You are on page 1of 42

அக்குபஞ்சர் மருத்துவம்:-

அக்கஸ் (Acus) பஞ்சுரா (Punctura) என்ற லத்தீன் வார்த்தை களிலிருந்து பிறந்ததுதான் அக்குபஞ்சர்
(Acupuncture) என்ற சொல்.

அக்கஸ் என்றால் ஊசி, பஞ்சுரா என்றால் குத்துதல் என்பது பொருளாகும்.

தசைக்கோளங்களை இயக்கும் நரம்புகளின் ஆக்கப் பணியினை நன்கு அறிந்திருந்த நம்


முன்னோர்கள், நம் உடலின் பாகங்களில் சில மர்மப்புள்ளிகள் இருக்கின்றன என்று
கண்டுபிடித்திருந்தார்கள் இந்த வர்மப்புள்ளிகள் நம் நாட்டில் வர்மப்புள்ளிகள் என்றும் சீன
நாட்டினர் அக்குபஞ்சர் (Acupuncture Points) என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

மேற்படி அக்குபஞ்சர் புள்ளிகளில் விரலினால் அழுத்தியோ (Acupressure) அல்லது ஊசியினால்


குத்தியோ, திருகியோ, உடலில் உள்ள தசைகளையும், நரம்புகளையும் மறத்துப்போகச் செய்யவும்,
அவைகளின் செயல்திறனை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் கண்டுபிடித்தார்கள்.
இந்த அதிசய கண்டுபிடிப்பே பின்னர் உடலில் உள்ள பாகங்களின் வியாதிகளைப்
போக்கஅடிகோலியது. இந்த அக்குபஞ்சர். (Acupuncture Points) வியாதிகளைக் குணமாக்கும்
வைத்திய முறையே அக்குபஞ்சர் வைத்திய முறை என்று அழைக்கப்படுகிறது.

அக்குபஞ்சரின் வரலாறு:-

அக்குபஞ்சர் என்னும் அதிசய வைத்திய முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே


கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதனை நெறிப்படுத்தி ஒரு அரிய கலையாக உலகிற்குக்கு
வழங்கியவர்களில் முக்கியமானவர். கி.மு.2697-க்கும் 2596-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த
சீன நாட்டு சக்கரவர்த்தி ஹூவாங் டி சக்கரவர்த்தி என்பவர் ஆவார். இவரே அக்குபஞ்சரின் தந்தை
என போற்றப்படுகிறார். இன்று இந்த சிகிச்சை முறை உலகம் முழுதும் பரவி உலக சுகாதார
அமைப்பாலும் (WHO) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சபூத சக்திகள்:-

இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில்


உள்ளதே அண்டத்திலும் உள்ளது. எனவேதான் இப்பிரபஞ்சத்தை ஆங்கிலத்தில் மேக்ரோகாசம்
என்றும் மனிதனை மைக்ரோகாசம் என்றும் கூறுகிறார்கள். எனவே இந்த மனித உடலுக்கு
ஆதாரமாக உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம் நெருப்பு போன்ற பஞ்சபூத சக்தியின் அளவுகளில்
மாற்றங்கள் ஏற்படும்பொழுது அதன் விளைவுகளையே நாம் நோய் என்று கூறுகின்றோம். இந்த
பஞ்சபூத சக்திகளின் அளவுகளை சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம் சமநிலைப் படுத்துவதே
அக்குப்பஞ்சர் மருத்துவம் ஆகும்.

நெய்ஜிங் என்ற சீனப்புத்தகத்தின் கூற்றுப்படி நீர் நிலம், மரம், உலோகம், நெருப்பு ஆகிய இந்த
ஐந்து பூதங்களின் சக்தி உடலில் உள்ளன. இவை மனிதனு க்கு மூலாதாரமாகவும் விளங்குகின்றன.

சீனர்களின் பழங்கால தத்துவப்படி யின் (yin) என்பதும் யாங் (yang) என்பதும் எதிரிடையானதும்
ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யக்கூடிய சக்தியாகும். இவற்றின் உயிர் ஆற்றலைப் பொருத்தே உடல்
ஆரோக்கியம் அமைந்துள்ளது. இவற்றில் சமநிலை மாறுபட்டால் நோய் உண்டாகும்.
யின்(yin) யாங்(Yang)

எதிர்மறை நேர்மறை

குளிர்ச்சி வெப்பம்

பெண்மை ஆண்மை

திடமானது மென்மையானது

நமது உடலில் 14 உயிர் சக்தி ஓட்டப்பாதைகள் உள்ளன. இதில் 12 இரட்டைப் பாதைகள்


உடலின் இரு பக்கமும் உள்ளது. மற்ற இரண்டும் ஒற்றைப் பாதைகள் உடலின் முன் பக்கமும்
பின்பக்கமும் உடலின் மத்தியில் ஓடுகிறது. இந்த உயிர் சக்தியானது உடலில் உள்ள அக்குபஞ்சர்
புள்ளிகளை கடந்தே செல்கிறது. நமது உடலில் 76,000 அக்கு புள்ளிகள் உள்ளன. அதில் 864
புள்ளிகள் மட்டுமே அக்கால சீனர்கள் கண்டறிந்தார்கள். ஆனால் தற்போது 361 புள்ளிகள் மட்டுமே
பயன்படுத்தப் படுகின்றன.

சுன் (Cun) அளவவைகள்:-

இது அக்குபஞ்சர் புள்ளிகளின் இருப்பிடத்தை துள்ளியமாக கண்டறிய பயன்படும் அளவு


முறையாகும்.இது நோயாளியின் கட்டைவிரல் அகலமே ஒரு சுன் எனப்படும். அல்லது நடுவிரலின்
இரு ரேகைகளுக்கு இடையே உள்ள மையப் பகுதியே ஒரு சுன் எனப்படும்.

14 சக்திப் பாதைகள்:-

1. நுரையீரல் சக்தி ஓட்டப்பாதை (LU)


2.பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதை (LI)

3.இரைப்பை சக்தி ஓட்டப்பாதை (ST)

4.மண்ணிரல் சக்தி ஓட்டப்பாதை (SP)

5.இதய சக்தி ஒட்டப்பாதை (H)

6.சிறுகுடல் சக்தி ஒட்டப்பாதை (SI)

7.சிறுநீரக சக்தி ஒட்டப்பாதை (K)

8.சிறுநீர்ப்பை சக்தி ஒட்டப்பாதை (UB))

9.இதய உறை சக்தி ஒட்டப்பாதை (P)

10.வெப்பமண்டல சக்தி ஒட்டப்பாதை (TW)

11.கல்லீரல் சக்தி ஒட்டப்பாதை (LIV)

12.பித்தப்பை சக்தி ஒட்டப்பாதை (GB)

13.இனவிருத்திப்பாதை (REN)

14.ஆளுமைப்பாதை (DU)
LUNG – நுரையீரல்
சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 11

தொடர்புடைய உறுப்பு பெருங்குடல்

மூலகம்(Element) உலோகம்

வெளிபுற உணவு உறுப்பு மூக்கு

நுரையீரல் சக்தி ஒட்டப்பாதை:-

உடலின் முன்புறமத்தியக்கோட்டிலிருந்து 6 சுன்கள் பக்கவாட்டில் 1 வது மற்றும் 2 வது விலா


எலும்புகளின் மத்தியில் ஆரம்பித்து தோள்பட்டை வழியாக மேலேறி கைகளின் உட்புற
மேல்பக்கமாக முழங்கை மற்றும் மணிக்கட்டுவழியாகச் சென்று கைக் கட்டைவிரல் நகத்தின்
வெளிப்புற கீழ் விழிம்பிலிருந்து 0.1 சுன் மேலே முடிகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்:_

Lu 1 உடலின் மத்திய கோட்டிலிருந்து 6 சுன் தூரத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது மார்பு


எலும்புகளுக்கு மத்தியில் உள்ளது.

இருமல், மார்புச்சளி, ஆஸ்துமா, தோல் நோய்கள். விரல் மூட்டுவலி.

Lu 2 காரை எலும்பு தோள்பட்டை எலும்பில் முறியும் இடத்தில் உள்ளது.

தோள்பட்டை வலி

Lu 5 முழங்கை மடிப்பு ரேகையில் இரு தலை தசை நாரின் வெளிப் பக்கத்தில் உள்ள பள்ளத்தில்
உள்ளது.

முழங்கை வலி, சிறுநீர் விட்டு விட்டு வெளியேறுதல், தோல் நோய்கள். மாலை நேரத்தில்
தோன்றும் காய்ச்சல்.

Lu 6 இப்புள்ளி Lu 5 ல் இருந்து 5 சுன் கீழே ரேடியஸ் எலும்பின் உள்பக்கம் அமைந்துள்ளது.


ஆஸ்துமா, மூச்சுத்திணறல், இருமல்.

Lu 7 மணிக்கட்டுக்கு ரேகையின் வெளிப்பக்க விளிம்பில் இருந்து மேல்நோக்கி 1.5 சுன் தூரத்தில்


உள்ளது.

மணிக்கட்டு வலி நுரையீரல் நோய்கள் கழுத்து பின்புறம் ஏற்படும் வலி.

Lu 8 மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் இருந்து 1 சுன் மேலே அமைந்துள்ளது.

ஆஸ்துமா, தொண்டை கரகரப்பு, இருமல், நுரையீரலுக்கு சக்தி அளிக்கும் புள்ளி.

Lu 9 மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்தில் radial தமனியின் வெளிப்புறம்உள்ளது.

மணிக்கட்டு வலி நுரையீரல் நோய்கள் பக்கவாதம்.

Lu 11 கட்டை விரல் நகக்கண்ணிலிருந்து 0.1 சுன் கிழே வெளிப்புறமாக உள்ளது.

திடீர் மயக்கம், அதிர்ச்சி, மனக்குழப்பம், மூக்கில் நீர் வடிதல்.

Large intestine – பெருங்குடல்


சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 20

தொடர்புடைய உறுப்பு நுரையீரல்

மூலகம்(Element) உலோகம்

வெளிபுற உணவு உறுப்பு மூக்கு

பெருங்குடல் சக்தி ஒட்டப்பாதை:-

ஆட்காட்டி விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன் துரத்தில் மேலே ஆரம்பித்து
கைகளின் பின்புற மேல்ப்பக்கமாக மணிக்கட்டு மற்றும் முழங்கை வழியாக தோள்ப்பட்டையின்
முன்புறத்தை அடைகிறது. அங்கிருந்து தோள் மற்றும் முன்புற கழுத்து வழியாக முகத்தை
அடைந்து மூக்கிற்கும் மேலுதட்டிற்கும் நடுவே சென்று மூக்கு விழிம்பின் பக்கவாட்டில் முடிகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்

Li 1 ஆள்காட்டி விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பில் இருந்து 0.1 சுன் தூரத்தில் உள்ளது.

அலர்ஜி, தோல் நோய்கள், பெருங்குடல் நுரையீரல் நோய்கள்.

Li 4 கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைக்கும் போது ஏற்படும் தசைத்


திரட்சியின் மேல் பகுதியில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

இது இடுப்பிற்க்கு மேலே ஏற்படும் அனைத்து வலியையும் போக்கு கிறது, பெருங்குடல்


நுரையீரல் மணிக்கட்டு வலிகள்.

Li 5 கட்டைவிரலை உயர்த்தும் போது கட்டை விரலுக்கும் மணிக்கட்டு பக்கவாட்டில் ஏற்படும்


பள்ளத்தில் உள்ளது.

இது மலச்சிக்கலுக்கு முக்கியமான புள்ளி, தூசி அலர்ஜி மணிக்கட்டு வலி.

Li 10 இது Li 11 க்கு கீழே 2 சுன் தூரத்தில் உள்ளது.

பக்கவாதம், கைகால் விழுந்து போதல்.

Li 11 முழங்கை ரேகையின் வெளிப்புற ஓரத்தில் உள்ளது.

தோல் அலர்ஜி, பெருங்குடல் நுரையீரல் நோய்கள், முழங்கை வாதம் வலி.

Li 14 கையை தோளுக்கு கிடைமட்டமாக தூக்கினால் ஏற்படும் பள்ளம்.

தோள்பட்டை வலி.

Li 15 கையை தோளுக்கு கிடைமட்டமாக தூக்கினால் ஏற்படும் முன்புற பள்ளத்தில் உள்ளது.

தோள்பட்டை வலி, பின்புற கழுத்து வலி.

Li 18 குரல் வலை சங்கில் இருந்து 3 சுன் பக்கவாட்டில் கழுத்தின் முன்புறம் அமைந்துள்ளது.

தைராய்டு மற்றும் திக்குவாய்

Li 19 மேலுதட்டின் நடுக்கோட்டில் இருந்து 0.1 சுன் பக்கவாட்டில் உள்ளது.

சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூக்கடைப்பு, தும்மல், முகவாதம்.

Li 20 மூக்கு துவாரத்தின் வெளிப்புற விளிம்பை ஒட்டி அமைந்துள்ளது.

சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள், மூக்கடைப்பு, தும்மல், முகவாதம்.


Tripple Warmer – மூவெப்பமண்டலம்

சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 23

தொடர்புடைய உறுப்பு பெரிக்கார்டியம்

மூலகம்(Element) நெருப்பு

வெளிபுற உணவு உறுப்பு நாக்கு

மூவெப்பமண்டல சக்தி ஒட்டப்பாதை:-

மோதிர விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0 சுன் துரத்தில் ஆரம்பித்து கைகளின்
வெளிப்புறத்தில் சிறுகுடல் சக்தி ஒட்டப்பாதைக்கும் பெருங்குடல் சக்தி ஒட்டப்பாததைக்கும்
நடுவில் சென்று தோள்பட்டையின் பின்புறத்தை அடைந்து கழுத்தின் இவாட்டு வழியாக காதின்
கீழ் நுனிக்கு சென்று ஒரு சுற்று சுற்றி புருவத்தின் வெளிப்பு விளிம்பிற்கு எதிரே முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்:-


Tw 1 மோதிர விரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில் உள்ளது. (சுண்டு
விரல் பக்கம்)

காய்ச்சல், அதிக உடல் உழைப்பினால் வரும் உடல் வலி.

Tw 2 மோதிர விரலை மடக்கும்போது கணுவின் முன்பாக உள்ள பள்ளம்.

உடல் நடுக்கம் , குளிர்கால வலிகள்.

Tw 3 இது 4 வது 5 வது உள்ளங்கை எலும்புகளின் பின்புறமலைப்பகுதிக்கு இடையிலுள்ள


பள்ளத்தில் உள்ளது.

பகலில் குறைந்து இரவில் அதிகரிக்கும் வலிகள். காது சம்மந்தப்பட்ட நோய்கள், கை வாதம்.

Tw 5 மணிக்கட்டு பின்புற ரேகையில் இருந்து 2 சுன் மேலே அமைந்துள்ளது.

ஒருபக்கத் தலைவலி, காது நோய்கள் கழுத்து பிடிப்பு.

Tw 6 மணிக்கட்டு மையத்தில் இருந்து 3 சுன் மேலே உள்ளது.

அதிக வியர்வை, மலச்சிக்கல்.

Tw 14 கையை மேலே உயர்த்தும்போது ஏற்படும் பின்புற குழி.

மேல் கை வாதம். காது தொடர்பான நோய்கள்.

Tw 17 வாயைத் திறக்கும் போது காதுமடலின் கீழ் பின்புறம் ஏற்படும் பள்ளம்.

காது தொடர்பான பிரச்சனைகள், முக வாதம்.

Tw 21 வாயைத் திறக்கும் போது காதின் முன்புறம் ஏற்படும் பள்ளம்.

காது அடைப்பு. காது இரைச்சல்.

Tw 23 கண் புருவத்தின் வெளிப்புற ஓரத்தில் சிறிய பள்ளத்தில் உள்ளது.


கண் எரிச்சல், கண் கூசுதல், தலைவலி.

Pericardium - இருதய மேலுறை


சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 9

தொடர்புடைய உறுப்பு மூவெப்ப மண்டலம்

மூலகம்(Element) நெருப்பு

வெளிபுற உணவு உறுப்பு நாக்கு

இருதய மேலுறை சக்தி ஒட்டப்பாதை:-

மார்புக் காம்பிலிருந்து 1 சுன் வெளிப்பக்கம் ஆரம்பித்து தோள்படை வழியாக மேலேறி நுரையீரல்


சக்தி ஒட்டப்பாதைக்கும் இருதய சக்தி ஓட்டப் பாதைக்கும் இடையே சென்று மணிக்கட்டை
அடைந்து உள்ளங்கை மத்தியில் சென்று நடுவிரலின் மேல் நுனியில் முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்:-


P 3 முழங்கை மடிப்பு ரேகையில் இரு தலை தசைநாரின் உட்புற ஓரத்தில் உள்ளது.

இருதய வலி, இருதய படபடப்பு.

P 6 மணிக்கட்டு ரேகையிலிருந்து 2 சுன் மேலே இரு தசை நாரின் நடுவில் உள்ளது.

குமட்டல், வாந்தி, தூக்கமின்மை, மனநோய், வலிப்பு, படபடப்பு,நெஞ்செரிச்சல், கரிப்பு


ஆகியவை நீங்கும்.

P 7 மணிக்கட்டு ரேகையின் மத்தியில் உள்ளது.

மணிக்கட்டு வலி, முடக்கு வாதம்.

P 8 விரல்களை மடக்கினால் நடுவிரல் முனை உள்ளங்கையில் படும் இடத்தில் உள்ளது.

கை வாதம், உள்ளங்கை வியர்வை.

P 9 கை நடுவிரலின் முனையில் உள்ளது.

அவசரகாலப் புள்ளி, மயக்கம், நடு இரவில் ஏற்படும் நெஞ்சு வலி.

Small intestine – சிறுகுடல்

சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 19

தொடர்புடைய உறுப்பு இதயம்

மூலகம்(Element) நெருப்பு

வெளிபுற உணவு உறுப்பு நாக்கு

சிறுகுடல் சக்தி ஓட்டப்பாதை:-

கை கண்டு விரல் நகத்தின் உட்புறம் கீழ் விளிம்பிற்கு மேலே 0 சன் ரத்தில் ஆரம்பித்து உள்ளங்கைத்
தோலும் புறங்கைத் தோலும் சேருகின்ற கோட்டின் வழியில் கைகளின் கீழ்பக்கமாக மணிக்கட்டு
மற்றும் முழங்கை வழியாக அக்குளின் பின்பக்க மடிப்பு ரேகையை அடைகிறது. பிறகு பின்பக்க
தோள்பட்டையில் ஏறிசாய்வாக இறங்கிபிறகு மேலேறி கீழ் வளைவாக கழுத்தின் பக்கவாட்டை
அடைந்துமுகத்தின் முன்புறத்தில் கன்ன எலும்புவரை சென்று நேராக வாயைத் திறக்கும்போது
காதின் முன்புறத்தில் ஏற்படக்கூடிய பள்ளத்தில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

Si 1 கை சுண்டுவிரல் நகத்தின் உட்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 தூரத்தில் உள்ளது.

இடுப்பு வலி, இதயவலி.

Si 3 உள்ளங்கையை மூடும்போது தெரிகின்ற இருதய ரேகையின் வெளிப்புறத்தில் உள்ளது.

கழுத்து வலி, இதயவலி, தாய்ப்பால் சுரப்பின்மை.

Si 6 மணிக்கட்டு எலும்பின் கீழே அல்நார் எழும்பு சேருமிடத்தில் ஏற்படுகின்ற பள்ளத்தில்


உள்ளது.

கழுத்து வலி, மணிக்கட்டு வலி.

Si 9 கைகளை உடலுடன் சேர்க்கும் போது பின்புறம் ஏற்படும் கோட்டின் மோலே 1 சுன் தூரத்தில்
உள்ளது.
கை வாதம், தோள்பட்டை மூட்டு வலி.

Si 17 கீழ் தாடையின் வளைவுக் கோளத்தில் கீழே உள்ளது.

ஒற்றைத் தலைவலி, பேச்சுத் திணறல், கீழ்தாடை எலும்பு வலி.

Si 19 வாயைத் திறக்கும் போது காதின் அருகே ஏற்படும் பள்ளத்தின் மத்தியில் உள்ளது.

செவிட்டுத்தன்மை, காது இரைச்சல், காதில் சீல் வடிதல்; தலை சுற்றல்.

HEART – இருதயம்
சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 9

தொடர்புடைய உறுப்பு சிறுகுடல்

மூலகம்(Element) நெருப்பு

வெளிபுற உணவு உறுப்பு நாக்கு

இருதய சக்தி ஓட்டப்பாதை

அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உட்பக்க கீழ்பகுதி வழியாக முழங்கை மணிக்கட்டு


மற்றும் உள்ளங்கை வழியாக சென்று கை சுண்டு விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு
மேலே0 சுன் துரத்தில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்:-

H 3 முழங்கை மடிப்பு ரேகையின் உட்புற ஓரத்தில் உள்ளது.

முழங்கை வலி, கை நடுக்கம்.

H 4 இது H5 க்கு 0.5 சுன் மேலே உள்ளது.

நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, சளி, டி.பி நோய்.

H 5 இது H 7 ல் இருந்து 1 சுன் மேலே உள்ளது.

பேச்சுத் திணறல், குரல் நாண் அலர்ஜி.

H 6 இது H 7 இருந்து 0.5 சுன் மேலே உள்ளது.

மனநிலை கோளாறு, இருதய கோளாறு.

H 7 மணிக்கட்டு ரேகையில் அல்நாரிஸ் தசை நாரின் வெளிப்பக்க பள்ளத்தில் உள்ளது.


இருதய படபடப்பு, கவலை, தூக்கமின்மை, நெஞ்சுவலி, மனநோய், நரம்புத் தளர்ச்சி.

stomach – இரைப்பை
சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 45

தொடர்புடைய உறுப்பு மண்ணீரல்

மூலகம்(Element) நிலம்

வெளிபுற உணவு உறுப்பு உதடு

இரைப்பை சக்தி ஒட்டப்பாதை

கீழ் இமைப்பையின் மையப் பகுதியில் கருவிழியில் நேர் கீழே ஆரம்பித்து நேர்கோட்டில் கீழிறங்கி
கீழ் தாடையின் கீழ் விளிம்பில் வளைந்து காதின் முன்புறமாக மேலே புருவத்தின் வெளிப்புற
விளிம்பில் இருந்து 3.5 கன்கள் துரத்தில் மேலே நிற்கிறது

கீழ் தாடையின் வளைகின்ற கீழ் விளிம்பில் இருந்து கழுத்து வழியாக கீழிறங்கி நெஞ்சு பகுதியை
அடைந்து உடலின் முன்புற மத்தியக் கோட்டில் இருந்து 4 சுன்கள் துரத்தில் மார்பு வழியாக
நெஞ்சுப் பகுதியை கடந்து உடன் முன்புற மத்தியக் கோட்டில் இருந்து 2 சன்கள் வயிற்றுக்
கீழ்ப்பகுதியை அடைகிறது. பிறகு தொடையின் வெளிப்பக்க முன்புறமாக முழங்கால் மற்றும்
கணுக்காலை அடைந்து கால் 2-வது விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேல்புறத்தில் O.1
சுன் துரத்தில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்ம்

St 1 கருவிழியின் நேர் கீழே இமை மையத்தில் உள்ள புள்ளி

கண் பார்வை தெளிவு பெறும், கண்நோய்.

St 2 இது ST 1 க்கு அரை இன்ச் கீழே உள்ளது

சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்.

St 3 இதுSt 2 க்கு கீழே மூக்கு துவாரங்களின் பக்கவாட்டில் உள்ளது.

சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்

St 4 வாயின் ஓரத்திற்கு அரை இன்ச் வெளியே

சைனஸ், அலர்ஜி நீங்கும். முகவாதம், முகநரம்பு வலி, பல் வலி நீங்கும்

st 8 நெற்றி முடிக் கோட்டிலிருந்து 0.5 சுன் மேலே உள்ளது.


தலைவலி, ஒற்றை தலைவலி, தலைபாரம், கண்வலி.

St 18 நிப்பிளின்nipple கீழே 5, 6 வது விலா எழும்பின் மத்தியில் உள்ளது.

தாய்ப்பால் சுரப்பின்மை, நெஞ்சு, மார்பகம் தொடர்பான நொய்கள்;

St 21 தொப்புளின் மையத்திலிருந்து 2 சுன் பக்கவாட்டில் 4 சுன் மேலே உள்ளது.

நாள்பட்ட வயிற்றுவலி, தீவிரமான வயிற்றுவலி

St 25 தொப்புளின் மையத்தி லிருந்து 2’ அப்பால் வலது இடது இரண்டு பக்கமும் உள்ளது

வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்சனை களும் நீங்கும்.

St 32 முட்டிச் சிப்பியிலிருந்து மேல்புற வெளிப்பக்கமாக 6 சுன் தூரத்தில் உள்ளது.

கால்களில் ஏற்ப்படும் பக்கவாதம். மூட்டு வீக்கம்.

St 34 முட்டிச் சிப்பியின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 சுன்கள் மேலே உள்ளது.

வயிறு தொடர்பான பிரச்சனை, பக்கவாதம், முழங்கால் வலி.

St 36 டிபியா எழும்பின் தலைப்பகுதியில் துருத்தியிருக்கின்ற பாகத்திலிருந்து 1 சுன் வெளிப்புறமாக


பக்கவாட்டில் அமைந்துள்ளது.

வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்சனை களும் நீங்கும்.

St 38 இது St 38 ல் இருந்து 5 சுன் கீழே உள்ளது.

வயிற்று வலி, தோள்பட்டைப் பிடிப்பு.

St 44 காலின் 2 வது 3 வது விரல்களுக்கிடையில் அமைந்துள்ளது.

கண்வலி, பல்வலி, கால்வலி, மற்றும் இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து வலிகளும்.


Spleen – மண்ணீரல்
சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 21

தொடர்புடைய உறுப்பு இரைப்பை

மூலகம்(Element) நிலம்

வெளிபுற உணவு உறுப்பு உதடு

மண்ணில் சக்தி ஓட்டப்பாதை

கால் கட்டைவிரல் நகத்தின் உட்புற கீழ் விழிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில் ஆரம்பித்து
பாதத்தின் இரு நிறங்களும் சேரும் கோட்டின் வழியாக உட்புற கணுக்கால் முட்டைச் சுற்றி டிபியா
எனும்பின் உட்பக்க ஒரமாக முழங்காலின் உட்புறம் மற்றும் தொண்டையின் உட்பக் வழியாக
உடலின் முன்புற மத்திய கோட்டிலிருந்து 4 சுன்கள் துரத்தில் வயிற்றுப்பகுதியைக் கடந்து பிறகு
நெஞ்சுப்பகுதியில் உடலின் முன்புற மத்தியக் கோட்டிலிருந்து 6 சுன்கள் பக்கவாட்டில் 2-வது
மற்றும் 3-வது விலா எலும்பின் மத்தி வரை சென்று பிறகு அக்குள் கோட்டில் கீழிறங்கி 6 வது
மற்றும் 7-வது விழா எலும்புகளின் மத்தியில் முடிகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்

Sp 1 கால் கட்டைவிரல் நகத்தின் விளிம்பில் 0.1 சுன் மேலே அமைந்துள்ளது.

மண்ணீரல் கோலாறுகள், மாதவிடாய் சம்பந்தப்பட்ட நோய்கள்.

Sp 3 கால் கட்டை விரலின் உள்பக்கம் மெட்டார்சல் எலும்பின் அருகில் தோலின் இரு நிலங்களும்
சேரும் இடம்.
கர்ப்பப்பை கோளாறு, அதிக இரத்த போக்கு.

Sp 4 இது sp 3 க்கு மேலே 1.5 சுன் தூரத்தில் உள்ளது.

வயிற்றுப் போக்கு.

Sp 5 உட்புற கணுக்கால் உச்சியில் இருந்து 1 சுன் பக்கவாட்டில்

உடலில் உள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்கும் புள்ளி.

Sp 6 உட்பக்க கணுக்கால் மூட்டின் கீழ் விளிம்பில் இருந்து 3 சுன் மேலே டிபியா எலும்பின்
உட்பக்க ஓரத்தில் உள்ளது.

எல்லா விதமான கர்ப்பப்பை கோளாறுகள், உதிரப்போக்கு, இரத்தம் சுத்தமாகும்

Sp 9 டிபியா எலும்பின் தலைப்பாகத்தின் உள்பக்க முனையின் கீழ் பள்ளத்தில் உள்ளது.

முழங்காலுக்கு கீழே உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

Sp 10 முழங்கால் முட்டி சிப்பியின் மேல் பகுதியில் உள்பக்க ஓரத்தில் இருந்து 2 சுன் மேலே
உள்ளது.

அலர்ஜி, தோல் நோய்கள், மூட்டு வலி, மாதவிடாய் கோளாறுகள்.

Sp 15 தொப்புளில் இருந்து 4 சுன் பக்கவாட்டில் உள்ளது.

மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, அஜீரணம்.

Sp 18 உடலின் நடுநிலைக் கோட்டில் இருந்து 6 சுன் தூரத்தில் 4 வது 5 வது விலா எலும்பின்
மத்தியில் உள்ளது.

பால்சுரப்பு தொடர்பான குறைபாடுகள், நெஞ்சு வலி.

Sp 21 அக்குளின் நேர் கீழே 6 வது 7 வது விலா எலும்பின் மத்தியில் உள்ளது.


கல்லீரல் நோய்கள், விலா எலும்பு நோய்கள்.

GALL BLADDER - (பித்தப்பை)


சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 44

தொடர்புடைய உறுப்பு பித்தப்பை

மூலகம்(Element) மரம்

வெளிபுற உணவு உறுப்பு கண்

பித்தப்பை சக்தி ஓட்டப்பாதை

கண்ணின் வெளிப்புற ஓரத்தில் இருந்து 0.5 கன் வெளிப்பக்க வாட்டில் ஆரம்பித்து காதின்
முன்புறத்தில் றீனு 19-க்கு 65 கீழே இறங்கி பின்பு நேராக தலைமன் பக்கவாட்டை அடைந்து
காதின் மேல்மடலில் இருந்து 1.5 கன் துரத்தில் காதை வெளிப்பக்கமாக சுற்றி காதின் பின்புறம்
காதின் கீழ்மடலுக்கு இணையாக கோட்டில் நிற்கிறது. பின்பு காதை சுற்றிய பாதைக்கு இணையாக
மீண்டும் தலையின் பகவாட்டுப் பகுதி வழியாக நெற்றியின் முன்பக்கத்தை அடைந்து கண்ணின்
கருவிழிக்கு நேர் மேலே புருவத்தில் இருந்து கன் மேலே உள்ள புள்ளியை அடைகிறது. பிறகு
அங்கிருந்து பின் தலையின் முடிக் கோட்டிற்குள் நுழைந்து பின் தலையும் கழுத்தும்
சேர்கின்றபள்ளத்தில் உள்ள புள்ளியை அடைந்து கழுத்தில் பக்கவாட்டு வழியாக காலை எலும்புக்
குழிக்கு மேலே உள்ள தசையிலுள்ள புள்ளியை அடைந்து அங்கிருந்து தோள்பட்டையின் முன்பகக்
வாட்டு வழியாக நிப்பிள் கோட்டிலே 7 வது 3 வது விலா எலும்புகளின் மத்தியில் உள்ள புள்ளியை
அடைந்து அங்கிருந்து 26 son எனும்பு முடிகின்ற முனையில் அமைந்துள்ள புள்ளிக்குச் சென்று
பிறகு சாய்வாக கீழிறங் தொப்புளின் மத்தியில் இருந்து வருகின்ற செங்குத்துக் கோடும்
ஒன்றையொன் வெடு இடத்தில் உள்ள புள்ளியை அடைந்து அங்கிருந்து உடலின் பின்புறமத்தியக்
கோட்டில் இருந்து பிட்டத்தின் 3 ல் 2 பங்கு துரத்தில் உள்ள புள்ளியைக் கடந்து தொடையின்
வெளிப்பு நடுப்பக்கமாக முழங்கால்வழியாகச் சென்று 4 வது விரல்நகத்தின் வெளிப்புறகீழ்
விளிம்பிற்கு மேலே 0 சுன் துரத்தில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்

GB 1 கண்ணின் வெளிப்புற ஓரத்தில் 0.5 சுன் தூரத்தில் உள்ளது.

கண்ணில் நீர்வடிதல், எரிச்சல், கூச்சம், தலை வலி, முகரநரம்பு வலி.

GB 2 வாயைத் திறக்கும்போது ஏற்ப்படும் பள்ளத்தில் Si19 க்கு கீழே 0.5 சுன் தூரத்தில் உள்ளது.

காது தொடர்பான அனைத்து குறைபாடு களும் (செவிடு உட்பட) நீங்கும்.


GB 3 இது GB 2 க்கு இணையாக காது அருகில் பல் கடிக் கும்போது அசையும் பகுதி.

காது தொடர்பான அனைத்து குறைபாடு களும் (செவிடு உட்பட) நீங்கும்.

GB 4 காதின் மேல் பகுதி பல் கடிக்கும் போது அசையும் பகுதி

பித்த வாந்தி, பித்த தலைவலி நீங்கும்.

GB 14 புருவ மத்தியில் அரை இன்க் மேலே.

கண்பார்வை தெளிவு முன்பக்க தலைவலி, சைனஸ்.

GB 25 12 வது மார்பெலும்பின் முனைப்பகுதி

சிறுநீரக நோய்கள் நீங்கும்.

GB 30 இடுப்பில் ஊசி போடும் இடம்

அனைத்து கால் நோய்களும் நீங்கும்.

GB 31 நின்று கொண்டு கைகளைத் தொடையை ஒட்டி வைத்தால் நடுவிரலின் நுனிபடும் இடம்.

கால் பக்கவாதம், கால் வலி, தொடை நரம்புவலி.

.GB 34 முழங்காலில் உள்ள பிபுலா எலும்பின் தலைப்பகுதிக்கு நேர் கீழே உள்ளது, இது தசைகள்
தசைநார்களுக்கு முக்கியப் புள்ளி.

தசைகள், தசைநார் நோய்கள், கால் கை வலிப்பு, மனம் சார்ந்த நோய்கள். நரம்பு வலிகள்.

GB 37 வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து 5 சுன் நேர் மேலே உள்ளது.

கண் நோய்கள்,

GB 38 வெளிப்புற கணுக்கால் மூட்டிலிருந்து ௪சுன் நேர் மேலே உள்ளது.

நரம்புகளின் இயக்கத்திற்கு முக்கியமான புள்ளி, சுளுக்கு, பக்கவாதம், சூலப்பிடித்தல்.


GB 41 பாதத்தின் மேற்புறம் 4 வது 5 வது கால் விரல் எழும்புகள் சேருமிடத்தில் உள்ளது.

பாதமேற்புறம் வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி.

GB 43 4 வது 5 வது கால் விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.

தொடைநரம்பு வாதம், தொடைப்பகுதியில் வலி, இடம் மாரும் வலிகள், இது உடம்பில்


ஏற்ப்படும் பக்கவாட்டு வலிகள் அனைத்தையும் போக்கக் கூடியது.

Liver – கல்லீரல்
சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 14

தொடர்புடைய உறுப்பு பித்தப்பை

மூலகம்(Element) மரம்

வெளிபுற உணவு உறுப்பு கண்

கல்லீரல் சக்தி ஒட்டப்பாதை

கல்லீரல் ஒட்டப்பாதை கால் கட்டைவிரல் நகக்கண் மத்தியில் இருந்து 0.1 சுன் துரத்தில்
ஆரம்பித்து காலின் உள்பக்கம் வழியாக வயிற்றுப் பாகத்தை அடைந்து பிறகு வளைந்து 11 வது
விலா எலும்பு முடியும் வரை சென்று அங்கிருந்து வளைந்து நிப்பிள் கோட்டிலே 6 வது 7 வது விலா
எலும்புகளுக்கு மத்தியில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோய்களும்

Liv 1 கால் பெருவிரல், நகக் கண் பகுதியில் உள்ளது.

கல்லீரல், பித்தப்பை தொடர்புடைய து, பின்பக்க தலைவலி, பித்தத் தலைவலி, கால் விரல்களில்
வலி.
Liv 2 இது 1 வது 2 வது கால் விரல்கள் சேருமிடத்தில் உள்ளது.

கால் கட்டைவிரல் வீக்கம், பெருமூச்சு விடுதல்,

Liv 3 இது 1 வது 2 வது கால் விரல்கள் சேருமிடத்தில் 2 சுன் மேலே உள்ளது.

கண் நோய்கள், தலைவலி, இது உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கியமான புள்ளி அதிக நேரம்
சிகிச்சை செய்யக் கூடாது இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

Liv 8 முழங்காளின் உட்பக்க மடிப்பு ரேகையிலிருந்து 1 சுன் மேலே உள்ளது.

ஆண்மை குறைபாடு, விந்தணு குறைபாடு, கண் எரிச்சல்.

Liv 13 11 வது மார்பெலும்பின் முனைப்பகுதி.

வயிறு உப்புசம் நீங்கும். கல்லீரல், மண்ணிரல் கோளாறு,

Liv 14 மார்புக்காம்பின் நேர் கீழே 5 வது 6 வது எலும்புகளுக்கு இடையில் உள்ளது.

எரிச்சல் கலந்த வலிகளை போக்கும், இரவு நேரத்தில் ஏற்ப்படும் வயிற்று வலியை போக்கும்.

URINARY BILADIDER – சிறுநீர்ப்பை


சக்தி ஓட்டத் தன்மை யாங்

மொத்த புள்ளிகள் 67

தொடர்புடைய உறுப்பு சிறுநீரகம்

மூலகம்(Element) நீர்

வெளிபுற உணவு உறுப்பு காது

சிறுநீர்ப்பை சக்தி ஓட்டப்பாதை

கண்ணின் உட்புற விளிம்பில் ஆரம்பித்து உடலில் முன்புற மத்தியக் கோட்டிற்கு இா நெற்றி


வழியாக ஏறி தலையைக் கடந்த பின் தலையின் அப் இரண்டாக பிரிகிறது. இதில் ஒரு பகுதி
உடலில் பின்புற மத்திய கோட்டில் இருந்து 15 சுன் பக்கவாட்டில் கீழிறங்கி தொடை மற்றும்
புட்டம் சேரும் மப்பி மத்தியப்புள்ளி வழியாக முழங்கலில் உட்புறமத்தியக்கோட்டை அடைகிறது
பிறகு அதன் இன்னொரு பிரிவு உடலின் பின்புற மத்தியக் கோட்டில் இருந்து 3 சுன்கள்
பக்கவாட்டில் முதுகைக் கடந்து புட்டமும் தொடையும் சேரும் மடிப்பின் வெளிப்புற ஓரத்தில்
அதை கடந்து முழங்கால் உள் மடிப்பு ரேகையின் முதலாவது பிரிவுடன் இணைகிறது. பிறகு ஒரே
நேர் கோட்டில் கெண்டைக்கால் தசையின் மத்திய பாகத்தில் கீழிறங்கி கணுக்காலுக்கு சற்று மேலே
காலின் வெளிப்பக்கத்தை அடைந்து பாதத்தின் வெளிப்புறத்தில் தோலின் இரு நிறங்களும் சேரும்
கோட்டின் வழியாக சென்று கண்டு விரல் நகத்தின் வெளிப்புற கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன்
துரத்தில் முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்


UB 1 கண்களின் உட்புறக் குழியில் உள்ளது.

கண் நோய்கள், கண் எரிச்சல்.

UB 2 புருவத்தின் உட்பக்க ஓரத்தில் மூக்கிற்கு அருகில் உள்ளது.

கண் நோய், சைனஸ், முன்பக்க தலைவலி.

UB 11 முதல் தொரசிக் எலும்பிற்கு நேராக உடலின் மத்திய கோட்டிலிருந்து 1.5 சுன் தூரத்தில்
பக்கவாட்டில் உள்ளது.

கழுத்து வலி, எலும்பு சம்மந்தமான நோய்கள், மூட்டு வாதம், தோள்பட்டை வலி.

UB 13 3 வது தொரசிக் எலும்பிற்கு நேராக உடலின் மத்திய கோட்டிலிருந்து 1.5 சுன் தூரத்தில்
பக்கவாட்டில் உள்ளது.

நுரையீரல் சம்மந்தமான எல்லா நோய்களும்.

UB 17 இது 7 வது தொரசிக் எலும்பிற்கு நேராக உடலின் மத்திய கோட்டிலிருந்து 1.5 சுன் தூரத்தில்
பக்கவாட்டில் உள்ளது.

இரத்த சோகை, முதுகுவலி, வாயுத் தொல்லை.

UB 40 முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்க மையத்தில் உள்ளது’

சையாடிக நரம்பு வலி, இடுப்புவலி, தோல் வியாதிகள், பால்உறுப்பு சார்ந்த நோய்கள்.

UB 54 இது UB 57 க்கு மேலே 3 சுன் தூரத்தில் உள்ளது.

முழங்காலுக்கு கீழே உள்ள கால் வலிகள் அனைத்திற்கும்.

UB 57 பின்புறத்தில் கெண்டைக் காலின் இரு தசைகளும் சேருமிடத்தில் உள்ளது.

மலச்சிக்கல், மூலநோய், தொடை நரம்பு வாதம், தசைப்பிடிப்பு.

UB 60 வெளிப்புற கணுக்கால் மூட்டிற்கும் குதியங்கால் தசைநார் எலும்பிற்கும் மத்தியில் உள்ளது.


கணுக்கால் வீக்கம், உடல் எரிச்சல், குதியங்கால் வாதம்.

UB 67 கால் சுண்டுவிரல் நகக்கண்ணின் வெளிப்பக்கம் 0.01 தூரத்தில் உள்ளது.

சிறுநீர் கழிப்பதில் சிக்கல், வலியில்லா பிரசவம், சுகப் பிரசவம்.

KIDNEY (சிறுநீரகம்)

சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 27

தொடர்புடைய உறுப்பு சிறுநீர்ப்பை

மூலகம்(Element) நீர்

வெளிபுற உணவு உறுப்பு காது

சிறுநீரக சக்தி ஓட்டப்பாதை

உள்ளங்காலின் மேல்ப்பகுதியில் நடுவிரலிற்கு நேர் கீழே ஆரம்பித்து காலின் உட்புறமாகச் சென்று


முழங்கால் மற்றும் தொடை வழியாக வயிற்றை அடைந்து உடலின் முன்புறமத்தியக்கோட்டிற்கு
0.5 சுன் பக்கவாட்டில் வயிற்றுப்பகுதியைக் கடந்து பிறகு உடலின் முன்புறமத்தியக்கோட்டிலிருந்து
2 சுன்கள் பக்கவாட்டில் நெஞ்சு பகுதியின் மேலோவது மற்றும் இது விலா எலும்புகளின் மத்தியில்
முடிவடைகிறது
புள்ளிகளும் தீரும் நோய்களும்

K 1 பாதத்தின் இரு மடிப்பு தசைகளுக்கு கீழே மத்தியில் உள்ளது.

மயக்கம், இனம் புரியாத பயம், மனக்கலக்கம் நீங்கும்.


K 2 கால் பெருவிரலுக்கும் குதிகாலுக்கும் இடையே இரு நிறங்களும் சேரும் இடம்.

மழைக்கால நோய்களான ஜலதோஷம், தும்மல், சளி, காய்ச்சல் நீங்கும்.

K 3 உட்பக்க கணுக்காலுக் கும், குதிகால் நரம்புக் கும் இடையே உள்ளது.

வயிற்றில் கனம், எரிச்சல் நீங்கும். பற்கள் தொடர்பான வலிகள், ஆஸ்துமா.

K 4 K5 க்கும் K3 க்கும் இடையே குதிகால் நரம் பின் அருகில் உள்ளது.

அடி முது கிலிருந்து கெண்டைக்கால் வரை பரவும் வலியை நீக்கும்.

K 5 இது K3 ல் இருந்து 1 சுன் நேர் கீழே உள்ளது.

சிறுநீரகத்துக்கு சக்தி ஊட்டும் புள்ளி, பாத வலிகள், சிறுநீரகக் கல்வினால் ஏற்ப்படும் வலிகள்.

K 6 உட்புற கணுக்கால் மூட்டிலிருந்து 0.5 சுன் கீழே உள்ளது.

கணுக்கால் வீக்கம், மர்ம உறுப்புகளில் ஏற்படும் நோய்கள், நரம்பு தொடர்பான வலி கள் நீங்கும்.
Kedney யில் சக்தி தேக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

K 7 இது K3 லிருந்து 2 மேலே உள்ளது.

ஆஸ்துமா குணமாகும், கெண்டைக்கால் தசை களின் பலவீனத்தையும் ஆடுதசைவலியையும்


போக்கும். நீர் கொப்புளங்கள், நீர்வீக்கம், அலர்ஜி, அரிப்பு, எக்சிமா நோய் குணமாகும்.

K 10 முழங்கால் மடிப்பு ரேகையின் உட்பக்கமாக இரு தசைநார்களுக்கு இடையில் உள்ளது.

முழங்கால் வலி, ஆண்மைக் குறைவு, வழுக்கைத் தலை, முடி உதிர்வு.

இனவிருத்திப் பாதை – REN


சக்தி ஓட்டத் தன்மை யின்

மொத்த புள்ளிகள் 24

தொடர்புடைய உறுப்பு ஆளுமைப் பாதை


இனவிருத்தி சக்தி ஓட்டப்பாதை

உடலின் முன்புற மத்தியக் கோட்டில் ஆகன வாயிற்கும் பிறப்பு உறுப்பிற்கும் இடையில்


ஆரம்பித்து கீழ் உதட்டிற்குக் கீழே முடிவடைகிறது.

புள்ளிகளும் தீரும் நோய்களும்

REN 3 தொப்புளின் மையத்தில் இருந்து 4 சுன் கீழே உள்ளது.

இனவிருத்தி, மாதவிடாய் சார்ந்த நோய்கள், சிறுநீரகப்பை சார்ந்த நோய்கள்.

REN 4 தொப்புளின் மையத்தில் இருந்து 3 சுன் கீழே உள்ளது.

இனவிருத்தி, மாதவிடாய் சார்ந்த நோய்கள், சிறுநீரகப்பை சார்ந்த நோய்கள்.

REN 5 தொப்புளின் மையத்தில் இருந்து 2.5 சுன் கீழே உள்ளது.

30 வினாடிகள் தொடுவதன் மூலம் காய்சல், உடல் வெப்பம், சிறுநீர் எரிச்சல் மற்றும்


அடைப்புகள் நீங்கும்.
REN 6 தொப்புளின் மையத்தில் இருந்து 1.5 சுன் கீழே உள்ளது.

குறைந்த இரத்த அழுத்தம், உடல் சோர்வு.

REN 7 தொப்புளின் மையத்தில் இருந்து 1 சுன் கீழே உள்ளது.

சிறுநீரகங்கள், கல்லீரல், சிறுகுடல், கர்ப்பப்பை, பித்தப்பை, பெருங்குடல் ஆற்றல்


பெறுகின்றன. சிசேரியன், கர்ப்பத்த்டை அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் தொந்தரவுகள்.

REN 9 தொப்புளின் மையத்தில் இருந்து 1 சுன் மேலே உள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள் ஆற்றல் பெறுகின்றன. நீர்க்கோவை மற்றும் வீக்கம்.

REN 12 தொப்புளின் மையத்தில் இருந்து 4 சுன் கீழே உள்ளது.

வயிறு, மண்ணிரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்ப்பை: இருதய மேலுறை


ஆற்றல் பெறுகின்றன். வாந்தி, குமட்டல்.

REN 17 இரண்டு மார்பகக் காம்பிற்கும் மத்தியில் உள்ளது.

இருதயம், பெரிகார்டியம், நுரையீரல், மண்ண்ரல் ஆற்றல் பெறுகின்றன.

ஆளுமைப் பாதை (DU)

சக்தி ஓட்டத் தன்மை Yang

மொத்த புள்ளிகள் 28

தொடர்புடைய உறுப்பு இனவிருத்திப் பாதை

பின்புற மத்தியக் கோட்டில் வால் எலும்பிற்கும் ஆசனவாயிக்கும் நடுவில் ஆரம்பித்து


மேலுதட்டிற்கு உள்ளே மேல் ஈறு வரிசைக்கு நடுவில் முடிவடைகிறது.
புள்ளிகளும் தீரும் நோயும்

DU 1 முதுகுத் தண்டின் வால் எலும்பின் முனைக்கும் மலத்துவாரத்திற்கும் இடையில் உள்ளது.

மூலம், பவுத்ரம், ஆசவாய் அறிப்பு வெடிப்பு.

DU 3 இது 4 வது 5 வது இடுப்பு எலும்புக்கு மத்தியில் உள்ளது.

கீழ் முதுகுவலி, ஆண்மைக் குறைவு, சிறுநீரக நோய்கள், சீறுநீர் குழாய் நோய்கள்.

DU 4 இது 2 வது 3 வது இடுப்பு எலும்புக்கு மத்தியில் உள்ளது

இடுப்பு வலி, சிறுநீரக பிரச்சனை.

DU 6 உடலின் மத்தியக் கோட்டில் 11 வது 12 வது முதுகெலும்பின் மத்தியில் உள்ளது.

வலிப்பு, வாதம், மலச்சிக்கல்.


DU 11 உடலின் மத்தியக் கோட்டில் 5 வது 6 வது முதுகெலும்பின் மத்தியில் உள்ளது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்.

DU 14 இது 7 வது கழுத்தெலும்பு 1 வது முதுகெலும்பிற்கும் மத்தியில் உள்ளது.

காகா வலிப்பு, மனநிலை பாதிப்பு, கழுத்து வலி, ணதோள்பட்டை வலி, தலைவலி, ஆஸ்துமா,
மலேரியா, மற்றும் தொற்று நோய்கள்.

DU 20 இரு காதுகளின் மேல் விளிம்பை இணைக்கும் கோடும் உடலின் மத்தியக் கோடும்


சந்திக்க்கும் புள்ளி.

இது சொர்க்கத்தின் திறவுகோள் என அழைக்கப்படுகிறது.இது எல்லா சக்தி பாதைகளையும்


கட்டுப்படுத்தும் புள்ளி. 100 புள்ளிகளை இணைக்கும் ராஜ புள்ளி என அழைக்கப் படுகின்றது.

மனக்குழப்பம், தூக்கமின்மை, கவலை, முடி உதிர்வு, ஆண்மைகுறை, வலிப்பு, பயம், தற்க்கொலை


எண்ணம் ஆகிவற்றைப் போக்கும்.

DU 23 முன்பக்க தலைக் கோட்டிலிருந்து (Hair Line) 1 சுன் மேலே உள்ளது.

மூக்கில் இரத்தக் கசிவு, மூக்கடைப்பு,

DU 25 மூக்கின் நுனியில்உள்ளது.

மூக்கடைப்பு, போதை தெளியவைக்கும், கோபத்தை கட்டுப்படுத்தும் புள்ளி.

DANGEROUS POINTS
UB1,UB10 ,LI18,DU15,DU16,LU8,P1,LU1,LIV3,H1 ,SP4,UB
67,
[ST21 to 25-don’t use right side] ,ST1,REN8,ST18,17
DISTAL POINTS
TOP-3 POINTS
LI4 –முகம்,தலை,கழுத்து முன்பகுதி,இடுப்புக்கு
மேல்வலி
LU7-தலை,பின்பகுதி,கழுத்து,மார்பு,நுரையீரல்,BP
P6- மார்பு ,வயிறுமேல்பகுதி,வாந்தி, காய்ச்சல்

BOTTOM -3 POINTS
ST36-வயிறு,குடல்
UB40-இடுப்பு, சிறுநீரகம்,இனவிருத்தி
SP6-ஆண்,பெண் உறுப்புநோய்கள் இனவிருத்தி

நோய் எதிர்ப்பு சக்திபுள்ளிகள்


LI11,SP6,DU14,ST36,SP10
வலி நீங்க – LI4,ST44
மனதை அமைதிப்படுத்த – DU20,H7,UB62,GB34
உடல் வீக்கம் - SP6,SP9,REN5,REN9
அலர்ஜி - SP10, SP6
உடல் வலிகள் நீங்க
முன்பக்க உடல் வலிக்கு - ST44
பின்பக்க உடல் வலிக்கு –UB60,UB40
பக்கவாட்டு வலிகள் –GB43,GB38
இடுப்புக்கு மேல் எல்லா வலிகளும் - LI4

You might also like