You are on page 1of 24

சிலிர்ப்பு

திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது.


மாயவரத்தோடு நின்றுவிடும். பத்ேரர மணிக்குத் தோடங்கி மூன்று
மணிதயாடு அேன் வாழ்வு முடிந்துவிடும். மதுரர, மானாமதுரர,
ஈதராடு என்று எல்லா வண்டிகரையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி
ஜங்ஷன் புயல் புகுந்து விரையாடின தோப்ரபப் தபால, ஒதர
தவளிச்சமாக த ாதவன்று தவறிச்சிட்டுக் கிடந்ேது. வாரைத்தோலி,
ஆரஞ்சுத்தோலி, எச்சில் தபாட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்ரறத்
ேவிர ஒன்ரறயும்காணவில்ரல. வண்டி புறப்பட இன்னும் அரரமணிோன்
இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்ரல. வண்டிக்கு வண்டி
ஒரு பரட்ரட, அழுக்கு இப்படி ஏோவது தூங்கிக் தகாண்டிருந்ேது.
பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்ே குடும்பம் ஒன்று இரண்டாம்
வகுப்பில் சாமான்கரைப் தபாட்டுக் காவல் ரவத்து எங்தகதயா
தபாய்விட்டது. எக்ஸ்பிரஸ் வண்டி தசன்றால் என்ன கூட்டம்.
வரும்தபாது என்ன வரதவற்பு, என்ன உபசாரம்! தபாகும்தபாது எவ்வைவு
தகாலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்ேது. ஷட்டிலும்
தகடுதகட்ட ஷட்டில், ரயில் ஜாதியில் கூட ஏரை, பணக்காரன்
உண்டு தபால் இருக்கிறது. நான் ேனியாக கரடசிப் தபட்டிக்கு முன்
தபட்டியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் என் ரபயன் அயர்ந்து தூங்கிக் தகாண்டிருந்ோன்.
ேரலமாட்டில் ரகயிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்ேது.
அரேப் பார்க்கும்தபாது சிரிப்பு வந்ேது எனக்கு. ரபயரன
பங்களூரிலிருந்து அரைத்து வருகிதறன். மாமா சம்சாரம் ஊருக்கு
வந்திருந்ேதபாது அவரன அரைத்துப் தபாயிருந்ோள். நான் காரியமாக
தபங்களூர் தபானவன் அவரன அரைத்துக் தகாண்டு வந்தேன்.
தபங்களூர் ஸிட்டி ஸ்தடஷனில் மாமா தரயிதலற்றி விட
வந்திருந்ோன். தரயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்தபாது
ஆரஞ்சுப் பைக்காரரனப் பார்த்து, “ஆரஞ்சுப்பா, ஆரஞ்சுப்பா” என்று
ரபயன் முனகினான். மாமா காதில் விைாேதுதபால அந்ேண்ரட
முகத்ரேத் திருப்பிக்தகாண்டு விட்டான். ரபயரனச் சுடுகிறாப்தபால
ஒரு பார்ரவ பார்த்தேன். அவன் வாய் மூடிக் தகாண்டது. ஆனால்,
வண்டி புறப்பட்டதுோன் ோமேம்; ஆரம்பித்து விட்டான். ஆறு வயசுக்
குைந்ரே; எத்ேரன தநரந்ோன் அடக்கிக் தகாண்டிருப்பான்.
“யப்பா, யப்பா!”
“ஏண்டா கண்ணு!”
“பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தோைாயிர ரூபா சம்பைம்.
பணக்காரர். இவ்வைவு பணக்காரர்ப்பா!” என்று ரகரய ஒரு கட
வாத்திய அைவுக்கு அகற்றி, தமாவாரய நீட்டினான் – குரற
தசால்லுகிறாற்தபால.”
“அதுக்கு என்ன இப்ப?”
“வந்து, தசத்தே முன்னாடி ஆரஞ்சு தகட்தடதனால்லிதயா,
வாங்கிக் குடுக்காம எங்தகதயா பாத்துண்டு நின்னார்ப்பா.”
“அவர் காதிதல விழுந்திருக்காது. விழுந்திருந்ோ
வாங்கியிருப்பார்.”
“நான் இரரஞ்சுோன்பா தசான்தனன்”
“பின்தன ஏன் வாங்கிக் தகாடுக்கரல?”
தகள்விரய நாதன திருப்பிக் தகட்டுவிட்தடன். ரபயன்
திணறினான்.
“வந்துப்பா, வந்து, பிச்சி மாமாரவ வந்து ஒரு மூணு கால்
ரசக்கிள் வாங்கித் ோன்தனன். வந்து, ேதரன் ேதரன்னு ஏமாத்திப்
பிட்டார்ப்பா…”
“அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் ேதரன்.”
“நீ எப்படி வாங்கித் ேருவியாம்?”
“ஏன்?”
“உனக்கு நூறு ரூபாோதன சம்பைம்?”
“உனக்கு யார் தசான்னா?”
“வந்து, பிச்சி மாமாோன் தசான்னா.”
“உங்கிட்ட வந்து தசான்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாோன்
சம்பைம்னு?”
“வந்து எங்கிட்ட இல்தலப்பா. மாமிகிட்டச் தசான்னா. நீ வந்து
தமட்ராஸ்தலந்து தலட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ரையார்
பூரஜயன்னிக்கி; அப்பச் தசான்னா மாமிகிட்ட. தவறுதம தவறுதம நீ
தமட்ராஸ் தபாறியாம். உனக்கு அரணாக்தகாடி வாங்க முடியாோம்.”
இது ஏதுடா ஆபத்து!
“சரி நாழியாச்சு. நீ படுத்துக்தகா.”
“எனக்கு தமாட்டார் வாங்கித் ேரயா?”
“ேதரன்.”
“தநஜ தமாட்டார் இல்தல. கீ தகாடுக்கிற தமாட்டார்,
இவ்வுளூண்டு இருக்குதம, அது.”
“அோன் அோன். வாங்கித் ேதரன்.”
“யப்பா, ஆரஞ்சுப்பா.”
“நீ தூங்கு. திருச்சினாப்பள்ளி வந்ேவுடதன வாங்கித்
ேந்துடதறன்.”
“தபாப்பா!”
“இப்ப எங்கடா வாங்கறது, தரயில் தபாயிண்டிருக்கிற தபாது?”
“அப்பன்னா ஒரு கரே தசால்லு.”
“அப்படிக் தகளு. நல்ல கரேயாச் தசால்தறன். ஒதர
ஒருஊரிதல…”
பாதிக் கரேயில் ரபயன் தூங்கிவிட்டான்.”
குைந்ரே நல்ல சமத்து ஸார். ஷ்ரூடா இருக்கான். ஆரை எப்படி
“ஸ்டடி பண்றான்!” என்று திடீதரன்று எதிதர இருந்ேவர் மதிப்புரர
வைங்கினார்.”
“அதுோன் ேரல தபரிசா இருக்கு!” என்று ரபயரனப்
பார்த்தேன். ேரல சற்றுப் தபரிதுோன் அவனுக்கு. எடுப்பான முகம்.
மூக்கும் முழியுமான முகம். தமாழு தமாழு தவன்று சரீரம்.
ேைேைதவன்று ேளிரரப் தபான்ற தோல். கன்னத்தில் தேரிந்தும்
தேரியாமலுமிருந்ே பூரன மயிர் தரயில் தவளிச்சத்தில் மின்னிற்று.
ேரலமயிர் வரையம் வரையமாக மண்டி, அடர்ந்து பாதி தநற்றி வரர
விழுந்திருந்ேது. அைகில் தசர்க்க தவண்டிய குைந்ரேோன். நாரை
மத்தியானம் அம்மாரவப் பார்க்கத்ோன் தபாகிறான். அதுவரரயில்?
யாதரா அநாரேரயப் பார்ப்பது தபால் இருந்ேது எனக்கு. ோய்
பக்கத்தில் இல்லாவிட்டால் குைந்ரேக்குச் தசாரப ஏது? குைந்ரேரய
இரண்டு மூன்று முரற ேடவிக் தகாடுத்தேன். கபடமில்லாே இந்ேக்
குைந்ரேரய எப்படி ஏமாற்றத் துணிந்ேது பிச்சி மாமாவுக்கு. கிருபணன்,
கிருபணன் என்று தவரலக்குப் தபான நாள் முேல் வாங்கின பிரக்யாதி
தபாோோ? குைந்ரேயிடங் கூடவா வாங்க தவண்டும்? சரிோன்,
தபானால் தபாகிறது என்று விட்டுவிடக்கூடிய வலுவும் எனக்கு
இல்ரல. குைந்ரேயின் முகத்ரேப் பார்க்கும் தபாதேல்லாம் துன்பம்
கிைர்ந்ேது.
சிறிய அற்பமான நிகழ்ச்சி. ஆனால் எனக்குத் ோங்கவில்ரல.
பிச்சி மாமா எத்தி எத்திப் பிரைக்கிற வித்ரேகள், பிறந்ேது முேல்
உள்ளும் புறமும் ஒன்றாமல் அவன் நடத்தி வருகிற வாழ்க்ரக,
தபண்டாட்டியிடங்கூட உண்ரமயில்லாமல் அவன் குடும்பம் நடத்துகிற
‘தவற்றி’- எல்லாம் நிரனவில் வந்து, திரண்டு சுைல் வண்டுகரைப்
தபாலச் சுற்றிச் சுற்றி வந்ேன. ராத்திரி முழுவதும் அதே தியானம்.
தூக்கதம இல்ரல. திருச்சி வந்ேதும் ஆரஞ்சு வாங்கிதனன்.
“யப்பா, இரே ஊருக்குப் தபாய்த் திங்கதறம்ப்பா. அம்மா
உரிச்சுக் தகாடுப்பா ரகயிதல, வாங்கித் திங்கதறம்பா” என்று
தகஞ்சினான்.”
“ஆல் ரரட், அப்படிதய தசய்.”
வண்டி புறப்பட இன்னும் அரர மணி இருந்ேது. ோகம்
வறட்டிற்று. இறங்கிப் தபாய்த் ேண்ணீர் குடித்துவிட்டு, தவற்றிரல
தபாட்டுக்தகாண்டு வந்தேன்.திரும்பி வரும்தபாது யாதரா ஓர் அம்மாள்
என் தபட்டியில் ஏறிக்தகாண்டிருந்ோள். கூட ஒரு தபண். எதிர்த்ே
பலரகயிதலதய உட்கார்ந்து தகாண்டார்கள்.
“இதுோதன மாயவரம் தபாகிற வண்டி?”
“இதேோன்.”
“எப்பப் புறப்படும்?”
“இன்னும் இருபத்ரேந்து நிமிஷம் இருக்கு.”
“நீங்கள் எதுவரரயில் தபாதறள்.”
“நான் கும்பதகாணம் தபாதறன்.”
“உங்க குைந்ரேயா?”
“ஆமாம்”
“அசந்து தூங்கறாதன.”
“பங்களூரிலிருந்து வதராம். அலுப்பு; தூங்கறான்.”
“நீயும் படுத்துக்கறயா?”
“இல்தல மாமி, தூக்கம் வரதல” என்றது அந்ேப் தபண்.
“தகாஞ்சம் தூங்குடி குைந்ரே. ராத்திரி முழுக்கப் தபாயாகணும்.
நாரைக்கு தவதற, நாைன்னிக்கி தவதற தபாகணுதம.”
“இல்தல மாமி, அப்பறம் தூங்கதறன்.”
அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்ரட நாடி. ருமானி
மாம்பைம் மாதிரி பைபைதவன்று இருந்ோள். காதில் பரைய கட்டிங்கில்
ஒரு தபரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் ரவர தபஸரி. கழுத்து
நிரறய ஏதைட்டு வடம் சங்கிலி. ரகயிலும் அப்படிதய. மாம்பை நிறப்
பட்டுப்புடரவ. தநற்றியில் பளீதரன்று ஒரு மஞ்சள் குங்கும வட்டம்.
பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு நிரறவான தோற்றம், பக்கத்தில் ஒரு
தோல் தபட்டி. ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.அந்ேப் தபண்ணுக்கு எட்டு
வயது இருக்கும்; மாநிறம்; ஒட்டி உலர்ந்ே தேகம்; குச்சி குச்சியாகக்
ரகயும் காலும்; கண்ரண தவளிச்சம் தபாட்டுப் பார்க்க
தவண்டியிருந்ேது; எண்தணய் வழிகிற முகம்; தூங்குகிறார்தபால ஒரு
பார்ரவ. ரகயில் ஒரு கறுப்பு ரப்பர் வரை; புதிோக
தமாடதமாடதவன்று ஒரு சீட்டிப் பாவாரட; சிவப்புப் பூப்தபாட்ட
வாயில் சட்ரட; அதுவும் புதிதுோன்; கழுத்தில் ஒரு பட்ரடயடித்ே
கறுப்புக் கண்ணாடி மணிமாரல. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாரட,
தகாசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்ேது. அதிதலதய ஒரு சட்ரடயும்
திணித்திருந்ேது.அந்ே அம்மாளுக்கும் தபண்ணுக்கும் என்ன சம்பந்ேம்?
எப்படிக் தகட்பது?வண்டி புறப்படுகிற சமயத்திற்கு ஒரு
மரலப்பைக்காரன் வந்ோன்.
ஒரு சீப்பு வாங்கி ஒரு பைத்ரே அந்ேப் தபண்ணிடம்
தகாடுத்தேன். பதில் தபசாமல் வாங்கிக் தகாண்டது.
“சாப்பிடு.”
“சாப்பிடு” என்று அந்ே அம்மாள் தசான்னதும் உரித்து வாயில்
தபாட்டுக் தகாண்டது.
“இந்ேப் தபாண்ணு கல்கத்ோவுக்குப் தபாறது.”
“கல்கத்ோவுக்கா!”
“ஆமாம், நம்ம பக்கத்து மனுஷா ஒத்ேர் அங்தக தபரிய
தவரலயிதல இருக்காராம். அங்தக தபாறது. ராத்திரி மாயவரத்திதல
இருந்து அவாளுக்குத் தேரிஞ்சவா யாதரா தபாறா. அவாதைாட
தசர்த்துவிடணும். நல்ல தபாண்ணு, சாதுவா, சமர்த்ோயிருக்கு.”
பிறகு நாதன தகட்க ஆரம்பித்துவிட்தடன்.
“உம் தபரு என்னம்மா?”
“காமாக்ஷின்னு தபரு. குஞ்சுன்னு கூப்பிடுவா.”
“தபஷ், தபஷ்!”
“என்ன தபரிய தபஷாப் தபாடதறள்?” என்று அந்ே அம்மாள்
சிரித்ோள்; “இவ எப்படி இரண்டு தபரரச் சுமக்கிறாள்னா!” எனக்கும்
சிரிப்பு வந்ேது.
அதுவும் சரிோன். ஆனால் நான் தநரனச்சது தவதற. எனக்குக்
காமாக்ஷின்னு ஒரு ேங்ரக இருக்கா. இந்ேச் சாயலாத்ோன் இருப்பா.
நல்ல தேம்பான இடத்துதலோன் குடுத்துது. ஆனா மாப்பிள்ரை தராம்ப
உபகாரி. யாருக்தகா தமதலாப்பம் தபாட்டார் இருபதினாயிரத்துக்கு.
அவன் திடீர்னு வாரயப் தபாைந்துட்டான். அவர் குடும்பம் தநாடிச்சுப்
தபாயிடுத்து. தராம்பக் கஷ்டப்பட்டார். இன்னதுோன்னு தசால்லி
மாைாே கஷ்டம். இப்பத்ோன் நாலஞ்சு வருஷமா அவர் ஒரு
தவரலன்னு கிரடச்சுப் பிடுங்கலில்லாதம இருக்கார். அவ கஷ்டம்
விடிஞ்சுடுத்து. அவளுக்கு அடுத்ேவ இன்தனாரு ேங்ரக. குஞ்சுன்னு
தபரு. அவளுக்குக் கல்யாணம் பண்ண அரலயா அரலஞ்தசாம்.
கரடசியிதல எனக்கு அத்ரே தபாண் ஒருத்தி; அவளுக்குக் குைந்ரே
இல்தல.
சீக்குக்காரி. ேன் புருஷனுக்தக அவரைக் தகாடுத்துடணும்னு
ேரலகீைா நின்னா. அப்படிதய பண்ணிட்டார், எங்கப்பா. ஆனா,
கல்யாணம் ஆன நாளிலிருந்து அவ பட்ட பாடு நாய் படாது. பத்து
வருஷம் கழிச்சு ஒரு புள்ரைக் குைந்ரே பிறந்திருக்கு. மூணாம்
வருஷம். அதுக்குப் பிற்பாடுோன் அந்ே வீட்டிதல அவளும் ஒரு
மனுஷின்னு ேரல தூக்கி நடமாடிண்டிருக்கா.
“ஆயிரம் இருக்கட்டும் தபண்ணிருக்கப் தபண்
தகாடுக்கலாதமா?”
“என்ன பண்றது? பிராப்ேம். இவ தபரரக் தகட்டவுடதன ஞாபகம்
வந்ேது. தரண்டு தபரும் ஒதர இடத்திதல அரமஞ்சிருக்தகன்னுோன்
தபஷ் தபாட்தடன்.”
அந்ேப் தபண் எப்படி இந்ேப் தபச்ரச வாங்கிக்தகாண்டது என்று
புரிந்துதகாள்ை முடியவில்ரல. அதே தூங்கும் பார்ரவயுடன் முகத்தில்
ஓர் அரசவு, மாறுேல் இல்லாமல் எல்லாவற்ரறயும் தகட்டுப்
பார்த்துக்தகாண்டிருந்ேது.
“குைந்ரே, உனக்கு அப்பா அம்மா இருக்காைா?”
“இருக்கா.”
“அப்பா என்ன பண்றார்?”
“ஒண்ணாவது வாத்தியார்.”
“அக்கா, ேங்ரக, அண்ணா, ேம்பிதயல்லாம் இருக்காைா?”
“இருக்கா… நாலு அக்கா… தரண்டு அண்ணா, ஒரு ேம்பி
இருக்கான். அதுக்கப்புறம் ஒரு ேங்ரக.”
“அக்காவுக்தகல்லாம் கல்யாணம் ஆயிடுத்ோ?”
“மூணு தபருக்கு ஆயிடுத்து. தரண்டாவது அக்கா, நாலு வருஷம்
முன்னாடி குரறப்பட்டுப் தபாயிட்டா. எங்கதைாதட ோன் இருக்கா.”
“அண்ணா என்ன பண்றான்!”
“தபரிய அண்ணா கிைப்பிதல தவரல தசய்யறான். சின்ன அண்ணா
சகிண்ட் பாரம் வாசிக்கிறான்.”
“நீ வாசிக்கிரலயா?”
“இல்ரல, அண்ணா ஒருத்ேன்ோன் வாசிக்கிறான்.
எங்களுக்தகல்லாம் சம்பைம் தகாடுக்க முடியரல, அப்பாவுக்கு.”
“அதுக்காக நீ தவரலக்குப் தபாறயாக்கும்?”
“ஆமாம். மத்தியானச் சாப்பாட்டுக்தக எல்லாருக்கும்
காணமாட்தடங்கறது.”
“உனக்கு என்ன தவரல தசய்யத் தேரியும்?”
“பத்துப் பாத்திரம் தேய்ப்தபன். காபி, டீ தபாடுதவன். இட்லி
தோரசக்கு அரரப்தபன். குைம்பு, ரசம் ரவக்கத் தேரியும்.
குைந்ரேகரைப் பாத்துப்தபன். தகாலம் தபாடுதவன். அடுப்பு
தமழுகுதவன். தவஷ்டி புடரவ தோய்ப்தபன்.”
“புடரவ தோப்பியா! உனக்குப் புடரவரயத் தூக்க முடியுதமா?”
“நன்னாத் தோய்க்கத் தேரியும்.”
“இதேல்லாம் எங்தக கத்துண்தட?”
“ராமநாரேயர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துதலோன்
கத்துண்தடன்.”
“ம்ஹ்ம், ஸர்வீஸ் ஆனவைா? அவாத்துதல எத்ேரன வருஷம்
இருந்தே?”
“மூணு வருஷமா இருக்தகன்.”
“மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாறது?”
“இந்ே ஆவணிக்கு ஒன்பது முடிஞ்சு பத்ோவது நடக்கிறது.”
“ஏழு வயசிதலதய உனக்கு தவரல கிரடச்சுட்டுது; தேவரல.
என்ன சம்பைம் தகாடுப்பா?”
“சம்பைம்னு கிரடயாது. தரண்டு தவரை சாப்பாடு தபாடுவா.
தீபாவளிக்குப் பாவாரட சட்ரட ஒரு தஜாடி எடுத்துக் தகாடுப்பா.”
“இந்ேச் சட்ரட யார் வாங்கிக் தகாடுத்ோ?”
“அவாோன்.”
“தகாலம் தபாட்டு, அடுப்பு தமழுகி, புடரவ தோய்ச்சு,
குைந்ரேரயப் பாத்துண்டு, தோரசக்கு அரரச்சு எல்லாம்
பண்ணினத்துக்கு இந்ே ஆறணாச் சீட்டிோன் கிரடச்சுோ அவாளுக்கு?
கிழிசலாப் பார்த்துப் தபாறுக்கி எடுத்துக் தகாடுத்திருக்காதை.”
“…………………..”
“நீ நல்லோ வாங்கிக் தகாடுக்கச் தசால்லிக் தகட்கப்
படாதோ?”
“…………………..”
“ஜட்ஜ் வீட்டிதல சாப்பிட்டிண்டு இருந்தேங்கதற. உன்
உடம்ரபப் பார்த்ோ அப்படித் தேரியலிதய! பஞ்சத்திதல அடி
பட்டாப்பதல, கண்ணுகிண்தணல்லாம் உள்தை தபாயி, ஒட்டி உலர்ந்து,
நாய் பிடுங்கினாப் தபால இருக்கிதய.”
“தபரிய மனுஷாள்ைாம் ேனி ரகம்னு உங்களுக்குத் தேரியாது
தபால் இருக்கு. அவா வத்ேல் குைம்பு, சுட்ட அப்பைாம், மிைகு ரசம்
இரேத்ோன் பாதிநாள் சாப்பிடுவா.
ராத்திரி பருப்புத் துரகயலும் ரசமுந்ோன் இருக்கும். ஆனா அவா
உடம்பு என்னதவா நிகுநிகுன்னுோன் இருக்கும். அது ேனி உடம்பு.
நம்ரமப் தபால அன்னாடங் காய்ச்சிகளுக்குத்ோன் இதேல்லாம்
ஒத்துக்காது. தரண்டு நாரைக்கு இப்படிச் சாப்பிட்டா, வாய் தவந்து,
கண் குழிஞ்சு, தசார்ந்து தசார்ந்து வரும்” என்று அம்மாள் ேன்ரனயும்
என்தனாடு தசர்த்துப் தபசினாள். மரியாரேக்குத்ோன் அப்படிச்
தசால்லியிருக்க தவண்டும். உடதன ஏதோ ேவறாகப் தபசிவிட்டவன்
தபால, “நான் என்தனன்னதவா தபசிண்டிருக்தகன்; நீங்க என்ன
பண்ணிண்டிருக்தகள்?” என்று தகட்டாள்.
“பயப்படாதீங்தகா. நானும் அன்னாடங் காய்ச்சிோன். ோலுகாவிதல
குமாஸ்ோ.”
ேஞ்சாவூர் ஸ்தடஷன் வந்துதகாண்டிருந்ேது.
“துண்ரடப் தபாட்டுட்டுப் தபாதறன். தகாஞ்சம் இடத்ரேப்
பார்த்துக்தகாங்தகா; சாப்பிட்டு, குைந்ரேகளுக்கும் சாப்பாடு பண்ணி
அரைச்சிண்டு வந்துடதறன்.”
“இன்னும் சாப்பிடலியா நீங்க? ஏம்மா, நீ என்ன சாப்பிட்தட
காலதம?”
“பரையது.”
“எங்தக?”
“ஜட்ஜியாத்திதல!”
“பார்த்தேைா, தபரிய மனுஷாள்னா இப்படின்னா இருக்கணும்!
ஊருக்குப் தபாற குைந்ரேக்கு, மூணு வருஷம் வீட்தடாட கிடந்து
உரைச்சிண்டிருந்ே தபாண்ணுக்கு, தகாஞ்சம் நல்ல சாப்பாடாப் தபாட்டு
அனுப்பிச்சாோன் என்ன? ஒன்பதே கால் மணிக்கு, நான் புறப்படறதபாது
தகாண்டுவிட்டா. அதுக்குள்தைசரமயல் பண்ண முடியாோ என்ன?
நல்ல குளிர்ந்ே மனசு! பரையது சாப்பிடற ஆசாரம் அத்துப் தபாயிடப்
தபாறதேன்னு கவரலப்பட்டுண்டு தபாட்டா தபால் இருக்கு.
ஏன் குைந்ரே, அவாத்துதல யாராவது பரையது சாப்பிடுவாதைா?”
“நான்ோன் சாப்பிடுதவன்.”
“ம்…ஹ்ம்; சரி. இப்பப் பசிக்கிறதோ உனக்கு?”
“இல்ரல.”
“ஏோவது சாப்பிடும்மா.”
“சரி மாமி.”
“நீங்க ஒரு தபாட்டலம் சாம்பார் சாேமும் ஒரு ேயிர் சாேமும்
வாங்கிண்டு வாங்தகாதைன்.”
“நாதன அரைச்சிண்டு தபாயிட்டு வதரதன.”
“தராம்ப நல்லோப் தபாச்சு. இந்ோருங்தகா.”
“என்னத்துக்குக் காசு? நான் தகாடுக்கிதறன்.”
“வாண்டாம்னு நீங்க எப்படிச் தசால்ல முடியும்? நான்னா அவரை
அரைச்சிண்டு வதரன்!”
ேர்மசங்கடமாக இருந்ேது. வாங்கிக்தகாண்தடன். ரபயரன
எழுப்பிதனன். அவசரமாகக் கூட்டத்தில் புகுந்து இரண்ரடயும்
இழுத்துச் தசன்தறன்.
“இது யாருப்பா?”
“இந்ேப் தபாண்ணு மாயவரம் தபாயிட்டுக் கல்கத்ோவுக்குப்
தபாறா. உன்தனாட இவளும் சாப்பிடறதுக்கு வரா.”
இரண்டு அநாரேகளும் சாப்பிடும்தபாது எனக்கு இனம் தேரியாே
இரக்கம் பிறந்ேது. ோரய விட்டுப் பிரிந்ே அநாரேகள்! ஆனால்
எவ்வைவு வித்தியாசம்! ஓர் அநாரே இன்னும் இரண்டுமணி தநரத்தில்
ோயின் மடியில் துள்ைப் தபாகிறது. இன்தனான்று ோயிடமிருந்து தூர
தூரப் தபாய்க் தகாண்தட இருக்கப் தபாகிறது.
“ஸ்ஸ்.. அப்பா, அப்பா!” என்று ரபயன் வீரிட்டான். மிைகாய்!
“ேண்ணிரயக் குடி… ம்… ம்.”
அந்ேப் தபண் உடதன எழுந்து தபாய்க் கவுண்டரிலிருந்து ரக
நிரறயச் சர்க்கரரரய அள்ளி அவளிடம் தகாடுத்ேது.
சற்றுக் கழித்து, “அம்பி, ேயிர்சாேம் கட்டி கட்டியாக இருக்கு.
இரு பிரசந்து ேதரன். அப்புறம் சாப்பிடலாம்” என்று சாப்பிடுவரே
விட்டுக் ரகரய அலம்பிவந்து தரயில்தவ சாேத்ரே நசுக்கிப் பிரசந்து
பக்குவப்படுத்திக் தகாடுத்ேது.அவள் பிரசவரேப் பார்த்துப் ரபயன் என்
பக்கம் திரும்பிப் புன்சிரிப்புச் சிரித்ோன்.
“ஏண்டா சிரிக்கிதற?”
“அவ பிரசஞ்சு தகாடுக்கிறாப்பா!” அேற்கு தமல் அவனுக்குச்
தசால்லத் தேரியவில்ரல. அவனுக்குக் ரகயலம்பி, வாய்
துரடத்துவிட்டதும் அவள்ோன்.
“இந்ோ, ஜலம் குடி” என்று அவனுக்குத் ேண்ணீர் தகாடுத்ோள்.
“வாண்டாம்.”
“ஜலம் குடிக்காட்டா ஜீரணமாகாது. இரேக் குடிச்சுடு.”
பாடாகப் படுத்துகிறவன், பதில் தபசாமல் வாங்கிக்
குடித்துவிட்டான். ஏதோ வருஷக்கணக்கில் பைகிவிட்டதுதபால,
அவரனக் ரகரயப் பிடித்து ஜாக்கிரரேயாக அரைத்துக் தகாண்டு
வந்ேது அந்ேப் தபண். அவனும் அவள் இழுத்ே இழுப்புக்தகல்லாம்
வந்து தகாண்டிருந்ோன்.
“கல்கத்ோவுக்குப் தபாதறங்கிறிதய. அவாரைத் தேரியுதமா?”
“தேரியாது மாமா. தபரிய தவரலயிதல இருக்காராம் அவர்.
மூவாயிர ரூபாய் சம்பைமாம். குைந்ரேரய வச்சுக்கணுமாம்.
அதுக்குத்ோன் என்ரனக் கூப்பிட்டிருக்கா.”
எந்ேக் குைந்ரேரயதயா பார்த்துக்தகாள்ை எங்கிருந்தோ ஒரு
குைந்ரே தபாகிறது. கண் காணாே தேசத்திற்கு ஒரு ோய் அந்ேக்
குைந்ரேரய அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாரடரயச் சுருட்டிக்
தகாண்டு கிைம்பிவிட்டது.
“தராம்ப சமர்த்தும்மா இந்ேக் குைந்ரே” என்தறன் அம்மாளிடம்.
“நாேனில்லாட்டாச் சமர்த்துத் ோனா வந்துடறது. ஒட்டி
ஒட்டிண்டு பைகறது அது.
கல்கத்ோவுக்குப் தபாகாட்டால் நாதன இரே வச்சுண்டிருப்தபன்.
பாருங்கதைன் பசிக்கிறது கிசிக்கிறதுன்னு நாமாக் தகட்கிற வரரயில்
வாரயத் திறந்ேதோ? என்னதவா பகவான்ோன்காப்பாத்ேணும்.”
ரபயன் ஆரஞ்ரச மறுபடியும் ரகயில் எடுத்து ரவத்துக்
தகாண்டான்.
“ஏண்டா குைந்ரே, உரிச்சுத் ேரட்டுமாடா?” என்றாள் அம்மாள்.
“வாண்டாம். ஊரிதல தபாய் அம்மாரவ உரிச்சுக் குடுக்கச்
தசால்லப் தபாதறன்.”
“நானும் அம்மாோண்டா.”
ரபயன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று.
“உனக்தகன்ன வயசு?” என்று திடீதரன்று ரபயன் குஞ்சுரவப்
பார்த்து ஒரு தகள்வி தபாட்டான்.
“பத்து.”
“பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!”
என்று விரரல எண்ணிக்தகாண்தட தகட்டான்.
“இல்ரல”
“ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?”
“ஆமாம்பா. எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிதறன். ஆறு
ஏழு எட்டு ஒன்பது பத்து. அவ அஞ்சாவது.”
“அவ படிக்கரலடா.”
“நீ படிக்கரல?”
“”வீட்டிதலதய வாசிக்கிறியா?”
“ம்ஹ்ம்”
“அவ கல்கத்ோவுக்குப் தபாறாடா. அோன் படிக்கரல.”
“அங்க எதுக்குப் தபாறாைாம்?”
“தவரல பாக்கப் தபாறா?”
“தபாப்பா… ஏண்டி, நீ தவரல பார்க்கப் தபாறியா?”
“ஆமாம்.”
ரபயன் அவரைதய சிறிது தநரம் பார்த்துக் தகாண்டிருந்ோன்.
அவனுக்கு நம்பிக்ரக வரவில்ரல. மீண்டும் தகட்டான்; “உனக்கு
ரசக்கிள் விடத் தேரியுமா?”
அந்ேப் தபண் வாய்விட்டுச் சிரித்ேது.
முேல் முேலில் அது சிரித்ேதே அப்தபாதுோன்.
“எனக்கு எப்படி ரசக்கிள் விடத் தேரியும்? தேரியாது.”
“அப்படீன்னா எப்படி தவரலக்குப் தபாவியாம்?”
“நடந்து தபாதவன்.”
மறுபடியும் அவரைப் பார்த்து தயாசித்துக் தகாண்டிருந்ோன்
ரபயன். அவன் அப்பா ரசக்கிளில் தவரலக்குப் தபாகும்தபாது அவள்
மட்டும் எப்படி நடந்து தபாக முடியும் என்று அவனுக்குப் புரியவில்ரல.
இரண்டு குைந்ரேகளும் வயல்தவளிகரைப் பார்த்துக் தகாண்டு
வண்டியின் தவகத்ரே ரஸித்துக்தகாண்டிருந்ேன.
“இந்ேப் தபாண்ணு யாரர நம்பி இப்படிப் தபாறது?… தபாகிற
இடம் எப்படி இருக்தகா!” என்று தகட்தடன்.
“இந்ே ஜட்ஜுக்கு ஒன்றுவிட்ட மச்சினராம் அவர். மூவாயர
ரூபாய் சம்பைம் வாங்கறாராம் ஏதோ கம்தபனியிதல. நம்ம பக்கத்துக்
குைந்ரேன்னு விசுவாசமாத்ோன் இருப்பா. என்னோன் இருக்கட்டுதம,
நல்ல சாப்பாடு, துணிமணிதயல்லாம் தகாடுக்கட்டும்; எத்ேரன
பண்ணினாலும் அது பிறத்தியார் வீட்டுக் குைந்ரே, தவரலக்கு
வந்திருக்கிற குைந்ரேங்கிற நிரனவு தபாயிடுமா அவாளுக்கு?
இதுோன் அவாரைத் ோயார் தோப்பனார்னு தநனச்சுக்கமுடியுதமா?
ஆனா இது ஒட்டி ஒட்டிண்டு வித்தியாசமில்லாம பைகுறரேப் பாத்ோ
எங்தகயும் சமாளிச்சுண்டுடும் தபால்ோன் இருக்கு. இருந்ோலும்
தபத்ேவாகிட்ட இருக்கிற மாதிரி இருக்க முடியுமா, ஸ்வாமி?
நீங்கதை தசால்லுங்தகா.” எனக்கு வயிற்ரறக் கலக்கிற்று.
நாதன முகம் தேரியாே உற்றார் உறவினர் இல்லாே புது
ஊருக்குப் தபாவதுதபால ஒரு சூன்யமும் பயமும் என்ரனப்
பற்றிக்தகாண்டன.
“கடவுள் இரேயுந்ோன் காப்பாத்ேப் தபாறான். இல்லாவிட்டால்
மனிேர்கரை நம்பியா தபத்ேவர்கள் இரேவிட்டு விட்டிருக்கிறார்கள்?”
என்தறன்.
“கடவுள்ோன் காப்பாத்ேணும். தவதற என்ன தசால்லத் தேரியறது
நமக்கு? சுத்திச் சுத்தி அதுக்குத்ோன் வந்துடதறாம். ஆனா, இப்படி
அனுப்பும்படியான நிரலக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே. அது எப்படி
ஏற்பட்டதுன்னு யார் தயாசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது?
அந்ே வாத்தியாதராட குைந்ரேகளுக்தகல்லாம் ேரலக்கு இத்ேரனன்னு
பள்ளிக்கூடம் வச்சிருக்கிறவன் படி தபாட்டிருந்ோன்னா இப்படிக்
கண்காணாே தேசத்துக்கு இது தபாகுமா?”
“அப்புறம் ஜட்ஜு வீட்டுக் குைந்ரேகரை யாருபாத்துப்பா?”
“அதுவும் சரிோன்.”
“வீட்டுக்கு வீடு வாசல்படி. தகாடுக்கிறவனும் வாத்தியார் மாதிரி
ஆண்டிதயா என்னதமா?” என்தறன். ஒன்றும் புரியவில்ரல.
குைந்ரேரயப் பார்த்து எல்லார் தநஞ்சமும் இைகிற்று. பக்கத்தில்
ேஞ்சாவூர், ஐயம்தபட்ரட என்று நடுவில் ஏறி உட்கார்ந்து
தகாண்டவர்களுக்கு அரரகுரறயாகக் தகட்டாலும் தநஞ்சு இைகிற்று.
அம்மாள் உட்கார்ந்திருந்ே பலரகயின் தகாடியில் உட்கார்ந்திருந்ேவர்-
ராவ்ஜி மாதிரி இருந்ேது.
உேட்ரடக் கடித்து ஜன்னலுக்கு தவளிதய ேரலரயத்
திருப்பிக்தகாண்டார். தநஞ்ரசக் குமுறி வந்ே தவேரனரய
அடக்கிக்தகாண்டு ரேரியசாலியாக அவர் பட்ட பாடு நன்றாகத்
தேரிந்ேது. கும்பதகாணம் வந்துவிட்டது.
“தபாயிட்டு வதரம்மா. குைந்தே, தபாயிட்டு வரட்டுமா?” என்று
ஒரு ரூபாரய அேன் ரகயில் ரவத்தேன்.
“நீங்க எதுக்காகக் தகாடுக்கதறள்?” என்று அம்மாள் ேடுத்ோள்.
“எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அைச்சிண்டுோதன தபாதறள்?
இது வாத்தியார் குைந்ரேோதன? உங்க குைந்ரேயில்ரலதய? நீங்க
தகாண்டாடற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன தசய்யறது.
எனக்குக் தகாடுக்கணும் தபால் இருக்கு. எனக்கும் இதுக்கு தமதல
வக்கில்ரல.”
“ஹ்ம்” என்று இரட்ரடநாடிச் சரீரத்தில் ஒரு தபருமூச்சு
வந்ேது.
“வாங்கிக்தகாடிம்மா. உங்களுக்கு ஒரு குரறவும் வராது,
ஸ்வாமி” என்றாள் அம்மாள்.
“யப்பா… இரேக் தகாடுத்துட்டு வதரம்பா” என்று என் ரபயன்
ஆரஞ்ரசக் காண்பித்ோன்.
“தகாதடன்டா, தகட்பாதனன்?”
“வாண்டாண்டா, கண்ணு.
குைந்ரே, பாவம். அம்மா உரிச்சுக் குடுக்கணும்னு
தசால்லிண்டிருந்ேது.”
“யப்பா… வாங்கிக்கச் தசால்லுப்பா” என்று ரபயன்
சிணுங்கினான்.
“வாங்கிக்தகாம்மா.”
தபண் வாங்கிக்தகாண்டது.
“ஸ்வாமி! நல்ல உத்ேமமான பிள்ரைரயப் தபத்திருக்தகள். வாடா
கண்ணு. எனக்கு ஒரு முத்ேம் தகாடுத்துட்டுப் தபா” என்று அம்மாள்
அரைத்ோள். ரபயன் தகாடுத்துவிட்டு ஓடிவந்ோன்.என் தமய்
சிலிர்த்ேது. முகத்ரேக் கூடியவரரயில் யாரும் பார்க்காமல் அப்பால்
திருப்பிக்தகாண்டு கீதை இறங்கி அவரனத் தூக்கிக்தகாண்டு
நடந்தேன். அவனுக்கு நடக்கவா தேரியாது? எனக்கு என்னதவா
வாரியரணத்துக் தகாள்ைதவண்டும் என்று உடம்பு பறந்ேது. தூக்கி
எடுத்துத் ேழுவிக்தகாண்தட தபாதனன். உள்ைம் தபாங்கி வழிந்ேது.
அன்ரபதய, சச்சிோனந்ேத்ரேதய கட்டித் ேழுவுகிற ஆனந்ேம் அது.

***

You might also like