You are on page 1of 31

 24/7 நியூஸ்

 நக்கீரன் டாக்கீஸ்
 நந்தவனம்
 வெப் டிவி
 கேலரி
 பதிப்பகம்
 ரிசல்ட்
 முந்தைய நியூஸ்
 Home

 நக்கீரன்
 சினிக்கூத்து
 பாலஜோதிடம்
 ஓம்
 இனிய உதயம்
 பொது அறிவு
 ஹெல்த் சாய்ஸ்

 எங்களை பற்றி
 சந்தா
 சந்தா புதுப்பிக்க
 விளம்பர விபரம்
 தொடர்புக்கு
 Toolbar
 Free News Letter


 Login

அண்மைச் செய்திகள்
இனிய உதயம் 01-04-2009
| : Email this Article
ரத்த காட்டேரி
......................................
மொழி
பெயர்ப்பாளர்
முன்னுரை
......................................
""நமது பள்ளிகள்
கல்வி முறை
ஹிட்லரின்
சிறைக்கொட்டடிக
ளைவிடக் "இலக்கியம் வழியே சமூக மாற்றம்'

கொடுமையானது!'எனும் இலக்கியக் கோட்பாட்டின் வெற்றியை


எட்டுதல் என்பது, தமிழ்ச் சூழலில் பெருங்கனவாய்
' இரா. நடராசன்
தொடர்ந்த நிலையை,
......................................
இலக்கியக்
இரா. நடராசன் எழுதிய "ஆயிஷா' சிறுகதை
களமா? அவதூறுக் மாற்றிக் காட்டியது. தமிழ் படைப்பு ஒன்று ஒரு
களமா? லட்சம் பிரதி களுக்கும் அதிகமாக விற் பனையாகி
...................................... வியக்க வைத்த இந்தச் சிறுகதை, ஆங்கிலம்,
இத்தாலி, கிரேக்கம், ஜெர்மன், சீனம் உள்ளிட்ட
உலகின் ஒன்பது மொழிகளில், கதை யின்
உள்ளடக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு
மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

இன்றைய நமது கல்வி முறையின்


அவலநிலையால் மொட்டிலேயே கருகும்
குழந்தைகளின் ஒட்டுமொத்த குரலை பொட்டில்
அடித்துச் சொல்லும் "ஆயிஷா', தமிழ கம்
முழுவதும் பிரதியெடுக் கப்பட்டு,
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
விநியோகிக்கப்பட்டு வரும் ஒரு மாபெரும்
இயக்கமாக உருவெடுத்திருப்பது, கல்வித் துறை
கோரி நிற்கும் மாபெரும் மாற்றத்தையே
சுட்டுகிறது.

தமது பதினாறாவது வயது முதலே கல்விப்


பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நடராசன்,
கடலூரில் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியின் முதல்வராகப் பணிபுரிந்து வரும்
மாற்றுமுறைக் கல்வியாளர். தமது படைப்பின்
வெற்றியால் "ஆயிஷா நடராசன்' என பாராட்டப்
பெறும் இவர், குழந்தை நாவல்கள் உட்பட,
பத்துக்கும் அதிகமான நாவல்கள், நான்கு
சிறுகதைத் தொகுதிகள், மூன்று கவிதைத்
தொகுப்புகள், அறிவியல் புனைகதைகள், உலகக்
கல்வியாளர்களின் சிந்தனைகள் உள்ளிட்ட முக்கிய
இலக்கியப் படைப்புகளின் தீவிர மொழி
பெயர்ப்புகள் என நவீன தமிழ் இலக்கிய
படைப்பாளியாக இயங்கி வருகிறார்.

வாசகனை ஒருபோதும் மிரட்டாத மொழியில்-


அதேசமயம் யதார்த்தம், மேஜிக்கல் யதார்த்தம்
ஆகிய புனைவு முறைகள் சந்திக்கும் மையப்
புள்ளியிலிருந்து, உன்னதம் ததும்பும்படி பிறப்பவை
இவரது எழுத்துகள். தற்போது குழந்தைகளுக்காக
அதிகம் எழுதத் தொடங்கியிருக்கும் இரா. நடராசன்,
இலக்கியச் சிந்தனையின் முழு ஆண்டுக்கான
சிறந்த சிறுகதையாளர் பரிசு, லில்லி
தெய்வசிகாமணி விருது, கலை இலக்கியப்
பேரவையின் சுதந்திரப் பொன் விழா நாவல்
போட்டியில் முதல் பரிசு என தொடர்ந்து
அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்.

பார்வையற்ற மாணவர்களும் வாசிக்கும் வண்ணம்


பிரைல் மொழியில் வெளிவந்திருக்கும் முதல்
தமிழ் நாவலான "பூஜ்ஜியமாம் ஆண்டு' இவரது
படைப்பே. தாம் பணிபுரிந்து வரும் கல்வி
நிறுவனத்தில் "வகுப்பறை ஜனநாயகம்' எனும்
புதிய ஆசிரிய உத்தியைக் கடைப்பிடித்து வரும்
இந்த முற்போக்கு எழுத்தாளரை "இனிய உதயம்'
இதழுக்காகச் சந்தித்தோம்...

இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி


மேடைகளில், உங்களுடைய ‘"கருப்பு யுத்தம்'’
கவிதைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பல
கவிதைகள் மாணவர்களால் உரத்து வாசிக்கப்
பட்டிருக்கின்றன. குறிப்பாக கவிஞர் பெஞ்சமின்
மொலாயிஸ் அரசியல் படுகொலை செய்யப்பட்டது
குறித்து நீங்கள் எழுதிய கவிதையின் "நீ
புதைக்கப்படவில்லை;õ விதைக்கப்பட்டிருக்கிறாய்'
எனும் இரண்டு வரிகளுக்கு ஈழப்போராட்டம்
என்றாலும் சரி; இடதுசாரி போராட்டக் களங்கள்
என்றாலும் சரி- தனித் துவமான இடம் இன்றளவும்
இருந்து வருகிறது. இவ்வாறு ஒரு எழுச்சிகரமான
கவிஞராக அறியப்பட்ட நீங்கள், சிறுகதைக்கும்
அதன் நீட்டிப்பான நாவலுக்கும் இடம் பெயர்ந்தது
ஏன்? சிறுகதைகள் அளவுக்கு வாசகனை
கவிதைகள் பாதிப்ப தில்லையா? அல்லது
வடிவத்திலிருக்கும் சௌகரியமா?

""இப்போதும்
சொல்கிறேன்.
பாரதியிடமிருந்து
கிளம்பிய ஒரு அக்னி
புயல்தான் தமிழின்
புதுக்கவிதை. அது
பெரும்பான்மை
யோர்
சொல்வதைப்போல
அமெரிக்க கவிஞன்
வால்ட் விட்மனி
டமிருந்து கடன்
வாங்கப்பட்டது
அல்ல. "கவிதை
சொற்களின்றி
நடைபெறுகிறது' என்று சார்த்தர் குறிப்பிடுகிறார்.
வானம்பாடி முதல் இன்றைய பெண்ணிய
கவிதைகள் வரை தமிழில் புதுக்கவிதை என்பது
காலத்தின் கொழுத்து உறங்கும் கன்னத்தில்
விடப்பட்ட அறை!õ தீக்குள் விரலை விட்டதுபோல
ஒரு உணர்வுப் பிரவாகத்தில் தமிழை மறுபிறப்பு
எடுக்க வைத்த ஒரு சக்தி அதற்கு இருந்தது...
இருக்கிறது.
நான் திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்.
ஒரு கவிஞனாகத்தான் இலக்கிய வாழ்வுக்குள்
அடியெடுத்து வைத்தேன். பள்ளிப்
பருவத்திலிருந்தே என் பாடப்புத்தகத்திற்குள்
வைத்து, திருட்டுத்தனமாக நான் படித்தவற்றில்
வானம்பாடிகளும்- இடது சாரிகளும்- புதிய
பரிமாணத்தை தமிழில் புகுத்திய பகுத்தறிவாதி
களும் என்னோடு என் வகுப்பறையில்
ஒளிந்திருந்தார்கள். வாசிக்கும் பழக்கம் என்
தந்தையிடமிருந்து எனக்குத் தொற்றியிருக்க
வேண்டும். மந்திரிகளிடம் ஏகத்திற்கும்
கெட்டவார்த்தை வசவுகளைப் பெற்ற படி ஊர்ஊராக
மாற்றலடைந்து கொண்டிருந்த- எந்த ஊழலுக்கும்
துணை போக மறுத்த அப்பட்டமான நேர்மையான
அரசு அதிகாரி யான அப்பாவை- அவரது
மரணம்வரை அதிகார அத்துமீறல் துரத்தியதால்,
எங்கள் குடும்பத்தில் யாருமே பிறகு அரசு
வேலைக்குச் செல்லவில்லை. யாரோ ஏழை
பாழைகளுக்கு உதவிகள் சென்று சேர, தன்
வேலையில் குறுக்கீடுகள் வந்தபோதெல்லாம்
சற்றும் யோசிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து, தனது
கட்டாய டிரான்ஸ்பரை அப்பா எதிர் கொண்ட விதம்,
இப்போது நினைத்தா லும் சிலிர்க்கிறது. நான் என்
பள்ளி வாழ்வில் 12-ஆம் வகுப்பு முடிப்பதற்குள் 13
விதவிதமான ஊர்களின் விதவிதமான பள்ளிகளில்
படித்தேன். நாங்கள் மூன்று பிள்ளைகள். நான், ஒரு
தம்பி, ஒரு தங்கை. எங்களின் யார் பெயரையும்
வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு
செய்யக்கூட அப்பா அனுமதிக்கவில்லை. எந்த
ஊரில் இருந்தாலும் வீட்டிற்குப் பலவிதமான
தமிழ்ப் பத்திரிகைகளை தருவிப்பார். எதையும்
வாசிக்கும் சுதந்திரம் கொடுத்தார். இன்று என்
மகனுக்கு இல்லாத பல சுதந்திரங்களை நான்
அனுபவித்தி ருக்கிறேன் என்பதை
நினைக்கும்போது வியர்க்கிறது.

கரூரில் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் எனக்கு


அற்புதமான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். புதிய
பரிமாணம் எடுத்த தமிழ் இலக்கியத்தை
தமிழாசிரியர்கள் கடுமையாக எதிர்த்தபோது,
புதுக்கவிதைளை சரளமாக வகுப்பில் அறிமுகம்
செய்த தமிழ்மணி, ஜமால் முகமது கல்லூரியில்
ஒரு நசீர் அலி என என்னைச் செதுக்கிய
பேராசிரியர்கள் பலர். 1976-ல் "ஆனந்தவிகடன்'
என்னை ஒரு கவிஞனாக அறிமுகம் செய்தது.
தமிழ் இலக்கிய மரபின் இன்றைய நவீனத்துவம்
சோவியத் எழுத்துகளின் வழியே வந்தது என்பதை
யாருமே மறுக்கமாட்டார்கள். என் விஷயத்திலும்
அது தான் நடந்தது. "நள்ளிரவுப் பாடகன்' எனது
முதல் கவிதைத் தொகுதி. அதிலிருந்து சில
கவிதைகளை சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில்
மாணவர்கள் எடுத்தியம்பியதைப் பத்திரிகையில்
படித்தேன். "கறுப்பு யுத்தம்' அடைந்த வாசகர் பரப்பும்
கவிதை வீச்சின் தமிழ் வெற்றியைப்
பறைசாற்றுவது உண்மைதான். ஆனாலும் என்
கவிதைகளேகூட ஒரு கதையைப் படிக்கும் திருப்தி
யைத்தான் தருகின்றன என்று என் வாசகர்கள் பலர்
கருத்து தெரிவித்தனர். செய்தித் துணுக்குகளை
கவிதையாக்கி "விகடன்' முதல் "வாரமலர்' வரை
பல வெகுஜன ஏடுகளிலும், "முன்றில்' உள்ளிட்ட
கவிதை ஏடுகளிலும் எழுதிக் கொண்டிருந்தபோதும்,
என் வாசிப்புத்தளம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
திடீரென்று கொலம்பஸ் அகஸ்மாத்தாக
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல,
பெஞ்சமின் பிராங்கிளின் மின்னலுக்குள் மின்சாரம்
இருப்பதைக் கண்டுபிடித்ததுபோல, நான் என்
கவிதைகளுக்குள் கதை இருப்பதைக்
கண்டுபிடித்தேன்.... ப்ற் ஜ்ஹள் ஹ ள்ங்ப்ச்
க்ண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ஹ். வணக்கம் கூறி
கவிதைகளிடமிருந்து நான் விடைபெற்றேன்.''

உங்கள் கவிதைகள் செய்த பங்களிப்பாக எதைக்


கருதுகிறீர்கள்?

""தமிழில் கவிதை என்பது இருவகையாக


இருப்பதைப் பார்க்கலாம். ஒருவித வெறியோடும்
வலியோடும் உரக்கப் பேசும் கவிதை ஒரு வகை.
களப்போராளிகள், சமூக- மானுட விடுதலை
சிந்தனையாளர்கள் முதல், அடித்தட்டு மக்கள்வரை
முழக்கமாக- ஒரு பிளிறலாக முன்வைக்கும் ஒன்று
அது. உங்கள் காலை யாராவது மிதிக்கும்போது
செய்வீர்களே, அது இரண்டாவது வகையான
கவிதை. இது மௌனமானது. மனசுக்குள் வேலை
செய்வது. ஒரு நூலகத்திற்குள் நடப்பதுபோல
அதிர்ந்தும்கூட பேசிவிடாத பாணி. இரண்டிலுமே
ஜாம்பவான்கள் இருந்தார்கள்- இருக்கிறார்கள். நான்
முதல் வகையைச் சார்ந்தவன்... சுவர்
விளம்பரத்திலிருந்து மாநாடு முழக்கம் வரை,
உரக்க கூப்பாடு போட்டவை என் கவிதை வரிகள்.

"உன்போல கனவு கண்டாவது

இந்த தேசத்தை

வாழ்த்தலாம் என

கண்களை மூடினேன்

பாரதி

கண்விழித்தபோது

என் எழுதுகோலே திருடுபோயிருந்தது'

என்பன போன்ற என் கவிதை வரிகளை கல்லூரி


கழிவறைச் சுவர்களில் என் சகமாணவர்கள்
எழுதினார்கள்.

"பெண்ணே

உன்னை பற்றவைக்க

உன் மணாளன்

மண்ணெண்ணெய் வாங்கியதே

தன் மாமனார் தந்த சீர்பணத்தில்தான்'

எனும் வரிகளை மாணவிகள் பேச்சுப்


போட்டிகளில்- பட்டி மன்றங்களில்
முழங்கினார்கள்.

பெஞ்சமின் மொலாய்ஸ் தூக்கிலிடப்பட்டபோது


அவரது கவிதைகளை நான் வாசித்திருக்கவில்லை.
ஆனால் என் மனம் பதறியது. ஒரு கருப்பினக்
கவிஞன் வெள்ளை ஏகாதிபத்தியத்தால், பொய்யாய்
புனையப்பட்ட வழக்கில் சிக்கவைத்துக் கொல்லப்
பட்டதை கவிதை மூலம் நான் பகிஷ்கரித்தேன்.

"உன்னை தூக்கிலிட்டுவிட்டு

அவர்கள்தான் வரலாற்றின் பக்கமெங்கும்

மாண்டுபோய் கிடக்கிறார்கள்

கருப்புப்புயலே

நீ புதைக்கப்பட வில்லையடா

விதைக்கப்பட்டிருக்கிறாய்'

என்று ஒரு அலறலாக என் கவிதை வெளிவந்தது.


கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
அப்போதே ‘பட்ங் ண்ப்ப்ன்ள்ற்ழ்ஹற்ங்க்
ஜ்ங்ங்ந்ப்ஹ்’ இதழில் வெளிவந்தது. அவர்
தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு 22 வயது. அந்த
வருடம் என் வயதும் 22. அதனால்தான் என்னால்
தாங்கமுடியாமல் நான் பதறிப் போனேன்.
இப்படியாக நான் எழுதியவை சுமார் 400 கவிதைகள்.
அந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். என் சக
எஸ்.எப்.ஐ. தோழர்கள், அறிவியலில் இளநிலை
படித்தபடியே தமிழ் இலக்கிய வெறியோடு
அலைந்த என் விடுதி அறை நண்பர்கள், பேச்சுப்
போட்டிகள், கவியரங்கங்கள், மாநாடுகள் என என்
கவிதை கேட்க வந்த என் எழுத்தின் நேசர்கள், வார-
மாத இதழ்களில் வெளிவரும் என் கவிதைகளை
வாழ்த்தி மறக்காமல் கடிதம் எழுதிய
வல்லிக்கண்ணன் போன்ற கவிதா பிமானிகள், நான்
இன்றும் போற்றுகிற என் தோழர் அறிவுமதி
உள்ளிட்ட சக கவிஞர்கள், என் சித்தாந்த அறிவைச்
செதுக்கிய பேராசிரியர் ஆத்ரேயா, கரூர் பி.ஆர்.
குப்புசாமி, கவிஞர் இன்குலாப்... அடடா... மறந்து
விட்டேன்... "உன் கவிதை சாகாது' என கூறிப் பிரிந்த
என் உயிர்த் தோழன் குடியரசு... கவிதைக்கு நான்
பங்களிப்பு செய்ததைவிட கவிதை எனக்குச் செய்த
பங்களிப்புகள்தான் அதிகம்.''

தற்கால தமிழ் சிறுகதைகளில், தலைசிறந்த


இருபது கதைகள் இலக்கிய குழு அரசியலோடு
தொகுக்கப்பட்டாலும்கூட, அதிலும் உங்களின்
"ஆயிஷா'வை நிராகரித்துவிட முடியாது.
அத்தகைய "ஆயிஷா' தமிழக ஆசிரியர்களுக்குப்
பாடமாக வைக்கும் அளவிற்கு முக்கியத்துவம்
பெற்ற கதையாக முன்னெடுத்துச்
செல்லப்படுகிறது. ஒரு பள்ளி ஆசிரியராகவும்
படைப்பாளியாக வும் "ஆயிஷா' கதைக்கான
பின்னனி நிகழ்வு அல்லது அக்கதைக் கான
படைப்பூக்கம் எங்கிருந்து கிடைத்தது?

"" "ஆயிஷா' கதையல்ல; ஒரு இயக்கம் என்று


சமீபத்தில் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு
அறிவிப்புபோல செய்தார்கள். நான் நெகிழ்ந்து
போனேன். அது நடராசனின் "ஆயிஷா' அல்ல...
நான் தான் "ஆயிஷா' நடராசன்! "ஒரு சமூகத்தின்
அறிவுநிலையைக் கணிக்க, அங்கே அதிகம்
வாசிக்கப்படும் எழுத்து எது என்பதைக் கணித்தால்
போதும். அல்லது அதிக நாட்கள் ஓடும் சினிமா எது
என்று பாருங்கள்' என்றாராம் இப்ஸன். சினிமா
விவகாரம் குறித்து அப்புறம் சொல்கிறேன். ஆனால்
"ஆயிஷா' என் சிறுவெளியீடாக இன்று தமிழில்
ஒரு லட்சம் பிரதிகள் வாங்கப்பட்டுள்ளது என்றால்,
வாசிக்கப்பட்டுள்ளது என்றால், நம் தமிழ்ச் சூழலில்
அறிவியல் புனைவாக முன்வைக்கப்பட்ட ஒரு
சமூக அவலத்தின் பதிவு எத்தகைய வரவேற்பைப்
பெறுகிறது என்பதை நினைத்துப் பார்க்க
ஆச்சரியமாக உள்ளது.''

"ஆயிஷா' உங்களையும் என்னையும்போல,


பள்ளியிலும் வீட்டிலும் படிப்புக்காக
அவமானப்படுத்தப்படும் ஒரு அபலை
என்பதாலா? குழந்தைகளின்மீது
கண்மூடித்தனமான வன்முறையை ரொம்ப
யதார்த்தமாக குற்ற உணர்ச்சியே இல்லாமல்
கூச்சமின்றி ஏவிவிடும் கல்வி குறித்த
ஆத்திரத்தாலா... அறிவார்த்த வெளியில்
பயணிக்கவிடாமல், பெண் குழந்தைகளைப்
பகிஷ்கரிக்கும் ஆணாதிக்கச் சூழல் மீதான
கோபத்தாலா... பள்ளியிலே நாம் படித்தபோது
வாங்கிய தழும்புகளின் புதுவலியாலா... எது
"ஆயிஷா'வை இத்தனைதூரம் கொண்டு
வந்தது?

"" "ஆயிஷா'வைப் படைத்தபோது இதில் எது


ஒன்றையும் நான் கற்பனைகூட செய்து
பார்க்கவில்லை. அந்தக் கதை எந்த இதழிலும்
பிரசுரமாகும் என்றுகூட நான் கருதவில்லை.
எனக்கு அப்போது தேவையாக இருந்ததெல்லாம்
ஒரு ஆசிரியனாக இருந்து, இந்த கல்விமுறைக்குள்
குழந்தைகள் படும் அவமானத்தை விம்மல்களோடு
பதிவு செய்து, என் ஆத்திரத்தை- அழுகையை
வெளிப்படுத்த ஒரு வடிவம். அப்போது
சொல்லப்பட்டு வந்த கதைப் போக்குகள் வழியே
என்னால் அவளது கதையைச் சொல்ல
முடியவில்லை. புதிய வடிவம், புதிய சொல்லாக்கம்
மூலம் முயன்று பார்க்கலாம் என நினைத்தேன்.
ஏற்கெனவே எனது சோதனை முயற்சிகளில்
‘"மதியெனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து',
"அது அவன் அவர்கள்', "ரத்தத்தின் வண்ணத்தில்'
ஆகியவை வாசகரிடையே வரவேற்பைப்
பெற்றிருந்ததால், "ஆயிஷா'வையும் புதிய
சோதனை யாகவே எழுதிப் பார்க்க விரும்பினேன்.
எனக்குக் கிடைத்த அற்புத மான பல மாணவர்களின்
ஒற்றைப் பிரதியாக நான் "ஆயிஷா'வைத்
தீட்டினேன். என்னிடம் எப்போதுமே குழந்தைகள்
நெருக்கம் கொண்டிருந்தன. அப்பா- அம்மா
அடித்தால்கூட விம்மிக் கொண்டுவந்து, என்னிடம்
ஒரு மண்டு அழுது விட்டுப் போகிற பிஞ்சுகள்
இன்றும் உண்டு... அந்த வகையான எண்ண
நினைவுகளை அதில் நான் வடிக்க

வடிக்க ஒரு புதிய கதை கைகூடி வந்தது. ஆனால்


"ஆயிஷா'வின் வெற்றி என்பதில் என் பங்கு கதை
படைத்தது மட்டும்தான். அதை தனது கேடயமாக-
ஆயுதமாக- வழித்தடமாக என நம் தமிழ்
ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பெண்கள்,
பெண்ணியவாதிகள், அறிவுத்தளத்தில் இயங்கிய
பல தோழர்கள், யார் மூலமோ பெற்று, யார்
யாருக்கோ பிரதியெடுத்துத் தந்து, எங்கெங்கோ
"ஆயிஷா'க்களை இனம் கண்ட- கண்டு வருகிற
அந்தப் பல ஆயிரம் நெஞ்சங்களில் தணல்
பொறியாக சுடர் விட்டாள் "ஆயிஷா'. சமீபத்தில்
நான் கலந்து கொண்ட ஒரு திருமண வீட்டில்
தாம்பூலப்பையில் வைத்துத் தரப்பட்டு, "ஆயிஷா'
என் வீட்டுக்கே வந்தபோது, இன்னமும்கூட
"ஆயிஷா'வின் தேவை இருப்பதாக
உணரப்படுவதை நான் அனுபவிக்க முடிந்தது.
தமிழில் எத்தனை படைப்பாளிகளுக்கு இந்த
கௌரவம் கிடைத்திருக்கிறது சொல்லுங்கள்...

சேலத்தில் கண்கள் குருடாக்கப்பட்ட செல்வி...


செங்கையில் ஏழுமணி நேரம் மண்டியிட்டு,
நடக்கும் திறனை நிரந்தரமாக இழந்த ஐந்து வயது
பிஞ்சு பஷீர், கோவையில், திண்டுக்கல்லில்,
பனஞ்சேரியில், நாமக்கலில், திருநெல்வேலியில்,
வள்ளியூரில், மணப்பாறையில் ஆசிரியர் தம்
அவமானத்தால்- தேர்வு தோல்வியால் பெற்றோர்
கொடுத்த மனஅழுத்தத்தால் தற்கொலை
செய்துகொண்ட குழந்தைகள் என அவலம்
தொடர்கிறது. இன்னும் இன்னும் "ஆயிஷா'வின்
தேவை வளர்ந்து கொண்டே போகிறது.''

சிறுகதைகள், நாவல் இரண்டில் எதுவாயினும்


சொல்லும் முறையில் இடையறாத சோதனை
முயற்சிகளைக் கையாண்டு வருகிறீர்கள்.
"ஆயிஷா' கதை ஒரு அறிவியல் புத்தகத்துக்கான
முன்னுரைபோல அமைக்கப்பட்டிருக்கிறது.
நாவல்களில் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால்
"பாலிதின் பைகள்'. அதில் இடம்பெற்றிருக்கும்
கதைமாந்தர்கள், வாசகர்களோடு சேர்ந்து தங்கள்
கதையைப் படிப்பது போன்ற உத்தியைக் குறிப்பிட
வேண்டும். உண்மையில் சோதனை முயற்சிகள்
ஒரு படைப் பிலக்கியத்தின் வீச்சுக்கு எவ்வகையில்
பலன் தரக்கூடியவை? உங்கள் படைப்பிலக்கிய
மொழி என்பது எவ்வாறு தகவமைப்பு பெற்றது?

‘"" "கதை என்பதும் மொழி என்பதும் வெறும்


வாகனங்கள்தான்' என்பார் போர்ஹேஸ்.
குதிரைகளைப் பராமரித்த லாயத்திலிருந்து
பதினைந்து வருடங்கள் கழித்து வெளியே வரும்
கருப்பினத்தவனின் கதையை "நாபோ' எனும்
தலைப்பின்கீழ் எழுதிய கார்சியா மார்க்வஸ்-
அக்கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டதாக
அறிவிக்கவில்லையா?

இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய்


ரோலன்பார்த், ‘"கதாசிரியன்' இறந்து விட்டான்’என
பிரகடனம் செய்யவில்லையா? மொழி,
மொழிக்காகவே பயன்படுத்தப்படுகிறது என முக்கா
ரோவஸ்கி போல நான் குழப்ப விரும்பவில்லை.
நான் அன்று கதை எழுத வந்தபோது கதை எனும்
நதியில் பயணிக்க மொழியை ஒரு
கள்ளத்தோணியாகப் பயன்படுத்தி, ரகசிய
வழிகளின் வழியே வாசகனைக் கட்டியிழுத்து
மூச்சிரைக்க வைக்கும் யுக்திகளையே
கையாண்டேன் என்பது உண்மைதான்.

தமிழில் மரபான விமர்சனம் அல்லது வாசிப்பு


அணுகுமுறை என்று எதுவும் இல்லை. ஆசிரியன்-
பிரதி- வாசகன் எனும் நுட்பமான உறவுநிலை பற்றி
எந்தப் புரிதலும் இல்லாதவர்கள் கதை, நாவல்கள்
என எம்ஃபில், பிஎச்டி. ஆய்வு செய்து பட்டமும்
பெற்று விடுவதை தமிழ்ச் சூழலில் மட்டுமே பார்க்க
முடியும். எனவே உங்கள் கேள்விக்கு அவர்களை
முன்வைத்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
என் வாசகர்கள் அதுபற்றியெல்லாம்
கவலைப்பட்டதே கிடையாது. அவர்கள் புதிய புதிய
வகையில் காயம் படவும் பதறவும் குழிகளில்
விழுந்தெழவும் சாக்கடைகளைத் துழாவி வாழ்வை
நுகரவும் விதவிதமாக உலகை வசைபாடவும்
என்னோடு கைகோர்க் கத் தயங்கியதே இல்லை.
"மனம் கண்டுபிடிக்கிறது... மனிதன் அறிகிறான்...
சொற்கள் அறிவிக்கின்றன'’ என்பார் போர்ஹேஸ்.
என் படைப்புகளின் யுக்திகளை நான் திட்டமிட்டு
உருவாக்கியது உண்மைதான். ஆனால் அதற்கான
தேவையை என்மீது திணித்தது என்
வாசகர்கள்தான்.''

"பாலிதின் பைகள்'’ பற்றிப் பேசும்போது இந்தப்


படைப்பு மூலம் தலித் அல்லாத ஒரு
படைப்பாளியால் தலித் இலக்கியம் படைக்க
முடியும் என்பதை நிருவியிருப்பதாகவே
தோன்றுகிறது. தலித்துகள் உள்ளிட்ட
விளிம்புநிலை மக்களின் வாழ்வை இத்தனை
அழுத்தமாகப் பதிவு செய்ய எப்படி முடிந்தது?

""ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல அரசு


அதிகாரியான அப்பா ஊர் ஊராக
மாற்றப்பட்டபோது, அங்கே நாங்கள் பஞ்சாயத்து
அலுவலக உள்குடியிருப்புகளில்தான் எப்போதுமே
வசித்தோம். எல்லா ஊர்களிலும் ஊருக்கு கொஞ்சம்
வெளியேதான் அலுவலகம் இருக்கும். அதற்குப்
பக்கத்திலேயே பறைத் தெருவோ பள்ளர் தெருவோ
இருக்கும். புழுதியில் புரண்டு விளையாடிக்
களித்ததெல்லாம் அந்த நண்பர்களோடுதான்.
மாட்டிறைச்சியும் பன்றிக்கறியும் அவர்களோடு
புகுந்து விளையாடி இருக்கிறேன் என சொல்லிக்
கொள்வதில் எனக்குத் தயக்கமே
கிடையாது.‘"பறையடி சித்தர்' கதை முதல்
"பாலிதின் பைகள்' நாவல் வரை’ அனைத்திலும்
நாங்கள்தான் சேர்ந்து வாழ்கிறோம்.

"பாலிதின் பைகள்' ஒரு தலித் நாவல் என்று நான்


ஒருபோதும் சொல்லிக் கொண்டது கிடையாது.
அதிலுள்ள பர்மா கவுண்டர் பாத்திரமும், சிங்காரம்,
மருது எல்லாம் எங்கள் ஊரில் வாழ்ந்த வர்கள்தான்.
தலித்துகளின் வாழ்வின்மீது கட்டவிழ்த்து
விடப்பட்ட கொடிய வன்முறையை
"மிச்சமிருப்பவன்' உள்ளிட்ட பல்வேறு கதைகளில்
ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். அதை
வாசிப்ப வர்கள் அதன் ஆசிரியரின் பிறப்பு பற்றி
எந்தக் கேள்வியும் கேட்டது கிடையாது. நமது
சுதந்திரப் போராட்ட வரலாறு தலித்துகளின்
பார்வையில் தொகுக்கப்பட வேண்டும் எனும்
"பாலிதின் பைகள்' நாவல் முன்வைத்த விஷயம்
இன்னும்கூட பொருந்தும். பெண்களும்
தலித்துகளும் அனுபவிக்கும் வலியை எழுத ஒரு
நாவல் போதாது தான். எகிப்திய எழுத்தாளர்
எட்மண்ட் ஜெபஸ் சொல்வதுபோல, ’"மரணம்
நம்மிடமிருந்து தப்பும் போதும் தொடரும்
அலறல்தான் எழுத்து;' அதற்கு முடிவே கிடையாது.''

தமிழக சாதியக் கட்டுமானத்தைப்


பொறுத்தவரை பிற்படுத்தப் பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட சாதிகளின் உட்பிரிவுகளில்
காணப்படும் சாதிய ஒடுக்குதல்களும், பல
பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களையும்
தலித்தாக உணர்ந்து வாழ்வதையும் நவீன தமிழ்
இலக்கியம் கண்டுகொள்ளாதது ஏன்?

""தலித்துகளின் வாழ்நிலை முழுமையாகப்


பதிவாகிவிட்டதா தோழர்? தமிழக சாதியக்
கட்டுமானம் மாதிரி ஒரு அயோக்கியத் தனமான
பகடியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. பார்ப்
பணீயத்தின் நவீன புருஷர்கள் இடையில் புகுந்து
ஆடிய ஊழிக்கூத்தை வெண்மணியிலும்
மீனாட்சிபுரத்திலும் முதுகுளத் தூரிலும்
கண்டோமே! அப்போது எழுந்த ஆத்திரமும்
விடுதலை வேட்கையும் போராட்ட குணமும்
யாரை நோக்கித் திரும்பி இருக்க வேண்டுமோ
அவர்களைத் தப்புவிக்க வைத்தது எது?
வறுமையை மையமாக வைத்து சாதியம்
கட்டப்பட்டதாக இருக்கவில்லை என்பதுதான்
உண்மை. இங்கே உண்மையான - நேர்மையான
நாவல் ஒன்றை எழுதிவிட்டு நீங்கள் ஒரு சல்மான்
ருஷ்டி போலவோ கூகி திவாங்கோ போலவோ
வளையவர முடியாது. எழுத்தை விடுத்து,
பிறப்பைச் சொல்லி உங்களைக்
காயடித்துவிடுவார்கள். வர்க்கப் போராட்டம்
என்பது, மார்க்ஸிய வழி சிந்தனை என்பது எப்போது
இங்கே கனமிழந்து உக்கிரசேதம் செய்யப்பட்டதோ,
அப்போதே அடையாளச் சிதைவு நமது சமூகத்தின்
புற்றுநோயாகி விட்டது. எனவே இலக்கியம்
என்பதுகூட ஒரு ஆடம்பரச் செலவு. அப்படி
குடும்பத்திலிருந்து கல்வி கற்று, முதல்
பட்டதாரியாகி வேலைக்குச் சென்ற முதல் சந்ததி
பூர்வ அடையாளங்களை ஆண்டு அனுபவிப்ப
திலேயே கு

றியாக இருப்பதையும் குறை சொல்ல


முடியவில்லை. தலித் அல்லாத - ஆனால்
வறுமையும் தரித்திரமும் பிடுங்கும் வாழ்வைக்
கொண்டவர்கள், சில இடங்களில் அரசு வேலையில்
அமர்ந்து வசதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்ட
தலித்துகளைவிட மிக மோசமாக வாழ்வதும்
உண்மைதான். உலகமயமாக்கல் உள்ளிட்ட
அனைத்து முதலாளிய சூழலுமே வசதி
படைத்தோர்- வசதியற்றோர் விரிசலை அதிகமாக்கி
மேலும் ஏற்றத்தாழ்வுகளையே ஏற்படுத்த முடியும்.
ஆனால் எதிர்காலம் எல்லாவகை சாத்தியக்
கூறுகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க அதிபராக
கருப்பர் பதவியேற்றதை இர்வின் வாலஸ் "பட்ங்
ஙஹய்’ என்று ஒரு நாவலாக எழுதியபோது, அது
ஒபாமா என்பவரால் சாத்தியமாகும் என யார்
கண்டார்கள்? தமிழ் இலக்கியம் கண்டுகொள்ளாத
இன்னும் பற்பல மனிதர்களின் வாழ்க்கைக் கதை
சொல்லப்படாமல் தள்ளிப் போய்க்கொண்டே
இருப்பதும் நிரந்தரமான சூழல் அல்ல. ஆனால் ஒரு
விஷயம்- மார்க்ஸியமும் பெரியாரியமும்
அம்பேத்காரியமும் ஒரு குவியத்தில் வரவிடாமல்
காந்தியமும் சனாதனமும் குழப்பிக்
கொண்டேதான் இருக்கும். இதை 21-ஆம்
நூற்றாண்டிலும் அனுமதிக்கப் போகிறோமா?''
தங்களின் "ரோஸ்' ஏற்படுத்தியிருக்கும்
சலனத்தையொட்டி இந்தக் கேள்வி. இன்றைய
பெற்றோர்கள், பிள்ளைகள் விஷயத்தில் உளவியல்
வறுமையோடு இருக்கிறார்கள் என்பது
உண்மையா? அவர்களுக்குத் தேவைப்படும் கல்வி
என்பது என்ன?

""குழந்தைகள் விஷயத்தில் இன்று- குறிப்பாக


மத்தியதர வர்க்கம் காட்டும் அளவுகடந்த
அக்கறைக்குப் பின்னே பணம் சம்பாதிக்கும் கொடிய
வெறி அடங்கி உள்ளது. ஜான்ஹோல்ட் போன்ற
கல்வியியலாளர்கள் சொல்வதைப்போல, சில
நூற்றாண்டுகள் வரை குழந்தைப் பருவம் என்கிற
ஒரு பருவமே கிடையாது என்பதே உண்மை.
குழந்தைகளும் பெரியவர்களைப் போலத்தான்
நடத்தப்பட்டார்கள். ஒரு அக்பர் எட்டு வயதில்
சிம்மாசனம் பெற முடிந்தது. ஆனால்
தொழிற்புரட்சிதான் குழந்தைப் பருவம் என்கிற
ஒன்றை உற்பத்தி செய்து பள்ளித்
தொழிற்சாலைகளை நிறுவி வேலையாட்களையும்
உற்பத்தி செய்தது. இன்று அரைவேக்காடாக ஒரு
பாடப்பொருள், அதைத் திணிக்கும் இரக்கமற்ற
வகுப்பறை, ஹிட்லரின் சிறைகளைவிட
பலமடங்கு கொடிய அடக்குமுறை, ஆசிரியரும்
முரடு... பெற்றோரும் முரடு... கல்வியெனும்
பெருத்த பல்சக்கர இயந்திரம் நெறிக்க நெறிக்க
அதில் அழுந்தி நொறுங்கும் குழந்தைப் பருவம்
மதிப்பெண்களால் மட்டும் கணிக்கப்படுகிறது.
தன்னிச்சையாகச் சிந்திக்கும் அதிகாரம் அந்தக்
குழுந்தைக்குக் கிடையாது. மனப்பாட அறிவு
போதும். இஞ்சினியர் ஆகவேண்டும், டாக்டர்
ஆகவேண்டும், கலெக்டர் ஆகவேண்டும்... யாருமே
மனிதராக ஆக- கவிஞனாக- பேரறிஞனாக ஆக
விருப்பம்கொள்ள முடியாது. எதற்குமே நேரமின்றி-
பள்ளிநேரம் போக மீதிநேரம் அதே மதிப்பெண்களை
குறிவைத்து டியூஷன் போன்ற சித்திரவதைகள்
வேறு... இத்தனை ரூபாய் செலவு செய்தேன் என்று
சொல்லும் பெற்றோர் இருக்கிறார்கள். எத்தனை
நேரம் தன் குழந்தைகளுக்காகச் செலவு
செய்தார்கள் என கேட்க நாதி இல்லை.... ஒரு
தந்தையாக, தாயாக குழந்தை வளர்ப்பின் ஒருநாள்
மனசாட்சி உறுத்தல்தான் "ரோஸ்' கதை. இது
வெறும் உரையாடல்தான். ஒரு எழுத்தாளனாக
நான் அதில் குறுக்கிடவேயில்லை. மதுரையில்
அறிவியல் இயக்கம் அதை வீதி நாடகமாக நடத்தி
வருகிறது.''

உலக கல்வியாளர்கள் ஜான்ஹோல்டு,


பாவ்லோ பிரைரே உட்பட பலரை தமிழுக்கு
அறிமுகம் செய்திருப்பவர் நீங்கள். இன்றைய
தமிழகப் பள்ளிக் கல்வி முறையில்
தேவைப்படும் மாற்றங்கள் அல்லது மாற்றுக்
கல்விமுறை என்று எதை முன்வைப்பீர்கள்?

""பாவ்லோ பிரைரே சொல்வதைப்போல இன்றைய


கல்விமுறை வங்கிமுறைக் கல்வியை
அடிப்படையாகக் கொண்டது. ஆசிரியர்
என்பவரையும் மாணவர் என்பவரையும்
எதிர்எதிராக இது நிறுத்துகிறது. ஆசிரியருக்கு
எல்லாம் தெரியும்- மாணவருக்கு எதுவும்
தெரியாது. ஆசிரியர் தனக்கு முக்கியம் எனக்
கருதும் அறிவுச் செய்திகளைக் கூறுகளாக வெட்டி
மாணவனின் தலைக்குள் திணிக்கிறார். வங்கியில்
பணம் போடுவதைப் போல,‘கவனி... கவனி... என்ற
அதிகார வார்த்தை எட்டு மணி நேரம் பள்ளிகளை
ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்துகிறது.
ஸ்காண்டிநேவியாவையும், ஆப்பிரிக்க
ஊசியிலைக் காடுகளையும், ஓம்ஸ் விதியையும்,
தாகூர் கவிதையையும் வெறும் ஜடமாக
மனப்பாடம் செய்யும்ó ஒரு மாணவனுக்கு, தன்
சொந்த ஊரில் ஒரு உரத் தொழிற்சாலையில்
விஷவாயுக் கசிவு ஏற்பட்டால் எப்படித் தப்ப
வேண்டும் என்று தெரியாது. ஆசிரியனுக்கும் அது
தெரியாது. போபாலில் விஷ வாயுக் கசிவில்
இரண்டு லட்சம் பேர் இறந்தார்களே... ஒரு கர்சீப்பை
தண்ணீரில் நனைத்து மூக்கை சுற்றிக்
கொண்டிருந்தால் அவர்களில் 90 சதவிகிதம் பேர்
இறந்திருக்க மாட்டார்கள்... ஆனால் கல்வி அதைப்
போதிக்கவில்லை... அது போர்ஷனில் இல்லை...
ஞன்ற் ர்ச் டர்ழ்ற்ண்ர்ய்! சரி; இதற்கான மாற்று வழி
என்ன? அதற்கான மாற்று வழிதான் "வகுப்பறை
ஐனநாயகம்' என்கிறேன் நான்.

இந்த முறையில் மாணவரும் ஆசிரியரும் சேர்ந்து


ஒரு துருவம். எதைக் கற்கவேண்டுமோ அந்தப்
பாடப்பொருள் ஒரு துருவம். ஆசிரியர் என்பவர்
ஆசிரிய மாணவர் (பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் நற்ன்க்ங்ய்ற்).
மாணவர் என்பவர் மாணவ ஆசிரியர்
(கங்ஹழ்ய்ண்ய்ஞ் பங்ஹஸ்ரீட்ங்ழ்). அந்த இடத்தில்
வகுப்பறையில் மரண அமைதி நிலவாது;
குதூகலமான கூச்சலும் கூப்பாடும் இருக்கும்!
ஆசிரியர் பிரசங்கம் செய்ய மாணவர்கள் தங்கள்
தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவஸ்தைப்
பட வேண்டாம்... அவர்கள் அனைவருமாக சேர்ந்து,
பாடத்தை கலந்து ரையாடுவார்கள். தங்கள் முறை
வரும்போது அவரவர் தங்களது கருத்தைக்
கூறலாம். தேர்வு என்பது ஒரு ஞல்ண்ய்ண்ர்ய் டர்ப்ப்
போல உங்களுக்கே தெரியாமல் உங்களை அணுகி
உங்கள் அறிவுநிலை யைப் பரிசோதிக்க வேண்டும்.
உங்களுக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து
உங்களைக் கொண்டாடத்தான் தேர்வு. உங்களுக்கு
என்ன தெரியாது என்பதைக் கண்டுபிடித்து
அவமானப்படுத்தி மூச்சிரைக்க வைத்து
தற்கொலைக்குத் தூண்ட அல்ல தேர்வு.
தாய்மொழிக் கல்வி, குழந்தைகளை சமூக
ஆர்வலர்களாகவும், உலகளாவிய மேதாவி
களாகவும், எதிர்காலப் பேரறிஞர்களாகவும்
நடத்தும் கல்விமுறை தேவை. 'ஊ=ம்ஸ்ரீ2
சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?' என்று
கேட்கும் நம் முறை குழந்தைகளை மனப்பாடம்
செய்யும் இயந்திரங் களாகச் சுருக்கி விட்டது.
மாறாக 'ஊ=ம்ஸ்ரீ2 என்பதை விளங்கிக்
கொண்டிருப்பாய். அது பற்றி நீ என்ன
நினைக்கிறாய். அதை ஒப்புக்கொள்கிறாயா?' என்று
கேட்கும்போது, நாம் ஐன்ஸ்டினுக்கு எதிரில் -
அவருக்குச் சமமான ஒரு சிம்மாசம் போட்டு நமது
குழந்தையை உட்காரவைக்கும் அதிசயம்
நடப்பதைப் பார்க்கலாம். ஆசிரியன் என்பவன்
ஆற்றைக் கடந்து அக்கறையில் கொண்டுபோய்
சேர்க்கும் ஒரு பாலம். தான் இருப்பதையே
வெளிக்காட்டாமல் செயல்படும் பாலம். ஒரு
ஆசிரியனுக்கு தனது பாடத்தில் எவ்வளவு தெரியும்
என்பதைவிட, தன்னிடம் விடப்பட்ட
மாணவர்களுக்கு அந்தப் பாடத்தில் எவ்வளவு
விருப்பத்தை- ஈர்ப்பை ஏற்படுத்தத் தெரியும்
என்பதே முக்கியம். அங்கே குழந்தை உரிமை
மீறலே வகுப்பாக இல்லாமல் அதை
நிலைநாட்டுவதே பாடமாக இருக்கும். அங்கே
ஒவ்வொரு மாணவனுமே ஒவ்வொரு வகையில்
மிகமிக முக்கியம். எல்லாரும் ஒன்றல்ல.
அத்தகைய வகுப்பறையைத்தான் ஜான் ஹேல்ட்
முதல் பாவ்லோ பிரைரே வரை எல்லா மாற்றுக்
கல்வியாளர்களும் முன்வைக்கிறார்கள். இந்தக்
கல்வி முறையை விமர்சிப்பவர்களுக்கு அதன்
மாற்றுப் பாதையைக் காட்டத் தெரியாது என
பலரும் இன்று சொல்வது உண்மையல்ல. மேலே
குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையில்தான்
சர்வ-சிஷ்ய- அபியான் திட்டத்தின் செயல்முறைக்
கல்வி ஓரளவுக்கு இன்று அரசு
தொடக்கப்பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படத்
தொடங்கி உள்ளது. ஆசிரியர் அமைப்புகளைச்
சார்ந்தவர்கள் அதை எதிர்க்கத் தொடங்கியுள்ள ஒரு
சூழல் துரதிர்ஷ்டவசமானது.'' தமிழாசிரியர்களின்
அவல வாழ்க்கைச் சூழலையும், தமிழ் மொழியின்
துயரநிலையினையும் உங்களது "ஒரு
தூயமொழியின் துயரக் குழந்தைகள்' கதையில்
பதிவு செய்திருக்கிறீர்கள். தனியார் பள்ளிகள்,
ஆங்கிலவழிக் கல்வியை
சமூகமயமாக்கியிருப்பதன் மூலம், பொதுபுத்தியில்
நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், பிம்பங்கள் என்ன?

""ரொம்பவே சிந்திக்க வேண்டிய கேள்வி. நாம்


ஆங்கிலத்தைக் கைவிட முடியவில்லை.
நவீனமயமாக்கலை புறந்தள்ள முடிய வில்லை.
அறிவியல் வளர்ச்சி நமது கலாச்சாரத்தின்
குரல்வளையை நெறிப்பது உண்மைதான். ஆங்கில
மொழிப் பள்ளிகளே ஏற்பட்டு, உள்ளூர் மொழியின்
கடைசி பள்ளி மூடப்படுவதை ஒரு கதையாக
எழுதினார் கிவாதி வாங்கோ. ஆங்கிலம்
வேண்டாம்- அறிவியல் வேண்டாம் என்றால்
நீங்கள் மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வந்து
விடுவீர்கள். மலம் அள்ளி, சாக்கடை கழுவிய நம்
தோழர்களை சமூக விடுதலை இயக்கம்
மீட்டதைவிட பாம்பே கக்கூஸ், வெஸ்டன் டாய்லட்
போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம்
மீட்டதைக் காணலாம். அம்மி
ஆட்டுக்கல்லிலிருந்து பெண்ணை மீட்டு, சமையல்
சிறையிலிருந்து தொலைக்காட்சி நோக்கித்
திருப்பியதும் அதே அறிவியல்தான்; பெண்ணியம்
அல்ல!õ எனவே மேற்கத்திய அடையாளமாக
அறிவியல் என்பதை விமர்சிப்பதும் வளர்ச்சியை
எதிர்ப்பதும் நம்மைப் பிற்போக்கு இந்துத்வா
கோஷ்டிகளோடு சேர்த்துவிடும் அபாயம் உள்ளது!
வளர்ச்சி சார்ந்த அமெரிக்க ஆதிக்கத்தையும்,
சுற்றுச்சூழல் மீதான அதன் மூர்க்கமான
தாக்குதலையும் அறிவியல் இயக்கங்கள் வழியே
நின்று எதிர்க்கும் கடமை நமக்கு உள்ளது. அதே
சமயம், அந்த எதிர்ப்பு என்பது நமது மனுதர்மச்
சிந்தனையையும், நாம் மிகக் கடினப்பட்டு உதிர்த்த
பிற சாதிமத அடக்குமுறைகளையும், சதி உள்ளிட்ட
மூடப் பழக்கங்களையும் மீட்டுவிடக்கூடாது.

இன்று பொதுபுத்தி என்பது அமெரிக்கமயமாதலை


வெறித் தனமாகக் கடைப்பிடிக்கும் ஒன்றாக
இருக்கிறது. இந்த நர்சரி பள்ளிகளும் மெட்ரிக்
பள்ளிகளும் தாங்கள் ஏதோ மாண்டிசோரி
அம்மையாரின் வாரிசுகள்; அவரது கல்வி
முறைப்படி ஒரு கோடு கூட பிசகாமல்
மாணவர்களை வழிநடத்துபவர்கள் என்று கூறிக்
கொண்டு, அதையே காசாக்கித்
தொழிலதிபர்களாகத் தங்களை
ஆக்கிக்கொண்டுள்ளன. தமிழ்ச் சமூகம் இன்று
தமிழே தெரியாத ஒரு அவலமான சந்ததியை
வீட்டில் தமிழ் சோறுபோட்டு வளர்த்துக்
கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக, தமிழ் கட்டாயப்
பாடமாக ஆக்கப்பட வேண்டுமென
தமிழ்நாட்டிலேயே போராட வேண்டிய நிலை. ஒரு
விஷயத்தை எல்லாருமே மறந்து விட்டார்கள்.
மாண்டிசோரி அம்மையாருக்கும் ஆங்கிலத்திற்கும்
சம்பந்தமே கிடையாது. அவர் இத்தாலி மொழியைத்
தாய்மொழியாகக் கொண்டவர். அவர் தீவிர
‘தாய்மொழிக் கல்வி’ ஆதரவாளர். அவரது
கல்விமுறைப்படி தேர்வு என்பதே
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் வைக்க
முடியும்... ‘"ஹாய்...'‘ ‘"ஓ... மை... காட்...!' ‘"மே ஐ கம்
இன் மிஸ்' கலாச்சாரத்திற்கும் மாண்டிசோரி
அம்மையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனால் இருப்பதாகக் காட்டுவது என்பதுதான்
பெரிய மோசடி.

தமிழ் படித்தவர்களுக்கு வேலை தர நம்மால்


முடியவில்லை. இன்றைய கல்விச் சூழலில்
மாணவர்கள் தமிழ் ஆசிரியர்களுக்கு வணக்கம்
வைப்பதுகூட இல்லை. அவர்கள் அனுபவிக்கிற
அவமானங்கள் வெளியே சொல்ல முடியாதவை.
ஒரு மொழியின் காவலர்களான அவர்கள்
படும்பாடுகளைக் கண்ணுறும் ஒரு சந்ததி
அவர்களைப்போல ஆகிவிடக்கூடாது என்று முடிவு
செய்கிறது. தனது மகன் விவசாயி
ஆகிவிடக்கூடாது என "உயிரைக் கொடுத்தா வது'
காப்பாற்றும் இந்திய விவசாயியின் நிலை
தமிழாசிரியர் களுக்குமானது என்பதைப் பதிவு
செய்த ஒரு கதைதான் ‘"தூயமொழியின் துயரக்
குழந்தைகள்.' ''

நீங்கள் படைத்திருக்கும் "மலர் அல்ஜீப்ரா'


நாவலை நவீன தமிழ் இலக்கியச் சூழலில் புதிய
முயற்சியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒரு நாவல் வழியே கணிதத்தைக் கற்பிக்க
முடியும் என்பது சிலிர்ப்பூட்டக்கூடியது.
அபாக்கஸ் என்றும் சீனமுறை என்றும்,
மெண்டல் அர்த்திமெட்டிக் என்றும் தனியார்
நிறுவனங்கள் பெற்றோர்களிடம் பணம் பறித்து
வரும் நிலையில், இத்தகைய இறக்குமதிகள்
கணிதம் பயில்வதில் மாணவர்களுக்கு எந்த
அளவுக்கு ஊக்கியாக இருக்கின்றன அல்லது
இவை மாணவனுக்குச் சுமையா?

"" "மலர் அல்ஜீப்ரா' மட்டுமல்ல; நான் டீன் ஏஜ்


சிறுவர்களுக்கான கதை சொல்லியாக என்னை
முழுவதுமாக மாற்றிக் கொண்டேன். "இன்றைய
சிறுவர்- சிறுமியர் புத்தகம் படிப்பதே இல்லை!
வெறும் டி.வி.தான். கலாச்சாரம் கெட்டு விட்டது'
என்று கிட்டத்தட்ட எல்லா "பெரிசு'களுமே கூப்பாடு
போடுகின்றன. அப்படியே பையன் களும்
சிறுமியர்களும் படித்தாலும் ஆங்கிலப்
புத்தகங்களை "ஹாரி பாட்டர்' விதமான
புத்தகங்களைத்தான் படிக்கிறார்கள் என்று
சொல்கிறோம். சரி; அப்படி அவர்கள் படிப்பது என்று
முடிவு செய்து தமிழ்ப் பக்கம் வந்தால் அவர்களிடம்
தர உங்களிடம் புத்தகம் இருக்கிறதா? என்ன
புத்தகம்? மு.வ. கடிதங்களா? எதைக் கொடுப்பீர்கள்?
"ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி?', "உங்கள் மகனை
மகானாக்குங்கள்' வகையான சுய முன்னேற்ற
(அப்பா... எவ்வளவு பெரிய சித்திரவதை) புத்தகம்.
அல்லது அசோகர் வாழ்க்கை, அக்பர் மகாபுருஷர்,
பொய் சொல்லக்கூடாது வகையறாவாக வாழ்க்கை
வழிகாட்டிகள். அல்லது குழந்தைக்கு மகாபாரதம்,
ராமாயணம்! அடச்சே! டீன் ஏஜ் சிறுவர்களின்
அறிவுப்பசிக்கும் தேடலுக்கும் தீனிபோடும்
புத்தகங்கள்தான் இன்றைய தேவை. நான் பொது
வாசகனிடமிருந்து விடைபெறக்கூட தயாராக
இருக்கிறேன். பாரதி புத்தகாலயம் போன்ற
வெளியீட்டாளர்கள் எனக்கு இந்த வேளையில்
உற்ற துணையாக இருக்க முன்வந்திருப்பதும்
எனது ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

"மலர் அல்ஜீப்ரா', "நாகா', "பூஜ்யமாம் ஆண்டு', "ஒரு


தோழனும் மூன்று நண்பர்களும்', "சர்க்கஸ்
டாட்காம்' என என் பயணம் தொடர்கிறது. எனக்கு
கடிதங்கள் எழுதும் சிறுவர்கள் "சுட்டி விகடன்'
முதல் "துளிர்' வரை இருக்கிறார்கள்.
அவர்களுக்கான சஞ்சிகைகளில் மீண்டும் நான்
எழுதிக் கொண்டே இருக்கிறேன். இப்போது உங்கள்
கேள்வியின் இரண்டாம் பகுதிக்கு
வருகிறேன்.‘அபாக்கஸ்‘ எனும் பெயரில் நடப்பது
அப்பட்டமான வியாபாரம். எதையும் நுகர்வு
சரக்காக்கி விற்பது இந்த வணிகக் கலாச்சாரத்தின்
ஒரு அம்சம். சீனாவிற்குதான் அபாக்கஸ் தேவை.
நமது மரபு நினைவாற்றல் மரபு. குறள்
ஒப்பிப்பதுபோல பெருக்கல் வாய்ப்பாடுகளை
கடகடவென்று ஒப்பிக்கும் மரபு. ஆனால்
கால்குலேட்டர் வந்து அந்த மரபைக் கொன்று
விட்டது. நமக்கும் அபாக்கஸ் எனும் கருவிக்கும்
சம்பந்தம் கிடையாது. குழந்தைகளை மேலும்
பிழிந்தெடுக்கும்- காசு பண்ணும் யுத்தி. நமது
சிலேட்டும் பல்பமும் கோடு போட்டு வாய்ப்பாடு
எழுதுமே- அந்த முறையைக் கூட அது
நடுமூளையோடு (ஏனென்றால் அபாக்கஸ் வாதிகள்
இடதுமூளை, வலதுமூளை என்று ஏதேதோ புருடா
விடுகிறார்கள்) சம்பந்தப்பட்டது என
கூறிக்கொண்டு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம்
நம்மிடமே அதை, அது ஏதோ அமெரிக்காவில்
கண்டுபிடிக்கப் பட்டது போலாக்கி விற்றாலும்
வியப்பில்லை. அதையும் தற்பெருமையோடு ஒரு
அந்தஸ்தாகக் கருதி நமது மத்தியதர வர்க்கம்
தவணைமுறையில் பணம் கட்டி வாங்கிப்
பயனடையும்.

"மலர் அல்ஜீப்ரா' கதை பள்ளிச் சிறுவர்களுக்குத்


தமிழ் மரபு வழிக் கணிதத்தை அறிமுகம் செய்யும்-
செய்ய வைக்கும் ஒரு முயற்சி. பள்ளிச்சூழலில்
சிக்காமல் வீட்டு வேலை பார்க்கும் ஒரு சிறுமி,
கணிதப் பேராசிரியனை மனக்கணக்கில் தூக்கிச்
சாப்பிடும் உண்மை நிலையை உணர்த்த அந்த
சிறுமி முயற்சித்தது. பல இடங்களி லிருந்து
அதற்குக் கிடைத்த வரவேற்பும் பள்ளிக்கு
குழந்தைகள் காட்டிய "மலர் அல்ஜீப்ரா' பற்றும்
என்னை அவர்களுக்காக மேலும் எழுத ஒரு
தூண்டுகோலாக அமைந்தது.''
உங்களது "பூஜ்யமாம் ஆண்டு' நாவல்தான்
தமிழில் பார்வையற்ற குழந்தைகளும் படிக்கும்
வண்ணம் பிரைல் மொழியில் வெளிவந்த முதல்
முழுமையான நாவல். உலக அளவில் என்றுகூட
சொல்லலாம். அதுபற்றிக் கொஞ்சம்
கூறுங்களேன்.

"" "பூஜ்யமாம் ஆண்டு'’ ஒரு அறிவியல் புனைகதை


வகையைச் சார்ந்தது. இந்திய அரசு தான் சந்திரனில்
கால் பதிக்க அனுப்பப்போகும் முதல் இந்தியரைத்
தேர்வு செய்ய, பள்ளிக்கூட மாணவர்களிடையே
ஒரு பல்துறைப் போட்டியை நடத்துகிறது. அதில்
கலந்துகொள்ளும் பல ஆயிரம் அணிகளில் ஒரு
அணி வித்தியாசமானது. அதில் மூன்று ஒன்பதாம்
வகுப்பு மாணவர்கள். கண்பார்வை அற்ற கலீல்,
பேச்சுத்திறன் இல்லாத ஹாக்கிங், காது கேளாத
எடி. இவர்களது சுயதிறமை அவர்களைப்
போட்டியின் இறுதிச் சுற்றுவரை கொண்டு
சென்றுவிடுகிறது. இது மட்டுமே அல்ல கதை.
இதை பார்வையற்ற குழந்தைகள், பெரியவர்கள்
படிக்கும் வண்ணம் பிரைல் மொழியில்
முழுநாவலாகக் கொண்டு வர பாரதி புத்தகாலயம்
முடிவு செய்தது. நமது தமிழகத்தில் மட்டு மல்ல;
இந்தியாவில் பார்வையற்றவர்கள் கோவில், சர்ச்
வாசலில் பிச்சை எடுப்பவர்களாகவும், தலைவர்
பிறந்தநாளில் சாப்பாடு போட்டு போட்டோ எடுத்துக்
கொள்ளவும் தவிர வேறு உரிமைகள் அனைத்தும்
மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இந்திய மக்கள்
தொகை கணக்கெடுப்பின்போதுகூட,
பார்வையற்றவர்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு
இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம். உலகப்
பார்வையற்றோரின் மொத்தத் தொகையில்
பாதிபேர் இந்தியா விலும் ஆசிய-பசிபிக்
பிராந்தியத்திலும் உள்ளதாக ஐ.நா. சபை அறிக்கை
சொல்கிறது. பார்வையற்றவர்கள் அமெரிக்கா,
கனடா, சீனா ஆகிய நாடுகளில் ராணுவத்தில்கூட
பணிபுரிகிறார்கள். இங்கோ ஒரு பார்வையற்ற
மாணவன் எவ்வளவு படித்தாலும் பொறியியல்
அல்லது மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய
முடியாது. இப்படி இங்கே நிலைமை. "பூஜ்யமாம்
ஆண்டு' போல அறிவியல் நூல்களை பிரைலில்
கொண்டு வருவதன் மூலம் இந்த நிலையைப்
போக்க முடியும். பார்வையற்றவர்களில்
பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது உரிமைக்காகப் போராட சங்கங்களும்
உள்ளது. அவர்களது உரிமைகளைக்கூட
போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது
என்பதே எவ்வளவு பெரிய அவலம்!''

அறிவியல் கல்வி என்பது ஒரு சமூகத்தின்


மனிதவள கட்டு மானத்துடன் கொண்டிருக்கும்
அரசியல் தொடர்பு எத்தகையது?
தாய்மொழியில் அறிவியல் கல்வியைப்
பயில்வதன் மூலம் அறிவியலில் நாம்
முன்னேறிச் செல்ல முடியாதா?

""ஐந்தாம் வகுப்பு வரையிலாவது அறிவியல்,


கணிதம், மொழிப்பாடத்தை தாய்மொழியில்
மட்டுமே போதிப்பது மிகவும் அவசியம். அது
இல்லாமல் போனதால்தான் சர்.சி.வி. ராமனுக்குப்
பிறகு பெரிய அறிவியல் சாதனையாளர் யாரையும்
நம்மால் உருவாக்க முடியவில்லை. டாக்டர்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இருக்கி றாரே என்று
நீங்கள் சொன்னால், அவரும் தாய்மொழியில்தான்
படித்தார் என்று நான் சொல்வேன்.''

உங்களின் "தொலைப்புச் செய்திகள்'


சுற்றுச்சூழல் மீதான எச்சரிக்கை மணியாக
ஒலிக்கிறது. சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளை
முற்றாகப் புறக்கணிக்கும் ஊடகங்கள், இயற்கை
விவசாயம்மீது நாட்டம் கொள்ளாத நம்
விவசாயிகள்- இவர்களுக்கு நீங்கள் தரும்
செய்தி என்ன?

""உலகமயமாதல் எனும் பெரும் பூதம்


விவசாயத்தைக் கூறுபோட்டு தன் அகோரப் பசிக்கு
இரையாக்கிவிட்டது. ஒன்றரை கோடி விவசாயிகள்
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டிருக்
கிறார்கள். இவை அனைத்துமே கொலைகள்தான்.
ஒரு விவசாய கிராமத்தைப் பாதிக்கும் விதத்தில்
அங்கே ஒரு தொழிற்சாலை கட்டப்படும்போது
ஏற்படும் பேரழிவை என் "தொலைப்புச் செய்திகள்'
ஒரு கவிதைக் காவியமாக முன்வைத்தது.
சுற்றுக்சூழல் ஒரு தேர்தல் பிரச்சினையாக பல
நாடுகளில் முன்வைக்கப்படும் போது, குறைந்த
பட்சம் ஒரு சாலை விபத்து பெறும் முக்கியத்
துவத்தைக்கூட இங்கே அது பெறுவது கிடையாது.
வேதி உரங்கள் ஒரு நிமிடத்திற்கு ஆறுபேரை
சத்தமின்றிக் கொல்வதை பேசாமல் பார்த்துக்
கொண்டு இருக்கிறோம். கியூபாவிலும் சிலியிலும்
விவசாயம் என்பது அரசு வேலை. இங்கே அது
பெரிய தண்டனை யாக - விவசாயியின் தோள்மீது
ஒரு சிலுவையாகச் சுமத்தப்பட் டுள்ளது.
அரசியல்வாதிகளோ வெறும் உதவித்தொகை-
வாக்குறுதிகளோடு டஹஸ்ரீந்ஹஞ்ங்ள் வலம்
வருகிறார்கள். மூன்றாம் உலக நாடுகளின்
விவசாய உற்பத்தியைத் திட்டமிட்டு அழித்துவிட்டு,
தங்கள் நாட்டு உணவுப் பொருட்களை விற்றுத்
தீர்க்கும் சந்தை களாக, வளர்ந்த நாடுகள்
பட்டவர்த்தனமாக நம்மை களபலியாக்கி வரும்
ஒரு கொடிய கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
பொருளாதாரத்தில் மூன்று மண்டலங்கள்
(நங்ஸ்ரீற்ர்ழ்ள்) இருக்கின்றன. முதலாவது
விவசாயத்துறை (ஹஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப்
நங்ஸ்ரீற்ர்ழ்). அடுத்தது அந்த விவசாயத்திற்கான
பயன்பாட்டுப் பொருட்களைச் செய்து தரும்
தொழிற்துறை (ண்ய்க்ன்ள்ற்ழ்ண்ஹப் நங்ஸ்ரீற்ர்ழ்).
இந்த இருவருக்கும் உதவிட சேவைத்துறை
(நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் நங்ஸ்ரீற்ர்ழ்ள்). இன்று எல்லாருமே
சேவைத் துறையைக் குறிவைத்து கல்வி
கற்கிறார்கள். இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
விரைவில் காலை உணவுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய்
நோட்டை தண்ணீரில் கரைத்துத் தின்று, மதியம்
மூன்று ஐந்நூறு ரூபாய் நோட்டையும், இரவில்
மேலும் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டையும்
கரைத்துக் குடிக்கும் நிலை வரப்போகிறது. இதுதான்
நான் சொல்ல விரும்பும் செய்தி. விவசாய நாடான
இந்தியா கல்வித்துறையை விவசாயம் சார்ந்ததாக
மாற்ற வேண்டும். காலாண்டு, அரையாண்டு
விடுமுறை விடாமல் விதைப்புக்கும்
அறுவடைக்கும் விடுமுறை விடவேண்டும்.
குழந்தைகளிடம் விவசாயத்தின்
முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்.''

நைஜீரியாவின் இக்போ இன மக்களின் இன


விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய
"டெஸ்டினேஷன் பயாஃப்ரா'வை தமிழில்
மொழிபெயர்த்திருக்கும் நீங்கள், நாற்பதாண்டு
ஈழ விடுதலை யுத்தத்தை எப்படிப்
பார்க்கிறீர்கள்? இக்போ இன மக்களின் யுத்தம்
தோல்வியடைந்து அவர்கள் அழித்தொழிக்கப்
பட்டது போன்ற நிலை ஈழப்போராட்டக்
களத்துக்கும் ஏற்படுமா?

""நைஜீரிய பெண் எழுத்தாளர் புச்சியெமசெட்டா


இக்போ இனம் தனது சுயநிர்ணய உரிமைக்காகப்
போராடி பயாஃப்ரா எனும் தனிநாட்டை ஏற்படுத்தப்
போராடியதை வரலாறாக அப்படியே எழுதியவர்.
மொழிபெயர்ப்பு பெரிய பணி. அவ் விஷயத்தில்
திசையெட்டும் இதழோடு இணைந்து வேலை
செய்கிறேன். இப்போது கேள்விக்குள்.

நமது இலங்கைத் தமிழர் போராட்டமும் இக்போ


இனப் போராட்டம் போன்றதுதான். பயாஃப்ரா எனும்
நாடு ஏற்படாமல், உள்ளே தலையிட்டு இங்கிலாந்து
குழப்பியது. ஈழ விவகாரமும் அதே போன்றதுதான்.
ஒரு நாற்பது ஆண்டுகளாக அப்பாவி மக்களை- தன்
சொந்த பிரஜைகளைக் கொன்று குவிக்கும் உலகின்
ஒரே ஜனநாயக அரசு இலங்கை சிங்கள அரசுதான்.
போர் நிறுத்தம் இருதரப்பினருக்கும் உடனே
அமுல்படுத்த வேண்டிய ஒன்று என்பதிலும்
யாருக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை.
ஆனால் இக்போ இன போராட்டத்திற்கும் ஈழப்
போராட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது
146 நாட்கள் நடந்தது. இது நாற்பது வருடங்களாக
நடப்பது. அயல்நாடுகளில் - குறிப்பாக பாரீசில்,
கனடாவில், நியூயார்க்கில், ஆஸ்திரேலியாவில்
ஈழப் போராட்ட ஆதரவு பெருகி வருவதும்
நம்பிக்கை தருகிறது. ஒரு சுயநிர்ணய
போராட்டத்திற்கு வருட அவகாசம் கிடையாது. ஏழு
சந்ததிகளாக நடக்கும் தேசிய இனப் போராட்டமான
பாலஸ்தீனம் இல்லையா? அதுபோலத்தான்.''

இப்போது "புத்தகம் பேசுது' இதழின் ஆசிரியராக


இருக்கிறீர்கள். இதில் உங்கள் பங்களிப்பு என்ன?

""மிகமிக சொற்பம். அது ஒரு கூட்டு முயற்சி.


தோழர்கள், சக எழுத்தாளர்கள் பணியே
பெரும்பகுதி.''

உங்களது கதைகள் மாற்று சினிமாக்களாக


எடுக்கப்பட் டுள்ளன. "ஆயிஷா'வை
சிவக்குமாரும், "மதி'யை எடிட்டர் லெனினும்
குறும்படங்களாக எடுத்துள்ளார்கள். "ரத்தத்தின்
வண்ணத்தில்' முழுப்படமாகியுள்ளது. அது
குறித்து நீங்கள் எதுவும் பேசுவதில்லையே...

""ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன்.


சினிமாவின்மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை.
ஆனால் பலம் வாய்ந்த ஒரு ஊடகமாக அது
இருப்பதால் எனக்கு அதன்மீது பயம் கலந்த
மரியாதை உண்டு. என்னால் ஏனோ அதில் ஈடுபட
முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு
போய்' கதையை வாசித்தபோது ஏற்பட்ட ஒரு
உணர்வு, உள்ளப் பதைப்பு "பூ' படம் பார்த்தபோது
ஏற்படவில்லை. ண & ஆ நாவல் வாசித்தபோது
ஏற்பட்ட அந்த உள்ளப் பூரிப்பு- ஒருவிதமான
அனுபவம் "ஸ்லம்டாக் மில்லினர்' படம்
பார்த்தபோது ஏற்படவில்லை. ஒரு வாசகனாக நான்
கதையோடும் எழுத்தோடும் தனிப்பட்ட உறவு
கொள்கிறேன். ஒரு தியேட்டரில் நான் என்னை
பத்தோடு பதினொன்றாக உணர்ந்து ஒருவிதத்தில்
தரக்குறைவு அடைவதாக நினைக்கிறேன். ஆனால்
எனக்கு என் கதை மாந்தர்கள் திரையில்
உலாவும்போது ஈடுபாட்டைவிட பிரமிப்பே
ஏற்படுகிறது. நான் ஏதாவது சொல்லிவிட்டால்
எனது தீவிர வாசகர்களான அவர்களை ஏதாவது
பாதித்து விடுவேனோ என பயப்படுகிறேன். ஆனால்
கேரளத்தின் ஓடேசா போன்றதொரு சினிமா
இயக்கம் இங்கேயும் வரவேண்டும் என்பதில்
ஆர்வம் உள்ளவன். தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் வழியே வந்த எங்களைப் போன்ற
எழுத்தாளர்களைவிட, தமிழ்நாடு நடிகர் சங்கம்
வழியே த.மு.எ.ச.விற்கு வந்த சினிமா
கலைஞர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்
என்றே நான் கருதுகிறேன். இறந்துகொண் டிருக்கும்
கிராமியக் கலைகளையும் சேர்த்துக் காப்பாற்றும்
ஒரு பெரும்பணி நமக்குள்ளதை நாம் மறந்துவிடக்
கூடாது. மற்றபடி ஊடகங்களை எப்படி அணுக
வேண்டுமென்பதை குழந்தைகளுக்கு
விமர்சனப்பூர்வமாக கற்றுத்தர வேண்டியுள்ளது.''

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

""பாவ்லோ ஷீலோ (ஸ்பானிஷ்) எழுதிய "ரஸவாதி'


நாவலை தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன்.
கூடவே சிறுவர்களுக்கான அடுத்த நாவல்
"விஞ்ஞானக் கிறுக்கன்' தயாராகிறது.''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்


* Indicates mandatory fields
Name * :

Email Id * :
Loading...

Left: Press
Ctrl+g to toggle between English and
Tamil

Comment
:
*(500)
கருத்துக்கள்(2)
Date & 11/21/2010
Name : muthukarthi :
Time 12:41:20 PM
-------------------------------------------------------------------
----------------------------------
welcome sir ...
-------------------------------------------------------------------
----------------------------------
R.K.Thirupathi Date & 5/4/2009 4:42:31
Name : :
Rangan Time PM
-------------------------------------------------------------------
----------------------------------
Padippathargu Porumai வேண்டும். Nandraga
உள்ளது. Veeri குட் Thanking You R.K.Thirupathi
Rangan Social Worker
-------------------------------------------------------------------
----------------------------------
Home | About us | Register | How To Subscribe | Free Newsletter | Font Help | Ad Tariff | Faq |
Contact | RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.

You might also like