You are on page 1of 1

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா

குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது


அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க


(இந்த) சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தேன்
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக
எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
(உன்னை) நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

Composer AraNa prabhu


நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன்
ஆனந்தம் தான் அடைந்தேன் நானே நிம்மதி அடைந்தேன்
சத்குரு பாதுகை குஞ்சலம் என் மேல் பட்ட போது தானே

குருவின் மலரடியை என்றும் (என்) கண்ணால் பார்த்து நின்றேன்


மற்றெல்லாம் மாயை பொய் என்னும் கனவில் கண்ட பொருள் போல் உணர்ந்தேன்
நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

பிறப்பிரப்பாம் பவம் எனும் கடலில் ஜலம்


முழுதும் வத்தி போச்சு தாண்டவும் பாக்கியம் தேடும் கவலை நம்மை விட்டு போச்சு
நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

மலையை குடையாய் தாங்கிய கோகுலம் காத்த கோவிந்தனை


சரணமாய் அடையவே அவன் தன் பார்வையை உட்புறம் ஆக்கிவிட்டான்
நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

You might also like