You are on page 1of 1

அசிரியர்களே......!

ஆசிரியர்களே!
உங்களுக்குத்தான் எத்துனைத் தோற்றங்கள்……
அன்பைப் பகிரும் போது அன்னையாகிறாய்
தட்டிக் கொடுக்கும் போது தந்தையாகிறாய்
தோள் கொடுக்கும் போது தோழனாகிறாய்

ஆசிரியர்களே!
உங்களுக்குத்தான் எத்துனைத் தோற்றங்கள்…….
துணை நிற்கும் போது தூண்டுகோலாகிறாய்
கல்விச் செல்வத்தை வழங்கும் போது அரசனாகிறாய்
அறிவுரை கூறும் போது ஆசானாகிறாய்

ஆசிரியர்களே!
உங்களுக்குத்தான் எத்துனைத் தோற்றங்கள்…….
தனித் திறமையைச் செதுக்கும் போது சிற்பியாகிறாய்
அன்பைக் கற்பிக்கும் காந்தியாகிறாய்
நெறிகளைக் கூறும் போது வள்ளுவனாகிறாய்

ஆசிரியர்களே!
உங்களுக்குத்தான் எத்துனைத் தோற்றங்கள்…….
மாணவர்களை உத்தமர்களாக்கும் போது மகானாகிறாய்
ஆசிர்வதிக்கும் போது தெய்வமாகிறாய்
எதைச் சொல்லி உங்களை வாழ்த்த……
ஆசிரியர் பணியே அறப் பணி!

ஈஸ்வரி சங்கரலிங்கம்

You might also like