You are on page 1of 7

ஏழைக் கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி சருசருக்கி, வழுவழுக்கிக் கீழே விழுந்தான்.

ஙஞணநமன நமனஙஞண

சில பல பல சில கல்.

வாழ வழியத்து பீதி அடைந்த வைத்தி சம்பாதிக்க நேர்தத


் ியான வழி பார்த்து, பார்தத
் ியிடம் தன் கதிக்கு
வழி கேட்க, பார்த்தி செய்த சதியால் வைத்தி கைதியானான்.

வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான்


வீரபத்திரன்.

ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.

குலை குலையாய்

வாழைப்பழம் மழையில்

அழுகி மலையின் கீழே விழுந்தது.

தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.

ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை.

கரி படுக்க பரி மட்டம்

கனி பழுக்க கிளி கொத்தும்.

கூவுற கோழி கொக்கர கோழி

கொக்கர கோழி கொழுகொழு கோழி

கொழுகொழு கோழி குத்தற கோழி

குத்தற கோழி கொக்கர கோழி


சிக்கற கோழி திங்கற கோழி

கும்பகோணக் குளக்கரையில்

குந்தியிருந்த குரங்கை

குப்பன் குச்சியால் குத்தியதால்

குரங்கு குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.

பரதநாட்டியம் பரந்த நாடு

பழைய நாட்டியம் பரதநாட்டியம்.

ஊசி நூலில் பாசிக் கோர்த்து

ராசியான மாசி மாசம் காசிக்கு போனான்.

இங்கு அங்கு எங்கு போனால் நுங்கு தின்னலாம்?

கோழி கிழடு, கோழி குடலும் கிழடு.

சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு.

லகரமும் ளகரமும் ழகர லகரமும் றகர

ழகரமும் பழக்கத்தில் புழக்கத்தில் இருந்தாலும்

குழந்தைகள் பேசும் போது

வழகொழ பேச்சாத்தான் இருக்கும்.

வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.


ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை

மீனேறுங் கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை வெள்ளப் பிள்ளை ஆனேறு.

சித்திரம் வரைகிற

சித்திர வேலன சத்திர சுவர்ல

சித்திரம் வரைய சொன்னா பையன்

சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.

குன்றூரில் குடியிருக்கும் குப்புசாமி யின்

குமரன் குப்பன்,

குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்

குதிரையின் குட்டியை குச்சியால்

குத்தினான்.

குதிரை குதியோ குதியேன்று குதித்தது.

லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு

வீடடு
் மேல கூரை கூரை மேல நாரை

ஓடுற நரியில

ஒரு நரி கிழநரி;

கிழநரி முதுகுல

ஒரு முடி நரைமுடி.

கும்பகோணம் குள்ளக் குமரேசன், குதிரையை குச்சியால் குத்தினான், குதிரை குளத்தில் குதித்தது.

யரலவழள
வழளயரல

பனைமரம் ஏறி பனங்காய் பறித்து

தள்ளுவண்டி செஞ்சு தள்ளிக்கிட்டு

போனான்.

காலம் நல்ல காலம்,நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி
நாளும் போடு நல்ல தாளம்.

கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்!

ஆனை அலறலோடு அலற அலறியோட

கரடி கருங்கரடி

கரடி பொடனி

கரும் பொடனி

கல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல ஏதும் செல்ல பிள்ளையே, நில்லு சொல்லு செல்லு.

வண்டி சிறியது,வண்டிக்காரன் புதியது.

வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்நத


் து.

கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்.

கருக் கருக்கென கடித்து முறுக்கை

மொறு மொறு என்ற சத்தத்தோடு சாப்பிட்டான்.

கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும்


குமரேசனின் குமரன் குமரப்பன்,

குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த

குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான்.

குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.

மருமகள் மாமியார் கிட்ட நான் தான்டி உனக்கு மாமியார்னனு


் சொன்னாளாம் மருமகள் மாமியார் ஆகியும்
மாமியார் மருமகள் ஆகியும் மாமியார் மருமகள் சண்டை ஓயலையாம்.

காக்கா காக்காகானு கத்திறதினால

காக்கானு பேரு வந்ததா?

காக்கானு பேரு வந்ததினால

காக்கா காக்காகானு கத்துதா?

பச்சை நொச்சை கொச்சை

பழி கிளி மொழி

நெட்டை குட்டை முட்டை

ஆடு மாடு ஓடு.

காக்கைக்காகா கூகை

கூகைக்காகா காக்கை

கோக்குகூ காக்கைக்குக்

கொக்கொக்க கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா

முதுதமிழ் உத்தியில் வருமொரு திருமகள்.

சட்டையை சுழற்றி சுழற்றி சுழற்றி வீசி வந்த மொட்டையன் கால்தடுக்கி விழுந்து கைலாசம் போனதைப்
பார்த்த சொட்டையன் பதறியடித்து வந்து கதறி கதறி அழுதான்.
சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில்

நிறுத்த நினைத்த முறுக்கு மைனர்

சறுக்கி விழுந்தும்

முறுக்கு மீசை இறங்கவில்லை.

பச்சை குழந்தை வாழைப்பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது

கோரைப் புல்லில் சாரை கீரி பார்த்து சீறும்

அப்ப அப்ப வந்து வந்து சந்துல சிந்து பாடிய சிந்துவ நந்து வந்து பொந்துல இருக்குற பாம்பு எழுந்து
வந்துரும் நீ வந்து கம்முனு குந்துன்னானாம்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

மெய் பொய் பொய் மெய்

கோடு போட்ட வீடு

கோலம் போட்ட வீடு

வேப்ப மர சந்து

வேணுகோபால் வீடு

வளவன் மிக நல்லவன் மற்றும் வல்லவன் எனச் சொன்னவன் வளவனே மிகமிகச் சின்னவன் எனச்
சொல்வதில் வல்லவன்.

புட்டும் புதுப் புட்டு

தட்டும் புதுத் தட்டு

புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா.


இரட்டை மாட்டு வண்டி வண்டி நிறைய மண்டி மண்டி கிடக்கு விரலு தண்டி வெண்டி

You might also like