You are on page 1of 2

திருக்குறள்

கற்றல் நோக்கம்- உலகப் பொதுமறை திருக்குறளின் சிறப்பை பற்றி


அறிதல்

I.பொருள் எழுதுக
1. மாய்வது - அழிவது
2. நயமில - தீங்கு
3. ஞாலம் - உலகம்
4. கலம் - பாத்திரம்

II.பிரித்து எழுதுக
1. எளிதென்ப = எளிது + என்ப
2. பண்புடைமை = பண்பு+ உடைமை
3. மக்களொப்பு = மக்கள்+ ஒப்பு
4. பயனுடையார் = பயன்+ உடையார்
5. பண்புடையார் = பண்பு +உடையார்

III. சேர்த்து எழுதுக


1. அன்பு+ உடைமை = அன்புடைமை
2. பண்பு + ஒத்தல் = பண்பொத்தல்
3. மக்கள் + பண்பு = மக்கட்பண்பு
4. பண்பு + இலான் = பண்பிலான்
5. திரிந்து + அற்று = திரிந்தற்று
IV. எதிர்ச்சொல் அறிக.
1. எளிது X அரிது
2. பாராட்டு X இகழ்
3. பகை X நட்பு
4. நகை X அழுகை
5. பகல் X இரவு

V. வினாக்கள்
1. உலகம் நிலைபெற்று இருக்க காரணம் யாது?
நற்பண்புகள் உடையவரிடம் பொருந்தி நடத்தல், இதனாலே உலகம்
நிலைபெற்று இருக்கிறது.

2. மரம் போல்வர் யார்? ஏன்?


மக்கட்பண்பு இல்லாதவர் கூரிய அறிவுடையவர் ஆயினும்,
மக்களுக்குரிய பிற அறிவுகள் இல்லாதவர் ஆவார். எனவே
அவர்களை ஓரறிவு உடைய மரம்போல் ஆவார்கள் என்றார்.
3. பகலும் இருளாகத் தோன்றும் யாருக்கு?
பிறரோடு பேசி, பழகி, மகிழ்ச்சி அடையத் தெரியாதவருக்கு உலகம்
இருளாகவே தோன்றும்.
4. உயர்ந்த பண்பாளர்களின் இயல்புகள் யாவை?
சிறந்த பண்பு உடையவர்கள் அறத்தினை விரும்பி, அதன் மூலம்
பிறருக்கும், தமக்கும் பயன்பட வாழ்வார்கள். பகைவர்களிடமும்
இனிய பண்புகள் உடனேயே நடந்து கொள்வர். இவையே உயர்ந்த
பண்பாளர்கள் பெற்ற இயல்புகள் ஆகும்.

You might also like