You are on page 1of 5

வள்ளுவர்

 பெயர் : திருவள்ளுவர்

 பிறந்த வருடம் – கி .பி. 2 ஆம் நூற்றாண்டு (சரியான ஆதாரம் இல்லை)

 பிறந்த இடம் – மயிலாப்பூர் (சரியான ஆதாரம் இல்லை)

 மனைவியின் பெயர் – வாசுகி  

 வசித்த இடம் – மயிலாப்பூர்

 “வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை

சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள்

  ஈரடிகளில் உலகின் தத்துவத்தினை தெள்ளத்தெளிவாக கூறி

அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன்

கருத்துகளை அதில் முத்து முத்தாக பொறித்துள்ளார்.

 1330 பாக்கள் உள்ள திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள் 42,194.

 திருக்குறள் முதன் முதலில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து

அச்சடிக்கப்பட்டது.

 குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார்.

மொத்தம் நூற்றி முப்பத்திமூன்று அதிகாரங்களாகும்.133 அதிகாரங்களில்

1330 குறட்பாக்களைக் கொண்டிருக்கிறது

 மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இந்த நூல் முறையே

“அறத்துப்பால்”, “பொருட்பால்” மற்றும் “காமத்துப்பால்” என்று

வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 அறத்துப்பால் – 38 அத்தியாயங்கள்

 பொருட்பால் – 70 அத்தியாயங்கள்

 காமத்துப்பால் – 25 அத்தியாயங்கள்

 திருவள்ளுவரின் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலை : வள்ளுவர்

கோட்டம் – இன்றைய சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதி இந்த

“வள்ளுவர் கோட்டம்”. இந்த வள்ளுவர் கோட்டத்தில்

திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த

குறள் மண்டபத்தில் திருக்குறளின் அனைத்து குறள்களும்

பதிக்கப்பட்டுள்ளன.

 வள்ளுவரின் சிலை – தமிழக மற்றும் இந்திய தேசத்தின்

கடைக்கோடியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில்

இவரது திருஉருவ சிலை நிருவப்பட்டுள்ளது. அவரது 133

அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133 அடிகள் உயரத்தில்

அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையினை செய்த சிற்பியின் பெயர்

கணபதி ஸ்தபதி.

 வள்ளுவரின் கோயில் – திருவள்ளுவருக்காக அவரது பிறப்பிடமாக

கருதப்படும் மயிலாப்பூரில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றுகூட அதனை நீங்கள் காண முடியும். அந்த கோவிலானது

மயிலாப்பூர்  கன்னியம்மன் கோயில் அருகில் உள்ளது.


 திருக்குறளில் மூன்று ஒன்பது எண்களைத் தவிர மற்ற வரிசை எண்கள்

1 2 4 5 6 7 8 10 ஏராளமாக கையாளப்பட்டுள்ளன.

 “அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே யுலகு….” என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல்

எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்” என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய

“ன்” னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர்.

 திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்

செந்நாப் புலவர், செந்தாப் போதார், தெய்வப் புலவர், தேவர், நாயனார்,

புலவர், பெருநாவலர், பொய்ய மொழியார், பொய்யில் புலவர்,

மாதாநுபங்கியார், முதற் பாவலர்.


ஆண்டு 5 வள்ளுவர்

You might also like