You are on page 1of 4

1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம் (Thirukkural meaning):
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம் (Thirukkural meaning):
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த 
தீமையை அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்

3. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

விளக்கம் (Thirukkural meaning):
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும்,
நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

விளக்கம் (Thirukkural meaning):
இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக
அவருக்கு நல்லுதவி செய்து விடுதலாகும்.

5. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம் (Thirukkural meaning):
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்றபிறகு, கற்ற கல்விக்குத்
தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
6. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் (Thirukkural meaning):
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் 
(நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் 
களைவது நட்பு.

7. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை.

விளக்கம் (Thirukkural meaning):
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, 
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

8. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம் (Thirukkural meaning):
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக்
காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் 
பெரிதும் மகிழ்வாள்.

9. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம் (Thirukkural meaning):
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? 
அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் (Thirukkural meaning):
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்விதான்.
அதைத்தவிர பிற உடைமைகள் எல்லாம் சிறந்தன அல்ல.
11. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பொருள்: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும்
சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

12. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினால் சுட்ட வடு

பொருள்: எரியும் நெருப்பினால் காயப்பட்டாலும் அது மனதினுள் ஆறிவிடும் ஆனால் ஒருவரின்


நாவினால் தீய சொற்களை கேட்டு ரணமாகிய மனதின் வடுவானது எக்காலத்திலும் மறையாது.

13. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் 


தன்நெஞ்சே தன்னை சுடும்

பொருள்: தன் மனதிற்கும் மனசாட்சிக்கும் தெரிந்து ஒருவன் பொய் பேசினால்  அவனது நெஞ்சே
அதாவது அவனுடைய மனசாட்சியே அவனை சுடும்

14. எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் 


மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருள்; ஒரு பொருளை யார் யார் வழியாக கேட்டாலும் அப்பொருளின் உண்மை தன்மையை
உணர்வதே அறிவாகும்.

15. அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது


அஞ்சல் அறிவார் தொழில்

பொருள்: அஞ்ச வேண்டியதற்கு அஞ்சா திருத்தல் மடத்தன்மையாகும். அஞ்ச வேண்டியதற்கு


அஞ்சுதல் அறிவுத்தன்மையாகும்.

16. குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்.

பொருள்: ஒருவரின் நல்ல குணங்களையும் அவரின் கெட்ட குற்றங்களையும் அளவிட்டு பார்த்து


அவற்றில் எது மிகுதியோ அவற்றை வைத்தே அவரை அறிய வேண்டும்.

17. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: நான் அதை செய்தேன் இதை செய்வேன் என்று சொல்லுதல் எல்லோருக்கும் எளிது தான்
ஆனால் சொல்ல சொன்ன படி நிறைவேற்றுதல் என்பது அறிய செயலாகும்.

18. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து


அகநக நட்பது நட்பு.

பொருள்: முகங்கள் மட்டும் மலரும்படி ஒருவருடன் நட்புக் கொள்வது என்பது உண்மையான நட்பு
ஆகாது அன்பால் உள்ளமும் மலரும் படி நட்புக் கொள்வதே உண்மையான நட்பு ஆகும்.

19. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை


இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 

பொருள்: தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும்


நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப்
பொறுப்பது முதன்மை அறம்.
20. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

எண் மற்றும் எழுத்து, ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக்


கண்கள் என்று கூறுவர்.

You might also like