You are on page 1of 5

பொதுப் பண்டம்

பொதுப் பண்டம் அல்லது பொதுச் சொத்து என்பது போட்டியற்ற, யாருக்கும்


விலக்கல் அல்லாத பண்டம். ஒருவர் பொதுப் பண்டத்தை நுகர்வதன் மூலம்
அந்தச் சொத்து குறையாமலும், ஒருவரும் அந்தப் பண்டத்தை நுகர்வதில்
இருந்து விலக்கப்படாமலும் உள்ள பண்டம். நாளாந்த வாழ்வில் பொதுப்
பண்டம் ஒன்று இல்லை என்றாலும், இந்தப் பண்புகளை நெருங்கி வரும்
பண்டங்களை இவ்வாறு கூறுவர்.

மனிதர்கள் சுவாசிக்கும் காற்று, கட்டற்ற மென்பொருள், விக்கிப்பீடியா


ஆகியவை.

மூலதனப்பண்டங்கள்

பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ


சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும் பண்டங்கள்
மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும். உற்பத்திச் செயற்பாட்டுக்குப்
பயன்படும் மூன்று வகைப் பண்டங்களில் இதுவும் ஒன்று. நிலம், உழைப்பு
என்பன ஏனைய இரண்டும் ஆகும். இம்மூன்றையும் ஒருங்கே முதன்மை
உற்பத்திக் காரணிகள் என்றும் குறிப்பிடுவது உண்டு. இந்த வகைபிரிப்பு முறை
செந்நெறிப் பொருளியற் காலத்தில் உருவாகி இன்றுவரை முக்கியமான
வகைப்பாடாக இருந்து வருகிறது.

ஒரு சமூகத்தில், உற்பத்திச் சாதனங்களில் முதலீடு செய்யக்கூடிய வகையில்


செல்வத்தைச் சேமிப்பதன் மூலம் மூலதனப் பண்டங்கள் பெறப்படுகின்றன.
பொருளியலில், மூலதனப் பண்டங்களை தொடுபுலனாகுபவை (tangible) எனக்
கருதலாம். இவை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பிற பண்டங்களையும்,
சேவைகளையும் உருவாக்கப் பயன்படுகின்றன. விற்பனைக்காகப்
பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் இயந்திரங்கள், கருவிகள்,
கட்டிடங்கள், கணினிகள் போன்றவை மூலதனப் பண்டங்கள்.
தனிப்பட்டவர்களோ, குடும்பத்தினரோ, நிறுவனங்களோ, அரசுகளோ மூலதனப்
பண்டங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம்.

இலவசப்பண்டம்
இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடைப்பருமையற்ற
பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை
பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும்,
நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு
பூச்சியமாகும்.

உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள்,


சிந்தனைகள்

கொள்வனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய


விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப்
பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள்
உபயோகப்பட்டிருக்கும்.

இலவசப்பண்டமாக இருப்பவை கிடைப்பருமை காரணமாக பொருளாதார


பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.

ஆடம்பரப்பண்டங்கள

ஆடம்பரப்பண்டங்கள் எனப்படுபவை பொருளியலின்படி மக்களின் வருமான


அதிகரிப்புடன் கேள்வி அதிகரிப்பு ஏற்படுகின்ற வகையைச் சார்ந்த பண்டங்கள்
ஆகும். இவை அவசியமான பண்டம், இழிவுப்பண்டம் ஆகியற்றிலிருந்து
மாறான நடத்தையைக் காண்பிக்கும். ஆடம்பரப் பண்டமானது உயர்
வருமானக்கேள்வி நெகிழ்ச்சியினைக் காண்பிக்கும். இவ் வகையான
பண்டங்கள் மக்களின் அந்தஸ்து, கௌரவம், உயர் வருமானம் ஆகியவற்றை
விளம்புகின்ற சின்னமாகக் கருதப்படும். மக்களின் வருமான மட்டம்
அதிகரிக்கும்போது ஆடம்பரப்பண்டங்களுக்கான் கேள்வியும் அதிகரிக்கும்.
எனினும் வேறுபட்ட வருமான மட்டங்களில் இவை அவசியப்பண்டமாகவோ
அல்லது இழிவுப்பண்டமாகவோ மாற்றமடையலாம். அதாவது
மேலைத்தேசங்களில் தொலைக்காட்சியானது அவசியப்பண்டமாகக்
காணப்படும் அதே சமயத்தில் கீ ழைத்தேசத்தில் அவை ஆடம்பரப்பண்டமாகக்
கருதப்படும். உ-ம் :தங்கநகைகள், சொகுசுவாகனங்கள்

இழிவுப்பண்டம்
பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம்
பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள்
பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.

உ+ம்: பீடி,போலிநகை

தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும்


அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி
குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும்
அடையும்.ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக்
காண்பிக்கும்.

கிப்பன் பண்டம்

ஒரு பொருளின் விற்பனை விலை ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு


மாறாக அதன் நுகர்வளவும் கூடுமானால் அப்பண்டத்தைக் கிப்பன் பண்டம்
(Giffen good) என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போது
மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு மாற்றுப் பண்டத்தை வாங்கத்
தொடங்குவர். அவ்வாறில்லாமல், மக்களின் நுகர்திறன் குன்றும்போது கிப்பன்
பண்டங்களின் விலை ஏறிக்கொண்டிருந்தாலும்கூட இருப்பதில்
மலிவானவையாக இருப்பதால் அவர்களின் வரும்படியில் அவற்றையே
வாங்க முடிகிறது.

கிப்பன் விளைவு

பொதுவாக, விலை நெகிழ்திறன் (price elasticity) நுகர்தேவையுடன் (demand)


எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன்
பண்டங்கள் நேர் விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச்
சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர்[1] இராபர்ட்டு கிப்பன்
என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ்
("பொருளியல் கோட்பாடுகள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார்.[2] கிப்பனின்
நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும்
இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள்


ஒரு பண்டத்தின்மீ து கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று
நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்திருக்க வேண்டும்.
1. அப்பண்டம் ஒரு மலிவான இழிவுப் பண்டமாக இருத்தல் வேண்டும்.
2. அப்பண்டத்தின் பயன்பாட்டை ஒட்டிய மாற்றுப் பண்டங்கள்
இல்லாமலிருக்க வேண்டும்.
3. மேலும், வாங்குநரின் வருவாயின் பெரும்பகுதி செலவு தெரிவு
செய்யப்பட்டுள்ள பண்டத்தில் இருக்க வேண்டும்.

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம்

இணைப்புப்பண்டம் அல்லது நிரப்பிப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி


தனித்தல்லாது இன்னொரு பண்டத்துடன் இணைத்து நுகரப்படும்
பண்டமாகும்.

பண்டங்கள் அ, ஆ ஆனது இணைப்புப்பண்டங்களாயின், அ வினது நுகர்வு


அதிகரிக்க பண்டம் ;;ஆ வின் நுகர்வும் இணைந்து அதிகரிக்கும்.

உ-ம்: கமரா - பிலிம்ரோல், துவக்கு - தோட்டா, கார்பயணம் - பெற்றொல்

வலக்கால் சப்பாத்து மற்றும் இடக்கால் சப்பாத்துக்கள் முழுமையான


இணைப்புப்பண்டதிற்கு உதாரணமாகும். பிரதியீட்டுப்பண்டமானது
இணைப்புப்பண்டதிற்கு எதிர்நடத்தையினைக் காண்பிக்கும்.

பிரதியீட்டுப் பண்டம்

பிரதியீட்டுப் பண்டம் எனப்படுவது பொருளியலின்படி ஒரு பண்டத்திற்குப்


பதிலீடாக நுகரப்படக்கூடிய வேறொரு பண்டமாகும்.

இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும்


அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும்.
இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும்,
வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும்.

இவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு


ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயட்
ீ டுப்பண்டத்தின்
கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன்
பிரதீயட்
ீ டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.
எ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்

இணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்

You might also like