்தில் அது கண்டிப்பாக வந்து சேர்வதில்லை. கூட்டங்களில்
இருக்கையில் தனி மனித சிந்தனைகள் மங்கிப் போய் விடுகின்றன.
கூட்டத்தின் பிரதான உணர்ச்சிகளே தனி மனிதர்களையும் ஆக்கிரமிக்க
ஆரம்பித்து விடுகின்றன. உணர்ச்சிகள் பிரதானமாக இருக்கையில் ஞானம்
மேலோங்க வாய்ப்பே இல்லை. இதை ஏதாவது கூட்டங்களுக்குச் சென்று
தள்ளியிருந்து கூர்ந்து கவனித்தால் நன்றாக விளங்கும்.

உண்மையான ஞானம் கூட்டங்களுக்குள் இருக்கையிலும், கூச்சல்களுக்கு


மத்தியில் இருக்கையிலும் சாத்தியமில்லை. இன்னும் சொல்லப் போனால்
மனிதன் தனக்குள்ளேயே பலர் பற்றிய சிந்தனைகளிலும், பல சிந்தனைகளின்
கூச்சல்களிலும் இருக்கும் போது கூட ஞானத்தை எட்ட முடிவதில்லை.
தனிமையில், ஆத்ம விசாரத்தில் நிலைக்கையில் மட்டுமே ஞானத்திற்கான
சூழலே உருவாகிறது. அதனால் தான் தனிமையின் உயர்வையும், உலகியல்
எண்ணங்கள் மேலோங்கி இருக்கும் கூட்டங்களிலிருந்து தன்னிலை இழக்க
விருப்பமில்லாததன் அவசியத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

52.

உண்டு அல்லது இல்லை


என்னும் புதிரில்
இறைவன் !
இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி வேதகாலங்களிலேயே
கேட்கப்பட்டிருக்கிறது. அக்காலங்களிலேயே நிறைய விவாதங்கள்
நடந்திருக்கின்றன. நாத்திக ரிஷிகளும் அக்காலத்தில் இருந்து தங்கள் தரப்பு
வாதங்களை விவரித்திருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு வியாசரும்
பகவத்கீ தையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மூலம் மிக
நுட்பமான பதிலைச் சொல்லியிருக்கிறார் :

"எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிவதால் அமிர்தம் பருகியது போல்


இறவாநிலை அடைய முடியுமோ, அதை
விளக்குகிறேன். அந்த ஆதியற்ற பரம்பொருளை உண்டு என்றோ இல்லை
என்றோ கூற முடியாது."

ஆதியற்ற பரம்பொருளைச் சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியாது. அது


ஆத்மார்த்தமாய் உள்ளுணர்வில் உணரும் விஷயம். நம்பிக்கை அற்றவர்கள்
முன் எத்தனை வாதங்கள் வைத்தாலும் அவர்கள் அவற்றில் நிச்சயமாய் சில
குறைபாடுகளையும் பலவனங்களையும்
ீ கூறுவார்கள். சான்றுகளால் எட்ட
முடியாதவன் இறைவனை இல்லை என்பதையும் சான்றுகளால் நிரூபிக்க
முடியாது. எந்தப் பரம்பொருளால், எந்த மகாசக்தியால் இந்தப் பிரபஞ்சம்
இயங்கி வருகிறதோ அதை இல்லவே இல்லை என்று சொல்லவும்
சான்றுகளும் வாதங்களும் போதாது. அனைத்தையும் இயக்கும் ஒரு சக்தியை
மறுக்கவோ, மறுத்த பின் எப்படி பிரபஞ்சம் இயங்குகிறது என்பதை
விளக்கவோ அவர்களாலும் முடியாது. அதனால் அவரவர் புரிதலின்படியும்,
விருப்பத்தின்படியும் முடிவில் அவரவர் "உண்டு அல்லது இல்லை" என்ற
நிலைப்பாட்டில் நிற்கலாமே ஒழிய சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதியாய்
விளக்கி மற்றவர்களுக்குத் தெளிய வைப்பது அறிவுக்கு முடிந்த வேலை
இல்லை.

விரலால் நிலவைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் நிலவு விரல் நுனியில்


இல்லை. கையால் எட்டும் தூரத்திலும் இல்லை. விரல் நுனியிலிருந்து வானில்
மின்னிக் கொண்டிருக்கும் நிலவிற்குப் பார்வையைத் திருப்ப
வேண்டுமல்லவா? அப்படி இறைவன் இருப்பதை ஒருவன் குறிப்பால்
உணர்த்தலாம். குறிப்பால் உணர்த்தியதை வார்த்தைகளிலேயே நின்று
கொண்டிருப்பவனால் உணர முடியாது. ஏனென்றால் வார்த்தைகளுக்கு
அப்பாற்பட்டவன் இறைவன். விரல்நுனியிலிருந்து நிலவிற்கு உள்ள தூரமும்,
வார்த்தைகளிலிருந்து இறைவனுக்கு இருக்கும் தூரமும் மிக மிக அதிகம்
அல்லவா?

அதனால் தான் மகாநிர்வாணம் அடைந்து அனைத்து ஞானத்தையும் பெற்ற


கௌதமபுத்தரும் அந்தக் கேள்விக்கு விடை சொல்ல மறுத்து விட்டதாகச்
சொல்கிறார்கள். வண்
ீ விவாதங்களில் அவர் ஈடுபட விரும்பவில்லை போல்
இருக்கிறது.

ஏனிந்த சிக்கல் என்பதை அடுத்து ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார் :

"அது எல்லா இடங்களிலும், கைகளும், கால்களும், கண்களும், தலைகளும்,


முகங்களும், காதுகளும் உடையது.. அது
உலகம் அனைத்திலும் வியாபித்து இருக்கிறது. புலன்கள் இல்லாமலேயே
புலன்நுகர்ப் பொருட்களை அறிவது. .எதையும் சார்ந்து நிற்காமல்
எல்லாவற்றையும் தாங்கக் கூடியது. குணங்கள் இல்லாமலேயே குணங்களை
அனுபவிப்பது."

பரம்பொருளுக்கு எங்கும் கண்கள் உண்டு. அவர் பார்க்க முடியாத இடம்


இல்லை. எங்கும் காதுகள் உண்டு. யார் எங்கிருந்து பிரார்த்தித்தாலும்
அவருக்குக் கேட்கும். தோற்றமே இல்லாமல் இருந்தும் எங்கும் அது
வியாபித்திருக்கிறது. புலன்கள் இல்லாமல் அனைத்தையும் புலன்கள்
இருந்தால் எப்படி அறிய முடியுமோ அப்படி அது அறிகிறது. அதையும் சார்ந்து
இல்லை ஆனால் எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் இல்லாமல்
குணங்களை அனுபவிக்கிறது.

யோசிக்கையில் இது என்ன முரண்பாடு என்று தோன்றுகிறதல்லவா?


கண்களும், காதுகளும் எப்படி எல்லா இடங்களிலும் இருக்க முடியும்?
புலன்கள் இல்லாமல் அதன்வழி விஷயங்களை எப்படி அறிய முடியும்? இதை
எல்லாம் அறிவு ஒத்துக் கொள்ள மறுக்கிறதல்லவா?

ஆனால் விஞ்ஞானம் இதை உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறது. மரணம்


வரை சென்று இறந்து விட்டதாக மருத்துவர்கள் கருதி மறுபடியும் உயிர்
பிழைத்த மனிதர்களின் மரண விளிம்பு அனுபவங்களை ஆராய்ந்த
விஞ்ஞானிகள் அந்த இறந்து பிழைத்த சில நிமிடங்களில் அவர்கள் எல்லாம்
காணவும், கேட்கவும் முடிந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில்
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களில் சிலர் பிறவிக்
குருடர்கள். வாழ்ந்த நாட்களில் கூட எதையும் காண முடியாதவர்கள்.
அவர்களுக்கு உடலை விட்டுப் பிரியும் நேரத்தில் புலன்கள் இல்லாமலேயே
அனைத்தையும் அறிய முடிந்திருக்கிறது.

சார்ந்திராமல் தாங்கக் கூடியது என்பது சாதாரண விஷயமல்ல. அது


மனிதர்களுக்குச் சுலபமாய் முடியாதது. பெற்றோர் ஒரு காலத்தில்
பிள்ளைகளைத் தாங்குகிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பிள்ளைகளைச்
சார்ந்திருக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றையும் தாங்கி இருந்தும்
எதையுமே சார்ந்திராமல் இருப்பது அந்தப் பரம்பொருள்
ஒன்றுக்கே சாத்தியம். அந்த விசேஷ குணத்தையும் இங்கே கீ தை சுட்டிக்
காட்டுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து கூறுகிறார் :

"அது எல்லா உயிர்களின் உள்ளும், புறமும் நிறைந்திருக்கிறது. அசைவன,


அசையாதவற்றின் வடிவிலும் அதுவே உள்ளது. மிக நுட்பமாக இருப்பதால்
அறிய முடியாதது. மிக அருகிலும் மிக தூரத்திலும் இருப்பது அதுவே."

"அறிய வேண்டியதான அந்தப் பரப்பிரம்மம் பிரிவுபடாமல் இருந்தாலும்


உயிர்கள் அனைத்திலும் பிரிந்திருப்பது போலத் தோன்றுகிறது. அது
உயிர்களைப் பாதுகாக்கிறது. அதுவே அழிக்கவும் செய்கிறது. அதுவே
படைக்கவும் செய்கிறது."
உள்ளும் புறமும் நிறைந்திருப்பது என்பதற்கு கடலின் அலைகளையும்,
பனிக்கட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். அலைக்கு உள்ளேயும்,
வெளியேயும் இருப்பது கடலே அல்லவா? அதே பனிக்கட்டிக்கு உள்ளேயும்,
வெளியேயும் இருப்பது கடல்நீரே அல்லவா?

அடுத்ததாக பரம்பொருள் மிகமிக நுட்பமானது. நுட்பமான பொருள்களை நாம்


புறக்கண்களால் காண முடிவதில்லை. செல்கள், பாக்டீரியாக்கள் ஆகியவை
எல்லாம் விஞ்ஞானக்கருவிகள் மூலமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.
அப்படி இருக்கையில் நுட்பத்தில் நுட்பமான பரம் பொருளை புறக்கண்களால்
நாம் காண முடியுமா? பாக்டீரியாக்களைக் காண சக்தி வாய்ந்த விசேஷக்
கருவிகள் தேவைப்படுவது போல பரம்பொருளைக் காண ஞானம் மிக்க
இதயம் தேவைப்படுகிறது. எல்லா இடங்களிலும் இருப்பதால் பரம்பொருள்
மிக மிக அருகில் இருப்பதும், மிக மிகத் தொலைவில் இருப்பதும்
சாத்தியமாகிறது. இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் நம்பிக்கை
இருப்பவர்க்கு பரம்பொருள் மிகமிக அருகில் இருக்கிறது. அதனால் உணர
முடிகிறது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வெகுதொலைவில் இருக்கிறது
அதனால் அதை உணர முடியாமல் போவதால் அது இல்லவே இல்லை என்று
சாதிக்கிறார்கள். அந்த வகையிலும் இரண்டும் உண்மையே.

பிரிந்திருப்பது போலத் தோன்றினாலும் பிரிந்திராத தன்மை பரம்பொருளின்


இன்னொரு தனித்தன்மை. உதாரணத்திற்கு
வெற்றிடத்தைச் சொல்லலாம். மண்பாத்திரங்கள் பல இருந்தாலும்,
தனித்தனியாக பாத்திரங்களின் உள்ளே வெற்றிடம் இருந்தாலும்
மண்பாத்திரங்கள் உடையும் போது மீ ண்டும் வியாபித்திருப்பது வெற்றிடமே
அல்லவா? மண்பாண்டத்தில் இருந்து பேரண்டம் வரை அதுவே
நிறைந்திருக்கிறதல்லவா? அந்தப் பரம்பொருள் காக்கிறது, அழிக்கிறது,
மீ ண்டும் படைக்கிறது, காக்கிறது….. இப்படியாக பிரபஞ்சம் இயங்குகிறது.

அந்தப் பரப்பிரம்மம் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது. மாயைக்கு


அப்பாற்பட்டது. அறியப்பட வேண்டியதும், தத்துவ ஞானத்தினால் அடையத்
தக்கதும் அதுவே. எலோருடைய இதயத்திலும் அதுவே விசேஷமாக
இருக்கிறது.

அப்படிப்பட்ட இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவன். விளக்கு,


சந்திரன், சூரியன், மின்னல் என்று ஒளியைத் தருகிற அத்தனைக்கும்
ஒளியைத் தருவது அந்தப் பரம்பொருளே. நாம் அறிய வேண்டியதும் அந்தப்
பரம்பொருளையே. அதை அறிந்த பின் வேறெதையும் அறிய
வேண்டியதில்லை. ஏனென்றால் பரம்பொருளை அறிந்தால்
மற்றவை எல்லாம் தானாக விளங்கி விடும். அந்த அறிய வேண்டிய
பரம்பொருளை எங்கே காண்பது என்கிறீர்களா? அதைக் காண அங்குமிங்கும்
அலைய வேண்டாம். அது உங்கள் இதயத்தில், ஆழத்திலும் ஆழத்தில்,
விசேஷமாக வற்றிருக்கிறது.
ீ இதயத்தின் உள்ளே போங்கள். அந்த விசேஷப்
பரம்பொருளைக் கண்டிப்பாகக் காண்பீர்கள்.

53.

நாம் பிறவிகளில் சிக்கித்


தவிப்பது ஏன்?
தப்பிப்பது எப்படி?

பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரர் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று


கூறுவது போல திரும்பத் திரும்பப் பிறந்தும், இறந்தும் எல்லையில்லா இன்ப
துன்ப அலைகளில் சிக்கி மனிதன் அலைக்கழிக்கப் படுகிறான். ஒரேயடியாக
இதெல்லாம் போதும் என்று அவனுக்குத் தோன்றுவதில்லை. காரணம்
துன்பங்கள் மட்டுமல்லாமல் இடையிடையில் இன்பங்களும் தலையைக்
காட்டுகின்றன. விட்டால் இரண்டையும் தான் விட்டொழிக்க வேண்டும். சராசரி
மனிதனோ துன்பங்களை மட்டும் தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். இன்பங்கள்
அவனுக்குத் தேவைப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் வேண்டும்
என்று ஆசைப்படுவது எவ்வளவு அறியாமையோ அதற்கிணையான
அறியாமை இன்பங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது. ஆனால் மாயை மனிதனை ஆட்டிப் படைக்கையில் அப்படி
ஆசைப்படுவதில் எதிலும் தவறு இருப்பதாக அவனுக்குத் தெரிவதில்லை.

பிறப்பு இறப்பு என்னும் இந்தச் சக்கர வட்டத்திலிருந்து ஒருவன் விடுபடுவது


எப்படி? இந்தக் கேள்விக்கு கீ தையின் 13 ஆம் அத்தியாயத்தில் அடுத்து வரும்
சுலோகங்களில் பதில் அளிக்கிறார் :

"பிரகிருதி, புருஷன் (ஜீவாத்மா) இவை இரண்டுமே அநாதி என்று அறிவாயாக.


வேறுபாடுகளும், குணங்களும் பிரகிருதியிலிருந்தே உண்டானவை என்று
அறிந்து கொள்."

"சரீரத்தையும், புலன்களையும் செயல்படச் செய்வதற்கு பிரகிருதியே


காரணம். சுகதுக்கங்களை அனுபவிக்கச் செய்வதற்குக் காரணம் புருஷனே
(ஜீவாத்மா). புருஷன் (ஜீவாத்மா) பிரகிருதியில் நின்று பிரகிருதியால்
உண்டாகும் குணங்களை அனுபவிக்கிறான். அந்தக் குணங்களில் அவன்
வைக்கும் பற்றுதலே நல்லதும், தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்குக்
காரணமாகிறது."

"இந்த தேகத்தினுள் உள்ள உயர்ந்த புருஷனை, அருகிலிருந்து பார்க்கும் சாட்சி,


அனுமதியளிப்பவன், தாங்குபவன், ஆள்பவன், பரமாத்மா என்று பலவிதமாகச்
சொல்கிறார்கள்."

"எவனொருவன், புருஷனையும், பிரகிருதியையும், குணங்களையும் நன்றாகத்


தெரிந்து கொள்கிறானோ அவன் எந்த நிலையிலிருந்தாலும் மறுபடியும்
பிறப்பதில்லை."

முன்பே நம் தேகம் க்‌ ஷேத்ரம் என்றும், நம் தேகத்தை இயக்கும் ஆத்மா
க்‌ஷேத்ரக்ஞன் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம். உலகின்
வஸ்துக்கள் எல்லாம் க்‌ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு
க்‌ஷேத்ரக்ஞன். இரண்டும் இணைவதாலேயே எல்லா இயக்கங்களும், எல்லா
நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும் சாத்தியமாகின்றன என்றும்
பார்த்தோம். இந்தச் சுலோகங்களில் அதே க்‌ ஷேத்ரம், க்‌
ஷேத்ரக்ஞன்
பதங்களுக்குப் பதிலாக
பிரகிருதி, புருஷன் என்ற பதங்களைப் பயன்படுத்துகிறார்.
குணங்களும், பற்றுக்களும் இல்லாத ஆத்மா பிரகிருதியில் உள்ள
குணங்களைப் பெற்று அதைத் தன்னுடையதாக பாவித்து விருப்பு
வெறுப்புகளுக்கு ஆளாகி, நல்வினை, தீவினைகள் ஆற்றி அதன் பலனாக
அதற்கேற்ற பிறப்புகளை எடுக்கிறது. ஆத்மா தன்னுடைய இயல்பை மறந்து
வேறொன்றின் இயல்பைத் தனதாக்கிக் கொள்ளும் போது ஜீவாத்மாவாகச்
சொல்கிறோம்.

ஜீவாத்மாவின் பிரச்னையே உடலையும், உடல் சார்ந்த விஷயங்களையும்


தனதாகப் பாவிப்பது தான். இழக்கவோ, பெறவோ எதுவுமில்லாத ஆத்மா
ஜீவாத்மாவாகப் பாவித்துக் கொள்ளும் போது இழப்பதாகத் துக்கமடைகிறது.
பெறுவதாக மகிழ்ச்சி அடைகிறது. பல முறை கீ தையில் ஸ்ரீ கிருஷ்ணர்
குறிப்பிட்டது போல எதையாவது பெறுகையில் சந்தோஷப்பட்டால்
இழக்கையில் துக்கமடைவதைத் தவிர்க்க முடியாது அல்லவா? விருப்பு
வெறுப்புகளைச் சேர்த்துக் கொள்கையில் செயல்களும் அதற்கேற்றாற்போல்
அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட செயல்களைப்
புரிந்தபின் அதற்கேற்ற விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்த
விளைவுகள் முடிவதற்கு முன்பே மறுபடி பலப்பல வினைகள்
விதைக்கிறோம்.. விளைவுகள்…. விளைவுகள்…. விளைவுகள்…. அதற்கேற்ற
பிறப்புகள், இறப்புகள்.

ஆனால் எத்தனை தான் தனது இயல்பை மறந்து உடலையே தான் என்று


ஜீவாத்மா மயங்கினாலும், ஆத்மா அல்லது பரமாத்மா அவனுள்
அனைத்துக்கும் சாட்சியாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதன்
அனுமதி பெற்ற பின்னரே அனைத்தும் செய்யப்படுகின்றன. அணுவிலிருந்து
அண்டம் வரை அதுவே அனைத்தையும் தாங்குகிறது. அதுவே அனைத்தையும்
ஆண்டு கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட உயர்ந்த பரமாத்மாவின் அம்சமான ஜீவாத்மா தான் ஏற்படுத்திக்


கொண்டிருக்கும் அறியாமையால் பிறந்து, இறந்து, மறுபடி பிறந்து
அனுபவிக்கும் இந்தச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டுமானால் முதலில்
அறியாமையிலிருந்து தப்பிக்க வேண்டும். உண்மையை அறிந்து உணர்ந்து
அதில் நிலைக்க வேண்டும். பிரகிருதி அல்லது க்ஷேத்ரம், புருஷன் அல்லது
ஆத்மா, குணங்கள் தோன்றுகிற விதம், அதன் காரணம், அதன் விளைவுகள்
பற்றிய முழுமையான ஞானம் பெற வேண்டும்.

அந்த நிலைத்த ஞானம் பெற்று விட்டால், பிறந்து இறக்கும் உடலிலும்,


தோன்றி மறையும் குணங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்தல்
நின்று போகும். அது நின்று போனால் செயல்கள் புரிந்தாலும் அவை
கர்மயோகியின் விருப்பு வெறுப்பற்ற செயல்களாகவே இருக்கும். அதன்
பலன்களில் செயல்புரிபவனுக்குப் பாத்தியம் இல்லை. வினைப் பயன் இல்லாத
போது பிறவிகளில் சிக்கக் காரணம் இல்லாமல் போகிறது. பிறப்பு, இறப்புச்
சங்கிலி அறுந்து போகிறது. இப்படிக் கணிதக் கோட்பாடு போல வழிகளை
வரிசைப்படுத்தி வாழ்க்கைக் கணக்கிற்கு விடை கூறுகிறது பகவத் கீ தை.

54.

அறியாதவனும்
கடைத்தேற முடியும் !

பிறப்பு இறப்பு என்ற முடிவில்லாத சக்கரவட்டத்திலிருந்து விடுபட்டு


முக்தியடையும்
வழிகளை விளக்கிக் கொண்டு வந்த ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக் கூறுகிறார் :

"பரமாத்மாவைச் சில மனிதர்கள் தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால்


தியானத்தின் மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள். மற்றும் சிலர்,
ஞானயோகத்தின் மூலமாகவும், வேறு சிலர் கர்மயோகத்தின் மூலமாகவும்
கண்டடைகிறார்கள்."

"மற்றும் சிலர் இதையெல்லாம் அறியாமல், அறிந்த பிறரிடமிருந்து கேட்டு,


அதற்கேற்ப உபாசனை செய்கிறார்கள். அப்படிக் கேட்பதையே உயர்ந்ததாகக்
கொண்டவர்களும் பிறவிப் பெருங்கடலைத் கடக்கிறார்கள்."

பரமாத்மாவை உணர்வதற்கு தியானம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய


வழிகள் உதவி புரியும் என்று சொன்னதோடு நிற்காமல் இவை எவையுமே
அறியாதவர்களும் அறிந்தவர்களிடமிருந்து கேட்டு அந்த வழியிலேயே
உயர்ந்த முறையில் உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப்
பெருங்கடலைக் கடந்து விடலாம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

இது மிகவும் நுட்பமான பொருள் பொதிந்த சுலோகமாகும். தியானம்


அறிந்தவன். ஞானம் அறிந்தவன், கர்மயோகம் அறிந்தவன் எல்லாம் அறிந்த
காரணத்தினாலேயே பரம்பொருளை அடைந்து பிறவிப் பெருங்கடலைக்
கடந்து விடுவதில்லை. அறிந்ததை உள்ளூர உணர்ந்து, அதை அப்படியே
பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே எல்லாம் பயன் அளிக்கின்றன. அறிவால்
அறிந்து அதை உணர்வுக்கும், உள் மனதிற்கும், வாழ்க்கைக்கும் கொண்டு
வராதவன் அறிவுஜீவியாகவே இருந்தாலும் முட்டாளாகவே கருதப்படுவான்.

இதைத் திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா பேதையின் பேதையார் இல்."

உயர்நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டும், அவற்றை அடுத்தவர்களுக்கு


உபதேசம் செய்தும் அந்த உயர்வழிகளின்படி நடக்கத் தவறுபவனைப் போன்ற
முட்டாள் உலகத்தில் வேறில்லை என்பது வள்ளுவர் கூற்று. அதனால் அறிவது
முக்கியம் அல்ல. அறிந்தது வாழ்க்கை முறையாக மாற வேண்டும். அதன்
பின் தான் மனிதன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.

இதையே தான் ஸ்ரீகிருஷ்ணரும் சூட்சுமமாகச் சொல்கிறார். தியான முறைகள்


அறிந்திருப்பது பெரிதல்ல. தியானம் செய்து இறைவனை நுண்ணிய புத்தியால்
இதயத்தில் பார்க்க முடிவது தான் வெற்றி. ஞானம் பற்றியும், கர்மாவைப்
பற்றியும் அறிந்திருப்பது பெரிய விஷயமல்ல. அவை வாழ்க்கையின்
பகுதிகளாகும் போது தான் ஞான யோகமும், கர்ம யோகமுமாகின்றன. அதன்
பின் தான் பரமாத்மாவை அறிவது சாத்தியம். பிறப்பு இறப்பு சங்கிலித்
தொடரிலிருந்து தப்பிப்பது சாத்தியம்.
தியானமும், ஞானமும், கர்மாவைக் குறித்த விளக்கங்களும் ஒருவனுடைய
அறிவுக்கு எட்டவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவன் கடைத்தேற
வழியுண்டா என்றால் உண்டு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அறிந்த
சான்றோர்களிடம் கேட்டு அவர்கள் கூறிய படியே உயர்வழியில் நடந்து
உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபட
முடியும் என்கிறார் அவர்.

அதாவது, எந்த உயர்வழியையும் ஏன் எதற்கு என்று அறியாவிட்டாலும் எப்படி


என்பதை அறிந்தவர்களிடம் கேட்டு அப்படியே சிரத்தையாகப் பின்பற்றுபவன்
அறிந்து பின்பற்றி வாழ்பவர்களைப் போலவே பயன் அடைகிறான் என்கிறது
பகவத் கீ தை. மொத்தத்தில் அறிவதை விட அதிக முக்கியத்துவமும்,
மகத்துவமும். பின்பற்றுவதற்கே தரப்படுகிறது. இதை ஆன்மீ கத்தில்
நாட்டமுள்ள ஒவ்வொருவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொரு எளிய உதாரணத்தையும் இங்கு கூறலாம். ஒரு அற்புதமான இடம்


இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே நடந்தும் செல்லலாம்,
காரிலும் செல்லலாம், பஸ்ஸிலும் செல்லலாம், ரயிலிலும் செல்லலாம்,
விமானத்திலும் செல்லலாம் என்று வைத்துக் கொள்வோம். வழிகளை மிக
நன்றாக அறிந்தவர்களும், இந்த வாகன வசதிகளையும் நுட்பமாய்
தெரிந்தவர்களும், அதற்காகச் செலவு செய்யும் வசதியும் படைத்தவர்களும்
பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறிந்தும் அங்கே செல்லாமல்
இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொருவர் இருக்கிறார். அவர் எதையும் அறியாத தற்குறி. ஆனால்


அவருக்கு அங்கே போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதனால்
அறிந்த பலரிடம் போகும் வழி, வாகன வசதிகள் பற்றி அறிந்து கொண்டு
கஷ்டப்பட்டு அங்கே போய் விட்டும் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அந்த அறியாத மனிதரே அல்லவா அறிந்தவர்களைக் காட்டிலும்
சாதனையாளர். அவரே அல்லவா இலக்கை எட்டி இருக்கிறார். பயணத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பலர் உதவிகளைக் கேட்டுப் பெற்று
இருக்கலாம். ஆனால் அந்த இலக்கைப் பொறுத்தவரை அறிந்தவர்களை விட
அவரே சிறந்தவர், வெற்றியாளர் என்று அல்லவா நாம் கருத வேண்டும் !

பதிமூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"பரதசிரேஷ்டனே! எத்தனை வகை தாவர, விலங்கு வகைகள்


உண்டாகின்றனவோ அவை அனைத்தும் க்‌ ஷேத்திரம், க்‌
ஷேத்ரத்தக்ஞன்
இவ்விரண்டின் சேர்க்கையாலேயே உண்டானதென்று அறிவாயாக."

"எல்லா உயிர்களிலும் சமமாக நிற்பவனும், அழியும் பொருள்களில்


அழியாமல்
இருப்பவனுமான பரமேஸ்வரனைக் காண்பவனே உள்ளதை உள்ளபடி
அறிந்தவனாவான்."

"எல்லா உயிர்களிலும் சமமாக ஈஸ்வரன் அமர்ந்திருப்பதைக் கண்டவன்,


தனக்குத் தானே தீங்கிழைக்க மாட்டான். அதனால் அவன் உயர்ந்த கதியை
அடைகிறான்."
"இவ்வாறு க்‌ ஷேத்திரம் க்‌
ஷேத்திரக்ஞனுக்கு இடையே வேறுபாட்டையும்,
பிரகிருதி, பிரகிருதியின் செயல்களில் இருந்து விடுபடுவதையும் அவர்கள்
ஞானக்கண்ணால் தத்துவ ரீதியாக அறிகிறார்களோ அந்த மகாத்மாக்கள்
பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்."

க்‌ஷேத்திரம், க்‌
ஷேத்திரக்ஞன் பற்றி முதலிலேயே விளக்கங்கள் பார்த்தோம்.
எல்லாம் ஜடப்பொருளுடன், உயிர்ப்பொருளின் சேர்க்கையே என்றும் எல்லா
உயிர்களிடமும் அந்தர்யாமியாக பரமேஸ்வரன் உறைந்து கொண்டிருக்கிறான்
என்றும் புரிந்த பின் யாரும் தோற்றங்களுக்கு அதிகம் மதிப்பும்,
முக்கியத்துவமும் தர மாட்டார்கள். அப்படி முக்கியத்துவம் தருபவர்கள்
மேலே சொன்ன உண்மையினை உள்ளூர உணர்ந்தவர்களாக இருக்க
மாட்டார்கள்.

தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ள சாதாரண அறிவுள்ள மனிதர்கள்


துணிய மாட்டார்கள். ஆனால் தன்னில் இருக்கும் பரம்பொருளே எல்லா
உயிர்களிலும் சரிசமமாக இருக்கிறான் என்ற ஞானம் பெற்ற உயர்ந்த
மனிதர்களோ அடுத்தவர்களுக்கும் தீங்கிழைக்கத் துணிய மாட்டார்கள். அது
தான் ஞானத்தின் அடையாளம் என்கிறது பகவத் கீ தை.

மறுபடியும் இவ்வாறாக, இதுவரை இந்த அத்தியாயத்தில் சொன்ன


உண்மைகளை ஸ்ரீகிருஷ்ணர் தொகுத்துச் சொல்லியிருப்பதுடன் 13 வது
அத்தியாயமான க்‌ ஷேத்திர க்ஷேத்திரக்ஞ விபாக யோகம் நிறைவு பெறுகிறது.

55.

உடலோடு ஆத்மாவை
இணைக்கும்
முக்குணங்கள் !

பகவத்கீ தையின் பதினான்காம் அத்தியாயத்திற்குள் நாம் நுழைகிறோம்.


குணத்ரய விபாக யோகம் என்றழைக்கப்படும் இந்த அத்தியாயம்
ஒருவகையில் சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி அல்லது சென்ற அத்தியாய
விளக்கத்தின் இன்னொரு கோணம் என்றும் சொல்லலாம். -

ஜடப்பொருளும், உயிர்ப்பொருளும் இணைந்து உருவாவதே நாம் உட்பட


அனைத்து உயிர்களும் என்பதை சென்ற அத்தியாயமான க்‌ ஷேத்திர
க்ஷேத்திரக்ஞ விபாக யோகத்தில் பார்த்தோம். மனிதனைப் பொருத்தவரை
அந்த இரண்டையும் இணைப்பது மூன்று விதமான குணங்களே என்று சொல்லும்
ஸ்ரீகிருஷ்ணர் அது எப்படி என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்க
ஆரம்பிக்கிறார் :

"எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும்


எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்திலிருந்து விடுபட்டு உயர்ந்த
பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும்
உயர்ந்ததும், மிகச் சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும்
சொல்லப் போகிறேன்."
"இந்த ஞானத்தை அறிந்து பின்பற்றி என்னை அடைந்துள்ளவர்கள்
சிருஷ்டி காலத்தில் மீ ண்டும் பிறப்பதுமில்லை. பிரளய காலத்தில்
பாதிக்கப்படுவதுமில்லை."

"பரத புத்திரனே! என்னுடைய க்‌


ஷேத்திரம் மகத்தான பிரகிருதி. அதில் நான்
உயிரினங்களின் கருவை விதைக்கின்றேன். அதனால் எல்லா
உயிரினங்களும் உண்டாகின்றன. தனித்தனி தோற்றங்கள் கொண்ட சகல
ஜீவராசிகளுக்கும் மஹா பிரகிருதியே தாய். நான் விதையளிக்கும் தந்தை."

"தோள்வலிமை மிக்கவனே! சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற


முக்குணங்களும் பிரகிருதியிலிருந்து தோன்றியவை. அவை அழிவில்லாத
ஆத்மாவை இவ்வுடலில் உறுதியாகப் பிணைத்து விடுகின்றன."

"அவற்றில் சத்துவ குணமானது தூய்மையானது. ஒளி படைத்தது. அது


சுகத்தின் சேர்க்கையாலும், ஞானத்தின் சேர்க்கையாலும் ஆத்மாவுடன்
பிணைக்கின்றது."

"ஆசையினாலும் பற்றுதலாலும் ஏற்படும் விருப்பமே ரஜோ குணம். அது


கர்மங்களில் பற்றுதலை உண்டாக்குவதன் மூலம் ஆத்மாவைப்
பிணைக்கின்றது."

"பரதபுத்திரனே! உடற்பற்றுடைய எல்லா உயிர்களையும் மயக்கக்கூடிய தமோ


குணமோ அறியாமையிலிருந்து உண்டாகிறது. அது அஜாக்கிரதை, சோம்பல்,
தூக்கம் ஆகியவற்றால் ஆத்மாவைப் பிணைக்கின்றது."

"சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுத்துகிறது. ரஜோ குணம் கர்மங்களில்


ஈடுபடுத்துகிறது. தமோ குணம் ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில்
ஈடுபடுத்துகிறது."

ஆதி அந்தமும், சுக துக்கங்களும் இல்லாத ஆத்மா ஒரு உடலில்


இணைக்கப்படும் போது இணைக்கும் பசையாக மூன்று குணங்கள்
இருக்கின்றன. குணங்கள் இல்லாத ஆத்மா இந்த மூன்று குணங்களால் இந்த
உலக வாழ்க்கையில் பல விதங்களில் பந்தாடப்படுகின்றது. மாயை
மனிதர்களை ஆட்சி புரிவது இந்தக் குணங்களை வைத்துத் தான்.

இந்த முக்குணங்களை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற


வரிசையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியிருந்த போதும் படிப்படியாகப் புரிந்து
கொள்ள நாம் எதிர் வரிசையிலேயே செல்வோம்.

தமோ குணம் அலட்சியம், சோம்பல், தூக்கம் முதலான குணங்களைக்


கொண்டது. இது இக் கலிகாலத்தில் அதிகமாகக் கோலோச்சுவதை நம்மால்
பார்க்க முடிகிறது. மந்த குணம் இது. உழைத்துச் செய்வதையும் விரும்பாது;
கவனித்துச் செய்வதையும் விரும்பாது. இந்தத் தமோ குணம் மேலோங்கி
இருக்கும் ஆட்கள் எதைச் செய்வதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படிச்
செய்தே ஆக வேண்டிய கட்டத்திலும் அலட்சியத்துடனும், சலிப்புடனும்
ஏனோ தானோவென்று செய்வார்கள். உடலை நகர்த்துவது இவர்களுக்கு பரம
அசௌகரியம். இந்த மந்த குணத்தால் அவர்கள் படும் பாடு ஏராளமாக
இருந்தாலும் அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது.
அடுத்தது ரஜோ குணம். இது தமோ குணத்திற்கு நேர் எதிரானது. அதற்கு
அடுத்தபடியாக மனிதனை ஆட்டுவிப்பது. ஆசையாலும், பற்றாலும்
உந்தப்பட்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பது இதன் தன்மை. அது
வேண்டும், இது வேண்டும், அதைப் பெற வேண்டும், இதைப் பெற வேண்டும்
என்று பாடுபடுவது ரஜோ குணம். இந்த சும்மா இருக்க முடியாத தன்மை நிரந்தர
அதிருப்தியை நிறைக்க மனிதனைப் பாடுபடுத்தும். ஓட்டைக் குடத்தை
நிறைக்கப் பாடுபடுவது போல பொருள், பணம், பதவி, புகழ் என்று மனிதனை
ஓட வைப்பது இந்த ரஜோ குணம். எதுவும் இவர்களை நிரந்தரமாகத்
திருப்திப்படுத்தாது. சிலர் சும்மா இருக்க முடியாமல் கால்களையாவது
ஆட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது ரஜோ குணத்தின்
உந்துதலே. இந்த ஓட்டத்தால் அமைதியையும், ஆரோக்கியத்தையும்
இழக்கின்ற போதும் மனிதனை நிறுத்த விடாத குணம் இந்த ரஜோ குணம்.

இந்த இரண்டு குணங்களுக்கும் எதிர்மாறான உயர்ந்த குணம் சத்துவ குணம்.


நல்ல விஷயங்களில் ஆர்வம், ஞான மார்க்கத்தில் நாட்டம், சுகமாய் இருக்க
விரும்பும் விருப்பம் இதெல்லாம் சத்துவ குணத்தின் தன்மை. உயர்ந்த
ரசனைகள், அதில் ஈடுபடும் விருப்பம், ஞானத்தில் ஈடுபாடு, நல்ல
விஷயங்களைச் சொல்வதிலும் கேட்பதிலும் நாட்டம் இதெல்லாம் சத்துவ
குணத்தின்
அடையாளங்கள். மூன்று குணங்களில் இதுவே தூய்மையானது. உயர்ந்த
மனிதர்களிடம் காணப்படுவது.

உலகில் மனிதர்கள் இந்த மூன்று


குணங்களாலேயே ஆளப்படுகிறார்கள் என்றாலும் எல்லோரும் எல்லாச்
சமயங்களிலும் ஒரே குணத்தினால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பதில்லை என்பது
தான் உண்மை நிலவரம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

"பரதபுத்திரனே ! சில சமயங்களில் ரஜோ குணம், தமோ குணம் இரண்டையும்


அடக்கி சத்துவ குணம் மேலோங்கி இருக்கும். சில சமயங்களில் சத்துவ
குணம், தமோ குணம் இரண்டையும் அடக்கி ரஜோ குணம் மேலோங்கியிருக்கும்.
சில சமயங்களில் சத்துவ குணம், ரஜோ குணம் இரண்டையும் அடக்கி தமோ
குணம் மேலோங்கி இருக்கும்."

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு குணத்தினால்


ஆட்டிவைக்கப்படுகிறான்அது உலக மாயையின் வேடிக்கை விளையாட்டு.
ஒரு சமயத்தில் மனமுவந்து கீ தையைப் பாராயணம் செய்து கொண்டிருக்கும்
மனிதன் இன்னொரு சந்தர்ப்பத்தில் சோம்பிப் படுத்துக் கிடக்கவோ,
அனாவசியமான ஒரு செயலில் ஈடுபட்டிருக்கவோ கூடும். ஒரு சமயத்தில்
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் மனிதன் இன்னொரு தருணத்தில்
குடித்துப் படுத்துக்கிடக்கவோ அல்லது நல்லதொரு இசையை மெய்மறந்து
கேட்டுக் கொண்டிருக்கவோ கூடும். எப்போதும் சோம்பலுடனும்
அலட்சியத்துடனும் இருப்பவன் திடீரென்று உணர்ச்சியால் உந்தப்பட்டு
ஒருநாள் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்து கொண்டிருக்கவோ,
நல்லதொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கவோ கூடும். அதனால்
பொதுவாக மனிதர்கள் மூன்றில் ஏதோ ஒரு குணம் மேலோங்கி
இருப்பவர்களாகவே இருந்தாலும் சமயங்களில் மற்ற இரண்டு
குணங்களைக்கூடத் தங்களிடம் காட்டக்கூடும்.
மாறுவதே மனித இயல்பு என்பதை அறியாமல் பலரும் மனிதன் மாறி
விட்டான் என்று அடிக்கடிப் புலம்புவது வினோதமல்லவா ?

56.

மரணத்தைத் தாண்டியும்
விளைவுகளைத் தரும்
முக்குணங்கள் !

பொதுவாக மனிதர்கள் மூன்று குணங்களில் ஒன்றை தங்களிடம் அதிகமாகவும்,


பிரதானமாகவும் வெளிப்படுத்தினாலும் சில சமயங்களில் அவர்களிடம் மற்ற
இரு குணங்களும் கூட மாறி மாறி வெளிப்படுகின்றன என்பதைப் பார்த்தோம்.
மனிதனின் அந்த ஒரு தனித்தன்மையே மனிதன் விரும்பி முயன்றால் தன்
குணங்களை உயர்நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை
நமக்கு ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் :

"எப்போது உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஒளி உண்டாகிறதோ அப்போது


சத்துவ குணமே மேலோங்கியுள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும்."

"ரஜோ குணம் மேலோங்கியிருக்கும்போது பேராசை, உலகியல் கர்மங்களைத்


தொடங்குதல், புலனடக்கமில்லாமை, நுகர்ச்சிப் பொருள்களில் ஆசை
ஆகியவை உண்டாகின்றன."

"ஞானமின்மை, அசையாமை, அஜாக்கிரதை, மயக்கம் ஆகியவை தமோ குணம்


மேலோங்கும் போது ஏற்படுகின்றன."

மனிதர்கள் எந்தக் குணத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க


மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டியதில்லை. அவர்களைக் கூர்ந்து
கவனித்தாலே மூன்றில் எக்குணம் பிரதானமாக உள்ளது என்று சொல்லி விட
முடியும்.

ஒரு சாத்வகியின்
ீ உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஒளி வசும் ீ என்று ஸ்ரீ
கிருஷ்ணர் கூறுகிறார். தேஜஸுடன் இருப்பது சத்துவ குணம் மேலோங்கி
இருக்கும் போதே ஒருவனுக்குச் சாத்தியமாகும். உயர்ந்த சிந்தனைகளும்,
மேலான விஷயங்களை விரும்புவதும், புரிந்து கொள்வதும், உணர்வதும்,
அந்த உயர் வழிகளிலேயே பயணிப்பதும் சாத்வக ீ குணம் இருப்பவனுக்கே
முடியும். அப்படி மனம், சொல், செயல் எல்லாம் சாத்வக
ீ நிலையில்
இருப்பவனைப் பார்த்தாலே அவனுடைய தேஜஸால் சாத்வகி ீ என்பது
தெரியும்."

ரஜோ குணத்தில் ஆசை வழிப் பயணங்களும், செயல்களுமே அதிகம்.


அதனால் என்னேரமும் பதற்றமும், சஞ்சலமும், மன அமைதியின்மையும்
இருக்கும். ஓய்வில்லாத வேலைகளும் உழைப்பும் இருந்தாலும் அதில்
அதிகம் அர்த்தம் இல்லாதவையாகவே இருக்கும். மகிழ்வைத் தான் ரஜோ
குணமும் தேடுகிறது என்றாலும் அந்த மகிழ்வு
எப்படிப்பட்ட செயல்கள் மூலமாக நிரந்தரமாகத் தனக்கு வாய்க்கும் என்ற
உண்மையான புரிதல் இருப்பது அரிது. அது கிடைத்தால் சந்தோஷம், இது
செய்தால் மகிழ்ச்சி என்று தானாக நினைத்துப் புதிது புதிதாக எதையாவது
செய்ய முனையும் போக்கு பிரதானமாக இருக்கும். அப்படி அவற்றில்
கிடைக்காத போதும் தன் முனைப்பில் தவறு இருக்கிறதா என்று பார்க்கத்
தோன்றாது. மாறாக வேறு புதிய அதே வகைச் செயல்களில் ஈடுபடும்.

தமோ குணமோ ஜடமாகவும், சோம்பலாகவும் இருப்பதே சுகம் என்று


இருக்கும். உழைப்பு கசக்கும். செய்ய வேண்டும் என்று உணர்வதையும் நாளை
செய்யலாம் என்று நினைக்க வைக்கும். யாராவது செய்யட்டும் என்று இருக்க
வைக்கும். உழைத்து ஓய்வெடுப்பதும் இளைப்பாறுவதும் சரியானது. ஆனால்
உழைக்காமலேயே ஓய்வை விரும்பும் மனநிலை தமோ குணத்தின் இயல்பு.
அதன் கூட்டணியாக அஜாக்கிரதையும், மயக்கமும் சேர்ந்திருக்கும்.

கால்பந்து பலரிடமும் உதை வாங்குவது போல மனிதன் வாழ்வும் ரஜோ,


தமோ குணங்களினால் அடிபட்டு அல்லல்படுவதாக
வினோபா அழகாகக் கூறுவார். உண்மையில் ரஜோ, தமோ குணங்கள் மனிதனை
நிம்மதியின்றி அலைக்கழிப்பதாகவே இருக்கின்றன. ஆனால் மனிதன் ஒரு
குணத்தில் இருந்து மற்ற குணங்களுக்கு மாற முடிந்தவனாக இருப்பதால்
அவன் சத்துவ குணத்துக்கு மாறுவதே அவன் தன் வாழ்வில் அமைதியை
மீ ட்பதற்கான வழி.

அப்படி அவன் வாழும் போது மீ ளா விட்டால் இறந்த பின்பும் அவனுக்குப்


பிரச்சினை தான் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அவர் கூறுகிறார் :

"சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மரணமடைபவன் உத்தமமான


ஆத்ம தத்துவத்தை அறிந்தவர்கள் அடைந்துள்ள புண்ணிய லோகங்களை
அடைகிறான்."

"ரஜோ குணம் மேலோங்கியிருக்கும்போது மரணமடைபவன் கர்மங்களை


அனுஷ்டிப்பவர்களின் குலத்தில் பிறக்கிறான். அப்படியே தமோ குணம்
மேலோங்கியிருக்கும் போது மரணமடைபவன் மூடர்களின் குடும்பத்தில்
பிறக்கிறான்."

"சத்துவ குணமுள்ளவர்கள் மோட்சம் அடைவார்கள். ரஜோ குணமுள்ளவர்கள்


மனித உலகில் தங்கி விடுவார்கள். தமோ குணம் உள்ளவர்கள் புழு, விலங்கு,
பறவைகளாகத் தாழ்ந்த நிலையை அடைவார்கள்."

இது கர்ம பூமி. இங்கு பிறந்தவர்கள் தங்கள் கர்மங்களாலேயே பிறவிப்


பெருங்கடலைக் கடக்க வேண்டியிருக்கிறது. கர்மங்களோ குணங்களை
ஒட்டியே அமைகின்றன. அப்படி இருப்பதால் அவன் தன் குணங்களை மாற்றிக்
கொண்டே கடைத்தேற வேண்டியிருக்கிறது. அவன் இந்த உலகில் வாழும்
போது தன்னை மேலான குணத்திற்கு மாற்றிக் கொள்ளா விட்டால் மரணத்தின்
பின் சென்றடையும் உலகமும் துக்கத்திற்குரியதாகவே இருக்கும்.
சத்துவ குணம் மேலோங்க வாழ்ந்து மரிப்பவன் மோட்சத்தை அடைகிறான்.
இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை பெறுகிறான். ஆனால் ரஜோ குணம்
மேலோங்க வாழ்ந்து மரிப்பவன் பரிட்சையில் தோல்வி அடைந்து மீ ண்டும்
அதே வகுப்பில் படிக்க வேண்டியிருப்பவனைப் போல இந்த உலகத்தில்
மீ ண்டும் மனிதனாகப் பிறக்கிறான். பழையபடி இன்ப துன்ப அனுபவங்களில்
அவன்
அலைக்கழிக்கப்பட வேண்டி வரும். தமோ குணம் மேலோங்க வாழ்ந்து
மரிப்பவன் மனிதனாகப் பிறப்பதே நிச்சயம் இல்லை என்கிறது பகவத் கீ தை.
அப்படிப் பிறந்தாலும் மூடர்கள் குடும்பத்தில் பிறந்து படாதபாடு படுவானாம்.
அதற்கும் லாயக்கில்லை என்றால் அவன் விலங்கு, பறவை புழுவாகப்
பிறப்பெடுக்க வேண்டி வருமாம்.

சோம்பிக் கிடந்து செயலே பாரம் என்று வாழ்பவன், நேரா நேரத்திற்கு


சாப்பிட்டு ஜடமாகத் தன் காலத்தைக் கடத்துபவன் அதற்கேற்ற மாதிரி
விலங்கினமாகப் பிறப்பெடுக்க நேர்வது அவன் தமோநிலையில் வாழ்ந்ததன்
சம்பாத்தியமாகவே இருக்கிறது.

முக்குணங்கள் இந்தப் பிறவியை மட்டுமல்ல, இந்தப் பிறவிக்கு


அடுத்ததையும் நிர்ணயம் செய்கின்றன என்பதால் தங்கள் குணங்களை
உயர்த்திக் கொள்ள வேண்டியது மனிதனுக்கு மிக முக்கியமாகிறது. மனிதன்
சோம்பி ஜடமாய் இருக்கப் பிறந்தவன் அல்ல. பொருளற்ற, தரமற்ற
செயல்களில் தன்னை மறந்து ஈடுபட்டுக் கஷ்டப்படப் பிறந்தவனும் அல்ல.
சிந்திக்கும் திறமை தரப்பட்டு மனிதனாக இங்கே அனுப்பப்படுபவன் அவன்
என்பதால் அவன் சிந்தித்து வாழ்ந்து தன் இயல்பையும், அதன் மூலம்
செயல்களையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதைச் சரியாகச் செய்யா
விட்டால் தனக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத்
தவறுபவனாகி விடுகிறான். அவன் மறுபடி பிறப்பெடுக்க வேண்டி வரும். அது
மனிதனாகவா விலங்காகவா என்பது அடுத்த கேள்வி.

இப்படி பகவத் கீ தையில் ஸ்ரீ கிருஷ்ணர் மனோதத்துவ ரீதியில்


முக்குணங்களையும், அவற்றின் அடையாளங்களையும், அவற்றின்
பலன்களையும் சொன்னதோடு நிறுத்தாமல் வாழ்வின் முடிவுக்குப் பிந்தைய
நிலைகளையும் அவை தீர்மானிப்பதைத் தெளிவாக விளக்குவதால் நாம்
எந்தக் குணங்களில் அதிகமாக இருக்கிறோம் என்பதைக் கணக்கெடுத்து
உயர்த்திக் கொள்வது அவசியமாகிறதல்லவா ?

57.

பிரச்சினைகளுக்கு
முடிவு தான் என்ன?

ஏறத்தாழ மனிதனின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்


அறியாமையாகவே இருக்கிறது. அறியாமையால் அவன் ஏற்படுத்திக்
கொள்ளும் நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாமாகச் சேர்ந்து
அவன்
வாழ்க்கையைப் பிரச்சினைகளின் தொகுப்பாக ஆக்கி விடுகின்றன. அவன்
தனித்தனியாக அந்தப் பிரச்சினைகளைத் தீர்வு காண முனைகிறான். ஒன்றை
முடிப்பதற்குள் பத்து பிரச்சினைகள் முளைத்து விடுகின்றன. இதற்கு முடிவு
தான் என்ன? பிரச்சினைகளின் மூல காரணமான அறியாமையில் இருந்து
விடுபடுவது தான். வேரை அழித்தால் கிளைகள், இலைகள் எல்லாம் தானாக
அழிந்து விடுவது போல அவன் அறியாமையில் இருந்து விடுபட்டால் ஒட்டு
மொத்தமாக அவன் பிரச்சினைகளின் தாக்கத்தில் இருந்து விடுபடுகிறான்.
இதை வலியுறுத்தும் விதமாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"செயல்களை நடத்துபவை குணங்களே. அவற்றைக் காட்டிலும் வேறொரு


கர்த்தா இல்லை என்று எவனொருவன் காண்கிறானோ, குணங்களைக்
காட்டிலும் தான் வேறு என்பதை எவன் அறிகிறானோ அவன் என் நிலையை
அடைகிறான்."

"உடலிலிருந்து உண்டான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு,


இறப்பு, மூப்பு, துக்கம் என்பவைகளிலிருந்து விடுபட்டு அமிர்த நிலையை
அடைகிறான்."

செயல்கள் குணங்களின் விளைவுகளாகவே இருக்கின்றன. மனிதனுடைய


எல்லாச் செயல்களும் அந்தந்த நேரத்தில் அவனுக்கு எந்தக் குணம்
மேலோங்கி இருக்கிறதோ அந்தந்த குணத்திற்கேற்ப இருக்கிறது. சாத்வக ீ
குணத்தில் தெளிவாக இருக்கையில் நிதானமாகவும், யோசித்தும் எதையும்
முறைப்படியே செய்கிறான். ரஜோ குணம் அதைச் செய், இதைச் செய் என்று
அவனைப் பல வேலைகள் செய்ய வைக்கிறது. அந்தச் செயல்களைச்
சிந்தித்துச் செய்யக்கூட அவனை அனுமதிப்பதில்லை. இப்போது செய்யா
விட்டால் அது பேரிழப்பு அல்லது முட்டாள்தனம் என்று பயமுறுத்தி அவனை
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவசரமாக வேலை செய்ய
வைக்கிறது. தமோ குணம் மேலோங்கி இருக்கையில் செய்ய வேண்டியதைக்
கூட அவன் செய்யத் தவறுகிறான். நாளை செய்யலாம் என்றும், அடுத்தவன்
செய்யட்டும் என்றும் அவன் இருந்து விடுகிறான்.

செயல் செய்வது மனிதனாக இருந்தால் அவன் செயல்கள் ஒரே மாதிரியாக


இருக்கும். முக்குணங்கள் அவனை ஆட்சி செய்து தங்கள் குணங்களின் படி
அவனை ஆட வைப்பதால் செயல்கள் செய்வது குணங்களாகவே
இருக்கின்றன. அதை உணரும் போது
மனிதன் அந்தக் குணங்களையும் கடந்து இருக்கும் தன் இயல்பான ஆத்மாவை
அறிந்து கொண்டு அமைதியடைகிறான். அந்த அமைதியும் நிறைவுமல்லவா
இறைவனின் இயல்பு நிலை. அந்த நிலையை அடைந்து விட்டவன் பிறப்பு,
இறப்பில் சிக்குவதில்லை. அதனால் மூப்பும் இல்லை. துக்கமும் இல்லை.

முக்குணங்களின் எல்லையில்லாத செயல்களுக்கும், அவற்றின்


விளைவுகளுக்கும் சிக்காமல் தப்பிக்கும் மனிதனை எப்படி அறிவது, அவன்
நடவடிக்கைகள் எப்படி இருக்கும், அவன் எப்படி அந்தக் குணங்களைக் கடந்து
கடைத்தேறுவான் என்று அறியும் ஆசையில் அர்ஜுனன் கேட்கிறான்.

“ப்ரபோ! ஒருவன் இந்த முக்குணங்களையும் கடந்தவன் என்று எந்த


அடையாளத்தைக் கொண்டு அறிவது? அவன் எத்தகைய நடவடிக்கைகளைக்
கொண்டிருப்பான்? எப்படி முக்குணங்களையும் கடப்பான் ?"

பகவான் அதற்குப் பதில் கூறுகிறார் :


“பாண்டவனே! மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம் உண்டாகும் போது
எவனொருவன் அவற்றை வெறுப்பதில்லையோ, அவை நீங்கும் போது
அவற்றைத் திரும்பவும் பெற விரும்புவதில்லையோ,

அக்கறை இல்லாதவன் போல் அமர்ந்திருந்து, குணங்களே இயங்குகின்றன


என்று உணர்ந்து எவனொருவன் அந்தக் குணங்களால்
நிலைகுலைவதில்லையோ,

எவன் தன் நிலையில் நிலைத்து நின்று இன்ப துன்பங்களைச் சமமாகப்


பாவிக்கிறானோ, மண்ணையும், கல்லையும், பொன்னையும் சமமாக மதிக்கிறானோ,
பிடித்தது பிடிக்காதது இரண்டையும் ஒன்றாகக் கருதுவானோ, இகழ்ச்சியையும்,
புகழ்ச்சியையும் சமமாக நினைப்பானோ,

மானம் அவமானம் இரண்டையும் சமமாக எண்ணுவானோ, நண்பனையும்,


எதிரியையும் சமமாக நடத்துவானோ, செயல்களைச் செய்பவன் நான் என்ற
எண்ணத்தை எவன் விட்டவனோ, அவனே குணாதீனன் (குணங்களைக்
கடந்தவன்) என்று கூறப்படுவான்."

பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அந்தப் பிரச்சினைகளில்


இருந்து சுலபமாக விடுபடுவதில்லை. ஏனென்றால் அவன் அந்தப்
பிரச்சினைகள் குறித்த அதீத எண்ணங்கள் காரணமாக அவற்றுடன் தன்னை
இணைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு விடுகிறான். மானசீகமாக அவன் அந்தத்
தளையைத் தளர்த்தி விலக்கிக் கொண்டால் மட்டுமே அவன் அதிலிருந்து
விடுபட முடியும். பிரச்சினைகள் குறித்த விருப்பு வெறுப்புகளைக் குறைப்பதன்
மூலமாகவே அவை குறித்த தீவிர எண்ணங்களை அவன் தவிர்க்க முடியும்.

ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே குறிப்பிடும் மனத்தெளிவு, செயலூக்கம், மதிமயக்கம்


மூன்றுமே சதவ, ரஜோ, தமோ குணங்களின் முறைப்படியான விளைவுகள்.
அவை வரும் போதும் சரி, அவை விலகும் போதும் சரி அவை குறித்த விருப்பு
வெறுப்புகள் நமக்கு அதிகம் இருக்குமானால் நம் மீ து அந்த முக்குணங்களின்
ஆதிக்கம் அதிகமாகி விடும். அவை குறித்து அக்கறை இல்லாமல், விலகி
நிற்கும் ஆத்மாவாக நாம் எல்லாவற்றையும் பார்த்தோமானால் அந்தக்
குணங்களின் ஆதிக்கம் தளர்ந்து, அவை நம்மைப் பாதிப்பதும் நின்று போகும்.

அதைத் தொடர்ந்து, குணங்களைக் கடந்தவனான குணாதீனனின் இயல்புகளை


ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார். கீ தையின் ஆரம்பத்தில் ஸ்திதப்ரக்ஞனில்
ஆரம்பித்துப் பல பெயர்களில் அவர் விளக்கிய அதே குணாதிசயங்கள் இங்கும்
அவரால் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் சமமாக நினைக்கும்
சமநோக்கு நிலை இங்கும் வலியுறுத்தப்படுகிறது. கூடவே ’செயல்களைச்
செய்பவன் நான்’ என்ற எண்ணத்தையும் அகற்றும்படி பகவான்
அறிவுறுத்துகிறார்.

உலகில் எத்தனையோ செயல்கள் நடக்கின்றன. அவை எத்தனையோ


விளைவுகளில் முடிகின்றன. ஆனால் அவை எதிலும் தனி மனிதனுக்குப்
பெரிய அக்கறை இல்லை. ஆனால் அவன் செய்கின்ற செயல்களிலும் அதன்
விளைவுகளிலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு அக்கறை. எல்லாம் சிறப்பாக
நடக்க வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், பலரும் பாராட்ட வேண்டும்,
மதிக்க வேண்டும் முதலான பலப்பல எண்ணங்கள் அவனை
ஆக்கிரமிக்கின்றன. அதனால் எத்தனையோ மன உளைச்சல்கள்,
எத்தனையோ துன்பங்கள்... எல்லாம் நினைக்கின்றபடியே முடிகிற வரை
அவன் அந்தச் செயல்களோடு கட்டுண்டவன் ஆகிறான். பிரச்சினை இங்கு
அந்தச் செயல்கள் அல்ல. அந்தச் செயல்களைச் செய்யும் “நான்” தான்
பிரச்சினை. எல்லாவற்றையும் நடத்துவது இறைவனே, நான் வெறும்
கருவியே, இதன் இலாப நஷ்டங்கள் என்னைச் சேர்ந்தவை அல்ல என்ற
பிரக்ஞை மனிதனுக்குள் மேலோங்கி நிற்குமானால் மனிதன் மனப்பாரம்
நீங்கியவனாகி விடுவான். எனவே அந்த ‘நானில்’ இருந்து விடுபட்டால்
மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் கூட விடுபட்டிருக்கும்
குணாதீனன் ஆகிறான் என்று கூறும் இந்தக் கருத்துடன் கீ தையின்
பதினான்காம் அத்தியாயமான குணத்ரய விபாக யோகம் முடிகிறது.

58.

இராமாயணத்தில்
கீ தாசாரம் !

பகவத் கீ தையின் பதினைந்தாம் அத்தியாயம் புருஷோத்தம யோகத்தில்


நுழைகிறோம். இதில் ஆரம்பத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு
சம்சாரத்தை அரசமரமாக உதாரணம் சொல்லி விளக்குகிறார்.

"சம்சாரம் என்ற அரச மரமானது மேலே வேரும் கீ ழே கிளைகளும் கொண்டது.


அது அழிவில்லாதது. வேதங்கள் அதன் இலைகள்".

"அந்த மரத்தின் கிளைகள் மேலும் கீ ழும் பரவியுள்ளன. அவை சத்வ, ரஜோ,


தமோ குணங்களினால் வளர்ந்தவை. புலன்களைத் தளிர்களாகக்
கொண்டவை. கர்மங்களுக்கு ஏற்றவாறு மானுட உலகிலும் அந்த மரத்தின்
வேர்கள் பரவியுள்ளன".

அந்த சம்சார மரத்தின் உருவம் சொல்லப்படும்படி ஆராயும் போது


புலப்படுவதில்லை. அதன் ஆதியும் அந்தமும் காணப்படுவதில்லை. உறுதியாக
வேர் பாய்ந்த அந்த அரசமரத்தை பற்றில்லாமை என்ற வலிமை வாய்ந்த
வாளால் வெட்டி எறிந்து விட்டுப் பிறகு எந்த நிலையை அடைந்தவர்கள்
மறுபடியும் திரும்புவதில்லையோ, அதைத் தேட வேண்டும். அந்தப் பழைய
சம்சார அரசமரம் யாரிடமிருந்து உண்டாயிற்றோ, அத்தகைய ஆதி
புருஷனைச் சரணடைய வேண்டும்".

"கர்வத்தையும், மோகத்தையும் விட்டு, பற்றுதலென்னும் குற்றத்தை வென்று,


எப்போதும் ஆத்மஞானத்தில் நிலைத்து, கர்மங்களை விலக்கி, சுக துக்கங்கள்
என்னும் இரட்டைகளை விட்டு, ஆத்மாவின்
இயல்பை அறிந்தவர்கள், அழிவில்லாத அந்த நிலையை அடைவார்கள்".

பொதுவாக மரங்களின் வேர் அதன் அடியில் தான் இருக்கும். ஆனால்


சம்சாரத்தை அரச மரமாக வர்ணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த அரசமரத்தின் வேர்
மேலே இருக்கிறது என்கிறார். ஏனென்றால் சம்சாரம் என்ற அந்த மரம்
உண்டாகி, விரிவாக வளர்ந்து பரந்து கிடக்கக் காரணம் அனைத்துக்கும் ஆதி
மூலமாகிய இறைவனே. இறைவன் உயர்வானவன், அனைத்திற்கும்
மேலானவன் என்பதால் உருவாக்கிய அந்த வேர் மேலே இருக்கிறது என்ற
வர்ணனை இங்கே பொருத்தமாக வருகிறது.

மேல் உலகில் வேர் விட்டு ஆரம்பித்திருக்கும் அந்த அரச மரத்தின் இலைகள்


வேதங்களாக இருக்கின்றன. அதனால் வளமாகப் பெருகி இருக்கும் அந்த
சம்சார மரத்தை வளர்ப்பவை சத்வ, ரஜோ, தமோ குணங்கள். புலன்கள் அதன்
தளிர்கள். மூல வேர்கள் மேல் உலகில் இருக்கின்றன என்றால் கிளை
வேர்களோ மனிதர்களின் கர்மங்களுக்கு ஏற்றபடி மானுட உலகிலும்
பரவியிருக்கின்றன.

இப்படிப் பிரம்மாண்டமாகத் தோன்றும் சம்சார விருட்சம் ஆராயும் போது


நமக்கு அகப்படுவதில்லை. காரணம் மாயை ஒருபோதும் ஆராயக்
கிடைப்பதில்லை. ஆராயும் போது அது காணாமல் போகிறது. ஆனால் மற்ற
சமயங்களிலோ அது நிஜம் போலவே தோன்றுகிறது. நிஜம் போலத் தோன்றும்
போது அது ஏற்படுத்தும் துயரங்களும், பிரச்சினைகளும் ஏராளம். ஆதி அந்தம்
தெரியா விட்டாலும் ஆழமாக வேர் விட்டிருக்கும் அந்த சம்சார விருட்சம்
நம்மைச் சுற்றியும் படர்ந்து நம்மை நெருக்குகிறது. அதிலிருந்து தப்பிக்க ஒரே
வழி பற்றில்லாமை என்ற வலிமையான வாளால் அந்த மரத்தை வெட்டிச்
சாய்ப்பதே !

மாயையாகிய அந்த மரத்தை வெட்டிச் சாய்த்த பின் தான் தனிமனிதன் அது


உருவாக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். அதிலிருந்து தப்பித்த
பின் நமக்கு ஒரு புகலிடம் வேண்டுமல்லவா? ஒரு நிரந்தரமான பாதுகாப்பு
வேண்டுமல்லவா? நாம் இன்னொன்றில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க
வேண்டுமல்லவா? அதற்கு நாம் இந்த மாயா உலகத்தை உருவாக்கிப்
பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் அந்த பரம்பொருளையே சரணடைய
வேண்டும். அதன் பின் தான் பரிபூரண விடுதலை கிடைக்கும்.

முக்குணங்களால் வளர்த்து நாம் சிக்கிக் கொள்ளும் இந்த சம்சார


பந்தத்திலிருந்து இப்படித் தப்பிக்கும் வித்தைக்கு இராமாயணத்திலேயே
வழிகாட்டப்பட்டு இருப்பதாக வினோபாஜி கூறுகிறார். இராமாயணத்தில்
என்னேரமும் செயல் வரனாக ீ இருக்கும் இராவணன் ரஜோ குணத்திற்கு
எடுத்துக்காட்டு. பாதி வாழ்நாளை உறங்கிக் கழித்த கும்பகர்ணன் தமோ
குணத்திற்கு எடுத்துக்காட்டு. தர்மத்தின் வழி நடப்பவனும், நன்மையை
நாடுபவனுமான விபீஷணன் சத்துவ குணத்திற்கு எடுத்துக்காட்டு. ரஜோ குண
இராவணனையும், தமோ குண கும்பகர்ணனையும் அழித்து சத்துவ குண
விபீஷணனை ஆதரித்ததோடு நிறைவு வந்து விடவில்லை. அந்த சத்துவ குண
விபீஷணன் இறைவனாகிய இராமனைச் சரணாகதி அடைந்த பிறகே
குறைகள் முற்றிலும் முடிந்து போயின. அந்தச் சரணாகதியே இங்கே
வலியுறுத்தப்படுகிறது. இந்த வகையில் கீ தாசாரமே இராமாயணத்தில்
விளக்கப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

கர்வம், மோகம், பற்றுதல் மூன்றும் குற்றம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.


மனிதன் தன் இயல்பான ஆத்ம ஞானத்தை மறக்க வைத்து இந்த மூன்றும்
அவனை ஆட்கொண்டு
விடுவதால் தான் இவை குற்றமாகிறது. ஆராய்ந்து பார்த்தால் கர்வம் ஒரு
சுமை தான். அதற்கு நாம் தரும் விலை மிக அதிகம். அது தேவையில்லாத
நிலைப்பாட்டை நம்மை எடுக்க வைத்து படாதபாடு படுத்துகிறது. மோகமும்,
பற்றுதலும் கூட நம்மைச் சிக்க வைக்கும் பொறிகளே. அதன் வழிச் சென்று
அமைதியடைந்தவர் எவருமில்லை. இல்லாத கானல் நீரைத் தேடிச் சென்றால்
நாம் ஏமாறுவதே நிச்சயம். ஆத்மஞானம் பெற்று விட்டால் தானாக அவை
அனைத்தும் உதிர்ந்து போகும். அவற்றை உதிர்த்து விட்டாலும் நமக்கு ஆத்ம
ஞானம் கைகூடும். அதுவே ஆனந்தமான நிலை. அதுவே அழிவில்லாத நிலை.
அதை நாம் உணர்வோமா ?

59.

இழப்பில்லாத
உயர் பெரும் நிலை !

மனிதன் தன் வாழ்க்கையில் அமைதியையும் ஆனந்தத்தையுமே தேடுகிறான்.


அதற்கான முனைப்பிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்கிறான். அவன்
தேடும் அமைதியும் ஆனந்தமும் ஓரளவிலாவது சில சமயங்களில்
கிடைக்கவும் செய்கிறது. ஆனால் கிடைத்தது எத்தனை காலம் நீடிக்கிறது?
நீர்க்குமிழியில் தெரியும் வர்ண ஜாலங்கள் எப்படி நீடித்து நிற்காதோ அப்படியே
அவனுடைய மகிழ்ச்சியும் நீடித்து நிற்பதில்லை. கண நேரத்தில் தாறுமாறாக
ஏதாவது நடந்து காணாமல் போகிறது. கிடைத்து இழப்பது கூடுதல் கொடுமை.
மகிழ்ச்சி கிடைப்பதற்கு முன்பிருந்ததை விட அதிக துக்கத்தில் அவன் ஆழ்ந்து
போக நேரிடுகிறது.

ஓரளவு மகிழ்ச்சி கிடைப்பதைத் தக்க வைப்பதே பெரும்பாடு என்கிற


நிலையில் கிடந்து உழலும் மனிதனுக்கு பேரானந்தமும், பேரமைதியும்
இருக்கும் ஒரு உன்னத நிலைமை கிடைக்க வழி இருக்கிறது என்றும்
கிடைத்ததை அவன் பிறகு என்றென்றைக்கும் இழக்க வேண்டியதில்லை என்றும்
பகவத் கீ தை சொல்கிறது. அதற்கு என்ன வழி? பிறவிப் பெருங்கடலுக்குத்
திரும்பி வரவேண்டியிருக்காதபடி இறைவனுடைய பரமபதத்தைச்
சென்றடைவது தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் :

"எதை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லையோ, அந்த


சுயப்பிரகாசமான பரமபதத்திற்கு சூரியன் ஒளிதருவதில்லை; சந்திரன்
ஒளிதருவதில்லை; அக்னி தேவனும் ஒளிதருவதில்லை. அது
என்னுடைய உயர்ந்த ஸ்தானமான பரமபதமாகும்."

அந்த உயர்ந்த நிலை தன்னிறைவானது. அதற்கு வெளியிலிருந்து எந்த


உதவியும் தேவையில்லை. ஒளிமயமான அந்த இடத்திற்கு சூரியன் சந்திரன்
அக்னி முதலானவர்கள் அவசியமில்லை. அந்தப் பாதுகாப்பான இடத்தைச்
சென்றடைந்த பின் திரும்பி கீ ழ் இழுக்கப்படுவோம் என்ற பயமும்
தேவையில்லை.

சரி இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டி அந்த உயர்நிலையை எப்படி


அடைவது? இப்போது மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய
நிலை எப்படி இருக்கிறது? இந்த நிலையிலிருந்து அந்த உயர்நிலைக்கு எப்படிப்
போய்ச் சேர்வது என்ற கேள்விகள் எழுகிறதல்லவா? அதற்கு அடுத்த
சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார்:

"இவ்வுடலில் என்றுமுள்ள ஜீவாத்மா எனது அம்சமே. அதுவே சரீரமாகிய


பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களை இங்குமங்கும் இழுத்துச்
செல்கிறது."

"காற்று மலர்களிலிருந்து வாசனையை எப்படி எடுத்துச் செல்கிறதோ


அப்படியே உடலை ஆளும் ஜீவாத்மாவும் அந்த உடலில் இருந்து கிளம்பி
இன்னொரு உடலை அடையும் போது மனதோடு கூடிய புலன்களை எடுத்துச்
செல்கிறது."

"அங்கு இந்த ஜீவாத்மா காது, கண், சருமம், நாக்கு, மூக்கு, மனம் சார்ந்து
கொண்டு அவற்றின் உதவியுடன் தான் புலன்நுகர்ப் பொருள்களை
அனுபவிக்கிறது."

"உடலை விட்டுச் செல்லும் போதும், உடலில் இருக்கும் போதும், போகங்களை


அனுபவிக்கும் போதும் இந்த ஜீவனை அறிவிலிகள் அறிவதில்லை. ஞானக்கண்
பெற்றவர்கள் தான் அதைக் காண்பார்கள்."

"யோகிகளும் முயற்சி செய்தே தம் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவை


அறிகிறார்கள். மனம் பக்குவமடையாத அஞ்ஞானிகளோ முயன்றாலும் கூட
இந்த ஆத்மாவை அறிவதில்லை."

அழியும் உடலில் அழியாமல் குடிகொண்டிருப்பது ஜீவாத்மா. அது


பரமாத்மாவின் ஒரு அம்சமே. அது புலன்களோடு, மனமும் சேர்ந்து
அரங்கேற்றும் நாடகத்தில் தன்னை மறந்து பாத்திரதாரியாக இருக்கிறது. அதன்
சுக துக்கங்களை அனுபவிக்கிறது. ஒரு பிறவி முடிந்து இன்னொரு
பிறவிக்குள் புகும் போதும் பழைய கணக்கை, பழைய நினைவுகளைச் சுமந்து
கொண்டே போகிறது. மறுபடியும் புதிய உடலில், புதிய சூழலில் இன்னொரு
நாடகத்தில் வேறொரு பாத்திரதாரியாக மாறுகிறது. இந்தப் புதிய புதிய
உடல்களில் புதிய புதிய நாடகங்களில் வேடங்களைத் தானாகவே பாவித்து
மதிமயங்கும் ஜீவாத்மா அழிவில்லாத பரமாத்மாவின் ஒரு அம்சமே தான்
என்பதைப் பக்குவமடையாத வரை உணர்வதில்லை.

சொல்லப் போனால் அமைதியும் ஆனந்தமும் ஆத்மாவின் இயல்புநிலையே.


அந்த ஈர்ப்பு தான் அவற்றை மறுபடி பெற்றுக் கொள்ள மனிதனைத்
தூண்டுகிறது. அதை நிரந்தரமாக மீ ட்டெடுக்க அவனுக்கு ஒரே வழி தான்
இருக்கிறது. அந்த இறைவனின் பரமபதமே. ஆனால் மனிதன் அந்த
ராஜபாட்டையை விட்டு விட்டு குறுக்கு வழிகளிலும் சந்து பொந்துகளிலும்
போய் அடையப் பார்க்கிறார்கள்.

பரமாத்மாவின் அம்சமாகத் தன்னைச் சரியாக ஜீவாத்மா உணராத வரை மனம்


பக்குவமடைவதில்லை. மனம் பக்குவமடையாத வரை ஐம்புலன்களால்
கிடைக்கும் இன்பமே பெரிதென மயங்கிக் கிடக்கும். ஞானம் தன்னை அறிதலில்
இருக்கிறது. தன்னை அறியும் போது என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல்
நிகழ்கிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிந்த பின் மனமும்
ஒத்துழைக்க ஆரம்பித்து முறையான முயற்சிகள் சாத்தியமாகிறது.
முறையான முயற்சிகளின் முடிவிலேயே பிறவிப் பெருங்கடலைக் கடக்க
முடிகிறது.

ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருப்பதில் இரண்டு மிக முக்கியமான தேவைகளாக


இருக்கின்றன. ஒன்று தெளிவடைந்த மனம் இன்னொன்று முயற்சி. இரண்டில்
ஒன்று இல்லா விட்டாலும் ஆத்மஞானமும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய
நிலைத்த ஆனந்தமும் ஒருவன் அடைய முடியாது. இதற்கு எத்தனையோ
நிகழ்கால உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியே பார்க்கலாம்.

சிலர் நிறைய படித்திருப்பார்கள். நிறைய அறிந்திருப்பார்கள்.


உதாரணங்களுடன் பேருண்மைகளைச் சொல்லக்கூடிய அளவு அறிவு
முன்னேற்றமும் இருக்கும். ஆனால்
அவர்கள் நடந்து கொள்வதும், வாழும் முறையும் அவர்கள் அறிந்ததற்குப்
பொருத்தமில்லாததாக இருக்கும். காரணம் அவர்களிடம் அறிந்ததை
நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வரும் முயற்சியிருக்காது. வேறு சிலர்
ஒன்றன் பின் ஒன்றாகப் பல முயற்சிகளில் தீவிரமாக இருப்பார்கள். இன்று
யோகா பயிற்சிக்குப் போவதாகச் சொல்வார்கள். இன்னொரு நாள் விபாசனா
தியானம் செய்வதாகச் சொல்வார்கள். பிறிதொரு சமயம் ஏதோ ஒரு புதிய
இயக்கத்தில் சேர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். மாறி மாறி ஏதாவது செய்து
கொண்டே இருந்தாலும் கூட அவர்கள் முயற்சிகள் தோல்வியிலேயே
முடியும். காரணம் மனதில் தெளிவோ, பக்குவமோ இல்லாதிருப்பதாகத் தான்
இருக்கும்.

60.

அறிய வேண்டியதும்,
அடைய வேண்டியதும் !

பகவத்கீ தையை மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்குப் பல இடங்களில்


ஸ்ரீ கிருஷ்ணர் தானே எல்லாம் என்று சுய புராணம் பாடுவது போலத்
தோன்றலாம். ஆனால் ஆழமாகப் படித்து உட்பொருள் அறிந்து
சிந்திப்பவனுக்கு நம்மைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்ற மகத்தான
ஞானம் புலப்பட்டு, இனி
செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவு பிறக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தம யோகத்தில் அடுத்ததாகச் சொல்லியிருக்கும் சில


சுலோகங்களைப் பார்ப்போம் :

"அகில உலகையும் விளங்கச் செய்யும் சூரியனில் உள்ள ஒளியும்,


சந்திரனிலும் அக்னியிலும் உள்ள ஒளியும் என்னுடைய தேஜஸே என்று
அறிவாயாக !"

"நான் பூமியினுள் புகுந்து என்னுடைய பலத்தினால் எல்லா


உயிரினங்களையும் தாங்குகிறேன்."

"நானே எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து


கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து தான் நினைவும், அறிவும்,
சந்தேகங்களிலிருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களிலும் அறிய
வேண்டிய பொருள் நானே. வேதாந்தத்தை உருவாக்கியவனும், உட்பொருளை
அறிந்தவனும் நானே !"

உலகில் ஒளி தந்து நாம் அனைத்தையும் காண வழிவகுப்பது சூரியன், சந்திரன்


மற்றும் அக்னி தான். இன்று மின்விளக்குகள் இருக்கின்றன என்றாலும் அந்த
மின்சாரமும்
அக்னியின் ஒரு அம்சமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின்
ஒளி ‘என்னுடைய தேஜஸே’ என்று பகவான் சொல்கிறார். அந்த வகையில்
யோசித்தால், பகவானுடைய தேஜஸ் இல்லையென்றால் எல்லையற்ற இருளில் நாம்
முடங்கி விடுவோம்.

அடுத்ததாக என்னுடைய பலத்தினால் எல்லா உயிரினங்களையும்


தாங்குகிறேன் என்றும் எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாய்
இருக்கிறேன் என்றும் பகவான் கூறுகிறார். உனக்குள்ளே இருப்பவனும்,
உன்னைத் தாங்குபவனும் அந்தப் பரம்பொருள் என்றால் மனிதனே நீ ஏன்
துக்கப்பட வேண்டும், நீயேன் சக்தியற்றவனாய் உன்னை நினைத்துக் கொண்டு
புலம்ப வேண்டும்? எல்லாம் நானே என்று அறிவிக்கும் இறைவன்
உனக்குள்ளும் நானே என்றும் சேர்ந்து சொல்லும் போது ’எல்லாம் நீயே’
என்பதும் உண்மையே அல்லவா? உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் உன்
வாழ்க்கையை நீ பிரம்மாண்டமாக ஆக்கிக் கொள்ளாமல் தடுப்பது உன்
அறியாமையே அல்லவா?

நாம் முன்பே சொன்னது போல, நாம் தரித்திருக்கும் சிறு வேடமே நம்


அடையாளம்,
அதுவே நிஜம் என்று அறியாமையால் தேவையில்லாமல் அல்லவா நம்மை
நாமே சுருக்கிக் கொள்கிறோம். அண்டவெளியில் எல்லாம் வெற்றிடம்
நிரம்பியிருக்க ஒரு மண்பானை தனக்குள் இருக்கும் சிறு இடத்தை தன்
இடமாகச் சொல்லிக் கொள்கிறது. அந்தச் சிறிய உள் இடம் பானை
உருவாவதற்கு முன்னும், பானை உடைந்த பின்னும் இருக்கக்கூடிய
எல்லையில்லாத வெற்றிடமே அல்லவா ?

வேதங்களை உருவாக்கியவனும், வேதங்களின் உட்பொருளும் அந்தப்


பரம்பொருளே என்று சொல்லி அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற சக்திகளை
விளக்கி விவரிக்கும் போதெல்லாம் அந்தப் பரம்பொருள் உனக்குள்ளிருந்து
கொண்டு, உன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் சக்தியைப் பற்றிச் சொல்லிக்
கொண்டிருக்கிறார் என்ற உணர்வை நீ சேர்ந்து பெற வேண்டாமா? அந்த
வகையில் இறைவன் உன்னைப் பற்றியே அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்.
”எல்லாம் நீயே” “உன்னையே நீ அறிவாய்” என்ற வேத வாக்குகளை எல்லாம் நீ
இப்படி அல்லவா புரிந்து தெளிந்து புத்துணர்ச்சி பெற வேண்டும்?

புருஷோத்தம யோகத்தின் முடிவில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் :

"பரதகுலத் தோன்றலே, எவனொருவன் புருஷோத்தமனான என்னை நான்


சொல்லிய முறையில் மோகமின்றி நன்றாக அறிவானோ அவன் எல்லா
விதங்களிலும் என்னையே தொழுகிறான்."
"குற்றமற்றவனே, இதுவரை மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை
உனக்குச் சொன்னேன். இதை அறிந்து கொண்ட மனிதன் ஞானியாகவும்,
செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும் ஆகிறான்."

உன்னையே அறிவாய் என்று சொன்னால் மனிதன் இந்த உடல், அதனுடன்


சேர்ந்த அற்பசக்திகள் வைத்து அறியாமையுடன் தான் தன்னைக் கணித்துக்
கூனிக் குறுகுவான். இறைவனை அறியும் பிரம்மாண்டத்தை விவரித்து இந்தப்
பிரம்மாண்டமே உனக்குள் இருக்கிறது, உன்னைத் தாங்குகிறது என்று இந்த
விதமாகச் சொன்னால் அணு அண்டமாக விரியும்.

அந்தப் பரம்பொருளை எல்லா விதங்களிலும் தொழச் சொல்வது உனக்குள்


இருக்கும் இறைவனைத் தொழச் சொல்வது தான். எல்லா விதங்களிலும்
அதையே ஆராதித்து, அதையே தொழுது கௌரவிப்பது மனிதன் தன்
உயர்வுகளையும், தெய்வத்தன்மையையும் மேலோங்க வைத்து கௌரவிப்பது
தான். அந்த ஒரு ஆத்மஞானம் தான் நாம் அறிய வேண்டிய மகாரகசியம். அந்த
இறைத்தன்மையை விடாது பிடித்துக் கொண்டு, அது மேலோங்க வாழ்ந்தால்
முடிவில் நாமும் அதுவாகி அமைதியடைவோம்.

சமுத்திரத்தில் இருக்கும் குமிழி உடைந்து சமுத்திரமாவது போல,


மண்பாண்டம் உடைந்து எல்லையில்லா வெட்ட வெளியாவது போல நாமும் அந்த
இறைநிலை அடைவது தான் நாம் அடைய வேண்டிய நிலை !

61.

உங்கள் விதியை
தெரிந்து கொள்ள
எளிய வழி!

எல்லோருக்குமே அவர்கள் விதியையும், எதிர்காலத்தையும் அறிந்து


கொள்ளும் ஆர்வம் உண்டு. சிலர் அதே யோசனையில் தீவிரமாக இருப்பதும்
உண்டு. யாராவது நல்ல ஜோதிடர் இருக்கிறார் என்றால், அவர்
சொன்னது நூறு சதம் யாருக்காவது பலித்திருக்கிறது என்றால் நம்
ஜாதகத்தையும் அந்த ஜோதிடரிடம் எடுத்துச் சென்று காட்டலாமே என்று
தோன்றாதவர்கள் மிகவும் குறைவு. எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்
போது, குழப்பங்கள் நம்மை ஆட்கொள்ளும் போது விதியில் என்ன
எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆர்வம் மேலிடுவது இயற்கை.

உண்மையில் விதியை அறிய ஜோதிடத்தை ஒருவர் நாடிப் போக


வேண்டியதில்லை. நம் எண்ணப் போக்கிலேயே நாம் என்னவாகப் போகிறோம்,
எப்படி இருக்கப் போகிறோம் என்பது தெரிந்து விடும். சொல்லப் போனால் எந்த
ஜோதிட சாஸ்திரத்தையும் மிஞ்சி மிகத் துல்லியமாக அது சொல்லி விடும்.
அதைத் தான் பகவத் கீ தையின் பதினாறாவது அத்தியாயமான தெய்வாசுர
சம்பத் விபாக யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பத்திலேயே தெரிவிக்கிறார் :

"பயமின்மை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக நிற்றல், தானம்,


வெளியிலுள்ள புலன்களை அடக்குதல், வேள்வி, வேதம் ஓதுதல், தவம்,
நேர்மை;
அஹிம்சை, சத்தியம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள்
சொல்லாமல் இருத்தல், பிராணிகள் மீ து கருணை, பேராசையின்மை, மென்மை,
வெட்கம், வணான
ீ செயல்களைச் செய்யாமல் இருத்தல்,

தேஜஸ், பொறுமை, தைரியம், உடல் தூய்மை, வஞ்சகமின்மை,


தற்பெருமையில்லாமை, இவையெல்லாம் தெய்வக ீ மனப்பான்மையுடன்
பிறந்தவர்களின் இலக்கணங்களாகும்."

"டாம்பீகம், கர்வம், தற்புகழ்ச்சி, கோபம், கடுஞ்சொல், ஞானமின்மை ஆகியவை


அசுர மனப்பான்மையுடன் பிறந்தவனின் பிறவிக் குணங்கள் ஆகும்."

"தெய்வகக்
ீ குணங்கள் மோட்சத்தை அடைய உதவும். அசுர மனப்பான்மை
சம்சார பந்தத்தை அளிக்கும்."

"பாண்டவா, வருத்தப்படாதே. நீ தெய்வகக்


ீ குணங்களுடன் பிறந்திருக்கிறாய்."

தெய்வகக்
ீ குணங்களில் முதல் குணமாக பயமின்மையை பகவான் கூறுவதைக்
கவனிக்க வேண்டும். பயத்தைப் போல் நம்மைக் கட்டிப் போட்டுப் பின்னுக்குத்
தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை. பெரும்பாலான நேரங்களில் பயம்
அஞ்ஞானத்தின் விளைவாகவே இருக்கிறது. அது நம் திறமைகளை
மழுங்கடிக்கிறது. முயற்சிகளை முடக்கி விடுகிறது. மற்ற எத்தனையோ நல்ல
தன்மைகள் இருந்த போதும் கோழைத்தனத்தால் பிரகாசிக்க முடியாமல்
போனோர் ஏராளம்.

மனத்தூய்மையும், ஞான வழியில் நிற்பதும் தவறான பாதையில் சென்று பின்


கஷ்டப்படும்படியான சூழ்நிலையை முன்கூட்டியே தடுக்கின்றது. புலன்
அடக்கமும் நம் சக்திகளை விரயமாக்காமல் உயர்ந்த விஷயங்களுக்குப்
பயன்படுத்தும்படியாக நம்மை ஊக்குவிக்கிறது.

அடுத்தது வேள்வி இந்தக் காலத்தில் செய்ய முடிந்த விஷயம் தானா என்ற


கேள்வி எழுகிறது. வேள்வி என்பது ஒரு தினசரி காரியமாக இருந்த
காலக்கட்டத்தில் கூறப்பட்டது பகவத் கீ தை. இன்று முறையாகச்
செய்பவர்களும் இல்லை, செய்யும் சூழலும் இல்லை என்பதால் இதைப்
பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதே போல் வேதம் ஓதுதல். அக்காலத்தில்
வேதம் ஓதுதல் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. படிப்பது புரியும்,
வாழ்வின் மேலான உண்மைகளை உணர்த்தி வழி காட்டும் என்கிற நிலை
இருந்தது. இன்று அந்த நிலை எல்லோருக்கும் இல்லை என்பதால் உயர்ந்த
ஞானத்தை உணர்த்தும் நூல்கள் படித்தல் என்றுகூட நாம் எடுத்துக்
கொள்ளலாம்.

இங்கே குறிப்பிட்ட தவமும் பழைய காலத்திற்குப் பொருந்துவது என்று


நினைக்க வேண்டாம். மன ஒருமைப்பாட்டுடன் எந்த உயர்ந்த செயலைச்
செய்தாலும் அது தவம் தான். அந்தத் தவநிலை கைகூடாததால் தான் நாம்
அடிக்கடி சறுக்குகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து
விட்டுச் சும்மா இருக்கும் கலை நமக்கு வசமாவதில்லை. சில சமயங்களில்
அப்படி இருந்தால் கூடப் பல சமயங்களில் தேவையில்லாததையும் செய்து
நம் சக்தியை வணடிக்கிறோம்.
ீ அதனால் தவம் என்ற சொல் மலையுச்சியில்
தனிமையில் முனிவர்கள் செய்யும் சமாச்சாரம் என்ற நினைவை ஒழித்து நம்
வழியில் நாமும் தவ வாழ்க்கை வாழ முடியும் என்ற புரிதலுடன் மன
ஒருமைப்பாட்டுடன் செய்ய வேண்டியதைச் சிறப்பாகச் செய்யும் வித்தையை
நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதே போல் அஹிம்சையும் பல முறை வற்புறுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு


ஹிம்சையும் அதற்கான விளைவுகளை அதற்குரிய காலத்தில் கொண்டு
வருவதால் தேவையில்லாத விரும்பத்தகாத விளைவுகளை வரவழைத்துக்
கொள்ளாமல் இருக்கவாவது அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும்.

இங்கே வெட்கம் என்பது தவறான செய்கைகள் செய்வதில் இருக்க வேண்டிய


கூச்சத்தையும், நாணத்தையும் சொல்கிறது. அதே போல் வணான

செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது மிக
முக்கியமானது. தேவையில்லாமல் கைகால்களை ஆட்டுவது,
அர்த்தமில்லாமல் பேசுவது, பயனில்லாத விஷயங்களைச் சிந்திப்பது எல்லாம்
அந்த வகையில் சேர்ந்தவை. அவை பெரிய குற்றங்கள் அல்ல என்றாலும்
அவை நாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கான சக்தியிலிருந்து பெருமளவு
திருடிக் கொள்கிறது என்பதால் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

மற்றவை எல்லாம் முன்பு விவரித்த விஷயங்களே. இந்த நல்ல தன்மைகளை


தெய்வகத்
ீ தன்மைகளாக பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். இந்தத்
தெய்வகத்ீ தன்மைகளால் வாழ்க்கை சுபிட்சம் அடையும், நிறைய சாதனைகள்
செய்ய முடியும், முன்னேற முடியும் என்பது நிதர்சனம். இந்தத் தன்மைகளுக்கு
எதிரான தன்மைகளையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அவற்றில் முதலில் வருவது டாம்பீகம். உண்மையில் சொல்லிக் கொள்ளச்


சிறப்பாக எதுவுமில்லாத மனிதர்களே டாம்பீகத்தில் ஈடுபடுகிறார்கள். உள்ளே
இருக்கும் குறைப்பாட்டை மறைக்க அவர்களுக்கு டாம்பீகம்
தேவைப்படுகிறது. அதே போல் கர்வமும் அவனவன் மட்டுமே உண்மை என்று
நம்பும் கற்பனை உயர்வு நவிற்சியே. அந்த இல்லாத உயர்வுகளை
அடுத்தவர்கள் பார்ப்பதில்லை. அழிவு வரும் வரை முட்டாள்கள் தங்கும் மனோ
நிலையாகத் தான் டாம்பீகமும், கர்வமும் கருதப்படுகிறது. கோபம்,
கடுஞ்சொல், ஞானமின்மைக்கு முன்பே நிறைய விளக்கங்கள் கொடுத்து
இருக்கிறோம். ஒட்டு மொத்தத்தில் அழிவை ஏற்படுத்துகிற அசுர குணங்கள்
இவை.

இவை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து முடிவுக்கு வரச் சொல்லப்பட்டு


இருக்கின்றன. அர்ஜுனனுக்குத் தெய்வகக்ீ குணங்களுடன் பிறந்திருப்பதாக ஸ்ரீ
கிருஷ்ணரே சர்ட்டிபிகேட் தந்து விட்டார். நாம் எப்படி இருக்கிறோம் என்று
இந்தப் பட்டியலை வைத்து சிந்திப்போம். நம் விதி அதன்படியே
அமையப்போகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம் !

இத்துடன் பகவத்கீ தையின் பதினைந்தாவது புருஷோத்தம யோகம்


முடிவடைந்தது.

62.

பணம் பின்னே
ஓடும் பிணங்கள் !

தெய்வகக்
ீ குணங்களை விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அசுர குணங்களை விளக்க
ஆரம்பிக்கிறார். அந்த வர்ணனைகள் எல்லாம் நிகழ்காலச் சமுதாயச்
சீர்குலைவை மிகத் தெளிவாக விளக்குவது போல் தான் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே வியாசரின் தொலை
நோக்கு எப்படி இருந்திருக்கிறது என்பதை அந்த வர்ணனைகளைப் படிக்கும்
போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீகிருஷ்ணர்
சொல்வதைப் பார்ப்போம்.

"அசுரத்தன்மை கொண்டவர்கள், செய்ய வேண்டியது எது, விலக்க வேண்டியது


எது என்பதை அறிய மாட்டார்கள். தூய்மையோ, ஒழுக்கமோ, சத்தியமோ
அவர்களிடம் கிடையாது."

"அவர்கள் இந்த உலகம் ஆதாரமற்றது, பொய்யானது, கடவுளற்றது,


ஆண்-பெண் உறவினாலேயே உண்டானது, எனவே காமத்தையே
அடிப்படையாகக் கொண்டது, இது தவிர வேறெதுவும் இல்லை என்று
அசுரகுணம் படைத்தவர்கள் கூறுகிறார்கள்."

"இத்தகைய பார்வையுடன் கூடியவர்களாய், ஆத்மஞானம் அற்றவர்களாய்,


விவேகம் அற்றவர்களாய், எல்லோருக்கும் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டு
வாழ்ந்து உலகத்தின் அழிவுக்கும் காரணமாவார்கள்."

வாழ்க்கையின் அர்த்தமென்ன, இறுதியில் நாம் பெறப்போவதென்ன, செய்ய


வேண்டியது என்ன, விலக்க வேண்டியது என்ன என்றெல்லாம் அசுரத்தன்மை
அடைந்தவர்கள் அறிய மாட்டார்கள். சிந்தித்து வாழ்ந்தால் ஒழிய உயர்
குணங்கள் ஒருவரை அண்டாது என்பதால்
தெய்வக ீ உயர்குணங்களான தூய்மை, ஒழுக்கம், சத்தியம் எல்லாம்
இவர்களிடம் இருப்பதில்லை.

வாழ்க்கைக்குப் பெரிய அர்த்தங்கள் இருப்பதாய் அசுரத்தன்மை மேலிடும்


நபர்கள் நினைப்பதில்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் எது எப்படித் தெரிகிறதோ
அப்படியே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். கடவுள் கண்ணுக்குத்
தெரிவதில்லை என்பதால் அவர்கள் கடவுள் இல்லை என்றே நினைப்பார்கள்.
அதே போல காமத்தினால் விருத்தியாகும் உலகத்தையே அவர்கள்
பார்ப்பதால் அதைத் தவிர வேறு மேலான நிலை பற்றி அவர்கள் யோசிப்பதும்
இல்லை.

வாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்கிற பெயரில் சிற்றின்பங்களிலும்,


கேளிக்கைகளிலும் தங்கி விடும் இந்த மனிதர்கள் வாழ்க்கையின் அர்த்தமும்,
குறிக்கோளும் அதுவே என்று கடைசி வரை இருந்து விடுகிறார்கள்.

எங்கே ஞானம் இல்லையோ, அங்கே தெளிவு இருக்க வழியில்லை. அதனால்


இவர்களுக்கு விவேகமும் இருக்க வழியில்லை. அதனால் விளைவுகள் பற்றிய
அறிவும் இவர்களிடம் இருக்காது. இதனால் இவர்களுக்கு ஏற்படுவதெல்லாம்
துன்பம் தான்.
அடுத்தவர்களுக்கு இவர்கள் ஏற்படுத்துவதும் துன்பங்களே. தாங்களும்
துன்பப்பட்டு, அதை அடுத்தவர்களுக்கும் வினியோகித்து முடிவில் தாங்களும்
அழிந்து, உலகையும் அழித்து விடும் போக்கே இவர்களிடம் மேலோங்கி
இருக்கும்.

"நிரப்ப முடியாத ஆசையுடன் கூடியவர்களாய், டம்பமும், கர்வமும், மதமும்


கொண்டு மதிமயக்கத்தினால் அநியாய வழியில் செல்வத்தைத் திரட்டிக்
கொண்டு அசுத்தமான காரியங்களில் ஈடுபடுவார்கள்."

"அளவில்லாததும், மரண காலம் வரையில் உழைத்துச் சம்பாதிக்க


வேண்டியதுமான கவலையை மேற்கொண்டவர்களாய் சிற்றின்பங்களை
அனுபவிப்பதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு, நூற்றுக்
கணக்கான ஆசைக்கயிறுகளால் கட்டுண்டு, காமக் குரோதங்களையே
குறிக்கோளாகக் கொண்டு சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக நீதிக்குப்
புறம்பான முறைகளில் செல்வம் திரட்ட முயல்வார்கள்."

"இது என் சாமர்த்தியத்தினால் கிடைத்தது. இந்த ஆசையைப் பூர்த்தி செய்து


கொள்வேன். எனக்கு இத்தனை செல்வம் இருக்கிறது. மேலும் இத்தனை
செல்வம் என்னைச் சேரப் போகிறது என்னும் சிந்தனையே மேலோங்கி
இருக்கும்”

நிரப்ப முடியாத ஆசைகள் துன்பத்தின் ஊற்றுக்கண். ஒரு ஆசை நிறைவேறி


முடிவதற்குள் நூறு ஆசைகள் மனதில் உதயமாகின்றன. அதன் பின்னே ஓடும்
ஓட்டத்தில் டம்பமும், கர்வமும், மதமும் சேர்ந்து கொள்கின்றன. என்னைப்
போல் யார் என்று தோன்றுகிறது, நானே பெரியவன், நானே சிறந்தவன் என்று
அனைவருக்கும் பறைசாற்றவும், நிரூபிக்கவும் தோன்றுகிறது. சொந்த
ஆசைகளே அனைத்தும் நிறைவேற முடியாமல் திண்டாடும் போதும்
அடுத்தவர் பார்வையில் உயர வேண்டும், அடுத்தவரை விஞ்ச வேண்டும்
என்ற பேராசையும் சேர்ந்து கொள்கிறது. எல்லாம் சேர்ந்து கொள்ளும் போது
சரியான சிந்தனா சக்தி இருப்பதில்லை. மதி மயக்கத்தில் ஆழ்ந்து அத்தனையும்
சாதிக்க ஒரே வழி செல்வம் தான் என்று நம்ப ஆரம்பித்து விடும் மனிதன்
பின்னால் எதையும் யோசிப்பதில்லை. நியாயம், அநியாயம், தர்மம், அதர்மம்
எல்லாம் முட்டாள்கள் யோசிக்கும் விஷயங்களாகத் தோன்றுகின்றன.
நியாயமில்லாத வழிகளிலும் பணம் சேர்க்கும் போக்கு ஒருவனிடம் ஏற்பட்டு
விடுகிறது.

அப்படிப் பணம் சேர்க்கும் எண்ணம் மனதில் வலுப்பட்ட பிறகு மரண காலம்


வரையில் அதைத் தவிர அவன் வேறெதையும் யோசிப்பதில்லை. யோசிக்க
இருப்பதாகவும் அவன் நினைப்பதில்லை. அவன் ஆசைகள் நிரம்பாதது
போலவே அவன் பணமும் அவன் போதும் என்று எண்ணும் அளவுக்கு
நிரம்புவதில்லை. எத்தனை வந்தாலும் அதைப் போட்டுச் சேர்த்து வைக்கும்
பாத்திரம் அதை விடப் பல மடங்காய் பெரிதாகி விடுகிறது.

இடையிடையே சிற்றின்பங்களை அனுபவித்து அதையே பெரும்


சாதனையாக நினைக்க ஆரம்பிக்கின்றான். சிற்றின்பம் என்றுமே சிறிய
அளவில் நிற்பதில்லை. பெருமளவில் அவனுக்குத் தேவைப்படுகிறது. நூற்றுக்
கணக்கான ஆசைக்கயிறுகளால் பிணைக்கப்பட்டு அவன் அலைக்கழிக்கப்
படுகிறான். ஒரு கயிற்றினால் பிணைக்கப்பட்டு இருப்பவனே சிறைப்பட்டு
இருப்பது போல் உணர்வான், துன்பம் கொள்வான். ஆனால் பரிதாபம்
என்னவென்றால் நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் பிணைக்கப்பட்டு
அலைக்கழிக்கப்படும் போதும் சிறைப்பட்டு துன்பப்படும் உணர்வு கூட
ஏற்பட்டு அவர்களை யோசிக்க வைப்பதில்லை. அந்தப் பிணைப்புகளின்
இழுவைக்கு நடுவே சில சிற்றின்பங்கள் பின்னே போய் ஆசுவாசப்படுத்திக்
கொண்டு வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிப்பதாகவே அவன்
நினைப்பான்.

சிற்றின்ப, அற்ப விஷயங்களிலேயே இருந்து திளைத்து வாழும் மனிதன் அந்த


வகையிலேயே ஒன்றுமில்லாமல் ஆகி மடிவது தான் இயல்பாக
நிகழக்கூடியது. அப்படி அழிந்து கொண்டிருக்கும் போதும் சேர்க்கும் பணத்தை
மட்டுமே கணக்குப் போட்டு பெருமை கொள்ளும் போக்கு அவனுக்கு
இருக்கும். சேர்த்த பணம் எந்த வழியில் வந்திருக்கிறது, இதில் எத்தனை
பாவம், அதர்மம் கலந்திருக்கிறது என்றெல்லாம் யோசிக்க முடியாத அளவு
இதயம் மரத்துப் போனவனாக அவன் இருக்கிறான். அவன் அநியாயமாய்ச்
சேர்த்திருப்பதையும் தன் சாமர்த்தியத்தில் சேர்த்ததாகவே எண்ணி
பூரிப்படைவான். இன்னும் இத்தனை இருக்கிறது, இதை வைத்து இதெல்லாம்
அனுபவிக்கலாம் என்ற கணக்கே அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

மேன்மையான விஷயங்களுக்கும், உணர்வுகளுக்கும் என்றோ இறந்து


போனவனாக அவன் இருப்பான். ஒருவிதத்தில் அவன் நடமாடும் பிணமே.
படும் துன்பங்களைக்கூட அவன் முழுமையாய் உணர்வதில்லை. அடிபட்டு
அங்கங்கே இரத்தம் வழிந்து கொண்டிருந்தாலும் வலி தெரியாத குஷ்ட ரோகி
போலத் தான் அவன் வாழ்கிறான். ஆனால் அந்த நிலைமை கூட உறைக்காத
அந்த நடைப்பிண வாழ்க்கையிலும் கூட பணப்பேய் அவனைப் பிடித்து
ஆட்டுகிறது.

இது இன்று வாழும் எத்தனையோ அசுரர்களை விவரிப்பது போல்


இருக்கிறதல்லவா ?

63.

இந்த அசுரகுணங்கள்
உங்களிடம் இருக்கிறதா?

பணமே பிரதானம் என்று வாழும் அசுர குணத்தை அழகாக விவரித்த ஸ்ரீ


கிருஷ்ணர் தொடர்ந்து மற்ற அசுரக் குணங்களை விளக்க ஆரம்பிக்கிறார் :

"இந்தப் பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்ற பகைவர்களையும் நான்


கொல்வேன். நானே ஈஸ்வரன். செல்வத்தை அனுபவிப்பவன். நான் எல்லா
சித்திகளையும் பெற்றவன்; வலிமை மிக்கவன்; சுகமாக இருப்பவன்."

"நான் செல்வந்தன்; உயர்குலத்தில் பிறந்தவன். எனக்கு நிகரானவன் வேறு


எவனிருக்கிறான்? நான் யாகம் செய்யப் போகிறேன்; தானம் அளிக்கப்
போகிறேன்; இன்பத்தில் திளைக்கப் போகிறேன் என்று அஞ்ஞானத்தால்
மோகம் கொண்டவர்கள் நினைப்பார்கள்."
"பலவிதமாகத் திரிகின்ற மனமுடையவர்களாக, மோக வலையில்
சிக்கியவர்களாக, காம போகங்களில் ஈடுபட்டு அசுத்தமான நரகத்தில்
வழ்கிறார்கள்."

"தன்னைத் தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்பவர்களும்,


கர்வமுடையவர்களும், பணத் திமிர் கொண்டவர்களுமான அவர்கள்
பெயருக்காக சாஸ்திர விதிகளை மீ றி யாகம் செய்கிறார்கள்."

"அகங்காரம், பலம், கர்வம், காமம், குரோதம் ஆகியவற்றை மேற்கொண்டு, தம்


உடலிலும், பிறர் உடலிலும் உள்ள அந்தர்மியான என்னை
வெறுப்பவர்களாகவும் உள்ளனர்."

பகைவனை “கொல்ல” நினைக்கும் தீவிரப்போக்கினைச் சொல்லித் தொடர்கிற


இந்த அசுரகுணத்தை மேலோட்டமாகப் படித்தால் இக்காலத்தில்
வெகுசிலரையே சுட்டிக் காட்டும் இயல்பாக நமக்குத் தோன்றும். ஏனென்றால்
இன்றைய நாகரிக உலகில் பகைவர்களைக் கொல்லும் அளவுக்குச் செல்பவர்கள்
மிகவும் குறைவு தான். இதைச் சற்று விரிவாகவே எடுத்துக் கொள்ள
வேண்டும்.

இன்று மனிதன் பகைவர்களாக யாரையெல்லாம் நினைக்கிறான் என்றால்


அவன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களையும், அவனை
எதிர்ப்பவர்களையும், அவனைக் கடுமையாக விமர்சிப்பவர்களையும் தான்.
அவர்களைக் கொன்று குவிக்க அவன் துடிப்பதில்லை என்றாலும் அவர்களை
வழ்த்த
ீ வேண்டும், தன் வழியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்
என்றெல்லாம் துடிக்கிறான். அப்படிச் செய்ய அவன் தேர்ந்தெடுக்கும்
வழிகளில் அவன் நியாய அநியாயங்கள் பார்ப்பதில்லை. என்னை எவரும்
எதிர்க்கக்கூடாது, எதிர்த்தவர்களுக்கு இது தான் கதி என்பதை எல்லாருக்கும்
காட்ட நினைக்கிறான். அப்படி வழ்த்துவதிலும்
ீ அப்புறப்படுத்துவதிலும் வெற்றி
கண்டு விட்டால் தன்னைக் கடவுளுக்கு இணையாகவே நினைத்துக் கொள்ளும்
போக்கும் அவனுக்கு வந்து விடுகிறது. செல்வத்திற்கு அடுத்தபடியாக அவன்
வலிமைக்காகவும் கர்வம் கொள்கிறான். இது அசுர குணமே!

அதே போல் உயர்குலத்தில் பிறந்தவன் என்றால் உயர்ந்த ஜாதியில்


பிறந்தவருக்காகச் சொல்லப்பட்டது என்று மட்டும் நினைத்துக் கொண்டால்
கீ தை சொல்லும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள நாம் தவறி விட்டது போல
ஆகி விடும். இங்கு மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது
முறை.

உன்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல் நீ பிறந்த ஜாதி, இனம், மதம்,


கலாச்சாரம், ஆகியவற்றிற்கு நீ கர்வம் கொண்டால் அதுவும் அசுர குணமே.
என் இனம் உயர்ந்தது. என் மதம் உயர்ந்தது என்று நினைப்பதில், நம்புவதில்
தவறில்லை. ஆனால் என் இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் உயர்ந்தது,
என் மதம் மற்ற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று கர்வம் கொள்ளும்
போது போர்க்குணம் உருவாகி விடுகிறது. மற்றவர்களைக் கீ ழ்த்தரமாக
நினைக்கும் போக்கு உருவாகி விடுகிறது. நானே உயர்ந்தவன், மற்றவர்கள்
எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்று யார் எண்ணினாலும் அது அசுர குணமே.
உன் மதம், இனம், மொழி, கலாச்சாரம் அனைத்தையும் மதித்தும் போற்றியும்
வாழ். அது தெய்வகக்
ீ குணமே. ஆனால் அது மட்டுமே உயர்ந்தது,
மற்றவருடையதெல்லாம் தாழ்ந்தது என்ற எண்ணமும், நம்பிக்கையும்,
தேவையில்லாமல் உனக்கு வருமேயானால் அது அசுர குணமே.

தானம் செய்வதும், யாகம் செய்வதும் கூட மேன்மையானதே. ஆனால் உன்


உயர்வைக் காட்டுவதற்காக அதைச் செய்தாலும், செய்து விட்டு உன் உயர்வை
அடுத்தவருக்கு உணர்த்த நீ அவற்றைச் செய்தாலும் அது அசுரகுணமே.

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட யாகங்கள் அனைத்தும் நன்மை வேண்டியே.


உயர் சிந்தனைகளே அந்தச் சடங்குகளின் அடிப்படையாகச் சொல்லப்பட்டு
இருக்கின்றன. ஆனால் நோக்கம் அடுத்தவருக்கு உன் உயர்வைக் காட்டும்
படாடோபமாக இருக்குமானால்
அந்த யாகங்களும் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பானவையாகவே நினைக்க
வேண்டும்.

இக்காலத்தில் யாகங்கள் அதிகமாக நடத்தப்படுவதில்லை. அதற்கு இணையாக


நாம் செய்யும் பூஜைகள், வழிபாடுகளை எடுத்துக் கொள்ளலாம். அவற்றை
நாம் பணிவுடன் பக்தியுடனும் செய்வதை விட்டு விட்டுப் படாடோபத்துடனும்,
பகட்டுடனும், அடுத்தவர்க்கு நம் உயர்வைக் காட்டுவதற்காகச் செய்தால்
லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் செலவு செய்தாலும் அதை இறைவன்
நல்ல கணக்கில் எடுத்துக் கொண்டு அருள்பாலிக்க மாட்டான்.

எல்லாரிடமும் அந்தர்யாமியாய் இறைவன் இருக்கிறான். அதை அசுர குணம்


படைத்தவர்களால் காண முடியாது. எதிரி, கீ ழானவன், குறைபாடுள்ளவன்,
சமமில்லாதவன், பிடிக்காதவன் என்றெல்லாம் ஒருவனைப் பார்க்கும்
போதும் வெறுப்பே மிஞ்சுகிறது. அது அவர்களுக்குள் இருக்கும்
இறைவனையே வெறுப்பது போலத் தான்.

இந்த அர்த்தங்களுடன் இந்த கீ தை சுலோகங்களைப் படிக்கும் போது நாம்


நம்மிடம் கூடச் சில அசுரகுணங்களைக் கண்டுபிடித்து விட முடியும். அப்படிக்
கண்டுபிடித்து அவற்றை நீக்கிக் கொண்டால் மட்டுமே நாம் இறையருளுக்குப்
பாத்திரமாக முடியும் !

64.

நரகத்தின்
மூன்று வாசல்கள் !

அசுரகுணங்களை விவரித்த பின் ஸ்ரீ கிருஷ்ணர் அந்தக் குணங்களின்


விளைவுகளை இவ்வாறு விவரிக்கிறார் :

"அப்படி என்னை வெறுக்கின்ற பாவிகளும், கொடியவர்களுமான மனிதப்


பதர்களை அசுரப் பிறவிகளிலேயே மீ ண்டும் மீ ண்டும் தள்ளுகிறேன்."
"குந்தி மகனே ! அவ்வாறு அசுரப் பிறவியாகப் பிறந்த மூடர்கள் ஒவ்வொரு
ஜென்மத்திலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலையை
அடைகிறார்கள்."

அசுரகுணங்கள் நிறைந்த பாவிகளைத் திரும்பத்திரும்ப அசுரப்


பிறவிகளிலேயே தள்ளுவதாகவும், தொடரும் ஜென்மங்களில் அவர்கள்
மேலும் மேலும் தாழ்ந்த நிலைக்குப் போவதாகவும் பகவான் கூறுவதை
அவருடைய கருணையின்மையாக நாம் பார்க்கக்கூடாது. அவரவர்
கர்மங்களின்படியே பலன் அளிக்க வேண்டியவராக இருப்பதால் தான் அசுர
குணங்கள் நிறைந்த மனிதர்கள் அதற்கேற்றபடியே அசுரப் பிறவிகளில் பிறக்க
நேர்கிறது. நன்மையோ தீமையோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அந்தப்
பாதைகளில் பயணிக்கும் மனிதன் செல்கின்ற பாதையில் மேலும்
முன்னேறவே செய்கிறான். அதனால் தீமைகள் அதிகம் செய்து செய்து மேலும்
மேலும் தாழ்ந்து போகிறான்.

சரி. இப்படித் தாழ்ந்து கொண்டே போகும் இவர்கள் தப்பிப்பது தான் எப்போது?


தீயகுணங்களில் ஆழ்ந்து ஆழ்ந்து அதில் அடையும் துன்பங்கள் உச்சத்திற்குப்
போய் சலித்து, போதும் என்று தோன்றி, காரணம் அறியும் சுயபரிசோதனைக்
காலம் வரும் வரை இவர்கள் தப்பிப்பதில்லை. அந்தச் சுயபரிசோதனையில்
ஆன்மாவையும், இறைவனையும் உணர்ந்து திருந்தும் போது அவர்கள்
அடியோடு மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கும் முக்தி கிடைக்கிறது.

இதற்கு கொள்ளைக்காரனாய் வாழ்ந்த வால்மீகி திருந்தியது மட்டுமல்லாமல்


ராமாயணம் எழுதுமளவு உயர்ந்ததும், காமாந்தகனாக வாழ்ந்த
அருணகிரிநாதர் வருந்தி, திருந்தி, திருப்புகழ் பாடுமளவு மாறியதும் சிறந்த
உதாரணங்கள். தங்கள் செயலில் பெருந்துக்கமும், பச்சாதாபமும் அடையும்
காலம் வந்த பின் தான் சுயபரிசோதனையும், அதன்பின் ஆத்மஞானமும் வந்து
அவர்களைக் காப்பாற்றும். அது வரை அவர்களுக்கு விதவிதமான நரகங்கள்
தான்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கடைத்தேற அர்ஜூனனுக்கு வழி சொல்கிறார் :

"காமம், குரோதம், லோபம் இவை மூன்றும் நரகத்திற்கு மூன்று வாயில்கள்.


அவை ஆத்மாவை இழிநிலைக்குத் தள்ளக் கூடியவை. ஆகவே இம்மூன்றையும்
விட்டுவிட வேண்டும்."

"இந்த மூன்று நரக வாயில்களிலிருந்தும் விடுபட்ட மனிதன் தனக்கு


நன்மையைச் செய்து கொள்கிறான். இதன் மூலம் பெரும்பேற்றை அடைகிறான்."

"எவன் சாஸ்திர முறையைத் துறந்து தன் மனம் போனபடி நடந்து


கொள்கிறானோ அவன் சித்தி பெறுவதில்லை.
பெரும்பேற்றை அடைவதில்லை; சுகத்தையும் அடைவதில்லை."

"ஆகவே செய்யத்தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில்


சாஸ்திரம் தான் உனக்குப் பிரமாணம். சாஸ்திரத்தில் கூறிய முறையை
அறிந்து கர்மங்களைச் செய்வாயாக!"
காமம், வெறுப்பு, பேராசை இந்த மூன்றும் நரகத்தின் வாசல்கள் என்று
பகவான் கூறுகிறார். இந்த வாசல்கள் மிகவும் பகட்டானவை, கண்ணையும்
கருத்தையும் கவரக்கூடிய அளவு கவர்ச்சியானவை, எத்தனை ஆட்களும்
போக முடிந்த அளவு விசாலமானவை. அதனால் தான் அவற்றின் வழியே
மனிதர்கள் திரளாய் போய்ச் சிக்கிக் கொள்கிறார்கள். உள்ளே போன பிறகு
பாதிப்பில்லாமல் திரும்பி வருவது சாத்தியமில்லை. அதனால் தான் அந்த
வழியில் போனால் ஆனந்தம் கிடைக்கும் என்று ஏமாந்து போகாமல்
எச்சரிக்கையுடன் தவிர்ப்பவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான் என்றும்,
அதன்மூலம் பெரும்பேற்றை அடைகிறான் என்றும் சொல்கிறார்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. தவறான பாதையில் எத்தனை தூரம்


போகிறோமோ அத்தனை தூரமும் திரும்பி வரவும் வேண்டியிருக்கிறது.
தவறான வழியில் போகத் தேவையாக இருந்த காலம் அளவுக்கு, திரும்பி
வருவதற்கான காலமும் தேவைப்படுகிறது. இப்படிப் போய்ப் போய் திரும்பி
வருபவன் நிறைய காலத்தை வணடிக்க ீ நேர்கிறது. திருந்தி, உணர்ந்து தான்
போக வேண்டிய உண்மையான இடத்திற்குச் செல்ல முயற்சிக்கும் போது
கடைசிவரை போய்ச் சேரத் தேவையான காலம் அவனுக்கு மிஞ்சியிருக்குமா
என்பது சந்தேகமே! அதனால் தான் தவறான வழியில் போகாமல் இருப்பவன்
தனக்கு நன்மை செய்து கொள்வதாகவும், அவன் பெற வேண்டிய பெரும்பேறை
சிரமமில்லாமல் பெறுகிறான் என்கிறது கீ தை.

இங்கே சாஸ்திரங்கள் சொல்லும்படி வாழ வேண்டும் என்று சொல்வதை


பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் "சடங்குகள்" என்று எடுத்துக்
கொள்ளக்கூடாது. அது பிழையாகி விடும். ”தர்மக்‌
ஷேத்ரே” என்று தர்மத்தை
முதல் சொல்லாக வைத்து ஆரம்பிக்கும் பகவத்கீ தை தர்மங்களையும்,
மெய்ஞானத்தையும் விவரிக்கும் புனித நூல்களையே சாஸ்திரம் என்று
சொல்வதாக எடுத்துக் கொள்ள
வேண்டும். அந்த வகையில் பகவத்கீ தையும் ஒரு சாஸ்திரமே. வாழும்
நெறிகளை விளக்கும் அந்த வகை நூல்களே உண்மையான சாஸ்திரங்கள். அந்த
வாழ்க்கை நெறியே நாம் பின்பற்ற வேண்டியது. அந்த தர்ம சாஸ்திர,
மெய்ஞான வழிகளில் போனால் தான் வெற்றி கிடைக்கும், சுகம் கிடைக்கும்,
முக்தி கிடைக்கும்.

அதற்கு எதிர்மாறான வாழ்க்கை மனிதன் வெற்றியையும், சுகத்தையும்,


முக்தியையும் கண்டிப்பாக இழக்கிறான். இப்படி வாழ்க்கையின்
முக்கியங்களையும் உன்னதங்களையும் இழக்கும் படியான வழிகள் நமக்குத்
தேவையா என்பதைப் பகுத்தறிவுள்ள மனிதன் தனக்குள்ளே கேட்டுக் கொள்ள
வேண்டும். எப்படி வாழ வேண்டும், என்ன செய்ய வேண்டும், எதையெல்லாம்
செய்யக்கூடாது என்ற கேள்விகளுக்குப் பதில்களை பகவத்கீ தை போன்ற
தர்மநெறி சாஸ்திரங்களில் அவன் தெரிந்து கொள்ளலாம்.

இத்துடன் கீ தையின் பதினாறாவது அத்தியாயம் நிறைவு பெற்றது.

65.

எதையும்
தீர்மானிப்பது
சிரத்தையே!

பகவத் கீ தையின் பதினேழாம் அத்தியாயமான சிரத்தாத்ரய விபாக


யோகத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனன் சாஸ்திர விதிமுறைகளை மீ றி
சிரத்தையால் உந்தப்பட்டு வழிபாடு செய்பவர்களையும், யாகம், தானம், தவம்
முதலியவற்றைச் செய்கின்றவர்களையும் எந்த வகையில் எடுத்துக்
கொள்வது என்று கேட்கிறான்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு பதிலளிக்கிறார் :

"எல்லோருடைய சிரத்தையும் அவரவருடைய உள்ளத்தின் நிலையை


ஒட்டியே இருக்கும். மனிதன் சிரத்தையே உருவமாக இருப்பவன்.. ஆகையால்
மனிதன் எந்தச் சிரத்தையோடு கூடியவனோ அந்தச் சிரத்தையின்
தன்மையானவனாகவே இருப்பான்."

எதையும் எந்த அளவில், எந்த வகையில் சிரத்தையுடன் மனிதன்


செய்கிறானோ அதுவே அவன் செயலை மட்டுமல்லாமல்
அவனையும் தீர்மானிக்கும் காரணியாகி விடுகிறது என்கிறார் பகவான். இன்று
பலரும் அலட்சியப்படுத்தும் உண்மை இது. எதையும் எந்திரத்தனமாகச்
செய்கிறோம். உண்மையான ஆர்வத்துடனும், சிரத்தையுடனும் நாம்
செயல்புரிவது மிகவும் குறைவாகி இருக்கிறது. புறத்தில் இருந்து வரும்
கட்டாயத்திற்காக, எதிர்பார்ப்புக்காக கடனே என்று செய்யும் பழக்கமே எங்கும்
வியாபித்திருக்கிறது. செய்யா விட்டால் என்ன நினைத்துக் கொள்வார்கள்,
என்ன சொல்வார்கள் என்ற அச்சமும், செய்வதைத் தவிர வேறு வழியில்லை
என்ற கட்டாயமுமே பலரையும் செயல்புரியத் தூண்டுகிறது. சிரத்தை
இல்லாத செயல்களாலேயே சமூகம் எந்திரத்தனமாகவும், விளைவுகளைக்
குறித்த பிரக்ஞை இல்லாத கீ ழ்த்தரமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.

யாகம், தானம், தவம் என்ற மூன்றையுமே அர்ஜுனன் கேட்டிருப்பதால்


யாகத்தைப் பற்றி பகவான் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்தக் காலத்தில் யாகம்
செய்வது மிக அபூர்வம். அதனால் இக்காலத்திற்குப் பொருத்தமாக எடுத்துக்
கொள்வதென்றால் வழிபாடு என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

"பலனைக் கோராமல், சாஸ்திரத்தில் சொல்லிய முறையில் ‘யாகம் செய்வது


என் கடமை’ என்று மனத்தை ஒரு நிலையில் நிறுத்திக் கொண்டு எந்த
யாகமானது செய்யப்படுகிறதோ அது சாத்வகம்
ீ எனப்படும்."

"பலனைக் கோரியாவது, அல்லது ஆடம்பரத்திற்காகவாவது எந்த யாகம்


செய்யப்படுகின்றதோ அதை ராஜஸமென்று அறிவாயாக."

"சாஸ்திர முறையைப் பின்பற்றாததும், அன்ன தானமில்லாததும்,


மந்திரங்கள் அற்றதும், தட்சிணையில்லாததும், சிரத்தையில்லாததுமாகச்
செய்யப்படும் யாகம் தாமஸம் எனப்படும்."

ஒரு செயலைக் கடமை என்று செய்வது வேறு, கடனே என்று செய்வது வேறு.
மனதை ஒருநிலைப்படுத்தி, பல வேண்டுகோள்களை வைத்து வியாபாரம்
பேசாமல், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இறைவனை வழிபடுவது சாத்வகமானது.

ஏன் பகவான் கடமை என்று சொல்கிறார். மனிதன் வழிபாடுகளால் தன்
மாசுகளைக் களைந்து கொண்டு
பரிசுத்தமாகிறான். இறை சிந்தனையும் வழிபாடும் அவன் தீய வழிகளில்
போகாமல் தடுக்கின்றது.

உள்ளத்தில் அழுக்கிருந்தால் அல்லவா அது தவறான வாக்காகவும்,


செயலாகவும் வெளிப்பட்டு அவனையும் அவன் சம்பந்தப்பட்டவர்களையும்
பாதிக்கிறது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் மனம் சுத்தமாக வேண்டும்.
மனம் சுத்தமாக இறைவனை விட்டால் வேறென்ன வழி? அந்தப்
பரம்பொருளை வணங்குவதைத் தவிர வேறென்ன வழி? மனிதனின்
மனத்தூய்மைக்கும் சமூக நன்மைக்கும் வழிவகுப்பதால் இறை வழிபாடு
மனிதன் கடமையாகிறது.

பலனைக் கோரி, இறைவனிடம் “நான் உனக்கு இதைச் செய்கிறேன். எனக்கு நீ


அதைச் செய்” என்று வியாபாரம் பேசி வழிபாடு செய்வது ராஜஸம். இதில்
கோரிக்கை இல்லா விட்டால் வழிபாடு இல்லை. ராஜஸத்தின் இன்னொரு
குணாதிசயம், ஆடம்பரம். அடுத்தவன் பார்க்க வேண்டும் என்று ஆடம்பரமாக
வழிபாடு நடத்துவது இன்று அடிக்கடி நாம் காண முடிந்த காட்சி.

பெரும் செலவு செய்து பூஜைகள் செய்து மாலை மரியாதைகளை ஏற்றுக்


கொண்டு எத்தனை பேர் நம்மைப் பார்க்கிறார்கள், வியக்கிறார்கள் என்பதில்
கூடுதல் கவனம் செலுத்தும் இந்த ராஜஸ வழிபாட்டில் இறைவனை விட
அதிக முக்கியத்துவத்தை வழிபடுபவன் பெற முயலும் வேடிக்கையை நாம்
நிறைய இடங்களில் பார்க்க முடியும். இங்கே சிரத்தை இருக்கிறது என்றாலும்
சிரத்தையில் பக்தி இல்லை என்பதே குறைபாடு.

பெரிய வழிபாடுகளில் சாஸ்திரமும் பின்பற்றப்படாமல், செவிக்கும்,


கருத்துக்கும் இனிமையான மந்திரங்களும் சொல்லப்படாமல், நாலு பேர்
வயிறும் நிறையாமல், ஏழைகளுக்கு தட்சிணையும் கிடைக்காமல்,
செய்பவருக்குச் சிரத்தையும் இல்லாமல் கடனே என்று ஏதோ ஒரு
கட்டாயத்திற்காக வழிபாடு செய்வது தாமஸம். இந்தத் தாமஸ வழிபாட்டில்
யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே விசேஷ குணம்.

எப்போதுமே பெரிய பூஜைகளில், வழிபாடுகளில் அன்னதானம்


விசேஷமானது. வயிறு நிறையும் வரை விரும்பிச் சாப்பிட்டு வயிறு
நிறைந்தவுடன் மனதாரப் போதும் என்று சொல்வது உணவைத்தான். பணமோ,
பொருளோ எத்தனை கொடுத்தாலும்
மனிதன்
திருப்தியடைவது கடினம். அதனால் மனிதனை முழுத்திருப்தி அடைய
வைக்கும் அன்னதானம் வலியுறுத்தப்படுகிறது.

மந்திரங்கள் செவிக்கும், கருத்துக்கும் இனிமையானது. மனிதனை இறைவழி


கவனத்தை திருப்ப வல்லது. அதுவும் இந்த தாமஸ வழிபாட்டில் இல்லை. அதே
போல தட்சிணையும் இல்லாமல், சிரத்தையும் இல்லாமல் வழிபாடு என்ற
பெயரில் எந்திரத்தனமான சடங்கை நடத்தி முடிப்பது தாமஸ வழிபாடு.

உங்கள் இறைவழிபாடு இதில் எந்த வகையைச் சேர்கிறது என்று


யோசியுங்கள்.
66.

தவம் என்றால் என்ன?

பகவத்கீ தை இந்த உலக மானிடர்களுக்குச் சொல்லப்பட்டது. கேள்விகளைக்


கேட்டது அர்ஜுனன் என்றாலும் அவன் மானிட இனத்தின் பிரதிநிதியாகவே
மனதில் எழும் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான் என்று எடுத்துக்
கொள்ள வேண்டும். அவை எல்லாம் சிந்திக்க முடிந்த மனிதன் மனதில் எழும்
குழப்பங்களின் வெளிப்பாடுகள். அதே போல ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும்
பதில்களும் அர்ஜுனன் என்ற தனிமனிதனுக்குத் தரும் பதில்கள் அல்ல. நம்
அனைவருக்கும் சொல்கிற உபதேசம் தான். நம் மனதில் எழும் குழப்பங்களை
நீக்கி ஞானத்தையும், வெற்றியையும், அமைதியையும் நோக்கி நம்
வாழ்க்கையை நடத்திச் செல்ல உதவும் விதமாக அமைந்துள்ள பதில்கள்
அவை.

அந்த வகையில் தவம் என்றால் என்ன என்று ஸ்ரீகிருஷ்ணர் அடுத்தபடியாக


விளக்குகிறார் :

"தேவர்கள், அந்தணர்கள், ஆச்சாரியர்கள், ஞானிகள் ஆகியோரைப் பூஜித்தல்,


தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை ஆகியவை உடலால் செய்யும்
தவமாகும்."

"பிறர் மனத்தைத் துன்புறுத்தாத, இனிமையும், பயன்படுவதும்,


உண்மையானதுமான பேச்சும், வேதமோதுவதும் வாக்கினால் செய்யப்படும்
தவமாகும்."

"மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, மௌனம், ஆத்மாவைத் தவிர


வேறொன்றும் நினைக்காமை, உள்ளத் தூய்மை- இவையெல்லாம் மனத்தால்
ஆற்றும் தவமாகும்."

தவ வாழ்க்கை என்றாலே காட்டிலும், மலையிலும் தனியாகச் சென்றமர்ந்து


செய்யும் சாதகமாகத் தான் நம்மில் பலரும் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.
அது துறவிகளுக்கும், முனிவர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் விஷயமாக
நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தவம் என்பது உடல்,
பேச்சு, மனம் இந்த மூன்றிலும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய
உயர் ரக வாழ்க்கை முறையாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

தேவர்கள், அந்தணர்கள், ஆச்சாரியர்கள், ஞானிகள் – இந்த நான்கு


வகையினரையும் பூஜித்தல் என்பதில் அந்தணர்களைச் சேர்த்திருப்பதை ஒரு
குறிப்பிட்ட ஜாதியை உயர்த்துவதாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு முறையான,
சாத்வகமான
ீ வாழ்க்கையை வாழும் பெரியோகளைப் பூஜிக்க வேண்டும்
என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.
யாரும் பிறப்பால் உயர்வதில்லை. ஒவ்வொருவரும் வாழும் முறையாலேயே
தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே மேலே சொன்ன
நான்கு வகை மனிதர்களையும் சேர்த்து, நமக்கு வழிகாட்டக்காட்டக் கூடிய
உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும், வாழ்பவர்களையும் பூஜிக்க
வேண்டும் என்று எடுத்துக் கொள்வது தான் சரி. அதோடு தூய்மை, நேர்மை,
பிரம்மச்சரியம், அஹிம்சை இந்த நான்குமே உடலால் கடைப்பிடிக்கப்படும்
தவத்தில் சேர்கின்றன.

பேச்சினால் மனிதன் செய்ய முடிந்த கொடுமைகளும் ஏராளம், நன்மைகளும்


ஏராளம். அது ஒன்று சரியாக இருந்தாலே மனிதன் எத்தனையோ
பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இருக்கும் பிரச்சினைகளைத்
தீர்த்துக் கொள்ளலாம். அதனால் தான் அதை இங்கே தவத்தின்
நிபந்தனையாகவே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். சொல்லும் சொல்லில்
இனிமை, பயன், உண்மை மூன்றும் இருக்க வேண்டும். அதே வேளையில் அது
அடுத்தவரைத் துன்புறுத்தாதபடி இருக்க வேண்டும். உண்மையைச்
சொல்கிறோம் என்ற பெயரில் அடுத்தவரை மனம் நோகச் செய்வது நம்
உத்தேசமாக இருந்தால் அந்த உண்மையையும் நாம் தவறுக்கே
பயன்படுத்துகிற மாதிரி ஆகி விடும். அதனால் உண்மையை இன்னொருவர்
மனம் நோகப் பயன்படுத்துவதும் தவத்திற்கு எதிரானதே.

மனதால் செய்யும் தவத்திற்கு முதல் அவசியமாக ஸ்ரீகிருஷ்ணர்


மகிழ்ச்சியைச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இரு
என்கிறார். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்ற சமயங்களில்
மனிதன் அடுத்தவர்களைத் துன்புறுத்துவதில்லை. அடுத்தவர்களைத்
துன்புறுத்துவதே மனதில் மகிழ்ச்சியில்லை என்பதன் வெளிப்பாடு தான்.
மகிழ்ச்சி என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. பெரும்பாலான
நேரங்களில் நாம் எதையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை வைத்தே அது
அமைகிறது.

அடுத்ததாக
அமைதியான இயல்பையும் மௌனத்தையும் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
மௌனத்தை வாக்கினால் செய்யப்படும் தவத்தோடு சொல்லாமல் மனதினால்
செய்யப்படும் தவமாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மௌனம்
மனதில் ஆரம்பிக்கப்பட வேண்டிய விஷயம். மனம் ஓயாமல் பேசிக்
கொண்டே இருந்து உதடுகள் பிரியாமல் இருந்தால் அது மௌனமல்ல,
வெறும் சத்தமில்லாமை மட்டுமே.

அந்த உள் மௌனம் எப்படி வரும்? ஆத்ம சிந்தனைகளிலேயே மனம்


லயித்திருக்குமானால் தானாக மனம் மௌனமாகி விடும். அதனால் தான்
அடுத்த நிபந்தனையாக ஸ்ரீ கிருஷ்ணர் அதைச் சொல்கிறார்.
ஆத்மசிந்தனைகளிலேயே லயிப்பது எப்போது சாத்தியம்? மனம் தூய்மையாக
இருந்தால் தான், அந்தச் சுத்தமான மனச்சூழலில் தான், ஆத்மசிந்தனைகளில்
மனம் லயிப்பது சாத்தியம். இப்படி ஒன்றை ஒன்று ஒட்டியும், ஒன்றின்
வெளிப்பாடாக இன்னொன்றும் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

உடல், வாக்கு, மனம் என்னும் இந்த மூன்று வகையிலும் மேலே சொன்ன


அம்சங்கள் கடைப்பிடித்தால் மட்டுமே தவ வாழ்க்கை வாழ்வதாக அர்த்தம்.
அதற்குப் புறத் தோற்றங்களும், இருக்கின்ற இடங்களும் முக்கியமல்ல. காவி
கட்ட வேண்டியதில்லை. தாடி வளர்க்க வேண்டியதில்லை. மலையேற
வேண்டும், காடு புக வேண்டும் என்று எல்லாம் நிபந்தனை இல்லை. இருக்கின்ற
இடத்திலேயே மேலே சொன்னவற்றைக் கடைப்பிடிக்க முயன்றால் அதுவே
தவம்.
67.

தவமும், தானமும்
மூன்று வகை !

உடல், வாக்கு, மனம் மூன்றிலும் தவத்தின் அம்சங்களைச் சொன்ன பகவான்


ஸ்ரீகிருஷ்ணர் தவத்திலும் நோக்கத்திலும், முறையிலும் சாத்வகம்,
ீ ராஜஸம்,
தாமஸம் என்று தவம் மூன்று வகையாக வேறுபடுவதைச் சுட்டிக்
காட்டுகிறார் :

"பயன் கருதாத யோகிகளால் உடல், வாக்கு, மனம் மூன்றாலும் அதிக


சிரத்தையுடன் செய்யப்படுகின்ற தவம் சாத்வகமானது."

"பாராட்டுக்காகவும், பெருமைக்காகவும், போற்றப்பட வேண்டும்


என்பதற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செய்யப்படுகின்ற தவம்
ராஜஸமானது."

"முரட்டுப் பிடிவாதத்தினால் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் தவமும்,


பிறரை
அழிப்பதற்காகவும் செய்யப்படும் தவமும் தாமஸமானது."

தவத்தைப் போலவே தானமும் மூன்று வகைப்படுதலை அடுத்ததாக


ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார் :

"பலனை எதிர்பாராமல், தனக்கு எந்தவிதமான உபகாரம் செய்யாதவருக்கும்,


அவர் தகுதியானவராக இருந்தால் தகுந்த இடத்தில், தகுந்த காலத்தில்
தருவது சாத்வக
ீ தானமாகும்."

"வேறு ஒரு உபகாரத்தை எதிர்பார்த்தும், பலனை உத்தேசித்தும்,


மனவருத்தத்துடனும் தருவது ராஜஸ தானமாகும்."

"மரியாதையின்றி இகழ்ச்சியோடு, தகாத இடத்திலும், தகாத காலத்திலும்,


தகுதியற்றவர்களுக்குத் தருவது தாமஸ தானமாகும்."

தகுதியானவர்களுக்கு வேண்டியதைத் தக்க சமயத்தில், தக்க இடத்தில்


பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் செய்வது தான்
உண்மையான தானம். இதில் ஒன்று குறைந்தாலும் தானம் சரியான தானமாக,
சாத்வகீ தானமாக இருக்க முடியாது.

தருகின்ற தானம் தரப்படும் நபருக்கு உண்மையில் பெரிய உதவியாக இருக்க


வேண்டும். அது தகுந்த காலத்தில் தரப்பட வேண்டும். தகுந்த இடத்தில் தரப்பட
வேண்டும். இடம், பொருள், காலம் அறிந்து தருவதும் முன் வாங்கியதற்குத்
திரும்பித் தருவதுமாக இருந்து விடக்கூடாது. முன்னொரு காலத்தில்
ஒருவரிடம் நாம் உதவி பெற்றிருந்தால் பின்னொரு காலத்தில் அவருக்குத்
தேவையான போது உதவி செய்தால் அது கடமை என்றும் கணக்கை நேர்
செய்ததாகவும் எடுத்துக் கொள்ளலாமே ஒழிய அதைத் தானம் என்று எடுத்துக்
கொள்ள முடியாது.

தானம் செய்வதிலும் பல முறை நடக்க விட்டு, மன்றாட விட்டு ஒன்றைச்


செய்வோமானால் அதுவும் சாத்வகீ தானமாக இருக்க முடியாது.
மரியாதையுடன் சந்தோஷமாகத் தானம் செய்தால் மட்டுமே அது சாத்வகத் ீ
தானமாகும்.

கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு. “கொடுத்தது தனக்கு. சேர்த்து வைத்தது


அடுத்தவனுக்கு”. உன்னிடம் இருப்பதை அடுத்தவனுக்குத் தந்தால் அது உன்
தானக்கணக்கில் சேர்ந்து விடுவதால் கொடுத்தது உன்னுடையதாகி
விடுகிறது. கொடுக்காமல் சேர்த்து வைத்ததை நீ இறக்கும் போது எடுத்துச்
செல்ல முடியாததால் உனக்குப் பின் யார் அதை அனுபவிக்கிறார்களோ அது
அவர்களுடையதாகி விடுகிறது. அதனால் கொடுத்து உன் கணக்கில் சேர்த்துக்
கொள்வது தர்மசிந்தனை மட்டுமல்ல, அறிவுடைமையும் கூட அல்லவா?

இதைச் செய்தால் இது கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு செய்யும் தானம்


ராஜஸமாகிறது. தர வேண்டியிருக்கிறதே என்று வருத்தத்துடன் செய்தாலும்
அது ராஜஸமே!

எல்லா விதங்களிலும் தானமாகாதபடி ஒரு பொருள் ஒருவருக்குத்


தரப்படுமானால் அது தாமஸமாகிறது. பெறத் தகுதியில்லாதவனுக்குத்
தரப்படுவது, காலம் கடந்து தரப்படுவது, தரக்கூடாத இடத்தில் தரப்படுவது,
இகழ்ச்சியாகத் தரப்படுவது எல்லாம் தானம் என்று கொடுப்பவன்
நினைக்கலாமே ஒழிய அது உண்மையான தானமாகாது. அப்படி தானம் என்ற
பெயர் கொடுத்தாலும் அது தாமஸ தானமாகவே கருதப்படும்.

அதே போல கொடுத்த தானத்தைச் சொல்லிக் காட்டினாலும், பலருக்குத்


தெரிவித்தாலும் அது சாத்வக ீ தானமாகாது. அதனால் அடுத்த முறை தானம்
செய்யும் போது அது சரியான, முறையான, சாத்வகமானீ தானமாக
இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

கீ தையின் பதினேழாவது அத்தியாயம் நிறைவு பெற்றது.

68.

கர்மம் – பலன் – தியாகம்

பகவத் கீ தையின் கடைசி அத்தியாயமும் பதினெட்டாம் அத்தியாயமுமான


மோட்ச சன்னியாச யோகத்திற்கு நாம் நுழைகிறோம். இந்தக் கடைசி
அத்தியாயம் பகவத் கீ தை இதுவரை சொல்லியிருக்கிற அனைத்து முக்கிய
உபதேசங்களின் சாராம்சத்தைத் திரட்டித் தொகுத்துத் தருவதாக இருக்கிறது.
இந்த அத்தியாயத்தில் புதிய கருத்துகள் இல்லை
என்றாலும் அனைத்தையும் முக்குணங்களான சாத்வகம், ீ ராஜஸம், தாமஸம்
என்னும் கண்ணாடிகளின் வழியாக ஆராய்ந்து பார்த்துச் சொல்லும்
வேலையை பகவான் இதில் பார்த்திருக்கிறார்.
மோட்ச சன்னியாச யோகத்தின் துவக்கத்தில் அர்ஜுனன் சன்னியாசம்
தியாகம் என்ற சொற்களுக்குத் தனித்தனியாக உண்மையான பொருள்
என்னவென்று அறியவிரும்புகிறான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"பலனைக் கோரிச் செய்யும் கர்மங்களை விட்டுவிடுதல் சன்னியாசம் என்று


அறிஞர்கள் சொல்கிறார்கள். தாம் செய்கின்ற அனைத்துக் கர்மங்களின்
பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்."

"சில அறிஞர்கள் கர்மங்கள் அனைத்தும் குற்றமுடையவை. ஆகவே


துறக்கப்பட வேண்டியவை என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேள்வி,
தானம், தவம் என்கிற கர்மங்கள் துறக்கத் தகுந்தன அல்ல என்று
கூறுகிறார்கள்.

இங்கு சொல்லப்படும் சன்னியாசத்திற்கும் தியாகத்திற்கும் இடையே உள்ள


வித்தியாசம் மிக சூட்சுமமானது. பலனை எதிர்பார்த்துச் செய்யும் எல்லாக்
கர்மங்களையும் செய்யாமல் விட்டுவிடுவது சன்னியாசம். அதாவது
பலனுக்காகச் செய்யும் செயல்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது துறவு.
துறவில் செய்யப்படும் செயல்கள் இப்படி வடிகட்டப்பட்டு குறைந்து
விடுகின்றன. ஆனால் எல்லாச் செயல்களையும் செய்து கொண்டே இருந்து,
அதன் பலன்களை மட்டும் துறப்பது தியாகம். தியாகத்தில் செயல்கள்
துறக்கப்படுவதில்லை. அதன் பலன்கள் மட்டும் துறக்கப்படுகின்றன.
பலன்களில் தனி ஆதாயம் தேடும் போக்கு தியாகம் செய்யப்படுகிறது.

கர்மங்கள் அனைத்தும் குற்றமுடையவை என்று சில அறிஞர்கள்


சொல்வதாக, பகவான் சொல்வது சிலருக்குக் குழப்பமாக இருக்கலாம். நல்ல
கர்மங்கள் எத்தனையோ இருக்கின்றனவே. அதிலும் குற்றம் வர
என்னவிருக்கிறது ?

எத்தனை உயர்ந்த நற்காரியங்களாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது


குற்றங்கள் இல்லாமல் போகாது. உதாரணத்திற்கு விவசாயம் மிக
உயர்வானது. அதனால் தான் நம் அனைவருக்கும் உணவே கிடைக்கிறது.
உலகம் அனைத்தும் பலனடைகிறது. இதெல்லாம் உண்மை தான். ஆனால்
விவசாயி வயலில் இறங்கி உழும் போது எத்தனையோ சிற்றுயிர்கள்
இறக்கின்றன. நற்பலன்களின் அளவை வைத்துப் பார்க்கும் போது அந்த தீய
பலன்களின் அளவு மிகக் குறைவாக இருந்தாலும் குற்றமேயில்லாத செயல்
என்று விவசாயத்தையும் சொல்ல முடியாதல்லவா? அதே போல் எல்லா
நற்செயல்களிலும் தேடிப் பார்த்தால் சிற்சில எதிர்மறை பலன்களும்
விளையக்கூடும். சில அறிஞர்களோ சாஸ்திரங்கள் சொல்லும் வேள்விகள்,
தானம், தவம் ஆகியவற்றை யாரும் துறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
சரி பகவான் என்ன சொல்கிறார்? பார்ப்போம்.

"பரதகுலச் சிரேஷ்டனே! புருஷ சிரேஷ்டனே! அந்தத் தியாகத்தைப் பற்றிய


என்னுடைய முடிவு என்ன என்பதைக் கேள். தியாகம் மூன்று வகையானது."
"வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத்தக்கனவல்ல. அவை
கட்டாயம் செய்யப்பட வேண்டியவைதான். ஏனென்றால் வேள்வி, தானம்,
தவம் இம்மூன்றுமே அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடியன."

"அர்ஜுனா! மேற்கண்ட கர்மங்களைச் செய்வதானாலும், பற்றுதலையும்,


பலனையும் துறந்துவிட்டுச் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய
தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கையாகும்."

"விதிக்கப்பட்ட கர்மத்தைத் துறந்துவிடுவது முறையல்ல. மோகத்தினால்


அதை அப்படித் துறப்பது தாமஸ தியாகமாகும்."

"ஒரு கர்மம் துக்கத்தைத் தருமென நினைத்து, உடலை வருத்த


வேண்டியிருக்குமோ என்ற பயத்தால் அந்தக் கர்மத்தைச் செய்யாமல்
விட்டால் அது ராஜஸத் தியாகம் ஆகும். அந்தத் தியாகத்திற்குரிய பலனை
அடைய மாட்டான்."

"விதிக்கப்பட்ட கர்மத்தைத் தான் செய்தே தீர வேண்டுமென்ற நினைப்புடன்,


பற்றுதலையும், பலனையும் துறந்து செய்யப்பட்டால் அந்தத் தியாகம்
சாத்வகத்
ீ தியாகம் என்று கருதப்படும்."

செயல்களை முழுவதுமாகத் தவிர்ப்பதில் பகவானுக்கும் உடன்பாடில்லை.


முக்கியமாக வேள்வி, தவம், தானம் மூன்றுமே துறக்காமல் செய்யப்பட
வேண்டியவை என்கிறார்.

வேள்வி என்பது காலப்போக்கினால் வழக்கொழிந்து விட்டிருக்கிறது. தவம்


என்பது காடுகளுக்குச் சென்று உட்கார்ந்து செய்யப்படும் பயிற்சியாக
இல்லாமல் நம் கவனத்தை நாம் பிறந்ததற்கான இலக்குகளில் குவிப்பது
என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தானமும் முக்கியமானது. இவை ஏன்
துறக்காமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காக பகவான் கூறும் காரணம் மிக
ஆழமானது. அறிவுடைய மனிதர்களைத் தூய்மைப்படுத்த இவை மிக
அவசியம் என்கிறார்.

வட்டை
ீ ஒரு முறை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டால் பின்
எப்போதும் அது
சுத்தமாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியுமா? முடியாதல்லவா?
தினமும் தூசும், குப்பைகளும் வந்து சேர்ந்து கொண்டே அல்லவா இருக்கும்.
அதனால் தானே தினமும் வட்டைச்
ீ சலிக்காமல் சுத்தம் செய்கிறோம். அதே
போல எத்தனை தான் அறிந்திருந்தாலும் மனிதனின் அறிவையும்,
மனிதனையும் சுத்தப்படுத்திக் கொள்ள இவை அவசியம் என்கிறார்.

கர்மங்கள் முக்கியமென்று முழங்கும் கர்ம யோகியான அவர் தியாகத்தை


மூன்று குணாதிசய மனிதர்கள் வகையிலும் பிரித்துச் சொல்கிறார்.
விதிக்கப்பட்ட கர்மத்தை செய்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் விருப்பு
வெறுப்பில்லாமல் செய்து அதன் பலனைத் துறப்பது சாத்வகத் ீ தியாகம்.
அந்தக் கர்மத்தைக் கஷ்டம் என்று நினைத்தோ, சிரமம் என்று நினைத்தோ
செய்யாமல் தவிர்ப்பது ராஜஸ தியாகம். இந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல்,
பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகச் செய்யாமலிருந்தால் அது தாமஸ
தியாகம்.
செய்ய வேண்டிய செயல் என்றாகி விட்ட பின் செய்து பலனை மட்டும்
தியாகம்
செய்வது சாத்வகம்.
ீ செயலின் லாப நஷ்டங்களைப் பார்த்துக் கணக்கிட்டு
செயலையே செய்யாமல் விடுவது ராஜஸம். சிந்தனையே செய்யாமல்
செயலற்றிருப்பது தாமஸம். ராஜஸத்திலும், தாமஸத்திலும் செயலின்
உயர்வு குறித்து உணர்ந்த உறுதியான நிலைப்பாடு இல்லை.

மேலும் பகவான் கூறுகிறார் :

"சத்துவகுணம் நிறைந்தவனும், மேதாவியும், சந்தேகமற்றவனுமான்


தியாகியானவன் ஒரு கர்மம் நல்லதல்லவென்று அதை வெறுப்பதுமில்லை.
ஒரு கர்மம் நல்லதென்று அதில் நாட்டம் கொள்வதுமில்லை."

"உடலைத் தாங்கும் எவனும் கர்மங்களை அறவே துறந்து விடுவதென்பது


முடியாத காரியம். ஆகவே கர்மபலனைத் துறந்தவனே தியாகி எனப்படுவான்."

"கர்மத்தின் பலனைத் துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தினுடைய நல்லதும்,


தீயதும், மேலும் இரண்டும் கலந்ததுமான மூன்றுவிதமான பலன்கள் அவர்கள்
இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது.
ஆனால் கர்ம பயனைத் துறந்த மனிதர்கள் அத்தகைய பலனை அடைய
மாட்டார்கள்."

மனிதனாகப் பிறந்தவன் செயலற்று இருந்துவிட முடியாது என்பதைத்


திரும்பத் திரும்ப கீ தை வலியுறுத்தியிருப்பதை முன்பே பல முறை பார்த்து
விட்டோம். இந்தக் கடைசி சுலோகத்தில் கர்மம் செய்பவனுக்கு இறந்த பின்
கட்டாயமாகக் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பகவான் சொல்லியிருப்பது
பற்றிப் பார்ப்போம்.

மனிதன் தன் செயல்களின் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.


இந்தப் பிறவியில் அது தீராவிட்டால் அடுத்த பிறவியிலாவது அனுபவித்தே
தீர்க்க வேண்டிய கடன் அது. பலன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அது
பிடிக்கும், இது வேண்டும் என்று எண்ணிச் செய்பவர்கள் இது பிடிக்காது, அது
வேண்டாம் என்று செயல்களைச் செய்யாமல் தட்டிக் கழிப்பதும் உண்டு.
இப்படிப் பலன் பார்த்து செயல் புரிபவன், செயலைத் தவிர்ப்பவன் கணக்கு
அனுபவித்தே தீர்க்க வேண்டும். அதனால் ராஜஸமும், தாமஸமும் இந்தப்
பிறவியிலும், அடுத்த பிறவியிலும் தீர்க்க வேண்டிய கணக்கை, அதே
செயல்களைச் சாத்வக ீ முறையில் செய்பவன் அனுபவித்துத் தீர்க்க
வேண்டியதில்லை. ஏனென்றால் அவன் கணக்குப் பார்த்து வேலை
செய்யவில்லை. தன் தர்மம் என்று எந்தக் கணக்கும் பார்க்காமல் செயல்
புரிந்திருக்கிறான். எனவே அந்தக் கணக்கை இறைவனும் வைத்துக்
கொள்வதில்லை. அதனால் அவன் அதை இப்பிறவியிலோ அடுத்த
பிறவியிலோ அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாதவனாகிறான்.

சரிதானே !

69.
செயலும் ஞானமும்

அடுத்ததாக ஒரு செயல் செய்வதற்கு வேண்டியவற்றை ஆராய்ந்து


ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"அகன்ற தோள்களை உடையவனே ! எல்லாக் கர்மங்களும்


நிறைவேறுவதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவுக்கான
உபாயத்தைக் கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை நீ
என்னிடமிருந்து நீ நன்றாக அறிந்து கொள்."

"கர்மம் செய்கின்ற உடல், செய்கிறவன், தனித்தனியான இந்திரியங்கள்


மற்றும்
அவற்றின் உபகரணங்கள், பலவிதமான தனித்தனியான செயல்கள், மற்றும்
தெய்வம் ஆகியவை காரணமாகும்."

"மனிதன் தன்னுடைய உடல், வாக்கு, மனம் இவைகளால் நல்லதோ,


கெட்டதோ எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதற்கு இவ்வைந்தும்
காரணங்களாகும்."

"இப்படியிருக்க, எவனொருவன் தன்னை மட்டும் ஒரு கர்மத்தைச் செய்யும்


கர்த்தாவாக நினைக்கிறானோ அவன் பக்குவமடையாத
புத்தியுள்ளவனாகையால் உண்மையைக் காணாத மூர்க்கனாவன்."

ஒரு காரியம் செய்து முடிக்கப்பட வேண்டுமானால் ஐந்து காரணிகள்


வேண்டும். உடல், செய்கிறவன் (செயல் அறிவு), புலன்கள் மற்றும் அவற்றின்
உபகரணங்கள், செயலுக்கான மற்ற உபகரணங்கள் மற்றும் தெய்வம் என
அனைத்தும் இணைந்தால் மட்டுமே செயல் செய்து முடிக்கப்படும். செயல்
நல்லதோ கெட்டதோஞ இத்தனையும் கூடிச் செய்தால் மட்டுமே செய்து
முடிக்க முடியும்.

இந்த உண்மையை முழுமையாக உணர்ந்தால் “நானே செய்தவன்” என்ற


அகங்காரம் ஒருவனுக்கு மனதில் எழாது. அப்படியும் ஒருவனுக்கு உள்ளத்தில்
“என்னால் தான் இச்செயல் முடிந்தது” என்ற கர்வம் ஏற்படுமானால் அது
அறியாமையின் உச்சமாகவே இருக்கும். அறிந்தவன் அகங்காரம்
கொள்வதில்லை. அகங்காரம் கொண்டவன் அறிந்தவனாக இருப்பதில்லை.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம்


இல்லையோ, அவ்வாறே எவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும்
செயல்களிலும் ஒட்டுவதில்லையோ அவன் இவ்வுலகங்களிலுள்ள மக்கள்
அனைவரையும் கொன்றாலும் உண்மையில் கொல்பவனாக மாட்டான். அவன்
பாவத்தினால் பந்தப்படுவதுமில்லை."

"அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்ற இம்மூன்றும் கர்மத்தைச்


செய்யத் தூண்டுபவை. கருவி, செயல், செய்பவன்
என்ற இம்மூன்றும் கர்மத்தை நிறைவேற்றுபவை."
ஒரு செயலைச் செய்கையில் சுயநல நோக்கு இல்லா விட்டால், அடையப்
போகிற உலகியல் இலாபத்தின் கணக்கே பிரதானமாக இல்லா விட்டால்
அவன் உள்ளமும், அவன் செயலும் தூய்மையாகவே இருக்கும். “நான், எனது”
என்ற சுயநலம் உள்ளே நுழையும் போது தான் அத்தனை பிரச்னைகளும்
மனித வாழ்வில் கூடவே நுழைகின்றன. செயலின் நோக்கம் நமக்கு
விதிக்கப்பட்ட கடமை என்ற புரிதலின் வெளிப்பாடாக இருந்தால், செய்யும்
செயலில் சுயநலம் சிறிதும் நுழையாமல் இருந்தால் அந்தச் செயல்
புனிதமானதாகவே இருக்கும். கர்ம யோகமாகச் செய்யப்படும் அந்தச்
செயலில் அலட்சியமோ, அகங்காரமோ, தனிப்பட்ட லாப நஷ்டக் கணக்கோ
இல்லாமல் இருப்பதால் அந்தச் செயலால் இந்த உலகமே அழிந்தாலும் அவன்
பாவம் புரிந்தவனாக மாட்டான்.

ஒரு செயலுக்குத் தேவையான ஐந்து காரணிகளைச் சொன்ன பகவான் அந்தச்


செயலைச் செய்யத் தூண்டுபவை, நிறைவேற்றத் தேவையானவை என்று
இரு பிரிவாக
பிரிவாகவும் பிரிக்கிறார். செயலைச் செய்யத் தூண்டுபவை அறிவு,
அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றுமாகும். நிறைவேற்றத்
தேவையானவை கருவி, செயல், செய்பவன் ஆகிய மூன்றுமாகும். இந்த
வகையில் பிரித்துப் பார்த்தாலும் கூட ’என்னால் தான் முடிந்தது’ என்ற
அகங்காரம் ஒரு மனிதனின் மனதில் எழ முடியாது.

அடுத்ததாக ஞானத்தின் வகைகளையும் பகவான் கூறுகிறார் :

"அறிவு, செயல், செய்பவன் என்பவை குணங்களின் பிரிவையொட்டி


மூவகையானவை என்று குணங்களை விளக்கும் போது கூறப்பட்டுள்ளது.
அவைகளைப் பற்றிய உண்மைகளையும் உள்ளபடி கேட்டுக்கொள்."

"எல்லா உயிர்களிலும் அழிவில்லாத ஒரே ஆத்ம வஸ்துவை மனிதன் எந்த


ஞானத்தினால் காண்கிறானோ, வெவ்வேறாகப் பிரிந்துள்ளவைகளில்
பிரியாமலிருப்பதைக் காண்பது எதுவோ அதை சாத்வகீ ஞானம் என்று நீ
அறிவாயாக !"

"எந்த ஞானமானது எல்லா ஜீவராசிகளும் வெவேறாக இருப்பதைக் கொண்டு


தனித்தனியாக ஆன்மாக்கள் இருப்பதாக அறிகிறதோ அந்த ஞானம் ராஜஸ
ஞானம் என்று அறிவாயாக."

"எந்த ஞானமானது பிரகிருதியின் காரியத்தின் விளைவான உடல் ஒன்றே


அனைத்தும் என்று நினைத்து, அதை ஒட்டியே அனைத்தையும் எண்ணுமோ,
காரணம் இல்லாததும், உண்மைப் பொருளற்றதும், அற்பமானதுமான அந்த
ஞானம் தாமஸ ஞானம் எனப்படும்."

எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைக் காண்பதே


உண்மையான ஞானம். அதுவே சாத்வீக ஞானம். நரசிம் மேத்தா என்ற
குஜராத்திய வைஷ்ணக் கவி ஞானி கூறுகிறார்: “கருணைக்கடலான தேவா!
உங்களை எப்படி நான் பூஜிப்பேன்? சிருஷ்டியில் உள்ள ஒவ்வொரு
அணுவிலும் நீங்கள் வியாபித்து இருக்கையில் உங்களை எப்படி ஒரு
விக்கிரகத்துக்குள் நான் அடைத்து வைப்பேன்? எண்ணெயோ அல்லது திரியோ
எதுவுமின்றி உங்களது நிரந்தரமான ஜோதி சுடர்விட்டு ஒளிவசுவதை
ீ நான்
காண்கிறேன். உருவமற்ற அதைக் கண்களின்றியே பார்க்க வேண்டும். சூட்சும
புலன்களைக் கொண்டே அனுபவித்துப் பேரானந்தம் அடைய வேண்டும்”

இந்த உண்மையான ஞானம் புலன்களால் அறியவோ அடையவோ முடிந்ததல்ல.


நரசிம் மேத்தா கூறியது ஐம்புலன்களைக் கடந்த சூட்சுமப் புலன்களைக்
கொண்டே உணரவும், அனுபவிக்கவும் முடியும். சாதாரண அறிவைத் தாண்டி
உணர முடிகிற இந்த ஞானம் தான் சாத்வக ீ ஞானம். அனைத்திலும்
வியாபித்திருக்கும் இந்தப் பரம்பொருளை ஒன்றென உணராது தனித்தனியாக
புறக்கண்ணால் பார்ப்பது போலவே உணர்வது ஞானமல்ல என்றாலும், அந்தப்
புரிந்து கொள்ளலை பகவான் ராஜஸ ஞானம் என்று குறைவான ஞானமாகச்
சொல்கிறார்.

எந்தப் புரிதலும் இன்றி இந்த உடலே அனைத்தும் என்றும் அதன் சுக


துக்கங்களே உண்மையானவை என்றும் நம்பி அதை ஒட்டியே அனைத்தையும்
தீர்மானிப்பது அற்ப ஞானம் அல்லது அஞ்ஞானமே. அதில் எந்தப் புரிதலுக்கும்
வலுவான காரணமிருக்காது. புரிதலும் அற்பத்தனமாகவே இருக்கும். அந்த
அற்பத்தனமான புரிதலை தாமஸ ஞானம் என்று பகவான் கூறுகிறார்.

நம் ஞானம்
எப்படிப்பட்டது என்பதைச் சிறிது யோசித்துப் பார்ப்போமே !

70.

கர்மம் – கர்த்தா – புத்தி

அடுத்ததாக முக்குணங்களால் கர்மா, கர்த்தா, புத்தி ஆகிய மூன்றையும்


ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனியாகப் பிரித்து விவரிக்கின்றார் :

"விதிக்கப்பட்ட எந்தக் கர்மமானது பலனை எதிர்பார்க்காதவனால்


பற்றில்லாமலும், விருப்பு வெறுப்பில்லாமலும் செய்யப்படுமோ அது சாத்வக

கர்மம் எனப்படும்."

"பலனை விரும்புகிறவனாலோ அல்லது தானே கர்த்தா என்று கர்வம்


கொண்டவனாலோ, வெகு சிரமப்பட்டு செய்யப்படும் கர்மம் ராஜஸ கர்மம்
ஆகும்."

கர்ம பலனையும், பொருட்செலவையும், பிறருக்குத் தரும் சிரமத்தையும், தன்


சக்தியையும் பாராமல் மோகத்தால் மட்டும் செய்யப்படும் கர்மம் தாமஸ
கர்மம் எனப்படும்."

"பற்றுதலை நீக்கியவனும், அகங்காரமற்றவனும், தைரியம் உற்சாகம்


கூடியவனும், தன் காரியம் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
எவ்வித மாறுதலையும் அடையாமலிருப்பவனுமான கர்த்தா சாத்வகன் ீ
எனப்படுகிறான்."
"ஆசை கொண்டவனும், கர்ம பலனில் பற்றுள்ளவனும், பணத்தாசை
பிடித்தவனும், பிறரை இம்சை செய்யும் சுபாவமுள்ளவனும்,
அசுத்தமானவனும், சந்தோஷம் துக்கம் இவைகளுடன் கூடியவனுமான
கர்த்தா ராஜஸன் எனப்படுகிறான்."

"மன அமைதியில்லாதவன், விவேகமற்றவன், முரடன், மோசக்காரன்,


துஷ்டன், சோம்பேறி, துக்கமுள்ளவன், காலதாமதமாகச் செய்பவன் என்ற
வகையைச் சேர்ந்த கர்த்தா தாமஸன் எனப்படுவான்."

"எந்தப் புத்தியானது செயலில் ஈடுபடுதல், ஈடுபடாமை, செய்யத் தக்கது,


செய்யத் தகாதது, பயம், பயமின்மை, பந்தம், மோட்சம் என்பவைகளை
அறியுமோ அது சாத்வக ீ புத்தியாகும்."

"எந்தப் புத்தி தர்மம்-அதர்மம், செய்யத் தக்கது, செய்யத் தகாதது


என்பவைகளை உள்ளபடி அல்லாமல் அறியுமோ அது ராஜஸ புத்தி
எனப்படும்."

"எந்தப் புத்தியானது அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு, அதர்மத்தைத்


தர்மமென்றும், அதே போல் எல்லா வஸ்துக்களையும் உண்மைக்கு மாறாக
இருப்பதாகவும் அறியுமோ அது தாமஸ புத்தி எனப்படும்."

முக்குணங்களின் தன்மையை ஏற்கெனவே விவரித்திருந்தாலும் அந்தக்


குணங்களின் பிரிவாக முக்கியமானவற்றை எல்லாம் பிரித்து விவரிப்பது
அனைத்தைக் குறித்தும் நாம் தெள்ளத் தெளிவாக உணர வேண்டும்
என்பதற்கே. தெளிவாக உணர்ந்தவன் அறிவுடைய வினாக்கள் இருந்தால் எது
உயர்வோ அதையே ஏற்றுக் கொண்டு அந்த இயல்பிலேயே
வாழ்வான். புரிதலில் தெளிவின்மை அறிவாளியையும் குழப்பித் தவறான
வழிகளில் நடத்திச் சென்று விடும். அதனால் தான் இத்தனை விளக்கங்களும்.

சுதர்மம், கடமை என்பதற்காகவே செய்யப்படும் கர்மம் சாத்வகம்.


ீ பலனை
விரும்பியோ, நான் என்ற கர்வத்தாலோ செய்யும் கர்மம் ராஜஸம். எதைப்
பற்றியும் யோசிக்காமல் விளைவுகளைப் பற்றிக் கவலையும் படாமல்
மனதின் தூண்டுதலால் மட்டும் செய்யும் கர்மம் தாமஸம்.

பற்றையும் அகங்காரத்தையும் விலக்கி, தைரியமாகவும், உற்சாகமாகவும்


செய்ய வேண்டிய வேலையைச் செய்து அதன் விளைவுகளால்
பாதிக்கப்படாமல் இருப்பவன் சாத்வக
ீ கர்த்தா.

ஆசையால் உந்தப்பட்டு, செல்வத்தின் மீ தும் பேராசை கொண்டு, ஒரு பலனை


அடைந்தே தீரும் முடிவோடு செயல்பட்டு, அதனால் அடுத்தவர்களுக்கு
ஏராளமான துன்பங்களை ஏற்படுத்தி, விளைவுகளால் சுக
துக்கங்களை மாறி மாறி அனுபவித்தபடி இயங்குவன் ராஜஸ கர்த்தா.

மன அமைதியும், அறிவும் இல்லாமல், எந்தவொரு செயலையும் தக்க


சமயத்தில் செய்யாமல் தள்ளிப் போட்டு அல்லது செய்யாமலேயே
சோம்பலுடன் இருந்து விடும் துஷ்டனும், ஏமாற்றுக்காரனுமாக இருப்பவன்
தாமஸ கர்த்தா.
இதே விதத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக புத்தியையும்
பகவான் விளக்கியுள்ளார்.

துளசிதாசர் கூறுவார்: “இந்த உலகில் நல்லதையும், தீயதையும் கலந்தே


கடவுள் படைத்திருக்கிறார். நீரும் பாலும் கலந்திருப்பதில் பாலை மட்டும்
குடித்து நீரை விட்டுவிடும் அன்னப்பட்சி போல் நல்லவர் நல்லதைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டு தீயதை நிராகரித்து விடுவர்”

அந்த அன்னப்பட்சி போலவே ஒரு சாத்வகிீ இந்த உலகில் நல்லதை மட்டும்


தேர்ந்தெடுத்து நல்லதல்லாவதற்றை ஒதுக்கி விடுகிறான். அவன்
நல்லதல்லாதவற்றை வெறுப்பதோ, விமர்சிப்பதோ இல்லை. அவை
அவனுடையதல்ல என்பதால் அதைப் பற்றிப் பேசுவதும் விமர்சிப்பதும்
வியர்த்தமே என்று அவன் நினைக்கிறான்.

பலன் கருதாத செயல்களால் அவன் என்றும் தூயவனாகவே இருக்கிறான்.


அவன் தன்மையும், செயலும், அறிவும் தூய்மையாகவே இருக்கின்றன. பலர்
பலன் கருதாத செயல் என்பதை எந்திரத்தனமாகச் செய்வதாக எடுத்துக்
கொள்கிறார்கள். அப்படி அலட்சியத்துடன், கருத்தில்லாமல் எந்திரத்தனமாகச்
செய்யும் செயல் சாத்வகமாகாது.
ீ அலட்சியமும், எந்திரத்தனமும்,
பொறுப்பற்ற தன்மையும் தாமஸத்தின் குணங்களாகும். அதி தீவிரமாய்ச்
செய்வதும், பலனுக்காகப் போராடுவதும், என்ன விலையானாலும் கொடுக்கத்
தயாராவதும், அமைதியிழந்து செயல்புரிவதும் ராஜஸத்தின் குணங்களாகும்.
செய்ய வேண்டியதை மட்டும் செய்து, செய்யக்கூடாதவைகளை முற்றிலும்
விலக்கி, செய்த செயல்களின் பலன்களையும் இறைவனுக்கே விட்டு விலகி
நின்று அவன் என்றும் தன் மன அமைதியைத் தக்க வைத்துக் கொள்கிறான்.

எல்லாவற்றிலும் சாத்வகத்தையே
ீ பற்றிக் கொண்டால் நாமும் தூய்மையாகி,
நாம் சார்ந்திருப்பதையும் தூய்மையாக்கி எடுத்துக்காட்டாக ஒருவன் வாழ்ந்து
விட முடியும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள்.

நம்மையும், நம் புத்தியையும், நம் செயலையும் இந்த வழிகளில் பகுத்தறிந்து


வேண்டியபடி மாற்றிக் கொள்வோமா ?

71.

ஆரம்ப சுகங்கள்
அந்திம கஷ்டங்கள் !

நல்ல விஷயங்களே கூட எல்லா விதங்களிலும் நன்மையைத் தருவனவாக


இருப்பதில்லை என்பதை விளக்க அடுத்ததாக
ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக் கொண்ட விஷயங்கள் தைரியமும், சுகமும்.
இரண்டுமே நமக்கு வேண்டிய, பிடித்த விஷயங்களாகவே இருக்கின்றன
என்றாலும் முக்குணங்களின் கண்ணாடிகளில் பார்க்கும் போது அவற்றின்
மறுபக்கமும் தெரிகின்றது.

பகவான் கூறுகிறார் :
"யோகத்தினால் அசையாமல் இருக்கும் எந்தத் தைரியத்தைக் கொண்டு
மனம், பிராணன், புலன்கள் இவைகளின்
செயல்களை மனிதன் அடக்கி ஆள்கிறானோ அது சாத்வக ீ தைரியமாகும்."

"அர்ஜுனா! பலனில் பற்று வைத்தமையால் எந்தத் தைரியத்தைக் கொண்டு


அறம், பொருள், இன்பங்களை அடைவதிலேயே மனிதன் குறியாக
இருக்கிறானோ அது ராஜஸ தைரியமாகும்."

"பார்த்தனே! துர்ப்புத்தியுள்ளவன் எந்தத் தைரியத்தினால் தூக்கத்தையும்,


பயத்தையும், துக்கத்தையும், கஷ்டத்தையும், கர்வத்தையும் விடுவதில்லையோ
அது தாமஸ தைரியமாகும்."

"எது முதலில் விஷம் போலிருந்து முடிவில் அமிர்தத்திற்குச் சமமாகுமோ


அது சாத்வகீ சுகமெனப்படும். அது தன் புத்தி தெளிவினால் ஏற்படக்கூடியது."

"விஷயங்களும், புலன்களும் சேர்வதால் முதலில் எது அமிர்தம்


போலிருக்குமோ, ஆனால், பிறகு முடிவில் விஷம் போலாகுமோ அது ராஜஸ
சுகமெனப்படும்."

"எது முதலிலும், முடிவிலும் தன்னை மயக்கமுறச் செய்யுமோ, தூக்கம்,


சோம்பல், மறதி இவைகளால் உண்டாகுமோ அந்தச் சுகம் தாமஸ சுகம்
எனப்படும்."

"யோகநிலையினால் புலன்களை அடக்கி ஆண்டு, பலனில் பற்று வைக்காமல்


செயல்படும் தைரியம் சாத்வகம்.
ீ பலனில் பற்று வைத்து ஆசைப்பட்ட
விளைவுகளுக்காக உழைக்கும் தைரியம் ராஜஸம். துர்ப்புத்தி, தூக்கம், கர்வம்,
பயம், சோம்பல் ஆகியவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் தைரியம்
தாமஸம்."

ஆக தைரியமே சில தீமைகளுக்குக் காரணமாகி விடுகிறது. எதையும் எந்த


மனிதன் செய்கிறான் என்பதற்குத் தகுந்தபடி அதன் தன்மையும் மாறிவிடுகிறது
என்பதற்கு இந்த விளக்கமே நல்ல உதாரணம். விடாமுயற்சி நல்ல விஷயம்
தான். ஆனால் எதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிக
முக்கியம். தீமைகளையும், முட்டாள்தனங்களையும், பிரச்னைகளையும்
விடாமல் தைரியமாகப் பிடித்துக் கொண்டிருப்பது உண்மை அறிவல்ல.

அடுத்தது சுகங்கள். நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் துன்பமாக இருந்து


முடிவில் இன்பமாக மாறிவிடுகின்றன. தீயவை ஆரம்பத்தில் இன்பமாக
இருந்து முடிவில் முடிவற்ற துன்பமாக அமைந்து விடுகின்றன.

நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் போது ஆரம்பத்தில் கஷ்டமாகத்


தான் இருக்கும். ஆனாலும் அதை விடாமல் முயற்சிக்கிறவன் முடிவில்
அளவில்லாத பலன்களை அடைகிறான். உதாரணத்திற்கு உடற்பயிற்சி
மற்றும் தியானம் இரண்டையும் எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் இரண்டும்
கஷ்டங்கள் தான். உடலும் வளையாது. மனமும் பிடிகொடுக்காது முரண்டு
பிடிக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக அதில் ஈடுபட்டே
தீர்வேன் என்று உறுதியுடன் முயல்பவன் போகப் போக உடலும் மனமும்
விருப்பப்பட்டபடி இசைவதைக் காண்பான். முடிவில் ஆரோக்கியத்தையும்,
மன அமைதியையும் பலனாகப் பெறுகிறான்.

போதைப் பழக்கத்தை உதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். போதை


வஸ்துக்கள் ஆரம்பத்தில் சுகமாகத் தானிருக்கும். அதை உட்கொள்ளும் போது
இன்பமாகவும்,
சொர்க்கத்தில் மிதப்பது போலவும் தான் இருக்கும். போகப் போக அது
எத்தனை கிடைத்தாலும் போதாமல் போகும். முடிவில் துன்பத்தையும்
அழிவையும் தான் அது ஏற்படுத்தும். இது ராஜஸத்திற்கு ஒரு நல்ல
உதாரணம்.

சோம்பலை எடுத்துக் கொள்வோம். செய்ய வேண்டிய வேலையையும்


செய்யாமல் தூங்கிக் கிடப்பதும், சோம்பிக் கிடப்பதும் சுகம் போலத்
தோன்றினாலும் அது கஷ்டமான வேலையைத் தவிர்க்கும் மயக்கம் தானே
ஒழிய உண்மையில் அது எந்தச் சுகத்தையும் தருவதில்லை. போகப் போக அவை
துன்பங்களை அதிகரித்துக் கொண்டு தான் போகும். தாழ்ந்தே இருக்கும் நிலை
தான் நீளும். ஆரம்பத்திலும் மயக்கம், முடிவிலும் அந்த மயக்கத்தோடு கூடிய
பெருந்துன்பம் என்கிற நிலையை ஏற்படுத்தும் தாமஸத்திற்கு இது ஒரு நல்ல
உதாரணம்.

"இமிடேஷன் ஆஃப் க்ரைஸ்டில்" தாமஸ் கெம்பிஸ் சொல்லும் வாக்கியம்


மிகப்பிரபலம். “சிற்றின்பங்கள் யாவும் முதலில் ஆனந்தமாக இருக்கும்.
ஆனால் இறுதியில் மானக்கேட்டிலும் மரணத்திலும் தான் வந்து முடியும்”
அதனால் தான் தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும், ஒளியை
இருள் என்றும், இனிப்பைக் கசப்பென்றும் கூறுவோரின் கதி அதோகதி தான்
என்று பைபிளும் கூறுகிறது.

அதன் பின் நான்கு வர்ணத்தவருக்கும் இயல்பாக உண்டான கர்மங்களை


விளக்கிவிட்டு பகவான் கூறுகிறார் :

"தம் தம் கர்மத்தில் சிரத்தை கொள்ளும் மனிதன் சித்தியை அடைகிறான். தன்


கர்மத்தில் ஈடுபடுகிறவன் எவ்வாறு சித்தியடைகிறான் என்பதைச்
சொல்கிறேன் கேள்."

"எந்தப் பரம்பொருளிலிருந்து சகல உயிர்களும் உண்டாயினவோ, எந்தப்


பரம்பொருள் இந்த உலகமனைத்தும் பரவியிருக்கிறதோ அந்தப்
பரம்பொருளைத் தன் இயல்பான கடமைகளினால் வழிபட்டு, மனிதன் பரம
சித்தியடைகிறான்"

தனது சுதர்மக் கடமையில் சிரத்தையுடன் ஈடுபடும் மனிதன் தான் பிறந்த


நோக்கத்தை நிறைவு செய்து விடுவதால் சித்தியை அடைகிறான். அவன்
கடமையே அவனுடைய வழிபாடாகி விடுகிறது. இறைவன் எதற்கு அவனைப்
படைத்தானோ அந்த வேலையைச் சிரத்தையுடன் செய்து அவன்
வாழ்க்கையையே அவன் வழிபாடாக்கிக் கொள்கிறான். அவனுடைய கர்ம
யோகச் செயல்களால் எண்ணற்ற உயிர்கள் எத்தனையோ வகைகளில் பலன்
அடையக்கூடும். அந்த உயிர்களிலும், உலகனைத்தும் வியாபித்திருக்கும்
பரம்பொருள் அதனாலேயே மனம் குளிர்ந்து திருப்தியடையும் என்பதால்
அந்த வழியிலேயே அந்தக் கர்மயோகி பரம சித்தியடைகிறான் !
72.

சுதர்மமும்,
பிரம்மநிலையும் !

உலகப் புனித நூல்களுக்கிடையே பகவத்கீ தையின் மிக அழுத்தமான


தனித்தன்மை என்று யாரேனும் கேட்டால் அதற்கான பதில், கீ தை, சுதர்மத்தை
வலியுறுத்துவதையே சொல்ல வேண்டும். இந்தக் கடைசி அத்தியாயத்தில்
மீ ண்டும் ஒரு முறை பகவான் கூறுகிறார் :

"அயலாருக்காக விதிக்கப்பட்ட கடமையை, தான் மேற்கொண்டு, அதைக்


குறைவறச் செய்வதைக் காட்டிலும் தனக்காக விதிக்கப்பட்ட கடமையை
அரைகுறையாய் செய்தாலும் அது நல்லதே. இயற்கையாய் தனக்கு அமைந்த
கர்மத்தைச் செய்பவன் பாவத்தையடைய மாட்டான்."

"குந்திமகனே! தனக்கு இயற்கையாய் ஏற்பட்ட கர்மமானது தோஷத்துடன்


கூடியதாயினும், அதைச் செய்யாமல் விடக்கூடாது. எல்லாக் கர்மங்களும்
நெருப்பைப் புகை சூழ்ந்திருப்பது போல் தோஷத்தால் சூழப்பட்டே
இருக்குமன்றோ!"

சுதர்மத்தைப் பற்றி விளக்குகையில் வினோபா சொல்கிறார். “உன்னிடத்தில்


உனக்கே உரிய ஏதோ ஒரு அம்சமிருப்பதாலேயே நீ நீயாக இருக்கிறாய்.
ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கே உரிய விசேஷ அம்சமிருக்கும். ஆடு
ஆடாயிருந்து வருவதன் மூலமாகத் தான் வளரமுடியும்; ஆடாயிருந்து
கொண்டே தான் அது தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆடு பசுவாக
விரும்புதல் நடக்கக் கூடியதல்ல. அது தனக்கு இயற்கையாக அமைந்துள்ள
ஆட்டுத்தன்மையைத் துறக்க முடியாது. அப்படித் துறக்க வேண்டுமானால்
முதலில் தன் உடலையே அது துறக்க வேண்டியிருக்கும். புதியதொரு
பிறவியை
எடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பிறவியில் அது ஆடாய் இருப்பதே அதற்கு
நல்லது. ‘எருதும் பெண் தவளையும்’ என்ற கதையைக்
கேட்டிருக்கிறோமல்லவா? தவளை பருப்பதற்கும் ஓர் அளவுண்டு. அது
எருதைப் போல் பருக்க முயன்றால் இறந்துதான் போகும். பிறருடைய
உருவத்தைப் பார்த்து நடிப்பது சரியல்ல. இதனாலேயே பரதர்மம்
பயங்கரமானது, கொடிது என்று கூறப்பட்டிருக்கிறது”.

மனிதன் தன் இயல்பிற்கு எதிரான எதிலும் எத்தனை முயன்றாலும் அதில்


கண்டிப்பாக சோபிக்க முடியாது. ஆப்பிள் மரம் சாத்துக்குடியை உருவாக்கித்
தர ஆசைப்படுவது வியர்த்தமே. ரோஜா மலர் மல்லிகை மணம் வச ீ
ஆசைப்படுவது தன் மணத்தையும், மதிப்பையும் இழக்கும் முயற்சியாகவே
இருக்கும். மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளவும், மெருகேற்றிக்
கொள்ளவும் ஆசைப்படுவது சுதர்மத்தைப் பேணும் விதம் எனலாம். ஆனால்
இன்னொருவனாக ஆசைப்படுவதும், அதற்கு முயல்வதும் தற்கொலைக்குச்
சமமானது என்றே சொல்ல வேண்டும்.
தான் செய்ய வேண்டிய கர்மத்தில் குறையிருந்தாலும் அது கேவலமல்ல.
பகவான்
கூறுவது போல நெருப்போடு புகையும் சேர்ந்திருப்பது இயல்பே. அதற்காக
நெருப்பு பனிக்கட்டியாக ஆசைப்படலாமா? அது போல ஒவ்வொரு
கர்மத்திலும் குறை உண்டு. அதற்கென அதைத் தவிர்ப்பதும் இன்னொருவர்
கர்மத்தை மேற்கொள்வதும் தவறாகவே இருக்கும். சுதர்மத்தை
அரைகுறையாய் செய்தாலும் கூட அது பரதர்மத்தை மேற்கொள்வதை விட
மேலென்று கூறுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறுகிறார் :

"எதிலும் பற்று கொள்ளாமலும், மனத்தை வென்றும் ஆசையற்றுமிருப்பவன்


சன்னியாசத்தால் கர்மம் நீங்கிய உயர்ந்த நிலையை அடைகிறான்."

"சித்தியை அடைந்தவன் பிரம்மத்தை எவ்வாறு சேர்கிறான்?


ஞானத்தினுடைய உயர்ந்த நிலை எத்தகையது என்பவைகளைச் சுருக்கமாகச்
சொல்கிறேன் கேள்."

"சுத்தமான புத்தியுடன் கூடி, மன உறுதியால் தன்னை அடக்கி, சப்தம் முதலான


புலன் விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை விட்டு, தனிமையில்
இருந்து, சிறிதளவே புசித்து, மனதையும் வாக்கையும் அடக்கி, எப்போதும்
தியான யோகத்தில் ஈடுபட்டு, வைராக்கியத்தை மேற்கொண்டு, அகங்காரம்,
வலிமை, கர்வம், காமம், கோபம், சொத்து சேர்த்தல் ஆகியவற்றை
விட்டொழித்து, மமகாரமற்று, சாந்த நிலையைப் பெற்றவன்
பிரம்மமாவதற்குத் தகுதியைப் பெறுகிறான்."

"பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகி விடுகிறான்; அவன்


வருத்தமடைவதில்லை; ஆசைப்படுவதுமில்லை; எல்லா உயிர்களிடமும்
சமநோக்கு கொண்டிருப்பான்; அவன் என்னிடம் அதிகமான பக்தியையும்
பெறுகிறான்."

"அந்த அதிகபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும்


எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே அறிகிறான்.
அப்படி அறிந்தவன் அக்கணமே என்னிடம் ஐக்கியமடைகிறான்."

"என்னையே சரணடைந்த அவன் எப்போதும் எல்லாக் கர்மங்களையும் செய்து


கொண்டிருந்தாலும் என்னுடைய அருளால் சாசுவதமானதும், அழியாததுமான
நிலையை அடைகிறான்."

ஆசையைத் துறப்பதும், மனதை வெல்வதுமே உண்மையான துறவு. அதுவே


கர்மம் நீங்கிய மிக உயர்ந்த நிலை. அந்த உயர்ந்த நிலையில் புத்தி தெளிவாக
இருக்கிறது; மன உறுதியால் தன் மனதை வென்ற நிலை இருக்கிறது;
தனிமையில் தியானத்தில் ஈடுபட முடிகிறது; பேச்சு குறைகிறது;
உட்கொள்ளும் உணவின் அளவும் குறைகிறது; புலன்கள் வழிப் போகாத
தன்மை இருக்கிறது; வைராக்கியத்தால் எல்லாமே கட்டுப்பாட்டில்
இருக்கையில் தான் சித்தி கிடைக்கிறது. மனிதன் அந்த நிலையிலேயே
பிரம்மத்தை அடைகிறான். அந்த நிலையிலேயே பிரம்மமாகிறான்.
ஆத்ம போதத்தில் ஆதிசங்கரர் கூறுவார்: “எல்லாக் காலங்களிலும் எல்லாப்
பொருட்களிலும் ஆன்மா இருந்தாலும் எல்லாப் பொருட்களிலும் அது
ஒளிவசுவதில்
ீ லை. ஆனால் பளபளப்பான தரையில் பிரதிபிம்பம்
பிரகாசிப்பது போல, தெளிந்த ஞானம் உள்ளவர்களிடம் மாத்திரம் அது
ஒளிவசுகின்றது”

அந்தத் தெளிந்த நிலையில் நான் என்ற எண்ணம் ஒழிகிறது. மனம் நிரந்தர


அமைதியில் லயிக்கிறது. எல்லா உயிர்களிடமும் சமநோக்கு இயல்பாகவே
அமைகிறது. பரம்பொருளிடம் தானாக பக்தி கூடுகிறது. அந்தப்
பக்தியினாலேயே அந்தப் பகவானிடம் சரணாகதி அடைந்து பகவானுடன்
ஐக்கியமாகவும் முடிகிறது. அதன்பின் அவன் என்ன கர்மங்கள் செய்து
கொண்டிருந்தாலும் அதன் பலன்களால் அவன் பந்தப்படுவதில்லை. பரிபூரண
சுதந்திரனாகவே இருக்கும் பேரானந்த நிலை சாத்தியமாகிறது.

பிரெஞ்சுப் பாதிரியாரும், இலக்கிய மேதையுமான பெனலன் கூறியிருக்கும்


வார்த்தைகள் நூறுசதம் உண்மையானவை. “இறைவனிடம் நம்மை அர்ப்பணித்து
விடுகையில் நம் உள்ளம் எவ்வளவு தூரம் விரிவடைகிறது என்பதைப் புரிந்து
கொள்ளலாம். அது முடிவது அனுபவத்தினாலேயே. எல்லாவற்றையும்
கடவுள் கையில் ஒப்படைத்த பின் நம் நிலை விவரிக்க முடியாத
அமைதியிலேயே லயிக்கின்றது”

ஒவ்வொரு ஆன்மீ கவாதியும் அடைய விரும்பும் உச்சம் அதுவே அல்லவா?


அதை மிஞ்சிய பேரானந்த அனுபவம் என்னவாக இருக்க முடியும் ?

73.

நீயே முடிவெடு !

இறைவனை உறுதியாகப் பற்றிக் கொண்டவன் அடையும் நன்மைகளை


விவரித்த பகவான் மேலும் கூறுகிறார் :

"எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து,


அப்படியே (சம)புத்தி யோகத்தைக் கடைப்பிடித்து, என்னையே அடைக்கலமாகக்
கொண்டு, மேலும் எப்போதும் என்னிடமே உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக
!"

"அப்படி என்னிடமே உள்ளம் பதித்தவனாக இருப்பாயானால் நீ எனது அருளால்


எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்து விடுவாய். அகங்காரத்தினால்
என்னுடைய சொற்களைக் கேளாவிட்டால் அழிந்து போவாய்."

"இறைவனே அனைத்துமென அவனை இதயத்தில் நிறுத்தி எல்லாச்


செயல்களும் அவன் நிமித்தம் என்றெண்ணி இயங்குபவனுக்கு இந்த உலகில்
முடியாததென்று எதுவுமில்லை. அவன் வழியில் வரும் பிரச்னைகள்
பகலவனைக் கண்ட பனி போல் இல்லாது போகும். தானே பெரிதென்றும் தன்
சிற்றறிவு காட்டும் வழியே சிறந்ததென்றும் இயங்குபவன் அழிந்து போவான்."
பகவத் கீ தையை தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்ட
காந்தியடிகள் கூறுகிறார். “கடவுளுக்காகவும், அவரது திட்டங்களுக்காகவுமே
நாம் வாழ்கிறோம் என்று நாம் உண்மையாகக் கூற முடியுமாயின் பாறை போல்
பலத்துடன் இருப்பதை நாம் உணரலாம். அதன் பின் ஒரு தெளிவுடன்
நாமிருக்க முடியும்.”

கதிரவன் மறையாத சாம்ராஜ்ஜியத்தை கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம்


செய்து துரத்திய மனிதரின் வார்த்தைகள் அவை என்று நினைவுபடுத்தி
இதைப் படிக்கும் போது இறைவன் ஒருவனையே உறுதியாகப் பிடித்துக்
கொண்டு இயங்கி தான் அதைச் சாதித்தார் என்பதைச் சொல்லவும்
வேண்டியதில்லை.

இறைவனின் தொடர்பில் இருக்கும் வரை எதையும் செய்ய முடிந்த மனிதன்


இறைவனிடம் இருந்து தொடர்பை நீக்கிக் கொள்ளும் அக்கணமே பலம்
அனைத்தும் இழக்கிறான். அதனாலேயே அவன் தோல்வியும், அழிவும்
உறுதியாகிறது

ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் சொல்கிறார் :

"அகங்காரத்தை மேற்கொண்டு, ’நான் போர் புரிய மாட்டேன்’ என்று


நினைப்பாயாகில் அந்த முயற்சியும் வண்
ீ தான். உன் பிறவிக்குணம் உன்னைப்
போர் செய்யத் தூண்டிவிடும்."

"குந்தியின் மைந்தனே ! அறிவு மயக்கத்தின் காரணமாக, நீ எந்தச் செயலைச்


செய்வதற்கு விரும்பவில்லையோ. அதையும் உன் இயல்பான கர்மவினையால்
கட்டப்பட்டு, உன் வசமிழந்து செய்யப் போகிறாய்."

யாரும் தங்கள் பிறவிக் குணத்திலிருந்து எளிதில் மாற முடிவதில்லை.


மாவரனான
ீ அர்ஜுனன் வர்ர்களின்
ீ பரம்பரையிலிருந்து வந்தவன். வரனாகவே

வளர்ந்தவன். அந்த மாவரம்ீ அவன் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.
அப்படிப்பட்டவன் போரிடாமல் என்றென்றும் இருந்துவிட முடியாது. இந்தப்
போரிலிருந்து அவன் விலக நினைக்கும் காரணமே கூட அவன் குருவும்,
தாத்தாவும், அவன் அன்புக்குடையோரும் எதிர்ப்படையில் இருப்பது தான்.
அது தான் அவன் போர்புரியும் சுதர்மத்தை விட, போரிலிருந்து விலகிப்
போகும் துறவு நல்லது என்று தோன்ற வைக்கிறது. ஒருவேளை அவன்
இப்போது போர்புரியாமலிருப்பதாலும் அவன் என்றைக்கும் போர்புரியாமல்
இருந்து விட அவன் இயல்பான குணம் அனுமதிக்கப் போவதில்லை. இந்த
உண்மையை பகவான் அவனுக்கு இடித்துரைக்கிறார்.

"அர்ஜுனா! இயந்திரத்தில் ஏற்றிய பாவைகளைப் போல் பகவான் தன்


மாயையால் சகல ஜீவராசிகளின் இதயத்திலும் வற்றிருக்கிறார்."

"பரதகுலத் தோன்றலே! நீ அந்த பகவானையே சரணடைவாயாக!


அவனருளால் நீ உயர்ந்த அமைதியையும், நிலையான பரமபதத்தையும்
அடைவாய்."

"ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி நான் உனக்கு விளக்கிச் சொன்னேன்.


இதை முற்றிலும் ஆராய்ந்து உன் விருப்பப்படி செய்."
"மறை பொருளுக்கெல்லாம் மறை பொருளான என்னுடைய மேலான ரகசிய
உரையை உனக்குச் சொல்கிறேன். எனக்கு நீ உற்ற நண்பனாக இருக்கிறாய்.
ஆகையால் மேலான நன்மை பயக்கும் இந்த உரையை உனக்குச்
சொல்கிறேன்."

"நீ என்னிடமே மனத்தைச் செலுத்து. என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே


வழிபடு. என்னையே வணங்கு. இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய்.
இதையே நான் உனக்கு உண்மையென உறுதிகூறுகிறேன். நீ எனக்கு அன்பன்."

"எல்லாத் தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணடைவாயாக! நான்


உன்னைச் சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். வருத்தப்படாதே!"

பொம்மலாட்டத்தில் ஆடுவது பொம்மைகள் தான் என்றாலும் அத்தனை


பொம்மைகளையும் இயக்க வைக்கும் கயிறு வேறொருவனிடம் இருக்கிறது.
இறைவன் ஆட்டுவித்தபடியே அனைவரும் ஆடிக் கொண்டிருக்கிறோம்.
இன்னொரு விதத்தில் அனைத்திலும் அந்தர்யாமியாய் இருந்து கொண்டு
இறைவனே இந்த மாயா நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். நடத்துவது
அவனென்று உணர்ந்து நம் பங்கு என்னவென்று தெளிந்து அதைச் செய்ய
வேண்டுவதே நம் பணி. அதைவிட அதிகமாக நாம் சிந்திக்கவோ
கவலைப்படவோ அவசியமில்லை.

ஜார்ஜ் ஹெர்பர்ட் இந்தச் சிந்தனையை அழகாகச் சொல்வார். “என் மன்னரும்,


கடவுளுமான தாங்கள் எல்லாவற்றிலும் தங்களையே காண எனக்குக்
கற்பியுங்கள். நான் எதைச் செய்தாலும் தங்களுக்காகவே அதைச் செய்ததாக
இருக்க வேண்டும். இந்த விதியைப் பின்பற்றும் ஒரு ஊழியனுக்கு
அடிமைத்தனம்
கூட ஒரு தெய்வத்தன்மை பொருந்தியதாகி விடுகிறது. தங்களுடைய
சட்டங்களுக்கு உட்பட்டவனாக எண்ணி யார் ஒரு அறையைச் சுத்தம்
செய்கிறானோ அவனது அந்தச் செயலும், அந்த அறையும் புனிதமாகி
விடுகின்றன."

இறைவனை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவனுடைய கருவியாக இயங்கும்


மனிதனுக்குத் தோல்வியில்லை, துக்கமில்லை, கவலைக்கு அவசியமில்லை,
மோட்சம் உறுதி என்றெல்லாம் உணர்த்திவிட்டு இனி ”நீ முடிவெடு” என்று
இறைவன் விலகி நிற்கிறார்.

தமிழில் ”சாமி காட்டுமே தவிர ஊட்டாது” என்று ஒரு பழமொழி உண்டு.


உணவுக்கு வழி காட்டும் இறைவன் தானே சமைத்து ஊட்டிவிடுவதில்லை.
முடிவில் இயங்க வேண்டியது மனிதனே. முதலடி எடுத்து வைக்க
வேண்டியவன் அவனே. அவன் ஒரு அடி எடுத்து வைத்து விட்டால் போதும்.
மீ தியை அந்த இறைசக்தியே பார்த்துக் கொள்ளும். ஆனால் அந்த முதலடியின்
பொறுப்பு என்றும் எப்போதும் தனி மனிதனின் பொறுப்பாகவே இருக்கிறது !

74.

முடிவுரை
இந்தக் கீ தோபதேசம் எல்லோருக்கும் எளிதில் படிக்கவோ, கேட்கவோ
கிடைத்து விடுவதில்லை. பகவத் கீதை வேண்டிய அளவு கடைகளிலும்,
நூலகங்களிலும், இணையத்திலும் கொட்டிக் கிடந்தாலும் இறைவனால்
ஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே அதைப் படிக்கும் ஆர்வம் வரும். ஆரம்பித்தவர்கள்
எல்லாருக்கும் படித்து முடிக்கும் வரை அதே ஆர்வம் இருக்கும் என்று
சொல்லிவிட முடியாது. புண்ணியம் செய்தவர்க்கே அதைப் படித்து முடிக்க
முடியும். படித்து முடிப்பவர்களிலும் சிறிதேனும் அதைப் பின்பற்ற முடிவதோ
ஆயிரத்தில் ஒருவராலேயே முடியும். அதுவும் முந்தைய பிறவிகளில்
முயற்சிகள் தொடர்ந்து எடுத்தவருக்கே சாத்தியப்படும்.

இப்படிப்பட்ட கீ தையைச் சொல்லவும் கேட்கவும் கூட இறை அருள் வேண்டும்


என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதாவது :

"இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க


வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் எப்போதும் சொல்லாதே. என்னை
வெறுப்பவனுக்கும் சொல்லாதே !"

"எவனொருவன் இந்தப் பரமரகசியத்தை என்னுடைய பக்தர்களுக்கு


உபதேசிப்பானோ, அவன் என்னிடம் அதிகமாக பக்தி செலுத்தி என்னையே
அடைவான். சந்தேகமில்லை."

"அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்யக்


கூடியவன் மனிதர்களில் வேறு யாருமில்லை. அப்படியே பூமியில் அவனைக்
காட்டிலும் எனக்கு மிகப் பிரியமானவன் வேறொருவன் இருக்கப்
போவதில்லை."

"நம் இருவருக்குமிடையே நடந்த இந்த தர்மமான உரையாடலை


எவனொருவன்
படிப்பானோ அவன் ஞானவேள்வியினால் என்னை ஆராதித்தான் என்றே நான்
நினைப்பேன்."

"சிரத்தையுடன்,
பொறாமையின்றி இதை எந்த மனிதன் கேட்கிறானோ அவனும் சகல
பாவங்களும் நீங்கப் பெற்று புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை
அடைவான். ”

இந்த வார்த்தைகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லை. நம்பிக்கையோ,


தகுதியோ, பக்தியோ இல்லாதவர்களுக்கு பகவத்கீ தையை உபதேசிப்பதில்
அர்த்தமில்லை. புரியாத விஷயங்களை, புரிந்து கொள்ளச் சக்தியற்றவனுக்குச்
சொல்வதில் ஒரு பலனுமில்லை.

கீ தையைத் தகுதியுள்ள நான்கு பேருக்கு எடுத்துச் சொல்பவன் இறைவனுக்குப்


பிரியமானவனாகிறான். படிப்பவன் ஆராதிப்பவனாகிறான். கேட்பவன்
புண்ணியம் செய்தவனாகிறான்.

முடிவில் பகவான் கேட்கிறார் :


"பார்த்தா ! நீ மனத்தை ஒருமுகப்படுத்தி நான் உபதேசித்ததைக் கேட்டாயா?
உன்னுடைய அஞ்ஞான மயக்கம் நீங்கியதா ?"

அர்ஜுனன் சொல்கிறான் :

"அச்சுதா! உன் அருளால் மோகம் அழிந்தது; நினைவு வந்தது; சந்தேகங்கள்


நீங்கின; நிலைபெற்றேன்; நீ சொன்னபடியே செய்கின்றேன்.

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- --

அதன் பின் சஞ்சயன் சொல்கின்றான் :

“இவ்வாறு வாசுதேவனுக்கும், மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இடையே


நடந்த அற்புதமான, மயிர்க்கூச்செறிய வைக்கிற உரையாடலை நான்
கேட்டேன்”

வியாச பகவானுடைய அருளால் இரகசியங்களுக்குள் உத்தம இரகசியமான


இந்த யோகத்தை யோகஸ்வரனான கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும்
போதே நான் கேட்டேன். இந்த அற்புதமான உரையாடலை நினைத்து
நினைத்து மீ ண்டும் மீ ண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

"அரசனே அந்த ஹரியினுடைய மிக்க அற்புதமான ரூபத்தை நினைத்து


நினைத்து எனக்கு அதிகமான ஆச்சரியம் தோன்றுகிறது. மறுபடியும்
மறுபடியும் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

"யோகேஸ்வரனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, காண்டீபத்தைத் தாங்கிய


பார்த்தன் எங்கிருக்கிறானோ, அந்த இடத்தில் லக்‌ ஷ்மியும், வெற்றியும்,
நீதியும் நிலைத்திருக்கும் என்பது என் முடிவு."

இந்த உன்னதமான கீ தோபதேசத்தை திவ்ய திருஷ்டியால் பார்க்கவும்,


கேட்கவும் முடிந்த சஞ்சயனின் மனநிலையை நம்மால் உணரமுடிகிறது.
அவனைப் போல் மீ ண்டும் மீ ண்டும் நினைத்தும், படித்தும் மகிழ்ச்சியடைய
எத்தனையோ ஞானப் பொக்கிஷம் இந்தக் கீ தையில் புதைந்து கிடக்கின்றது.

ஷேத்ரே” என்று ஆரம்பிக்கும் பகவத் கீ தை “மம” என்ற சொல்லில்


’தர்மக்‌
முடிவடைகிறது. மம என்றால் ‘எனது’ என்று அர்த்தம். முதலும் முடிவுமான
வார்த்தைகள் ”தர்மம்” மற்றும் “என்னுடைய” என்பன. அதாவது என்னுடைய
தர்மம் என்பதை விளக்கும் நூலாக பகவத் கீ தை இருப்பதை சூட்சுமமாக இது
குறிப்பதாகவே அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது போல நமது
தர்மத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் உணர்த்தும் நூலாக பகவத்கீ தை
இருக்கிறது என்பது உண்மையே.

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீ தை புதுப்புது ஆழங்களை


உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீ தை புதுப்புது
அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால்
இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.

சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த


பகவத்கீ தையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில்
தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில்
குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும்,
நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத்
கீ தையை நாடுவோமாக ! அந்த நேரங்களில் முழு கீ தையையும் மறுபடி நாம்
படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு
ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய
நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும்,
இறைவனால் வழி நடத்தப்படுவோம் என்பதையும் நான் என் சொந்த
அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

நான் பெற்ற நன்மைகளை நீங்களும் பெற இந்தக் கீதை உதவும் என்று உறுதி
கூறி உங்களிடம் விடைபெறுகிறேன்.

நன்றி.

அன்புடன்

என்.கணேசன்
ஆசிரியர்

குறிப்பு :

என்.கணேசன்
Email: nganezen@gmail.com

*Courtesy : இந்து மதம்.*

*சர்வம்*
*கிருஷ்ணார்ப்பணம்*

You might also like