You are on page 1of 5

,

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

,
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா,
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா (2)


நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

(நெஞ்சம் உண்டு)

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு ?


தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு ?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு ? (2)
நீ கொண்டு வந்தது என்னடா ? மீசை முறுக்கு
(நெஞ்சம் உண்டு)
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் (2)


இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

(நெஞ்சம் உண்டு)

,
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து (2)


அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து .
(நெஞ்சம் உண்டு)

நல்ல பேரை வாங்க வேண்டும்


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்

நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே (2)

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்

அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் (2)

துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று**

உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று**

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்

நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு


மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்தத
் ாலும் பாவம்

மெய்யான அன்பே தெய்வீகமாகும் (2)

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்**

தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்**

ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்**

தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்**

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்


நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

தூங்காதே தம்பி தூங்காதே


தூங்காதே தம்பி தூங்காதே -

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே (2)

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்


பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்

(தூங்காதே)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார்**


சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்**

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்**


உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

(தூங்காதே)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்**


உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்

கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -


பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

(தூங்காதே)

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்


உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

You might also like