You are on page 1of 3

பத்தியைப் படித்து அதனைத் தொடர்ந்து வரும் வினாக்களுக்கு விடையளி : 5×1=5

வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம். நாம்
தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல
வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம்
கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும்
மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய
புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்

இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு
பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ? தமிழ்க்
காவியங்களைப் படியுங்கள் இன்பம் நுகருங்கள் .

1.இயற்கை ஓவியம் …………………..

அ) பத்துப்பாட்டு இ) திருக்குறள் ஆ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்

2.இயற்கை இன்பக்கலம் ……………………….

அ) பத்துப்பாட்டு இ) திருக்குறள் ஆ) கலித்தொகை ஈ) மணிமேகலை

3.இயற்கை வாழ்வில்லம் ……………………

அ) பெரிய புராணம் இ) திருக்குறள் ஆ) சிந்தாமணி ஈ) மணிமேகலை

4.இயற்கைத் தவம் ……………….

அ)சீவகசிந்தாமணி ஆ) பெரிய புராணம் இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை

5.இயற்கைப் பரிணாமம் …………….

அ) கம்பராமாயணம் இ) திருவாசகம் ஆ) பெரிய புராணம் ஈ) திருக்குறள்

II. செய்யுள் அடி வினாக்களுக்கு விடையளி : 5×1=5

கத்தியை தீட்டாதே -உந்தன்

புத்தியைத் தீட்டு

கண்ணியம் தவறாதே- அதிலே

திறமையைக் காட்டு!

ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு- உன்னை

அழித்திட வந்த

பகைவன் என்றாலும்

அன்புக்குப் பாதை வடு!


1.புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………

அ) ஆலங்குடி சோமு ஆ) ஆலங்குடி வங்கனார் இ) வாணிதாசன் ஈ) குமரகுருபரர்

2.“தீட்ட வேண்டியது எது?” என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்?

அ) கத்தி ஆ) புத்தி இ) கண்ணியம் ஈ) ஆத்திரம்

3.…………………… க்கு அன்பு பாதை விட வேண்டும்.

அ) பகைவன் ஆ) நண்பன் இ) மன்னிக்க தெரிந்தவன் ஈ) மறந்தவன்

4. இப்பாடல் ஆசிரியர் பெற்ற விருது ……………………

அ) பத்மபூஷன் ஆ) கலைமாமணி இ) பாரத ரத்னா ஈ) பத்மவிபூஷன்

5.பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….

அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும்

இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்

III.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து ……………………..

அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ்

2.நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துகள் …………………..

அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்

3.பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………..

அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாது

4.வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ………………………..

அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து

5.விலங்கொடு மக்கள் ___________ இலங்குநூல்

கற்றா ரோடு எனையவர்.


அ. அனையர் ஆ.செய்வான் இ.சொல்லாத ஈ.வெல்லாத

IV.1.விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. 5

You might also like