You are on page 1of 2

முன்பு ஒரு காலத்தில், ஒரு பெரிய மரத்தின் மீது ஓர் அழகான கிளி வாழ்ந்து வந்தது.

இக்கிளிக்கு ஒரே போல் தோற்றம் உடைய இரு கிளி குஞ்சுகள் இருந்தன. ஒருநாள், தாய் கிளி
உணவு தேடிச் சென்ற பொழுது ஒரு வேடன் மரத்தில் ஏறி கூண்டில் இருந்த கிளி குஞ்சுகளை
எடுத்து தன் பையில் போட்டான். ஆனால், ஒரு குஞ்சு சாமர்த்தியமாக தப்பிச் சென்று விட்டது.
அவ்வழியே வந்த ஒரு சன்யாசி வேடனிடமிருந்து தப்பித்து பறக்க முயற்சி செய்யும் கிளி
குஞ்சைத் தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு ஒரு கிளி குஞ்சு வேடனிடமும்
மற்றொன்று சன்யாசியிடமும் வளர்ந்தன. ஒரு நாள், அந்நாட்டு மன்னர், காட்டிற்குள் குதிரையில்
வந்த பொழுது வேடனின் குடிசையைக் கண்டு அந்த பக்கம் சென்றார். அப்பொழுது, திடீரென்று
கீர்ச்சிடும் சத்தத்தில்………………….

கிளி 1: எஜமான், நம் வீட்டிற்கு ஒரு ஆள் வருகின்றான். சீக்கிரம் அம்பையும் வில்லையும் எடுத்து
அவனைக் கொல்லுங்கள்’’.
என்று கத்தியது. அதற்கு மன்னர்……..
மன்னர்: நற்குணமில்லாத பறவையாக உள்ளது
என்று கூறி பின்னர் கிளியைத் திரும்பி பார்க்காமல் சென்றார். குதிரை ஓட்டி செல்லும்போது
வழியில் ஒரு ஆசிரமம் தரிந்த. அங்கிருந்து, சிறிது தண்ணீர் குடிக்க நினைத்துக் குதிரையை
நிறுத்தினார். அங்கும் கூண்டிற்குள் ஒரு கிளி இருப்பதைப் பார்த்து

மன்னர்: இங்கும் ஒரு மோசமான முரட்டு கிளி உள்ளதே

என்று நினைத்தார். ஆனால், அவர் ஆச்சரியம் படும் விதத்தில் அப்பறவைப் பாட தொடங்கியது.
கிளி 2 : வருக வருக மன்னரே, மிக்க மகிழ்சச
் ியுடன் உங்களை எங்கள் வீட்டிற்கு
வரவேற்கின்றோம்.

என்று பாடியது. உருவத்தில் வேடனின் வீட்டில் இருப்பதை போல இருந்தாலும் குணத்தில்


சாந்தமும் நட்பும் உள்ள இக்கிளியைப் பார்த்து அரசர் ஆச்சரியம் பட்டார். கூண்டில் அருதில்
சென்று
மன்னர்:உன்னை போன்று நட்பான கிளியைப் பார்த்து சந்தோஷம் படுகிறேன். உன்னை போலவே
தோற்றம் உடையே ஒரு முரட்டுதனமான கிளியை கொஞ்சம் முன்னர் தான் சந்தித்தேன்.
கிளி; : அந்த கிளி வேடனிடம் உள்ளதா?
என்று கிளி கேட்டது.
மன்னர்: ஆமாம் உள்ளது. உனக்கு எப்படி தெரியும்?
எனக் கேட்டார். துயரத்தால் கண்ணீர் சோட்டிய கிளி சொன்னது ..
கிளி2 : அரசே, அவன் என் அன்பு சகோதரர். நாங்கள் ஒரே கூண்டில் வளர்ந்தவர்கள். ஒரு நாள்,
எங்கள் தாய் இல்லாத நேரத்தில் வேடம் எங்களைப் பிடித்து விட்டான். நான் எப்படியோ தப்பித்து
விட்டேன். ஆனால், என் சகோரதரனை அந்த வேடம் கொண்டு போய் விட்டான். நற்குணமில்லாத
அந்த எஜமானின் பழகத்தால் என் சகோதாரனும் கெட்டவன் ஆகி விட்டான். ஆனால்,
என்னுடைய எஜமானர் மிகவும் வித்தியாசமானவர்.

கிளியின் இந்த பதில் அரசரின் மனதில் பதிந்து மகிழ்ச்சி அளித்ததால் அவர் கிளி மற்றும்
அதனை வளர்த்த சன்யாசிக்கும் புகழ்ந்து நன்றி கூறி சென்றார்.

வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப குணங்களூம் மாறும்.

You might also like