You are on page 1of 25

குப்புச்சியும்

கோழிகளும்
-கோ.புண்ணியவான்
ஆசிரியர் கல்விக் கழகம்
ஈப்போ வளாகம், ஊளு கிந்தா, பேரா
தலைப்பு:
சிறுகதைத் திறனாய்வு

விரிவுரைஞர் பெயர்: திரு.செ.மோகன் குமார்


எழுத்தாளர்:
கோ.புண்ணியவான் 1946
படைப்பாற்றல் : சிறுகதைக் கட்டுரை,
புதுக்கவிதை
கெடா மாநிலத்தின் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் தலைவர்.
சிறுகதைத் தொகுப்புகள் :
நிஜம் 1999
சிறை 2005
நிறம்
பெற்ற விருதுகள்
விருது வருடம்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2001
ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது
மலாயாப் பல்கலைக் கழகத்தின் -
பேரவைக் கதைகள் பலமுறை பரிசுகள்.
மலேசிய ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் 2002
வானவில் நடத்திய சிவாஜி கனேசன்
கவிதைப் போட்டியில் ரிங்கிட் 2500
மதிப்புள்ள முதல் பரிசு
கதை கரு
“சம்சு” போன்ற குடிப்பழக்கத்தால் தடம் மாறி
தரங்கெட்ட வாழ்க்கையை வாழும் ஒரு குடும்பத்தின்
அவல நிலையையே இச்சிறுகதைக் கருவாகக்
கொண்டுள்ளது.
குப்புச்சி

மூத்த மகன் தவுக்கே

கதாபாத்திரங்கள்

குப்புச்சியின்
சாரதா
கணவன்
கதைச் சுருக்கம்
குப்புச்சியும் அவளின் கணவனும் மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் வாழ்ந்து வந்தனர். குடித்தே ஒரு நாள்

இறந்து போகிறான் குப்புச்சியின் கணவன். குடிப்பழக்கத்தின் அடிமையாக குப்புச்சியும் ஆளாகிறாள். வயிற்றுப்

பிழைப்புக்காக கோழிப் பண்ணையில் வேலைச் செய்கிறாள். அங்கு மூன்று வேலைச் சாப்பாட்டோடும் சம்சுவும்,

உடுத்த உடையும், இருக்க இடமும் அப்பண்ணையின் முதலாளியான ‘தவுக்கே’ மூலம் வழங்கப்பட்டது.

அப்பண்ணையிலுள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளுக்கும் மூன்று அல்சேஷன் நாய்களுக்கும் இவள்

ஒருத்தி மட்டுமே ஆதாரம். இவளின் சேவை அங்குள்ள பண்ணைக் கோழிகளுக்கு மட்டுமல்லாமல், சில

நேரங்களில் அங்கு அவ்வப்போது வந்து போகும் தவுக்கேயுக்கும்தான். இந்த அவல வாழ்க்கையை வாழ்ந்து

கொண்டிருக்கும் குப்புச்சி, ஆறு பிள்ளைகளுக்குத் தாயாவாள். குப்புச்சியின் ஐந்து ஆண் பிள்ளைகளும் சுயமாய்

கல்யாணம் என்ற பெயரில் தான் விரும்பியவர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வது மட்டுமல்லாமல், அவர்களின்

அப்பாவைப் போலவே சம்சுவுக்கு அடிமையாகிவிட்டனர். கடைக்குட்டி சாரதா குப்புச்சியின் முத்த மகனுடன்

வசித்து வருகிறாள். குப்புச்சியின் முத்த மகனின் மனைவிக்கும் சாரதாவிற்கும் ஒத்துவராத காரணத்தால் இனி

“நீங்களே வைத்து கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி குப்புச்சியிடமே அவளையும் விட்டுச் செல்கிறான்.

அப்போது, அங்கு சூப்பர் மார்க்கேட் விற்பனை அறுப்புக்காக்க கோழிகள் லாரியில் ஏற்றுமதியாகி

கொண்டிருந்தன. புதிதாக ஒருத்தி குப்புச்சியின் அருகில் நிற்பதைக் கண்ட தவுக்கே அங்கு வருகிறான். அவனின்

காமப்பார்வை சாரதாவின் மீது படும் போது தான் தன்னையே உணர்கிறாள் குப்புச்சி.


தலைப்பு ஏற்புடைமை
தலைப்புக் கதைக்கு ஏற்புடையதாகத் தான்
அமைந்துள்ளது. கதையின் தலைப்பைப் படிக்கும்பொழுதே
ஏறக்குறைய கதை எதைப் பற்றி அமைய போகிறது
என்பதை ஊகிக்க முடிந்தது. இத்தலைப்புக் கதையின்
சூழலை விளக்கும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளது.
கதை மாந்தர்களும்
பண்புநலன்களும்

கதாபாத்திரங்கள்
குப்புச்சி
 கோழிப் பண்ணையில் வேலை
செய்பவள்
 ஆறு பிள்ளைகளுக்குத் தாய்

 ‘சம்சு’ குடிப்பழக்கம் கொண்டவள்

 விசுவாசி

 பொறுப்புணர்ச்சி – தொழில்

 எளிதில் வசியப்படக்கூடியவள்
குப்புச்சியின் கணவன்
 ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன்

 பொறுப்பற்றவன்

 குடிப்பழக்கம் கொண்டவன்

 அன்பற்றவன்

 இரக்கமற்றவன்
தவுக்கே
 கோழிப் பண்ணைக்கு
உரிமையாளன்
 குப்புச்சியின் முதலாளி

 ஏமாற்று குணம் கொண்டவன்

 இரக்கக்குணம் அற்றவன்

 தந்திரக்காரன்
குப்புச்சியின் மூத்த மகன்
 பொறுப்பற்றவன்

 குடிப்பழக்கம் கொண்டவன்

 சுயநலவாதி
சாரதா
 குப்புச்சியின் கடைசி மகள்

 பதினாறு வயது இளமை பெண்

 அழகான தோற்றம் கொண்டவள்

 பொறுப்பற்ற அண்ணனின்
செயலால் வாழ்க்கையை
இழக்கிறாள்
உத்தி
முறை
பின்னோக்கு உத்தி
 குப்புச்சியின் கணவன் இறந்த பழங்கதையை
அடிப்படையாகக் கொண்டே இக்கதை ஆரம்பமாகிறது.

எ.கா:
அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை
அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, அவளை
அங்கே கடமை வார்த்துவிட்டுச் செத்துப் போய்விட்டான்.
உரையாடல் உத்தி
 இக்கதையில் உரையாடல் பகுதிகளும்
அமைந்துள்ளது.

எ.கா:
தவுக்கே: “இனி சாப்பா....?”
குப்புச்சி: “சாயா அனாக்”
மொழி
நடை
பேச்சு மொழி
 அதிகமான பேச்சு வழக்கில் உள்ள மொழி
பயன்பாடு
 புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிநடை

எ.கா:
“ அம்மா....இந்த கழுதையை நீயே பார்த்துக்கோ..இது
அடங்காது..என் பொண்டாட்டிக்கும் இதுக்கும் ஒத்து
வரல...” (பக்கம் 127)
பிற மொழி
 தேசிய மொழி பயன்பாடு

எ.கா:
“ குப்சீ...வா த போலே பிச்சயா....லு அடா அன்னாம்
ஒலாங் அனாக்...(பக்கம்: 124)

“குப்சீ...கமு ராஜீன் கெலிஜா,


வா சுக்கா..குப்சீ...(பக்கம்: 124)
பிற மொழி
 ஆங்கில மொழி பயன்பாடு

எ.கா:
கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கேட் விற்பனையின்
அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன..(பக்கம்
128)
முடிவு
குப்புச்சி விழுந்த அதே சாக்கடையில் குப்புச்சியின்
மகள் சாரதாவும் விழுகிறாள். குப்புச்சியோடு சேர்ந்து
அவள் மகளின் வாழ்க்கையும் கோழிப் பண்ணையிலே
பாழாய் போகும் சூழலோடு கதையை முடிக்கிறார்
எழுத்தாளர். பாவம்! அப்பாவி மகளின் வாழ்க்கையும்
குப்புச்சியோடு விடிவது இறுதியில் சோகமான முடிவாக
அமைந்துள்ளது.
படிப்பினை
 மனிதனுக்கு முக்கியம் தன்மானம், ஒழுக்கம். அதுவும்
பெண்களுக்கு உயிராகக் கருதப்படுவது கற்பு. எந்தவொரு
சூழலிலும் இதனை இழந்து விடாமல் இருப்பதே மனித
வாழ்க்கைக்கு அழகு.

 கல்வி மற்றும் நல்லொழுக்கம் முழுமையாய் கொண்டிருத்தல்


மட்டுமே குப்புச்சி போன்ற இன்னொரு குடும்பம்
உருவாகாததற்கு நம்பிக்கை.

 வாழ்க்கையின் அத்தியாவசியமான அடிப்படை தேவையான


உண்ண உணவு உடுத்த உடை மற்றும் இருக்க இடம் மூன்றையும்
கொண்டிருத்தல் அவசியம்.
தற்கால சிந்தனையோடு ஒப்பிடு

தன்மானத்தைப் பற்றி கவலைப்படாத மக்களின் வாழ்க்கை


நிலைக் கேள்விக்குறியே! இதுவும் பெண்களின் நிலை மிகவும்
வருத்தற்குரிய நிலை. படிப்பறிவு இல்லாத ஏழ்மட்டத்தைச்
சேர்ந்த மக்களின் நிலையை ஒரு அடிமைத் தனமாக
உபயோகப்படுத்திக் கொள்வது அன்றும் சரி இன்றும் சரி ஒரே
போல்தான் காணப்படுகிறது. இச்சுழலை வென்று வருவதற்கு
அடிப்படையாக நான் கல்வியையே கருதுகிறேன். முறையான
கல்வி சரியான வாழ்க்கைப் பாதைக்கு இட்டு செல்லும். கல்வி
இதுபோன்ற தரம் கெட்டு வாழும் குடும்பப் பிண்ணனிகளை
அடியோடு மாற்றியமைத்து விடும் என நம்புகிறேன்.
நன்றி

You might also like