You are on page 1of 24

திருக்குறள்

அன்புடைமை
இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. இது அகத்தே உணரப்படும்
மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. இவ்வதிகாரம் தொடக்கத்துத் தொடர்புடையார்
அன்பைப் பேசுகிறது. அதாவது இல்லத்திலுள்ளோரிடம் அன்பு செலுத்துவது பற்றியும் அன்பு
காட்டாவிட்டால் உண்டாகும் குற்றங்கள் பற்றியும் கூறுகிறது.முதற்குறடபா அன்பின் வெளிப்பாடு
பற்றிக் கூறுகின்றது. இரண்டு முதல் ஆறு வரையுள்ள குறட்பாக்கள் அன்பின் இயல்பையும்
சிறப்பையும் கூறுவன. அன்பின்மையின் கொடுமையையும் இழிவையும் கடைசி நான்கு பாக்கள்
குறிக்கின்றன. அருள் பிறத்தற்கும் அன்பே காரணமாகும் என்பதையும் சுட்டிச் செல்கிறது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

• அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்பாள்


உண்டோ? அன்புடையார்க்கு ஏற்பட்ட துன்பம் கண்டவிடத்துத்
தம்மையறியாமல் வெளிப்படும் சிறு கண்ணீரே அன்பைத்
தெரியப்படுத்திவிடும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

• அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக்


கொண்டு வாழ்வர், அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வர்
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு,


அன்போடு பொருந்திவாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு

• அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்:


அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற
சிறப்பைத் தரும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

• உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர்


அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று
அறிந்தோர் கூறுவர்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

• அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று


கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக
நிற்கின்றது.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

• எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து


வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

• அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற


பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

• அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து


உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

• அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்;


அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த
வெற்றுடம்பே ஆகும்.
KURAL 71- https://youtu.be/srtwjfgnxag
KURAL 72- https://youtu.be/rzAD1MvQ1wI
KURAL 73- https://youtu.be/yyPR5Nb27ik
KURAL 74- https://youtu.be/_GxFfWXPY64
KURAL 75- https://youtu.be/OL102z-tlmY
KURAL 76- https://youtu.be/tv6o3cHO8Ik
KURAL 77- https://youtu.be/KqS7J1-yCJU
KURAL 78- https://youtu.be/7GNUa2II6ng
KURAL 79- https://youtu.be/ULtSVsBuB8E
KURAL 80- https://youtu.be/QEwD44AehKc
நன்றி
-சன்மிகா.அ

You might also like