You are on page 1of 4

ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆலயம், பங்சார்.

மலேசியாவின் பழமையான நாகம்மன் ஆலயங்களுள் கோலாலம்பூரில் அமைந்துள்ள நாகம்மன்


ஆலயமும் ஒன்றாகும். பல்லாயிர பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வரும் இந்த ஆலயம்
ஒரு குறிப்பிடத்தக்க ஆலயமாகும்.

ஆலய அமைவிடம்

கோலாலம்பூர் மாநிலத்திலுள்ள பங்சார் நகரின் தொடர்வண்டி நிலையத்திற்குப் பின்னால் இந்தப்


புராதான ஆலயம் அமைந்துள்ளது. ஜாலான் லெங்கோ அப்துல்லாவில் நுழைந்து இந்த ஆலயத்தை
அடையலாம்.

வரலாறு

1945 – ஆம் ஆண்டு, பாம்பாட்டிச் சித்தர் ஒருவரால் நகேஸ்வரி அம்மனின் இருப்பிடமென்று


கருதப்பட்ட பாம்பு புற்று ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு, நிறைய பக்தர்கள் இந்த
நாகேஸ்வரி அம்மனை வழிபட வந்துள்ளனர். இப்பாம்பு புற்றிற்கு அருகில் வசித்த
குடிசைவாசிகளால் அம்மனுக்குரிய முதல் ஆலயம் எழுப்பட்டுள்ளது. பின்னர், இந்தப் பாம்பு புற்று
இருந்த இடத்திற்கு அருகே இரயில் தண்டவாளம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதால்,
ஆலயத்தை இடம் மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆலய இடமாற்றம் நாகேஸ்வரி
அம்மனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக தண்டவாளம் அமைக்க கொண்டு
வரப்பட்ட கனவுந்துகள் தொடர்ந்தாற்போல் பழுதடைந்துள்ளன. அதுமட்டுமல்லாது, தண்டவாளம்
அமைக்கும் பணியாளர்களுக்குத் தீய கனவுகளும், திடீர் தீர்க்க முடியாத நோய்களும், மோசமான
விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் நாகேஸ்வரி அம்மனுக்குப் பூசைகள் செய்து மன்னிப்புக்


கோரியுள்ளனர். அந்த வழிபாட்டின் இறுதியில் காளியம்மா என்ற பெயர் கொண்ட பெண்ணுக்கு
அருள் வந்து அவள் வாக்குக் கூறியுள்ளாள். அதாவது, நாகேஸ்வரி அம்மன் தற்போதைய
ஆலயத்திலே இருப்பாள் என்றும், புதிதாகக் கட்டப்படும் ஆலயத்தில் மாலை பூசையின் போது
மட்டுமே வந்து செல்வாள் என்றும் அப்பெண் வாக்குக் கூறியுள்ளாள். 1977- ஆம் ஆண்டு
அம்மனுக்கென்று தனியாக ஆலயம் எழுப்ப நகர மேம்பாட்டு வாரியம் நிலத்தினை வழங்கி,
ஆலயம் கட்டவும் ஆவணச் செய்துள்ளது.

ஆலயத்திலுள்ளத் தெய்வங்கள்
நாகேஸ்வரி அம்மன்

ஆலயத்தின் பிரதான தெய்வமான இவள் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். ஐந்து தலை நாகம்
குடைப்பிடிக்க, வலது கரத்தில் கத்தியும் இடது கரத்தில் கபாலமும் தாங்கி அரை பத்மாசன
நிலையில் நாகேஸ்வரி அமர்ந்துள்ளாள். வலது பின்புறக் கையில் உடுக்கையும், இடது பின்புறக்
கையில் சூலமும் தாங்கிப் பிடித்துள்ளாள். கீரிடத்திற்கு பின்னால் அக்கினி ஜுவாலையும்
அமைக்கப்பெற்றுள்ளது. யாளி வாகனம் கொண்டு இவள் அருள் பாலிக்கிறாள்.

பாம்புப் புற்று

நாகேஸ்வரி அம்மனின் புது ஆலயத்திற்கு நடுவில் இந்தப் பாம்புப் புற்று அமைந்துள்ளது.


நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பிரதான சின்னம் இதுவாகும். இந்தப் புற்றில் இரண்டு நாகங்கள்
வசிப்பதாகக் கூறுகின்றனர். அதை எடுத்துக்காட்டும் விதமான புற்றிற்கு முன்பு இரட்டை நாகங்கள்
சேர்ந்தாற்போல் உள்ள சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நாகங்கள் இரவிலேயே
வெளிவருபவை என்றும், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இவை புற்றுக்குள்
மறைந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரேணுகா பரமேஸ்வரி

பாம்பு புற்றிற்கு முன்பு இவளின் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெறும் முகச்சிலையாக


அமைக்கப்பட்டுள்ளாள். இவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைப்பிடித்துள்ளது.
கிரீடத்திற்கு பின்னால் அக்கினி ஜுவாலைத் தாங்கியுள்ளாள்.

ஏனையத் தெய்வங்கள்

நாற்கரங்களோடு துர்க்கை இந்த ஆலயத்தில் அமைக்கப்பெற்றுள்ளாள். மகிடன் தலைமேல்


நின்றுள்ளது போன்று இவள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரிக்கு வலது மற்றும் இடது
புறங்களில் முருகனும் பிள்ளையாரும் அமைக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு
சிலை உள்ளது. நவக்கிரகச் சன்னதி தனியே வைக்கப்பட்டுள்ளது. மதுரைவீரனுக்கும் காளிக்கும்
சிலை வைத்துள்ளனர். நாகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

செவிவழிக் கதை

ஆலயத்தை ஒரு வெள்ளை நாகம் பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு முறை இந்த


ஆலயத்தைக் கொள்ளையடிக்க சிலர் முயன்றுள்ளனர். அவர்கள் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன்
கருவறைக்கு முன்பு வெள்ளை நாகம் ஒன்று தோன்றி அவர்களைப் பார்த்துக் கோபமாகச்
சீறியுள்ளது. அப்பொழுது திருட வந்தவர்கள் ஓட முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் உடல்கள்
செயலற்றுப் போயுள்ளன. பின்னர், அத்திருடர்களின் மனைவிமார்கள் அம்மனுக்குப் பூசை வைத்து
மன்னிப்புக் கோரியுள்ளனர். அதற்கு பிறகு, அவர்களின் உடல் நலமடைந்ததாக அச்செய்தி
வழங்கப்படுகிறது.

ஆலயப் பூசைகள்

ஆலயத்தில் நாள்தோறும் நித்தியப் பூசைகள் நடக்கின்றன. அதுமட்டுமல்லாது, நாக தோஷம்


நீங்க இந்த ஆலயத்தில் சிறப்புப் பூசை செய்யப்படுகிறது. தங்களுடைய ஜாதகத்தில் “ராகு” மற்றும்
“கேது” ஆகிய கிரகங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் சிறப்புப் பூசையில் கலந்து
கொள்கின்றனர். அதோடு, 27 வாரங்களுக்குச் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில்
தொடர்ந்தாற்போல் ஆலயத்திற்கு வந்து பக்தர்கள் அம்மனிடத்தில் வேண்டுதல் வைக்கின்றனர்.

ஆலயத் திருவிழா

ஆலயத்தின் திருவிழா வருடா வருடம் ஆடி மாதம் நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று


அம்மனுக்குத் திருவிழா செய்கிறார்கள். அன்றைய தினத்தில் தீமிதி உற்சவமும் ஆலயத்தில்
நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள் 48 நாட்களுக்கு
விரதமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்

Batumalai, K.(2009 January 26). Sri Nageswary Amman Temple, Bangsar (Kuala Lumpur).
Mystic Temples Of Malaysia.
http://mysticaltemplesofmalaysia.blogspot.com/2009/01/sri-sakti-nageswari-amman
temple.html?view=magazine

Monogaran, P.(2013 March 24). Sri Nageswari Amman Temple, Bangsar. Malaysian Temples
Let history remember the temples of Malaysia. Awareness begins here!.
http://www.malaysiantemples.com/2013/03/sri-nageswari-amman-temple-bangsar.html

You might also like