You are on page 1of 2

குழந்தைகள் யோகாசனப் பயிற்சி

ஹஸ்தபதாஸனா (முன்னோக்கி வளைதல்)

இந்த ஆசனம், குழந்தைகளின் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் வேகத்தை


சீராக்குகிறது. மேலும், நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. முக்கியமாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உஸ்த்ராஸனா (ஒட்டக நிலை)

சுவாசக்கோளாறு தொடர்பான நோய்களைத் தடுக்க உதவும்


ஆசனங்களில், இந்த ஆசனம் சிறந்ததாகும். ஒட்டக போஸ்
உங்கள் மார்பை விரிவடையச் செய்கிறது. மேலும், உடலில்
செரிமான உறுப்புகளை நன்றாக வேலை வாங்குகிறது.
முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மத்யாஸனா (மீ ன் நிலை)

முக்கியமாக உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நோய் எதிர்ப்பு


சக்தியை கூட்டித் தருகிறது.

இந்த மீ ன் போஸ் ஆசனம் உங்கள் தொப்பையை குறைக்கும். மேலும், கழுத்து,


தொண்டை, தோள், புஜங்களை வலுவாக்குகிறது. மனசுக்கு நிம்மதி தரும்
சுவாசத்தை அளிக்கிறது. பதற்றத்தை போக்குகிறது. ஆஸ்துமா மற்றும் அலர்ஜி
மூச்ஹ்கிக்குழாய் அழற்சி சுவாச நோய்களில் இருந்து உங்களை விடுவித்து
விடுதலை தருகிறது. காய்ச்சலையும் போக்கும் ம்வள்ளமை கொண்டது இந்த
மீ ன் போஸ் ஆசனம்.

ஷிஷூவாசனா (குழந்தை போஸ்)

இந்த போஸ் உங்கள


தலைப்பகுதியை
பலமாக்குகிறது. இதயத்தை
வலுப்படுத்துகிறது. மேலும்,
உங்கள் முகத்தில் உள்ள
தசைகளை தளர்த்தி ரத்ஜ்த
ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், உங்கள் முகம் நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பொலிவடைகிறது. முக்கியமாக,
உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிகச் செய்து உதவுகிறது.

தனுராஸனா (வில் போஸ்)

இந்த வில் போஸ் உங்கள் மார்பு மற்றும்


தோள் புஜங்களை வலுப்படுத்தி
விரிவடையச் செய்கிறது. சுவாசப்பாதையை
சுத்தமாக்குகிறது. மேலும், வயிறு மற்றும்
அதனை ஒட்டியுள்ள தொடைப்பகுதியை
உறுதியானதாக மாற்றுகிறது.
இரைப்பையை வலுவாக்கி நல்ல
செரிமானத்திற்கு வழி செய்து தருகிறது.
இந்த தனுராஸனா போஸ் உங்கள்
குழந்தையின் பெர்சனாலிட்டியை அதிகரிக்க
உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி
வேகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை
கூட்டித் தருகிறது.

You might also like