You are on page 1of 1

சைவசித்தாந்த மேல்நிலை வகுப்பு

மதுரை மையம்
பயிற்சி வினாக்கள் -1

I சரியா தவறா
1. ‘நாடி’ என்பது அனுமான அளவையையும் ‘கண்டு’ என்பது
அனுபூதியையும் குறித்து நிற்பது.
2. சிறப்புப் பாயிரத்தில் ஞாயிறு சிவத்துக்கு உவமையாகக்
காட்டப்பட்டுள்ளது.
3. ஆகமங்களின் பொருளொருமை உணர்த்துவதற்கு எழுந்தது
சிவஞானபோத நூல்.
4. சிவாகமங்கள் பரஞானமாகும்.
5. சிவஞானபோதம் ரௌரவ ஆகமத்தின் எழுந்த நூல்.
6. நல்லார் புனைவரே என்பது சாதன இயல் சுட்டுவது.
7. தம்மை உடையானுக்குப் பரிணாமம் கூறுபவர் சாங்கியர்கள்.
8. பசு பாசங்கள் சித்சத்தியின் பரிணாமமே என்று கூறுபவர் சிவாத்துவித
சைவர்.

II பொருள் தருக:
1. ‘அருந்துயர் குரம்பையின் ஆன்மா நாடி’
2. ‘ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளின் கண்டு’
3. ‘காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறு போல’
4. யாப்பு
5. இல்லார்
6. நல்லார்
7. தன் உணர்வார்
8. புறன் - இரட்டுற மொழிக.

III சுருக்கமான விடை தருக.


1. பொதுவியல்பாகிய முன்னாறு சூத்திரங்களையும் சிறப்பியல்பாகிய
பின்னாறு சூத்திரங்களையும் குறிக்கும் சிறப்புப் பாயிர சொற்களை
எடுத்துரைக்க.
2. பொதுவியல்பு அளவை முகத்தானும் இலக்கண முகத்தானும் கேட்டல்
சிந்தித்தல் என்னும் இரு திறத்தான் அறியப்படும் எனின், சிறப்பியல்பு
எவ்வகையில் அறியப்படும்?
3. எத்தன்மைத்தாகிய அதிகாரிக்குச் சிவஞானபோத நூல் உணர்த்தப்பட
வேண்டும் என்று முனிவர் கூறுகிறார்?
4. சிறப்புப் பாயிர இலக்கணப் பொருத்தத்தை எழுதுக.
5. மூவகை வாழ்த்துகள் யாவை? சிவஞானபோத மங்கல வாழ்த்து
எவ்வகைச் சார்ந்தது?
6. மங்கல வாழ்த்தில் கூறப்பட்ட ‘அருளிய’ என்பதை வினைஎச்சமாகக்
கொண்டு விவரிக்க.
7. மூன்றாம் நான்காம் நூற்பாக்களின் தொடர்பை மங்கலவாழ்த்து வழிக்
கூறுக.
8. ‘தம்மை உணரார்’ பற்றி முனிவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து
எழுதுக.

You might also like