You are on page 1of 6

செல்

 செல் என்பது ஒரு உயிரினத்தின் அடிப்படை அமைப்பும், செயல்


அலகும் ஆகும்
 செல்களை நேரடியாக பார்ப்பதற்கு நுண்ணோக்கி என்னும் கருவி
பயன்படுகிறது
 தாவரங்கள், விலங்குகள், மனித உடல் ஆகிய அனைத்தும் செல்களால்
ஆனவை
 செல்லை முதன் முதலில் கண்டறிந்தவர் இராபர்ட் ஹூக் (கி.பி.1665)
 செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் இராபர்ட் பிரௌன்

செல்லின் வகைப்பாடுகள்

      1.புரோகேரியாட்டிக் செல்

      2.யூகேரியாட்டிக் செல்

1.புரோகேரியாட்டிக் செல்

 சவ்வினால் சூழப்பட்டுள்ள நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற


உட்கரு மட்டுமே கொண்டுள்ள செல் புரோகேரியாட்டிக் செல் எனப்படும்
 எடுத்துக்காட்டு: பாக்டீரியா 

2.யூகேரியாட்டிக் செல்

 செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட


அனைத்து நுண்ணுறுப்புகளையும் கொண்டுள்ள செல் யூகேரியாட்டிக் செல்
எனப்படும்
 எடுத்துக்காட்டு: தாவர செல், விலங்கு செல்

விலங்கு செல்
பிளாஸ்மா படலம்

 இது செல்லைச் சுற்றி காணப்படும் செல்லுக்கு வடிவம் கொடுக்கும்


படலம் ஆகும்
 செல்லுக்கு தேவையான பொருட்களைத் தேர்வு செய்து செல்லுக்கு
உள்ளேயும், வெளியேயும் கடத்துகிறது
 செல்லுக்கு பாதுகாப்பு அளிக்கிறது

புரோட்டோபிளாசம்

 இது பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் ஆகும்


 சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும்
உள்ளடக்கியது புரோட்டோபிளாசம் ஆகும்
 புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் ஜே.இ.பர்கின்ஜி
 புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ்
போன்ற அமைப்பு என்றும் பொருள்

சைட்டோபிளாசம்

 இது பிளாஸ்மா படலத்துக்கும், உட்கருவுக்கும் இடைப்பட்ட


புரோட்டோபிளாசத்தின் பகுதி ஆகும்
 இதனுள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட்
மற்றும் கொழுப்புகள் ஆகியவை காணப்படுகின்றன
 செல்லுக்குள் ஊட்டச்சத்துக்கள் பரவுவதற்கு உதவுகிறது

உட்கரு

 இது செல்லின் முக்கிய பகுதி ஆகும்


 செல்லின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துவது உட்கரு ஆகும்.
எனவே இது செல்லின் கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுகிறது
 இது கோள வடிவில் காணப்படும். இது செல்லின் நடுவில் தான் இருக்க
வேண்டும் என்ற அவசியமில்லை.எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்
 உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி, குரோமேட்டின்
வலைப்பின்னல் ஆகியவை இதனுள் காணப்படுகிறது
 ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு பண்புகளை
கடத்துகிறது 

மைட்டோகாண்ட்ரியா

 இது நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.எனவே இது


செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுகிறது

கோல்கை உறுப்புகள்

 இது உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரக்கிறது


 லைசோசோம்களை உருவாக்குகிறது
 நாம் உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தை பிரித்து எடுக்கிறது
 இது தாவர செல்லில் டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுகிறது

எண்டோபிளாச வலை

 செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரு இடத்திலிருந்து


மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இது பயன்படுகிறது

ரிபோசோம்கள்

 இது புரதத்தை உற்பத்தி செய்கிறது.எனவே இது செல்லின் புரதத்


தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது

லைசோசோம்கள்
 செல்லின் உள்ளே நுழையும் நுண்கிருமிகளை அழிக்க உதவுகிறது.
எனவே இது செல்லின் தற்கொலைப் பைகள் என அழைக்கப்படுகிறது
 இது செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் செரித்தல் வேலையைச்
செய்கிறது

சென்ட்ரோசோம்

 இது விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும்


 இது புதிய செல்களை உருவாக்குகிறது

நுண் குமிழ்கள்

 சத்துநீரை சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரியாக


வைத்திருப்பது ஆகிய வேலைகளைச் செய்கிறது

தாவர செல்

 தாவரங்களில் செல்சுவர் காணப்படுவதால் விலங்குகளை விடத்


தாவரம் இறுகி கடினமாக காணப்படுகிறது

செல்சுவர்

 செல்லுலோஸ் என்னும் பொருளினால் ஆன செல்லுக்கு வடிவத்தைத்


தரும் வெளியுறை செல்சுவர் எனப்படும் 
 செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது 
 கணிகங்கள்

 இது தாவர செல்லுக்கு மட்டுமே உரிய நுண்ணுறுப்பு ஆகும்


 தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது
 மலர் மற்றும் கனிகளுக்கு நிறத்தை அளிக்கிறது
 இவற்றில் நிறமிகள் காணப்படுகிறது
 நிறமிகளின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

        1. குளோரோபிளாஸ்ட்

        2. குரோமோபிளாஸ்ட்

        3. லியூக்கோபிளாஸ்ட்

1. குளோரோபிளாஸ்ட்

 குளோரோஃபில் - பச்சை நிற நிறமி காணப்படுகிறது


 இவை தாவரங்களின் தண்டு, இலைகளுக்கு பச்சை நிறத்தைத் தருகிறது

2.குரோமோபிளாஸ்ட்

 கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி


 சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி
 தாவரங்களின் பூக்கள், கனிகளுக்கு நிறத்தைத் தருகிறது

3.லியூக்கோபிளாஸ்ட்

 தாவரத்தின் வேர் பகுதிகளிலும், தரைக்கீ ழ் தண்டு பகுதிகளிலும்


காணப்படுகிறது

தகவல் துளிகள்

 மனித உடலில் காணப்படும் செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000


ஆகும்
 மனித உடலில் உள்ள எலும்புகள் ஈரப்பசையற்ற, சிறப்பு வகைச்
செல்களால் ஆனவை
 இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை கண்டறிந்தவர்
ஆன்டன் வான் லூவன் ஹாக்(1675)
 விலங்கு செல்லில் காணப்படும் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்
 விலங்கு செல்லில் காணப்படும் மிக கடினமான செல் எலும்பு செல்
ஆகும்
 இரத்த சிவப்பணுக்கள் என்பவை உட்கரு இல்லாத விலங்கு செல்கள்
ஆகும்

You might also like