You are on page 1of 8

2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு

Anything goes
ஒக்ரோபர் 27, 2009

சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதைகள்

Posted by RV under Reading, Short Story Week, Tamil Literature | குறிச்சொற்கள் : A. madhavan,
Asokamithran, Bama, Dilip kumar, Indira partthasarathi, Ira. murugan, Jayakanthan, Jeyamohan, Ki.
rajanarayanan, Krishnamoorthi, Krishnan nambi, Ku. azhagirisami, Ku.pa. rajagopalan, La.sa.
ramamirdham, La.sa.ra., Nanjil nadan, Prabanjan, Pudhumaippitthan, Ra.ki. rangarajan, Rajam
krishnan, Ramachandra vaidyanathan, Sivasankari, So. dharman, Su. samutthiram, Sujatha, Sundara
pandian, Sundara ramasami, Thankar bacchan, Thi. janakiraman, Vannadasan, Vannanilavan |
[3] Comments 
i
2 Votes

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என் று ஒரு லிஸ் ட் என் பழைய ஃபைல் களை
கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ் டைல் குறிப்புகள் .

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் : கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண் டு ஓட


முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்
என் பதற்கு இந்த ஒரு கதை போதும் .

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில்


யாரோ சிபாரிசு செய் யவே மீண் டும் படித்துப் பார்த்தேன் . அத்திம் பேர் இருக்காரா
போய் ட்டாரா என் று குழப்பம் . அப்புறம் திருப்பி படித்தேன் . போய் ட்டார் என் று புரிந்தது.
நன் றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன் னும்
அதிகமாக பிடிக்கும் .

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங் கோ கல் கத்தாவுக்கு சமையல்
வேலை செய் யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என் று நினைக்கிறேன் .
நல் ல கதை.

கு. அழகிரிசாமி – அன் பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக


டைரி கொடுப்பவர் சாரங் கனுக்கு கொடுக்கவில் லை. சாரங் கன் ஒரு டைரியை
அவரிடம் கொடுத்து சாரங் கனுக்கு பரிசாக கொடுத்தது என் று எழுதி வாங் கிக்
கொள் கிறான் . மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ் டர் என் பதில் சந்தேகமே
இல் லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம் : புன் முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க


முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங் க முயற்சிக்கும் போலீஸ் காரர் அவரிடம்
கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங் கிக் கொள் கிறார். ஆனால் எனக்கு மிகவும்
பிடித்த கதை விகாசம் தான் . ரத்னாபாயின் ஆங் கிலம் , கோவில் காளையும் உழவு
மாடும் என் ற கதைகளும் நினைவு வருகின் றன.

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 1/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

கிருஷ் ணன் நம் பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த
ஒரு கதையினாலேயே நம் பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக
இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண் டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன் : அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ் . எல் லா


சிறுகதைகளும் ஒரு தருணம் , ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி
போகின் றணன் . அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த
தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு.
பிரயாணம் இன் னொரு அற்புதமான சிறுகதை.

தங் கர்பச்சான் – குடி முந்திரி: தங் கர் இரண் டு மிக நல் ல கதைகளை எழுதி
இருக்கிறார். இது ஒன் று, வெள்ளை மாடு என் று ஒன் று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு
ஷூ வாங் க குடும் பத்தின் பாரம் பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி
வெட்டுகிறார்.

பிரபஞ் சன் – மீன் : பலரும் இதை சிலாகிக்கிறார்கள் . எனக்கென் னவோ இது மிகவும்
ramble ஆவதாக தோன் றுகிறது.

கி.ரா. – கதவு: நல் ல கதைதான் , ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின் றன.

திலீப் குமார் – கடிதம் : கடிதம் தான் திலீப் குமாரின் சிறந்த கதை என் று பலராலும்
கருதப்படுகிறது. இதை விட்டால் மூங் கில் குருத்துகள் , பூனை செத்துப்போன கதை
ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின் றன. ஆனால் எனக்கு
பிடித்தது கடவு என் ற கதைதான் . சின் ன வயதில் பாட்டியை கடத்திக்கொண் டு போய்
மும் பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள் . பல வருஷம் அங் கே
வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும் பும் பாட்டியின் கதை.

வண் ணநிலவன் – எஸ் தர்: அன் பு நிறைந்த குடும் பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும்
மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என் ன பண் ண?
சிறந்த கதை.

Advertisements

REPORT THIS AD

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண் ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல் லக்கு
கிருஷ் ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங் கராஜன் – செய் தி
ராஜம் கிருஷ் ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங் கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண் டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான் காவது குற்றச்சாட்டு
வண் ணதாசன் – நிலை:

நீ ங் கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால் , இல் லை உங் களுக்கு பிடித்த


வேறு சிறுகதைகள் இருந்தால் சொல் லுங் கள் ! இதில் உள்ள கதைகளுக்கு லிங் க்
கொடுத்தால் , பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள் . அதுவும் நான் படிக்காத
கதைகளுக்கு லிங் க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள் :
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய
மொழிகள் )
சிறுகதை வாரம்

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 2/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்


எஸ் . ராமகிருஷ் ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள் , என் குறிப்புகள் பகுதி 1, பகுதி
2

 
ஜூலை 13, 2009

எழுத்தாளர் அறிமுகங் கள்

Posted by RV under Reading | குறிச்சொற்கள் : Aarvi, Amma vandhal, Anaiyavilakku, B.s. ramaiya,
Bhagyatthin bagyam, Brahmachari, Inge indre ippozhuthe, Jegasirpiyan, Jeyamohan, Kadhalenum
theevinile, Kungumappottu kumarasami, Kurinji malar, Malarum manamum, Manidhan maravillai,
Manipallavam, Mogha mul, Na. partthasarathi, Nagarangal moonru sorgam onru, Nandhivarman
kadhali, Nee, Oru manidhanin kathai, Oru vellikkizhamaiyil, Oviyam, Palangal, Palum pavaiyum, pon
vilangu, Poo vilangu, Prema haram, President panchatcharam, Rani mangammal, S. ramakrishnan,
S.a.p. annamalai, Samudhaya veedhi, Satthiya vellam, Sivaji ganesan, Sivasankari, Sollathe, Therotti
magan, Thi. janakiraman, Thiruchitrambalam, Vindhan |
[2] Comments 
i
3 Votes

எஸ் .ஏ.பி. அண் ணாமலை பி.எஸ் . ராமையா ஜெகசிற்பியன்

சிவசங் கரி
ஆர்வி தி. ஜானகிராமன்

நா. பார்த்தசாரதி

விந்தன்

தற்செயலாகத்தான் இந்த ப்ளாகை பார்த்தேன் . ஜீவி என் பவர் எழுதுகிறார். சில


எழுத்தாளர் அறிமுகங் கள் என் னை கவர்ந்தன.

ஜீவிக்கு பிடித்த எழுத்தாளர்களில் எனக்கு பிடித்தவர்கள் குறைவுதான் . அவரது


அறிமுகங் களும் ஓரளவு சம் பிரதாயமானவைதான் . பாட புத்தகங் களில் வரும்
கட்டுரைகள் மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது. அதனால் என் ன? அவருடைய எழுத்தில்
காணப்படும் உண் மையான உணர்வு இந்த குறைகளை போக்கி விடுகிறது.

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 3/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

கீழே இருப்பது அவரது அறிமுகங் கள் லிஸ் ட், என் சிறு குறிப்புகளுடன் . பேரை க்ளிக்
செய் தால் ஜீவியின் பதிவை காணலாம் .

எஸ் .ஏ.பி. – எஸ் .ஏ.பி குமுதம் ஆசிரியர், குமுதத்தை மிக பெரிய முறையில் வெற்றி பெற
வைத்தவர். அவர் எழுபதுகளிலேயே கதைகள் எழுதுவதை குறைத்துவிட்டார் என் று
நினைக்கிறேன் . எனக்கு மங் கலாக ஞாபகம் இருக்கும் ஒரு தொடர்கதையில்
ஆளவந்தார் என் ற ராசியான போலி டாக்டர் ஹீரோ. அப்போது சுவாரசியமாகத்தான்
இருந்தது. ஜீவி அவரது காதலெனும் தீவினிலே, நீ , பிரமச்சாரி, சொல் லாதே, இங் கே
இன் றே இப்பொழுதே, ஓவியம் , நகரங் கள் மூன் று, சொர்க்கம் ஒன் று போன் ற
நாவல் களை சிலாகிக்கிறார். ஜெயமோகன் தமிழின் சிறந்த social romances லிஸ் டில்
அவரது சின் னம் மா, மலர்கின் ற பருவத்தில் , பிறந்த நாள் ஆகியவற்றை
குறிப்பிடுகிறார்.

பி.எஸ் . ராமையா – ராமையாவை நான் அதிகம் படித்தத்தில் லை. படித்த கொஞ்சமும்


(பூவிலங் கு என் ற நாடகம் , பாக்யத்தின் பாக்யம் என் ற சிறுகதை தொகுப்பு)
சொல் லும் படி இல் லை. படித்ததில் ஓரளவு பிடித்தது குங் குமப் போட்டு
குமாரசாமிதான் . அதுவும் சிறு வயதில் கிராம நூலகம் ஒன் றில் படித்தது. (என் படிப்பு
அனுபவத்தில் கிராம நூலகங் களின் பங் கு பற்றி இந்த பதிவில் காணலாம் .) ஜீவி
கு.பொ. குமாரசாமி, மலரும் மணமும் , தேரோட்டி மகன் , பிரசிடென் ட் பஞ் சாட்சரம்
ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி எங் கேயோ இவர் நல் ல எழுத்தாளர் இல் லை என் றும் சி.சு. செல் லப்பா
இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண் டு ஆடுவது ஏனென் று புரியவில் லை என் றும்
சொல் லி இருக்கிறார். ஜெயமோகனும் இவரை நல் ல எழுத்தாளர் என் று
நினைக்கவில் லை. ஆனால் புதுமைப்பித்தன் இவர் எழுதிய பூச்சூட்டல் என் ற சிறுகதை
தான் தமிழ் சிறுகதைகளை தொகுத்தால் அதில் இடம் பெறும் என் று சொல் லி
இருக்கிறார். ஜெயமோகன் இவரது பிரேம ஹாரம் என் ற நாவலை சிறந்த social romance
லிஸ் டில் சேர்க்கிறார்.

ஜெகசிற்பியன் – இவரையும் நான் அதிகம் படித்ததில் லை. படித்த சில புத்தகங் கள்
மேலும் படிக்க வேண் டும் என் று தோன் ற வைக்கவும் இல் லை. நந்திவர்மன் காதலி,
திருச்சிற்றம் பலம் நினைவிருக்கிறது. இவருக்கு சாண் டில் யன் பரவாயில் லை என் று
நினைத்ததும் நினைவிருக்கிறது. ஜீவி இவரது பல நாவல் களை குறிப்பிடுகிறார்.
ஜெயமோகன் இவரது திருச்சிற்றம் பலத்தை Historical Romances லிஸ் டில் குறிப்பிடுகிறார்.

ஆர்வி – ஆர்வியையும் நான் அதிகமாக படித்ததில் லை. ஒரு வெள் ளிக்கிழமையில்


என் ற சிறுகதை தொகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன் . அதிலும் எனக்கு ஒரே ஒரு
கதைதான் தேறியது – வரவேற்பு. காதலித்து கல் யாணம் செய் து கொள்ள முடியாத
நிலைமை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் பந்தம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயமோகன் அணையாவிளக்கு நாவலை தன் social romances லிஸ் டில்
சேர்த்திருக்கிறார். ஜீவி ஒரு வெள் ளிக்கிழமையில் , அணையாவிளக்கு தவிரவும் பல
படைப்புகளை குறிப்பிடுகிறார்.

சிவசங் கரி: ஒரு காலத்தில் சிவசங் கரி விகடன் போன் ற பத்திரிகைகளின் தொடர்கதை
ராணி. அவரது மார்க்கெட் பெண் கள் . அப்போதெல் லாம் வேர்க்கடலை கட்டி வந்த
பேப்பரை கூட படிப்பேன் . அப்பவே ஆனால் பிடிக்கவில் லை. எனக்கு தெரிந்த பக்கத்து
வீட்டு, எதிர் வீட்டு, என் அம் மாவின் சிநேகிதி பெண் கள் எல் லாரும் இவரை விழுந்து
விழுந்து படிப்பதால் , அவர்களிடம் பேச வேண் டும் என் ற ஒரே காரணத்துக்காக மட்டும்
இவரது தொடர்கதைகளை விடாமல் படித்தேன் . பெண் களிடம் உருப்படியாக பேசவும்
முடியவில் லை என் பதுதான் சோகமான விஷயம் . ஒரு மனிதனின் கதை, பாலங் கள் ,
அருண் ஹீரோவாக வரும் ஒரு முக்கோணக் காதல் கதை போன் றவை பாப்புலராக
இருந்தன. ஜெயமோகனும் ஒ.ம. கதை, பாலங் கள் ஆகியவற்றை தன் social romances
லிஸ் டில் குறிப்பிடுகிறார். ஜீவி பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

தி. ஜானகிராமன் : தி.ஜாவை பற்றி நான் எதுவும் புதிதாக சொல் லிவிட போவதில் லை.
மனிதர் ஜீனியஸ் , அவ் வளவுதான் . அவருடைய எழுத்துகளில் படிப்பவரை அதிர்ச்சி
செய் ய வேண் டும் என் று கொஞ்சம் விருப்பம் தெரிகிறது. எனக்கு மோக முள் தமிழின்
டாப் டென் நாவல் களில் ஒன் று. அம் மா வந்தாள் முக்கியமான ஒரு நாவல் .
ஜெயமோகனுக்கும் தான் . எஸ் . ராமகிருஷ் ணனும் தமிழின் சிறந்த நாவல் களாக
இவற்றை குறிப்பிடுகிறார்.

நா. பார்த்தசாரதி: நா.பா. கொஞ்சம் உபதேசம் செய் பவர். இருந்தாலும் குறிஞ் சி மலர்,
சத்திய வெள் ளம் மாதிரி சில நாவல் கள் நன் றாக வந்திருக்கின் றன. ஜெயமோகன்
ராணி மங் கம் மாள் , மணிபல் லவம் ஆகிய இரண் டு நாவல் களையும் historical romances
லிஸ் டில் சேர்த்திருக்கிறார். மங் கம் மாள் சுமார்தான் . மணிபல் லவம் நினைவில் லை.

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 4/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

குறிஞ்சி மலர், பொன் விலங் கு, சமுதாய வீதி ஆகியவற்றை தன் social romances லிஸ் டில்
சேர்த்திருக்கிறார். சமுதாய வீதி சுமார்தான் . அதில் வில் லனாக வருபவர் சிவாஜி
கணேசனை வைத்து உருவாக்கப்பட்டவர் என் பதுதான் கொஞ்சம் அதிசயம் . ஜீவி
அவரது தீபம் பங் களிப்பை புகழ்ந்து எழுதி இருக்கிறார்.

விந்தன் : விந்தனின் எழுத்துகள் என் னை கவரவில் லை. நான் படித்ததும் கொஞ்சம் தான்
– மனிதன் மாறவில் லை என் ற நாவல் . அவரது பாலும் பாவையும் நாவலை ஜீவி
சிலாகிக்கிறார்.

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காலத்தில் பேசப்பட்டவர்கள் .


பாப்புலராக இருந்தவர்கள் . ஆனால் தி.ஜா. ஒருவர்தான் இந்த லிஸ் டில் மறக்க
முடியாதவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள் :


ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
எஸ் . ராமகிருஷ் ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்

 
ஜூன் 20, 2009

எண் பதுகளில் என் படிப்பு

Posted by RV under Reading | குறிச்சொற்கள் : 24 roobai theevu, Adhu varaiyil kanchana, Alai osai,
Alexander dumas, Alistair maclean, Amma vandhal, Anitha ilam manaivi, Arms and the man, Arthur
miller, Asokamithran, Balakumaran, Bernard shaw, Charles dickens, Cho ramaswami, Devan, Doll
house, Dr. jekyll and mr. hyde, Dr. narendranin vinodha vazhakku, Edgar allan poe, Enid blyton, Erle
stanley gardner, Ganesh-Vasanth, Harold robins, Hemingway, Ibsen, Indhumathi, James hadley chase,
Jannal malar, Jaya jaya sankara, Jayakanthan, Justice jagannathan, Kalkattu, Kalvanin kadhali,
Kanaiyazhi, Kanaiyazhiyin kadaisi pakkangal, Kanavu thozhirsalai, La.sa.ra., Lakshmi, Leena meena
reena, Les miserables, Mahabharatha, Maharishi, Manikkodi, Marap pasu, Marina, Mark twain, Mercury
pookkal, Merke oru kutram, Mogha mul, Moonru nimisham ganesh, Nathaniel hawthorne, Nirvana
nagaram, Nylon kayiru, Oor vambu, Oru latcham putthakangal, Oru manidhanin kathai, P.g.
wodehouse, P.v.r., Palam, Palangal, Partthiban kanavu, Perry mason, Ponniyin selvan, Prathapa
mudaliyar saritthiram, Priya, Pudhumaippitthan, Pushpa thangadurai, R.k. narayan, Rahul
sankrityayan, Rajaji, Rajendrakumar, Rattham ore niram, Robert louis stevenson, Saveetha, Shankarlal,
Sherlock holmes, Sidney sheldon, Sivakamiyin sabatham, Sivasankari, Sujatha, Tale of two cities,
Thackeray, Thamizhvanan, Tharaiyil irangum vimanangal, Thi. janakiraman, Thomas hardy,
Thupparium sambu, Thuppariyum sambu, Thyaga bhoomi, Treasure island, Vairangal,
Vanakkatthukkuriya kadhali, Vasanth! vasanth!, Victor hugo, Volgavilirunthu gangai varai, Vyasar
virundhu |
[2] Comments 
i
1 Votes

(எண் பதுகள் என் றால் எண் பதுகள் இல் லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து


எண் பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில் தான் சுஜாதா கண் ணில் பட்டார். சுஜாதா என் றால்
அப்போதெல் லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன் . அதுவும் கணேஷ் வசந்த் என் றால்
கேட்கவே வேண் டாம் . அவருடைய வரிகளை சொல் லி சொல் லி மகிழ்ந்து கொள் வோம் .
நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன் னால் நிற்பவன் தான் குடம்
குடமாக மூத்திரம் போவான் ”. பிரியாவில் கணேஷ் தான் ஹீரோ, ஆனால் பெரிதாக
ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய்
தீவு, ஜன் னல் மலர், மேற்கே ஒரு குற்றம் , வைரங் கள் , மூன் று நிமிஷம் கணேஷ் ,
அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத
வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம் , வசந்த்!
வசந்த்!, கனவு தொழிற் சாலை, இலங் கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து
எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங் கள் சிறுகதை என் று சொல் லி கொண் டே போகலாம் .

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 5/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

என் ன துக்கம் என் றால் அவரது இன் னொரு பக்கம் தெரியவே இல் லை.
கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என் றெல் லாம் எனக்கு
தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன் னொரு சீரிஸ்


தமிழ் வாணனின் சங் கர்லால் கதைகள் . எப்போதும் தேநீ ர் பருகிக் கொண் டே
இருப்பார். எஸ் .எஸ் . 66 என் ற கதை எங் கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம்
தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம் பித்தன. சங் கர்லால் அளவுக்கு
பிடிக்கவில் லை.

மாத நாவல் கள் வர ஆரம் பித்த புதிது. மாலைமதி வர ஆரம் பித்திருந்தது. ஒரு ரூபாய்
விலை என் று நினைக்கிறேன் . (அது பெரிய அமவுண் ட், தினமும் ரயிலில் போய்
பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என் று மூன் று
மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து
பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண் டிருந்தது.) மாத
நாவல் கள் மூலம் புஷ் பா தங் கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என் று பலர்
அறிமுகம் ஆனார்கள் . சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி
வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன் று நிமிஷம்
கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ் சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி
(ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ் பா தங் கதுரை). புஷ் பா தங் கதுரையின்
சிங் துப்பறியும் கதைகள் பெரும் பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும்
எழுதியவை யூத் கதைகள் . ரா. குமாரின் கதைகளில் பெரும் பாலும் மோட்டார் சைக்கிள்
ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும் . ஞே என் று
விழிப்பார்கள் . ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல் லாரும் படிப்போம் .

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங் கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன் .

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங் களில் ஒன் று வியாசர் விருந்து.
மகாபாரதத்தின் மீது இன் றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம் .
மகாபாரதத்தை பற்றி இன் னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன் . ராஜாஜியை
எத்தனை பாராட்டினாலும் தகும் . இதை போன் ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி
இருக்கிறார்கள் . (ஆர.கே. நாராயண் , சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி
யாரும் எழுதவில் லை.

குமுதம் , விகடன் தொடர்கதைகள் மூலம் தான் சிவசங் கரி, லக்ஷ் மி, இந்துமதி,
பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள் . பி.வி.ஆர். எழுதும் கதைகள்
அப்போது கொஞ்சம் ரியலிஸ் டிக்காக இருப்பதாக தோன் றியது. இந்துமதியின்
தரையில் இறங் கும் விமானங் கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில் லை.
ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன் டலெக்சுவல் மாதிரி என் னை நினைத்துக்
கொள்ள பிடித்திருந்தது. என் ன, எனக்கு அண் ணனும் இல் லை, மன் னியும் இல் லை,
ஜமுனாவும் இல் லை. இப்போதும் அது நல் ல புத்தகம் என் றுதான் நினைக்கிறேன் .
மெரினாவின் நாடகங் கள் விகடனில் தொடராக வரும் . கால் கட்டு, ஊர் வம் பு என் று
சுவாரசியமான நாடகங் கள் . சிவசங் கரி, லக்ஷ் மி கதைகள் எல் லாம் இந்த காலத்து
மெகா சீரியல் கள் மாதிரி பெண் களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும் .
சிவசங் கரியின் கதைகள் என் வயது பெண் களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச
ஒரு சாக்கு வேண் டும் என் பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன் . அவர்
எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங் கள் உட்பட –
பெரிதாக பிடிக்கவில் லை. அவருக்கு லக்ஷ் மி கொஞ்சூண் டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண் ட் செய் து வைக்கப்பட்டிருக்கும்


தொடர்கதைகள் . பொன் னியின் செல் வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி
நாலைந்து நாட்களில் படித்தேன் . என் னால் கீழேயே வைக்க முடியவில் லை. அதற்கு
பிறகு சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, அலை ஓசை எல் லாம் தேடி
கண் டுபிடித்து படித்தேன் . பொ. செல் வன் தான் அவருடைய மாஸ் டர்பீஸ் . சி. சபதம்
நன் றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண் டு மாமா கதை மாதிரி இருக்கும் . அலை
ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம் . எனக்கு அவ் வளவாக ரசிக்கவில் லை. அப்போது
தேடிய தியாக பூமி, கள் வனின் காதலி எல் லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான்
படிக்க முடிந்தது.

அங் கொன் றும் இங் கொன் றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன் ) பிடித்திருந்தன.
பிடித்த இன் னொரு புத்தகம் வால் காவிலிருந்து கங் கை வரை. தேவனின் ஜஸ் டிஸ்
ஜகன் னாதன் , துப்பறியும் சாம் பு இரண் டும் இந்த கால கட்டத்தில் தான் படித்தேன் .
எல் லாமே அம் மா சிபாரிசு என் று ஞாபகம் . சாம் பு ஃபார்முலாதான் , ஆனால் படிக்க
ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன் னாதன் நன் றாக இருந்தது.

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 6/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

எல் லாரும் குறிப்பிட்டு சொல் கிறார்களே என் று பிரதாப முதலியார் சரித்திரத்தை


நான் தேடித் பிடித்து படித்தேன் . உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக
கிடைக்கவில் லை. கிராம நூலகங் களில் கிடைத்திருக்கும் , ஆனால் என் அம் மா அவரை
வேண் டுமென் றே எனக்கு சிபாரிசு செய் யவில் லை என் று நினைக்கிறேன் . எனக்கு
அம் மா வந்தாள் , மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால்
மோக முள் படித்திருக்கலாம் என் று நினைக்கிறேன் . அம் மா வந்தாள் எனக்கு
எண் பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங் . அம் மா என் ற தெய் வப் பிறவியை,
தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில் லை.

அசோகமித்திரன் , லா.ச.ரா சுத்தமாக புரியவில் லை. (இப்போதும் பல நேரம்


அப்படித்தான் ) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய
நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண் டிருப்பார். ஒரு நண் பர் அவரை பஸ் ஸ் டாண் டில்
விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என் னவோ பஸ் . பஸ் வராது. இவர்
மனதில் பல எண் ணங் கள் ஓடும் , நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு
அங் கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென் ட் செய் ய முடியாது, என் ன செய் யப்
போகிறோம் என் றெல் லாம் . கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய
ட்ரக் மாதிரி இருக்கும் . பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய் த பிறகுதான்
இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன் னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள் ) பிடித்திருந்தது. அந்த


வயதில் என் னை கேட்டிருந்தால் சாயாவனம் , ஜய ஜய சங் கர, தரையில் இறங் கும்
விமானங் கள் , பொ. செல் வன் , சி. சபதம் , மெர்க்குரிப் பூக்கள் , கணேஷ் வசந்த்
கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண் டியதாக
எனக்கு தோன் றவில் லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங் கிலப் புத்தகங் களை படிக்க
ஆரம் பித்தேன் . எனிட் ப்ளைடனில் ஆரம் பித்து, உடனடியாக ஜேம் ஸ் ஹாட்லி சேஸ் ,
பெரி மேசன் , அலிஸ் டர் மக்ளீன் , ஹரல் ட் ராபின் ஸ் , சிட்னி ஷெல் டன் என் று
த்ரில் லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என் ன படிக்கலாம் என் று சொல் லும்
புஸ் தகங் கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண் ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என் ன
என் று தெரிந்தது – டிக்கன் ஸ் , ஹ் யூகோ, டூமாஸ் (கல் கியை விட மட்டம் ), ஸ் டீவன் சன் ,
போ, இப்சன் , ட்வெய் ன் , தாக்கரே என் று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன்
போன் றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என் று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு
என் று ஹெமிங் வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில் லர் என் று கிடைத்தார்கள் . என் ன
படிக்கலாம் என் று முடிவு செய் வது சுலபமாக இருந்தது. விமரிசனங் கள் , இலக்கிய
வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ் டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில் லை. கணேஷ்
வசந்த் நன் றாக இருந்தாலும் , ஷெர்லாக் ஹோம் ஸ் எங் கேயோ போய் விட்டார். தமிழில்
science fiction என் று எதுவுமே இல் லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ்
பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில் லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr.
Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே
கிடைக்கவில் லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல் ல குறுந்தொகை,


ஐங் குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங் கு பரிபாடல் பற்றிதான் ஆய் வுகள் கிடைத்தன.
தமிழ் நாவல் , சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில் லை. எனக்கும்
எங் கே கிடைக்கும் என் று தெரியவில் லை. இந்த கால கட்டத்தின் இறுதியில் தான்
கணையாழி போன் ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன் . மணிக்கொடி என் று
ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின் றன என் று கூட
தெரியாது. என் ன படிக்கலாம் என் று சொல் ல யாருமில் லை. அப்படிப்பட்ட
விமரிசனங் களும் என் கண் ணில் படவில் லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின்
பேர் கூட நான் கேள்விப்பட்டதில் லை. (கிராமங் களில் வளர்ந்தவன் ) ஏதோ பழக்கம்
காரணமாக தமிழ் புத்தகங் கள் படித்தேன் , அவ் வளவுதான் . Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங் களில் எனக்கு பிடித்திருந்தவை:


1. பொன் னியின் செல் வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங் கும் விமானங் கள்
5. வால் காவிலிருந்து கங் கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம் பு
8. ஜஸ் டிஸ் ஜகன் னாதன்

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 7/8
2/7/23, 1:24 PM Sivasankari | கூட்டாஞ்சோறு

9. கணேஷ் வசந்த் கதைகள்


10. எஸ் .எஸ் . 66
வேண் டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும்
ஞாபகம் இல் லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால்


ஜாஸ் தி. எனக்கு த்ரில் லர், நகைச்சுவை, சயன் ஸ் ஃபிக்ஷன் , க்ளாசிக் புத்தகங் கள் , மனித
வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங் கள் என் றால் தமிழ் இல் லை, ஆங் கிலம் தான்
என் று மனதில் தோன் றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங் கிலப் புத்தகங் களில்
மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம் பது புத்தகமாவது சொல் லலாம் .

தொடர்புடைய மற்ற பதிவுகள்


எழுபதுகளில் என் படிப்பு
இன் குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்

Create a free website or blog at WordPress.com.

Advertisements

REPORT THIS AD

https://koottanchoru.wordpress.com/tag/sivasankari/ 8/8

You might also like