You are on page 1of 14

23. வலியுடன் கடத்தல்..

புயலுக்குப் பின்னே கிட்டிய இனிய காலநிலை எங்களை வேகமாக


முன்னேறச் செய்தது.

ஆறு நெருங்கும் போதெல்லாம் எங்கள் சகாக்களுக்கு ஆர்வம்


பெருகியது போல் தெரிந்தது. அண்மைய மழைக்குப் பிறகு டகேமா ஆற்றில்
நீர்மட்டம் ஆபத்தான வகையில் உயர்ந்திருந்ததால் மறுகரைக்குக் கடந்து
செல்வது சிரமம். எங்களுக்குள் கலந்து பேசித் தெப்பம் ஒன்றை உருவாக்கி
ஆற்றைக் கடக்க முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். மாற்று
வழியொன்றும் இருந்தது. அருகில் இலிமோ ஆறு தொடங்கும் இடத்திற்கு
மேலேறிச் சென்று சுற்றி வந்து டகேமா ஆற்றின் முகப்புப் பகுதிக்கு வந்து
சேர்வதே அது.

ஆழம் குறைந்த காயல் பகுதியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.


அங்கிருந்து தெப்பத்தால் ஆற்றைக் கடக்க வேண்டும். அதன் மேற்பகுதியின்
நீட்சியில் குறிப்பாக அக்கரை நெருங்கும்போது நீர் இறக்கங்கள் காணப்படும்.
மட்டுமன்றி நாங்கள் இருந்த இடத்திலும் மணல் திட்டுகள் நீருக்கடியில்
மூழ்கியவாறு இருப்பதையும் தெரிந்து கொண்டோம். பிறகு மூன்று பெரிய
மரங்களை வெட்டி வழ்த்தினோம்.
ீ கிளைகளைத் தறித்து நீக்கிப் பாதியாக
வெட்டி அழகிய, பாதுகாப்பான தெப்பம் ஒன்றை உருவாக்கி விட்டோம்.
ஏற்கெனவே பொழுது சாய்ந்து விட்டதால் ஆற்றைக் கடப்பதை அடுத்த
நாளுக்கு ஒத்தி வைத்தோம்.

மீ ண்டும் கூடிப் பேசினோம். தெப்பம் அக்கரையை அடைந்ததும்


அரினின், சென் பாவோ இருவரும் குதித்துக் கரையிறங்க வேண்டும்.
உடைமைகளையும் பொதிகளையும் எடுத்து நான் கரையை நோக்கி வசுவேன்.

சான் லின்னும் டெர்சுவும் தெப்பத்தைச் செலுத்துவார்கள். பிறகு நானும்
என்னைத் தொடர்ந்து டெர்சுவும் குதித்துக் கரையேற வேண்டும். சான் லின்
கடைசியில் ஏறிக் கொள்வான்.
அடுத்த நாள் தோள்பைகளைத் தெப்பத்தின் மையத்தில் குவித்துத்
துப்பாக்கிகளை அவற்றின் மேல் வைத்தோம். நாங்கள் ஓரங்களில் நின்று
கொண்டோம். ஆனால் வெகு விரைவில் தெப்பம் ஒரு நீரோட்டத்தில் சிக்கிக்
கொண்டது. முயற்சிகள் வணாகி
ீ விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. திரும்பிப்
போகவும் முடியாது. கரை தொலைவில் இருந்தது.

ஒருவழியாக அக்கரை நெருங்கியதும் சென் பாவோவும், அரினினும்


துப்பாக்கிகளுடன் கரையில் குதித்தனர். அத்தருணத்தில் தெப்பம் நீரோட்டம்
நோக்கித் தானாகத் திரும்பிக் கொண்டது. அந்நிலையிலும் நான்
உடைமைகளைக் கரையை நோக்கி வசிக்
ீ கொண்டிருந்தேன். டெர்சுவும், சான்
லின்னும் சிரமப் பட்டுத் தெப்பத்தைக் கரை நோக்கிச் செலுத்த முயன்றனர்.
நான் தடுமாறியவாறே கரையைத் தாண்ட முயன்றபோது சான் லின்னின்
கையிலிருந்த, தெப்பம் செலுத்தும் கழி முரிந்து போய்விட அவன் தண்ணரில்

தலைகுப்புற விழுந்தான். நீர்மட்டத்திற்கு மேல் வந்ததும் கரையை நோக்கி
நீந்தினான். இருந்த இன்னொரு கழியைக் கையில் பற்றிக் கொண்டு
டெர்சுவுக்கு உதவுவதற்காக விரைந்தேன். சற்றுத் தொலைவில் கரடுமுரடான
பாறையொன்றின் முனை நீருக்கு மேல் தெரிந்தது. டெர்சு என்னைச் சீக்கிரம்
குதிக்கச் சொல்லிக் கூவினான். அந்த அவசரத்தில் அவன் சொன்னது
எனக்குப் புரியாததால், கழியைக் கொண்டு படகைச் செலுத்துவதில்
மும்முரமாக இருந்தேன். புரிவதற்குள் டெர்சு என்னைத் தூக்கித் தண்ண ீரில்
வசி
ீ விட்டான். ஒரு புதரில் விழுந்து அதை இறுகப் பிடித்துக் கொண்டே
கரையேறினேன். அதே நேரம் தெப்பம், பாறையின் மீ து பம்பரம் போல்
சுழன்று, அடிபட்டுத் திரும்பி நீரோட்டத்தை நோக்கிப் போனது. டெர்சு அதன்
நடுவில் தன்னந்தனியே நின்று சமநிலைக்காகப் போராடிக் கொண்டிருந்தான்.

கரையோரமாகவே ஓடினோம். கழியின் ஒரு முனையை அவனை


நோக்கி நீட்டினோம். ஆனால் அது எட்டவில்லை அவனுக்கு. மேலும் அந்த
இடத்தில் ஒரு வளைவு இருந்ததால் தெப்பம் எங்களைப் பின்னுக்கு இருக்க
விட்டு முன்னேறிச் சென்றது. கரைக்கு அருகே அதை திருப்பி விடுவதில்
முனைப்பாக இருந்தான் டெர்சு. ஆற்றோட்டத்தின் வலிமைக்கு முன் மனிதத்
திறன் எம்மாத்திரம்.? நூறு அடித் தொலைவில் ஓர் அருவியின் முழக்கம்
கேட்டது. தெப்பம் அங்கே போனால் டெர்சு தூக்கியெறியப் படுவான்.
தண்ணரில்
ீ பாதியளவு மூழ்கியிருந்த மரக்கிளையொன்று தென்பட்டது.
தெப்பம் பாறையை நெருங்கும்போது உந்து ஆற்றலைச் சேகரித்து, விரைவு
பெற்றுக் கொண்டதால் டெர்சுவின் முடிவு என்னவாகும் எனத்
தெரியவில்லை. உடைமையான பொருள் ஒன்றைக் காக்கத் துடிப்பது போல,
நான் கூவிக்கொண்டே கரையில் ஓடினேன். கரையோரப் புதரின் ஊடாக
அவனைக் கண்டேன். அவன் கையில் கழி இல்லை. தெப்பத்தின் ஒரு
மூலையில் நிற்க வேண்டிய நிலை. தெப்பம் மரக்கிளையில் மோதித்
தெறித்தபோது டெர்சு ஒரு பூனையைப் போலக் குதித்துக் கிளையைப் பற்றிக்
கொண்டதைப் பார்த்தோம்.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அருவி தொடங்கும் முனைக்கு மிக அருகில்


தெப்பம் வந்து விட்டது. கரையோரத்தில் பெரிய மரக்கட்டைகள் கிடப்பதை
வெவ்வேறு கணங்களில் பார்த்து வைத்திருந்தோம். அவற்றைப் பாறைகளின்
மேல் வைத்துத் துண்டுகளாக்கிக் கொண்டோம். சொல்லவியலாத நிம்மதிப்
பெருமூச்சு என்னிடம் வெளிப்பட்டது. ஆனால், சிக்கலான கேள்வியொன்று
புதிதாகத் தோன்றியது. நாங்கள் டெர்சுவைக் காப்பாற்றியாக வேண்டும்.
மரக்கிளையில் எத்தனை நேரத்திற்கு அவன் தொங்கிக் கொண்டிரூக்க
முடியும். மரக்கிளை நீரோட்டத்திற்கு இயைந்து 30 டிகிரி வளைந்திருந்தது.
டெர்சு அதைத் தனது கை, கால்களால் இறுகப் பற்றிப் பிடித்திருந்தான்.
எங்களிடமோ கைவசம் கயிறு இல்லை. இருந்ததையெல்லாம் தெப்பம்
உருவாக்கப் பயன்படுத்தியாயிற்று. மீ தம் இல்லை. என்ன செய்யலாம்.? நேரம்
காத்திருக்காது. டெர்சுவின் கைகள் எந்த நொடியிலும் பிடியைத் தளரவிட
நேரும். அதன் பின்..

பதற்றத்துடன் கூடி ஆலோசித்தோம். சான் லின் எங்களின் கவனத்தை


ஈர்த்தான். டெர்சு அங்கிருந்தபடியே கைகளை அசைத்து ஏதோ சொல்வதைக்
காட்டினான். ஆனால், பொங்கிப் பெருகும் நீரின் ஒலியில் அவனது குரல்
அமிழ்ந்து போனது.
ஒரு மரத்தை வெட்டிப் போடச் சொல்கிறான் என்பதைப் புரிந்து
கொண்டோம். ஆனால், நீரில் விழும் மரம் அவனை மீ ட்டு விடுமா..? அவன்
மீ தே அது விழுந்து விட்டால்..? ஓங்கி வளர்ந்திருந்த நெட்டிலிங்க வகை மரம்
ஒன்றைத் தெரிவு செய்தபோது, டெர்சு அங்கிருந்தே அதை வேண்டாம் என
மறுத்துக் கையசைத்தான். ஓர் எலுமிச்சை மரத்தைத் தேர்ந்தோம். அதையும்
மறுத்து விட்டான் அவன். இறுதியாக, இலையுதிர்க் காட்டிற்கே உரிய ஒரு
பெரிய மரத்தைத் தேர்ந்தெடுத்தபோது டெர்சு அதை ஏற்றுக் கொண்டான். அது
ஏன் என்பதையும் புரிந்து கொண்டோம். அந்த மரத்திற்குப் பெரிய கிளைகள்
கிடையாது. நட்டாற்றில் சிக்கிக் கொள்ளாது.

டெர்சு தனது இடைக் கச்சையைச் சுட்டிக் காட்டுவதைக் கவனித்தேன்.


அதன் பொருளைச் சென் பாவோ கண்டு கொண்டார். வெட்டப்படும் மரத்தைக்
கரைப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கச் சைகை மூலம்
உணர்த்தியிருக்கிறான். எங்கள் தோள்பைகளைத் துருவி ஆராய்ந்து, துப்பாக்கி
உறைகள், இடுப்புக் கச்சைகள், தோல் வார்கள் -என மீ ட்புக்குப் பயன்படும்
எனக் கருதத் தகுந்த எல்லாப் பொருள்களையும் வெளியே எடுத்தேன்.
டெர்சுவின் பையில் கூடுதலாக ஒரு தோல் கச்சை இருந்தது. அனைத்தையும்
எடுத்து, வழ்த்திய
ீ மரத்தின் அடிப்பகுதியில் சேர்த்து வைத்துக் கட்டினோம்.

பிறகு கோடரிகளால் மரத்தின் கிளைகளை வெட்டி விட்டோம். அது


அசைந்தாடி மெதுவாகத் தண்ண ீரில் சாய்ந்து விழுந்தது. உடனே, சென்
பாவோ, சான் லின் இருவரும் மரத்தின் அடிப்பகுதியைக் கச்சையின்
துணையுடன் இறுகப் பிடித்துக் கொண்டனர். வழ்த்திய
ீ மரத்துண்டை
நீரோட்டமானது அருவியை நோக்கிச் செலுத்தத் தொடங்கியது. ஆற்றின்
மையத்திற்கும் கரைக்கும் இடையே ஒரு பெரிய வளைவு இருந்ததால் அது
டெர்சுவைக் கடந்து சென்றது. அப்போது டெர்சு அதன் கிளையைத் தன்
கைகளால் பற்றிக் கொண்டான். ஒரு கழியை நீட்டி அவனைக் கரையில்
இழுத்துக் கொண்டோம்.

தெப்பத்தில் இருந்து தக்க நேரத்தில் என்னைக் கரையை நோக்கி


ஓங்கித் தள்ளிவிட்ட அந்தப் பழங்குடியை நன்றியுடன் நோக்கினேன். அவன்
வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை இருவரும்
தெப்பத்தில் இருந்தபோது, அவன் குதித்துக் கரை சேர்ந்து, நான் தண்ண ீரில்
சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்.? இறந்திருப்பேன். அவ்வளவுதான்.
ஆனால் இப்போது இருவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

அது வரையிலான ஆபத்துகள் விரைவில் மறந்து போய், இப்போது


அவை நகைப்புக்கு உரியனவாக மாறி விட்டன. சான் லின் ஆரவாரமாகச்
சிரித்துக் கொண்டே, டெர்சு எவ்வாறு மரத்தை இறுகப் பற்றிக்
கொண்டிருந்தான் என்பதை விளக்கினான். அதே நிகழ்ச்சியை வைத்துச் சென்
பாவோ, இந்த டெர்சு ஒரு கரடியின் உறவுக்காரனாக இருப்பானோ என்ற
முடிவுக்கே வந்து விட்டதாகச் சொன்னார். டெர்சுவும் விடவில்லை. சான்
லின் தண்ண ீரில் தடுமாறி விழுந்ததையும், நான் என்ன நடக்கிறது என்பதே
தெரியாமல் எப்படிக் கரை சேர்ந்தேன் என்பதையும் நையாண்டியாக நடித்துக்
காட்டினான்.

அடுத்த நாள் பயணத்தைத் தொடர்ந்து டகேமா பள்ளத்தாக்கில் இறங்கி


மூன்று நாட்கள் கழித்துக் கடலை அடைந்தோம். அது செப்டம்பர் 22. அங்கே
உதேஹிக் குடியிருப்பில் இருந்த ஒரு குடிலில் வைக்கோல் பாயில் படுத்து
ஓய்வெடுக்கும் மகிழ்ச்சியான தருணம் வாய்த்தது. உள்ளூர்க் காரர்களின்
விருந்தோம்பலில் மிகுந்த அக்கறை இருந்ததைக் கண்டோம். இறைச்சியும்,
தேநீரும், வாட்டிய மீ னும் எங்களுக்கு உண்ணக் கொடுத்தனர். துணிகளைச்
சலவை செய்தேன். தூய உள்ளாடை அணிந்து கொண்டேன். வேலைகளில்
மூழ்கிப் போனேன்.

செப்டம்பர் 25 அன்று காலையில் டகேமாவில் இருந்து கிளம்பி


வடதிசை நோக்கிப் பயணமானோம். சான் லின்னையும் எங்களுடன் வருமாறு
வற்புறுத்தினேன். அவன் மறுத்து விட்டான். மரக்கீ ரிகள் நடமாடும் காலம்
நெருங்கி விட்டது. வலைகளை ஆயத்தப் படுத்தி வேட்டைக்குத் தயாராக
வேண்டும். கைத்துப்பாக்கி ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தேன். பிறகு
பிரிந்து கொண்டோம்.
டகேமாவில் இருந்து வடக்கே செல்ல இரு வழிகள் இருந்தன. ஒன்று,
கடலுக்குச் சிறிது தூரத்தில் உள்ள மலைகளின் வழியே ஏறிச் செல்வது.
இரண்டாவது, கடற்கரையை ஒட்டிய சதுப்பு நிலத்தைக் கடந்து போவது.
பொதிகழுதைகளுடன் மெர்சில்யகோவ் முன்னால் செல்ல, அடுத்ததாக நான்
தொடர்ந்தேன்.

இரண்டு மணி நேரத்தில் குலும்பா ஆற்றை அடைந்தோம். அதைக்


கடந்து ஒரு குன்றின் உச்சியில் ஏறி, நெருப்பு மூட்டித் துணிகளை உலரச்
செய்தோம். அங்கிருந்து பார்க்கும்போது கடல் அழகிய காட்சியாகத் தெரிந்தது.

சால்மன் மீ ன்களுக்குக் குஞ்சு பொரிப்புக் காலம் அது. மீ ன்கூட்டம்


ஆற்றின் தரைப்பகுதியை ஆக்கிரமித்து மறைத்திருந்தது. சில நேரங்களில்
அவை தமது `புனிதப் பயணத்தை’ நிறுத்திக் கொண்டு, மதி மயங்கிய
நிலையில் ஒன்றோடொன்று முன்னும் பின்னுமாக மோதிக் கொண்டன.
சென் பாவோ சுட்டு வழ்த்திய
ீ இரண்டு பெரிய மீ ன்கள் அன்று முதல்தரமான
இரவுணவு ஆயின.

பள்ளத்தாக்கின் வடதிசையில், கடற்கரையின் மேடான பகுதியானது


மலைத்தொடருடன் இணைந்து விடும் இடத்தில் ஓர் உயர்ந்த மேடு
பாதையில் குறுக்கிட்டது. நாங்கள் அளவை செய்ய வேண்டிய இடம் அது.
ஆனால், பிடிமானத்திற்குக் கற்களோ, பாறைகளோ இல்லாமல் தளர்வான
மணலைக் கொண்ட குன்றாக அது இருந்தது. அதன் மறுபக்க விளிம்பில் ஒரு
குறுகலான வழியானது, கடல் மட்டத்திற்கு 60 அடிக்கு மேல் தென்பட்டது.
அந்த விளிம்புப் பகுதியும் மிகக் குறுகலாக, இருபக்க முனைகளும் நெருங்கி,
உச்சியைத் தொடும் வகையில் சாய்வாகத் தொங்கியவாறு இருந்தது.
உயிரைப் பணயம் வைத்துத்தான் அதன் உச்சியை அடைய முடியும். மேலும்
அந்த வழியின் சரிவு, நேராகக் கடலைப் பார்த்தவாறு இருந்தது என்பதும்
முக்கியம். அந்த இடம், நிறையப் பேரைப் பலிகொண்டிருக்கிறது. உதேஹிகள்
அதைக் குலே-ரப்பானி எனவும், சீனர்கள் வான் சின் லாட்சா எனவும்
அழைத்தனர். வான் சின் என்ற சீனர் அங்கே முதலில் பலியானவர் என்பதால்
அவரது பெயர் அதற்குச் சூட்டப் பட்டிருந்தது. அந்த விளிம்பை
வெறுங்கால்களுடனோ அல்லது மென்மையான, உலர்ந்த
காலணியுடனோதான் அணுக வேண்டும். மழைக்காலக் காலைப்
பொழுதுகளில் பனி பெய்யும் போது, பனிக்கட்டி மேலோடு போலப்
பரவியிருக்கும் நிலையில் அதைக் கடந்து செல்வது சாத்தியமேயில்லை.

குலும்பாவைக் கடந்ததும் எங்களது காலணிகள் நனைந்து ஈரமாகி


விட்டதால் அந்தத் துணிகரப் பயணத்தை மறுநாளுக்குத் தள்ளி வைத்தோம்.
ஆகவே இப்போது தங்குமிடம் தேட வேண்டும். அப்போது நீர்மட்டத்திற்கு
மேல் ஏதோவொன்றின் தலை மட்டும் தென்பட்டது. எங்களுக்கு அது
அடங்காத ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அது ஒரு சீல்
விலங்குதான். துடுப்புக் காலி எனும் சிற்றின வகையைச் சேர்ந்த அது
பெரும்பாலான நேரத்தைத் தண்ண ீரில் செலவிடும். சிறிது இடைவெளி
விட்டுப் பாறைப்பகுதிக்கு வந்து மூச்சு வாங்கிக் கொள்ளும்.
வெளிச்சத்தில்தான் உறங்கும். அவ்வப்போது எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துக்
கொள்ளும். கேட்கும் திறனும் கண்பார்வையும் அவற்றின் பிற புலன்களை
விட மேம்பட்டிருக்கும். தரையில் அருவருப்பான தோற்றத்துடன் காணப்படும்
அவ்விலங்கு தண்ண ீரில் வெகுவேகமாய் நழுவிச் செல்லக் கூடியது. துன்பம்
ஏற்படுத்தினால் மனிதர்களையும் தாக்கி விடும். எதையும் அறிந்து கொள்ளும்
அவா மிக்க இந்த விலங்கு, இசையின் பால் அன்பும் கொண்டது.
வேட்டையாடிகள், உலோகப் பொருள்களைக் குச்சியால் தட்டி
இசையெழுப்பியோ, சீழ்க்கையொலி ஏற்படுத்தியோ இவற்றை வசப் படுத்தி
விடுவர்.

டெர்சு அதைப் பார்த்து உரக்கக் கத்தினான். அது தண்ண ீரில் பாய்ந்து


சில விநாடிகளிலேயே மீ ண்டும் தோன்றியது. ஒரு கல்லை எடுத்து அதன்
மீ து வசியெறிந்தான்
ீ டெர்சு. மீ ண்டும் அது தண்ண ீரில் முழ்கி, மேலே வந்து
நாங்கள் இருக்கும் திசையைத் தேடி பார்த்தது. டெர்சு பொறுமை இழந்து
விட்டான். தன் துப்பாக்கியை எடுத்துக் கைக்குக் கொணர்ந்து அதை நோக்கிச்
சுட்டான். குண்டு தண்ண ீரில் பட்டுத் தெறித்தது.

`தவறி விட்டது சகோதரா..’ என்றேன்.


`அதை அச்சுறுத்தி விட்டேன். அவ்வளவுதான்..’ பதில் தந்தான்.

எதற்காக அவன் அந்தச் சீல் விலங்கை விரட்டுவதில் மட்டும்


கவனமாக இருந்தான் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். கரையில்
எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அது மதிப்பிட்டுக் கொண்டிருந்தது
என்றான் டெர்சு. மேலும் அந்த வகையில் விலங்கினம் அறிந்திராத ஒன்றைச்
செய்து அவனது `வேட்டையாடிப் பெருமிதத்தை’ ஊறுபடுத்தியிருக்கிறது.
கணக்கிடுவது என்பது தனக்கு மட்டும்தான் தெரியும் என மனிதன்
நினைத்துக் கொண்டிருக்கிறான்.

சென் பாவோவும் டெர்சுவும் குன்றின் உச்சியை ஆராய்ந்து வரப்


போனார்கள். ஆங்காங்கே கிடந்த கற்களைக் கொண்டு பாதையில்
இயன்றவரை படிக்கட்டு அமைக்க முயன்றனர். இதற்கிடையில் நான்
மாற்றுப் பாதை பற்றித் திட்டமிடத் தொடங்கியிருந்தேன். தூரத்தே வடக்குத்
திசையில் போனால் அங்கே உயர்ந்த கடற்கரையோர மணற்குன்றுகளை
அடையலாம் என்பதைக் கண்டுபிடித்தேன்.

நைனிங் என்ற குன்றின் அடிவாரத்தில் ஒரு கொரியக் குடில்


இருப்பதைக் கண்டோம். அங்கே இருந்தவர்கள் நண்டு பிடிப்பவர்களாக,
மரக்கீ ரிகளை வலை கட்டி வழ்த்துபவர்களாக
ீ இருந்தனர். குடிலுக்குச் சற்றுத்
தொலைவில் `பாலங்கள்’ தென்பட்டன. அதாவது, மரக்கீ ரிகளை வழ்த்தும்

வலைகள். காய்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு அதை அமைத்திருந்தனர்.
ஒரு கரையில் உள்ள காய்ந்த மரமொன்றை வெட்டி மறுகரையில் அது
வழுமாறு
ீ செய்திருந்தனர். சில நேரங்களில் தேவைக்கேற்ப நன்கு வளர்ந்த
மரங்களை வெட்டியும் பயன்படுத்திக் கொண்டனர். மரத்துண்டின் குறுக்காகப்
புதர்போல் வைக்கப் பட்டிருந்த சிறு கிளைகள் வழியைப் பாதியளவு
அடைத்திருந்தன. அந்தப் புதரில் குறுகலான ஒரு திறப்பு இருந்தது. சுருக்குக்
கயிறு அதில் கடிகார வில்லைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தது.
மரத்துண்டின் இரு பக்கங்களும் வெட்டி விடப் பட்டிருந்தன. புதரை
மாற்றுவழியாகப் பயன்படுத்தி மரக்கீ ரி தப்பி விடாமலிருக்க இந்த ஏற்பாடு.
தொங்கு கயிற்றின் ஒரு முனை மரக்குச்சியால் இறுகப் பிணைக்கப்பட்டுச்
சிறிய உதைகால் போன்ற இடத்தில் வைக்கப் பட்டிருந்தது. 10 பவுண்டு எடை
கொண்ட கல் ஒன்று மரக்குச்சியோடு சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது.
பாலத்தைத் தாண்ட வரும் மரக்கீ ரி புதரை நெருங்கும்போது அதைத்
தவிர்த்து விட்டு அங்குள்ள தடையைத் தாண்டி விட எத்தனிக்கும். வேறு
வழி இல்லாத போதிலும் கயிற்றின் மேல் குதித்து அதில் மாட்டிக்
கொள்ளும். துணைக்காகக் குச்சியைத் தட்டி விடும். குச்சியில்
பொருந்தியிருக்கும் கல்லின் எடை, அந்த விலைமதிப்பு மிக்க விலங்கை
இழுத்துத் தண்ண ீரில் தள்ளி விடும்.

தோல்வியையே சந்தித்திராமல் இருப்பது என்பதால் அந்த மரக்கீ ரி


பிடிக்கும் வலைப்பொறியின் மீ து கொரியர்கள் மிகுந்த மதிப்பு
வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒன்று கூடத் தப்பியதில்லை என்பதை
உறுதியாகச் சொன்னார்கள். மேலாக, நீரில் மரக்கீ ரி பாதுகாப்பாக இருக்கும்.
காகம், காடை போன்ற பறவைகள் அதை அணுக முடியாது.

வடதிசை நோக்கிப் பயணமானோம். தேவையான பொருட்கள்


இன்னொரு வழியாக எங்களுக்கு வந்து சேரும். நான், அமாகு ஆறு
தொடங்கும் இடத்திற்குச் சென்று கார்ட்டு என்ற இணைப்புப் பகுதியைக்
கடந்து குலும்பா பள்ளத்தாக்கில் இறங்கிக் கடற்கரையை அடையத்
திட்டமிட்டேன். ஆனால் அங்கு குடியிருந்தவர்களோ, அருகிலுள்ள இரண்டு
ஓடைகளும் நீர்ச்சுழல்களால் நிறைந்திருக்கும் என்றும், மலைச்சரிவு அடிக்கடி
ஏற்படும் இடம் அது என்பதையும் விளக்கிக் கூறினார்கள். மேலும்,
பொதிகழுதைகளைக் கடைசி வரிசையில் இருக்குமாறும் உடைமைகளைத்
தோள்பைகளில் சுமந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர். அதற்கு ஏற்றவாறே
எனது பயணத் திட்டத்தை அமைத்தேன். அதாவது, நானும் டெர்சுவும் மட்டும்
முன்னே செல்வது. சென் பாவோவும் வரர்களில்
ீ ஒருவனும் சேர்ந்து இரண்டு
பயணித்துத் திரும்பி விட வேண்டும்.

உணவுத் தேவையில் குறைவாக மூன்றில் இரண்டு பங்கை மட்டும்


எடுத்துக் கொண்டோம். வரன்
ீ மெர்சில்யகோவ், எங்களுடன் இருந்த சாலே
என்ற உதேஹிப் பழங்குடியை வான் சின் லாட்சாவுக்கு அனுப்பி உணவுப்
பொருட்கள் வாங்கி வந்து மலையுச்சியில் இருக்கும் எங்கள் இருவருக்கும்
கொண்டு சேர்க்க வேண்டும்.

தொடர்ந்த நாளில், எடை கூடியிருந்த தோள்பையுடன் புறப்பட்டோம்.


மங்கலாகத் தெரிந்த பாதை எங்களை டுனாட்சா ஆறு, அமாகு ஆற்றுடன்
வந்து கலக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. ஒரு மைல் தூரம் நடந்து
கூழாங்கல் பரவியிருந்த கரையில் முகாம் அமைத்துக் கொண்டோம்.

பொழுது சாய இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. நான் வேட்டைக்குக்


கிளம்பினேன். மரங்களிலிருந்து வழ்ந்த
ீ இலைகள் குவியலாகக் கிடந்தன.
சலிப்பூட்டும் சாம்பல் வண்ணத்தில் இருந்தது காடு. அதன் உயிர்ப்பில்லாத
தன்மை குளிர்காலத்தை முன்னறிவிப்பது போலக் காட்சியளித்தது. ஓக் மர்ச்
சோலைகளில் மட்டும் இலைகள் தென்பட்டன. அதுவும் துயரார்ந்த மஞ்சள்
நிறத்திற்கு மாறியிருந்தன. புதர்கள் தமது சொகுசான மேலாடை போன்ற
பசிய வண்ணத்தைப் பறிகொடுத்து விட்டாற்போல எங்கிலும் ஒரே தோற்றம்
நிறைந்திருந்தது. வழ்ந்து
ீ கிடந்த இலைகளுக்குக் கீ ழே கரிய தரை
சோம்பலாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அதற்கேற்றவாறே எல்லாத் தாவர
வகைகளும் எதிர்ப்பின்றி மடியத் தயாராக இருந்தன.

மங்கலொளி சூழ்ந்த அந்த இடத்திற்கு ஏன் வந்தேனோ எனத் தீவிரமாக


யோசித்துக் கொண்டிருந்த வேளை, பெருத்த ஓசையொன்று எனக்குப்
பின்னாலிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, இசைகேடான கூன்முதுகு,
வெளுத்த கால்களுடன் ஒரு பெரிய விலங்கு நின்று கொண்டிருந்தது.
தலையை முன்புறமாக நீட்டி அந்தக் காட்டையே ஒரே பாய்ச்சலில் கடந்து
விடும் துடிப்பு அதனிடம் தெரிந்தது. துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தேன்.
அதன் விசையை அழுத்துவதற்குள் ஒரு துப்பாக்கிச் சத்தம் எங்கிருந்தோ
கேட்டது. விலங்கு வழ்ந்தது.
ீ அடுத்த நிமிடம் ஒரு செங்குத்தான
சரிவிலிருந்து டெர்சு ஓடி வந்து கொண்டிருந்தான் - தான் வழ்த்திய

இரையைப் பார்ப்பதற்காக.
அது ஒரு கடமான். மூன்று வயதுடைய ஆண்மான். எடை 520 பவுண்டு
இருக்கும்.

அருவருப்பான தோற்றமுடைய அதன் கழுத்து உறுதியாகவும், நீண்ட


கட்டமைப்பான தலையில் மூக்கு கொக்கி போல் பொருந்தியும் இருந்தது.
மயிர் நீண்டு பளபளப்பாகவும் மென்மையாகவும் காணப்பட்டது. அடர் பழுப்பு
நிறத்தில் கிட்டத்தட்டக் கருமை நிறத்தில் இருந்தது, கால்கள்
வெள்ளைவெளேர் என்றிருந்தன. கடமான், சூழலை உன்னிப்பாகக் கவனிக்கும்
விலங்கினமாகும். சிறு இடரைச் சந்தித்தாலும் அந்த இடம் தனக்குப்
பிடித்தமானது என்றபோதிலும் அங்கே தனது நடமாட்டத்தைக் கைவிட்டு
விடும். ஓடும்போது தாவிச் செல்லும் இயல்புடையது என்றாலும் சில
நேரங்களில் நான்கு கால் பாய்ச்சலில் விரைந்து பறப்பது போல் மறைந்து
விடும். சகதியான ஏரிப் பகுதியில் குளிக்க விரும்பும். காயப் படுத்தினால்
பொதுவாகத் திரும்பி ஓடி விடும் ; ஆனால் இலையுதிர் காலத்தில்
மனிதர்களையும் எதிர்த்து நின்று பொருத முற்படும். அப்போது,
பின்கால்களின் உதவியுடன் நின்று கொண்டு முன்கால்களை வசி
ீ எதிரியைத்
தாக்கும். வெற்றி கிட்டும்போது எதிரியின் மேல் மோதி மிதித்துத் தள்ளி
விடும்.

ஐரோப்பிய வகைக் கடமான்களைப் போலவேதான் உசூரி மான்களும்


தோற்றமளிக்கும். கொம்பு மட்டும் வேறுபட்டிருக்கும். அகன்று விரிந்த
உள்ளங்கால்கள் செந்நிற மான்களைப் போலத் தென்படும்.

தோலை உரித்து இறைச்சியைத் துண்டங்களாக்கினான் டெர்சு. அந்தக்


காட்சி பார்க்கப் பிடிக்காமல் போனாலும், நண்பனுக்கு உதவ முடியவில்லை
என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. அவனது திறமையை,
செய்நேர்த்தியை வியந்து மனதிற்குள் பாராட்டினேன். கத்தியைக் கொண்டு
காட்டிய நுட்பம் அவனது தேர்ச்சியின் முழுமையை எடுத்துக் கூறியது.
தேவைக்கு அதிகமாக ஒரு வெட்டோ, திரும்ப மீ ண்டும் முயல்வதோ
இல்லாத சிறப்பான பணி அது. அவனது கைகள் அதற்கென்றே பழக்கப்
பட்டிருந்தன. இறைச்சியில் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு,
பெரும் மீ தத்தைச் சென் பாவோ, போகின் இருவரும் எடுத்துப் பிறருக்கும்
பங்கிட்டுத் தரும் வகையில் பாதுகாப்பாக வைத்தோம்.

இரவுணவு முடிந்ததும் போகினும் நானும் திரும்பி வந்து பார்த்தபோது


டெர்சுவும் சென் பாவோவும் நெருப்பின் முன் அமர்ந்து இறைச்சியை வாட்டிக்
கொண்டிருப்பது தெரிந்தது.

தூக்கத்தின் இடையில் விழித்துக் கொண்டேன். கண்ணுக்கு அரிதாகப்


புலனாகும் வெளிவட்டம் ஒன்று நிலவைச் சூழ்ந்திருந்தது. அடுத்த நாள்
கடுமையான பனிப்பொழிவு இருக்கப் போகிறது என்பதை அது
திட்டவட்டமாக உணர்த்தியது. மேலும், பொழுது விடிவதற்குள் வெப்பநிலை
இன்னும் குறையவும் வாய்ப்புள்ளது. சுற்றிலுமிருந்த சேற்று நிலத்தில் பனி
படரத் தொடங்கியது.

சென் பாவோ, டெர்சு இருவரும் முன்பாகவே எழுந்து கொண்டார்கள்.


நெருப்பில் விறகை இட்டுத் தேநீர் தயாரித்து, அதன் பிறகு என்னையும்
போகினையும் எழுப்பி விட்டனர்.

பறவைகள் வியக்க வைத்தன. குறிப்பாகக் காகங்கள். எவ்வளவு


விரைவாக இறைச்சி இருக்குமிடத்தை அறிந்து கொள்கின்றன. சூரியனின்
பொற்கதிர்கள் மலைமுகடுகளில் படியத் தொடங்கும் முன்னரே பறவைகள்
எங்களின் தங்குமிடத்தைச் சுற்றி வட்டமிடத் தொடங்கி விட்டன. உரக்க
ஒலியெழுப்பிக் கொண்டே மரத்துக்கு மரம் இடம் மாறிக் கொண்டன. அதில்
ஒன்று எங்களுக்கு அருகில் இருந்த மரத்தின் மேல் வந்து அமர்ந்து கரையும்
ஒலி கேட்டது.

`கேடுகாலம் நெருங்கி விட்டது உனக்கு’ போகின் முணுமுணுத்துக்


கொண்டே துப்பாக்கியை உயர்த்தினான்.

டெர்சு அவனைத் தடுத்து நிறுத்தினான்.


`சுட்டு விடாதே’ என்று கூவினான். `அவன் உனக்கு இடைஞ்சல்
தரவில்லையே. இறைச்சி அவனுக்கும்தானே வேண்டும். அவன் இங்கே
வந்திருப்பது நாம் இருக்கிறோமா என்பதைப் பார்ப்பதற்காக. இதோ இப்போது
போய் விடுவான். நாம் இந்த இடத்தை விட்டுச் சென்றதும் பறந்து வந்து நாம்
மீ தம் வைத்ததை எடுத்துக் கொள்வான்.’

அதை நேரில் காண விரும்புவது போலத் தென்பட்டான் போகின்.


அதன்பிறகு, காகங்கள் அவனை நெருங்கிப் பறந்தபோதும் அவன்
துப்பாக்கியை எடுக்கவில்லை.

கடுமையான தாகத்தில் தவித்தேன். அருகே நெல்லிக்காய்கள் காய்த்துக்


குலுங்கிய மரமொன்று தென்பட்டது. ஆனால் அவை பனியில் உறைந்து
போயிருந்தன. பேராவலுடன் அவற்றைப் பறித்து உண்ணத் தொடங்கி
விட்டேன். டெர்சு கண்ணை அகலத் திறந்து என்னை வியப்புடன் பார்த்தான்.

`இதன் பெயர் என்ன.?’ உள்ளங்கையில் சில நெல்லிக் காய்களை


வைத்து உருட்டிக் கொண்டே கேட்டான்.

`நெல்லிக் காய்’ என்றேன்.

`இவை உண்பதற்கானவை என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா.?’


என்று மீ ண்டும் கேட்டான்.

`நிச்சயமாக’ என்றேன். `இவற்றை உண்மையாகவே தெரியாதா உனக்கு.?

அடிக்கடி நிறையப் பார்த்திருந்த போதிலும் அவை உண்பதற்கு


உரியவை என்பது அதுவரை தெரியவே தெரியாது என்றான் அவன்.

வழியெங்கும் அவை நீலங் கலந்த சிவப்பு நிறத்தில் அந்நிலப்பரப்பு


முழுவதும் நிறைந்து கிடப்பவை.
மாலையில் எனது பணிகளை முடித்துக் கொண்டபோது டெர்சு,
மான்கறியை ஒரு சூட்டுக் கோலால் குத்தி நெருப்பில் வாட்டிக்
கொண்டிருந்தான். உணவருந்தும்போது ஓர் இறைச்சித் துண்டை நெருப்பின்
மீ து வசினேன்.
ீ டெர்சு பரபரப்புடன் பாய்ந்து அதை வெளியே எடுத்துத்
தரையில் தள்ளினான்.

`இறைச்சியை எதற்காகத் தீயில் வசின


ீ ீர்கள்.?’ என்று மனக்குறையுடன்
கேட்டான். `நாளைக்கு நாமெல்லாம் போய் விடுவோம். அதன் பிறகு
மற்றவர்கள் வருவார்கள். அவர்கள் அதை உண்டு முடிப்பார்கள்.’

`யார்..? யார் அவர்கள்..?’ குழம்பியவாறே கேட்டேன்.

`தெரியாதா உங்களுக்கு..?’ வியந்துபோய்ச் சொன்னான். `ரக்கூன்கள்,


வளைக்கரடிகள், காகங்கள் ஆகியோர்தான். இதில் காகங்கள்
இல்லையென்றால் எலிகள் வருவார்கள் ; எலிகள் இல்லாவிட்டால்
எறும்புகள். ஊசியிலைக் காட்டின் எல்லா மனிதர்களும்தான்..’

டெர்சு உணர்த்துவது மனிதப் பிறவியை மட்டுமன்று. எல்லா


விலங்கினமும் அவனுக்கு மனிதரைப் போலத்தான். நாம் பொருட்படுத்தாத
எறும்புகளையும்தான். ஊசியிலைக் காட்டில் வாழும் எல்லா உயிர்களையும்
நேசிக்கிறவன் அவன். அவற்றின் மீ து உள்ளார்ந்த அக்கறை கொண்டவனும்
கூட.

You might also like