You are on page 1of 12

12. வெள்ளம்..

பயணத்தைத் தொடர்ந்தோம். வடதிசையில் பெரிய மண்மேடு ஒன்றின்


முகட்டில் ஏறி ஓஸ்த்ராயா மலைத் தொடரில் இறங்கி ஒரு நீரோடையின்
கரையிலேயே நடந்து பிலிம்பா ஆற்றை அடைந்தோம்.

பொதிகழுதைகளைச் சற்று நேரம் மேய விட்டு, ஆற்றின் மேற்பகுதிக்குப்


போனோம். அதன் இரு கரைகளும் அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது.
பசிய இடைவழி நிலத்தில் ஓடை பாய்ந்து வருவது போலவும் தோன்றியது.
பரந்து விரிந்த கவிகை போன்ற மரங்கள் ஓடையின் மேல் தொங்கிக்
கொண்டு வில்வளைவு போல் தோற்றங் காட்டியது.

வெளிச்சம் குறைந்து குளிரும் ஈரமும் நிலைகொண்டிருந்த அங்கே


மரங்கள் கூட அழுவது போல் காட்சி தந்தன. கிளைகளில் மழைநீர் பெரிய
துளிகளாகத் தங்கியிருந்தது. மரங்களின் அடிப்பகுதி வரை ஈரம்
பரவியிருந்தது.

பள்ளத்தாக்கு படிப்படியாகக் குறுகிக் கொண்டது. வழியில் பாழடைந்த


பல வேட்டையாடிகள் விடுதிகளைப் பார்த்தோம். அவற்றின் தோற்றத்தைக்
கொண்டு, அவை சீனர்கள் குளிர்காலத்தில் மரக்கீ ரிகளை வேட்டையாடும்
போது பயன்படுத்தியவை என்ற முடிவுக்கு வந்தோம்.

அந்த விடுதிகளில் ஒன்றில் ஓய்வுக்காகச் சிறிது நேரம் இருந்த பிறகு


நடந்து ஆற்றின் மேற்பகுதிக்கு நண்பகலுக்குள் வந்து விட்டோம். அங்கே
பாதை முடிவடைந்து விட்டது. எதன் நடமாட்டமும் இல்லாத அந்த
இடத்திலிருந்து இரு கரையிலும் மாறி மாறி நடந்து கால்தடங்கள் ஏதாவது
தென்படுகின்றனவா எனத் தேடினோம்.

சிகோடா-அலின் மலைத்தொடரில் ஏறி, குலும்பாவில் இறங்கிவிட


வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது. ஆனால், டெர்சுவும் சென்
பாவோவும் அவ்வளவு தூரம் போக வேண்டாம் என எச்சரித்தனர். அதிலும்
மீ ண்டும் பிலிம்பா ஆற்றுக்கே திரும்பி அங்குள்ள வேட்டையாடிகள்
விடுதியிலேயே தங்கிக் கொள்ளலாம் எனச் சென் பாவோ
வலியுறுத்தியிருந்தார். அங்குதான் ஏற்கெனவே தங்கியிருக்கிறோமே என்ற
உட்கருத்தும் அதில் வெளிப்பட்டது. அதிகாலையில் மூடுபனியானது
கணவாயைப் போர்த்தியிருந்தது. பிற்பகலிலும் கனத்த மேகங்கள்
மலையுச்சியை மூடிக் கொண்டது. டெர்சுவும் சென் பாவோவும் எங்களுக்கு
முன் நடந்தார்கள். அடிக்கடி வானத்தைப் பார்த்துத் தாழ்ந்த குரலில் பேசிக்
கொண்டார்கள். காலநிலை பற்றிய டெர்சுவின் அறிவும் கணிப்பும் எனக்குத்
தெரியும் என்பதாலும், ஆபத்துக்குரிய ஏதாவது இருந்தால் கண்டு சொல்லி
விடுவான் என்ற நம்பிக்கையாலும் அதை நான் கண்டு கொள்ளவில்லை.

நான்கு மணிக்குள் முதல் விடுதியை நெருங்கி விட்டோம். மிதமிஞ்சிய


மூடுபனியால் அந்தப் பகுதி நிறைந்திருந்தது. வேகமாக நடந்து அடுத்த
விடுதியைப் பொழுது சாய்வதற்குள் அடைந்தோம். அது இன்னும் வசதி
உள்ளதாகவும் அளவிற் பெரிதாகவும் இருந்தது.

சில நிமிடங்களில் சொகுசாக, கதகதப்பாக மாறியது. உடைமைகளை


ஒரு மூலையில் குவித்து வைத்து விட்டுத் தரையைத் துப்புரவாக்கி அங்கே
தீ மூட்டினோம். புகைபோக்கியில் கசடுகள் ஏதும் இல்லையென்பதால் புகை
விரைவாக வெளியேறியது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.
அதாவது பனிப்பொழிவும், அடுப்பின் பயன்பாடும் குறைவாக இருந்தால் அது
நேரும். அங்கே இருந்த நிலக்கரியைக் கொண்டு அறையைச் சூடாக்க
எண்ணினோம். ஆனால், இரவு நெருங்கி விட்டதால் தூங்க வேண்டிய இடம்
கடைசியாகத்தான் சூடானது. வெளியே எங்கள் ஆட்கள் ஒரு களியாட்ட
நெருப்பை உருவாக்கி அதன் முன் அமர்ந்து சூடான தேநீரை அருந்தியவாறே
காதுக்கு ஒவ்வாத செய்திகளை உரத்துச் சிரித்துப் பேசிப் பகிர்ந்து
கொண்டிருந்தனர். இன்னொரு புறத்தில் டெர்சுவும் சென் பாவோவும் ஆழ்ந்த
அமைதியுடன் தமது புகைக்குழாயை வலித்துக் கொண்டிருந்தனர்.
வானத்தைப் பார்த்து, மறுநாள் மழை இல்லாவிடில் பயணம் தொடரலாம்
எனத் தீர்மானித்தோம். ஆற்றைக் கடந்து செல்ல அதுவே உகந்த நேரம்.
ஏனெனில் அதன் நீர்மட்டம் உயர்ந்து விட்டால், குரல்வளை போன்ற
பாறையமைப்புக் கொண்ட ஓங்கு, அக்டினி ஆகிய ஊர்களைச் சுற்றிக் கடக்க
வேண்டியிருக்கும். உதேஹிகள் அந்த இடத்தைச் `சாத்தானின் குகை’ என்று
அழைத்தார்கள்.

சம்பவங்கள் ஏதுமின்றிக் கழிந்தது அந்த இரவு.

இருள் நீங்காத பொழுதில் சென் பாவோ எங்களை எழுப்பி விட்டார்.


கடிகாரம் இன்றியே காலம் கணிப்பவர் அவர் எனத் தோன்றியது.
காலையுணவை விரைவாக முடித்து விட்டு விடிவதற்குள் கிளம்பி
விட்டோம். அச்சுறுத்தும் வகையில் சாம்பல் நிறத்தில் இருந்தது வானம்.
மலைத்தொடரை மூடியிருந்தது மூடுபனியா மழைத் திவலைகளா என்பது
தெரியவில்லை. சூரியன் காலங்கடந்து உதித்து விட்டானோ என்ற ஐயமும்
ஏற்பட்டது. உடனே தூறல் விழத் தொடங்கியது. புதிய ஒலி - காற்று
வசியடிக்கும்
ீ ஒலி - ஆரவாரமாகப் பெய்யும் மழைச் சத்தத்துடன் இணைந்து
கேட்டது.

`தொடங்கி விட்டதே’ வானத்தைச் சுட்டிக் காட்டி முணுமுணுத்தான்


டெர்சு.

மேகங்கள் வடமேற்குத் திசை நோக்கி விரைவது, போர்த்தியிருந்த


மூடுபனியின் கிழிசல் போன்ற பகுதியின் ஊடாகக் கணநேரம் தெரிந்தது.
அனைவரும் முழுக்க நனைந்து விட்டோம். மழை ஒரு துன்பமாகத்
தெரியவில்லை. விடாமல் பயணத்தைத் தொடர்ந்தோம். செங்குத்தாக
இருக்கும் உச்சிப் பகுதியை ஏறிச் சிரமப் படுவதற்குப் பதிலாக, அதன்
ஓரமாகவே சென்று ஆற்றுப் படுகையில் இறங்கிக் கூழாங்கற்கள் செறிந்த
அதன் கரையின் வழியாக முன்னேறினோம். வரர்களிடையே
ீ ஊக்கம் பெருகி
உரக்கச் சிரித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தண்ண ீரில் தள்ளியும்
களிப்புடன் விளையாடினர். இன்னும் மூன்று ஆழமான பள்ளங்களை
அவர்கள் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது.
காட்டில் வசிய
ீ காற்று பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. ஆனால்,
ஆற்றங்கரையை நெருங்கும்போது மட்டும் தாள முடியாத குளிர், எலும்பு
வரை ஊடுருவித் தாக்கியது. ஐந்து மணிக்கு ஒரு வேட்டையாடிகள்
விடுதிக்கு வந்தோம். சிறு துறைமுகம் போன்ற இடத்தில், ஆற்றின்
குறுகலான முனையில் அது அமைந்திருந்தது. ஒரு சிற்றோடையைக் கடந்து
அதை அடைய வேண்டியிருந்தது. முகாம் அமைப்பதில் வரர்கள்
ீ முனைப்பாக
இருந்தபோது, சென் பாவோவை அழைத்துக் கொண்டு நான் அருகில் இருந்த
மலையில் ஏறி பிலிம்பா பள்ளத்தாக்கை அளவை செய்தேன். கடலிலிருந்து
எழும்பிய காற்று ஒரு பனிமூட்டத்தை விரட்டி எங்கள் பக்கமாகத் தள்ளியது.
பனியானது நிலத்தில் உருண்டு கொண்டே வந்து பெரும் அலைகளைப் போல்
உருவாகி, மழைமேகங்களுடன் கலந்து மலைத்தொடரை நிறைத்தது.

பொழுது சாயும் நேரம் திரும்பினோம். குடிலில் நெருப்பு எரிவது


தெரிந்தது. போய்ப் படுக்கையில் வழ்ந்தாலும்
ீ வழக்கத்துக்கு மாறாகத் தூக்கம்
பிடிக்க நெடுநேரம் ஆனது. மழைச்சாரல் சன்னல்களில் மோதியது. தலைக்கு
மேல், கூரையில் வேய்ந்திருந்த பிர்ச் மரப் பட்டைகள் காற்றால்
பிய்த்தெறியப் பட்டு வழ்ந்தது,
ீ ஏதோ கெடுநிகழ்வின் முன்னறிவிப்பாகத்
தெரிந்தது. அருகிலிருந்த புதர்கள், மரங்களில் காற்று வசிப்
ீ பேரொலியாய்
எழுந்தது. புயற்காற்று இரவு முழுவதையும் கையகப் படுத்திக் கொண்ட்து.

அடுத்த நாள் காலையில் ஓர் உரத்த குரல் என்னை எழுப்பி விட்டது.


அந்தக் குடிலை விட்டுக் கிளம்ப வேறு காரணம் தேவையில்லை என்பதைச்
சொல்லியது அது. பெய்த மழை பெருகி நீரோட்டங்களை உருவாக்கி
விட்டிருக்கிறது. காற்றின் வச்சு,
ீ குடிலை அதன் அடித்தளத்தையே அசைத்துக்
கொண்டிருந்தது.

உடை மாற்றிக் கொண்டு வேகமாக வெளியே வந்தேன். நம்ப முடியாத


சம்பவங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தன. மழை, மூடுபனி, மேகங்கள்
எல்லாம் ஒன்று சேர்ந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தன. பேருருவங்
கொண்ட செடார் மரங்கள் அங்குமிங்கும் அசைந்தாடின. என்ன நடக்கப்
போகிறது என்பதை அது முறையிடும் தொனியில் சொல்வது போல்
இருந்தது.

ஆற்றங்கரையில் டெர்சு அமர்ந்திருப்பது தெரிந்தது. தண்ண ீரையே


கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.

`என்ன செய்கிறாய்.?’ என்று கேட்டேன்.

`கூழாங்கற்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நீர்மட்டம் உயர்ந்து


கொண்டிருக்கிறது.’ சீனர்களால் ஆற்றோரமாகவே கட்டப்பட்ட அந்த
விடுதியைக் குறைகூறும் விதத்தில் சுட்டிக் காட்டினான். சேர்ந்தாற்போல
இருந்த குடிலும் கரையிலிருந்து தாழ்வாகவே இருந்தது. வெள்ளம் வந்தால்
இரண்டுமே மூழ்கி விடும்.

பிற்பகலில் டெர்சுவும் சென் பாவோவும் கலந்துரையாடி விட்டு,


இருவருமாகக் காட்டுக்குள் செல்வது என முடிவெடுத்தனர். மழைக்கோட்டு
அணிந்து கொண்டு நானும் பின் தொடர்ந்தேன். நேற்று முன்தினம் நாங்கள்
இறங்கி வந்த மலைத்தொடரை நெருங்கி அங்கே விறகு சேகரிக்கத்
தொடங்கினர். முகாமில் இருந்து அது வெகுதூரம் என்பதால் அவர்களின்
செய்கை எனக்கு வியப்பாக இருந்தது. ஆயினும், அவர்களுக்கு இடையூறு
தராமல் ஒரு சிறு குன்றின் மீ தேறி அங்கே பிலிம்பா பள்ளத்தாக்குத்
தெரிகிறதா என்று பார்த்தேன். முயற்சி தோற்றது. அங்கே நான்
கண்டதெல்லாம் மழையும் பனியும்தான். மழை அலையாய்ப் பெருகிக்
காட்டைச் சுருட்டிப் பெருக்கித் தள்ள முயல்வது போல் இருந்தது.
புயற்காற்றுச் சற்றே அமைதி கொண்டது.

நனைந்தும் குளிரில் நடுங்கிக் கொண்டும் திரும்பி, வரர்களை


ீ விறகு
சுமந்து வர சான் பாவோ, டெர்சுவிடம் அனுப்பினேன். அவர்களோ
வெறுங்கையுடன் திரும்பினர். அவர்கள் இருவரும் விறகுகளைக் கொடுக்க
மறுத்து விட்டனராம். டெர்சு என்ன செய்தாலும் அதில் ஒரு பொருள்
இருக்கும் என்பதால் அவர்களை விறகு கொண்டு வர ஆற்றுப் படுகைக்கு
அனுப்பினேன்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு டெர்சுவும் சான் பாவோவும் வந்தனர்.


நனைந்திருந்த உடைகளைக் கழற்றி வைத்து விட்டுப் போய் நெருப்பின் முன்
அமர்ந்து கொண்டனர். பொழுது சாய்வதற்குள் மீ ண்டும் ஒருமுறை ஆற்றைப்
பார்த்து வரப் போனேன். நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருந்தது.
விடிவதற்குள் கரையை மீ றி விடும். முன்னெச்சரிக்கையாக உடைமைகளைச்
சேகரித்துக் கட்டிப் பொதிகழுதைகளில் ஏற்றிப் புறப்பட எப்போதும் தயாராக
இருக்குமாறு வரர்களுக்கு
ீ ஆணையிட்டேன். டெர்சு இந்த நடவடிக்கையை
ஏற்றுக் கொண்டான். மாலையில் சுழற்காற்று வேகமாக வசியடித்தது.

அனைவரும் நடுங்கிப் போனோம்.

ஒரு மின்னல் தோன்றிக் குடிலை ஒளியூட்டி மறைந்தது. தொடர்ந்து


வந்த இடியோசை வானெங்கும் எதிரொலித்தது. கழுதைகள் தமது
கடிவாளங்களைக் கடித்துக் கிழித்தன. நாய்கள் அஞ்சி ஊளையிட்டன.

வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிவதில் டெர்சு முனைப்புடன்


இருந்தான். கதவோரம் அமர்ந்திருந்த சென் பாவோவும் அவனும்
அவ்வப்போது சுருக்கமாக ஏதோ தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். நான்
ஏதும் பேசவில்லை. ஆனால் சென் பாவோ அமைதி காக்குமாறு என்னைடம்
சைகை செய்தார். மூச்சைப் பிடித்துக் கொண்டு கவனித்தேன். பெரும்
ஒலியுடன் தண்ண ீர் பாய்ந்து வருவது காதுக்குக் கேட்டது. டெர்சு குதித்து
வெளியேறினான். ஒரே நிமிடத்தில் திரும்பி, வெள்ளம் கரையைக் கடந்து
விட்டது என்பதையும் அது நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்து
விட்டதால் விழிப்புடன் இருக்கவும் எச்சரித்தான். வரர்கள்
ீ உடனே எழுந்து
உடைகளை இழுத்து வந்து அணிந்து கொண்டனர். அவசரத்தில் ஓரிருவர்
காலணிகளை மாற்றி அணிந்து விட்டு உரக்கச் சிரித்துக் கொண்டனர்.
`எதற்காகச் சிரிக்கிறீர்கள்.?’ டெர்சு கோபத்துடன் கத்தினான். `சீக்கிரம்
அழுவர்கள்.’

சுவரெங்கும் நீர் கசிந்து ஒழுகி நெருப்பு மூட்டிய இடம் வரை வந்து


விட்டது. அதன் வெளிச்சத்திலேயே படுக்கைகளை வாரிச் சுருட்டிக்
கழுதைகளை நோக்கி விரைந்தோம். முழங்கால் அளவு நீரில் அவை நகர
முடியாமல் திகைத்து நின்றன. கைவிளக்கின் ஒளியில் அவற்றின் மீ து
சுமைகளை ஏற்றிக் கட்டினோம். காலத்தே செய்த செயல் அது. குடிலுக்குப்
பின்புறம் இருந்த பள்ளத்தை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் இனியும்
நாங்கள் காலம் தாழ்த்த முடியாது. ஆற்றைக் கடந்து போகவும் முடியாது.
டெர்சுவும் சென் பாவோவும் ஓடுகிற வேகத்தைப் பார்த்ததும் எனக்குப்
பயமாகி விட்டது. வரர்களிடம்,
ீ நேற்று நான் ஏறிப் போன மலையை நோக்கி
விரையுமாறு அறிவுறுத்தினேன். இருள் எங்களைச் சூழ்ந்திருந்தது. குடிலின்
மூலையில் ஒண்டிக் கொண்டிருந்த எங்கள் முகங்களில் மழையும் காற்றும்
மாறிமாறி வசியடித்தன.

மழைப்பொழிவு கண்களைக் கூச வைத்தது. மரங்களும் மலைகளும்


ஆறும் ஒன்றாகிக் காற்றடிக்கும் திசையிலேயே போய் விட, வேகமாக நகரும்
பேருருவமாய் அப்பகுதி உருவெடுத்தது.

வரர்கள்
ீ குழம்பிப் போய் இருந்தனர். அப்போது எங்களுக்கு நேர் எதிரே
ஆற்றின் மறுபக்கம் அசைந்தாடும் எரிதழல் ஒன்று தெரிந்தது. அது டெர்சுவும்
சான் பாவோவும்தான். நாங்கள் அவர்களை அடைய ஓர் ஆழமான ஆற்று
வளைவைத் தாண்ட வேண்டும். ஆகவே கழுதைகளை நீரோட்டத்திற்கும்
தமக்கும் இடையே இருக்க வைத்து அழைத்துச் செல்லுமாறு
அறிவுறுத்தினேன். தழலின் வெளிச்சத்திற்கும் எங்களுக்கும் இடையே 150
தப்படி இடைவெளி மட்டுமே இருந்தாலும் அந்தத் தொலைவைக் கடக்கவே
வெகுநேரம் ஆனது. நீரைக் கடந்து போக, ஒரு புதரில் இருந்த
மரக்கட்டையுடன் கயிறு கட்டிப் பிணைத்திருந்தோம். அது நெகிழ்ந்து
விட்டதால் மீ ண்டும் தண்ண ீரில் விழுந்தோம். அது பள்ளத்தாக்கிற்குப் போய்ச்
சேருவது. விடிவதற்குள் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக் காடாகி விடும்
என்ற முடிவுக்கு வந்தேன். எச்சரிக்கையாக நடந்து ஒருவழியாக மலைப்
பகுதியை அடைந்து விட்டோம். டெர்சு, சென் பாவோவின் முன்னறிவை
அப்போது எண்ணி வியந்தேன். அவர்கள் விறகைச் சேகரித்து அங்கேயே
விட்டு வைத்தது எதற்காக என்பது புரிந்தது. கழிகளைத் தரையில் நட்டு,
மரப்பட்டைகளைக் கொண்டு வந்து காற்று நெருப்பை அணைத்து விடாமல்
திரையிட்டாற்போல் மறைத்து வைத்தனர். அதனால் கூடாரம் அமைப்பது
எளிதாகிப் போனது. மலையடிவாரத்தில் அமைந்த எங்கள் முகாமைக்
காற்றிலிருந்து காத்துத் தந்தது அதன் உச்சிப் பகுதி. தூக்கம் பற்றிய
கேள்வியே எழவில்லை எங்களுக்கு. நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்
காய்ந்தோம். வானம், பூமி, நெருப்பு, நீர் -என்ற நான்கும் எம் மீ து சீற்றத்தை
வளர்த்துக் கொண்டனவோ என்றுகூடத் தோன்றியது.ஆற்றின் ஓசையானது
முழக்கமாகப் பெருகிக் கொண்டிருந்தது.

விடிவும் வந்தது. எப்படிப்பட்ட நிலச்சூழலில் இருக்கிறோம் என்பதற்கான


அடையாளம் ஏதும் தென்படவில்லை. அருகில் குடில்கள் இருப்பதாகவும்
தெரியவில்லை. காடு நீரில் மூழ்கியிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடம்
வரை வந்து விட்ட வெள்ளம், எங்களை உடனடியாகக் கிளம்ப வேண்டியதன்
தேவையை உணர்த்தியது. வரர்கள்
ீ யாருக்குமே இரண்டாவது முறை
சொல்லத் தேவை இருக்கவில்லை. சிலர் கூடாரத்தைப் பிரித்தும்,
மரக்கிளைகளை வெட்டி வந்து வைத்தும் ஈரத் தரையைப் போர்த்தி விட்டனர்.
டெர்சு, சென் பாவோ இருவரும் விறகு சேகரிப்பதிலேயே மீ ண்டும் ஈடுபடத்
தொடங்கி விட்டனர். அந்த இடத்தைக் காலி செய்ய ஒன்றரை மணி நேரம்
ஆனது. மழை குறைவது போல் தோன்றியது. ஆனால் அந்த நிலையும்
நீடிக்கவில்லை. மீ ண்டும் அடர்த்தியான மூடுபனி உருவாகி, விரைவில்
எழுந்துவிட்ட பின் கனமழையும் தொடர்ந்தது. அதுபோன்ற மழையை நான்
கண்டதேயில்லை. அருகில் இருந்த மலைகளையும் காடுகளையும்
மழைத்தாரை போர்வை போல் போர்த்தி விட்டது. நாங்கள் எங்களது
தங்குமிடத்தைக் கூடாரத்திற்கு மாற்றிக் கொண்டோம்.

திடீரென்று எழுந்த கூச்சல் புதிய ஆபத்து ஒன்றை அறிவித்தது. ஓரளவு


நாங்கள் எதிர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. வெள்ளமானது பள்ளத்தில்
விழுந்து, நாங்கள் கூடாரம் அமைத்திருந்த இடத்தை எட்டியது.
நல்வாய்ப்பாகப் பீடபூமி போலிருந்த அப்பகுதியின் மறுபக்கம் ஆழமாக
இருந்தது. தண்ண ீர் அங்கே வேகமாகச் சென்று பள்ளத்தை நிறைத்தது. சென்
பாவோவும் நானும் மழையிலிருந்து நெருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருந்த
வேளையில் டெர்சுவும் வரர்களும்
ீ அங்கே தண்ண ீரோடு போராடிக்
கொண்டிருந்தனர். ஈரம் காய வேண்டும் என்ற நினைவே இல்லை
எங்களுக்கு. உடல் வெம்மையாக இருந்த மகிழ்ச்சியே போதுமானதாக
இருந்தது.

மூடுபனியின் ஊடே கனத்த மேகம் பொதிந்த வானத்தைக் கணநேரம்


பார்த்தோம். மேகங்கள் தென்மேற்குத் திசை நோக்கிப் போய்க்
கொண்டிருந்தன. அதாவது, வசும்
ீ காற்றுக்கு எதிர்த் திசையில்.

`இது நல்லதல்ல’ தலையை ஆட்டியவாறு டெர்சு கூறினான். `இது


நீண்ட நேரத்திற்கு அல்லவா நீடிக்கும்.’

பொழுது இறங்கும் முன் விறகு சேகரிக்கப் புறப்பட்டோம் -இரவு அதன்


தேவை இருக்கும் என்பதால்.

ஆகஸ்டு 12 ஆம் நாள் கடுமையான வடமேற்குப் பருவக் காற்று வசத்



தொடங்கியது. ஆனால் அது விரைவில் அடங்கி விட்டது. மழையோ
தொடர்ந்து பொழிந்து நீரோட்டத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருந்தது.
எல்லோருமே சோர்வில் முடங்கிப் போயிருந்தோம். கூடாரம் கிழிந்து
விடாமல் கண்காணிக்க வேண்டும். விறகுப் பற்றாக்குறையைக் கவனிக்க
வேண்டும். ஓடை பெருகிப் பள்ளம் நிரம்பி முகாமை வட்டமிட்டு
இருப்பதையும் மனதிற் கொள்ள வேண்டும். வெள்ளமும் அவ்வப்போது
எங்கள் முகாமைக் கையகப் படுத்த முயன்று கொண்டுதான் இருந்தது.
அதனால் சிற்றணை போலச் சிலவற்றை உருவாக்கி அதனை மடைமாற்றி
விட வேண்டியிருந்தது. ஈர விறகு மிதமிஞ்சிய அளவுக்குப் புகை கிளப்பியது.
பொங்கி எழுந்த புகை மணலை அள்ளிக் கண்ணில் கொட்டி விட்டதுபோல்
இருந்து உறக்கத்தைக் கெடுத்தது. நாய்கள் கவனிப்பாரற்றுப்
பாறையோரங்களில் படுத்துறங்கின.

அஞ்சத் தக்கதாகத் தோற்றமளித்தது ஆறு. நீர் பாய்கிற வேகத்தைப்


பார்த்தால் தலை சுற்றுவது போல் இருந்தது. கரைகள் எதிர்த் திசைக்குத்
தலைதெறிக்க ஓடுவது போலத் தோன்றியது. பள்ளத்தாக்கின் ஒவ்வொரு
சரிவையும் வெள்ளம் சூழ்ந்து விட்டிருந்தது. நெடிதோங்கிய மரங்கள்
வேரொடு பெயர்க்கப் பட்டு அடிமண்ணையும் சேர்த்துக் கொண்டு ஆற்றில்
விழுந்தன. தண்ண ீர் அவற்றைச் சுழற்றியடித்தது. வெறிகொண்ட விலங்கைப்
போலக் காட்சியளித்தது ஆறு. பள்ளத்தாக்கை அது வாரிச் சுருட்டிப்
பித்தாட்டம் ஆட வைத்தது. எப்போதோ கொதித்து அடங்கிய கிண்ணம்
போன்ற எரிமலை வாயில் நீர் புகுந்து மஞ்சளாய் நுரைத்துப் பொங்கி
ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகளால் ஆங்காங்கே தடுக்கப் பட்டது.
நீரின் மேற்பரப்பில் குமிழிகள் நடனமிட்டன. அவை காற்றில் மிதந்து
உடைந்து மீ ண்டும் உருவாகிக் கொண்டேயிருந்தன.

இன்னொரு நாளும் கழிந்தது. மாலையில் மழையும் காற்றும் அதிகமாக


இருந்தது. கலங்கிச் செயலற்றுப் போயிருந்த நிலையில் நான்காம் இரவு
கடந்திருக்கிறது. தொடர்ந்து வந்த காலையும் அப்படியேதான். வரர்கள்
ீ கனத்த
மேற்கோட்டுகளுடன் கூடாரத்தில் பரபரப்புடன் காணப்பட்டனர். நெருப்பில்
குளிர்காய்ந்து கொண்டிருந்த டெர்சுவும் சென் பாவோவும் மட்டும் இயல்பாக
இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களும் விரைவாக ஆற்றலை இழந்து
வருவது தெளிவாகத் தெரிந்தது. முழுவதுமாக அடிபணிந்து போகும்
நிலைக்கு வந்து விட்டேன். உண்ணவோ, உறங்கவோ விருப்பமேயில்லை.
படுத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. நண்பகல் நெருங்கும்போது வானம்
சற்றே தெளிவடைந்தது போலத் தோன்றியது. ஆனால் மழையின் சீற்றம்
தணியவில்லை.

திடீரென்று பலமான சுழற்காற்று வசியடிப்பது


ீ தூரத்தில் தெரிந்தது.
தனித்தனியே ஆங்காங்கு தென்பட்ட அவை, தகுந்த இடைவெளி விட்டு
ஆற்றலைச் சேமித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது.

`முடிவு நெருங்குகிறது..’ என்றான் டெர்சு.

இந்தச் செய்தி வரர்களுக்குப்


ீ புத்துயிர் அளித்தது. அனைவரும் எழுந்து
கொண்டார்கள். மழை வலுக் குறைந்து தூறலாகி, மென்சாரலாக மாறியது.
அந்தச் சூழலையே அடியோடு மாற்றிக் காலைநிலையில் வேறுபாடு நிச்சயம்
என்பதை உணர்த்தியது. பொழுது சாயும்போது குறையத் தொடங்கிய மழை,
இருட்டியதும் முற்றிலுமாக நின்று விட்டது. வானம் மெதுவாகத்
தெளிவானது. தலைக்கு மேல் ஆங்காங்கே தாரகைகள் மின்னத் தொடங்கின.

துணிகளை உலர்த்திக் கொள்வதும், தேநீர் அருந்துவதும்,


போர்வைகளின் கீ ழ் நெருங்கியமர்ந்து கொள்வதும் வழமையானது.

மறுநாள் தாமதமாக எழுந்தோம். மேகங்களின் புதைவில் இருந்து


ஆதவன் எட்டிப் பார்த்தான். புயல் தாக்கிய காட்டின் அழிபாடுகளைக் காணச்
சகியாமல் மறைந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது. மலைச்
சரிவுகளில் தாறுமாறாக உருவாகிய தற்காலிக அருவிகளில் வழிந்த நீர்
ஓடைகளாக உருவெடுத்து ஓடியது. மரங்களில் எஞ்சியிருந்த இலைகளும்
நிலத்தில் புற்களும் கழுவித் துடைத்தது போலாயின. ஈரம் அவற்றில்
அழகாய் மின்னியது. மழைத்துளிகள் சூரிய ஒளியில் பட்டு வானவில்லின்
எல்லா வண்ணங்களையும் எதிரொளித்தன. காடு தன் உயிர்ப்பை மீ ட்டுக்
கொண்டது.

வெள்ளம் வடிந்த காட்டில் நடந்து முன்னேறுவது கடினமாக இருந்தது.


கழுதைகள் சேற்று நிலத்தில் விழுந்து சோர்வைப் போக்கிக் கொள்ளப்
புரண்டு எழுந்தன. மாலை நெருங்குவதற்குள் பள்ளத்தாக்கின் வலப்புறம்
இருந்த மலைத்தொடரை அடைந்தோம். கழுதைகள் கடிவாளப் பிணைப்பில்
இருந்து விடுபட்டன. வரர்களும்
ீ ஓய்வைத் தேடினர். கடுங்குளிர் வாட்டியது.
நடுங்கிக் கொண்டு எந்நேரமும் கீ ழே விழத் தயாராக இருந்தோம்.

அடுத்த நாள் காலையிலேயே பயணத்தைத் தொடங்கி விட்டோம்.


தண்ணர்ீ முழங்கால் வரை உயர்ந்து இருந்தது. பிலிம்பா ஆற்றின்
முகத்துவாரத்தைக் காணும் நம்பிக்கையை நான் இழந்த போது தூரத்தில்
கடலின் இரைச்சல் கேட்டது. மூடுபனியின் ஊடாகக் கடற்கரையை
அடைந்தோம். காலடியில் இருப்பது மணல் என்பதைக் கூடக் கால்கள்
சறுக்குவதைக் கொண்டுதான் உணர்ந்து கொண்டோம்.
வழக்கத்திற்கு மாறான இயல்பில் இருந்தது கடல். அழுக்கான மஞ்சள்
நிறத்தில் மைல் கணக்கில் அதன் மேற்பரப்பு இருந்தது. உடைந்த சிப்பிகள்
குவியலாக அலைமேல் மிதந்தன. வெகுதூரத்தில் படகுகளும் சிறு
கப்பல்களும் மீ ன்பிடி படகுகளும் தெரிந்தன. சிப்பிக் குவியல் காற்றால்
விரட்டப் பட்டுக் கரையில் ஒதுங்கின.

புயலுக்குப் பிறகான இரண்டாம் நாள் காலநிலை சீரடைந்தது. அமைதி


திரும்பியது.

You might also like