You are on page 1of 3

எங்கள் ஊர் சந்தை கட்டுரை

குறிப்பு சட்டகம்

 முன்னுரை
 சந்தையின் முக்கியத்துவம்
 கட்டமைப்பு மற்றும் செயல்பாடு
 சமூக மற்றும் கலாச்சாரத்தை பேணுதல்
 பொருளாதார விருத்தி
 முடிவுரை

முன்னுரை

எங்கள் ஊரில் பணச் சந்தை, பங்குச் சந்தை என பல்வேறு வகையான


சந்தைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் எமக்கு தேவையான
பொருட்களை வாங்குபவர்கள் அதிகமாக ஒன்றிணையும் ஓர்
இடமாகவே எங்கள் ஊர் சந்தை காணப்படுகின்றது.

எங்கள் ஊரின் பெருமையினை எடுத்தியம்பக்கூடியதொரு இடமாகவும்


எங்கள் சந்தையே காணப்படுகின்றது.

சந்தையின் முக்கியத்துவம்

எங்கள் ஊர் சந்தையில் எண்ணிலடங்காத பொருட்கள்


காணப்படுகின்றன. அதாவது பழங்கள் முதல் வீட்டிற்கு தேவையான
அனைத்து விதமான சமையல் பொருட்களையும் பெற்றுக் கொள்ளக்
கூடியதொரு இடமாக எங்களது சந்தை திகழ்கின்றது.

மேலும் வாங்குபவர்களுடைய தேவையை பூர்த்தி செய்வதில் சிறந்து


விளங்குகின்றது. அத்தோடு எங்களது சந்தையில் உள்ள
பொருட்களானவை சிறந்த தரத்தினை உடையதாகவே
காணப்படுவதானது எங்களுடைய சந்தையின் முக்கியத்துவத்தினை
எடுத்தியம்புகின்றது.

கட்டமைப்பு மற்றும் செயல்பாடு


எங்களது சந்தையானது ஒவ்வொரு குறிப்பிட்ட பொருட்களுக்கு ஏற்றாற்
போல் பிரிக்கப்பட்டு காணப்படுகின்றது.

அதாவது பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கால் நடைகள், கைவினைப்


பொருட்கள் என காணப்படுகின்றதோடு விவசாயிகள் மற்றும்
கைவினைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் கூடியதொரு
இடமாகவும் எங்கள் ஊர் சந்தையானது திகழ்கின்றது. உள்ளூர்
பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கக்கூடியதாகவே
காணப்படுகின்றது.

சமூக மற்றும் கலாச்சாரத்தை பேணுதல்

எங்களது ஊர் சந்தையானது சமூக மற்றும் கலாச்சாரத்தின்


மையமாகவே தொழிற்படுகின்றது. ஏனெனில் மக்கள் கூடுவதற்கான
இடமாகவும் தங்களுடைய சமூக உறவுகளை பேணுவதற்கானதோர்
இடமாகவும் எங்கள் சந்தை திகழ்கின்றது.

எங்களது சமூகத்தின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை முறையாக


பிரதிபலித்து காட்டும் கண்ணாடியாகவும் காணப்படுகின்றமை
சிறப்பிற்குரியதாகும்.

மேலும் எங்களது சந்தையில் பெருவாரியாக பாரம்பரிய கலை மற்றும்


கைவினைப் பொருட்கள், உள்ளூர் உணவுகள் போன்ற கலாச்சார
கூறுகள் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதொரு
சந்தையாகவே காணப்படுகின்றது.

அத்தோடு எங்களது ஊரின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்


பெருமித உணர்வையும் ஏற்படுத்துகின்றன.

பொருளாதார விருத்தி

பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் பாரியதொரு செல்வாக்கினை


உடையதாகவே எங்களது ஊர்ச் சந்தை காணப்படுகின்றது.

அதாவது உள்நாட்டு உற்பத்திகள் மூலம் நாட்டின் பொருளாதார


வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாக அமைந்துள்ளது.
மேலும் அருகிலுள்ள வேறு நகர்ப்புற மையங்களில் கிடைக்காத
பொருட்கள் மற்றும் சேவைகளையும் வழங்குவதினூடாக பொருளாதார
ரீதியில் முன்னேற்றம் கண்டே வருகின்றது.

அதேபோன்று தங்கள் வணிக திறன்கள் மற்றும் வாய்ப்புக்களை


வழங்குவதிலும், தொழில் முனைவோரின் மனப்பான்மையை
வளர்ப்பதிலும் எங்கள் ஊர் சந்தையானது சிறப்புப் பெற்றே
திகழ்கின்றது.

முடிவுரை

ஓர் நம்பிக்கைக்குரியதொரு எதிர்காலத்தை வழங்கும் இடமாகவே


சந்தைகள் காணப்படுகின்றது.

அந்த வகையில் நவீனமயமாக்கலின் காரணமாக சந்தைகளானவை பல


சவால்களை எதிர் கொண்ட போதிலும் இன்றும் பொருளாதாரத்தை
வளர்ப்பதிலும் சமூக கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும்
எங்களது ஊர்ச் சந்தை திகழ்கின்றது என்பது சிறப்பிற்குரியதாகும்.

You might also like