You are on page 1of 1

காலை நேரம். இனியன் கடற்கரை ஓரம் நடந்தான்.

கிழக்கே உதித்த கதிரவனின் ஒளிபட்டுக்


கடல் நீர் பளிச்சிட்டது. ஆஹா! என்னே அழகு! என்று வியந்து இயற்கை அழகை
இரசித்தான்.

செந்தூரன் காய்ச்சல் கண்ட தன் தாயுடன் மருத்துவமனையை நெருங்கிக் கொண்டிருந்தான்.


வாசலில் பலர் காத்திருந்தனர். ஒவ்வொருவரும் நோயின் தாக்கத்தினால் ”ஐயோ!
வலிக்கிறதே!” என்று முனகினர். அவர்களைப் பார்த்து அவன் பரிவு கொண்டான்.

”ஐயோ! அங்கே ஒரு பெரிய உருவம் தெரிகிறதே! எனக்கு அதிக பயமாக இருக்கிறதே!
யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்!” எனும் கயல்விழியின் அலறல் சத்தம் கேட்டு அம்மா
அவளை எழுப்பினார். அப்பொழுதுதான் தான் கண்டது கனவு என்பதனை உணர்ந்தாள்.

தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது என் பாட்டியின் மகிழியாகும். சில நகைச்சுவை


வசனங்களைக் கேட்டுக் கலகலவெனச் சிரிப்பார். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் பாட்டியைப்
பார்த்து நானும் சிரித்துவிடுவேன்.

என் அன்புத் தங்கை ஐந்து மாதக் குழந்தை. தங்கையின் பெயர் மணிமொழி. தங்கைக்குப்
பசி எடுத்தால் அழ ஆரம்பித்துவிடுவாள். நான் அவளுக்குப் பிடித்த கிலுகிலு எனும்
ஓசையைக் கேட்டவுடன் என் தங்கை அழுகையை நிறுத்திவிடுவாள்.

You might also like