You are on page 1of 3

ஸ்வாசபந்தம்

சுலோகம்

பாரப்பா உலகுதனில் பிறவி கோடி


படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி…

வரப்பா
ீ அண்டத்தில் பிறவி கோடி
வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு….

மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்


மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்…

கூச்சலது பாளையந்தான் போகும் போது


கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே…..

பல்லவி

காற்று அடக்கிட அக்கினி விழித்திட


ஞாலம் சுருங்கிட பூதம் ஒடுங்கிட

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட

சரணம் 1

நேரம் புரிந்திட நாலும் தெரிந்திட


ஞானம் சுரந்திட மூப்பும் கடந்திட

நேரம் புரிந்திட நாலும் தெரிந்திட


ஞானம் சுரந்திட மூப்பும் கடந்திட

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட
சரணம் 2

ஏகம் பொருந்திட ஒன்றில் நிலைத்திட


சவவும் விளைந்திட தவமும் தொடர்ந்திட

ஏகம் பொருந்திட ஒன்றில் நிலைத்திட


சவவும் விளைந்திட தவமும் தொடர்ந்திட

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட

சரணம் 3

காலம் நெருங்கிட காலன் ஒதுங்கிட


காற்றில் கலந்திட என்றும் நிலைத்திட

காலம் நெருங்கிட காலன் ஒதுங்கிட


காற்றில் கலந்திட என்றும் நிலைத்திட

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட

பல்லவி

காற்று அடக்கிட அக்கினி விழித்திட


ஞாலம் சுருங்கிட பூதம் ஒடுங்கிட

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட
கொன்னக்கோல்

தா தரிகிட தா தரிகிட தத்தி தா


தீம் தரிகிட தீம் தரிகிட தித்திம் தீம்
தீம் தரிகிட தீம் தரிகிட தத்திம் தா தகதா

திரிகிட தரிகிட தத்தாம்


திரிகிட தரிகிட தித்தீம்
திரிகிட தரிகிட தத்தாதா
திரிகிட தரிகிட தத்தீம் தீம்

தகிட தகிட தகிட தகிட தகஜும்


தகிட தகிட தகிட தகிட தகஜும்
தகிட தகிட தகிட தகிட தகஜும்

ததுங்கின தோம் ததுங்கின தோம் ததுங்கின தோம்


தோம் தகதோம்…. தோம் தகதோம்……

கண்டம் கடந்தபின் அண்டம் கட கட


கண்டம் கடந்தபின் அண்டம் கட கட

- கவின்

---------------------------------------------------------------------------------------

You might also like